செவ்வாய், 4 அக்டோபர், 2011

கண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..


நவராத்திரி...சுபராத்திரி....

ஒன்பது படி கொலு....! ஆர் வி எஸ் பதிவில் அவர் வீட்டு கொலுவில் ஒரு பொம்மைக்கு வயது நூறு என்று படித்ததால் சென்ற இடங்களில் பொம்மைகளின் வயது கேட்பதில் ஒரு ஆர்வம் வந்தது!


இதுவும் கொலுவில் உள்ள ஒரு பொம்மைதான்...!


இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள், கொலு வைத்துள்ள குடும்பத் தலைவரின் பாட்டிக்கு அவர் அம்மா தந்ததாம். சுமார் நூற்றைம்பது வயது!


இங்கு காணப் படும் அம்மன் பொம்மைகளுக்கு நூறு வயதாம்.


இது அடுத்த சுண்டல்...ஸாரி...கொலு...! சுண்டலுடன் ஓர் டப்பர்வேர் ஃப்ரீ கிடைத்தது.


இந்த கொலு அகலம் அதிகம். பாதிதான் படத்தில்...சீரியல் விளக்குகளுடன் ஜாஜ்வல்யமாய்...சுண்டலில்தான் சொதப்பிட்டாங்க...(ஹி...ஹி...நம்ம கவலை நமக்கு!)


நோ...நோ...இது பொம்மை இல்லீங்க...கொலுவுக்குப் போன ஒரு வீட்டின் செல்லம்!


கொலுவில் இருந்த ஒரு பூ.....பொம்மை!


14 கருத்துகள்:

  1. பதிவில் அழகாக கொலு வைத்து விட்டீர்கள்.நன்று

    பதிலளிநீக்கு
  2. இங்கு காணப் படும் அம்மன் பொம்மைகளுக்கு நூறு வயதாம்../////

    ஆச்சர்யம் + அருமை.

    பதிலளிநீக்கு
  3. வீட்டுக்கு வாங்க ஸ்ரீராம். :-))

    பதிலளிநீக்கு
  4. படத்திலும் பதிவிலும் கொலு வச்சாச்சு

    பதிலளிநீக்கு
  5. கொலுவுல வச்ச பொம்மை நாட்பட இருந்தா ராசியாகும்..

    கொலுவுக்கு படைச்ச சுண்டல் நாட்பட இருந்தால் ஊசிப்போகும்.

    படங்கள் அருமை ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  6. சுண்டல் சுற்றுலா...ஸாரி ஸாரி கொலு சுற்றுலா அருமை...

    வருட கணக்கில் இப்படி பொம்மைகளையும் சில உருவங்களையும் பராமரித்து வைத்திருத்தல் உண்மையில் பாராட்டுக்குரியது..

    பதிலளிநீக்கு
  7. வேற யாரு? கு கு தான்!5 அக்டோபர், 2011 அன்று AM 8:13

    8 படங்கள்தானா? இன்னும் ஒன்று சேர்த்திருந்தால், நவராத்திரிக்கு கணக்கு சரியாக இருந்திருக்குமே!

    பதிலளிநீக்கு
  8. அருமையான கொலு.. செல்லமும் ஒரு பொம்மை மாதிரிதான் அழகா இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  9. கண்டு களித்தவற்றை எங்களுக்கும் காணத் தந்ததற்கு நன்றி. அக்காலப் பொம்மைகளின் நேர்த்தி, அழகு போல இப்போது கிடைப்பதில்லை என்பார்கள்.

    உண்டு களித்தவற்றைக் கண்ணிலே காட்டவேயில்லையே:)?

    பதிலளிநீக்கு
  10. // இது அடுத்த சுண்டல்...ஸாரி...கொலு...! சுண்டலுடன் ஓர் டப்பர்வேர் ஃப்ரீ கிடைத்தது. //

    சுண்டல் கொடுக்க வேற டப்பா ஃப்ரீயா இல்லேன்னு டப்பர்வேர்ல கொடுத்தாதா நைசா வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டீங்களா ?

    பதிலளிநீக்கு
  11. கொலு ரொம்ப அழகா இருக்கு. அந்த காலத்து பொம்மைகளின் வர்ணமும், முக லட்சணமும் என்றுமே ரசிக்க வைக்கும். கொலு பாக்க வந்திருக்கும் செல்லகுட்டியும் ஜோரா இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  12. ப்ளாகிலேயே நவராத்திரி கொண்டாடிவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  13. வெகு அழகான கொலு. உயிருள்ள சக்தி அங்கே தெரிகிறது. பழைய பொம்மைகளின் சக்தியே அதுதான். மிகவும் நன்றி எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!