Saturday, September 6, 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரத்தில்1) D.மீனாராஜன்.திருவண்ணாமலை தாலுகாவில் உள்ள '''துளூவபுஷ்பகிரி'''என்ற குக்கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கபள்ளி '''ஆசிரியை'''' யாக பணி புரிகிறார் இவர் பணி செய்யும் பள்ளியில் வகுப்பு அறைகளின் எண்ணிக்கை குறைவு குழந்தைகள் உட்கார இடமில்லை.குழந்தைகள் படும் கஷ்டங்களை பார்த்து வேதனையாகி தன் சொந்த முயற்சியில். 
 
கிராமத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் குழந்தைகள் கஷ்டங்களை எடுத்து கூறி அவரிடமிருந்து '''இருபது''' சென்ட் ''' நிலத்தினை தானமாக பெற்று பஞ்சாயத்து யூனியனுக்கு பத்திரபதிவு செய்துகொடுத்து பின்னர் தனது நண்பர்களோடு ஆலோசித்து ரோட்டரி கிளப்.மற்றும் நண்பர்கள் உதவியுடன் '''''இருபத்தைந்து''''' லட்சம்''' ரூபாய் செலவில்.'''2400'''சதுரடியில் தனது பள்ளியின் கட்டிட பணியை துவக்கிவிட்டார்.''''ஒரு''' '''பெண்ணாக''' ''''தனியாக'''' நின்று போராடி '''''வெற்றி''' பெற்ற .'''ஆசிரியை''''D.மீனாராஜன் .அவர்களை வாழ்த்துவோம்.'''' பாரதி''' கண்ட ''''புதுமை பெண்''''
 


2) எத்தனை மனிதர்கள் உலகத்திலே... சமயோசிதம்.
 


3) "
வயசான பாட்டி தானே, இவளுக்கு எதுக்கு இந்த வேலைன்னு நினைக்கலாம். நான் மொத்தமா வெற்றிலை, பாக்கு வாங்கி, கருங்கலில் உள்ள பல சில்லறை வியாபாரிகளுக்கு கொடுத்துட்டு இருக்கேன். தினம் 500 ரூபாய் வரைக்கும் இதில் வருமானம் வருது" 90 வயது அன்னத்தாய் பாட்டி.
 
 
4) உலகெங்கும் மணக்கிறது நம்மூர் தோசை. பாசிட்டிவ்,  தோசையில் இல்லை. வெற்றி பெற்றவர் வரலாற்றில். "பேரு கணபதிங்க.."
 
 
5) கோவை மனிதர் திரு பழனிச்சாமி பற்றி மதுரைத்தமிழன் தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
9 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாஸிட்டிவ் என்ணங்களை பரப்பும் செய்திகளுக்குப் பாராட்டுக்கள்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
எல்லாம் அருமையான தகவல்கள்.. தொடருகிறேன்..
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kg gouthaman said...

The first referred teacher D Meena Rajan is one of my facebook friends!

Bagawanjee KA said...

மீனாராஜன் அவர்களின் சேவையைப் பாராட்டி டாக்டர் பட்டமே வழங்கலாம் .அவர் இனி D,மீனாராஜன் அல்ல ,Dr,மீனாராஜன் !

G.M Balasubramaniam said...

சமயோசிதம் செய்தி படித்தபோது அண்மையில் கரப்பான் மூட்டைப் பூச்சி தொல்லை தாங்காமல் இரயிலை நிறுத்தினார்கள் என்னும் செய்தி நினைவுக்கு வந்தது

மாதேவி said...

நல்லபகிர்வு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

பாராட்டுக்குரிய ஆசிரியர் மீனா ராஜன். தன்னம்பிக்கைக்கு உதாரணம் அன்னத்தாய் பாட்டி. தோசை புராணத்தின் தொடர்ச்சியாக அமைந்த வெற்றிக் கதை சுவையானது. தொகுப்புக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் தாம்....

செய்திகளை பகிர்ந்து கொண்ட நீங்களும்!

Thulasidharan V Thillaiakathu said...

மீனா ராஜனின் சேவை மகத்தானது.

ரயிலில் கூட இப்படியெல்லாம் நடக்கிறதா....அருமை...

பாட்டியின் தன்னம்பிக்கை அதுவும் 90 வயதில்...நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று....

தோசை புரானம் தொடர்கிறதோ....வாழ்த்துக்கள் கணபதிக்கு....படத்துல உள்ள தோசை வித்தியாசமா இருக்குதே அத நீங்க சொல்லவே இல்லையே...இன்னும் இங்கு வரவில்லையோ..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!