திங்கள், 3 மே, 2010

கொலைகாரப் பாவிகள்!” எனக்கு என்னமோ காபியில் விஷம் தான் ஈஸியாகப் படுகிறது ” என்றாள் லதா. 

“ உன் வழக்கம் போல பட்ஜெட் கம்மினு சொல்லாதே! விஷம் ஆனாலும் அடிச்சுக் கொல்றதானாலும் ஒண்ணுதான் “ இது மாதவன்.

“ என்னதான் சொல்லு, கண்ணு மண்ணு தெரியாம கட்டையால அடிச்சு சாகடிக்கறது தான் எனக்குப் பிடிக்கும்.  சேர்த்து வைத்த கோபம் எல்லாம் தீர்ந்த மாதிரியும் இருக்கும்.  அதில ஒரு திருப்தி “ ராகவன் ஒரு சிகரட்டை பற்றவைத்துக் கொண்டான்.

“ என்ன செய்வீங்களோ என்னவோ எனக்குத் தெரியாது, காமாட்சியம்மாள் சாகணும்.  அதுவும் நல்லா அடிபட்டுச் சாகணும். வழக்கம் போல ரிவால்வர் எடுத்து மூணு குண்டு சுட்டாலும் சரி! “ இது பாலு.  அவர்தான் தலைவர்.  எனவே அவர் சொன்னபடியே சுட்டுக் கொல்ல முடிவு செய்யப் பட்டது.

டிவி சீரியல் ஸ்டோரி டிஸ்கஷன் திருப்திகரமாக முடிந்தது.   

13 கருத்துகள்:

 1. மூன்று போட்டோ... மூன்று பாரா...
  அதுக்குள்ள ஒரு கதை.
  ஆனா எடுக்கப் போறதோ
  வருஷக்கணக்கா ஓடப்போற டி.வி சீரியல்.

  பதிலளிநீக்கு
 2. என்று மடியும் இந்த T V மோஹம்
  நல்லா இருக்கு:)

  tamil uthayam supera sonneenga

  பதிலளிநீக்கு
 3. கலக்கல்... brewity எனக்கும் இப்பவும் கை வராத கலை... சூப்பர்

  பதிலளிநீக்கு
 4. இந்த மெகா சீரியல் சதி பண்ற கும்பலையும் அப்படியே........

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. ஏன் இந்தக் கொலைவெறி? துப்பாக்கியைக் க்ளோஸ்-அப்புலே ஒரு நாள், குண்டு போடுறத ஒரு நாள்; குதிரையை அமுத்தறத ஒரு நாள், குண்டு வெளியேறுவதை ஒரு நாளுன்னு இதை வச்சே ஒரு வாரத்தை ஓட்டிரலாமுன்னு பார்க்கறீங்களா? (ஐயையோ, சொல்லிக்கொடுத்துப்புட்டேனே!)

  பதிலளிநீக்கு
 7. நானும் என்னமோன்னு நினைச்சிட்டேன்.
  சின்னத்திரை விமர்சனமா !

  பதிலளிநீக்கு
 8. அட! போற போக்க பாத்தா உங்களுக்கு டீ.வீ சீரியல்ல வசனம் எழுத சான்ஸ் கிடைச்சிடும் போல இருக்கே!

  ரமேஷ், ரொம்ப சரி!

  பதிலளிநீக்கு
 9. நன்றி தமிழ் உதயம், பத்மா, அப்பாவி தங்கமணி, சித்ரா, மாதவன், புலவன் புலிகேசி, சேட்டைக்காரன், ஹேமா, மீனாக்ஷி, எல் கே & வால்பையன் (ஜூனியர்).
  உங்கள் பாராட்டுகள், எங்களுக்கு டானிக்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!