வியாழன், 20 மே, 2010

சூப்பர் படைப்பாற்றல் கொண்டவரா நீங்க?

ஒரு பாட்டு: 





ஒரு படம் :

இங்கே உள்ள பாட்டு + இங்கே உள்ள படம் இந்த இரண்டையும், ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். சரியான பதில் அளிப்பவருக்கு SPS (Super Padaippaatral Subban alladhu Subbi) விருது அளிக்கப்படும்.    சூப்பர் படைப்பாளி?
பாடல், படம் இரண்டையும் ஒரே வார்த்தையில் இணைக்கவேண்டும். அதுதான் சவால் கேள்வி.  
க்ளூ: இந்தப் பதிவைத் தயார் செய்துகொண்டிருக்கும் பொழுது என்னுடைய பின்னாலிருந்து தோளுக்கு மேலே இதைப் படித்த அறிவு ஜீவி, 'படைப்பாளியா?' அல்லது 'படை(ய)ப்பாளியா?' என்று கேட்டார்.

32 கருத்துகள்:

  1. புதிரு என்னானு புரியலிங்க... பொம்பள யாருனு தெரியலிங்க.
    ஊதுறது காரக்குறிச்சி போல இருக்கு.. (நாகேஷ் தயவு)

    பதிலளிநீக்கு
  2. ரவிச்சந்திரன்21 மே, 2010 அன்று 7:11 AM

    தூங்கிட்டு அப்புறம் வந்து சொல்லலாம் இல்லே...

    பதிலளிநீக்கு
  3. இப்போ நாங்க ஒன்றும் சொல்ல மாட்டோம். அப்புறம்தான் சொல்லுவோம். ஒன்று மட்டும் சொல்கிறோம். சந்தோஷமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நீலாம்பரியே தான்.
    எழுந்தவங்களையும் தூங்க வைக்கிற சக்தி ராகத்துக்கு.
    தூங்கறவங்களை சட்டென எழுந்திருக்க வைக்கிற பட்டாசு இந்தம்மா நீலாம்பரி:)

    பதிலளிநீக்கு
  5. முதல் SPS மீனாட்சியை வழிமொழிகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. விஜய்யை வழிமொழிகிறேன் :))

    பதிலளிநீக்கு
  7. ஜெகநாதனை வழிமொழிகிறேன்.

    வழிமொழிந்தவர்களுக்கு பட்டமெல்லாம் வேண்டாம். பொற்காசுகளே போதும்:)!

    பதிலளிநீக்கு
  8. மீனாட்சி, விஜய், ஜெகநாதன் இவர்களின் பதில்களுக்கு நான் முடிவுரை வழங்குகின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. சந்தோஷியை(யும்) வழிமொழிகிறேன் :))

    பதிலளிநீக்கு
  10. ரங்கன் பதிலும் அற்புதம்.

    நானும் இன்னொரு பதில் சொல்கிறேன்.

    இசை ரம்மியம். படத்திலும் ரம்மியம்.

    பதிலளிநீக்கு
  11. 'நீலாம்பரி' என்பது எனது விடை.
    காரணம் :
    "மாதவ, மாமவ தேவா...". -- ராகம் நீலாம்பரி.
    படையப்பா படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடித்த பாத்திரத்தின் பெயர் -- "நீலாம்பரி"

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா21 மே, 2010 அன்று 12:17 PM

    //வழி[மொழி]ந்தவர்களுக்கு பட்டமெல்லாம் வேண்டாம். //

    பதிலளிநீக்கு
  13. வல்லிம்மாவை, விஜயை, ஜெகனை, ராமலக்ஷ்மியை, மீனாக்ஷி அவர்களை,மாதவனை, எல்லாரையும் வழிமொழிகிறேன்! நீலாம்பரி! (வழி மொழிஞ்சா பத்தாதுன்னு சொல்லிட்டீங்கன்னா? அதான் பதிலும் போட்டுட்டோம்ல?)

    பதிலளிநீக்கு
  14. அருமையான நாதஸ்வர இசைக்கு நன்றி ..கேட்டு கேட்டு மகிழ்ந்தேன் ..விடை தான் எல்லாரும் கூறிவிட்டார்களே .நான் late kate

    பதிலளிநீக்கு
  15. நீலாம்பரி பாட்டை கேட்ட தூக்கம் வரும் சரி, பட் ஆனா (மேஜர் சுந்தர் ராஜன் ஸ்டைலில் இரண்டும் !!) படையப்பா நீலாம்பரி இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் தூக்கம் போய்விடும் போலிருக்கே ?

    அப்பாதுரை, ரஜினியின் படையப்பா படம் பலமுறை பார்த்துவிட்டு எதுவுமே தெரியாதவன் போல் யாரு இந்த "பட்லி" ரொம்ப ரொம்ப டூ மச் ?

    பதிலளிநீக்கு
  16. Read my comment first line as

    "நீலாம்பரி பாட்டை கேட்டா தூக்கம் வரும் சரி"

    = கேட்டா =

    பதிலளிநீக்கு
  17. அருமையான நாதஸ்வர இசை. ரொம்ப ரசிச்சு கேட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. சாய்ராம்...ரஜனி படம் பல முறை பாக்குறதெல்லாம் போன பிறவியில. படையப்பா பாதி பாக்குறதுக்கே சடையப்பா.

    ரஜனி படம் பல முறை பாத்தது தில்லுமுல்லுனு சொல்லலாம்; இப்ப அதுவும் ரஜினிக்காக பாக்க முடியலப்பா. 2002-2003 வாக்குல முத்து படம் ரெண்டுமூணு தரம் பாத்தது லேடஸ்டுனு சொல்லலாம். அதுவும் டோக்வோவுல இருந்தப்ப அந்த ஜனங்க எப்படி ரஜினியை ரசிக்க முடியுதுங்கற ஆச்சரியத்துல பாத்ததுனு தான் சொல்வேன். of course, later என்னுடைய ரெண்டு வயது மகன் தில்லானா பாட்டுக்கு டான்சு ஆடுவான் பாரு - அதுக்காக அந்த்ப் பாட்டை பத்து பதினஞ்சு தடவை பாத்தேன்னு சொல்லணும்.

    i have realized that ரஜினி படம்லாம் குப்பை சாய்ராம். dustbin. ரஜினியையே மறந்தாச்சு - அந்தாளு படத்துல வர நடிகைகளை யாரு நினைவு வச்சிருக்கப் போறா? anyway படையப்பால இந்த பொம்பளை யாரப்பா?

    பதிலளிநீக்கு
  19. //i have realized that ரஜினி படம்லாம் குப்பை சாய்ராம். dustbin. //

    What will you say for MGR movies then ? I just wonder, how did I went ahead and saw all those crap now ?

    Like my brother says, Rajini continue to act the he knows but only we have changed !!

    பதிலளிநீக்கு
  20. My elder son Adithya was made to sleep my by wife by singing "Super Staru yaarunu kaetta Adhi peyar solvaen"

    பதிலளிநீக்கு
  21. SPS விருது பெறுபவர்கள் :
    மீனாக்ஷி,
    வல்லி சிம்ஹன்
    விஜய்
    ஜெகநாதன்
    ராமலக்ஷ்மி
    k_rangan
    மாதவன்
    அநன்யா
    பத்மா
    (யாருடைய பெயராவது விட்டுப் போச்சா?)

    பதிலளிநீக்கு
  22. //Rajini continue to act the he knows but only we have changed !!//

    that is true; though i can still watch mullum malarum, thappu thalangal - even ninaithale inikkum. somewhere rajanikanth began to dish out dustbin material. not that i have acquired better taste; my taste or lack of it, has only grown with me :)

    imo, mgr as an actor had some class and originality - rajnikanth never had either. his mannerisms and fast-talk were his strengths but not original. i used to be a big fan - i can't stand him now. don't know why.

    பதிலளிநீக்கு
  23. பொற்காசுகள் எங்கே?
    அக்ஷய திரிதயை அன்னிக்குக் கொடுத்துட்டீங்களா:))

    பதிலளிநீக்கு
  24. வல்லி சிம்ஹன் - நாங்க விருது மட்டும்தான் கொடுப்பதாகச் சொன்னோம்.
    பொற்காசுகள் எங்கே என்று கேட்டு எங்களை விரட்டாதீர்கள்!

    பதிலளிநீக்கு
  25. எஸ்.பி.எஸ். பட்டம் எனக்குமா? ஐ கும் கும் குமா-தான்!
    நன்றி எங்கள்-பிளாக்!!!
    ஆமா, இந்தப் பட்டத்தை பேருக்கு முன்னால சேர்க்கணுமா இல்லே பின்னாடி சேர்க்கணுமா :)))

    பதிலளிநீக்கு
  26. SPS Jeganathan.
    Jeganathan SPS.

    பெயருக்குப் பின்னால் போட்டால் ஜதப்பா இருக்கு. ஜெகநாதன் ஐ பி எஸ் என்பது போல.

    பதிலளிநீக்கு
  27. ஹே.. ஹேஹேஹெ.. ஹா...
    டக் டக் டக் டக் ச்ச்சரக்... டக் டக் டக் டக்..
    ஒண்ணுமில்லே.. தங்கப்பதக்கம் எஸ்.பி. செளத்ரி மாதிரி தொண்டைய செருமிக்கிட்டே நடந்து பாத்துக்கிறேன்.
    :::
    பாத்தீங்களா.. சக எஸ்பிஎஸ்-களே
    நமக்கு சொன்ன மாதிரியே தங்கக்காசு கொடுக்காட்டியும் தங்கப்பதக்கமே கொடுத்துட்டாங்க நம்ம எங்கள்-பிளாக் :))

    meenakshi~ - அசல் எஸ்பிஎஸ் :))

    பதிலளிநீக்கு
  28. // SPS Jeganathan.
    Jeganathan SPS.

    பெயருக்குப் பின்னால் போட்டால் ஜதப்பா இருக்கு. ஜெகநாதன் ஐ பி எஸ் என்பது போல.//

    It reminds me of the following
    மணல் கயிறு :
    எஸ் வி சேகரின் நண்பன் : (வீடு வாசலில் இருக்கும் பெயர்ப்பலகையைக் கண்டு) டேய் நீ BA தான, பிச்சுமணி MAன்னு போட்டிருக்கு..?
    எஸ் வி சேகர் (பிச்ச்சுமணி) : ஹி.. ஹி.. இனிஷியலத்தான் பின்னாடி போட்ருக்கேன்..
    எஸ் வி சேகரின் நண்பன் : சாப்புடுறது வாயலாத்தான ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!