வெள்ளி, 28 மே, 2010

ரசித்தவை...ருசித்தவை...

அப்படியா?....... 

* நூறு பூஜ்யங்களை உடைய எண்ணுக்கு கூகிள் என்று பெயர்.
# அப்போ googoooooooo......................................................................ool என்று சொல்லுங்க!    
  
* Swiss இல் பிரதம மந்திரியோ, மந்திரிகளோ கிடையாது.(அப்படியா ஹேமா?)
#1 எப்பவுமே டூர் போயிடுவாங்களோ?

#2 மந்திரிகள் யாருக்குங்க வேணும்? சுவிஸ் வங்கிகள் இருந்தால் போதும்.  
   
* மீன்கள் இல்லாத ஒரே நதி ஜோர்டான்.(அப்படியா)
# அப்போ அங்கே கொக்கும் இருக்காதா?  

* உலகில் உள்ள 193 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே பில் கேட்ஸ் விட பணக்கார நாடுகள்.
# பில் கேட்ஸ் அப்படீங்கற நாடு எங்கே இருக்கு?  
     
*உண்மையான அன்பிற்கு ஏமாற்றத் தெரியாது..ஏமாற மட்டும்தான் தெரியும்!
# அது உண்மையான ஏமாற்றமாக இருக்கும் என்று உண்மையாக நம்பலாமா?  
=====================================================
டிப்ஸ்...
ஏன்? ஏன்? ஏன்?

*தொலைபேசியில் பேசும்போது இடது காதில் வைத்துப் பேசுங்கள்..

*மருந்து, மாத்திரைகளைக் குளிர்ந்த தண்ணீருடன் உட்கொள்ளாதீர்கள். 
*மருந்து குடித்த உடனே படுக்கக் கூடாது.


*மாலை 5 மணிக்குப் பின் அதிக உணவு உட்கொள்ளக் கூடாது..

*தண்ணீர் காலையில் அதிகமாகவும், மாலையில் குறைவாகவும் குடிக்க வேண்டும்.

*இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தான் நல்ல தூக்க நேரம்..

*பேட்டரி சார்ஜ் கடைசிக் கோட்டைக் காட்டுகிறது என்றால் மொபைலில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் சாதாரண சமயத்தை விட அந்த சமயம் ரேடியேஷன் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்
==========================================================
தீவிர சந்தேகங்கள்...  
*நீச்சல் உடம்பை ட்ரிம்மாக வைத்திருக்க உதவுமென்று சொன்னால் சுறா மீன்கள் ஏன் பருமனாக இருக்கின்றன?

*எல்லோரும் சொர்க்கத்துக்கு போக விரும்பினாலும் ஏன் யாருமே சாக விரும்புவதில்லை?

*சதுரங்க விளையாட்டில் வெள்ளை நிறம்தான் முதலில் நகர்த்தப் படும் என்றால் நிறவெறிக் கொள்கை அங்கு இருக்கிறது என்று நம்பலாமா?

*நமது ஜனநாயக நாட்டில் பேச்சுக்கு சுதந்திரம் உண்டென்றால் எதற்கு தொலைபேசிக் கட்டணங்கள்?
======================================================
நினைவில் நான்கு முத்துக்கள்...

*காசு கொடுத்து சந்தோஷத்தை வாங்க முடியாதுதான்.....ஆனாலும் ஒரு சைக்கிளில் உட்கார்ந்து அழாமல், BMW காரில் வசதியாக அழ முடியும்.

*எதிரிகளை மன்னித்து விடுங்கள்; ஆனால், அவர்கள் பெயரை நினைவு வைத்திருங்கள்..

*பிரச்னையிலிருக்கும் மனிதனுக்கு உதவி செய்யுங்கள். அவன் உங்களை மறக்காமல் நினைவு வைத்திருப்பான்..அவனுக்கு மறுபடி பிரச்னை வரும்போது!

*மது குடிப்பது பிரச்னையைத் தீர்க்காது. பால் குடிப்பதும்தான்.  

26 கருத்துகள்:

  1. உலகில் உள்ள 193 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே பில் கேட்ஸ் விட பணக்கார நாடுகள்.
    # பில் கேட்ஸ் அப்படீங்கற நாடு எங்கே இருக்கு?


    இது சூப்பரா இருக்கே...

    பதிலளிநீக்கு
  2. சுறாக்கள் பருமனாக இருப்பதில்லை, திமிங்கிலங்கள் தான் என்றாலும் அவையும் நீந்திக் கொண்டே இருப்பவை தானே - ஒருக்கால், எப்பொழுதும் ஏதாவது விழுங்கிக் கொண்டே இருப்பதால் இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  3. *எல்லோரும் சொர்க்கத்துக்கு போக விரும்பினாலும் ஏன் யாருமே சாக விரும்புவதில்லை?

    செத்த பிறகு தானே தெரியும். போன இடம் சொர்க்கம்மா... நரகமா... ன்னு.

    பதிலளிநீக்கு
  4. நினைவில் நான்கு முத்துக்கள். Superb!

    பதிலளிநீக்கு
  5. //சதுரங்க விளையாட்டில் வெள்ளை நிறம்தான் முதலில் நகர்த்தப் படும் என்றால் நிறவெறிக் கொள்கை அங்கு இருக்கிறது என்று நம்பலாமா?//

    ஆகா....எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா... செஸ் விளையாட்டை கண்டுபிடிச்சது வெள்ளைக்காரன் நினைக்கிறேன்...அதனால இருக்குமோ...

    பதிலளிநீக்கு
  6. chess கண்டுபிடிச்சது நம்ம நாட்ல

    பதிலளிநீக்கு
  7. //நமது ஜனநாயக நாட்டில் பேச்சுக்கு சுதந்திரம் உண்டென்றால் எதற்கு தொலைபேசிக் கட்டணங்கள்?//
    நமக்கு நாமே பேசிக்கதாங்க சுதந்திரம் உண்டு, கட்டணமும் கிடையாது.

    பதிலளிநீக்கு
  8. நல்லது கெட்டது,
    சரி பிழை எல்லாம் சொல்லி
    ரொம்பக் குழப்புறீங்க.
    அது மட்டும் உண்மை !

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா29 மே, 2010 அன்று 5:31 AM

    இடது காதில் ஃ போன் பேசல்:

    குறிப்பெடுக்க வலது கை தயார் !

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா29 மே, 2010 அன்று 5:34 AM

    BMW காரில் வசதியாக அழ முடியும்.

    சாய் சார், உங்கள் அனுபவம் எப்படி ?

    பதிலளிநீக்கு
  11. //BMW காரில் வசதியாக அழ முடியும்.

    சாய் சார், உங்கள் அனுபவம் எப்ப//

    அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  12. கதம்ப துணுக்குகளால் செய்த மாலை அழகு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. எப்படி சார் உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடியுது. கலக்கல் கதம்பம்!

    பதிலளிநீக்கு
  14. //*எல்லோரும் சொர்க்கத்துக்கு போக விரும்பினாலும் ஏன் யாருமே சாக விரும்புவதில்லை?//

    விருப்பம் எப்படியிருப்பினும் போகும் இடம் உள் மனதுக்குத் தெரிந்திருப்பதால்தான் தள்ளிப் போட நினைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. குரோம்பேட்டைக் குறும்பன்29 மே, 2010 அன்று 12:57 PM

    ட்ரிங் ட்ரிங். தொலைபேசி ஒலிக்கிறது.
    கு கு எடுக்கிறார்.

    எங்கள் : ஹலோ யாரு ?
    கு கு :

    எங்கள் : ஹலோ ஃபோனை எடுத்துவிட்டு ஒன்னும் பேசவில்லை என்றால் எப்படி?
    கு கு :

    எங்கள் : யாராவது குழந்தை எடுத்திருப்பார்களோ? கொழந்தே - வீட்டுல குரோம்பேட்டைக் குறும்பன் இருக்காரா?
    கு கு :

    எங்கள்: அப்படியும் யாரும் இருப்பதாகத் தெரியலையே !!
    கு கு :

    எங்கள்: ஹலோ ஹலோ ஓ ஓ !!
    கு கு:

    எங்கள்: மடையன் ஃபோனை எடுத்துவிட்டு ஒன்றுமே பேசாவிட்டால் எப்படி?
    கு கு:

    (எங்கள் ப்ளாக் ல போட்டிருந்தபடி, குரோம்பேட்டைக் குறும்பன், தொலை பேசியை இடது காதில் பொருத்தி பேச விரும்பினார். ஆனால் என்ன - கு கு வுக்கு அந்தக் காது சுத்தமா கேக்காது.)

    பதிலளிநீக்கு
  16. // Anonymous said.. BMW காரில் வசதியாக அழ முடியும். சாய் சார், உங்கள் அனுபவம் எப்படி ? //

    கார் வாங்கியதே இங்கே அமெரிக்காவில் லோக்கல் "ஐயப்ப சீசன்" மாலை மாட்டிக்கொண்டு டிசம்பர் மாத கடும் குளிரில் - அதனால் கருப்பு / நீல வேட்டி அணிந்து செருப்பு போடாமல் நியூ. ஜெர்சி / பென்சில்வேனியா வலம் வந்த ஓரே பி.எம்.டபுல்யூ ஓட்டியவன் நான் தான் !!! அதுவும் போன முறை அதிக நாட்கள் விரதம் வேறு. பெப்பர் / சால்ட் தாடி, கழுத்து முழுதும் ஐயப்ப விரத மாலைகள், நெத்தியில் விபூதி பட்டை / சந்தனம் என்று வார இறுதியில் பஜனை என்று இங்கே அபார்ட்மென்ட் ஒவ்வென்றும் செல்லும்போது காரை பார்த்துவிட்டு - அதைவிட என் ஐயப்ப வேஷ்டியை - "நல்ல ஸ்கர்ட்" என்று சொல்ல வெள்ளை / கருப்பர்கள் தான் அதிகம் !!

    இப்போது கார் வாங்கி ஐந்து மாதம் ஆகிவிட்டது. இந்த சில வாரங்களாக வாரத்தில் நான்கு நாட்கள் வானத்தில் பயணம் - எங்கத்த கார் ஓட்டுவது ? ஒரு முறை வேர்ஜினியா போனேன் மறுபடியும் நாளை மறுதினம் திங்கள் கிளம்பி செவ்வாய் மீட்டிங் வேர்ஜினியாவில். அடிக்கடி ஓட்டியது டென்னிஸ் ஆடவும் வாரம் ஒருமுறை கோவிலுக்கும் தான் !! ஏன் கேட்கிற பிரதர் ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  17. ஹேமா

    நீங்கள் ச்விட்செர்லாந்து இருக்கிறீர்கள் என்று என் மனைவி முன்பே சொன்னாள் - நான் மறந்து போய்விட்டேன். எந்த ஊரில் இங்கே இருக்கின்றீர்கள் ?

    நாங்கள் லண்டனில் இருந்தபோது (2003 மார்ச் மாதம்) இந்திய திரும்புவதற்கு முன் Lucerne, Interlaken, ஜுரிச், Jungfrau, மவுண்ட் டிட்லிஸ் என்று ஒரு எட்டு / பத்து அனுபவித்தோம். உங்கள் ஊரில் ஸ்கியிங் செய்யாத ஓரே ஜென்மங்கள் நாங்கள் தான் இருப்போம். என் பெரிய மகன் அப்போதே நான் அங்கேதான் வாழ்க்கையில் செட்டில் ஆவேன் என்று சொல்லுவான். அப்போது அவனுக்கு ஏழு வயது.

    மறுபடி வர ஆசை. லண்டனில் சம்பாதித்து உங்கள் ஊரில் செலவழிக்கவே கஷ்டம், அமெரிக்க டாலர் சம்பளம் ரொம்பவே கஷ்டம். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  18. //*தொலைபேசியில் பேசும்போது இடது காதில் வைத்துப் பேசுங்கள்..//

    "பாப்பாவோட" ரெண்டு காதும் காணோம் ? எந்தக்காதில் வைத்தால் என்ன ?

    பதிலளிநீக்கு
  19. கண்ணாடி பவர் ஏறினா சந்தோஷப்படாம வருத்தப்படுவது ஏன்

    பதிலளிநீக்கு
  20. பல (தெரியாத) செய்திகளை தருவதற்கு நன்றிகள்..

    // நூறு பூஜ்யங்களை உடைய எண்ணுக்கு கூகிள் என்று பெயர்.//

    That's not 'google' but, 'googol'

    Ref . http://en.wikipedia.org/wiki/Googol
    & http://en.wikipedia.org/wiki/Google (heading "History"

    நாங்க அவ்ளோ ஈசியா எல்லாத்தையும் நம்ம்பிட மாட்டோம்.... செக் பண்ணுவோமில்லை....

    பதிலளிநீக்கு
  21. மாதவன் சொல்வது சரிதான்.
    googol is cardinal number - 1 followed by 100 zeros.
    Thank you Madhavan.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!