திங்கள், 10 மே, 2010

வாசகர்கள் கலக்குகிறார்கள் !அநன்யா மஹாதேவன் (பாட்டு)

நாங்களும் பாடுவோமுல்ல?

அநன்யா மஹாதேவன் (பாட்டு பதிவு) அவருடைய கமெண்ட்: கல்லெல்லாம் விட்டு எறியப்படாது! ஆமா...
எங்கள் கமெண்ட்: நல்லா இருக்கு. கல்லெல்லாம் இல்லை; கை தட்டல்தான்.

ஜெகநாதன் எழுதியதும், அனுப்பியதும்: 
இது கடிதம்: 
அன்பிற்கினிய எங்கள்-பிளாக்,
தங்களின் வ​லைப்பதிவின் 'ப​டைப்பாற்றல் பயிற்சி பகுதி'-யில் குறிப்பிட்டுள்ளவாறு, யா​னைப் படத்​தை வ​ரைந்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
அன்னப்பட்சியின் அளவுக்கு  யா​னைக்கு 'ஸ்பீடு'  ​போறாது ​போல. கொஞ்சம்  தாமதமாக​வே ஆடி அ​​சைந்து வந்திருக்கிறது.
​பேப்பரிலிருந்து காமிராவுக்கு பதியும் ஊடக மாற்ற முயற்சியில், யா​னையின் படம் ​கொஞ்சம் பூடக வர்ணத்தில் வந்துவிட்டது.
இருந்தும் பதிப்பிட உகந்த யா​னையாக இருக்கும் ​என்று நம்புகி​றேன். 
வாய்ப்பளித்தற்கும், ​தொடர்வாக ஊக்கமூட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள்.
படம்பற்றி:
படத்த​லைப்பு: யா​னை
வ​ரைந்தது: ​ஜெகநாதன். க
உரி​​மை: காலடி (http://jaganathank.blogspot.com/)
பிரசுர உரி​மை: எங்கள்-பிளாக்
வ​ரை​பொருட்கள்: ஸ்​​டெட்லர் ​பென்ஸில்கள் (4B மற்றும் HB) & Fullscape Cartridge  paper
அன்பாக,
​ஜெகன்.
Jaganathan K
இது படம் :

32 கருத்துகள்:

 1. ithu yaanai
  நா என் பாட்டு அனுப்பி இருக்கேன் .ரெகார்டிங் சரியா இருக்காது ஹிஹிஹி எதாவது ஒரு ரீசன் ..கேட்க முடியும் categorynna upload பண்ணுங்க .பாவம் வாசகர் கூட்டம் குறைந்து போய் விடப்போகிறது

  பதிலளிநீக்கு
 2. யானை சூப்பர். அந்யாயமா நான் பாடின பாட்டை போட்டுட்டீங்களே? நிராகரிக்கப்பட்டதுன்னு மெயில் அனுப்புவீங்கன்னு பார்த்தா.. இப்படி பண்ணிட்டீங்களே?

  பதிலளிநீக்கு
 3. Jagan

  யானை சூப்பர். Shows creativity that precisely Engal Blog was looking for.

  //அநன்யா மஹாதேவன் said...

  அந்யாயமா நான் பாடின பாட்டை போட்டுட்டீங்களே? நிராகரிக்கப்பட்டதுன்னு மெயில் அனுப்புவீங்கன்னு பார்த்தா.. இப்படி பண்ணிட்டீங்களே? //

  It is good only, why do you feel so ?

  பதிலளிநீக்கு
 4. வாவ்... கலக்கல் அனன்யா...
  வாழ்த்துக்கள்... சூப்பர் வாய்ஸ்பா

  ஜெகநாதன் - ரெம்ப அழகா வரைஞ்சு இருக்கீங்க.... வெறும் பென்சில்ல இப்படி ஒரு கை வண்ணமா.. சூப்பர்

  படைப்பாளிகளை அடையாளம் காட்டிய எங்கள் ப்ளாக்க்கு நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 5. அநன்யாவுக்குக் கைதட்டல்தான்.
  பாராட்டுக்கள் அநன்யா.

  ஐயோ....இந்த யானை வராதுன்னு நினைச்சேன்.வந்திடிச்சா !சோ....சோ.(கலைக்கிறேன்)பொறாமை பொறாமை.இவ்ளோ அழகா கீறுறவங்களையெல்லாம் போட்டில சேர்க்காதீங்க ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. ஆமாம் வாசகர்கள் கலக்குகிறார்கள்.
  எங்கள்-பிளாக் ஒரு சஞ்சிகை லயத்துடன் செயல்படுவது உணர்கிறேன்.

  அநன்யாவின் பாடல் கேட்டேன். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் குரல் அல்ல.. அதையும் தாண்டிப் புனிதமானது! வாழ்த்துக்கள்!!

  யானை வெளியீட்டுக்கு நன்றி!
  உற்சாகமூட்டும் நண்பர்களுக்கு நன்றிகள்!!!

  பதிலளிநீக்கு
 7. காகித ஓடம் பத்மாவின் பாடலுக்கு ​வெயிட்டிங்! என் பங்குக்கு சில வாசகர்களைக் கூட்டி வருகிறேன். கூட்டம் குறையாது கவலை வேணாம்.

  பதிலளிநீக்கு
 8. பத்மா அவர்களின் பாடலுக்கு நாங்களும் காத்திருக்கிறோம்.
  இதுவரையிலும் engalblog gmail inbox ல அதைக் காணோம்.

  பதிலளிநீக்கு
 9. பாட்டு நல்லா இருக்கு அநன்யா, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. ஆனை, ஆனை மாதிரியே இருக்குங்கோ! :))))

  பதிலளிநீக்கு
 11. ஜெகநாதனின் யானை ஸ்க்ரீனிலிருந்து வெளியே நடந்து வருவமோ என்று எண்ணும் அளவு போல் தத்ரூபமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
  அநன்யா அவர்களின் பாட்டு அருமை. --கீதா

  பதிலளிநீக்கு
 12. பாட்டு நல்லா இருக்கு. பாடியதும் ஜோர். யாணை அசத்துகிறது ஜெகன்.

  பதிலளிநீக்கு
 13. அநன்யா, பாடினது நல்லாருக்கு.

  ////அநன்யா மஹாதேவன் said...

  அந்யாயமா நான் பாடின பாட்டை போட்டுட்டீங்களே? நிராகரிக்கப்பட்டதுன்னு மெயில் அனுப்புவீங்கன்னு பார்த்தா.. இப்படி பண்ணிட்டீங்களே? //

  It is good only, why do you feel so ? //

  அநன்யா அப்படித்தான், ரொம்பத் தன்னடக்கம்; சில சமயம் நமக்கு கோவம் வரவைக்கிற அளவுக்கும்!! ;-)))

  ஜெகன், யானை வரைஞ்ச மாதிரியே இல்லை; ஃபோட்டோ மாதிரி இருக்கு. தத்ரூபம்!!

  பதிலளிநீக்கு
 14. அநன்யா--அபுதாபி சின்னக்குயில் .தொடரட்டும்..வாழ்த்துக்கள்

  ஜெகன் ...படமா..போட்டோவா..சின்னபென்சிலில்..ஒரு பெரிய காவியம் ...

  பாராட்டு...பாராட்டு....பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 15. அனன்யா மற்றும் ஜெகநாதன் -- பாராட்டுக்கள்.
  நா வரையமாதிரி, யாரும் யானை வரைய முடியாது.. சரியா சொல்லனும்னா, நா வரையற யானை மாதிரி நிஜ யானை கூட இருக்காது.. அதனாலதான் இந்த போட்டில கலந்துக்கல..

  பதிலளிநீக்கு
 16. ஹி ஹி.. நான் வேணும்னா பாடட்டுமா?

  ஜெகனோட படம் உயிரோட எழுந்து வந்துடும் போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 17. ananya ka ... apdiye roshini padina mathiriye irunthathu... unga aathu kararyum sethu pada soliruntha inum joopera irunthrukum... :P

  பதிலளிநீக்கு
 18. @ ஜெகநாதன்,

  நீங்க ஆனையிட்டால் அது அழகாதான் இருக்குமெனத் தெரியும். ஆனா இத்தனை அழகா:)?
  உயிர்ப்பான படம்.

  மற்ற ஆனைகளை கட்டிப் போட்ட இடத்தில் அடிக்கடி வந்து தேடிட்டுப் போனால் இங்கே அட்டகாசமாய் நிற்குது உங்க ஆனை. இப்போதுதான் பார்க்கிறேன். என் பாராட்டுக்கள்:)!

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் அனன்யா. தொடர்ந்து பாடி குரலிசை பயிலுங்கள்.
  அஷ்வின்ஜி.
  www.frutarians.blogspot.com
  www.vedantavaibhavam.blogspot.com

  பதிலளிநீக்கு
 20. //அப்பாதுரை said... ஹி ஹி.. நான் வேணும்னா பாடட்டுமா?

  ஜெகனோட படம் உயிரோட எழுந்து வந்துடும் போலிருக்கே?//

  நாம பாடினா ரிஸ்க் ? வேணாம் துரை !

  ஏற்கனவே ஜெகன் யானை படம் தத்ருபம், உயிருடன் நடந்தால் என் படுக்கையில் பெட்பேன் வைக்க வேண்டி வரும் !

  பதிலளிநீக்கு
 21. ஜகன் உங்கள் ஓவியங்கள் ஒரு காட்சியாக வைக்கணும் .பயங்கர ரசிகை ஆயிட்டேன்

  பதிலளிநீக்கு
 22. யானை மானிட்டரை விட்டு வெளில வந்துடுமோன்னு நினைத்தேன்.
  இப்படி ஒரு வலைப்பூ இருப்பது இப்போதுதான் தெரியும்.
  தான்க்ஸ் அனன்யா.
  பாட்டு நன்றாக இருந்தது.
  ஆமாம் எப்படிப் பாடி அதை எப்படி அனுப்பறது?
  என் குரல் கேட்க அசாதாரண தைரியம் வேணும்.
  லின்க் அனுப்ப முடியுமா.

  பதிலளிநீக்கு
 23. என் பாட்டு நல்லா இருக்குன்னு ரொம்ம்ம்ம்ம்ப பெரிய மனசு பண்ணி சொன்ன உங்க எல்லாருக்கு என் மனமார்ந்த நன்றீஸ் மக்களே!

  பதிலளிநீக்கு
 24. அனன்யா, பிசிறு இல்லாம அழகா பாடி இருக்கீங்க, வாழ்த்துக்கள்!
  ஜெகநாதன், நிஜமாவே இது வரைஞ்ச மாதிரியே இல்லை. படமெடுத்த மாதிரி ரொம்ப தத்ரூபமா இருக்கு. வாழ்த்துக்கள்.
  அன்னிக்கு அவசரமா இருந்ததால ரெண்டு பேரையுமே ஒரே வார்த்தைல பாராட்ட வேண்டியதாயிடுத்து.

  பதிலளிநீக்கு
 25. பாட்டு நல்லா இருக்கு அநன்யா, வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. //ஆமாம் எப்படிப் பாடி அதை எப்படி அனுப்பறது?
  என் குரல் கேட்க அசாதாரண தைரியம் வேணும்.
  லின்க் அனுப்ப முடியுமா.
  // sweet valliamma, neenga normala peesi anuppinaaley athai paattu!nu solli pootturuva don't wrry...;))

  பதிலளிநீக்கு
 27. எங்கள் பிளாகின் இடது பக்க சைடு பாரில், ப்ரீ சவுண்ட் ரிக்கார்டர் டவுன்லோட் செய்யும் சுட்டி கொடுத்துள்ளோம். சுட்டி மூலம் ப்ரீ சவுண்ட் ரிக்கார்டர் தளத்திற்குப் போய் அதை டவுன்லோட் செய்து, உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். கம்பியூட்டரின் மைக் போர்ட்டில் ஒரு வெளிப்புற மைக் இணைத்தால், நம் குரலை கம்பியூட்டரில் பதிவு செய்யலாம். செட்டிங்க்ஸ் - அறுபத்து நான்கு முதல் நூற்று இருபத்தெட்டு கிலோ பிட்ஸ் பெர் செகண்ட் (64 to 128 kbps) என்று செட செய்து எம் பி 3 வடிவில் கோப்பு உருவாகும், தானாகவே அது சேமிக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 28. @ அநன்யா,

  இனிமையாய் பாடியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 29. நல்லா பாடியிருக்கீங்க, அனன்யா! கூடிய விரைவில் இந்தத் துறையிலும் தைரியமாக இறங்கலாம். பாராட்டுக்கள்.
  ஜகன், யானை நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்! இன்னும் எங்கள் ப்ளாகில் வந்து கலக்கப்போவது யாரு யாரு?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!