திங்கள், 24 மே, 2010

வாசக நண்பர்களுக்கு வணக்கம்

எங்கள் ப்ளாக் ஆரம்பித்து அடுத்த மாத இறுதியுடன், ஓராண்டு பூர்த்தியாகப் போகிறது.

ஆரம்பித்த முன்னூற்று முப்பது நாட்களுக்குள், சக பதிவர்களும், வாசகர்களும் கொடுத்து வருகின்ற ஊக்கம் உற்சாகம் இரண்டுமே எங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

உங்கள் ஆதரவுதான் எங்களை தமிழ்த்தளங்களின் தர வரிசையில் உள்ள முன்னூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களில் முதல் இருபதுக்குள் எப்பொழுதும் வைத்திருக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்றுவரை இரண்டு நாளைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இந்த வலைப்பூவிற்கு இரசிக மன்ற உறுப்பினராக சேருகிறார்கள். 

சமீப காலமாக, வாசகர்கள் பெரும் அளவில் எங்கள் ப்ளாக் படைப்பாற்றல் பிரிவில் பங்கேற்றுக் கொள்கிறார்கள்.   படம் - பென்சிலால் வரைந்தவை, கம்ப்யூட்டரில் வரைந்தவை, வண்ண ஓவியங்கள், கார்ட்டூன் வகைப் படங்கள், பாடல்கள், வாத்திய இசை எல்லாமே வரத் துவங்கி உள்ளன.

 இந்த நிலையில், ஒரு நாளுக்கு  ஒரு பதிவு என்கிற எங்கள் கொள்கையை நாங்கள் கடைபிடித்தால், வாசகர்களின் ஆர்வத்திற்கு முட்டுக் கட்டையாக அது ஆகிவிடும் என்று எங்களுக்குத் தோன்றியது. எங்கள் எண்ணப் பதிவுகளையும் உங்கள் படைப்புகளையும் வலை இட எங்கள் ப்ளாக் மட்டும் போதாது என்று தோன்றியதால், புதிய வலைப்பூ ஒன்றைத் துவங்கிவிட்டோம். 

வலைப்பூவின் பெயர்:

URL : www.engalcreations.blogspot.com 

இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் போக, வர சுட்டிகள் இரண்டிலுமே சைடு பாரில் மேலே கொடுத்துவிடுகிறோம். 

ஆனால் படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் பயிற்சிகள் இந்த வலையில்தான் பதிவிடுவோம். வாசகர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய ஜி மெயில் engalblog@gmail.com என்பதுதான்.

என்ன, சரிதானே?

(இதுவரை வந்த வாசகர் படைப்புகள் எல்லாமே அங்கும் வெளியிட்டிருக்கிறோம்.. இனிமேல் வருகின்ற வாசகர் படைப்புகள் அங்கே மட்டும் வெளியாகும்.)

12 கருத்துகள்:

 1. புதிய ப்ளாக் துவங்கியதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்...உங்கள் முயற்சி மேன்மேலும் வெற்றி வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல யோசனை. வாழ்த்துக்கள்!

  Best wishes!

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் ஸ்ரீராம்.
  இனி அங்கயுமா !

  பதிலளிநீக்கு
 5. Greetings.. on your anniversary..

  I sent a post relevant to http://engalblog.blogspot.com/2010/05/blog-post_24.html
  Hope this will be published in http://engalblog.blogspot.com/2010/05/blog-post_24.html

  Thanks..

  பதிலளிநீக்கு
 6. 'இது நம்ம ஏரியா' தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள், நண்பர்களே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!