வியாழன், 6 மே, 2010

எங்களுக்கு வந்த யானைகள்

படைப்பாற்றல் பயிற்சி இரண்டு பகுதிக்கு வந்த எல்லா யானைகளையும் ஏன் ஒரு பதிவாக வெளியிடவில்லை என்று எல்லோரும் அலை, தொலை, வலை மூலமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமலக்ஷ்மி மேடம் சொன்னது மாதிரி பாட்டுப் பாடி விட்டு சென்ற ஜெகநாதன் எப்போது யானையை அனுப்புவார் என்று வலை மீது கண் வைத்துக் காத்திருந்தோம். யானை வரும் பின்னே, காலடி ஓசை வரும் முன்னே என்று பார்த்தால் எங்களுக்குக் காதும் கேட்கவில்லை, கண்ணும் பூத்துப் போய்விட்டது. 

ஒரு நண்பர் எவ்வளவு முறை முயன்றாலும், யானை வரவில்லை, மிக்கி மவுஸ்தான் வருகிறது என்று எழுதியிருந்தார். அதையாவது அனுப்பி வையுங்கள் என்று கேட்டால் அவர், 'நீங்க அடுத்த பயிற்சியாக மிக்கி மவுஸ் படம் போடக் கற்றுக் கொடுங்கள் அப்போ நான் வரைந்த எலி ஃபண்ட்  படத்தை அனுப்புகிறேன்' என்கிறார். 

சரி இனிமே வெயிட் பண்ண வேண்டாம் என்று இதோ வந்த படங்களை வெளியிட்டுவிட்டோம்.


வரைந்த யானைகள் இப்படி இருக்கும்பொழுது, திருக்கடையூர் யானையை எங்களுக்கு அனுப்பி வைத்து உண்மையில் யானை எப்படி இருக்கும் என்று உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீமாதவன். இங்கே பாருங்க:








10 கருத்துகள்:

  1. திவ்யா யானை அன்றைக்கே கவனித்தேன். அடக்கமாய் நிலம் பார்த்து நிற்கிறது.

    கு.கு யானை டான்ஸிங்.

    மீனாஷி மேடம் யானை ஒயில்.

    ஆனந்த் சுரேஷ் ஆனைக்கு தந்தம் இல்லை. ரைட் பெண் யானை.

    பாட்டுப் பாடிப் போனவர் திரும்பி வராததால் மற்ற யானைகள் தேறி விட்டன:)! ஆனாலும் போட்டி இருந்தால்தான் சுவாரஸ்யம். லேட்டா வந்தாலும் பதிவில் சேர்த்திடுங்க.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா..... எல்லா கஜ ராஜாக்களும் அசத்துராங்களே ..... :-)

    பதிலளிநீக்கு
  3. எல்லா குட்டி ஆனையும் அழகா இருக்கு!

    ராமலக்ஷ்மி கையெழுத்து போட்டி வெச்சா உங்களுக்குதான் என் ஓட்டு. உங்க கையெழுத்து அச்சுல வார்த்த மாதிரி அவ்வளவு அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. வரைய தான் டைம் இல்லாம போச்சு .போன முறை அந்த அன்னம் வரைந்து பார்த்து
    ரூம் பூரா அன்ன பக்ஷி .அடுத்து பாக்கலாம் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு யானைக்கும் கதை சொல்லலாம்.யானை கீறத்தான் தெரில.கதையாவது சொல்லுவமேன்னு...!

    திவ்யா யானையும்
    கையெழுத்தும் அழகு.

    ராமலஷ்மி யானை கால்ல கண் இருக்கு !கையெழுத்து ரொம்ப அழகு.

    ஆனந்த் கையெழுத்து அழகு.
    யானைக்குட்டி தடுமாறி நிக்குது.

    மீனு யானை ஆட ரெடி !

    எனக்குப் பிடிச்சதெல்லாம் குழந்தைத்தனமா கு.கு யானைக்குட்டிதான்.

    எல்லாருக்கும் பாராட்டுக்கள்.

    ஜெகா பயந்திட்டார் ஸ்ரீராம்.
    அதான் கீறல.

    பதிலளிநீக்கு
  6. அருமை. நான் தேவை இல்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு விட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  7. நானும் யானை வரைந்து அனுப்பலாமா..? மன்னிக்கவும் .. நான் கொஞ்சம் லேட்...

    பதிலளிநீக்கு
  8. பிரகாஷ், அனுப்புங்க, அனுப்புங்க. எப்போ வந்தாலும் வலை ஏற்றிவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. தாமதத்திற்கு வருந்துகிறேன். நாளை வரைக்கும் கூட வருந்தப்​போகிறேன்.
    பேப்பரில் இருக்கும் யானை காமிராவுக்குள் வர அடம் பிடிக்கிறது.
    நாளை எப்படியும் பிடித்துவிடுகிறேன்.
    இல்லாவிட்டால் நண்பர்கள் என் தலையை யானைக் காலால் இடறலாம்.

    பதிலளிநீக்கு
  10. ஜெகநாதன் - பஸ்ல போட்டீங்கன்னா கூட, அங்கேயிருந்து எடுத்து இங்கே போட்டுடுவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!