வெள்ளி, 7 மே, 2010

பிடித்த பாடகர்கள் - தொடர் பதிவு

அநன்யா மகாதேவன் அவர்களின் எண்ண அலைகளில் இருந்து இந்த மைக்கை எங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறோம். நன்றி அநன்யா.

பிடித்த பாடகர்கள் என்பது பிடித்த பாடல்களைப் பொறுத்து அமைகிறது. பிடித்த பாடல்கள் என்பது அந்தப் பாடலின் வரிகளைப் பொறுத்தோ, டியூனைப் பொறுத்தோ அமைகிறது. பிடித்த பாடகர் என்பதால் அவர்கள் பாடிய எல்லாப் பாடல்களையும் கண்ணை மூடிக் கொண்டு ரசித்து விட முடிவதில்லை. எல்லாப் பாடகர் பாடிய பாடல்களிலும் பிடித்த பாடல்கள் நிறைய இருக்கும். 


அப்பாதுரையைக் கேட்டால் MSV அவர்களையும், சாய்ராமைக் கேட்டால் TMS போல பாடகர் உண்டா என்றும் சொல்வார்கள்...! 

தமிழ் உதயம்  ரமேஷ் தெரிவு செய்யும் பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருக்கும். அவர் தன் ப்ளாக்கின் சைட் பாரில் பிடித்த பாடல் லிஸ்ட் சொல்ல ஒரு நிரந்தர இடமே ஒதுக்கி விட்டார். ஐந்து பாடகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருக்கும் இந்தத் தொடர் பதிவு அழைப்பை விடுத்திருக்கும் அநன்யா மஹாதேவன் அழைப்பை ஏற்றுக் கொள்ளும்போது தமிழ் உதயம் பாடல்களையும் நம் கணக்கில் (!) சேர்த்து விடலாமே..விஷயத்துக்கு வருவோம்..கடல் கணக்கில் உள்ள பிடித்தவைகளிலிருந்து ஐந்து மட்டுமா...மனசே வரலை. எனக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரொம்பப் பிடிக்கும், யேசுதாஸ் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் திரை இசையில் தன் குரலால் என்னைக் கவர்ந்தவர், மயக்கியவர், இப்போதும் உருக வைப்பவர் ஹிந்தித் திரையுலப் பாடகர் கிஷோர் குமார். அவர் அறுபது அல்லது அறுபத்தைந்துகளுக்குப் பின் பாடிய பாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள் என்றாலும் ஹிந்தியின் கிரேட் R.D.பர்மன் இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மனதை விட்டு அகலாதவை. லாக்கோ மே ஏக் 'சந்தாவோ சந்தா', புத்தா மில் கயா 'ராத்துக் கலி', ஜோஷீலா 'கிஸகா ரஸ்தா தேகே..' கட்டி பதங் பாடல்கள், எதைச் சொல்ல, எதை விட....SD பர்மன் இசையில் பிரேம் பூஜாரி 'ஃபூலோன்கே ரங்ஸே...' ஷர்மிலீயில் 'கில்தே ஹை குல் யஹான்...', லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் 'தாக்'கின் 'மேரே தில் மே ஆஜ் கியா ஹை', பியா கா கர் 'யே ஜீவன் ஹை..' தோஸ்த் 'காடி புலாரி ஹை..' கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையில் ப்ளாக் மெயில் பாடல்..."மேலும் அஜ்நபி, அபிமான், ஆந்தி, அந்தாஸ், அனாமிகா, அமர்ப்ரேம் பாடல்கள்... நிறைய இருக்குங்க...

 Mere Dil Mein Aaj Kya Hai .mp3
Found at bee mp3 search engine
அடுத்து பி. ஜெயச்சந்திரன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் பாடல்கள் நிறைய நல்ல பாடல்கள் இருந்தாலும் எல்லா பாடல்களையும் மிக நல்ல பாடல்கள் என்று சொல்ல முடியாது. TMS பாடல்களும் அப்படியே...(ஸாரி சாய்ராம்..!) ஏன், இது எல்லாப் பாடகர்களுக்குமே பொருந்தும். ஆனால் ஜெயச்சந்திரன் பாடிய தொண்ணூறு சதவிகிதப் பாடல்கள் மெலடி வகையைச் சேர்ந்தது..இளையராஜா இசையில் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள்..வைதேகி காத்திருந்தாள் படத்தில் காத்திருந்து காத்திருந்து, ராஜாத்தி உன்னை, (இந்தப் படம் வெளியானபோது மதுரை சினிப்ரியா தியேட்டரில் ஒன்ஸ் மோர் கேட்டு மறுபடி போட்டார்கள்) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, காற்றினிலே வரும் கீதம் படத்தில் ஒரு வானவில் போலே, சித்திரச் செவ்வானம், கிழக்கே போகும் ரயில் படத்தின் மாஞ்சோலைக் கிளிதானோ...பட்டியலில் அடுத்து நினைவுக்கு வருகின்ற பிரபலப் பாடகர், பி பி ஸ்ரீனிவாஸ். பல பாடல்கள் உள்ளன. இவருடைய ஹிட் ரேட்டும் அதிகம். (இதையும் அப்பாதுரை ஒத்துக் கொள்ள மாட்டார்..!)
உடனே நினைவுக்கு வருகின்ற பாடல்கள்,
பூ வரையும் பூங்கொடியே, ரோஜா மலரே ராஜகுமாரி, பார்த்தேன் சிரித்தேன் பக்கம்வர துடித்தேன் - அன்று உனைத் தேன் என நான், நிலவே என்னிடம் நெருங்காதே. ... நிலவுக்கு என்மேல், இளமை கொலுவிருக்கும், சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?, மையேந்தும் விழியாட, துள்ளித் திரிந்த பெண்ணொன்று, ஏதோ மனிதன் பிறந்து விட்டான், காலங்களில் அவள் வசந்தம்.....டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா -
இவர் பெயரைச் சொன்ன உடனேயே ஒரு நாள் போதுமா, தங்க ரதம வந்தது, சின்னக் கண்ணன் அழைக்கிறான், (குருவிக்காரன் பொஞ்சாதியை மறந்து விடுங்கள்! அது ஒரு திருஷ்டிப் பொட்டு) எல்லாமே ஞாபகம் வருகிறது. திரை இசையை விடுங்கள்..அவர் பாடிய எண்ணிலடங்காத கர்னாடக சங்கீதப் பாடல்கள்...தியாகராஜர் கீர்த்தனைகள், சம்பிரதாயக் கீர்த்தனைகள், சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள், அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள், அஷ்டபதி, இன்னும்..இன்னும்..அவற்றை கேட்க ஒரு நாள் போதுமா?ஹரிஹரன்...
இவர் தொன்னூறுகளில் தமிழில் அறிமுகமாகி புகழ் பெற்றிருந்தாலும் எண்பதுகளுக்கு முன்பிலிருந்தே ஹிந்தியில் கஜல் முதலான தனிப் பாடல்கள் முதல் சினிமாப் பாடல்கள் வரை பாடியிருப்பவர். நீ காற்று.. நான் மரம், முதல் முதலில் பார்த்தேன், நிலா காய்கிறது, உயிரே உயிரே, (இந்தத் தலைப்பில் இரண்டு பாடல்கள் உண்டு..இரண்டுமே ஹிட்..ஒன்று பம்பாய் படப் பாடல், இன்னொன்று சல்தே சல்தே என்ற லதாஜியின் ஹிந்திப் பாடல் மெட்டில் அமைந்த பாடல்...) சீனு என்ற படத்தில் வரும் கேசவா என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களோ... இவருடைய கலோனியல் கசின்ஸ் ஆல்பம் ரொம்பப் பிரபலம். கஜல்கள் அதை விட...எங்கள் ஐந்து பாடகர்கள் பட்டியல் இது: (இங்கே உள்ள வரிசை & எழுதப்பட்டுள்ள வரிசை தர வரிசை அல்ல. அவர்கள் எல்லோருமே சமமாக எங்களுக்குப் பிடித்தவர்கள்.)


# கிஷோர குமார்,


# ஜெயச்சந்திரன்   


# பி பி ஸ்ரீனிவாஸ்   


# எம் பாலமுரளிகிருஷ்ணா    


# ஹரிஹரன்.  
 'எல்லாமே நாம் ஏற்கெனவே கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள்தானே...இங்கு கொடுத்துதான் கேட்க வைக்க வேண்டுமா?' என்று தோன்றியதால் அதிகமாக இங்கே பாடல்கள் இணைக்கவில்லை ...சரிதானே?

இந்த மைக்கை இங்கே மேடையில் அப்படியே விட்டுச் செல்கிறோம். எங்களுக்கு நன்றி சொல்லி மைக்கைக் கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும், அவர்களின் சுவையான பதிவுக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்.  

22 கருத்துகள்:

 1. கிஷோர் குமார் பாடல்கள் கேட்டதில்லை.. மற்றவை அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
 2. நல்ல selections .இசையில் எது தான் பிடிக்காது ?

  பதிலளிநீக்கு
 3. பழமையும் புதுமையும் கலந்த கலக்கலான தேர்வு... கலக்குங்க

  பதிலளிநீக்கு
 4. பாலமுரளி கிருஷ்ணாவை மறந்து விட்டேனே. நான் "​மௌனத்தின் விளையாடும் மனச்சாட்சியை " சேர்த்து இருக்கலாம், உங்கள் தெரிவு நல்ல தெரிவு.

  பதிலளிநீக்கு
 5. தொடர் பதிவு எழுதினதுக்கு ரொம்ப நன்றி. அருமையான தேர்வுகள். குறிப்பா கிஷோர் குமார் & பாலமுரளி கிருஷ்ணா என் ஃபேவரைட்டும் கூட. :)

  பதிலளிநீக்கு
 6. //பிடித்த பாடகர்கள் என்பது பிடித்த பாடல்களைப் பொறுத்து அமைகிறது.//
  என்னை பொறுத்தவரை பாடகரின் குரலால்தான் அந்த பாடலே பிடிக்கிறது. பாடுவோர் பாடினால்தான் பாடலை கேட்கத் தோன்றும். சினிமா துறையில் ஒரு பாடகர் பாடிய அதே பாடலை இன்னொரு பாடகர் பாடுவதில்லை. ஆனால் கர்நாடாக சங்கீதத்தில் ஒரு கீர்த்தனையை எடுத்துக் கொண்டால் அதை எவ்வளவு வித்வான்கள் பாடுகிறார்கள். ஆனால் நாம் நமக்கு பிடித்த வித்வானின் குரலில்தானே அந்த கீர்த்தனையை பலமுறை கேட்க பிரியபடுகிறோம். பாடலின் வரிகளை படித்து உணரலாம். பாடலின் மெட்டையும் வாத்தியங்களில் இசைப்பது மூலம் ரசிக்க முடியும். அதனால் பாடுவோரின் குரல்தான், ஒரு பாடல் சிறப்பாவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

  ஹரிஹரனின் கலோனியல் கசின்ஸ் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஆல்பம். இவர் பாடிய 'என் மனதை கொள்ளை அடித்தவளே' என்னுடைய favorite.
  கிஷோர் குமார், இவர் குரலுக்காகவேதான் நான் ஹிந்தி பாடல்களை கேட்கத் துவங்கினேன். அப்பா! என்னை மயங்க வைத்து கிறங்கடிக்கும் குரல் இவருடையது. இவர் குரலில் என்னை கொள்ளை கொண்ட பாடல்கலை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். நீங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் இவர் பாடல்கள் எல்லாமே நானும் ரசித்து, ரசித்து கேட்பவைகள்தான்.

  பதிவில் இடம் பெற்றுள்ள 'ஒரு வானவில் போலே' அழகு, 'சின்ன சின்ன கண்ணனுக்கு' அருமை. பாலமுரளி கிருஷ்ணா, ஹரிஹரன் இவரின் பாடல்களை ஏனோ கேட்கமுடியவில்லை. நீங்கள் எந்த பாடலை ஒலிபரப்பியிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. பாலமுரளி அவர்களுடையது 'ஒரு நாள் போதுமா' என்று நினைக்கிறேன், சரியா?

  பதிலளிநீக்கு
 7. ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை.அருமையான பாடக்ர்களும் தெரிவுகளும்.

  ஏன் பெண் பாடகர்களைச் சேர்க்கவில்லை?
  தமிழ் அவர்களும்தான் !

  பதிலளிநீக்கு
 8. அடுத்து 'பிடித்த பாடகிகள்' என்று பெண் பாடகிகள் பற்றிய பதிவு தனியாக வரும் என்று நினைக்கிறேன் ஹேமா.
  எங்கள் ஆசிரியர்கள் கவனிக்க!

  பதிலளிநீக்கு
 9. ஹாஆஆஆஆவ்வ்வ்வ்... கண்ணைச் சுத்துது. அப்புறம் வரேன்.

  (பிபிஸ்ரீ பாடின அத்தனை பாட்டுமே ஹிட்டுனு சொல்லலாம் - அதுனால தான் அவர் பிரபலம்)

  பதிலளிநீக்கு
 10. சங்கர் - கணேஷ் இசையில் ஜெயச்சந்திரன் பல நல்ல பாடல்களைப் பாடியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல தேர்வு பாடல்களில்.. கிஷோர்குமாரின் பாடல்கள் கேட்டதேயில்லை...

  பதிலளிநீக்கு
 12. கிஷோர் குமார் அவர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.. அவர் பாடல்களை இனிமேல் தான் கேட்க வேண்டும்... ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களும் அருமை.. நல்ல தேர்வு..

  தீபன் சக்கரவர்த்தி அவர்களும் குறுகிய கால இடைவெளியில் பல நல்ல பாடல்களைத் தந்தவர்...

  நன்றி..

  பதிலளிநீக்கு
 13. பாடல்களின் list அருமை. கிஷோர் குமார், PBS
  எனக்கும் பிடித்த பாடகர்கள். அதுபோல் SPB அவர்கள் குரலும் பாடும் விதமும் என்னைக் கவர்ந்தவை.---கீதா

  பதிலளிநீக்கு
 14. அனைத்தும் அருமை.. ஹரிஹரன்.. எனக்கு மிக பிடித்த பாடகர்.. :D

  பதிலளிநீக்கு
 15. ஓஹோ ஓஹோ மற்றவர்கள் பாடகர்களா ? நீங்கள் சொல்லி தான் தெரியும். நான் அவர்கள் நன்றாக பேசினார்கள் என்று தானே நினைத்தேன் !?!?! டி.எம்.எஸ் தவிர - கிஷோர் குமார் ஒருவர் தான் உருப்படி.

  டி.எம்.எஸ்ஸின். "கிங்கிணி கிங்கிணி என வரும் மாதா கோவில் மணியோசை" தவப்புதல்வன் பட பாடல் கேளுங்கள். எத்தனை உணர்ச்சி.

  பதிலளிநீக்கு
 16. சரியான விவரங்களோடு எழுதிய விதத்திற்கு சபாஷ்!
  நானும் எழுதணும் :))

  பதிலளிநீக்கு
 17. "டாக்டர் எம் ப?லமுரளிகிருஷ்ணா - "

  அவருக்கு ரெண்டு 'கால்' உண்டுன்னு நான் நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 18. நன்றி மாதவன்,
  திருத்திவிட்டோம். காலைப் போருத்திவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 19. பி.பி.ஸ்ரீநிவாஸின் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..” பாட்டு கேட்டா.. எப்படிச் சொல்றது?

  இப்டித்தான் ஒவ்வொருத்தருக்கும் ஒண்ணொண்னு அமையுது. யாரைவிட, யாரைச் சேக்கன்னே தெரியாது!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!