Thursday, May 13, 2010

விஜய் பாடுகிறார்.

'எங்கள் ப்ளாக் சூப்பர் சிங்கர் பகுதியில் இதுவரை ஆண் பாடகர்கள் யாரும் முன் வரவில்லையே, ஒருவேளை பாடகிகள் பாடியதைக் கேட்டு ஆண்கள் எல்லோரும் புறமுதுகிட்டு ஓடிவிட்டார்களோ?' என்ற எங்கள் சந்தேகத்தைப் போக்க முதல் ஆளாக வந்திருக்கிறார் விஜய் அவர்கள். பாடலைக் கேளுங்கள். 

20 comments:

விஜய் said...

யாரையுமே காணோம்

பயப்படாம வாங்க

இந்தகுரலையும் ஒருகுரலாய் மதித்து வெளியிட்ட எங்களுக்கு நன்றி

விஜய்

Anonymous said...

விஜய் அவர்கள் பாடியுள்ளது நன்றாக உள்ளது. குரல் வளம் உள்ளது.
பாடல் செலெக்ஷன், டியூன் இரண்டும் இன்னும் சரியானதாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஹிட் சாங்க்ஸ் அண்ட் பாப்புலர் டியூன்ஸ் (மெலடி முக்கியம்) என்பது கேட்பவர் கவனத்தைக் கவர சுலபமான வழி.
கிடார் வாசித்துக்கொண்டே கூட பாட முயற்சி செய்யலாம். இது என்னுடைய கருத்து. மற்றவர்கள் கருத்தையும் பதியலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naan thotaapetta rottumela muttai prottaa paattu ketten

geetha santhanam said...

விஜய் பாட்டு நல்லா இருக்கு. நல்ல முயற்சி.பாராட்டுக்கள்.--கீதா

அநன்யா மஹாதேவன் said...

விஜய்,
நல்லா இருக்குப்பா, நான் வோட்டு போட்டேன். கொஞ்சம் கூட ப்ராக்டீஸ் பண்ணிட்டு மறுபடியும் ரிக்காட் பண்ணுங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.

விஜய் said...

@ கீதா சந்தானம்

மிக்க நன்றி சகோதரி

விஜய்

விஜய் said...

@ அநன்யா மஹாதேவன்

நெஞ்சார்ந்த நன்றி

கிடார், ஆர்கன் வாசிக்க தெரியும், ஆனால் பாடியதில்லை.

இது எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்.

சுமாராதான் பாடி இருக்கேன்.

முயற்ச்சிக்கிறேன்

விஜய்

அநன்யா மஹாதேவன் said...

ஓ இசைக்கருவிகள் தெரியுமா? குட்!
குறிப்பா சொல்லணும்னா, சரணத்துல வரும் காதல் தாய்மை இரண்டில் மட்டும் பாரம் என்பது தெரியாது.. அங்கே இன்னும் உருக்கம் வேணும். அந்த இடத்துல கொஞ்சம் மெருகும் தேவை. அதான் சொல்றேன். நல்லா பாடி ப்ராக்டீஸ் பண்ணுங்க. நிச்சியம் ப்ராக்டீஸ் பண்ணினா இதை விட பன்மடங்கு நல்லா வரும்ன்னு தோணுது.

விஜய் said...

அனானிக்கு நன்றி

Madhavan said...

அவரு பேசினாலேய நல்லா இருக்காது.. பாடுறாரா என ஆச்சர்யத்துடன் பாடலைக் கேட்டேன்.. நல்ல வேலை ஏமாந்து போனேன்.. ஆனாலும் மகிழ்ந்தேன்..

ஏமாந்தது -- நடிகர் விஜய் என நினைத்தது.
மகிழ்ந்தேன் - நடிகர் விஜய் அல்லாது, மற்றொரு நண்பர் விஜய் என அறிந்து..

ஹேமா said...

அச்சோ....விஜய் அசத்துறார்.இவ்ளோ அழகா அசத்தலா பாடுவீங்கன்னு நினைக்கவேயில்லை விஜய்.வாழ்த்துகள்.இன்னும் திருத்திக்கொள்ளலாம் அடுத்த முறை.

meenakshi said...

விஜய் நல்ல முயற்சி. நல்ல குரல். உங்க பாட்டு ஒண்ணும் பயப்பட எல்லாம் வைக்கலை. நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்! நீங்க கிடாரும் வாசிசுண்டே பாடி இருக்கலாம், அது இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

padma said...

வாழ்த்துக்கள் விஜய் ,enjoy பண்ணி கேட்டேன்

r.selvakkumar said...

குரல் நன்றாக இருக்கிறது. முறையான பயிற்சி பெற்றால் மேலும் சிறக்கும்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அருமையான முயற்சி... நானும் பாடி பதிவு செய்யலாம்னுன்னு பாத்தா சுத்தி ஒரே இரைச்சல்.. எப்படியும் அனுப்பிடுவேன்.. கேட்பவர்கள் தான் பாவம்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
This comment has been removed by the author.
ஜெகநாதன் said...

விஜய்,
அருமையா பாடியிருக்கீங்க! வாழ்த்துக்கள்! நல்லா காதைத் தீட்டி ​கேட்டேன்.. பட் கிடார் சப்தமே வரலயே??
அப்புறம் அநன்யா சொன்ன டிப்ஸ் பின்பற்றுக. அப்புறம் நீங்கதான் பதிவுலகத்தின் செல்லக்குரல் :))

ஜெகநாதன் said...

அநன்யா..
விஜய் டிவியில் வர்ற சூப்பர் சிங்கர் ​ஷோவின் ஜட்ஜ்கள் கணக்கா விஜய் பாடலை ஃ வேறு ஆணி வேறா பி.மே!
இம்ப்ரூவைசேஷன், டோனல் டிப்ரன்ஸஸ், வோகல் டென்ஷன் போன்ற வார்த்தைகள் போட்டுப் ​பேசுனீங்கன்னா நீங்கதான் பதிவுலகத்தின் பாட்டு ஜட்ஜ்!

விஜய் நல்லாப் ப்ராக்டிஸ் எடுத்து​பெரிய பாடகரா வருவார். அப்ப நீங்க கெளரவமா சொல்லிக்கலாம்:
கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து; அதான் பறந்ந்ந்ந்து போயிடுத்து-ன்னு :)))))

அநன்யா மஹாதேவன் said...

ஜெகன்,
தெரியாமத்தான் கேக்கறேன்,
உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா?
சிரிச்சு முடியல!

ராமலக்ஷ்மி said...

விஜய் அருமையாய் பாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!