Monday, December 22, 2014

'திங்க'க்கிழமை : மல்டிஃபன்!தலைப்பில் ஒரு டி குறைகிறது இல்லை? பரவாயில்லை, விடுங்கள். இது ஏதோ புது மாதிரி ஒலிக்கிறதே! 

சாதாரணமாக நாம் வீடுகளில் இரவுகளில் (அல்லது காலை நேரங்களில்) டிபன் சாப்பிடும் நேரங்களில் இரவு டிபனாக தோசை, அல்லது இட்லி, அல்லது சப்பாத்தி என்று ஏதாவது ஒன்றைத்தானே செய்வோம்?
 

                                    
அதற்கு பதிலாக, ஆளுக்கு இரண்டு தோசை, இரண்டு இட்லி, இரண்டு சப்பாத்தி என்று செய்து சாப்பிடலாமே!
 
                                                                
                       
 
எவ்வளவு ஐட்டங்கள் ஒரே நேரத்தில் செய்வது என்று மலைப்பாக இருக்கிறது இல்லை?
 
எப்பொழுதுமா அப்படிச் செய்யவா ஐடியா தருகிறேன்?  என்றாவது ஒருநாள் மாறுதலுக்குத்தானே?!
 

                      
 
எப்படியும் தோசை, இட்லி மாவுகள் வீட்டில் இருக்கும்.  கோதுமை மாவும் இருக்கும். ரவா அல்லது அரிசி மாவு கண்டிப்பாக இருக்கும். வெரைட்டியாக சாப்பிடலாமே...
 
 
            
 
சட்னி, சாம்பார் போதும் தொட்டுக் கொள்ள...  கூடவே எப்பொழுதும் வீட்டில் இருக்கும் மிளகாய்ப் பொடி இருக்கவே இருக்கிறது...
 
ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப் போவதற்கு ஒரு மாறுதலாக இருக்குமே...
 
   
  

சில வீடுகளில் என்ன சிற்றுண்டி சாப்பிட்டாலும் ஒரு தயிர் அல்லது மோர் சாதத்தை வைத்துத்தான் இரவுணவை (ஒரு 'உ' குறைகிறது இல்லை!) முடிவுரை எழுதுவார்கள்!
 
எங்கள் வீட்டிலும் மோர்சாதம் சாப்பிடும் பழக்கம் உண்டுதான். எனக்குத்தான் அந்தப் பழக்கம் இல்லை! ஸ்ட்ரிக்ட்லி சிற்றுண்டி!ஏற்கெனவே நாங்கள் அப்படித்தான் (அடிக்கடி) செய்கிறோம் என்று எத்தனைப் பின்னூட்டங்கள் வருமோ!

படங்கள் இணையத்திலிருந்து....

17 comments:

Ranjani Narayanan said...

நானும் உங்களைப் போலத்தான். strictly சிற்றுண்டி மட்டுமே! சாதம் கொஞ்சம் இருந்தால் மற்றவர்கள் தலையில் கட்டிவிடுவேன்.
சிலசமயம் காலையில் டிபன் சப்பாத்தி என்றால் எல்லோரும் சாப்பிட்டபின் இருக்கும் மாவை இரவு செய்து சாப்பிட்டுவிடுவேன். மற்றவர்களுக்கு வேறு ஏதாவது செய்து கொடுப்பேன். ஒரு இட்லி, ஒரு தோசை என்று சாப்பிட்டதும் உண்டு தான்!

Bagawanjee KA said...

ஒரு டிபனுக்கே வயிறு காய்கிறது மல்டி டிபனுக்கு ஆசைப் பட்டால் , இரவு டிபன் வெறும் பன்னாய் ஆகிவிடக் கூடும் :)

R.Umayal Gayathri said...

இருப்பதற்கு...தகுந்தார் போல்...

இல்லை என்றால்...டிபன்...
அல்லது சாப்பாடு.

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹ்ஹா ஹப்பா! ஒரு சாப்பாடு பதிவு என்றாலும் கூட நகைச்சுவை இழையோட எழுதுவது கலை. அது உங்களுக்குக் கைவந்த கலை....

இப்படித்தான் செய்கிறோம் என்று எத்தனை பின்னூட்டங்கள் வருகின்றதோ...///ஹஹஹஹஹ் அதே அதே அதே....இந்த அதே நாங்களும் அப்படித்தான் என்று...எதை...இரவு சிற்றுண்டி தான் சாய்ஸ்....எனப்தைக் குறித்து...

துளசி கோபால் said...

நீங்க சொல்லும் அளவுக்குச் சாப்பிட வயிறு இல்லைங்களே எங்களுக்கு.

எதாவது ஒன்னுதான் செய்வோம்.

இட்லின்னா 3, தோசை (சின்ன சைஸ் ) 2

சப்பாத்தியை பகல் உணவா ஆக்கிட்டேன். அதுவும் தினமும் இல்லை.

Ramani S said...

ஏதாவது ஒன்றுதான் எங்கள் வீட்டிலும்
அதுதானே சரியாய் வரும்....
தலைப்பும் படங்களும் அருமை.
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

ஏதாவது ஒன்றுதான் எங்கள் வீட்டிலும்
அதுதானே சரியாய் வரும்....
தலைப்பும் படங்களும் அருமை.
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

பழனி. கந்தசாமி said...

//ஆளுக்கு இரண்டு தோசை, இரண்டு இட்லி, இரண்டு சப்பாத்தி//

போதுமா ?

Chokkan Subramanian said...

நீங்க சொல்றது எல்லாம் சூப்பர் தான்.
ஆனா அதையும் நீங்களே செஞ்சுக்கொடுத்தா இன்னும் சூப்பராக இருக்கும்.

நான் என்ன தினமுமா செஞ்சு தரச் சொல்றேன், என்னைக்காவது ஒரு நாள், நான் இந்தியா வரும்போது செஞ்சுக்கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றேன்.

Geetha Sambasivam said...

சொக்கன் சுப்பிரமணியனுக்கு ஒரு ஜே போட்டு வைச்சுடறேன். எங்க வீட்டிலே காலை ஒரு டிஃபன், மாலை ஒரு டிஃபன் என இரு வகை ஏற்கெனவே செய்ய வேண்டி இருக்கு. இதுக்கு மேலே கேட்டால் "அ"டிஃபன் தான். :))))))

கரந்தை ஜெயக்குமார் said...

ஏதேனும் ஒன்றுதான்
அதுவே போதுமே
நன்றி நண்பரே

அருணா செல்வம் said...

படங்களைப் பார்த்ததும் எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக மட்டும் தான் இருக்கிறது..... ம்..

திண்டுக்கல் தனபாலன் said...

நான் இந்த விளையாட்டிற்கு வரலே...!

ஹிஹி...

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் ஒரே நாளில் நடக்காது சாமி. இரவு தயிர் இல்லாம தூக்கம் வராது.இரண்டு உருப்படிதான் உள்ள போகும்.படங்கள் ஆசையைக் கிளப்புகின்றன.

கோமதி அரசு said...

எனக்கு இரவு டிபன்தான். இரவு சாப்பாடு பிடிக்காது.சிறுவயதில் பள்ளிக்கு டிபன் , கலவை சாதம் கொண்டு போவதால் மாலை சாப்பாடு சூடாய் செய்து , காய், குழம்புடன் சாப்பிட சொல்வார்கள்.
பள்ளி விட்டு வந்து கண்டிப்பாய் சாப்பிட வேண்டும், அப்புறம் இரவும் சாதம் சாப்பிட சொன்னால் எப்படி?
அம்மா என் அப்பாவுக்கு தினம் இரவு தோசை செய்யும் போது அப்பாவுடன் உட்கார்ந்து இரவு உணவை முடித்துக் கொள்வேன். சாதம் சாப்பிட வேண்டும் என்றால் கஷ்டம்.


ஸ்ரீராம். said...

நன்றி ரஞ்சனி மேடம். நீங்கள் நம்ம கட்சி போல!

ஒரு மாறுதல்தானே பகவான்ஜி!

நன்றி உமையாள் காயத்ரி.

நன்றி துளசிதரன் ஜி.

நன்றி துளசி மேடம். சும்மா இதுல ஒண்ணு, அதுல ஒண்ணு! ரொம்ப எல்லாம் இல்லை!

நன்றி ரமணி ஸார்.

போதுமாவா? கந்தசாமி ஸார்.. ஒன்றொன்று சாப்பிட முடியாதா என்ன!

சொக்கன் சுப்பிரமணியன்.... அடேடே.... தாராளமா... வாங்க, வாங்க!

கீதா மேடம்... அ"டிஃபன்"தான்! ஹா...ஹா....ஹா.... மறுபடி சொல்றேன், எப்பவாவது ஒருநாள்தானே?

நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.

நன்றி அருணா செல்வம்.

நன்றி டிடி.

நன்றி வல்லிம்மா... ஒரு குறிப்பிட்ட வயசுக்குமேல் கஷ்டம்தான்.

நன்றி கோமதி அரசு மேடம். நீங்களும் நம்ம கட்சி! :)))

வெங்கட் நாகராஜ் said...

அலுவலக தினம் என்றால் காலையும் மதியமும் சப்பாத்தி தான்! இரவு மட்டும் சாதம் - குளிர் காலம் என்றால் இரவும் சப்பாத்திக்கு தான் எனது ஓட்டு!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!