ஞாயிறு, 14 ஜூன், 2015

ஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் !

               
               
கவலைப்படாதீங்க - கவிதை இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ நாலு வரி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதிடுங்க! 
                 
எல்லோரும் படித்து இன்புற (அல்லது துன்புற) வேண்டும். அம்புட்டுதான்! 
             

38 கருத்துகள்:

  1. வாங்க அன்பர்களே... ஸ்டார்ட்...
    அடியேன் ஜூட்....

    பதிலளிநீக்கு
  2. பத்து நாள் முன்வரை
    பாலகர்கள் ஓடிக் ஆடி
    களித்த இடம்
    வெறிச்சோடிக் கிடக்கிறது இன்று.
    பள்ளிக்கூடம் செல்ல
    வழியற்ற சிறுமி
    திகைத்து நிற்கிறாள்
    ‘எங்கே என் தோழர்கள்’ என்று.

    பதிலளிநீக்கு
  3. ராமலக்ஷ்மி மேடம்!
    ஆஹா ! அருமை!

    பதிலளிநீக்கு
  4. என்ன நினைத்து எனை ஈன்றாயோ ?
    ஏணிகள் பல காட்டி,
    ஏற்றங்கள் பெற்றிட பனித்தாயோ !
    சறுக்கி விழுந்தாலும்
    சாதனைகள் புரியவேண்டி,
    சுற்றும் இந்த சுழல் பாதையிலே
    மாயக்காரனை மடியிலே வைத்தெனை
    மயங்கி நிற்கச் செய்தாயோ !!

    பள்ளி திறந்துவிட்டது.
    அம்மா தரும்
    பையும் புத்தகமும் பெற்றிடவே என்
    கையைப் பிடித்துச் செல்.

    என் செல்ல அம்மாவுக்கு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் சுப்பு (தாத்தா) " மாயக்காரனை மடியிலே வைத்தெனை ..... " ஆஹா !

    பதிலளிநீக்கு

  6. நமக்குக் கவிதை எல்லாம் எட்டாக் கனி! இருந்தாலும் ஒரு சிறு முயற்சி.....முயற்சி திருவினையாக்கும்னு படிச்சிருந்தாலும்..... இந்த முயற்சி வினையாகிடுமோனு ஒரு டென்ஷனில்.....

    புதிராய் இருக்குதே என்
    எதிர்காலம்
    புத்தக மூட்டையைச் சுமந்திட்டால்!
    எத்தனை நாள் தான் படித்ததையே
    எழுதி எழுதிப் படித்திடணும்
    பூங்கா தரும் படிப்பினையை
    பள்ளிகள் ஏனோ தருவதில்லை
    துள்ளி விளையாடும் பருவத்தில்
    பள்ளியின் சுமைகள் கனக்கின்றதே
    களித்தலும் வேண்டும், படித்தலும் வேண்டும்
    கற்றோர் பெற்றோர் எமைப் புரிந்து கொண்டு
    கல்வியை ஆக்கமாய் எளிதாக்கி
    கவலையில்லா வாழ்வொன்றை
    கவித்துவமாய் ரசித்து வாழ்ந்திட
    கற்றுத் தருவீர்களா பெரியோர்களே!

    ---கீதா

    பதிலளிநீக்கு
  7. எனக்கு பாவேந்தரின் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வருகிறது:

    தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட-
    சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
    சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
    சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
    விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
    வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
    மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
    வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

    பதிலளிநீக்கு
  8. ஏறுவது கடினம்
    இறங்குவது எளிது
    ஏற்றத் தாழ்வு உலகின்
    பால பாடம்
    இங்கே ஆரம்பம்

    பதிலளிநீக்கு
  9. காத்திருப்பு தொடங்கி விட்டதோ
    இப்போதே என் கண்மணி!

    பதிலளிநீக்கு
  10. //பூங்கா தரும் படிப்பினையை
    பள்ளிகள் ஏனோ தருவதில்லை//

    ஆமாம்! உன்னதமான உண்மை கீதா.

    பதிலளிநீக்கு
  11. //ஏறுவது கடினம்
    இறங்குவது எளிது //

    அட! ஆமாம்!

    பதிலளிநீக்கு
  12. // சென்னை பித்தன் said...
    காத்திருப்பு தொடங்கி விட்டதோ
    இப்போதே என் கண்மணி!//

    வைதேகி காத்திருக்கிறாள்!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா

    அம்மாவை பிரிந்து போய்
    வழி தெரியாமல்
    அமைதியான இடம் தேடி
    சிந்திக்கும் சிறுமி
    நாளைய விடியல் பொழுதில்
    உறவை காணத்துடிக்கும் உள்ளம்.

    -நன்றி-
    -அன்புடன் -
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. //அம்மாவை பிரிந்து போய்
    வழி தெரியாமல்
    அமைதியான இடம் தேடி //

    ஆர் கே நகரில் போய்த் தேடு குழந்தாய்!

    பதிலளிநீக்கு
  15. ஆகா
    படத்திற்கேற்ற கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை

    பதிலளிநீக்கு
  16. கனவெல்லாம் கலைந்து போனது!
    நினைவிலே துரத்தி நிற்கிறது!
    மனம்விரும்பாத பள்ளி!

    பதிலளிநீக்கு
  17. ‘தளிர்’ சுரேஷ் !
    மூன்றே வரிகளில் சோகரசம் சொட்டவைத்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  18. ஜாலியா சறுக்கு மரம் ஏறலாம்னா
    பள்ளிக்கூட மணி அடிச்சிடுச்சி!
    பையைத் தூக்கிக் கையை வலிக்குது
    செருப்பில்லாம கல்லு குத்துது
    இந்தப் பள்ளிக்கூடத்தைத்
    தொறக்கச் சொல்லி யாரு அழுதா?

    பதிலளிநீக்கு
  19. //இந்தப் பள்ளிக்கூடத்தைத்
    தொறக்கச் சொல்லி யாரு அழுதா? //

    அதானே! அதைச் சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  20. செருப்பில்லாமல் சுடும்
    சிறுகொலுசுப் பாதங்கள்
    சக்தியின் அவதாரம்.

    பதிலளிநீக்கு
  21. பட்டுச் சொக்கா புதுசு
    பால்மணம் மாறாத வயசு.
    காலிலே வெள்ளிக் கொலுசு
    காங்கலியே பெத்தவங்க மனசு.

    பதிலளிநீக்கு
  22. புவியாளப் போகிறவள்
    புதுச்செருப்புக்காகக் காத்த்திருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  23. சிவன் கோயில் கட்டப் போயிருக்கும் பிள்ளைகள்
    விளையாட வரும் வரை
    காத்திருக்கிறாள் சக்தி.

    பதிலளிநீக்கு
  24. இரும்புத் துண்டுகளின் முன்னே
    கரும்புத் துண்டு.

    பதிலளிநீக்கு
  25. எப்போதையத் தனிமைக்காக
    இப்போதைய பயிற்சி?

    பதிலளிநீக்கு
  26. நீங்காத நினைவுமணம்
    பூங்காவின் புதுமலர்.

    பதிலளிநீக்கு
  27. //சக்தியின் அவதாரம்.//

    சக்தியின் அவதாரங்கள்
    சகதியில் வாடுவதோ ?
    சந்தியிலே வாடுமிந்த
    சுந்தரச் சிறுமிதனை
    சிங்கார சிகாகோவில்
    சேர்த்துவிடு ஒரு பள்ளியிலே
    தத்தெடுக்க தடை இல்லை.
    டாலருக்கும் பஞ்சமில்லை.

    வா சாரே ...
    தா தயங்காது
    துரை நீ
    தரையில் இருக்கும் இவளை
    தாரகையாக மின்னச்செய் .

    உன்னால் முடியும். நம்பு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  28. இன்டர்நெட்டும் வீடியோகேமும்
    இழுத்துப் பிடித்தது கொஞ்சம்…
    டியூஷனும் கோச்சிங் க்ளாஸூம்
    இறுக்கிப் பிடித்தது கொஞ்சம்
    தொலைக்காட்சியுள் தொலைந்தது கொஞ்சம்
    எதற்கும் வழியிலாது எஞ்சியது மட்டும்
    ஒற்றையாய் இங்கே தஞ்சம்.

    பதிலளிநீக்கு
  29. அப்பாதுரை சார்!
    அபாரம்!
    அருமை!
    பலே!
    பேஷ் பேஷ்!
    பிரமாதம்!
    அசத்திட்டீங்க!
    டாப் கிளாஸ்!
    ஆஹா!
    எட்டு மறுமொழிகள்!

    பதிலளிநீக்கு
  30. சூரி சார் !
    துரையை தரைப் பக்கமா இழுக்கிறீங்களே!
    இது நியாயமா!

    பதிலளிநீக்கு
  31. கீதமஞ்சரி!
    குளிர்ந்தது எங்கள் நெஞ்சம்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே.

    படங்களும்,அதற்கு வந்த கவிதைகளும் அற்புதம்.நானும் என் பங்குக்கு (என்னால் முடிந்த) ஒரு கவிதை படைக்கிறேன்.

    ஆளற்ற ஒரு வேளையிலே ஒடி
    ஆட வரும் ஒரு பொழுதினிலே
    தினமும் நாம் சந்திக்கிறோம்.
    தீயான உன் உள்ளச் சோகங்களை
    தினசரி நீ வந்து என்னுள்ளும்,
    திசை மாற்றித் தந்து விட்டு
    திரும்பிச் செல்கின்றாய்! இனியேனும்,
    துன்புறுத்தும் சோகத்தில் துவளாதே!
    தூணாகி நான் நிமிர்ந்து நிற்கிறேன்.
    துணையாக என்றுமே உன்னுடனே.
    துணிச்சலைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்..
    துன்பங்கள் என்றும் பஞ்சாகும்..என்றதோ
    துவளாத அந்தப் புத்தம் புது கம்பிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. //துன்பங்கள் என்றும் பஞ்சாகும்..என்றதோ
    துவளாத அந்தப் புத்தம் புது கம்பிகள்.//

    மிகவும் ரசித்தோம் கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. துணைக்காக ஏங்கவில்லை
    தனிமையில் அச்சமில்லை

    எல்லோரும் விட்டுச் சென்ற
    வெற்றுத் திடலில்
    நான் ஓடிய ஓட்டத்தில்
    வெற்றி தோல்வி என்பதில்லை

    சுற்றினேன் சறுக்கினேன்
    ஆட்டத்தில் களைத்து
    இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்

    இனி, ஏணியில் ஏறுவேன்

    பதிலளிநீக்கு
  35. //எல்லோரும் விட்டுச் சென்ற
    வெற்றுத் திடலில்
    நான் ஓடிய ஓட்டத்தில்
    வெற்றி தோல்வி என்பதில்லை //

    அது சரிதான்.
    எனக்குத் தோன்றுவது ...
    ஒருவரே ஓடிக் கொண்டிருந்தால் --- என்றும் வெற்றியே!!!
    (நடந்தாலும் வெற்றியே!)

    பதிலளிநீக்கு
  36. அது சரிதான்.
    எனக்குத் தோன்றுவது ...
    ஒருவரே ஓடிக் கொண்டிருந்தால் --- என்றும் வெற்றியே!!!
    (நடந்தாலும் வெற்றியே!)
    June 20, 2015 at 10:51 AM//
    நீங்கள் சொன்னது மிகச்சரியே.
    பந்தயத்தில் ஒருவர் தான் என்றால் வெற்றி தோல்வி, முதல், இரண்டாவது, கடைசி என்ற பிரச்னையே இல்லை.

    எனக்கு 1955ல் நடந்த ஒரு பள்ளி நிகழ்ச்சி நன்றாக நினைவில் இருக்கிறது.

    அப்போது எல்லாம் ஹிந்தி எஸ்.எஸ். எல்.சி. தேர்வில் பரீட்சை உண்டு, மார்க்கும் உண்டு, பரிட்ச்சைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும். ஆனால், அந்த மார்க் டோடலுக்கு , எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    நான் அதில் 20 மார்க் தான் வாங்கி இருந்தேன்.

    அந்த இந்தி ஆசிரியரை சந்தித்தேன்.
    அவரோ என்னை பார்த்து கைகளைக் குலுக்கினார்.
    சப்பாஷ் என்றார்.
    சார் , நான் 20 மார்க் தான் வாங்கியிருக்கிறேன். என்னை கங்க்ராஜுலேட் செய்தால் புரியவில்லை என்றேன்.

    மற்றவர்கள் எல்லாம் 0 தான் வாங்கி இருக்கிரார்கள். நீ தான் பர்ஸ்ட் என்றாரே பார்க்கலாம்.

    நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்.

    ஆம். பதிலுக்கான தாளில் எல்லோரும் தனது பரிட்ச்சை ஐ.டி. நம்பரை தந்தாலே போதும் என்று இருந்த காலம் அது.

    பதிலளிநீக்கு
  37. //ஆம். பதிலுக்கான தாளில் எல்லோரும் தனது பரிட்ச்சை ஐ.டி. நம்பரை தந்தாலே போதும் என்று இருந்த காலம் அது.//

    சூரி சிவா சார்!

    என்னுடைய அண்ணன் பள்ளிக்கூட நாட்களில் சமஸ்க்ருதம் எடுத்துப் படித்தார்.

    ஒவ்வொரு பரிட்சையிலும் அவர் எழுதியது:
    உனக்குத் தெரிந்த சுலோகம் எழுது என்ற முதல் கேள்விக்கு "கஜானனம் பூத கணாதி ..."
    மற்ற கேள்விகள் எல்லாவற்றுக்கும், அழகாக கேள்வியையே எழுதி வைப்பார். எல்லா பரிட்சையிலும் அவருக்கு நாற்பது சதவிகிதம் மார்க்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!