தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு : கால் கிலோ .
நெய் : நூறு மி லி
அரிசி அரை கிலோ
தேங்காய் ஒரு மூடி.
சர்க்கரை : கால் கிலோ.
முந்திரி பருப்பு: ஐம்பது கிராம்.
பச்சைக் கற்பூரம் : சிறிதளவு.
கடலை பருப்பை சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக்கொண்டு, தண்ணீரில் வேகவைக்கவும்.
கடலைப் பருப்பு வெந்ததும், அரிசியைக் கழுவிக் களைந்து போடவும்.
அரிசி முக்கால் அளவுக்கு வெந்ததும், தேங்காயைத் துருவி, சர்க்கரையுடன் கலந்து, கொட்டிக் கிளறவும்.
எல்லாம் நன்றாக வெந்ததும், லேசாக வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள், பச்சைக்கற்பூரம், நெய் சேர்த்து, நன்றாகக் கிளறி, இறக்கிவிடவும்.
நன்றாக ஆறியபின் எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்கள்.
கடலைப் பருப்பில் உள்ள சத்துக்கள் என்ன? இதோ பட்டியல்:
பின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது.
எனக்கு ஆகாது என்றவுடன் ஆசை எதற்கு...?
பதிலளிநீக்குSuper Item
பதிலளிநீக்குவித்தியாசமான மிகவும் சுவையான குறிப்பு!
பதிலளிநீக்குபொட்டுக்கடலையா சகோ, கடைசியில் சொன்னது, அருமை, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் வரும் உங்களது ஆக்கங்களை படிப்பவன்.
பதிலளிநீக்குநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (23.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 23ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/23.html
வணக்கம்“
பதிலளிநீக்குஐயா
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நன்று. த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அநியாயமா இருக்கே! நேத்திக்கு நான் சாயந்திரம் கூடக் கேட்டிருந்தேன். "திங்க" ஒண்ணும் இல்லையானு! அப்போல்லாம் கொடுக்காமல் நைசா நான் தூங்கப் போனப்புறமாப் போட்டிருக்கீங்க! இதை நான் வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.
பதிலளிநீக்குகடலைப்பருப்புப் போட்ட பொங்கல் போல இருக்குமா..
பதிலளிநீக்குஇது என்ன கேள்விப்படாத பொங்கலாக இருக்கு? கடலைப் பருப்பும் ஜீனியும் சேருமா? ஜீனிக்குப் பதிலாக வெல்லத்தைப் போட்டால் கிட்டத்தட்ட கட்டியான பாயாசம்போல் வந்துவிடாதோ! கீதா மாமி..உங்கள் விமரிசனம் என்ன?
பதிலளிநீக்குநல்லவேளை.. ஜீனிக்குப் பதிலாக டயபடிக் சுகர் போடச் சொல்லாமல் விட்டீர்களே (சர்க்கரை ஆகாதவர்களுக்கு). சில நாட்களுக்கு முன்புதான் படித்தேன் டயபடிக் சுகர் மிகவும் மோசமானது என்றும் நாம் (இந்தியா) டன் டன்னாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து டயபடிக்க்கு நல்லது என்று இனிப்புகள் செய்து ஊரை ஏமாற்றுகிறோம் என்று.
@நெல்லைத் தமிழன்,
பதிலளிநீக்குகடலைப்பருப்பே எனக்கு அலர்ஜி! அதுவும் பொங்கலில்! வாய்ப்பே இல்லை. சர்க்கரை கால்கிலோ போடச் சொல்லி இருக்கார் கடலைப்பருப்பு கொஞ்சம் இல்லை நிறையவே விறைத்துக் கொள்ளும்! :)))) டயபடிக் இனிப்புக்களைச் சாப்பிடவே கூடாது. என் நாத்தனார் என் கணவருக்காகத் தனியாக வாங்குவார். மிகவும் கண்டிப்புடன் அதை வேண்டாம் என்று சொல்லித் திருப்பிக் கொடுத்துடுவேன். அதுக்கு நல்ல இனிப்பாகத் துளி போல் சாப்பிட்டுக் கொள்ளலாம், என்றாவது ஒரு நாள். கடைகளில் விற்கும் டயபடிக் இனிப்புக்களோ, பிஸ்கட்டுகளோ வாங்குவதே இல்லை.
சர்க்கரைப் பொங்கலுக்கு என் மாமியார் கடலைப்பருப்புச் சேர்ப்பார். அதுவே எனக்கு என்னமோ தனியா முழிச்சு முழிச்சுப் பார்க்கிறாப்போல் இருக்கும். அரிசியும் பாசிப்பருப்பும் சேர்ந்து குழைந்து உருத்தெரியாமல் போகும் அளவு பாலிலேயே வெந்த பின்னர் வெல்லம் சேர்த்துச் சேர்ந்து வந்ததும் நெய்யில் மு.ப. தி.ப வறுத்துக் கொட்டி ஏலக்காய், ஜாதிக்காய் தூவிச் சாப்பிடுவதில் உள்ள ருசி இதில் வராது! :) ஆகவே இதுக்கு மதிப்பெண்கள் இல்லை. :)
பதிலளிநீக்குசெய்து பார்க்கவேண்டும்
பதிலளிநீக்குசர்க்கரை பொங்கலில் வேறு டைப்பா...தம +1
பதிலளிநீக்குபுதுசா இருக்கே!
பதிலளிநீக்குநன்றாகத்தான் இருக்கும்
100 கிராம் கடலைப் பருப்பில் 22கி புரதமா? சர்க்கரைக்கு பதில் வேறேதும் சேர்த்து முயற்சிக்கலாமா?
பதிலளிநீக்குபொங்கடலை! இதுவரை அறிந்தது இல்லை! சுவைத்ததும் இல்லை! முயன்று பார்க்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குஹை புதுவிதமான ரெசிப்பி.....கேட்டது இல்லை...ம்ம்ம் செஞ்சுடலாம்தான்....அடுப்ப பத்த வைச்சுட்டேன்.....ஓடி ஓடி வந்து குறிப்பைப் பார்த்துக் கிட்டே.....
பதிலளிநீக்குமெய்மறந்து வாசிச்சுட்டு கண்டிப்பா செய்து முடிச்சுடணும் அப்படினு நினைச்சுக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
//பின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது. //
இது தேவையா....இது தேவையான்னு கேக்கறோம்...ஏதோ நல்ல ஒரு ரெசிப்பி கொடுத்தமா போனமானு இல்லாம கடைசில இதச் சொல்லி மறந்ததை எல்லாம் ஞாபகப் படுத்தி......பொழப்பை கெடுத்துட்டீங்களே.....ஹும் பத்த வைச்ச அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வந்துட்டேம்பா....
---கீதா
( நல்ல காலம் துளசி இதப் பார்க்கல...இல்லைனா எனக்கு மெசேஜ் வந்துருக்கும்.....செம ஸ்வீட் பிரியர் என்னைப் போல ஆனா நான் கொஞ்சம் நாவடக்கம் காட்டுவேன்....அவர் .ஹும்...ரெண்டு பேரையுமே எறும்பு மொய்க்கும்....)
ஹை புதுவிதமான ரெசிப்பி.....கேட்டது இல்லை...ம்ம்ம் செஞ்சுடலாம்தான்....அடுப்ப பத்த வைச்சுட்டேன்.....ஓடி ஓடி வந்து குறிப்பைப் பார்த்துக் கிட்டே.....
பதிலளிநீக்குமெய்மறந்து வாசிச்சுட்டு கண்டிப்பா செய்து முடிச்சுடணும் அப்படினு நினைச்சுக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
//பின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது. //
இது தேவையா....இது தேவையான்னு கேக்கறோம்...ஏதோ நல்ல ஒரு ரெசிப்பி கொடுத்தமா போனமானு இல்லாம கடைசில இதச் சொல்லி மறந்ததை எல்லாம் ஞாபகப் படுத்தி......பொழப்பை கெடுத்துட்டீங்களே.....ஹும் பத்த வைச்ச அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வந்துட்டேம்பா....
---கீதா
( நல்ல காலம் துளசி இதப் பார்க்கல...இல்லைனா எனக்கு மெசேஜ் வந்துருக்கும்.....செம ஸ்வீட் பிரியர் என்னைப் போல ஆனா நான் கொஞ்சம் நாவடக்கம் காட்டுவேன்....அவர் .ஹும்...ரெண்டு பேரையுமே எறும்பு மொய்க்கும்....)