முன் குறிப்பு ! :
வலைச்சித்தர், குறள்சித்தர், குறள்தாசர் அன்பு நண்பர் DD உதவியுடன் தமிழ்மணம் வாக்குப்பட்டை பெற்றிருக்கிறோம்..
நன்றி DD.
பதிவுலக வாசக நண்பர்களை தமிழ்மணம் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
===========================================================================
அதாகப்பட்டது உருளைக்கிழங்கு கட்லட்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : மூன்று / நான்கு.
கடலைமாவு : ஐம்பது கிராம்.
அவல் : ஒரு கைப்பிடி. (யார் கையை பிடிப்பது என்று கேட்காதீர்கள். இருபது / இருபத்தைந்து கிராம் என்று வைத்துக்கொள்வோம்.)
வேர்க்கடலை : நூறு கிராம்.
வெங்காயம் பெரியது என்றால் இரண்டு. சிறியது என்றால் இருபது / இருபத்தைந்து.
இஞ்சி : பாதி கட்டைவிரல் அளவு (!)
பச்சை மிளகாய் இரண்டு.
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு அல்லது பதினான்கு இலைகள் .
கொத்துமல்லி : நான்கைந்து தழைகள் போதும்.
நல்லெண்ணெய் : அல்லது சன் டிராப் ஆயில் :கால் லிட்டர்.
உப்பு: தேவைக்கேற்ப.
உருளைக்கிழங்கை வெட்டிப் போட்டு போலீசில் சரணடையுங்கள் ... சாரி !சாரி!! வெட்டி, பாத்திரத்தில் இட்டு அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, ஒரு ப்ரெஸ்டிஜ் குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும்வரை (குக்கரிலிருந்துதான்) வேகவிடுங்கள். அதாவது உருளையை வேகவைத்து, தோல் அகற்றி, சூடு ஆறியதும் நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, (தோல் நீக்கிய ) இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை நறுக்கும்பொழுது, விரலையும் நறுக்கிக் கொண்டால், பாண்ட் எய்ட் போட்டுக்கொண்டு வரவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில், கடலைமாவு, உப்பு, வேர்க்கடலை (உரித்த வேர்க்கடலை பருப்புகள் எனக்கொள்க. சிலர் வேர்க்கடலைப் பருப்புகளை, மிக்சியில் இட்டு விப்பர் செட்டிங்கில் லேசாக உடைத்து, தூளாக்கியும் உபயோகிப்பர்.) அவல் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து, நன்றாகப் பிசையவும்.
பிறகு அதோடு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். உருண்டைகளின் விட்டம் இரண்டு செ மீ இருக்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அடுப்பைப் பற்றவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை ஒன்றிரண்டாகப் போட்டு, சிவக்கப் பொறியும் வரையில் வேடிக்கைப் பார்க்கவும். (வெளியே அல்ல, உருண்டைகளை!) கண்ணு கரண்டி கொண்டு உருண்டைகளை திருப்பி விட்டு, எல்லாப்பக்கங்களிலும் சிவக்கப் பொறிக்கவும்.
உருண்டைகள் நன்றாக வெந்ததும் (கறுக்க விட்டுவிடாதீர்கள்!) வெளியே எடுத்துவிடவும்.
உருளைக்கிழங்கு கட்லட் தயார்!
அப்படியே சாப்பிடலாம் அல்லது ரசம் சாதம் / குழம்பு சாதத்திற்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்! லாம் லாம் .. சலாம்!
ஸ்கேல் + பாண்ட் எய்ட் கண்டிப்பாக தேவைப்படும்...! ஹிஹி...
பதிலளிநீக்குநன்றி...
அதிகம் சாப்பிட்டால் வயிறு வீங்கிவிடும்.... ஹா ஹா...
பதிலளிநீக்குஎங்கப்பா எல்லாம் அழகாக கற்றுக் கொண்டீர்கள்? கூடவே நகைச் சுவையையும் அள்ளித் தெளிக்கிறீர்கள். அன்புடன்
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குநீண்ட காலமாகப் பிரச்சனையில் இருந்த வாக்குப்பட்டை சரியானது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்:)!
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஆதரவோடு வாக்குக் கேட்டுவிட்டீர்கள்..பிறகு? ஆர்.கே.நகரில் நின்றாலும் உங்களுக்குத்தான் என் வாக்கு... (போட்டுட்டோம்ல..ப்ளஸ்1 ஆக த.ம.6..நல்லா இருங்க சாமி!) அருமையான தொடக்கம்...நாக்கு ஊறுகிறது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஸ்ரீராமின் “திங்கக்” கிழமைபோலில்லையே. தமிழ்மணம் வாக்குப்பட்டைக்கு வாழ்த்துக்கள்
கட்லெட் செய்ய இப்படித்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்! ஜாலியாக நகைச்சுவையாக பகிர்ந்தாலும் பதிவு சூப்பர்! நன்றி!
பதிலளிநீக்குரெண்டு கட்லெட்டைத் தின்னுட்டு ஒரு டீ குடிச்சா.....!
பதிலளிநீக்குஓட்டுப் போட்டாச்சு
வழக்கமாக கொடுக்கும் சுவையான குறிப்புகள் போலல்லாமல் என்ன திடீரென்று கட்லட்டிற்கு வந்து விட்டீர்கள்?
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குநிச்சயம் நான் படிக்கும் பதிவுகளுக்கு வக்களிப்பது வழக்கம்... நான் வாக்களித்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி.j.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்குகட்லெட்டுக்கு 9 ரூபாய்
ரசித்தேன்.
பதிலளிநீக்குதமிழ்மணம் 10
பதிலளிநீக்குyummy crispy cutlets ..haven't made cutlets with poha and monkey nuts ..thanks for the new recipe
ரசித்தோம்
பதிலளிநீக்குபட்டை கிடைத்தது மகிழ்வளிக்கிறது
வாக்களித்துவிட்டேன்
தலைப்பு சூப்பர்.
பதிலளிநீக்குசுவையான பதிவு
உ.க.கி..... - மொறுமொறுவென பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது!
பதிலளிநீக்குப்ரெஸ்டீஜ் குக்கரே தான் வேணுமா! ஹாக்கின்ஸ்ல வேக வைத்தால் வேகாதா? - டவுட் தனபால்!
கட்லட் ஜோர். பெண்ட் எய்டெல்லாம் போட்டு தான் செய்யணும் போல...:))
பதிலளிநீக்குஅப்பாதுரை ப்ளாக் லே நெய் அப்பளத்தை பற்றியும் அதைச் சாப்பிட்டு,
பதிலளிநீக்குஉப்புகின்ற வயிறு எனச் சொல்லப்படும் உத்தம வில்லனைப் பற்றி
விலா வாரியாக எழுதிவிட்டு வந்தால்,
இங்கு உருளைக்கிழங்கு கடலை மாவு போண்டா என்னை
ஏண்டா நீ எங்கன இருக்கே அப்படின்னு
ஏக்கத்துடனே குரல் கொடுப்பது கேட்கிறது.
மனுஷ்யனாகப்பட்டவன் வயசான காலத்துலே
தாடை இரண்டுக்கும் நடுவிலே இருப்பதை
தன கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்று
எத்தனை தரம் சொன்னாலும் நாக்கு அலைகிறதே !!
அதைச் சொல்லுங்கள்.
உ.கி.கே. வாய்க்கு ருசி தான். இருந்தாலும் அதில் இருக்கும் எக்சஸ் கார்போ ஹைட்ரேட் , பித்த நீர் பையில் இருந்து வரும் ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்துடன், ஈருடல் ஒருயிராய் கலக்கையிலே
பெரிதும் நைட்ரஜன் வாயு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைட் , உண்டாவது மட்டுமன்றி, எண்ணை யின் தன்மையைப் பொறுத்து ஒரு விதமான் சல்பூரிக் அமிலமும் உற்பத்தி ஆவதால்,
உள்ளே மேட்டராக செல்லும் உ.கி.க. வெளியே எனெர்ஜி யாக டப்பார் தபார் என்று வெடி குண்டு சத்தத்துடன் வருகிறது. சல்பூரிக் அமிலமும் மெதேன் சில சமயம் பை ப்ராடக்ட் ஆக வருவதால் ஒரு வித சுகந்த நறுமணம் அந்த வெடியுடன் கலந்து வரும்போது, பக்கத்தில் இருப்பவர்கள் தூக்கம் எல்லாம் கெட்டுப்போய் ,
கண் கானா தூரத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்படுகிறது. அதெல்லாம் இருக்கட்டும்
வாயு பகவானை எதிர்த்துப்போராடும் சக்தி உடைய
. இந்த ஜெலுசில், ரானடாடைன், பாண்டோ ப்ராஜோல் எல்லாத்துக்கும் எதுனாச்சும் ஹோல் ஸேல் ஏஜன்சி எடுத்து இருக்கிறீர்களோ ??
ஆயுர்வேதத்தில், திரிபலாதி சூர்ணம், நெல்லிக்காய் அளவுக்கு , இந்த உ.கி. க. சாப்பிட்ட உடன் சாப்பிட்டவும்.
அது சரி.
இந்த வெங்காய் , இஞ்சி, பச்சமிளகாய், போடும்போது, மிளகாய்க்கு பதிலாக, ஒரு அஞ்சு முதல் பத்து மிளகு , பாதிப் போடி, பாதி முழுசாகப் போட்டு, ரொம்ப வேண்டாம், ஒன்னு இரண்டு கிராம்பு , விசிறி விட்டுட்டு, பின்னே பொரிச்சு பாருங்க..
வாய்க்கும் ருசி.
வயிறும் கஷ்டப்படாது.
பண்ணுவதற்கு முதல் நாளே சொல்லிவிட்டால், நான் அங்கு சூடா சாப்பிட வர சௌகர்யமாக இருக்கும்.
யதா சௌகர்யம் துஷத்வம் என்று நீங்களும் சொல்லலாம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
அப்பாதுரை ப்ளாக் லே நெய் அப்பளத்தை பற்றியும் அதைச் சாப்பிட்டு,

வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குஉ.கி.க.படங்கள்,செய்முறை விளக்கங்கள் நன்றாகவே இருந்தது.ஜாலியாக சிரமம் தெரியாமல் நகைச்சுவையுடன் செய்த முறை நன்று. அருமையான உ.கி.க.வை நானும் தொட்டுக்கொள்ள நகைச்சுவை சட்னியோடு ரசித்து சாப்பிட்டேன்.
பிரமாதமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அச்சச்சோ....பாதி கட்டைவிரலா....? நான் வெஜ்ஜாக்கும் ....அளவுனு கொடுத்திருக்கீங்களா சரி சரி...
பதிலளிநீக்கு"ப்ரெஸ்டீஜ்" குக்கர் அடம் புடிச்சா...வேற குக்கர்..அதுக்கு சும்மா வேகவைச்சு தோலை உரிச்சுனு சொன்னா மாத்ரினு சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல...
ரொம்பவெ ரசிச்சோம்.....சமையல் குறிப்பு + நகைச்சுவை....அதுதானே உங்கள் ஸ்பெஷல்...