தன்னுடைய
பதினெட்டு வயதில் அவன் ஒரு நாடோடி என்று தெரிந்துதான் அவன்மேல் காதலில்
விழுந்திருந்தாள் மலர்விழி. பதினெட்டு வருடங்களாக அனாதையாக வளர்ந்து இந்த
உலகின்மேல் ஒரு இனம் தெரியாத வெறுப்பை வளர்த்து வைத்திருந்தாள். தன்னைப்
பெற்று இந்த கதிக்கு விட்டுச் சென்றவர்கள் யாரென்றே தெரியாது.
அந்த நாடோடி கூட ஒரு அனாதையாய் இருக்கலாம் என்ற எண்ணமே கூட அவன்மேல் முதல் ஈர்ப்பு வரக் காரணமாயிருந்திருக்கலாம்!
தன்
வாழ்வில் வசந்தம் வந்து விட்டதாகத்தான் நினைத்தாள். இனி வாழ்வின்
வெறுப்பெல்லாம் மாறி வசந்தகாலம் தொடங்கி விட்டது என்று கனவு கண்டாள்.
அந்தக் கனவின் மயக்கத்திலேயே, நாடோடியினுடனான உறவினால் கர்ப்பமானாள்.
இதைத்தான் அவள் எதிர்பார்க்கவில்லை என்றால், அந்த நாடோடிக் காதலனும்
மறைந்து விடுவான் என்பதையும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
சோதனை தொடர்ந்தது.
அவள்
பிரசவம் சிக்கலானது. பிரசவத்தில், மருத்துவர்கள் அவளிடம் ஆண், பெண்
இரண்டு இன உறுப்புகளும் இருப்பதைக் கண்டு அதிசயித்துக் குழம்பினாலும்,
மருத்துவக் காரணங்களுக்காக அவளை அவர்கள் 'அவன்' ஆக்கி விட்டார்கள்.
இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து அடுத்த சோதனையும் வந்தது. முகம் தெரியாத ஒருவன் பிறந்த குழந்தையைக் கடத்திக் கொண்டு போய்விட்டான்.
பெற்றோர்கள்
யார் என்று தெரியவில்லை. காதலித்தவனைக் காணவில்லை. கர்ப்பமாகி,
பாலினமும் மாற்றப் பட்டு விட்டது. பெற்ற குழந்தையும் காணாமல்
போய்விட்டது என்று வாழ்க்கையின் அத்தனை விதமான சோதனைகளையும் கண்டு
விட்டதால் வெறுப்புற்று, மருத்துவமனையிலிருந்து வெளியேறி இலக்கின்றி
அலைகிறான். நாடோடி ஆனவன், சமூகத்தால் ஒதுக்கப்பட்டு குடி காரனாகவும் ஆனான்.
இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது. ஒருநாள் ஒரு
பாரில் தனது சோகக் கதையை அங்கிருந்த ஒரு வயதான பணியாளனிடம் கூறி, சோகத்தைப்
பகிர்ந்து கொள்கிறான்.
அந்த வயதான பணியாளர் இவனுக்கு
உதவி செய்ய முன்வருகிறார். அவர் ஒரு யோசனை சொல்கிறார். இவனை இந்நிலைக்கு
ஆளாக்கிய அந்த நாடோடியைப் பழிவாங்க உதவுவதாகக் கூறுகிறார். ரகசியத்தைக்
காப்பாற்றக் கோருகிறார். அவர் அறிந்த ஒரு கால யந்திரம் பற்றிக்
கூறுகிறார். அந்தக்குழுவில் சேர்வதாகைருந்தால் உதவுவதாகக் கூறுகிறார்.
இவனும் ஒத்துக் கொள்ள அவனை அழைத்துக் கொண்டு கால யந்திரத்தில் ஏறுகிறார்.
அவனை
அவனின் ஏழு வருடங்கள் பின்னால் சென்று, பதினெட்டாவது வயதில் கொண்டு
விடுகிறார். ஆனால் வந்த வேலையை விட்டு விட்டு இவன் அங்கு ஒரு அனாதைப்
பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். அவளைக் கர்ப்பமாக்குகிறான்.
வெறுப்படைந்த
வயதான பணியாளர் ஒன்பது மாதங்கள் முன்னே சென்று ஆஸ்பத்திரியிலிருந்து
அந்தக் குழந்தையைக் கடத்துகிறார். கடத்திய அந்தக் குழந்தையை கால
யந்திரத்தில் அழைத்துச் சென்று ஒன்பது மாதங்கள் மற்றும் பதினெட்டு
வருடங்களுக்குப் பின்னால் சென்று ஒரு அநாதை விடுதியில் விட்டு விடுகிறார்.
இப்போது மலர்விழியின் அப்பா யார், அம்மா யார்? நாடோடி யார்? வயதான பணியாள் யார்?
எல்லோரும் ஒருவரே!
ராபர்ட் ஹெய்ன்லெய்ன் எழுதி இருக்கும் "All You Zombies." கதை!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குசென்னையிலே வெயில் அதிகம்னு சொன்னாங்க, உங்க பதிவு படிச்சப்புறமா நிஜம் தான்னு புரியுது! :P :P :P :P :P :P
ஒன்னுமே புரியல...உலகத்துல என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...ஒன்னுமே புரியல உலகத்துல....
பதிலளிநீக்குசென்னை வெயில் இன்று மிக அதிகம் என நினைக்கிறேன்...
இல்லையாம், இன்னிக்கு வெயில் குறைவுனு சொன்னார். அதனால் வந்த பாதிப்பாய்க் கூட இருக்கலாம். இரண்டு முறை கமென்டினேன். போகலை, இது போகுதானு பார்க்கணும். இல்லைனா இந்தக் கால யந்திரத்தில் ஏறிப் பின்னோக்கித் தான் போயாகணும். :)
பதிலளிநீக்குயாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்னும் நோக்கமா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅவள் ஒரு தொடர் கதையா.....
சென்னையிலே வெயில் அதிகம்னு சொன்னாங்க, உங்க பதிவு படிச்சப்புறமா நிஜம் தான்னு புரியுது! :P :P :P :P :P :P
பதிலளிநீக்குநீங்க சென்னையிலா இருக்கீங்க, அப்ப சரித்தான்.
கதையைக் கூட
பதிலளிநீக்குவிடுகதையாக்கி விட்டீர்கள் நண்பரே
எங்கெருந்து பிடிச்சீங்க இந்தக் கதையை? ராமா ராமா!
பதிலளிநீக்குஇரண்டு மூணு நாள் கழிச்சு வலைப்பக்கம் வந்து உங்க பதிவு படிச்சேன்....
பதிலளிநீக்குஒண்ணும் புரியலே! :)))))
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதையின் ஆசிரியருக்கு இப்படி ஒரு கற்பனை தோன்றியதுதான் சிறப்பு !
பதிலளிநீக்குகொஞ்சம் ஆழ யோசித்தால் ஏழு ஜென்மம் தொடங்கி, முன்வினை பயன் வரை நம்மவர்களின் பல நம்பிக்கைகள் இந்த விஞ்ஞான கதையினுள் புதைந்திருப்பதை உணரலாம் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
ஹா... ஹா... நல்லாத்தான் இருக்கு...
பதிலளிநீக்குகீதா அம்மா கருத்துரை செம...
தலை சுற்றுகிறதே :)!
பதிலளிநீக்குபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் அடுத்த பதிவான "இறந்தபின்னும் இருக்கிறோமா?" பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்!
பதிலளிநீக்குயம்மாடியோவ்! உங்களின் புதிய பதிவைப் படிச்சுட்டு இந்த முந்தைய பதிவுக்கு வந்தால் அந்தப் புதிய பதிவுக்கு இது ஒரு முன்னோட்டம் போல் உள்ளதே....மறுபடியும் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்......திரும்பவும் டைம் பேஸ்ட்...ம்ம்ம்ம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம் முக்காலமும் அறிந்த முக்காலத்திலும் செல்லும் முனிவர்கள் போல மாறணும்...ஒரு வேளை இவங்களை வைச்சுத்தான் ஹாலிவுட் கதை வுடுறாங்களோ!! என்னமோ போங்க ஒண்ணும் புரியல...
பதிலளிநீக்குநண்பர் ஸ்ரீராம எப்படியாவது பார்க்கணும்னு இன்னிக்குக் கூட ஆவியிடமும், அநன்யாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்ப நீங்க எப்படி எந்த ரூபத்துல இருக்கீங்கன்னு தெரியல....என்னாச்சுன்னும் தெரியல....நீங்க டைம் மெஷின்ல முன்னாடியா பின்னாடியா!!!!!!
பதிலளிநீக்குகீதா
எங்கும் எக்காலத்திலும் நிறைந்திருக்கும் பரம்பொருள்.
பதிலளிநீக்கு