Saturday, June 6, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  "இப்படியாக, இதுவரை, 1,000 யானைகளைப் பிடித்து விட்டேன்.  எனக்கு, இந்த யானைகள் தான் குடும்பம். இந்த ஊர் மக்கள் தான், என் உறவு. எனக்கென்று வேறு யாருமில்லை" - யானையை அடக்கும் வேலைகளில் ஈடுபடும் சாதனைப் பெண் பர்பாடி பர்வா.


2) "ஒரு ஆணைப் படிக்க வைத்தால் ஒருவன்தான் படிக்க வைக்கப் படுகிறான்.  ஆனால் ஒரு பெண் குழந்தையைப் படிக்க வைத்தால் ஒரு குடும்பமே படிக்க வைக்கப் படுகிறது" - ஷர்மிளா சோலங்கி.3) திருமணத்தின்போது வரதட்சணையாக மரக்கன்றுகள் வாங்கி விநியோகித்த மனிதரைப் படித்தோம்.  இப்போது கர்நாடகாவின் H. K. அனந்தப்பா தண்ணீரைச் சேமிக்க தனது  கற்றுக்கொடுக்கத் அவரால் இயன்றதைச் செய்திருக்கிறார். 


4) தனது  எண்பது சதவிகித நோயாளிகளை இலவசமாகவே குணம் செய்த மருத்துவர் சுபோத் குமார் சிங்.5)  உடல் உழைப்புக்கு வயது தடையில்லை.  ஃபினாயில் பாட்டி!


6)  பள்ளி ஆசிரியை என்ற நிலையிலிருந்து நிகழ்ச்சி மேலாண்மை சிறப்பாளராக!  ‘ஸ்வதேஷ் ஈவன்ட்ஸ்’ நிர்வாகி ஷியாமளா ரமேஷ்பாபு.


7) திருவவனந்தபுரம் மஞ்சுநாத்.


8) கங்காதரனின் சேவை.  1125 சாலைப் பள்ளங்களை தன்னுடைய (பென்ஷன் பணம்) கைக்காசைப் போட்டு சரி செய்திருக்கும் மனிதர்.  இப்போது இவரைப் பார்த்து நிறைய இளைஞர்களும் பொதுமக்களும் இந்தப் பணியில் இணைந்திருக்கிரார்களாம்.
9) கேரளாவில் பிறந்து, துபாயை மையமாக கொண்டு உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களை நடத்தி வரும், சன்னி வர்க்கி.  இவர், தன் சொத்தில் சரிபாதியை, ஆசிரியர் நலப் பணிகளுக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

10) இதோ, இன்னொரு இளைஞர்.  அனிருத்.  பார்த்துக்கொண்டிருந்த கார்பொரேட் வேலையை விட்டு விட்டு ஏழை விவசாயிகளின் நலனுக்காகக் கிராமத்தில் நுழைந்து களத்தில் குதித்திருப்பவர். 
11) என் வருமானம் மகனது படிப்பு செலவுக்கு உதவுகிறது. பிறரை நம்பி வாழாமல் இறுதி வரை, டீ விற்பனை செய்து வாழ வேண்டும் என்பதே என் ஆசை. 90 வயது ராமசாமி

9 comments:

புலவர் இராமாநுசம் said...

என்னைப் போன்ற வயதானவர்களுக்கு,இப்பதிவு மனவலிமை தருவதாக உள்ளது!நன்றி

KILLERGEE Devakottai said...


ராமசாமி ஐயாவின் உறுதியைப் போற்ற வேண்டும்

பழனி. கந்தசாமி said...

ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு பாடம் கற்பிக்கின்றன.

R.Umayal Gayathri said...

பாஸிடிவ் செய்திகள்...அனைத்தும் அருமை

Geetha Sambasivam said...

முதலிரண்டு செய்திகளும் ஏற்கெனவே தெரிந்தவை. மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி. 90 வயதுக்காரருக்குப் படிக்கும் வயதில் மகன்? ஆச்சரியம் தான். அனைத்து நபர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்

மனோ சாமிநாதன் said...

மருத்துவர் சுபோத் குமார் சிங், கங்காதரன். தன்மானமிக்க 90 வயது ராமசாமி மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.
திரு.சன்னி வர்க்கி உலகளவில் 100 பள்ளிகளை நிறுவிய, உலகின் நான்காவது மிகப்பெரிய பணக்கார மலையாளி!. துபாயில் மிகவும் காஸ்ட்லியான பள்ளிகள் இவை!

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துமே அருமை என்றாலும், மருத்துவரும், சன்னி வர்கியும், அனிருத்தும் டாப்...

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொருவரும் வியக்க வைக்கிறார்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!