திங்கள், 8 ஜூன், 2015

திங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.


தேவையான பொருட்கள்: 
   

கொள்ளு : அரை கப். 
கடலைப் பருப்பு : இரண்டு மேஜைக்கரண்டி* 
எள்ளு (வெள்ளை) : மூன்று மேஜைக்கரண்டி 
காய்ந்த மிளகாய் : ஐந்து. 
பூண்டு : ஐந்து பற்கள். 
கறிவேப்பிலை : ஒரு ஈர்க்கு. 
பெருங்காயம் : அரை டீஸ்பூன். **
நல்லெண்ணெய்: ஒரு டீஸ்பூன். 
உப்பு: தேவையான அளவு. 

செய்முறை: 
கொள்ளை எடுத்து, தண்ணீரில் கழுவிக் களைந்து, சில நிமிடங்கள் காயவைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அதில் கொள்ளை பொன்னிறமாக வறுத்து, எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். 

பிறகு, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு இவைகளை வாணலியில் (பருப்பு பொன்னிறம் வரும்வரை) வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். 

அதன் பிறகு, வாணலியில், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவைகளை இட்டு, ஒரு நிமிட நேரம் லேசாக வறுத்துக்கொள்ளவும். இவைகளையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அதன் பிறகு எள்ளை வாணலியில் இட்டு, பொன்னிறம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும். 

ஆச்சா? 

இப்போ வறுத்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற விடவும். சூடு சொரணை எல்லாம் போய்விட வேண்டும். 

ஓ கே? 

இப்போ எல்லாவற்றையும் ஒரு மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். கொஞ்சம் கர கரவென்று அரைத்துக் கொள்ளலாம். 
    

கொள்ளுப் பொடியை என்ன செய்யலாம்? 

இட்லி மிளகாய்ப் பொடி போல எண்ணெயுடன் சேர்த்து, இட்லி அல்லது தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

சாதத்தில் இட்டு, பிசைந்து கொண்டும் சாப்பிடலாம். கொள்ளுப் பொடி சாதம்! 
   

கொள்ளு உண்டால் உடம்பு வலி போகும். உடல் இளைக்கும். 
   
   

அகில உலக குதிரைகள் முன்னேற்ற சங்க ஆட்கள் உங்கள் மேல் கேஸ் போட்டாலும் போடுவார்கள். ஜாக்கிரதையா இருங்க! 

அளவறியுங்கள்:                    
* ஒரு மேஜைக்கரண்டி அளவு என்பது பதினைந்து கிராம். 
** ஒரு டீஸ்பூன் அளவு = ஐந்து கிராம். 
     

10 கருத்துகள்:

  1. அனைவருக்கும் அவசியம் தேவையானப் பொடி
    விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. கடலைப்பருப்பும், பூண்டும் சேர்க்காமல் பண்ணினது அப்படியே இருக்கு. என்னமோ தெரியலை, ஒத்துக்கறதில்லை கொள்ளு மட்டும். :)

    பதிலளிநீக்கு
  3. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    விரிவான விளக்கத்துக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. சமீபத்தில்தான் என் அக்கா பருப்புப் பொடி,எள்ளுப்பொடி,தனியாப்பொடி, எல்லாம் செய்து வைத்து விட்டுப் போனர்கள்.அப்போது தெரியாது போயிற்றே இந்த குதிரைப்பொடி!

    பதிலளிநீக்கு
  6. கொள்ளு குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும். அதனால்தான் அவற்றுக்கு ஹார்ஸ் பவர் கிடைக்கிறதோ. கொள்ளு ரசம் துவையல் என்றெல்லாம் என் மனைவி செய்வாள்.

    பதிலளிநீக்கு
  7. செய்வதுண்டு....துவையல், பொடி, ரசம், மிளகாய் பொடியில் சேர்த்து என்று...கொள்ளு ஊறவைத்துமுளைகட்டி சாலடிலும் சேர்ப்பதுண்டு..

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!