சனி, 1 ஆகஸ்ட், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.


 


2)  தான் பாதிக்கப் பட்டது போல இனி யாரும் பாதிக்கப் படக் கூடாது என்று நினைத்து, அதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கும் திரு அப்துல் கரீமுக்குப் பாராட்டுகள்.  நன்றி துளசிஜி.
 
 
 


 
3)  ஈர நெஞ்சம் மகேந்திரனும் ஆர் வி எம் ஃபவுண்டேஷனும்.
 
 
 

 
4)  மதுரை, தல்லாக்குளம், நடத்துனராகப் பணி புரியும் பழனிவேலின் யோசனைகள்.
 
 5)  முன்னுதாரணம்.33 கருத்துகள்:

 1. நல்ல உள்ளங்களுக்கு நன்றி. தொகுத்து அறிய தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. பழனிவேலின் யோசனைகளை நன்றாய் இருக்கின்றன ,நடைமுறைக்கு வந்தால் நல்லது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க ஊர்க்காரராச்சே திரு பழனிவேல்.. நன்றி பகவான்ஜி.

   நீக்கு
 3. அனைத்தும் அருமையான தகவல்கள் ..ஈரநெஞ்சம் அமைப்பினரின் பணி கிரேட் !

  பதிலளிநீக்கு
 4. வழக்கம் போல் பலரை அறிந்தேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ஐந்தும் அருமை அதை தெரிவித்த திருராம் சாருக்கு நன்றி
  (sri,not enable in my keyboard,so i called thiru)

  பதிலளிநீக்கு
 6. மெடிசன் பாபாவின் உயர்ந்த தொண்டு பிரமிக்க வைப்பதுடன் கை கூப்ப‌வும் வைக்கிறது!

  தான் பட்ட துன்பம் பிறர் அனுபவிக்கக்கூடாது என்று கழுத்தில் குழாயுடனும் மனதில் ஈரத்துடனும் திரு.அப்துல் கரீம் செய்யும் உயர்ந்த தொண்டு மனதை மிகவும் நெகிழ வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே.

  இந்த வாரம் அறிய தந்த செய்திகள் அனைத்தும் சிறப்பானவை.
  ஈரநெஞ்சம் அமைப்பினரின் சிறப்பான பணி போற்றுதலுக்குரியது.
  நடத்துனரின் யோசனைகளும் அருமை. பயனுள்ளதாக்கிக் கொண்டால் நன்றாக இருக்கும். இந்த செயதிகள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. நல்ல மனிதர்கள் பற்றி நல்லதொரு தொகுப்பு...
  ஈரநெஞ்சம் மகத்தான பணி செய்து வருகிறது.

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான செய்திகள்.அனைத்தும் அருமை
  பழனிவேலின் கண்டுபிடிப்பு அசத்தல். எங்கோ இருக்க வேண்டியவர் நடத்துனராக டிக்கெட் கிழித்துக் கொண்டிருப்பது வேதனை அடையாளம் கண்டு சொன்னவர்க்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 10. 79 வயதில் மெடிசின் பாபா ஓம்காரநாத்துக்கு என்ன ஒரு உபகாரச்சிந்தனை!
  புகையினால் குரலை இழந்த அப்துல் கரீம் பேச முடியாத நிலையிலும் தன் நிலைமையை விளக்கிப் புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல்,
  மனநலம் பாதிக்கப்பட்டோருக்குப் புகலிடம் கொடுக்கும் ஆர்விஎம் பவுண்டேஷன், திருட்டைத் தடுக்கும் கருவி, பிரச்சினைகளைத் தீர்க்கும் வொயிட்பீல்டு ரைசிங் என எல்லாச் செய்திகளுமே மனதுக்குப் புத்துயிர் ஊட்ட வல்லன. பாசிட்டிவ் செய்திகளுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. செய்திகள் அனைத்தும் அருமை..வாசித்தோம்....விரிவாக பதில் இட முடியய்வில்லை....எங்கள் பதிவும் இங்கு பாசிட்டிவானதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 12. மெடிசின் பாபாவின் சேவை போற்றத்தக்கது. மருத்துவரிடமிருந்து சீட்டுக்களைக் கொண்டு வருபவருக்கு மட்டுமே வழங்குகிறார் என்பது ஆறுதலான விஷயம்.
  சிலருக்குப் பட்டால்தான் புத்தி வருகிறது என்பதற்கு அப்துல் கரீம் உதாரணம். படாமலேயே நீங்கள் ஒருவரைத் திருத்தியிருப்பது மிகவும் போற்றத்தக்கது ஸ்ரீராம். வளரட்டும் உங்கள் பணி. இதனால்தான் இந்த பாசிடிவ் செய்திகளை வாராவாரம் போட ஆரம்பித்தீர்களோ?
  பாவம், இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கைகொடுக்கும் ஆர்விஎம் பவுண்டேஷனும், ஈரநெஞ்சம் மகேந்திரனும் பல்லாண்டு வாழ்க!
  திரு பழனிவேலின் கண்டுபிடிப்புகளை தனியார் நிறுவனங்களோ, அரசு இயந்திரமோ நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாமே! பாராட்டுக்கள் அவருக்கு.
  பெங்களூரில் ஒவ்வொரு ஏரியாவிலும் இதைப் போலச் செய்தால் பழைய பூங்கா நகரம் ஆகிவிடும் பெங்களூரு. செய்வாருண்டோ?
  உங்கள் பாசிடிவ் செய்திகளைப் படிக்கும்போது நானும் ஏதாவது பாசிடிவ் ஆகச் செய்ய முடியுமா? செய்திருக்கிறேனா என்றெல்லாம் யோசிக்கிறேன். பாசிடிவ் செய்தியின் நல்ல விளைவு இது இல்லையா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!