2) உயர்ந்த மனிதர் ஹிமான்ஷு பக்ஷி. அவர் கதையை வரி வரியாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வரியும் மேற்கோள் காட்டத் தகுதியானது.
3) பாராட்டப்பட வேண்டிய மிருகாபிமானம் மிக்க கிராமத்தினர்.
4) இந்தியா எனது (நமது) நாடு என்பதில் நிஜமாகப் பெருமைப் படவைக்கும் நிகழ்வு.
5) நிகழ்ந்தது ஒரு மரணம். ஜனனமானது புதிய எண்ணம். வேத மித்ரா சவுத்ரி.
6) 24 நாட்களில் 173 கழிப்பிடங்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவியின் சாதனை. நடிகையின் விளம்பரம் இவருள் ஏற்படுத்திய உத்வேகம். பிரேமா திம்மனகௌடர்.
7) சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத் தினர், பல
தலைமுறைகளாக மதுவிலக்குக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். வேலைக்காக
வெளியூர், வெளி நாடு சென்றாலும் இந்த ஊர் இளைஞர்கள் கட்டுப்பாட்டை மீறாமல்
கண்ணியத்துடன் இருந்து வருகின்றனர். உதாரண கிராமம்.
8) அன்பான போலீஸ் என்பது ஆக்ஸிமோரான் அல்ல! அம்பத்தூர் போக்குவரத்துக் காவலர் - சப்-இன்ஸ்பெக்டர் - நடராசன். [நன்றி எல்கே]
9) கோட்டூர் மக்களின் சாதனை.
10) கற்பித்தல் நன்றே... கற்பித்தல் நன்றே... பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே... சென்னை ஆர். .செல்வராஜ்.
11) கத்தி முனையைப் பற்றிக் கவலையில்லை. வயதுக்கும் துணிவுக்கும் தொடர்பில்லை. உத்தம் பட்கர்.
12) பாம்புகளின் வயிற்றில் பால் வார்ப்பவர்கள்.
13) இரண்டு சிறுவர்களின் முயற்சியில் பயன்பெறும் ஏழைக் குழந்தைகள்.
14) கடமையைத்தான் செய்தார். ஆனால் கருத்தாகச் செய்தார். 155 உயிர்களைக் காத்தார்.
15) முடியும் என்று நினைத்தால் முடியும். படிக்கவும் முடியும். எடையைக் குறைத்து மெடலும் வாங்க முடியும். சோனாலி.
16) நாடென்ன செய்தது நமக்கு? என்று கேள்விகள் கேட்பது எதற்கு? மேலூர் அருகே கூலிப்பட்டி மக்களும், பள்ளி ஆசிரியர்களும்.
அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
வாழ்த்துவோம்
நன்றி நண்பரே
தம 2
பாஸிட்டிவ் செய்திகள் அருமை..!
பதிலளிநீக்குபாஸிட்டிவ் செய்திகள் அருமை..!
பதிலளிநீக்குஇதில் எல்லாம் வரிசைப்படுத்துதல் சரியில்லை. எல்லாமே ஒரே வரிசையில் இருக்கின்றன. அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குஅம்பத்தூர் போக்குவரத்துக் காவலர் சப்-இன்ஸ்பெக்டர் திரு . நடராசன் சொல்வதை காவல் துறையினர் பின் பற்ற வேண்டும் என்பதே ஜனநாயக நாட்டின் மக்கள் அனைவரும் விரும்புவது !
பதிலளிநீக்குஅனைவரும் தங்கள் பங்குக்கு அருமையானவர்கள்.
பதிலளிநீக்குஅனைவரும் தங்கள் பங்குக்கு அருமையானவர்கள்.
பதிலளிநீக்குSalute to all good hearts.
பதிலளிநீக்கு14. அந்த காப்டன் லைசென்ஸ் suspend செய்யப்பட்ட வேண்டும். காப்டன் முதலில் செய்யவேண்டிய விமானம் எடுக்குமுன் செய்ய வேண்டிய mandatory pref light checks சரியாக செய்ய வில்லை என்பதே உண்மை. Fuel alternate airport-க்கும் சேர்த்து எடுதத்தா என்று சரி பார்க்கவில்லை. வேறு எப்படி வேண்டுமானலும் விபத்து ஏற்படாலம். மூன்று சுற்றுக்கு அப்புறம் fuel இல்லை எனபது மன்னிக்க முடியாத குற்றம். .
பதிலளிநீக்குமிக அருமையான தொகுப்பும் பகிர்வும்!
பதிலளிநீக்குஅனைத்துப் பகிர்வுகளையும் ஒரே மூச்சில் பார்த்திட முடியவில்லை.
தொடர்ந்து பார்ப்பேன் சகோதரரே!
வாழ்த்துக்கள்!
த ம 5
அனைத்தும் பொக்கிஷ விடயங்கள் வாழ்த்துவோம் நலம் பெறவே....
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான மனிதர்களை கண் முன்னே வாரம் வாரம் நிறுத்தி மனம் குளிர செய்வதற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஎல்லா செய்தியும் வாசித்தாயிற்று...அனைத்துமே பாசிட்டிவ் ...அந்த பாம்பு, சிங்கம் எல்லாம் பாதுகாப்பது, பிச்சை புகினும் கற்பித்தல், மதுவிலக்கு கிராமம், போலீஸ் நடராஜன் ஆசோலசனை எல்லாம் அருமை...
பதிலளிநீக்குஹஜ்ஜப்பா பற்றி இங்கு சொல்லியதற்கு நன்றி ..
. உயரம் இல்லையென்றாலும் உயரம் தொட்டவர் ஹிமான்ஷு.
பதிலளிநீக்குஹஜ்ஜப்பா ஆஹா
அனைத்தும் அருமை
மதுவிலக்கு கிராமம். பற்றி அதிக அளவு விளம்பரம் செய்யப்படவேண்டும்.ஒரு கிராமம் பல கிராமங்களாக மாறினால் மது வைப் பற்றி அஞ்சத் தேவை இல்லை. மாற்றங்கள் அரசு செய்வதை மக்களே செய்தால்தான் நிலைத்திருக்கும்.
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல பதிவு. அனைத்து செய்திகளையும் நல்லதொரு விஷயங்களாக தொகுத்து தருகிறீர்கள். நல்ல மனங்கள் நல்ல எண்ணங்கள் படைத்த அனைவருக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அனைத்துமே அருமையான செய்திகள்.....
பதிலளிநீக்குசிங்கத்தின் எண்ணிக்கை உயர்வுக்கு உழைத்திட்ட கிராமம், தரிசு நில மேம்பாடு மூலம் நிலத்தடி நீரை உயர பாடுபட்ட கோட்டூர் மக்கள், விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கி உயிர்களைக் காப்பாற்றிய விமானி என பாசிட்டிவ் செய்திகள் மனதுக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளன. மிகவும் நன்றி!
பதிலளிநீக்குஅனைத்துச் செய்திகளும் அருமை! உதாரண கிராமம் உள்ளத்தில் நின்றது
பதிலளிநீக்கு