செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ராகுல் காந்தியும், ஜவஹர்லால் நேருவும், பின்னே ஜீனும்!


          Image result for nehru images    Image result for rahul gandhi images

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு உறவினர் வந்திருந்தார்.  பாஸின் சமையல் கைப்பக்குவம் பற்றிப் பேச்சு வந்தபோது "அது அவங்கப்பா கிட்டே இருந்து வந்தது (ஆமாம், அப்பா கிட்டயிருந்துதான்!)" என்று சொல்லி ஒரு உதாரணமும் சொன்னார்.


ஒருமுறை இவர் (இவர் என்பது ஒரு பெண்) உருளைக் கிழங்கை சமைக்க எடுத்ததும் ஒரு புது யோசனை தோன்றியதாம்.  இவர் சமையலில் விற்பன்னர்.  வடநாட்டுச் சமையல் வகை எல்லாம் வகை வகையாகச் செய்வார்.  திருநெல்வேலி பாணி சமையல் ஸ்பெஷலிஸ்ட்.


அந்த உருளைக் கிழங்கை அன்று அவர் வித்தியாசமாகச் சமைத்ததும் எல்லோரும் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்ததோடு இல்லாமல், அன்று முதல் உருளைக் கிழங்கு செய்தாலே இது மாதிரியேதான் செய்ய வேண்டும் என்று சொல்லி, அப்படியே செய்தும் வந்தார்களாம்.  நண்பர்கள் மத்தியிலும் அது புகழ் பெற்றது.


ஒருமுறை அம்மா வீட்டுக்கு சென்றிருக்கும்போது தன்னுடைய புதிய முயற்சி பற்றி அம்மாவிடம் சொல்லி இருக்கிறார். அம்மா இதுவரை உருளைக் கிழங்கை அப்படிச் செய்து இவருக்குக் கொடுத்ததில்லை என்பதாலேயே பெருமையாக அம்மாவிடம் சொல்லப் போக, அப்போது அம்மா சொன்ன தகவல், அந்த அம்மாவின் பாட்டி இப்படிச் செய்வாராம்.  இவரின் அம்மா சாப்பிட்டிருக்கிறாராம்.  பாட்டியின் ஜீன் இவருக்கு வந்திருக்கிறது.


என்ன சொல்ல வருகிறேன் என்றால், இது மாதிரி தான் புதிதாகச் செய்வதாக நினைக்கும் சிலசெயல்களுக்குக் கூட ஜீன்தான் காரணம், அந்த காரணத்தினாலேயே தலைமுறை தாண்டி இவருக்குக் கை வந்திருக்கிறது என்பதுதான்.


இப்போது தலைப்புக்கு வருகிறேன்.  அதற்குத்தான் இந்த பீடிகை!  இதை மட்டும் சுருக்கமாகச் சொன்னால் சுவையாக இருக்காது, மேலும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போல ஆகிவிடும் என்றுதான் முன்னுதாரணத்தோடு சொல்கிறேன்!
  


சமீபத்தில் ராகுல் காந்தி சென்னை வந்தபோது கொட்டும் மழையில் நனைந்தபடியே பேசியது நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.  குடை பிடிக்க ஈ வி கே எஸ் இளங்கோவன் வந்தபோது அதை வேண்டாம் என்று மறுத்து விட்டு, சொட்டச் சொட்ட நனைந்தபடியே பேசியதை பல பத்திரிகைகள் சிலாகித்திருந்தன.


இது புதுசு இல்லை.  

                                                        Image result for jawaharlal nehru addressing rally in rain 1940 images


1940 ஆம் ஆண்டு.  பம்பாயில் ஓர் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் நேருஜி பேசினார்.  திடீரென்று மழை கொட்டத் தொடங்கியது.  திறந்தவெளியில், கொட்டும் மழையில், பொதுமக்கள் அப்படியே உட்கார்ந்து நேருஜியி சொற்பொழிவை அமைதியாகக் கேட்டவண்ணம் இருந்தனர்.


நேருஜியும் மழையில் நனைவதைப் பார்த்த ஒருவர் சட்டென்று ஓர் குடையை விரித்து நேருஜி தலைக்குமேல் தூக்கிப் பிடித்தார்.  நேருஜிக்கு அளவில்லாத கோபம் வந்து விட்டது.  "ஆயிரக் கணக்கான மக்கள் மழையில் நனையும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு?"  என்று காட்டமாகக் கூச்சலிட்டாராம்.

சற்றைக்கெல்லாம் கோபம் தணிந்து குடையை வாங்கி வைத்துக் கொண்டார்.  "குடை எனக்காக அல்ல;  இந்த ஒலிப் பெருக்கியைப் பாதுகாக்கத்தான்" என்று சிரித்தபடியே கூறினார் நேருஜி.
32 கருத்துகள்:

 1. ராகுல்காந்தி இளங்கோவனிடமிருந்து குடையை வாங்கிமைக் செட்டுக்குப் பாதுகாப்பாகப் பிடித்தாரா ஜீனிலிருந்து வந்த சமாச்சாரம் என்று தோன்றினாலும் பாராட்டத்தக்கதே. .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழையில் நனைந்தது மட்டுமே ஒன்றாக இருக்கிறது ஜி எம் பி ஸார்!! நன்றி.

   நீக்கு
 2. தாத்தாவிடமிருந்து பேரனுக்கு ஒட்டி வந்ததோ இந்த ஜீன் பரிமாற்றம்! நல்லதுதான்!

  பதிலளிநீக்கு
 3. தலைவர் என்பவர் தன்னைச் சேர்ந்தவர்களின் நலன் தன் நலனை விட முக்கியம் என்று இருக்கவேண்டும். அவர்தான் சிறந்த தலைவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுபோல தலைவர்கள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை பழனி.கந்தசாமி ஸார்.

   நீக்கு
 4. //இது மாதிரி தான் புதிதாகச் செய்வதாக நினைக்கும் சிலசெயல்களுக்குக் கூட ஜீன்தான் காரணம், //
  உண்மைதான். அம்மாமார்கள் குழந்தைகளை திட்டும் போதும், பாராட்டும் போதும் அவரை கொண்டு இருக்கு, இவரைக் கொண்டு இருக்கு என்று சொல்வார்கள். தலைமுறைகள் தாண்டியும் குணநலன்கள் தொடரும் என்பது உண்மையே.

  பதிலளிநீக்கு
 5. விளம்பரத்திற்காக அல்லாமல் உண்மையாகவே செய்தால் நல்லதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நனைந்தது விளம்பரத்துக்காக இருக்க வாய்ப்பில்லை. எதிர்பாராமல் ஸ்பான்டேனியஸாக நிகழ்ந்தது போலவே தோன்றுகிறது டி என் முரளிதரன் ஸார்.

   நீக்கு
 6. இந்த ஜீன் விஷயம் அதுவும் சமையலில் என் அம்மா கூட ஒன்று சொல்லுவாள்: அம்மா எப்போதும் குழம்பு, ரசம் செய்வதற்கு புளி, உப்பு இரண்டையும் ஒன்றாக நனைத்து வைப்பாள். அம்மா இது தன் சொந்தக் கண்டுபிடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அம்மாவின் பெரியம்மா இதைப் பார்த்துவிட்டு பாட்டி மாதிரி பண்றே என்றாளாம். இதுவும் ஜீன் தானோ? நானும் என் அக்காவும் கூட இப்படித்தான். ஜீன் இல்லை. என் அம்மா சொல்லிக் கொடுத்தது!
  இந்த ஜீன் கான்செப்ட் வைத்து நான் பருப்புசிலி ஜீன் என்று ஒரு கதை கூட எழுதினேன்.
  இதோ இணைப்பு: http://tinyurl.com/o7lshez

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையான பகுதியை எடுத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கீங்க ரஞ்ஜனி மேடம். நன்றி.

   நீக்கு
 7. மற்ற பழக்கங்களும் தொடர்ந்திருக்குமானால் மகிழ்ச்சியே

  பதிலளிநீக்கு
 8. மற்ற அனைத்து நல்ல சிந்தனைகளும் தொடர்ந்தால் நல்லது தான்...!

  பதிலளிநீக்கு
 9. ஆஹா..... ஜீன் நல்ல விதமாய் வேலை செய்யட்டும்.....

  பதிலளிநீக்கு
 10. நல்ல சிந்தனையால் நல்லது நடந்தால் நலமே...

  பதிலளிநீக்கு
 11. தாத்தாவின் காதல் விஷயம் எல்லாம் பேரனுக்கு ஜீன் வழியாய் வருவதாக தெரியலியே :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!