கோவை ஆவி கைவண்ணத்தில் தோழி அனன்யா நடிப்பில் "தலைவாரிப்
பூச்சூட்டி உன்னை" குறும்படம். நேற்று வெளியிட்டிருக்கிறார் ஆனந்த்
விஜயராகவன்.
=================================================
மூன்று நாட்டுக்காரர்கள் ஒரு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.
==============================
ஹிஹிஹி....
எழுதிவைத்த கவிதையை
வெளியிட கை வைத்தபோது, இப்போது
எழுதி வைத்திருந்ததை...
==============================
ரசனை! நான் ரசித்த காட்சித்துணுக்கு!
படம் வேட்டைக்காரன். "உன்னை அறிந்தால்..." பாடல் சாவித்ரியின் நடை.
குதிரையிலேயே வரும் வாத்தியார் பாடலின் நடுவில் குதிரையிலிருந்து இறங்கி நடந்து வரும் நடை.
==============================
பாண்டிச்சேரிக் கவியரங்கத்தில் ஒருமுறை வாலி கவி பாடியபோது தலைப்பு 'கம்பநாடன் சைவமா? வைணவமா?' இந்தத் தலைப்பில் கவி பாடியபோது,
"சாதியில் சமயந்தன்னில்
சிக்கியே நோய்வாய்ப்பட்டு
பதியில் கிடந்த மக்கள்
பிழைக்கவே மருந்துதந்தோர்
ஆதியில் இங்கிருந்தார்;
ஆதலால் இந்த ஊரின்
வீதியில் கிடக்கும் மண்ணை
விபூதியாய் இட்டுக்கொள்வேன்!"
கவியரங்கம் முடிந்ததும் ஒரு முதுபெரும் தமிழ்ப்புலவர் வாலியிடம் "ஐயா.. இவ்வளவு அற்புதமாக் கவியரங்கத்துல பாடுற நீங்க, சினிமாலப் பாட்டுல மட்டும் வர்த்தக நோக்கோடு செயல்படற மாதிரித் தெரியுதே.." என்றாராம்.
அதற்கு வாலி,
"இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்;
அங்கே நான் விட்டெறியும்
எலும்புக்கு வாலாட்டும் நாய்"
எலும்புக்கு வாலாட்டும் நாய்"
என்றாராம்.ஆனால் திரைப்படங்களிலும் வாலியின் பாடல்கள் சோடை போகவில்லை என்பது நமக்குத் தெரியும்.
வாரியாரும் வந்திருந்த ஒரு விழாவில் எம் ஜி ஆரை வாலி வாழ்த்திக் கவி பாடியதும், பிறகு பேச எழுந்த வாரியார் சொன்னாராம்.
"பொன்மனச்செம்மலைப் பாராட்டி 'வாலியார்' சொன்னதை, இந்த வாரியார் அப்படியே வழிமொழிந்து வாழ்த்திப் பேசுகிறேன்"
==============================
லில்லி எல் ஆர் ஈஸ்வரி
நாலுகால் ஜீவனைப் பற்றி எல் ஆர் ஈஸ்வரி குரலில் ஒரு பாடல். நீண்ட நாட்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன் இந்தப் பாடலை. ஃ பேஸ்புக்கில் ஒரு நண்பர் கண்டெடுத்துக் கொடுத்தார்! நாலு கால் ஜீவனுக்கு
எத்தனை பெயர்கள்!
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே
மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த
மகளே
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
தென்குமரி யாயிடைநற் செங்கோல்கொள்
செல்வி
கானார்ந்த தேனே, கற்கண்டே, நற்கனியே
கண்ணே, கண்மணியே, அக்கட்புலம்சேர் தேவி
ஆயாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
அம்மே நின்
சீர்முழுதும்அறைதல்யார்க் கெளிதே?
என்று தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடலை இயற்றிய பெருமைக்கு உரியவர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை.
==============================
நிம்மதியான தூக்கத்துக்கு....
மனதை 'ரிலாக்ஸ்டாக' வைத்துக் கொள்வதுஅவசியம்!
நித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்லீப் மெடிசின் மருத்துவர் என்.ராமகிருஷ்ணன்:
"ஒரு சில ஒழுங்கு முறைகளை, தினப்படி வாழ்க்கையில் கடைபிடித்தாலே, துாக்கமின்மை பிரச்னையை எளிதாக சரி செய்து விடலாம்.
முதலில், தினமும் துாங்கப் போகும் நேரத்தையும், காலை எழுந்திருக்கும் நேரத்தையும் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, இரவு, 10:00 மணிக்குத் துாங்கி, காலை, 6:00 மணிக்கு எழுந்திருப்பது என்றால், முடிந்த அளவு தினமும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் துாங்கி எழ வேண்டியது முக்கியம்.
என்றைக்கோ ஒரு நாள் சினிமா, ரிசப்ஷன் என்று போனதால் நேரம் தவறி விட்டது எனில் பரவாயில்லை.இந்த முறையான பயிற்சிக்கு, 'துாக்க சுகாதாரம்' என்று சொல்வோம். எப்படி உடம்புக்கு சுற்றுப்புறச் சுகாதாரம் அவசியமோ, அப்படி ஒவ்வொருவருக்கும், 'ஸ்லீப் ஹைஜீனும்' அவசியம்.
அடுத்தது, துாங்கும் அறை; உங்களின் வசதிக்கு ஏற்ப படுக்கை, அறையின் வெப்பம், சுத்தம், வெளிச்சம் போன்றவை எப்படி இருந்தால் உங்களுக்கு சவுகரியமாய் இருக்குமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியது, இரண்டாவது விஷயம்.
அடுத்தது, நடைபயிற்சி; பொதுவாக எந்த நேரத்தில் நடந்தாலும், உடலுக்கு நல்லது தான் என்றாலும், இந்தத் துாக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், காலை வேளையில் நடப்பது நல்லது.துாக்கப் பிரச்னை இருப்பவர்களுக்கு காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், ஒரு நாளில், 2 - 3 கப் குடிக்கலாம் தவறில்லை; ஆனால், மாலை, 5:00 மணிக்கு மேல் இவர்கள் காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோலவே சிகரெட்டும். காலையில் குளித்தாலும், மாலை, 5 - 7 மணிக்குள், ஒரு முறை குளிப்பது, துாக்கமின்மையை தவிர்க்க உதவும்.
சாப்பிட்ட உடன் துாங்கப் போவது கண்டிப்பாகக் கூடாது. துாங்குவதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன், இரவு சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். துாங்குவதற்கு முன் வாழைப்பழம், இளஞ்சூடான பால் குடிக்கலாம்.
அலுவலகம் உட்பட உங்களின் அன்றாட வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த உடன், மீண்டும் அதையே பேசி, அலுவலகம் தொடர்பான வேலையை வீட்டிலும் தொடர்ந்து செய்தபடி இருக்கக் கூடாது; இது, ஒருவித மன இறுக்கத்தைத் தரும்.
புத்தகம் படிப்பது, இசை கேட்பது, 'டிவி' பார்ப்பது என, உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றைச் செய்யலாம். இதைவிட குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவது நல்லது.
எல்லாவற்றையும் விட முக்கியம், மனதை, 'ரிலாக்ஸ்டாக' வைத்துக் கொள்வது. இந்த முறைகளை தொடர்ந்து, இரு வாரம் பின்பற்றிய பின்னும் துாக்கமின்மையை துரத்த முடியாவிட்டால், கண்டிப்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனையைப் பெற வேண்டியது கட்டாயம்.
- தினமலர் - 'சொல்கிறார்கள்.
===============================================
படங்கள் : இணையத்திலிருந்து நன்றியுடன்!
லல்லி, லில்லி, ஜிம்மி, ஜிக்கி, லூசி, ரோசி, ராணி பாட்டுத்தானே! ப்பூ ஊ ஊ ஊ இதென்ன ஜுஜுபி, என்னைக் கேட்டால் கொடுத்திருப்பேனே!
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பின் தொடரப் போட மறந்துட்டேன், அதுக்காகவும், தூக்கம் வருவது எனக்கும் கொஞ்சம் சிரமமானதாக இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காகவும் இன்னொரு பின்னூட்டம்.
பதிலளிநீக்குஒன்பது மணிக்கே படுத்துடுவேன். அப்படியும் சில நாட்கள் தூங்கப் பனிரண்டு மணிக்கு மேலாகும். கொட்டுக் கொட்டுனு விழித்திருக்கும் நாட்களும் உண்டு! காலை வேளையில் முன்னெல்லாம் தூங்கலைனாக் கூடச் சீக்கிரமா எழுந்துடுவேன். இப்போல்லாம் முடியறதில்லை! :)
பதிலளிநீக்குஅனன்யா அபாரமாக நடித்து இருக்கிறார்.
பதிலளிநீக்குஆவி யின் குறும்படம் அதுவும்
க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் சூப்பர்.
ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
சுப்பு தாத்தா.
குறும்படத்தில் குரல் தந்ததறிந்து மகிழ்ச்சி. கதம்பம் அருமை. நன்றி.
பதிலளிநீக்கும்ம்ம்ம், குழந்தைங்க படிப்பிலே பெற்றோருக்கு இவ்வளவு அலட்டல் இருப்பதை அறிந்திருக்கிறேன். பிரின்சிக்கு நீங்க தான் குரல் கொடுத்திருக்கீங்களா? நல்லா இருக்கு குரல். பிரின்சியா நடிச்சிருக்கிறது யாரு?
பதிலளிநீக்குமுதல்லே வந்தப்போ இந்தக் குறும்படம் இல்லை! :)
பதிலளிநீக்குகுறும்படம் சிறப்பாக இருந்தது! சுவையான பல்சுவை செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஸ்ரீராம். ஆவீ படத்தில் உங்கள் குரல் நல்ல ப்ரின்சிபாலாக நடித்திருக்கிறது. நடித்தவரும் சூப்பராகச் செய்திருக்கிறார். அனன்யா
பதிலளிநீக்குடாப் க்ளாஸ். பட்டென்று சிரித்துவிடப்போகிறாரோ என்ற் முகபாவம்.
ஸஸ்பென்ஸ் பிரமாதம்...
ஜிம்மி ஜிக்கி பாட்டு ஏதோ ஜெமினி கே ஆர் விஜயா படம் தானே.
வாழ்த்துகள் ஸ்ரீராம்.
ஆஹா தூக்கம் மருந்தின் உதவியால் நடக்கிறது. படுத்து பத்தாபவது நிமிடம் தூக்கம். ஆறுமணி நேரத்தில் விழிப்பு.
பிறகு கொட் கொட் தான்.
படத்தில் குரல் கொடுத்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே... அடுத்து கதாபாத்திரத்தில் நடிக்க வாழ்த்துகள்.... கதம்பம் மணத்தது....
பதிலளிநீக்குஆவி மகிழ்வார் நிச்சயமாக...படத்திற்கு வந்த கருத்துகளைக் காணும் போது....தனி மனித முயற்சி நல்ல பலனை கொடுத்திருக்கின்றது....
பதிலளிநீக்குஉங்கள் குரல் நன்றாகவே செட் ஆகி இருக்கின்றது ஸ்ரீராம்...
இந்தப் பாட்டு கேட்டு ரொம்ப நாளாயிற்று பகிர்வுக்கு மிக்க நன்றி...
ஹிஹிஹி கவிதை நன்றாகவே உள்ளதே...!!!!!
வாலி சொல்லி இருப்பது சரிதான்.....உங்கள் அனுமதியுடன் இன்று எங்கள் பதிவில் அவருடைய வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றோம் ...மிக்க நன்றி.
கரந்தையார் மேற்கோள் பாடல் அருமையான பாடல் பள்ளியில் படித்திருக்கின்றோம்....
அந்தக் கதை மூவர் கதை கேட்டதுண்டு...நீங்கள் சொல்லி இருப்பது போல் வெவ்வேறு நாடுகள் சம்பந்தப்படுத்தி...
டிப்ஸ் அருமை...ஆனால், நிலம் முகர்ந்தால் கண் அயரும் பிரிவினர் நாங்கள் இருவருமே....
கீதா: பெரும்பான்மையான சமையங்களில், இடியே விழுந்தா கூட தெரியாது அந்த அளவு தூக்கம்....படுத்தால்..
நிச்சயமாக இரவில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தூக்கத்துக்குப் பயன்படும் என்பது ஒரு புறம். நாள் முழுதும் உழைத்த (அல்லது சோம்பிய) வியர்வையுடன் படுக்கையில் விழுவதைத் தவிர்த்தாலே எத்தனையோ கிருமி தொட்ட வியாதிகளையும் சங்கடங்களையும் தவிர்க்கலாம். ஏனோ இந்தியாவில் தூங்குமுன் குளிக்கும் பழக்கம் பரவக்காணோம்.
பதிலளிநீக்குஉங்கள் குரல் வில்லன் பாத்திரத்துக்கு எடுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அனைத்தும் சுவையே!
பதிலளிநீக்குஆகா.. தங்களின் குரலும் நன்றாகவே பொருந்தியுள்ளது!
பதிலளிநீக்குபல்சுவை யாவும் நிறைசுவை!
நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
த ம +
அனைவருக்கும் நன்றி..
பதிலளிநீக்குஅடடே!ஒரு பிரின்சிபால் பேசற மாதிரியே இருக்கேன்னு நெனச்சேன்.நீங்கதானா?!
பதிலளிநீக்குதஞ்சாவூர்க் கதம்பம்!
தூக்கத்தைப் பற்றி கவலைப்பட்டால் தூக்கம் போயிடும்.
பதிலளிநீக்குகுறும்படம் பார்த்தேன். அருமை. அனைத்து செய்திகளும் அருமை saar
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்களின் குரலா? மதிக்க முடியாது ஐயா.... அனைத்தும் சிறப்பு த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குறும்படத்திற்கான தலைப்பு, நேர்த்தியானது. ஆரம்ப காட்சிகள் வெகு இயல்பு. குழந்தை ஒன்றின் காட்சிப்படுத்தல் இல்லாமலேயே 'தலைவாரி பூச்சூட்டியதில்' குறும்படத்திற்கான இலக்கணம் மிளிர்ந்தது. வாழ்த்துக்கள், ஆவி! டி.வி.சீரியல்கள் பக்கம் பார்வை படியட்டும்!
பதிலளிநீக்குநேரில் பேசிக்கேட்பதற்கும், இங்கு கேட்டதற்கும் ஸ்ரீராமின் குரலில் வித்தியாசம் இல்லை. அவருக்குப் பழக்கப்பட்ட உச்சரிப்புகளின் முத்திரையும் படிந்திருந்தது, அவர் பேசிய இந்த நாலைந்து வரிகளிலேயே தெரிந்தது.
அனன்யா அவர்களின் இயல்பான நடிப்பு, படத்திற்கு மெருகூட்டியது.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
மற்றவற்றிக்கு தொடர்கிறேன்.
குரல் ஒ கே ,அடுத்து தலையும் காட்டலாமே:)
பதிலளிநீக்குநண்பர் ஆவி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது பள்ளிப் பருவ பாடலைமீண்டும் நினைவூட்டியிருக்கிறேன்
என்பதை அறியும் போது மனம் மகிழ்கின்றது நண்பரே
நன்றி
தம 11
குறும்படம் அருமை. குரல் கொடுத்த நீங்கள் அடுத்த படத்தில் தோன்றுவீர்கள் என நம்புகிறோம்:)!
பதிலளிநீக்குஇந்தப் பாட்டைதான் நானும் தேடிக் கொண்டே இருந்தேன்.. விவரம் இங்கே :)! பாட்டு என்னவோ லில்லி லல்லி என்றே தொடங்குகிறது. ஆனால் மனதில் பதிந்தது லல்லி லில்லி என்று. பாருங்க, கீதாம்மாவும் அப்படியே சொல்லியிருக்கிறார்.
சுவையான கதம்பம்!
குறும்படம் பார்த்து விட்டேன். கைவசம் டப்பிங் தொழில் உள்ளது வாழ்த்தக்கள் ஸ்ரீராம் சார்
பதிலளிநீக்குவாலி அற்புதக் கவிஞர்.
தொகுப்பு சிறப்பு
வலைத்தளத்தில் உங்கள் முகம் பார்க்காததாலும் பிரின்சிபாலின் முகம் சரிவரத் தெரியாததாலும் நடிப்பும் குரலும் உங்களுடையதுதானோ என்னும் சந்தேகம் எழுகிறது.அனன்யாவின் பெயர் குறிப்பிடப்பட்டதைப்போல் பிரின்சிபாலின் பெயர் ஏன் குறிப்பிடவில்லை./ குறும் படம் நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதலைவாரிப் பூச்சூடி பார்த்தேன், அருமை! உங்க குரல்தானா? பொருந்தியே இருந்தது. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவெளியிடாத கவிதையும் நல்லா இருக்கே!
ரசனை, வாலி பற்றிய பகிர்வு, கரந்தை கவியரசு அவர்களின் கவிதை , ரிலாக்ஸ் டிப்ஸ் எல்லாம் அசத்தல். பகிர்விற்கு நன்றி ஸ்ரீராம்
சாவித்திரியின் நடை அழகு இன்னும் குறும்படம் பார்க்கவில்லை வரும் வார இறுதியில் தான். இன்றைய கவிஞர்களுக்கு வாலி ஒரு பல்கலைக்கழகம்!
பதிலளிநீக்குபல்சுவைக் கதம்பம் ஒவ்வொன்றும் ரசனை. லல்லி பப்பி பாட்டை நானும் சமீபத்தில்தான் கேட்டுரசித்தேன். குறும்படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன். உருவாக்கியவர்களுக்கும் உறுதுணையாய் இருந்தவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅனன்யா நன்றாக (இயல்பாய்) நடித்து இருந்தார்.
பதிலளிநீக்குஉங்கள் குரல் இனிமை. வாழ்த்துக்கள்.
போனமாதம் நெட் பிரச்சனையால் இந்த குறும்படத்தைப் பார்க்க முடியவில்லை.
பல்சுவை அருமை.
பதிலளிநீக்கு