Monday, August 17, 2015

'திங்க'க்கிழமை 150817 : செம்பருத்தி சாப்பிடுங்கள், நலமாக இருங்கள்!

       

இதோ இருக்கிறார் திருவள்ளுவர். 
அல்லது 
தாகூர் 
அல்லது 
பாரதியார். 

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க...

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர...

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க...

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு...

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

-ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.
Link:

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை பயன்கள்...! தங்க பஸ்பமே தான்...

Geetha Sambasivam said...

அருமையான, பயனுள்ள பதிவு! இவை ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி. செம்பருத்தியைத் தேய்த்துத் தலைக்குக் குளித்தால் எந்த ஷாம்பூவிலும் கிடைக்காத மென்மையான சுத்தமான பட்டுப் போன்ற தலைமயிரைப் பார்க்க முடியும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! செம்பருத்தி மிக மிக நல்ல பயன்கள் கொண்ட பூ...பொடி வீட்டில் உண்டு....

நல்லதொரு பகிர்வு..

KILLERGEE Devakottai said...

பயனுள்ள தகவல் நன்று.

Thenammai Lakshmanan said...

அஹா நான் சிலசமயம் அப்படியே சாப்பிடுவேனாக்கும். :) ஸ்கூல்ல படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஆனா ஒண்ணு மட்டும்தான். .. இப்ப எல்லாம் ஃப்ளாட்டுல எங்க செடி இருக்கு.. ஹ்ம்ம்.

‘தளிர்’ சுரேஷ் said...

செம்பருத்தியின் மருத்துவப் பயன்கள் அறிந்தேன்! பகிர்வுக்கு நன்றி!

G.M Balasubramaniam said...

செம்பருத்தியின் இலைகள் பூக்கள் இவற்றை எண்ணையில் காய்ச்சி தலைக்கு உபயோகிப்பது கேட்டிருக்கிறேன்

காமாட்சி said...

எங்கள் ஊரில் உளுந்து அப்பளாத்திற்காக பிரண்டை அரைத்து உப்பு ஜலம் தயாரிப்பது வழக்கம். சிலஸமயம் செம்பருத்தி இலைகளையும் அரைத்துப் போட்டு காய்ச்சி வடிக்கட்டுவதுண்டு. புதிய செய்தியாகத் தோன்றுகிறதா? மெனோபாஸ் தொந்திரவிற்கு இலை சேர்த்த தண்ணீர் பருகுவது நல்லது என்பார்கள். பூ சேர்த்த தயிர்ப்பச்சடியும் நன்றக இருக்கும்ஷாம்பூ மாதிரி இலை உபயோகமாகும். சாயக்காய் அரைக்கும்போது காய்ந்த இலைகளை அதனுடன் சேர்ப்பதுண்டு. சீயக்காய்ப்பொடி என்றால் என்ன என்று கேட்கும் காலமிது. அன்புடன்

வலிப்போக்கன் - said...

தகவலுக்குநன்றி!!

வலிப்போக்கன் - said...

தகவலுக்குநன்றி!!

Mythily kasthuri rengan said...

அட! ஆமா இப்போ ஒரு முகம் தெரியுதே!! இனி நானும் தங்கபுஷ்பத்தை பயன்படுத்துவேன்:) நன்றி சகா!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

Ranjani Narayanan said...

ஒரு காலத்தில் தலைக்கு சீயக்காய் அரைக்கும்போது இந்தப் பூக்களையும் உலர வைத்து சேர்த்து அரைப்போம். இப்போல்லாம் மறந்தே போச்சு!
வைத்தியக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Very good post. eththanai sedikaL veettil irukkiRathu
enRu eNNa vaiththuvitteerkaL. vellai,sivappu,manjal
ellaa vaNNamum irunthathu. Ellorum nalam perattum. thanks Sriram.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெரிய பூக்களாகப் பூத்து வெட்டுக்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி.செம்பருத்தியில் இத்தனை பயன்களா? அருமை. பயனுள்ள பகிர்வு

வெங்கட் நாகராஜ் said...

இப்படி கட்டம் கட்டி காண்பித்தால் தான் தெரிகிறது! :)))

பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!