Saturday, August 8, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.

2)  அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மனிதர் சந்தீப் பேச்சே.

3)  நல்ல பெண்மணி.  மிக நல்ல பெண்மணி... தாயம்மாள்.
4)  வளரும் பயிர்.  
5)  அதிசய மனிதர் மிஸ்ரா.  உற்சாகத்தை இவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.  எல்லோருக்கும் சாத்தியமா என்ன!
6)  யாராவது வந்து பிடிப்பார்கள்,  யாராவது செய்வார்கள் என்று காத்திராமல், தங்கள் கையே தங்களுக்குதவி என்று தீவிரவாதியைப் பிடித்த உதம்பூர் கிராம மக்கள்.
7) கல்விச் சேவையை விட பெரிய சேவை உண்டா?  இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வைத்து, இலவச லைப்ரரி நடத்தி வரும், மாம்பலத்தை சேர்ந்த ஏ.ஐ.சேட்.

8)  முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் என்று ஆதரவற்ற நிலையில் இருக்கும் 70 பேருக்கு தினமும் தன் வீட்டில் வாழை இலை போட்டு மதிய உணவு பரிமாறி வருகிறார் திருச்சியை சேர்ந்த பாரதி. அவர்களை தன் அப்பா, அம்மாவாகவே கருதும் அவர், ‘இது அன்னதானம் அல்ல. ஒரு பிள்ளையின் கடமை’ என்று கூறி நெகிழ்கிறார்.


16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தையும் விட "சிறந்த முன்மாதிரி" தான் சிறப்பு...

KILLERGEE Devakottai said...

பாராட்டுக்குறிய உயர்ந்த மனங்கள்.

G.M Balasubramaniam said...

தீவிரவாதியைப் பிடித்த உதம்பூர் மக்கள் பற்றித் தொலைக்காட்சிகளில் செய்தி வந்ததா.?நான்தான் கவனிக்கவில்லையா?

Bagawanjee KA said...

முண்டாசு பாரதியைப் போன்றே மனதில் உயர்ந்து நிற்கிறார் திருச்சி பாரதியும் !

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துதல்களுக்குரிய உயர்ந்த உள்ள‌ங்கள்! அதுவும் தாயம்மாவை எப்படி பாராட்டுவது? தானத்திலேயே உயர்ந்தது அன்னதானம். அந்த உயர்ந்த தானத்தை செய்து வரும் திரு.பாரதிக்கு ஒரு பூங்கொத்து!

பழனி. கந்தசாமி said...

நல்ல அறிமுகங்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சந்தீப், தாயம்மா, லக்சனா ..மனிதத்தின் நம்பிக்கை வேர்கள்! தேடித் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
அனைவர்க்கும் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பாரதி அவர்களின் சேவை மகத்தானது. தினம் இப்படி செய்ய வேண்டும் என்றால் ! கடவுள் அருள் இருக்கிறது இவரிடம். வாழ்த்துக்கள் பாரதி அவர்களுக்கு.
கிரேஸ் சொல்வது போல் இந்த நம்பிக்கை வேர் ஆழமாக படர்ந்து விருட்சமாய் வளரட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
அனைத்தும் சிறப்பு த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

பாராட்டுக்குரியவர்கள். தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

அஜிஷ்! மலைக்க வைக்கிறார்...!!
சந்தீப் பேச்சே ..இப்படியும் ஒரு உயர்வான ஆட்டோக்காரர்...!! வாழ்க அவர்! தாயம்மா, லக்சனா மனிதம் காக்கிறார்கள்!

பாரதியின் சேவைக்குப் பாராட்டுகள்...

ஏஜேசேட்...அட! கல்விச் சேவை மகத்தானது....

உத்தம்பூர் கிராம மக்கள் சூப்பர்!!

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி -

சென்னை பித்தன் said...

இவை போன்ற செய்திகள் நமக்கு ஒரு பாசிடிவ் சக்தி தருகின்றன.நன்றி

Geetha Sambasivam said...

எல்லாத்தையும் ஒரு பார்வை தான் பார்த்தேன். படிக்கலை, ஆகவே நோ கருத்து!

ஞா. கலையரசி said...

கூடப்பிறந்தவர்களே சிறுநீரகம் தானம் கொடுக்க முன்வராத இக்காலத்தில் பேருந்தில் பழக்கமான ஒருவருக்குக் கல்லீரல் கொடுத்து உயிரைக் காக்க மிக உயர்ந்த உள்ளம் வேண்டும். எனக்கு தீவிரவாதியைப் பிடித்தது. அன்னதானம் போன்ற மற்றெல்லாச் செய்திகளை விடவும் இது தான் மனதை மிகவும் கவர்ந்தது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!