ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஞாயிறு 181104 : இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?நவம்பர் ஒன்று மற்றும் இரண்டு தேதிகளில் 'எங்கள் இல்ல விழா' என்று சொல்லி இருந்தேன்.  அது எங்கள் ஆசிரியர்களில் ஒருவரான திரு ராமன் அவர்களின் சதாபிஷேகம்.  நாட்டிய நங்கைகள் அக்னி ஆட்டத்தை ரசிப்பது போல இல்லை?


இது என்ன பூ என்று தெரியுமா?


நான் சொல்வதற்கு முன்னாலேயே தெரிந்தவர்கள் விடை சொல்லிவிடுவார்கள் என்று தெரியும்.


பூக்களே...  சற்று ஓய்வெடுங்கள்...


தண்ணீர்ப் பற்றாக்குறையால் வளர்ச்சிக்குறைந்த மாற்றுத் திறனாளி வாழைப்பழங்கள்!


இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?  என்ன ஜோக்கோ தெரியவில்லையே...  வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்...  முகம் தெரியாவிட்டாலும் முசுப்பாத்தி என்று தெரிகிறதே....!


அழகாக அடுக்கி வைக்கப்பட்டு...


இரட்டையரில் ஒருவர் இங்கே விளையாட....


இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார்....!

இதோ...   முடிச்சுட்டேன்......

127 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்!
  கீதா

  பதிலளிநீக்கு
 2. கேஜிவொய் மாமாவுக்கு நமஸ்காரங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. குழந்தை செம க்யூட்!!! கமென்ட் பொருத்தம்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 5. சதாபிஷேகம் காணும் பெரியோர்களுக்கு நமஸ்காரங்கள்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 6. அந்த சின்ன வேஷ்டி -
  வருங்கால வலைப்பதிவு ஆசிரியரோ!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா. ஹைFive துரை அண்ணா...நானும் இதைச் சொல்ல நினைத்து அப்பால் காப்பி ஆத்த போய்ட்டேன்.. அதே அதே...பாருங்க ரெட்டையர்.... என்ன அழகு....நாளைய/எதிர்கால எங்கள் பிளாக் ..என்றும் சொல்லவந்தேன் ....சொத்து எதற்கு...இப்படி எழுத்துகள் நல்ல சிந்தனைகள் அடுத்த தலைமுறைகளுக்குச் சென்றாலே மிகக் பெரிய சொத்து..

   கீதா

   நீக்கு
  2. எதிர்காலத் தலைமுறை இதைவிட சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் கீதா.

   நீக்கு
  3. யெஸ் கண்டிப்பாக ஸ்ரீராம்...எனக்கும் அப்படியான எண்ணம், நம்பிக்கை உண்டு..

   கீதா

   நீக்கு
 7. பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்காது போலிருக்கிறது. எங்க போனாலும் ஞாயிறு பதிவு நினைப்பா? பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்களை நண்பராக்கிக்கொண்டால் எதையும் பத்திரிகைச் செய்தி ஆக்கலாமா என்றே தோன்றும்.

  குழந்தைகள் படங்கள் அருமை. முதல் படம் செம கிளாரிட்டி

  கே ஜி யக்ஞராமன் சார் (முகம் தெரியாமல் என் முதல் கதையில் அவர் பெயர் உபயோகித்தேன்) அவர்களுக்கு வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஶ்ரீராமும் ஒருநாள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். அதுவரை நாங்கள் அனுக்காவுக்கு ஏற்ற உயரம் வயதில் ஒருவரைக் கற்பனை செய்து வைத்திருக்க வேண்டியதுதான். ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராமும் ஒருநாள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். அதுவரை நாங்கள் அனுக்காவுக்கு ஏற்ற உயரம் வயதில் ஒருவரைக் கற்பனை செய்து வைத்திருக்க வேண்டியதுதான். ஹா ஹா ஹா//

   நெல்லை இப்பூடி எல்லாம் நம்ம ஸ்ரீராமை உசுப்பேத்தக் கூடாதாக்கும்....அப்படினா முதல்ல உங்க படத்தை வெளியிடுங்கோ இங்க எபி ல....சொல்லிப் புட்டேன்..

   அது சரி தமனாக்காவும் உசரமாக்கும் ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஸ்ரீராம் இதற்கெல்லாம் அசர மாட்டார் நெல்லை....கற்பனை நல்லதே! வித விதமா கற்பனை வளர்ந்தால் எபிக்கு நிறைய கதைகள், கருத்தில் கலாய்த்தல்கள் வரும்.....ஸோ மக்களே நிறைய வித விதமா கற்பனை காணுங்கள் நு சொல்லிடுவார்...ஹா ஹா ஹா ஸோ

   கீதா

   நீக்கு
  3. வாங்க நெல்லை... முதல் பாராவின் காரணம் அபுரி!

   நீக்கு
  4. சரியாச் சொன்னீங்க கீதா... நாங்கள்லாம் உசுப்பேறிடுவோமாக்கும்..!!

   நீக்கு
  5. ஸ்ரீராம் - எங்க போனாலும், டக்கென படம் எடுத்துவைத்துக்கொள்ளத் தோன்றும். எது வித்தியாசமா நடந்தாலும், இருந்தாலும் உடனே படம் எடுத்துடுவீங்க (ன்னு நினைக்கறேன்) எதுக்கானும் பதிவுக்கு உபயோகம் ஆகும் என்று. (சினிமா கதையாசிரியர்கள், யாரேனும் நண்பர் அவங்க வீட்டுல நடந்த நிகழ்வைச் சொன்னா, இதை எப்படி மாற்றி சினிமாக் காட்சியில் புகுத்தலாம் என்று யோசிப்பதுபோல).

   பெரும்பாலும் பதிவர்களும் அப்படித்தானோ?

   படங்கள் செலெக்‌ஷன் அருமை. வா.பழம் மடிக் கணிணியில் இன்னும் நன்றாகத் தெரிந்தது.

   நீக்கு
  6. தில்லையகத்து கீதா ரங்கன் - //முதல்ல உங்க படத்தை வெளியிடுங்கோ இங்க எபி ல...// - நான் படத்தை அனுப்பினேன். ஸ்ரீராம், அதையெல்லாம் வெளியிடமுடியாது, வெளியிட்டு படிக்கறவங்களை பயமுறுத்த முடியாது. உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருந்த கற்பனைக்கும் ஒரிஜினல் படத்துக்கும் சம்பந்தமேயில்லை அப்படீன்னுட்டார்.

   நீக்கு
  7. உண்மைதான் நெல்லை. அதற்கு அந்த மொபைல் மந்திரம் உதாரணம்! சில படங்கள் கவிதை போன்ற வடிவத்தை எழுதத்தூண்டும். சில கதை எழுதத்தூண்டும். சில இப்படி வெளியிடத் தோன்றும்.

   நீக்கு
  8. //அதையெல்லாம் வெளியிடமுடியாது, வெளியிட்டு படிக்கறவங்களை பயமுறுத்த முடியாது. உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருந்த கற்பனைக்கும் ஒரிஜினல் படத்துக்கும் சம்பந்தமேயில்லை அப்படீன்னுட்டார். //

   ஹா... ஹா... ஹா.. இதுவரை நெல்லை தன் படங்கள் எதுவும் அனுப்பி வைக்கவில்லை என்பதே உண்மை!

   நீக்கு
  9. ஹா... ஹா... ஹா.. இதுவரை நெல்லை தன் படங்கள் எதுவும் அனுப்பி வைக்கவில்லை என்பதே உண்மை!//

   ஸ்ரீராம் அது நல்லாவே தெரியும்...அவர் அனுப்பமாட்டார்னு....சும்மானாலும் உங்களை கலாய்க்கிறார்னு தெரிஞ்சுச்சு..

   நெல்லை நானும் போகும் இடங்களில் ஃபோட்டோ அனுமதி என்றால் வித்தியாசமா இருந்தாலும் சரி, அழகா இருப்பது என்று எடுத்து தள்ளிடுவேன்....இப்ப காமெரா இன்னும் சரியாகலை....மொபைலில் எடுத்திருக்கேன் இருந்தாலும் திருப்தியாக இல்லை...அதனாலேயே வெளியிடாமல் இருக்கேன்....

   கீதா

   நீக்கு
  10. அமைதி.. அமைதி.. நெல்லைத்தமிழன் வேர்க் பண்ணிய பாறைன் ஒபிஸில் எனக்கொருவர் ஃபிரெண்டாகி இருக்கிறார்:) அவரிடமிருந்து படம் எடுத்து விரைவில போடுறேன்ன்:) அப்போ கவனிப்போம் தமனாக்கா ஜோடிப்பொருத்தம் எப்பூடி என:) ஹா ஹா ஹா.

   நீக்கு
 8. படங்கள் அருமை. அப்பப்ப நானும் அட்டண்டன்ஸ் குடுக்க வந்துடறேன்.

  பதிலளிநீக்கு
 9. முதல் படத்தில் இருக்கும் மணமக்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது . குழந்தைகள் மனதை கவர்கிறார்கள்.
  குடும்பவிழாக்கள் சொந்தங்கள் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும், வாய்விட்டு சிரிப்பது மேலும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 10. முதலில்: கேஜிஒய் தம்பதி நிறைந்த ஆரோக்யத்துடன் நெடிது வாழ மேலிருக்கும் விஷ்ணுவும், சிவபார்வதியும் அருள் புரியட்டும்.

  மணப்பெண்ணின் நீலப்பட்டுப்புடவைக்குப் பொருத்தமாக நீலக்கரைபோட்ட வேஷ்டி வாங்கியிருக்கலாமோ மாப்பிள்ளைக்கு?

  கேஜிஒய் சார் என்ன சிந்தனையிலிருக்கிறார்? எம்பதா? எனக்கா? அதுக்குள்ளயா? - என்றா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீலக்கரை போட்ட வேஷ்டி? கிடைத்தால் வாங்கி இருக்கலாம்..ஆனால் நேரில் பார்க்கும் நிறம் புகைப்படத்தில் வருவதில்லை ஏகாந்தன் ஸார். இதில் கூட அப்படிதான்.

   நன்றி ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 11. திரு & திருமதி ராமன் தம்பதியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

  படங்கள் யாவும் அருமை.

  இரட்டையர்கள் அழகு.

  மகிழ்ச்சிகரமான நிகழ்வு.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அனைத்தும் அழகு....

  சதாபிஷேகம் கண்ட தம்பதியருக்கு எனது நமஸ்காரங்கள்....

  மகிழ்ச்சி என்றும் எங்கும் நிலைத்திருக்கட்டும்....

  பதிலளிநீக்கு
 13. சதாபிஷேகம் தம்பதியினருக்கு எமது நமஸ்காரங்களும்...

  மாற்றுத்திறனாளி பழம் ஹா.. ஹா.. ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
 14. மாற்றுத் திறனாளி பழம் செம!!! ஹா ஹா ஹா...மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம் இதற்கான உங்க தலைப்பை....அழகான கற்பனை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா. ஆனால் ஏஞ்சல் தந்து எதிர்ப்பைப் பதிவு செஞ்சிருக்காங்க..!

   நீக்கு
 15. ஆமாம் நர்த்தன நங்கைகள் நடனமாடுவது போன்ற தோற்றம் தெரிகிறது அதே போன்று அக்னியும் தலையில் மகுடம் சூட்டிக் கொண்டு சினிமாவில் வரும் தேவதைகள் வெள்ளை உடையில் உடை சிறகு போல விரித்து நீண்ட பாவாடை தரையில் புரள டான்ஸ் ஆடுவது போல எனக்குத் தெரியுது ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீராம் அந்தப் பூ இன்சுலின் செடிப் பூ/ இன்சுலின் செடி....எங்கள் வீட்டில் இருக்கிறது....

  உங்க படம் இன்னும் ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ இதை இப்போதான் பார்க்கிறேன்.. அப்போ ரெண்டு விடையும் கரீட்டாச் சொன்ன கீதாவுக்குப் பரிசுண்டோ?:)

   நீக்கு
  2. யெஸ்...

   கண்டிப்பா உண்டு.

   நூறு பாயிண்ட்ஸ்...

   நீக்கு
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ஜொன்னனே நீங்க ரொம்பவும்தான் ஷார்ப்பாகிட்டீங்க:) எங்களோடு சண்டை போட்டுப் போட்டு:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
 17. பிஸ்தா பருப்பை முழுசோ அல்லது அதன் தோல் கெட்டியா இருக்கும் பிரித்ததும் அதைக் கவிழ்த்தி வைச்சுருக்குனு நினைக்கிறேன். நான் அந்த ஓட்டைக் கலெக்ட் செய்து வைத்து நிறைய கைவேலை செய்திருக்கேன் முன்பு....இப்படி பூவிற்கும் பயன்படுத்தி கைவேலை...

  படம் அழகு..

  கீதா

  பதிலளிநீக்கு
 18. கனகாம்பரம்தானே அது என்ன அழகு கலர்!

  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்// ஏன் ஸ்ரீராம் இந்தத் தலைப்பு?

  காத்துல ஆடாம அசையாம நில்லுங்க அப்பத்தான் நான் ஃபோட்டோ எடுத்துப் போடமுடியும்னு சொல்றீங்களோ!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு பாடல் கீதா. அதற்கான அடுத்த வரியை ஜி எம் பி ஸார் சொல்லி இருப்பது ஆச்சர்யம்!

   நீக்கு
 19. குழந்தைகள் படம் மிக அழகு. அக்னியில்தான் எவ்வளவு அழகிய கற்பனை உருவங்கள். படங்கள் எல்லாமே அழகு. ஸதபிஷேகம் கண்ட தம்பதியருக்கு வாழ்த்துகள். ஆசிகளிக்கவும் வயதுள்ளது. ஆதலால் மனப்பூர்வமான எங்களின் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி காமாட்சி அம்மா. ஆமாம், இங்கே ஆசி சொல்லும் வயது உங்களுக்குதான் இருக்கிறது. நன்றி அம்மா.

   நீக்கு
 20. சதாபிஷேக தம்பதிகளுக்கு என் நமஸ்காரங்கள். பிஸ்தா பருப்பின் தோல் பச்சையும் ப்ரௌனும் கலந்த நிறத்தில் அல்லவோ இருக்கும்! இது ஊற வைத்து தோல் உறிக்கப்பட்ட பாதாம் பருப்பு போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. அப்படிச் சிரித்து நாளாயிற்றா ஸ்ரீராம்?!!!! நோ நோ !! நீங்க அப்படி எல்லாம் சொல்லப்படாது!! அப்புறம் எபிக்கு என்ன மவுசு?!!!!!

  எபி கமென்ட்ஸ் பல சமயங்கள்ல செமையா சிரிக்க வைக்குமே!! அதுவும் ரொம்ப நேரம் சிரிக்க வைக்குமே...

  இங்க இந்தக் கலாய்த்தல்தானே எனர்ஜி ஸ்ரீராம்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா... நான் ரொம்ப சீரியஸா தலைப்புப் போடறதா நினச்சுக்கிட்டிருக்கேன்... அதெல்லாம் படிச்சா சிரிப்பு வருதா? அச்சச்சோ...

   நீக்கு
 22. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள் ( யாரந்த அவள்) புரியாத சில வற்றை வெளியிடலாம் ஆனால் புரிய வைக்கவும்வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி எம் பி ஸார்...எதைப் புரியவைக்க வேண்டும்? பூ, இன்னொரு படம் என்னவென்று கீதா பானு அக்கா முதலானோர் விடை சொல்லி விட்டார்களே...

   நீக்கு
 23. சதாபிகேஷ தம்பதிகளுக்கு நமஸ்காரங்கள் .
  ராமன் சாரின் பாஸ்போர்ட் புகைப்படத்தை சீதை ராமனை மன்னித்தாள் கதை வரிசையில் பார்த்திருக்கிறேன் :)
  மைக்ரோ கதைஎழுதி இருந்தார் ரெண்டு வரியிலும் அட்டகாசமா :)

  மற்றவற்றிற்கு சர்ச் போயிட்டு அப்புறம் வரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல்... வாங்க, நன்றி. உங்களுக்கு அபார ஞாபக சக்தி. சரியாய்ச் சொன்னீர்ககள்.

   நீக்கு
 24. நீர் தராமல் மனிதரால் வளர்ச்சி சிதைக்கப்பட்ட வாழைப்பழங்கள் ...மாற்று திறனாளி என்பதை வாசிக்க கஷ்டமா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாசிக்க கஷ்டமா இருக்கு//

   அப்படியா? ஃபான்ட் சரியில்லையா? நிறம் சரி இல்லையா?!!!

   ஹிஹிஹி... சமாளிக்கிறேனாம்...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எதுக்குக் கவலைப்படுவது எதுக்குக் கவலைப்படக்கூடா என்றே அஞ்சுக்குப் புரிவதில்லை:).. இப்போ அதிராவுக்குக் கால்ல அடி பட்டு விட்டதென்றால் விழுந்து விழுந்து சிரிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ சேர்ஜ் முடிஞ்சு வரமுன் கிழிச்சு, மொட்டை மாடியில வீசிடுங்கோ ஸ்ரீராம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

   நீக்கு
  3. @ மியாவ் நான் 6 ஐ விட 5 ,4,3 க்கே அதிகம் அழுவேன்

   நீக்கு
  4. @anju

   https://img.buzzfeed.com/buzzfeed-static/static/2016-08/17/18/campaign_images/buzzfeed-prod-fastlane02/18-cats-who-are-just-as-surprised-as-you-are-2-22294-1471473397-0_dblbig.jpg

   நீக்கு
  5. shhhh miyaw :)

   naan paattu kekkiren :)

   https://www.youtube.com/watch?v=8PTcEmJBlZ0

   நீக்கு
 25. சதாபிசேகம் என்றால் என்ன? சதா என்றால் 100 என வரும்.. எனத் தெரியும்.. இது என்ன எனப் புரியவில்லை.. அவர்கள் என்றென்றும் நலமாக இருக்க மனதார வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 80 வயது பூர்த்தியை சதாபிஷேகம் என்று சொல்வார்கள் அதிரா.

   நீக்கு
  2. ஞானி அதிரா - சதா என்பதற்கு 100 என்று அர்த்தம் இல்லை. சதா என்ற பெயரில் ஒரு நடிகை இருந்ததுதான் எனக்கு ஞாபகம் (விக்ரம் உடன் நடித்து கடைசியில் வடிவேலுவுடன் எலி படத்தில் ஜோடியாக நடித்தார்).

   சதம் என்பது 100. சதாபிஷேகம் என்பது 80 வயதுக்குமேல் ஆகி, கொண்டாடும் ஒரு விழா. ஆயிரம் பிறை கண்டவர் என்பதால், அவர் பூஜிக்கத் தகுந்தவராகிறார். 100 வயது ஆனால், பூர்ணாபிஷேகம் கொண்டாடுவார்கள் (60-சஷ்டி அப்த பூர்த்தி, அதனால் சதாபிஷேகம் என்றவுடன் உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. 60 வயது பூர்த்தி என்று அர்த்தம் சஷ்டி அப்த பூர்த்திக்கு)

   நீக்கு
  3. பிறந்ததிலே இருந்து கணக்குப் போட்டு ஆயிரம் பிறை கண்டவர்களுக்கு சதாபிஷேகம் செய்வார்கள். பார்க்கப் போனால் இது 81 அல்லது 83 வயசுல தான் வரும்னு என் அப்பா சொல்லுவார். ஆனால் இப்போல்லாம் 80 வயசு ஆனாலே சதாபிஷேகம்னு பண்ணறாங்க!

   நீக்கு
  4. நெ.த.., கீசாக்கா.

   //சதா என்ற பெயரில் ஒரு நடிகை இருந்ததுதான் எனக்கு ஞாபகம் (விக்ரம் உடன் நடித்து கடைசியில் வடிவேலுவுடன் எலி படத்தில் ஜோடியாக நடித்தார்).//

   இதெல்லாம் கரீட்டா ஞாபகம் இருக்குதே:) ஹா ஹா ஹா..

   60 ஆம் கல்யாணம் தெரியும்.. 80 இப்போதான் கேள்விப்படுறேன்.. 25 வெள்ளி.. 50 பொன், 60 வைரம்.. இப்படித்தானே சொல்வாங்க.

   ஓ 80 வருடம் எனில் 1000 பிறை பார்த்திடலாமோ...

   எனக்கந்தப் பாடல் ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்..

   https://www.youtube.com/watch?v=j1JZugklXNo

   காவியம் போலே வாழ்ந்திருப்போம்.. ஆயிரம் நிலவுகள் பார்த்திருப்போம்... அப்போ நாங்க எல்லாம் 1000 நிலவு பார்க்க இன்னும் எவ்ளோ காலம் இருக்குதூஊஊஊஊ:) ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. சிவபெருமானின் தலையில கங்கையைக் காணமோ?:) கங்கை குறுக்கே வந்தது ஆஃப்டர் மரீஜ் ஆ?:) ஹா ஹா ஹா ஹையொ அடிக்கப்போகினமே நேக்கு:). டவுட்ஸ் கேட்பது ஒரு டப்பா?:))..

   நீக்கு
  6. //காவியம் போலே வாழ்ந்திருப்போம்.. ஆயிரம் நிலவுகள் பார்த்திருப்போம்... //

   எனக்கும் மி........கவும் பிடித்த பாடல் அதிரா.

   நீக்கு
 26. பின்னால் இருக்கும் சிலை உருவங்கள்.. ராமர் லட்சுமணர் சீதையோ? அவர்களுக்கு 4 கைகளா இருந்துதாம் அவ்வ்வ்வ்வ்.. ரெண்டை கை வச்சே பெரும்பாடா இருக்கும் இக்காலத்தில நமக்கு 4 இருந்திருந்தால் ஹா ஹா ஹா.. அஞ்சு எல்லாம் 4 புளொக் ஓபின் பண்ணியிருப்பா:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களும் பிளாக் ஓபன் பண்ணனுமா? அவர்கள் ஓபன் பண்ணிய பிளாக்குகள்தானே நாம்..

   ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..... எப்படி யோசிக்கிறேன்?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா வரவர நீங்க யோசிப்பதில் ஷார்ப்பாகிட்டே வர்றீங்க ஸ்ரீராம்ம்:)

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க... நீங்க என்னைவிட ஷார்ப்!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஆனா ஒண்டு ஸ்ரீராம்.. இதெல்லாம் நெதமிழன் கீதா அஞ்சுவுக்குப் புரியாது பிக்கோஸ் அவங்க இன்னும் சார்ப்பாகல்ல:) ஹா ஹா ஹா கூட்டமாக் கலைக்கினமே.. மீ இப்போ என்ன பண்ணுவேன்ன்ன்:))

   நீக்கு
  5. //சிலை உருவங்கள்.. ராமர் லட்சுமணர் சீதையோ? // - தப்பிச்சீங்க இங்க எழுதியதால். பொதுவா இந்த மாதிரி ஏடாகூடமாக உங்கள் பிளாக்குலதானே எழுதுவீங்க. விஷ்ணு (திருமால்), பார்வதி, சிவன். திருமால், பார்வதியை சிவனுக்கு மணமுடித்துக்கொடுக்கிறார்.

   இதெல்லாம் முதல்ல எனக்கும் புரியலை. இப்போ போய் மூளையை ஷார்ப்பாக்கிட்டு வந்தேன்

   நீக்கு
  6. பின்னால் இருப்பது மீனாக்ஷி கல்யாணச் சிற்பங்கள். அதிலே தான் விஷ்ணு தாரை வார்த்துக் கொடுப்பார்!

   நீக்கு
  7. மீனாக்ஷி தான் பச்சை நிறத்திலும் இருப்பாள்.

   நீக்கு
  8. நெ.தமிழன்.. கீசாக்கா...
   //விஷ்ணு (திருமால்), பார்வதி, சிவன். திருமால், பார்வதியை சிவனுக்கு மணமுடித்துக்கொடுக்கிறார்.
   //
   ஹா ஹா ஹா ஹையோ அப்பூடியா.. இதெல்லாம் எப்பூடி கரெக்ட்டா உங்களுக்குத் தெரியுது:) ஏதோ அந்த மண்டபத்தில இருந்து கல்யாணவீட்டைப் பார்த்ததுபோலவேஏஏஏஏஏஏஏஏஏஏ சொல்றாங்க:))..

   கீசாக்கா சீதையையும் பச்சையாகத்தானே காட்டுவாங்க.. ராமர் நீலம்.

   ஆனா அப்போ சிவனுக்கும் விஸ்ணுவுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசோ?.. பார்க்க அபடித்தானே தெரியுது, அதனாலதான் ராம லஸ்மணர் என நினைச்சேனாக்கும்:))

   //இதெல்லாம் முதல்ல எனக்கும் புரியலை. இப்போ போய் மூளையை ஷார்ப்பாக்கிட்டு வந்தேன்///

   ஆஆஆஆ ஸ்ரீராம் ஓடிக் கமோன்ன் புகை வருதூஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா.. இல்ல நெ.தமிழன் நீங்க ஓல்ரெடி/ஆல்ரெடி ஷார்ப்புத்தேன்ன்ன்:))

   நீக்கு
  9. எல்லோருமே ஷார்ப்தான் என்று தெரிகிறது. சும்மா குத்திக் குத்தி காமிக்காதீங்க!!!

   நீக்கு
  10. //ஹா ஹா ஹா ஆனா ஒண்டு ஸ்ரீராம்.. இதெல்லாம் நெதமிழன் கீதா அஞ்சுவுக்குப் புரியாது பிக்கோஸ் அவங்க இன்னும் சார்ப்பாகல்ல:)//
   That's because we are in mid 20 s and you guy's are over 60 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

   நீக்கு
 27. //நாட்டிய நங்கைகள் அக்னி ஆட்டத்தை ரசிப்பது போல இல்லை?//

  என்னமோ சொல்ல வாறீங்க ஸ்ரீராம்.. :)... எனக்குத்தான் புரியல்ல:).

  அந்தப் பூ, மஞ்சளில் பிரவுண் கோடுகளைப் பார்த்தால் இலைகளையும் பார்த்தால் மணிவாழைப்பூப்போல இருக்கு, ஆனா மணிவாழையில் இப்படிக் கொத்தாக பூ வராது..

  கனகாம்பரப் பூக்கள் அழகு. அண்ணன் தங்கள் வீட்டுக் கனகாம்பரம் படம் அடுக்கியிருந்தார் நான் அப்பூடியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்.. எக்ஸ்சோரா போல கொத்துக் கொத்தாக இலையை மறைத்து ஒரே பூக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலசங்களை பார்த்தால் நாட்டிய நங்கைகள்போல இருக்கிறது. ஹோம அக்னி ஆடும் கலைஞர் மாதிரி இருக்கிறது என்று சொல்ல வந்தோம் யாம்...

   அந்தப் பூ மலைவாழை இல்லை. இன்சுலின் பூ.

   நீக்கு
  2. //என்று சொல்ல வந்தோம் யாம்..//

   ஹா ஹா ஹா.

   ஓ நீங்க மலைவாழை என்பீங்களோ.. மலை என்பது பேச்சு வழக்கில் மருவி.. மணி வாழை ஆச்சுதுபோல எங்கள் ஊரில்..:) இன்சுலின் பூ.. கேள்விப்பட்டதே இல்லையே.. எதுக்கு அப்படி ஒரு காரணப் பெயரோ..

   நீக்கு
  3. மணிவாழை என்று ரைப் அடித்தால் முதல் வாய்ப்பு மலைவாழை என்று கூகிள் டிரான்ஸ்லிட்டரேஷன் கொடுத்து விட்டது. அது என் குற்றமல்ல!!!!

   :)))

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஓ அப்போ அது மணி வாழைதானா? இனி நான் தமிழ் நாட்டுத்தமிழை நம்ப மாட்டேனாக்கும்:)).. தமிழ் நாட்டில்தான் சரியான தமிழ் இருக்கும் என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா.

   ஏன் ஸ்ரீராம், புளொக் எழுதும் நீங்க இன்னும் கூகிளையே நம்பி இருக்கிறீங்க.. அது எவ்ளோ கஸ்டம்.. கொப்பி பேஸ்ட் பண்ண.. nhm writer டவுன்லோட் பண்ணிடுங்கோ.. கடகட எனக் கொமெண்ட்ஸ் போட்டிடலாமே..

   நீக்கு
  5. nhm writer டவுன்லோட் பண்ணி வச்சிருந்தேன். நடுவில் காணாமல் போனபிறகு கூகிள் வைத்தே ரைப் செய்கிறேன்!! (இன்னமும் இந்த வார்த்தையை கவனிக்கவில்லை நீங்கள்!)

   நீக்கு
  6. //ரைப் செய்கிறேன்!///

   ஆவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா.. அது என்னவெனில் நான் பேசுவதைப்போலவே பேசும்போது வித்தியாசம் புரிவதில்லை:) கொஞ்சம் கிட்னி வேர்க் பண்ணினால் தான் கண்டு பிடிக்குது:)).. நெல்லைத்தமிழன் இப்போ பிசிபோல, இல்லை எனில் அவர் கண்ணுக்குத்தான் இது பக்குப் பக்கெனத் தெரியும்:))

   நீக்கு
  7. அப்பாடி... நீங்க ஷார்ப் என்பதால் கண்டு பிடிச்சுட்டீங்க அதிரா... நன்றி!

   நீக்கு
 28. //தண்ணீர்ப் பற்றாக்குறையால் வளர்ச்சிக்குறைந்த மாற்றுத் திறனாளி வாழைப்பழங்கள்!//

  அப்பூடியா சொல்றீங்க? ஆனா ஊரிலே இப்படித்தான் கதலி வாழைப்பழங்களின் வளர்ச்சி இருக்கும்.. குட்டிக் குட்டியாக.. சுவையாகவும் இருக்கும்.. ஒரு குலை வாங்கி வைத்தால் கடகட என முடிஞ்சிடும்.

  //முகம் தெரியாவிட்டாலும் முசுப்பாத்தி என்று தெரிகிறதே....!///

  ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கும் முசுப்பாத்தி நல்லாவே வருது:)).. நீங்களும் இப்போ பாதி ஸ்ரீலங்கனாக மாறி வாறீங்க:)) ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், கதலி வாழைப்பழங்கள் கூட இப்படிதான் இருக்கும்...

   முகம் தெரியா விட்டாலும் ஏதோ முசுப்பாத்தி என்று தெரிகிறதே என்று ரைப் அடித்தேன். இப்போ பார்த்தால் 'ஏதோ'வைக் காணோம்! ஹா... ஹா... ஹா...

   நீக்கு
  2. ஏதோ.. போடாவிட்டாலும் பொருள் குற்றம் ஏற்படவில்லை வசனத்தில்:).. நேக்கு டமில்ல டி எல்லோ:) குற்றம் இருந்திருப்பின் கண்டு பிடிச்சுச் சொல்லி இருப்பேன்:). ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. பொருள் குற்றம் இல்லை என்றால் சரிதான். எனக்கு குறையாகி விட்டது!

   நீக்கு
  4. //நேக்கு டமில்ல டி எல்லோ:) குற்றம் இருந்திருப்பின் கண்டு பிடிச்சுச் சொல்லி இருப்பேன்:). // - அதிரா..இதைப் படித்தவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வந்துவிட்டது. தீபம், அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும், ஆனால் அதன் கீழ் நிழலின் இருள் படிந்திருக்கும். டமில்ல டி எடுத்தவங்க, மற்றவங்க செய்கிற பிழையைக் கண்டுபிடித்துவிட்டு, இஷ்டப்படி, இராமாயணம், மகாபாரதம், கடவுளர்கள் எல்லாவற்றையும் கலந்துகட்டி எழுதுவாங்க. ஹாஹாஹா

   நீக்கு
  5. நெ.தமிழன்
   //தீபம், அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும், ஆனால் அதன் கீழ் நிழலின் இருள் படிந்திருக்கும். டமில்ல டி எடுத்தவங்க,//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு அழகிய உவமானம்:))

   நீக்கு
  6. // தீபம், அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும், ஆனால் அதன் கீழ் நிழலின் இருள் படிந்திருக்கும்//

   நல்ல அவதானிப்பு. ரசித்தேன்.

   நீக்கு
 29. //அழகாக அடுக்கி வைக்கப்பட்டு...//

  ஆரம்பம் எனக்குப் புரியவில்லை, பின்பு கீதாவின் கொமெண்டை ஓரக்கண்ணால கொப்பி அடிச்சேன்ன்.. அதுதான் கரீட்டு .. சட்டை போடாத அல்மண்ட்:)..

  ஆவ்வ்வ்வ் இரட்டைக் குட்டிகள் அழகோ அழகு.. தலைமயிரை நல்ல ஸ்டைல் கட்டாக நீட்டாக வெட்டி விட்டால்ல் குட்டி ஹீரோக்கள்.. ஆனா ஏன் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான உடைகள் போட்டிருக்கிறார்கள்.

  எனக்கு இரட்டைக் குழந்தைகள் ரொம்ம்ம்ம்ம்ம்ப விருப்பம்.. பிறக்குமா என எதிர்பார்த்தேன் நடக்கலியே ஹா ஹா ஹா:).. நான் எனில் அப்படியே அனைத்தும் ஒரே மாதிரியே போட்டு விடுவேன்.

  ஒன்று சொல்லோணும், ஸ்கொட்டிஸ் இல் டுவின்ஸ் அதிகம்.. பெரும்பாலில் ஒரு ஸ்கூலில் பல இரட்டைகளைக் காணலாம்.. எதனால அப்படி எனத் தெரியவில்லை...

  இன்றைய போஸ்ட் ஐ நெல்லைத்தமிழன் எதிர்பார்க்கும் வியாழன் கதம்பம் போலாக்கி இருக்கிறீங்க:).. ஆனா அவர் இதுக்கு ஒண்ணும் அப்படி சொன்னதாக தெரியல்லியே:)).. வியாழக்கிழமை மாத்திப் போட்டீங்க என சென்னையில துள்ளியது ஸ்கொட்லாந்து மலையில எதிரொலிச்சுது:)).. ஆனா இண்டைக்கு ஒண்ணும் ஜொள்ளலியே :) ஹையோ என் வாய் எனக்கே அடங்காதாமே:) இருட்டடி கிடைக்கும்வரை ஓயாது போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் ஒரே மாதிரிதான் ட்ரெஸ் போட்டிருந்தார்கள். அப்புறம் ஒரு பையன் தன்மேல் எதையோ ஊற்றிக்கொண்டு விட்டதால் மாற்றி விட்டார்கள். அவர்கள் பிரார்த்தனை நேரம் முடிந்ததும் முடிவெட்டி விடுவார்கள்!

   நன்றி அதிரா, சுவாரஸ்யமான பின்னூட்டங்களுக்கு.

   நீக்கு
  2. @ miyaw //).. நான் எனில் அப்படியே அனைத்தும் ஒரே மாதிரியே போட்டு விடுவேன்.//

   Hee heee Haiyo onnu sollanum...varen irynga

   நீக்கு
  3. ///
   Angel4 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:27
   @ miyaw they are pistachio shells///
   No Anju.. soaked almonds without skin:)..

   நீக்கு
  4. இந்த பூனை மட்டும் கண்ணை மூடிட்டேதான் எல்லாத்தையும் பார்ப்பாங்க :) மேலே பாருங்க ஸ்ரீராம் கீதாக்கு கொடுத்த ரிப்லை

   நீக்கு
 30. குட்டிப்பயல் என்ன நினைக்கிறான்? ’இதுல்லாம் ஒரு புஸ்தகம்னு என் கையில கொடுத்துருக்காங்க. நான் நின்ன நிலையிலேயே படிச்சுத் தூக்கிப்போட்டுருவேன்னு புரிஞ்சாத்தானே! -என்றா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் ஸார்.. படித்துக் கிழிக்காமல் இருந்தானே என்று எங்களுக்கெல்லாம் சந்தோஷம்!

   நீக்கு
 31. சதாபிஷேகத் தம்பதிகளுக்கு நமஸ்காரங்கள். சிறப்பாக நடந்திருக்கும் என நம்புகிறேன். இந்த மாற்றுத் திறனாளி வாழைப்பழங்களைப் போல எங்க வீட்டில் ஒரு வாழை மரத்தாரே வளர்ச்சி குன்றி இருந்தது. படம் எடுத்துப் போட்டிருந்தேன். தேடிச் சுட்டி தரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதாக்கா... ஆம், வெகு சிறப்பாகவே நடந்தது. ருத்ர ஏகாதசி அன்று அவ்வளவு கூட்டம் நான் பார்த்ததில்லை.

   நீக்கு
 32. குட்டிப் பயல்களில் ஒருத்தன் வேட்டி கட்டி இருக்கான். இன்னொருத்தன் வேட்டி கட்டலை. வேட்டி கட்டினதினாலோ என்னமோ அவன் பெரிய மாமா போல நினைச்சுண்டு புத்தகம் படிக்கிறான் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டிப் பையன்களை சற்றே மாறுபட்ட நேரங்களில் எடுத்தது கீதாக்கா.

   நீக்கு
 33. இன்சுலின் செடிப்பூன்னு கீதா சொன்னா, ஒடனே ஆமாமா -ன்னு தலையாட்டினா எப்படி? டயபடீஸ் செடிப்பூ-ன்னும் பேரு இருக்கோ என்னவோ?

  உள்ள நுழையறதுக்கு முன்னாடியே ‘இருங்க.. சர்ச்சுக்குப் போயிட்டு அப்புறம் வர்றேன்’ என்கிறாரே ஏஞ்சல்? ஒன்னும் புரியலையே.. சாமி கும்பிட்டுட்டு உள்ள நுழையறுதான் ஸேஃப் அப்படிங்கிற மாதிரி ஒரு படுபயங்கர தளமாகவா ஆகிப்போச்சு இந்த எங்கள் ப்ளாக்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஏ அண்ணன்.. ஓசிப்பதில:) நீங்க எங்கேயோ போயிட்டீங்க:))..

   //ஒடனே ஆமாமா -ன்னு தலையாட்டினா எப்படி?//

   அதானே.. கீதா, பாட்டுக்கு ராகம் சொன்னாலும் எல்லாரும் தலையை மேல கீழ ஆட்டுறங்க:)) ஆருமே கிட்னிக்கு வேலை கொடுக்கினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   ஆனா அஞ்சு எவ்ளோ கெயாஃபுல்லா சாமி கும்பிட்டெல்லாம் வந்தாலும் அவ என்னமோ “வந்தபின் காப்போன்தான்” ஹா ஹா ஹா.. அதிரா தான் “வருமுன் காப்போனாக்கும்”:) பிக்கோஸ் மீ ஞானி எல்லோ ஏ அண்ணன்:)) ஹா ஹா ஹா..

   ஹையோ ஏ அண்ணன் சும்மா இருந்த சங்கை ஊதி, இப்போ தெரியாம நிறைய எழுதிட்டேன்:) சுனாமி கினாமி வந்தா, கிரிக்கெட்டைப் பார்ப்பதுபோல இருந்திடாமல், ஓடி வந்து மீயைக் காப்பாத்திடுங்கோ:)..

   நீக்கு
  2. //இன்சுலின் செடிப்பூன்னு கீதா சொன்னா, ஒடனே ஆமாமா -ன்னு தலையாட்டினா எப்படி? டயபடீஸ் செடிப்பூ-ன்னும் பேரு இருக்கோ என்னவோ?//

   ஏன்? சொல்லலாமே ஏகாந்தன் ஸார்? இந்தப் பூ ஒன்று சாப்பிட்டால் டயோனில் ஒன்று சாப்பிட்டதற்குச் சமமாம். சொன்னார்கள்.

   நீக்கு
  3. ஆஆ தமிழோடு வந்துட்டேன் வந்துட்டேன் இருங்க இருங்க கன்டின்யூ பண்றேன்

   நீக்கு
  4. @ஏகாந்தன் சார் அது காலைல சர்ச்சுக்கு போகுமுன்னா போனில் பார்த்து உடனே கமெண்ட்டினேன் :)
   அதான் மிச்ச கமெண்ட்ஸுக்கு அப்புறம் வரேன்னு சொன்னேன்

   நீக்கு
 34. திரு யக்ஞராமன் தம்பதியருக்கு நமஸ்காரங்கள்.
  மனம் கவர்ந்த இரட்டையருக்கு அன்பு ஆசிகள்.
  அக்னி நாட்டியமும் ,கலச நங்கைகளும் வெகு சூப்பர்.

  இன்சுலின் பூ வளரும் இடம் எதுவோ.
  அனைத்துப் படங்களும் மிகச் சிறப்பு. ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா. நன்றி.

   இன்சுலின் செடி / பூ வளரும் இடம் கேஜிஎஸ் வீட்டு மாடி.

   நீக்கு
 35. @ ஸ்ரீராம்: //..இந்தப் பூ ஒன்று சாப்பிட்டால் டயோனில் ஒன்று சாப்பிட்டதற்குச் சமமாம். சொன்னார்கள்//

  ஓ, காரணப் பெயரா? இப்போதுதான் அறிகிறேன். நன்றியை கீதாவும் நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்..

  பதிலளிநீக்கு
 36. நமஸ்காரங்கள்...

  படித்துக் கொண்டிருக்கும் பெரியவர் உட்பட படங்கள் அனைத்தும் அழகு...

  பதிலளிநீக்கு
 37. அந்த ரெண்டு குட்டி கண்ணன்களும் செம்ம்ம கியூட் ..ஒருத்தர் பயங்கர குறும்புக்காரரோ இன்னொருவர் என்னமா புக் வாசிக்கிறார் ..இந்த படங்களை அவங்க பிற்காலத்தில் பார்க்கும்போது அவங்களுக்கே சந்தோஷமா இருக்கும் ..ரீசண்டா என் மகளோட ஒரு வயது குறும்பு படங்களை திரும்பி பார்க்கும்போது என் மகள் சொன்னா //எப்படிம்மா நான் இவ்ளோ naughty ஆகா இருந்தேனா என்று :)))))))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!