சனி, 10 நவம்பர், 2018

லாப்டாப் பரிசு
1)  நல்ல, தைரியமான அணுகுமுறை.  உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்ட கலெக்டர், தன், 2 வயது மகனை, தனியார் மழலையர் பள்ளியில் சேர்க்காமல், அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.  

இதற்கு ஏற்கெனவே தமிழ்நாட்டிலேயே சில முன் உதாரணங்களும் உண்டு.

2)  Follow up Positive....   முன்பு பரீட்சை எழுதிய பாட்டி பற்றி பகிர்ந்திருந்தேன்.  அவருக்கு லேப்டாப் பரிசு கிடைத்திருக்கிறது.3)  சில இடங்களில்மாணவர்களே களத்தில்இறங்கிதேவையற்ற பொருட்களை அகற்றினர்.  மாணவர்களின் இந்த செயலுக்குபொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது.

43 கருத்துகள்:

 1. இனியதாய் மலரட்டும் இந்நாள். மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடர்ந்து வரும் எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். அழகிய வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல நல்வரவு....

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. துரை செல்வராஜூ ஸார்.... குவைத்தில் கனமழை, வெள்ளம் என்று செய்தி படிக்கிறேனே...நீங்கள் இருக்கும் பகுதிகளில் பாதிப்பில்லையே...நலம்தானே?

   நீக்கு
  2. என்னது குவைத்தில வெள்ளமா?!!!!! துரை அண்ணா உங்க நலம் ப்ளீஸ்???????????

   அங்கிட்டு கூட வெள்ளம் வருமா ஆச்சரியமா இருக்கே...தண்ணி எல்லாம் வடிஞ்சு கடலுக்குப் போகாதோ?

   கீதா

   நீக்கு
  3. அறைக்குத் திரும்பியதும்
   விளக்கம் தருகிறேன்....

   நீக்கு
 4. பாட்டிக்கு லேப்டாப் ஆஹா

  பதிவு எழுதச் சொல்லலாமோ...இங்க சேர்த்துக்கிடுவோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா..

   பாட்டிகளோடு பாட்டியாய்!...

   வடை சுட்டது
   எல்லாம் அந்தக் காலம்..
   கதை லாப்டாப்பில்
   சொல்லுவது இந்தக் காலம்!...

   நீக்கு
  2. //பாட்டிகளோடு பாட்டியாய்!...//

   @துரை !இங்கே யாரு பாட்டி? யாரு பாட்டின்னேன்? நீங்கல்லாம் தாத்தாவா இருக்கலாம். ஆனால் இங்கே யாரும் பாட்டி இல்லையாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

   நீக்கு
  3. துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் இங்க கதைக்க ஒரு பாட்டி இருக்காங்களேனு தான் ஹிஹிஹிஹிஹி...அந்தப் பாட்டியத்தான் காணவே இல்லை

   கீதா

   நீக்கு
  4. கீதாக்கா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடிலப்பா...

   ஆனா ஒன்னே ஒன்னு இங்கே ஒரு பாட்டி இருக்காரே...அது நீங்க இல்லவே இல்லை....

   கீதா

   நீக்கு
  5. அவங்க கொள்ளுப்பாட்டி இல்லையோ? :)))))

   நீக்கு
  6. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ கீதாக்கா வயிறு வலிக்க போச்சு சிரிச்சு....

   ஆனா என்னனு தெரியலை ஸ்ரீராம் சொன்னது போல ஸ்காட்லான்ட் ஃப்ளைட் இன்னும் லேன்ட் ஆகலை...

   கீதா

   நீக்கு
 5. எல்லாச் செய்திகளும் புதுசு, பாட்டிக்கு லாப்டாப் கிடைத்தது உட்பட!

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம். செய்திகள் அனைத்தும் நன்று. லாப்டாப் பாட்டி வாழ்க. இங்ஙனம் இன்னோரு லாப்டாப் பாட்டி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நன்றி. இப்படிக்கு வல்லிப்பாட்டி..//

   // இங்ஙனம் இன்னோரு லாப்டாப் பாட்டி.//


   ஹா... ஹா... ஹா.. அப்படிப் போடுங்கம்மா!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா அம்மா செம நானும் சிரிச்சுட்டேன்...

   கீதா

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. கட்டவுட்டுக்கு பாலூற்றும் தறுதலைகளுக்கு மத்தியில் இப்படியும் மாணவர்கள் இருப்பது சந்தோஷமளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ வந்துட்டீங்களா கில்லர்ஜி..

   அந்த மாணவர்கள் எந்த ஊருனு பார்க்கலை போல!!

   கீதா

   நீக்கு
  2. அடச்சே முதலில் எனக்கு மூன்றுமே திறக்கவில்லை (ஒரு கிராமத்தில் நிற்கிறேன்)இப்பொழுதுதான் திறந்தது அதிலும் உத்திரகாண்ட் இன்னும் திறக்கவில்லை.

   கடந்த பதிவு "முரணாளிகள்" இதில் சொன்னேன் "None of these is in Devakottai" சரியா ?

   எல்லோரும் நக்கல்ஸ் பண்ணுனீங்களே...

   நீக்கு
 10. அனைத்து செய்திகளும் அருமை.
  லேப் டாப் பாட்டி மனதை கவர்ந்தார்.
  போன நல்ல மதிபெண் பெற்ற நல்ல செய்தி, இந்த வாரம் அவர் லேப் டாப் பெற்று கற்றுக் கொள்வது.
  என்னை போன்ற வயதானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பாட்டி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதிக்கா நோ உங்களுக்கு எல்லாம் வயதாகவே இல்லை கீதாக்கா சொல்லிருக்காங்க பாருங்க...இங்க பாட்டிகள் யாரும் இல்லை....கொள்ளுப்பாட்டி மட்டுமே உண்டுனு...ஹா ஹா ஹா..ஆ ஆ ஆ மீ ரன்னிங்க்...இங்க சிரிப்புச் சத்தம் கேட்டாவது பூனையார் அதிரடியா இங்க குதிப்பாரானு பார்ப்போம்....

   கீதா

   நீக்கு
  2. அதிரா கந்த சஷ்டி விரதம் முடிந்து தான் வருவார்.
   கேதார கெளரி விரதம் இருந்தார், அடுத்து சஷ்டி விரதம் இருக்கிறார், அவரை தொந்திரவு செய்யக்கூடாது.
   எல்லோருக்காக பிரார்த்தனை செய்வார்.

   நீக்கு
 11. சமோலி மாவட்ட கலெக்டருக்கு வாழ்த்துகள். ஆமாம் ஸ்ரீராம் தமிழ்நாட்டிலும் உதாரணங்கள் உண்டு நீங்க பாசிட்டிவ் செய்திகளில் சொல்லிருந்த நினைவு...

  //சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.//

  தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்...

  ஸ்ரீராம் ஏற்கனவே நம்ம தேவகோட்டையார் எல்லாத்துலயும் தேவகோட்டைனு சொல்லிக்கிடறவர் இப்ப இந்தச் செய்திய பார்த்துட்டு அம்புட்டுத்தான்..தலைகால் புரியாது.....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் என்னாச்சு தேவகோட்டை மீசைக்காரருக்கு இன்னும் இந்தச் செய்தி கண்ணுல படலை போல...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்ருச்சு... காலமுழுவதும் இவைகள் தேவகோட்டையில் நிகழ்வதே...

   நீக்கு
 13. நல்ல செய்திகள். அடிக்கடி வரமுடியலே. என்னையும் லேப்டாப் பாட்டிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள். உண்மையான கொள்ளுபாட்டியும் நான். அன்புடன்

  பதிலளிநீக்கு
 14. @ கீதா....

  >>> என்னது குவைத்தில வெள்ளமா?!.. துரை அண்ணா உங்க நலம் ப்ளீஸ்??..<<<

  கேக்கிறவங்க ஏதோ மாதிரி இருந்தா!... ந்னு ஒரு பழமொழி சொல்வாங்க!...

  அந்த மாதிரி தினமலர் நாளிதழின் செய்தித் தலைப்புகள் பெரும்பாலானவை
  ஏறுக்கு மாறாகத் தான் இருக்கும்...

  இந்த நாட்டில் மலையோ சுனையோ ஆறோ குளமோ கிடையாது..
  சற்றே மேடானதும் தாழ்வானதுமான பாலை நிலப்பரப்பு...

  கோடை காலத்தில் கடுங் காற்றும் மண் மாரியும் சர்வ சாதாரணம்...

  நான்காண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் கனமழை...

  மழை நீர் ஒழுங்காக வடியவில்லை... அதுதான் பிரச்னை...

  பதினைந்து நாட்களுக்கு முன் குளிர் காலத்தின் துவக்கத்தில் பரவலாக கடும் மழை ஒரு மணி நேரம் பெய்தது..

  அப்போதே வடிகால்கள் அடைத்துக் கொண்டு உள்வட்டச் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது..

  யாரும் சுதாரித்துக் கொள்ளவில்லை..

  கடந்த மூன்று தினங்களாக இரவில் அசத்தலாக மழை பெய்கின்றது...

  கீழ்நிலைப் பாலங்களில் மழைத் தண்ணீர் பெருமளவு தேங்கிவிட்டது... அந்தத் தண்ணீரில் சிக்கிக் கொண்ட கார்களின் நிலைமை பரிதாபம்... தாழ்நிலை வடிவமைப்பிலான கார்கள் ஏராளமாக சேதமடைந்துள்ளன...

  உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை...

  பாலை நிலத் திடலில் கார்கள் நிறுத்துமிடங்களில் சுற்றிலும் இரண்டடிக்கு மண்ணைக் கொட்டித் தடுப்பு போல வைத்திருப்பார்கள்... அது ஒரு ஒழுங்கிற்காக...

  இப்போது அந்த இடங்கள் தண்ணீர்த் தொட்டிகள் போல ஆகிவிட்டன..
  கார்களும் லாரிகளும் தனியார் பேருந்துகளும் சேற்றில் மாட்டிக் கொண்டு விட்டன...

  இந்த மண் வாகு தண்ணீரை உள்வாங்காது...
  வெயில் காலம் வரை நச.. நசத்துக் கொண்டிருக்கும்..

  அப்படியான இடங்களில் தண்ணீரை வெளியேற்றுகின்றார்கள்...

  தண்ணீர் வடியாததற்கு கடல் அலையேற்றம் காரணமாக இருக்கலாம்..

  சற்று சமநிலையான பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து நிற்கிறது...

  வடிகால் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பழைமையான குடியிருப்புப் பகுதிகள் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதே சோகம்...

  இந்தப் பழைமையான குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர்...

  நவீன கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் சுத்தம் என்பது சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது...

  மற்றபடிக்கு நான் நலம்... கடற்கரைக்கு மிக அருகில் தான் எங்கள் குடியிருப்பு.. மழை மற்றும் காற்றினால் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சேதமடைந்ததாக கேள்வி...

  மாடி வீடுகளின் ஜன்னல் வழியாக தண்ணீர் புகுந்து - பிரச்னை..

  இந்த மாதிரியான குறைகள் வெளியாவதை இவர்கள் விரும்புவதில்லை...

  எனவே, படங்கள் காணொளிகள் வெளியாவதில்லை...
  இதைப் பற்றி அதிகம் பேசவும் வேண்டாம்.. அதுவே நலம்!...

  அன்பின் சகோதரி இதைப் பற்றிக் கேட்டு நலம் விசாரித்தமைக்கு
  மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
 15. காத்தியாயினி பாட்டி கருத்தை கவர்கிறார். தேவகோட்டை சிங்ககுட்டிகள் வாழ்க!

  பதிலளிநீக்கு
 16. //இங்கே யாரும் பாட்டி இல்லையாக்கும்!// ஒரு சின்ன திருத்தம் கீதா அக்கா, அவரவர் பேரக் குழந்தைகளுக்கு மட்டும் பாட்டி. ஹி! ஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இஃகி, இஃகி , என் பெரிய பேத்தி ஆரம்பத்தில் சில வருடங்கள் என்னைப் "பாட்டி"னு சொல்லவே யோசிப்பா! இப்போக் குட்டிக் குஞ்சுலுவும் அப்படித் தான் யோசிச்சுட்டு இப்போத் தான் ஒரு வாரமாப் பாட்டினு சொல்றது. :)))))

   நீக்கு
 17. போற்றத்தக்கவர்கள். மூன்றாவது செய்தியைத்தான் நான் பார்க்கவில்லை. மற்ற இரண்டையும் நாளிதழ்களில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்.

  மூன்றாவது செய்தி.... மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்...

  லாப்டாப் பரிசு - வாவ்....

  முதலாம் செய்தி - நல்ல விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் அந்தப் பெற்றோருக்கு.

  பதிலளிநீக்கு
 19. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பாட்டி அசத்துகிறார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!