சனி, 24 நவம்பர், 2018

காத்துக்கொண்ட கெளரவம்....





1)  பணம் கண்டு மயங்கா பணி நேர்மை.  பயணி பேருந்தில் தவறவிட்ட 2,47 லட்சத்தை மீட்டுக்கொடுத்த ஓட்டுநரும், நடத்துநரும்...  டில்லி, இஸ்மாயில்... 






2)  காரைக்கால் அரசு மருத்துவ மனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எஸ்.விக்டர் ஜான்பால் (33). தற்காலிகமாக நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த 15-ம் தேதி இரவு 11 மணி அளவில் சூறைக் காற்றுடன் கனமழை கொட்டிய நேரத்தில், தன் உயிரை பணயம் வைத்து இரு கர்ப்பிணிகளை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்....






3)  சோகத்திலும் காத்துக்கொண்ட கெளரவம்....  பதில் மரியாதை...






4)  "பெரும்பாலான மக்கள் தண்ணீருக்காகப் போர்வெல் பயன்படுத்தி வருகின்றனர். அடித்தட்டு மக்கள், பொது குடிநீர் குழாயைப் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் இல்லாமல் போனதால், தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது.  நாங்கள், எங்கள் கிராமத்து கிணற்றை அழியவிடாமல், துார்வாரி பராமரித்து வந்தோம். அதன் பலனை, இந்தச் சிக்கலான சமயத்தில் அனுபவிக்கிறோம்....."






5)  ....இந்நிலையில், பெல்ஜியம் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த சுற்றுலா வந்த பயணி பீட்டர், 50, கஜா புயலால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை அறிந்தார். சென்னையில் உள்ள தன் நண்பர் குடும்பத்தினரோடு காரில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்துக்கு வந்துள்ளார்.

மரம் அறுக்கும் இயந்திரத்தையும், சென்னையிலிருந்து கையோடு வாங்கி வந்துள்ளார். சேதுபாவாசத்திரம் அருகே, பள்ளத்துாரில் புயலால் கீழே விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். உள்ளூர் மக்களே போதிய வசதிகள் இல்லாததால், மீட்புப் பணியில் வேகம் காட்ட இயலாத நிலையில், வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பயணி, புயல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தகவல், சமூக ஆர்வலர்களிடமும், மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.





6)  அடடே...   இது புதுசு... நல்ல ஐடியா...  






7)  

35 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆ... என்ன ஆச்சர்யம்.. காலை வணக்கம் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
    2. நெல்லை அண்ணே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் அன்னிக்கு இல்லை கஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  2. துரை சார், காத்திருக்கும் கீசா மேடம் எல்லோரும் இன்று லேட். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  3. இப்போ கத்தரி பொடி அடைச்ச கறி ரெசிப்பி செக் பண்ணிக்கிட்டேன். அதுனால இவ்வளவு சீக்கிரம். இல்லைனா வாய்ப்பே இல்லை. (எபி ல 2016ல வெளியானது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனிக்கிழமை பதிவிலும் 'திங்க'க்கிழமைப் பதிவு பற்றிய பேச்சா?!!

      நீக்கு
  4. கார்த்திகைப் பிறை வந்ததைப் போல -
    நெ.த., அவர்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. எப்போவும்போல நேற்றைய இடுகைல கடைசில, கீசா மேடம், இன்னும் வெளியிடலையா சனிக்கிழமை பதிவை என்று எழுதியிருப்பாங்க. இங்க வெளியிடம்போது காபி ஆத்தப் போயிருப்பாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா இங்கு வரப்போறாங்கன்னா முன்னாலேயே அவங்க எண்ணங்கள் பிளாக்ல லைட் எரியஞ்சு அசைவுகள் தெரியும். அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம்! இன்று அங்கேயே இன்னும் லைட் போடலை!

      நீக்கு
    2. என்ன வழக்கம் போல் புலம்பல் கதை! வீசிங்! :)))) அதோடு பட்டுக்குட்டிக் குஞ்சுலு இப்போ ஸ்கைபுக்கு வந்தது. அதைப் பார்த்துட்டு வந்தேன். அதான் "எண்ணங்கள்" ஏதும் இல்லை. :)))))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா இதை எல்லாம் படிச்சு சிரிச்சு முடில....

      ஆஹா பட்டுக்குஞ்சுலு!!! வந்துச்சா அடுத்த முறை பார்க்கும் போது ஒரு ஹாய் எங்ககிட்ட்டருந்து சொல்லிடுங்க கீதாக்கா...

      கீதா

      நீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை. அனைவருக்கும் நன்றி. இன்னிக்கு அதிசயமாச் சீக்கிரம் எழுந்திருந்து வந்திருக்கும் நெல்லைத் தமிழர் உட்பட! கீதா தான் வர முடியாதுனு சொல்லி இருக்காங்க!

      நீக்கு
    2. சீக்கிரம் எழுந்திருந்தா? நான் 9க்குள் தூங்கி 4-5க்குள் எழுபவன்னா.. (நேற்று இரவு ஒரு வேலையில் ஆர்வமாக மூழ்கியிருந்ததால் 10:30 மணி ஆனது தெரியலை) அப்புறம் பிசியாயிடுவேன். இன்னைக்கு ரெண்டு ரெசிப்பி செக் பண்ண 5:50க்கு மடிக்கணிணிக்கு வந்ததால் ஆஜர்.

      அந்த ஊர்ல நான் எழுந்தபிறகு பத்து நிமிடத்தில் எங்கள் பிளாக் ஓபன் ஆகும் (அங்க காலை 4:30). அதனால் நிறைய தடவை முதலில் வருவேன்.

      நீக்கு
  7. மனிதாபிமானம் மிக்கவர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் நல்லருள் பொழிவானாக...

    பதிலளிநீக்கு
  8. கடைசிப் படம் புத்செல்லாம் இல்லை. ஏற்கெனவே "தானே" "வார்தா" புயல்களின்போது நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "புச்செல்லாம்" நு எழுத நினைச்சு "புத்செல்லாம்" நு வந்திருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர் மற்றவை புதுசு. ஆனால் அந்த ஓட்டுநர், நடத்துநர் பத்திப் படிச்சேனோ? இஃகி, இஃகி..

      நீக்கு
    2. //கடைசிப் படம் புத்செல்லாம் இல்லை. ஏற்கெனவே "தானே" "வார்தா" புயல்களின்போது நடந்தது.//

      உங்களுக்கு பழசு... எனக்குப் புதுசு... அட ஒரு பாராட்டுதானே.. விடுங்களேன்!!!

      நீக்கு
    3. ஶ்ரீராம்... இந்த நக்கீர்ர் மதுரைக்கார்ரில்லையோ? (ஆனா அவர் ஆண்பிள்ளை). நான் மதுரை மீனாட்சியைப் பற்றி ஒண்ணும் சொல்லலை.

      நீக்கு
    4. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!" மீனாக்ஷியைப் பத்தி வாயே திறக்க முடியாதாக்கும்! :))))

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல உள்ளங்கள் வாழ்க!
    அனைத்து செய்திகளும் அருமை.
    வெளிநாட்டில் இப்படித்தான் பெரிய வேனில் வந்து மிஷின் வைத்துக் கொண்டு மரங்களை வெட்டி தூள் செய்து கொண்டு போய்விடுவார்கள். நான் காணொளி செய்தேன்.(மகனின் பக்கத்து வீட்டில் மிக உயரமாய் வளர்ந்து விட்ட மரத்தை அளவாய் வெட்டினார்கள்.)
    மாயவரத்திலும் உயரமாய் வளர்ந்து விட்ட தென்னைமரத்தை மெஷின் வைத்து வெட்டினார்கள்.
    சுற்றுலா வந்த வெளிநாட்டு நண்பர் செயல் அவர் நல்ல மனதை சொல்கிறது, வாழ்க!
    கிணறை துார்வாரி பராமரித்து வந்ததால் பயன் அடைந்தது மகிழ்ச்சி தருது.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. துார்வாரி பராமரித்து வந்தது சிறப்பு...

    அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. சுற்றுலா வந்த இடத்தில் களப்பணி செய்யும் பீட்டர் விந்தை மனிதரே...

    பதிலளிநீக்கு
  13. காலை வணக்கம்.

    அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

    சிறப்பான செய்திகளைத் தொகுத்து அளித்த எங்கள் பிளாக் குழுவினருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. அரிய சேவை, பணியினைச் செய்தோரைப் பாராட்டுவோம்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பெரும்பாலும், உணவளிப்பவர்கள், அல்லது ஆசிரியர்கள் இவர்களைப் பற்றிதானே வருகிற்து(அவை நல்ல விஷயங்கள் என்பதில் சந்தேகம் இல்லை) என்று நினைத்துக் கொள்வேன். இன்று எல்லா செய்திகளும் விதியாசம்மை இருக்கின்றன. நல்ல மனங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  16. நல்ல செய்திகளையும் அவற்றைச் செய்வோரையும் தேடிக் கண்டுபிடித்துபகிரும் செயல் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  17. கிணற்றை தூர்வாரி பராமரித்த கிராமத்து இளைஞர்கள் நமக்கு ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள். நான் என் வாழ்நாளில் இதுவரை இரண்டு வெள்ளங்களை பார்த்திருக்கிறேன். ஒன்று 1977 இல் திருச்சியில் வந்த வெள்ளம் ஸ்ரீரங்கத்தை சூழ்ந்து கொண்டது. இரண்டாவது 2015இல் சென்னையை பாதித்த வெள்ளம்.

    1977இல் வெள்ளம் வடிந்த பிறகு,மின்சாரம் கிடைக்க ஒரு வாரம் ஆகியிருக்கலாம், நினைவில்லை, ஆனால் எங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் அப்போது எல்லா வீடுகளிலும் கிணறு இருந்தது. கிணற்று நீரில் பொட்டாஷியம் பெர்மாங்கனேட்டை கரைத்து ஊற்றி விட்டு உபயோகிக்க தொடங்கி விட்டோம்.

    2015இல் கிணறு என்னும் கான்செப்ட் வழக்கொழிந்து போனதால் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டோம். பெரிய குடியிருப்புகள் ஒரு கிணற்றை வெட்டி பராமரிக்கலாம். செய்வார்களா?

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. அத்தனை நல்ல செய்திகளுக்கும் நன்றி.
    மனிதம் இதே போல் விவரங்கள் தெரிய வரும்போது
    மனம் நிறைகிறது.
    1977 இல் 4 நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தோம்.
    கிணற்றில் மொண்டெடுக்கும் அளவு தண்ணீர்.
    எங்களைக் காத்தது.

    பதிலளிநீக்கு
  20. துளசிதரன் : எல்லா செய்திகளும் அருமை. புயலின் போது கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் இவ்வுலகைப் பார்க்க இருக்கும் உயிர்களுக்கும் உதவியவர்...

    கீதா: அனைவருக்கும் பாராட்டுகள்.

    சென்னையில் வெள்ளத்தின் பின் பீட்டர் குழுவுடன் களப்பணிக்குச் சென்றது நினைவுக்கு வந்தது.

    இவர் சென்னை ட்ரெக்கிங்க் களப்பும் நடத்துகிறார். வார இறுதியில் யாரும் அதிகம் செல்லாத இடங்களுக்கு அழைத்துப் போகும் குழு. அட்வென்ட்சரஸ்...அதற்கென்று வலைத்தளம் இருக்கு. அதில் ஃப்ரீ ரெஜிஸ்ற்றேஷன். செல்பவர்கள் எல்லோரும் ஆகும் செலவை பகிந்துக்கனும். தங்களிடம் கார் பைக் இப்படி இருப்பவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள். டைடல் பார்க் அருகில் பிக் அப் பாயின்ட் உண்டு. இப்போது எப்படி இயங்குகிறது என்று தெரியவில்லை.

    பீட்டர் பல வருடங்களாக சென்னையில் தான் இருக்கிறார். பாவம் நடுவில் சிக்கினார். நடுவில் தேனீயோ இல்லை ஏதோ அந்தப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிலர் சிக்கி இறந்தனர் அதில் இவர் பயனக் குழுவைச்சேர்ந்தவர்கள் உண்டு என்பதால் இவர் மீது வழக்கு பதிந்து கன்னா பின்னா என்று எழுதினர்.

    சென்னையில் இருக்கும் நாமே செய்யாத பல நற்பணிகளை இவர் செய்து வந்தார். எந்த விளம்பரமும் தேடுவதில்லை..அமைதியாகச் செய்பவர். அந்த கேசின் போது இவர் செய்து வரும் நல்ல பணிகள் பல மறக்கப்பட்டன. அவர் அலுவலகம் மூடப்பட்டது. அவர் தலை மறைவு என்றெல்லாம் வந்தன. இப்படி நிறைய...வா மணிகண்டன் கூட இதைப் பற்றி பதிவு போட்டிருந்தார். ..அதன் பின் தெரியவில்லை என்னாயிற்று என்று.

    இப்போது மீண்டும் களப்பணியில் அதுவும் சமீபத்திய புயலால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு இவர் செய்ததைக் கண்டதும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!