திங்கள், 26 நவம்பர், 2018

"திங்க"க்கிழமை : அவல் கேசரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


அவல் கேசரி 


தேவையான பொருள்கள்:

கெட்டி அவல்    -  1 1/2 கப் 
சர்க்கரை             - 1 1/2 அல்லது 2 கப் 
ஏலக்காய்            - 4
முந்திரி &            - 8
உலர்ந்த திராட்சை 
நெய்                     - 4 டேபிள் ஸ்பூன் 




செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அதில்  கெட்டி அவலை போட்டு லேசாக வறுத்து, பின்னர் நீரில் கழுவி ஊற வைக்கவும். 




பத்து நிமிடங்கள் ஊறியதும் வடிகட்டி கொண்டு வாணலியில் போட்டு வேக வைக்கவும். வெந்ததும், சர்க்கரையை சேர்த்து கிளறவும். சர்க்கரை சேர்த்ததும் கொஞ்சம் தளர ஆகி விடும். 



பயப்பட வேண்டாம்.அடுப்பை சிம்மில் வைத்து, கேசரி பவுடரை கொஞ்சம் நீரில் கரைத்து சேர்த்து கை விடாமல் கிளறவும். கெட்டியாக ஆனதும், சிறிதாக உடைத்த முந்திரி,மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காயையும் பொடி பண்ணி கேசரியோடு சேர்த்தால் சுவையான அவல்  கேசரி ரெடி. செய்ய மிகவும் சுலபமான கேசரி இது.



பி.கு.: சன்ன(பொடி) சர்க்கரை இனிப்பு அதிகம் இனிக்கும். அதை சேர்க்கும் பொழுது, அவல் கெட்டியாக நேரம் எடுக்கும். இதற்கு சன்ன அவலை கழுவி சேர்த்தால் சீக்கிரம் கெட்டியாகி விடும். 


46 கருத்துகள்:

  1. ஓ, பானுமதியா? இங்கே அவல் கேசரி போணியே ஆகாது! :) ஆனால் எனக்குப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம். கீசா மேடம்... என்னிடம் போணியாகாத இனிப்பு எதுவுமே இல்லை... சும்மா.. உல்கள் தகவலுக்குச் சொன்னேன்...

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. அன்றைக்கு அவல் பாயசம் செய்திருந்தேன்...

    இன்றைக்கு இங்கே அவல் கேசரி...

    கைப்பக்குவம்... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தெரிவித்தவர்களுக்கும் இனி தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் லொக், காலை லொக், வணக்கம் லொக்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா... என்ன ஆச்சு? இருமலா?

      நீக்கு
    2. ஆமாம், ஸ்ரீராம். ஒரு வாரமாக ஜலதோஷம், இருமல், லேசான காய்ச்சல். சென்னைக்கு செல்ல வேண்டிய ஒரு கல்யாணத்திற்கு கூட போக முடியவில்லை. :((

      நீக்கு
  6. 10 வருடமாக டயபடிக் நிலையில் இருந்த நான் இப்ப pre diabetic நிலமைக்கு வந்து இருக்கிறேன்...அதனால் ஸ்வீட் சாப்பிட நான் ரெடி இந்த கேசரியை உடனடியாக அனுப்பி வைக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //10 வருடமாக டயபடிக் நிலையில் இருந்த நான் இப்ப pre diabetic நிலமைக்கு வந்து இருக்கிறேன்//
      எப்படி என்று சொன்னால் என் கணவரைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்குமே.

      நீக்கு
    2. அவர் பொய் சொல்றார் பானுமதி அக்கா... சுவீட் சாப்பிடுவதற்காக:)

      நீக்கு
    3. மதுரை....உண்மையாவா.................சொல்லுங்க!! ப்ளீஸ்....எனக்கும் நல்ல கன்ட்றோல் தான்...ஆனால் மாத்திரையை நிறுத்துவதில்லை....

      கீதா

      நீக்கு
  7. கேசரி பிடித்தது. அவல் கேசரி இன்னும் சுவைத்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பெண்பார்க்கும் படலம் என்று இல்லாத்தால் கேசரிகளை அப்போது சுவைத்ததில்லை. ஹா ஹா

    அவல் கேசரி ஒரு தடவை சாப்பிட்ட ஞாபகம். செய்யவேண்டும் என்னு நினைத்துக்கொண்டிருக்கும் இனிப்பு இது.

    இதற்கிடையில் பன்சி ரவைல கேசரி செய்தா எப்படி இருக்கும்னு யோசித்து ஹஸ்பண்டை சில மாதங்களுக்கு முன் செய்துதரச் சொன்னேன். ட்விஸ்டாக பச்சைக் கலர் சேர்க்கச் சொன்னேன். ரவா கேசரிக்குள்ள சுவை இல்லை.

    கடைசிப் படம், அவல் கேசரி கெட்டியானதைப் போல் தோற்றம் அளிக்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///பெண்பார்க்கும் படலம் என்று இல்லாத்தால் கேசரிகளை அப்போது சுவைத்ததில்லை. ஹா ஹா//

      ரொம்ப வருத்தமா இருக்கோ?:)... புவஹாஆஆஆ புவஹாஆஆ

      நீக்கு
    2. இல்லை அதிரா... எனக்கு இன்னொரு வீட்டில் சாப்பிடுவது பிடிக்காது. அதுவும் பெண் பார்க்க என்று ஒவ்வொரு வீட்டிற்குச் செல்வதற்கும் எனக்கு உடன்பாடு கிடையாது. கடவுள் அருளால், பெற்றோர் பார்த்து நிச்சயத்தது. நான் நேராக திருமணமண்டபத்திற்கு செல்வதாகத்தான் திட்டம் (திருமணத்திற்கு). அப்புறம் விசா சம்பந்தமான ஃபார்மாலிட்டி மற்றவற்றிர்க்காக, 3 மாதங்கள் முன்னமேயே போயிருந்தேன். இன்றுவரை அவள்ட சொல்லுவேன், கேசரி, பஜ்ஜி சாப்பிடும் வாய்ப்பே கிடைக்கலையே என்று...

      நீக்கு
    3. பெண் பார்க்க வீடு வீடாக மாப்பிள்ளை போகக்கூடாது அது தப்பு... பெண்ணை எங்காவது கோயிலில் ரோட்டில் அப்படி ஒளிச்சிருந்து பார்க்கலாம் பிடித்து ஓகே எனில் மட்டுமே வீட்டுக்குப் போய் கண்ணும் கண்ணும் நோக்கீயா பண்ணோனும்:)... கண்ணும் ஐயும் நோக்கிட்டால் கல்யாணத்தைக் குழப்பக்கூடாதாக்கும்:).. இதில பஜ்ஜி சுவீட்டா முக்கியம் .. கடையில வாங்கிச் சாப்பிடுங்கோ கர்ர்ர்ர்ர்:(..

      நீக்கு
  9. //கடைசிப் படம், அவல் கேசரி கெட்டியானதைப் போல் தோற்றம் அளிக்கவில்லையே//
    செய்த பாத்திரத்திலேயே வைத்து விட்டதால் அப்படி தோன்றுகிறது. வேறு பாத்திரத்திற்கு மாற்றி புகைப்படம் எடுத்தேன், இணைக்க மறந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. படங்களே ஆசையை தூண்டுகிறது.
    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  11. இதுவரை அவல் ல பண்ணது இல்ல ...

    பார்க்கவே ஆசையா இருக்கே ...

    சிக்கீரம் செஞ்சு பார்த்து படத்தோடு வரேன்...

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு சில மாற்றங்களுடன்வேறு பெயரில் உருவாகும்தின்பண்டங்களில் ஒன்று இனிப்பு எனக்குப் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  14. அவல் கேசரிக்கு அவலை வறுத்து ரவை பக்குவத்தில் பொடி செய்து கொண்டு (மாவை சலித்து விட்டு ரவையை மட்டும் எடுத்துக் கொண்டு )வெந்நீர் கொதித்தவுடன் போட்டு ரவை கேசரி கிண்டுவது போலவே செய்வேன். இப்படி ஊறவைத்து செய்தது இல்லை.
    செய்துப் பார்க்கிறேன்.
    படங்கள் அழகாய் இருக்கிறது.
    உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் அம்மா கூட உங்களை போல் ரவையை முதலில் நெய்யில் வறுத்து, மிக்சியில் உடைத்து, பின்னர் செய்வார்.சலிக்க மாட்டார். நானும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு தடவை முயற்சிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  15. ஓ அவலில் கேசரியா? சூப்பர்.. நான் அவல் உப்புமா செய்வதுண்டு.. இது செய்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இன்று அவல் உப்புமா செய்து தி.பதிவுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன் ('அதனாலென்ன நெ.த. தைரியமாக அனுப்புங்கள். அதிரா செய்வதைவிட வித்தியாசமாக இ ன் னு ம் சு வை யா க இருக்கும்'னு என் மனசு சொல்லுது. குழை சாதம் செய்துபார்க்காமல் அப்படிச் சொல்வது தவறு என்று என் மனதுக்குத் தெரியுமா?)

      நீக்கு
    2. ஹையோ ஆண்டவா என் குழைசாதம் செய்ய முன்னமே நெல்லைத்தமிழனுக்கு என்னமோ ஆச்சூஊஊஊ:) அப்போ செய்தார் எனில்:)...

      ஆஆஅ அவல் உப்புமா அனுப்புங்கோ... உங்கள் களவெடுத்த மாங்காயில் செய்த தொக்கு செய்ய என, அதிரா காசு கொடுத்து மாங்காய் வாங்கி வந்தேன்ன்ன்:) பட் நானே சாப்பிட்டு விட்டேன் இன்னும் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு அதில் இஞ்சி போட்டு சம்பல் செய்யப் போறேன்ன்ன்ன்ன்ன்:)..

      நீக்கு
  16. வேக வைப்பதற்கு தண்ணி அளவு சொல்லவில்லையே பானுமை அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேக வைக்க தண்ணீர் தேவையே இல்லை. ஊற வைத்த அவலை வாணலில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கிளறினால் போதும் வெந்து விடும். தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் மிகவும் தளர இருக்கும். இருகுவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்திருந்தால் குல்கந்து போல் ஆகி விடும்.

      நீக்கு
  17. பின் குறிப்பாக சொன்னது முக்கியம்... வீட்டில் இது போல பல ஆர்வ பரிசோதனை உண்டு...!

    பதிலளிநீக்கு
  18. அவல் கேசரியை பார்த்து ரசித்த அத்தனைபேருக்கும் நன்றி!. செய்து பார்க்க விரும்புகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்! எல்லோருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. எப்படியும் காலை வணக்கம், இன்னுமா வெளியிடலை என்று கேட்க இங்குதான் வருவீங்க கீசா மேடம். அதனால் இங்கேயே உங்களுக்கு காலை வணக்கம் சொல்லிடறேன்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் மாலை வணக்கம். பார்க்கவே பிரமாதமா இருக்கு பானு மா.
    பார்க்க மட்டும் செய்யறேன். உடல் நலம் கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  21. பானுக்கா சூப்பர் ரெசிப்பி!! பொடித்தும் செய்யலாம்...முழுசாவும் செய்யலாம்....

    அக்கா வெல்லம் போட்டு/ப்ரௌன் சுகர் போட்டும் செய்யலாம்...சூப்பரா இருக்கும்....ரொம்பப் பிடிக்கும்...

    டயபட்டிக் மதுரைத் தமிழன் சும்மாநாலும் ப்ரீ டயபட்டிக்னு சொல்லிக் கொள்வது போல சொல்ல முடியலையே...ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. பானுக்கா உங்க வீட்டுல ஸ்வீட் பிரியர்கள் உண்டோ....சரிக்குச் சரி சர்க்கரை போட்டிருக்கீங்களே!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கெல்லாம் இந்தச் சர்க்கரையே பத்தாது. ஸ்வீட்களில் மட்டும். மற்றபடி காஃபி, தேநீர், ஹார்லிக்ஸ், பால் போன்றவற்றில் சர்க்கரை சேர்த்தால் அடியோடு பிடிக்காது. இப்போக் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கணும் என்பதற்காக அரை டீஸ்பூன் சர்க்கரை, காஃபி, தேநீரில் மட்டும். பாலில் சர்க்கரை போட்டால் பாலின் சுவை மாறிடும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!