வியாழன், 8 நவம்பர், 2018

வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும்ஜி எம் பி ஸார் ஒரு பதிவு  எழுதி இருந்தார்.  அதில் கீழ்க்கண்டவாறு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.  

"சொல்முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அதனால்தான் சில சமயம் அபசகுன வார்த்தைகளைப் பேசக்கூடாது என்பார்கள். பலித்துவிடும் என்பார்கள். பகுத்தறிவில் நம்பிக்கை வாய்ந்த கே ஆர் ராமசாமி கடைசியாய்ப் (அது கடைசி என்று அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை) பாடிய பாடல்வரிகள் அப்படி அபசகுனமாய்த்தான் அமைந்திருந்தன என்று வாலி புத்தகத்தில் படித்திருக்கிறேன். சில வார்த்தைகள் வெல்லும். சில வார்த்தைகள் கொல்லும்"

இதில் நான் சொல்லியிருக்கும் சம்பவம் வாலி எழுதிய புத்தகத்தில் படித்ததாய்  நினைத்துக் கொண்டிருந்தேன்.  அவரும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் என்றுதான் நினைவு.  இரண்டு நாட்களுக்கு முன்னால் யதேச்சையாய் சோ கேள்வி பதில் புத்தகம் எடுத்துக் புரட்டியபோது இதே போன்ற ஒரு கேள்விக்கு சோவின் பதில் படித்தபோது இந்த சப்ஜெக்ட் என்று தெரிந்ததும் அதை எடுத்து இங்கே பகிர்கிறேன்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------....அதனாலேயொரு பூஜைபோடாமல் ஒரு படம் ஆரம்பிக்க மாட்டார்கள்.  எடுத்த உடனே முதல் காட்சி "ஆண்டவன் காப்பாத்துவான்" இந்த மாதிரி எல்லாம் வார்த்தை வரும்.  இந்த பகுத்தறிவாளர்கள் எல்லாம் படம் எடுப்பாங்க.  அவங்க படத்துலயெல்லாம் ஆண்டவன்னு சொன்னா தப்பாச்சே..  'வெற்றி!  வெற்றி!" ன்னு சொல்வான் ஒருத்தன்.  எடுத்த உடனே அந்த மாதிரி ஒரு காட்சி எடுத்துப்பாங்க!  ஏன்னா அவங்க வெளியே காண்பித்துக் கொள்ள முடியாது!  அதனால இப்படி எடுத்துப்பாங்க! 

"...   இதுல கெட்டதைச் சொல்லக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்றேன்.  பீம்சிங் பெரிய டைரக்ட்டர்.  "செந்தாமரை" ன்னு ஒரு படம் நின்னு, நின்னு, நின்னே போச்சு அவருக்கு.  

கிட்டத்தட்ட ஏழு வருஷம் எடுத்தாங்க.  அவர் சொல்லலை எனக்கு.  அவரோட அசிஸ்டன்ட் டைரக்டர் சடகோபன், திருமலை மகாலிங்கம்னு ரெண்டு பேர்...  அவங்க சொன்னாங்க எனக்கு!  

கே ஆர் ராமசாமி நடிகர் அதுல!  அவருக்கு ஒரு பாட்டு எழுதி இருக்காங்க!  'பாடமாட்டேன்!  இனி பாடமாட்டேன்!"  இவங்க எல்லாம் சொன்னாங்களாம் 'இது வேண்டாம்.  இந்தப் பாட்டு பல்லவி வேண்டாம்.  மாற்றுவோம்!  இது என்ன நன்னாவே இல்லை!  கெடுதல் இது! வேண்டாம்! ன்னு சொல்லி இருக்காங்க.  

அவர் என்ன சொல்லியிருக்கார், "அதெல்லாம் இல்லை!  நான் பகுத்தறிவுவாதி!  எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கைக்கு கிடையாது.  நான் பாடறேன்!  இப்படியே இருக்கட்டும் பல்லவி!  'பாடமாட்டேன், இனி படமாட்டேன்ன்னு பாடினார்!  அதுதான் அவர் பாடின கடைசிப் பாட்டாம் சினிமாவில்!  சொன்னாங்க!  முன்னாடி அவரு கேட்கலை.  இதனால்தான் அது நடந்ததா?    இல்லைன்னா அவர் சினிமால அப்புறம் நிறைய பாடியிருக்க மாட்டாரா என்று கேட்கலாம்.  ஆனால் இவங்க ஏற்கெனவே எச்சரிக்கை பண்ணதுக்கும் இதுக்கும் சரியா இருந்தது.

தங்கவேலு நடிகர்.  அவச்சொல் பேசவே கூடாதென்பதில் அவர் ரொம்ப நேர்மை!  ஒரு சினிமால எல்லோரும் என்னைத் திட்டிண்டிருப்பாங்க...  ஒரு அதிகப்ரசங்கி கேரக்டர் அப்படீங்கறதால...  இவருக்கு ஒரு டயலாக் "நீ உருப்படடமப் போயிடுவ!  நீ நாசமாய் போயிடுவ"!  

இவர் டயலாக் எழுதியவரைக் கூப்பிட்டார்.  

"இது எழுதினாதான் படம் ஓடுமா?நான் இதெல்லாம் சொல்ல மாட்டேன் எந்த நேரத்துலயும்..  எதையும்...  எவன் சொல்றது!  என்ன அடுக்குமோன்னு!  அதெல்லாம் சொல்லக்கூடாது!   அதெல்லாம் மாற்றுங்கள்.  இப்படித்தான் திட்டணுமா ஒருத்தனை?  ஏதோ மடையன், முட்டாள் என்று திட்டச் சொல்லுங்க!  சொல்லிட்டுப் போறேன்.  உருப்பட மாட்டே, நாசமாய் போ ன்னு இதெல்லாம் சொல்ல மாட்டேன்!  எந்த நேரத்துல எவன் சொல் பலிக்கும் என்று சொல்ல முடியாது..."  அப்படீன்னு பிடிவாதம் பிடிச்சாரு அவரு. அப்போ அவர் ஒரு நிகழ்ச்சி சொன்னார்.

என் எஸ் கே பெரிய தர்மாத்மான்னு ஒரு பெயர் உண்டு.  இவர் அப்போ என் எஸ் கேயோட ஒரு கோஷ்டி மாதிரி நடித்துக் கொண்டிருந்தார்.  தங்கவேலுக்கு அப்போ பணக்கஷ்டம்.  என் எஸ் கே கிட்ட போய்ப் பணம் கேட்டாராம்!  அவர் தன் பாக்கெட்டில் கைவிட்டு  "இந்தா!  என் கிட்ட இருக்கற லக்ஷ்மியை உன் கிட்டக் கொடுத்தேன்!  வச்சுக்கோ! - அப்படீன்னாராம்.  

இவருக்கு 'திக்கு' ன்னுத்தாம்.  'என்ன இந்த மாதிரி சொல்றார்?  லக்ஷ்மியைக் கொடுத்தேன்னு சொல்லலாமா?  அவர் சொன்னார், 'அன்றையிலிருந்து அவருக்கு மார்க்கெட் இறங்கிற்று; எனக்கு மேலே ஏறிகிட்டே போச்சு!'  இந்த மாதிரியெல்லாம் பேசவே கூடாது! அப்படிங்கற நம்பிக்கை ரொம்பப் பேர்க்கு இருக்கு.  இவங்க எல்லாம் பிரபலமானவர்கள் என்பதற்காக இந்த உதாரணங்களை சொன்னேன்.  நிஜ வாழ்க்கையிலேயே இந்த மாதிரி நிறைய உண்டு.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


எனக்கும் இது மாதிரி  சில அனுபவங்கள் உண்டு.  அவை எல்லாம் சிறிய அனுபவங்கள்.  எனினும் நான் பேசும்போது முடிந்தவரை மிகவும் ஜாக்கிரதையாகவே பேசுவது வழக்கம்.

உங்களுக்கும் அனுபவங்கள் இல்லாமலா இருக்கும்?

====================================================================================================

நேற்று அனுஷ் பிறந்தநாள் பற்றி கே ஜி ஜி குறிப்பிட்டிருந்தார்.  எனக்கு முகநூலிலும் இரண்டு மூன்று வருடங்கள் முன்பு ஞாபகப்படுத்தியவர் அவர்தான்!
கோவை ஆவியும் சும்மா இருந்ததில்லை!
அப்புறம் நான் எப்படி சும்மா இருக்க முடியும் நீங்களே சொல்லுங்கள்!

=================================================================================================


வெளி நாட்டிலிருந்தெல்லாம் பாராட்டினார்களாம்...  

==============================================================================================

152 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஆஹா அனுஷ் படமா இருக்கே...

  இன்னிக்கு அ ர ம ஹேப்பிதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று முகநூல் பக்கம் போனால் 2013 லிருந்தே அனுஷ் பதிவுகளை நினைவு"படுத்தியது" நேற்று வேறு நமது தளத்தில் இது பற்றி பிரஸ்தாபம் வந்திருந்ததா.... சரி, வேறு வழி இல்லை, எடுத்துக் பகிர்ந்து வைப்போமே என்று....

   நீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா ஹா ஹாஹா....உங்க ஃபேஸ்புக் வாழ்த்து பார்த்து சிரிச்சுட்டேன்...

  அட கௌ அண்ணாதான் நேற்று இங்க போட்டு நினைவுபடுத்தினாரா அதான் நெல்லை அம்புட்டு சொல்லிருந்தாரா....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. // நானே மறக்க நினைத்தாலும்...//

  அதானே..
  மறக்க நினைக்கலாமா!...
  அழகை..
  துறக்க நினைக்கலாமா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் பார்த்தீங்களா....

   கீதா

   நீக்கு
  2. //மறக்க நினைக்கலாமா!...
   அழகை..
   துறக்க நினைக்கலாமா!...//

   ஆஹா... இது உங்களுக்காக போட்டதே ஒழிய... வேறொன்றுமில்லை!

   நீக்கு
 6. கமலுக்கு வாழ்த்து சொல்லும் வஞ்சக உலகம்...ஹா ஹா ஹாஹ் ஆ ஹையோ அப்புறம் //என்னைப் போன்ற இந்த அப்பாவி ஏழை ரசிகர்கள்/ ஹா ஹா ஹா அ ர ம...சிரிச்சு முடில ஸ்ரீராம்...

  இன்னிக்கு கில்லர்ஜி மீசைய முறுக்கிட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு வருவார்...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நாங்களும் காலைல வருமோமில்ல... காலை வணக்கங்கள் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை இனிய காலை வணக்கம்

   ஹா ஹா ஹா புகை வருதா

   கீதா

   நீக்கு
  2. அடடே... இனிய காலை வணக்கம் நெல்லை... அச்சச்சோ நீங்கள் இப்படி வரும் நேரம் வாட்டசாட்டமான அனுஷ் படமா போட்டுட்டேனே... ஸாரி நெல்லை..

   நீக்கு
 8. நேற்று ஐப்பசி அமாவாசை!..

  கருப்பட்டி நெய் பாயசம் -
  சொன்னபடி ஆயிற்று...

  அனுஷ் பிறந்த நாளும்
  அமாவாசையுடன் சேர்ந்து கொண்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா கருப்பட்டி நெய் பாயாசம் ஆஹா ரெசிப்பி அனுப்புங்க....

   அனுஷ் பிறந்த நாளும் அமாவாசையோடு சேர்ந்து கொண்டது// ஹா ஹா ஹா ஹா ஹா அண்ணா நீங்களும் இப்ப கலக்கறீங்க..

   கீதா

   நீக்கு
  2. //கருப்பட்டி நெய் பாயசம் -
   சொன்னபடி ஆயிற்று... அனுஷ் பிறந்த நாளும்
   அமாவாசையுடன் சேர்ந்து கொண்டது...//

   அடடே... ஆச்சர்யக்குறி.

   நீக்கு
 9. ஆனாலும் நான் நினைக்கவில்லை..
  இன்றும் அனுஷ் புராணம் தொடரும் என்று..

  பதிலளிநீக்கு
 10. நானே மறந்தாலும் நு வேற...ஹா ஹா ஹா ஹா ஹா...நேத்து ஒரே ஆட்டம் தான் போல ஃபேஸ்புக்ல ஸ்ரீராம்...

  ஆவியின் விருப்பமா...! ஆவி இப்ப அனுஷ் க்கு மாறிட்டாரா...

  இன்னிக்கு நெல்லையின் காதில் புகை.....அதுக்காகவே அடுத்த புதன், வியாழன் தமனாக்கா வருவாங்களோ...

  காலைல குதிப்பேன் எச்சரிக்கை நு சொன்ன அதிரடி இன்னிக்கு இப்ப வரலியேனு இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஆவி நஸ்ரியாவிலிருந்து மாறிட்டாரா...அவள் பறந்து போனாளேனு அப்ப பதிவே போட்டிருந்தார்..அவங்களுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதும்....ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஆவி இப்போ எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று தகவல் இல்லை கீதா. இது அப்போ போட்டது... அதிலேயே தேதி இருக்கிறது பாருங்கள்!

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா கேட்டுடறேன்....ஆவியை!!! தேதி பார்த்துட்டேன் ஆமாம் முதல்ல மெசேஜ் தானே கண்ணுல படுது உடனே மனம் விரலை இயக்கி டப் டப் டப் நு தட்ட வைக்குது...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. அனுஷ் அடம் பெரிசா அப்ப கண்னை நிறைத்ததால் இடையில் இருந்த இரு குட்டிச்செருகல்களை இப்பத்தான் பார்க்கிறேன்...அதான் கௌ அண்ணாவின் நினைவூட்டல்...அப்புறம் ஆவியின் நேயர் விருப்பம்!!!!! ஹா ஹா ஹா......இப்பத்தான் கண்ணில் பட்டது....

   கீதா

   நீக்கு
 11. சொல் முகூர்த்தம்// நிச்சயமாக உண்டு ஸ்ரீராம். அதைப் பற்றி எப்படிச் சொல்லப்பட்டாலும்..எனக்கு இதில் ரொம்பவே நம்பிக்கை உண்டு..நல்ல வார்த்தைகள் நேர்மறை சக்தி என்பதில்..

  உங்கள் பின்னூட்டம் மிகவும் சரியே...என் பாட்டி சொல்லுவார் நல்லது பேசு இல்லைனா மேலருந்து ததாஸ்து சொல்லிடுவா தேவதைகள் என்று...அது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இப்ப நான் அதிய நேர்மறை சக்தி எதிர்மறை சக்தி என்று சொல்வதுண்டு...

  ..நான் அடிக்கடி சொல்லுவது பேசும் போது நல்ல வார்த்தைகளைப்பேசுவோம். என்று. ஒருவர் தவறு செய்து கோபம் வந்தால் கூட கூட அழகா எடுத்துச் சொல்லுங்க.. கெட்ட வார்த்தைகள் வாயில் வரக் கூடா என்று சொல்லுவேன் நெருங்கிய நட்புகள், உறவுகளிடம் சொல்லுவேன். ரொம்பவே கடினம் குறைந்த நெகட்டிவ் வார்த்தைகளைக் கூடச் சொல்லக் கூடாதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
 12. சொல்முகூர்த்தம் தகவல் அருமை...சோ என்ன சொல்லிருக்கார்னு பார்க்க கொஞ்சம் பொருத்து வரேன்...பணிகள் இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஜிஎம்பி சார் சொல்லி இருப்பது போல எப்பொழுதும் நல்
  வார்த்தைகளே சொல்ல வேண்டும். அஸ்து தேவதைகள் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று மாமியார் சொல்வார்.
  நானும் மிக ஜாக்கிரதையாகவே இருக்கிறேன்.
  மகன் கள், மகள் எல்லோரிடமும் சொல்லியபடியே இருக்கிறேன்.

  குழந்தைகளைத் திட்டவே கூடாது அலுப்பாய் இருந்தாலும் கண்டிப்பு வார்த்தைகளும்
  நல்லதாகவே இருக்க வேண்டும்.

  விடாது அனு அக்கா வாழ்த்துகள் போல இருக்கே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா. நல்லவை அல்லாத வார்த்தைகள் சொல்வதற்கு சும்மா இருந்து விடலாம்! சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!

   நீக்கு
 14. சோவின் சினிமா நினைவுகளில் கே.ஆர்.ராமசாமி, தங்கவேலு, என்.எஸ்.கே. பற்றிப் படித்த நினைவு இருக்கு. என் தாத்தா, பாட்டி, பெரியப்பா எல்லோருமே சொல்வாங்க. நம் வீட்டைச் சுற்றியும் உள்ளேயும் நாலு மூலைகளிலும் திக் தேவதைகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் என்ன சொன்னாலும் அதற்கு "ததாஸ்து" என்பார்கள். ஆகவே கவனிச்சுப் பேசணும் என்பார்கள். என் தாத்தா, திட்டினார் எனில் அது "ஏம்மா, இப்படி!" என்னும் ஒரே வார்த்தை தான். மற்றபடி தள்ளி நில்லுனு கூடச் சொல்ல மாட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா... எங்கள் வீட்டில் இவளவு சாந்தமான பெரியவர்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்! அதாவது அப்பா வழியில்!

   நீக்கு
  2. ஸ்ரீராம், என் அப்பா நேர்மாறாகப் பேசுவார். அவர் கோபத்தில் சொன்ன பல விஷயங்கள் பலித்திருக்கின்றன. நானே அதைச் சுட்டியும் காட்டி இருக்கேன். :( நான் சொன்னது என் அம்மாவின் அப்பா!

   நீக்கு
  3. என் அலுவலகத்தில் ஒருவர் என் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும் என்பது போலப் பேச, இரண்டே மாதத்தில் இளையவனை மருத்துவமனையில் சேர்க்கும் அளவு ஆனது. ஆனால் நிகழ்ந்த சம்பவத்தில் நியாயம் என் பக்கம். அவர் பேசியது அநியாயம். ஆனாலும் அவர் வாக்கு பலித்தது போலவே உணர்ந்தேன். என் இன்னொருநான்பார் உடனே சிலருக்கு கரிநாக்கு என்றார்!

   நீக்கு
 15. அனு அக்காவிடம் இம்புட்டுப் பைத்தியமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஸ்ரீராம், உங்க பாசுக்கு இதெல்லாம் தெரியும் தானே? இல்லைனா போட்டுக்கொடுக்கலாமானு ஒரு நல்லெண்ணம் தான்! :P :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பைத்தியம் தெளிந்து விட்டது கீதா அக்கா. இது சும்மா நினைவலைகள்!

   நீக்கு
  2. கீதாக்கா ஸ்ரீராம் அனுஷ்கா ஜி நுதான் சொல்லிருக்கார்....கவனிங்க ..."ஜி" !!!! ஸோ...ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 16. அனைவருக்கும் வணக்கங்கள் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 17. விழிப்புணர்வுடன் இருப்பவர்களுக்கு
  ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம்தான்...

  வாரியார் பற்றிய நினைவுகளை
  வாசித்துக் கொண்டிருந்தேன்...
  .
  நவம்பர் 7, 1993 -
  வாரியாரின் இறுதி சடங்கு , வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் நடை பெற்றது .
  அதுதான் வாரியாரின் சொந்த ஊர்.
  வாரியாரின் உடல் அருகில் அமர்ந்து , கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாராம் டி.எம்.எஸ்...

  தழுதழுத்த குரலில் அந்த இடத்தில அவர் பாடிய பாடல் :
  ”வேலுண்டு வினை தீர்க்க
  மயில் உண்டு எமைக் காக்க..."

  வாரியார் அருகிலிருந்த அந்த நேரத்தில் , டி.எம்.எஸ்.ஸின் நினைவுகள் , கண்டிப்பாக “அருணகிரிநாதர்” காலத்துக்கு போய் இருக்கும்.

  “முத்தைத்தரு பத்தித் திருநகை” பாடலை அருணகிரிநாதர் படத்திற்காக பாட வேண்டிய சூழ்நிலை வந்தது டி.எம்.எஸ்.க்கு.
  .
  எப்போதுமே தான் பாடும் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு, அதன் பிறகுதான் அந்தப் பாடலை பாட ஆரம்பிப்பார் டி.எம்.எஸ்.

  “அருணகிரிநாதர்” படத்தின் பாடல் பதிவின்போது , பாடல் வரிகள் அடங்கிய காகிதத்தை தன் கையில் கொடுத்ததும் அசந்து போய் விட்டார் டி.எம்.எஸ்.
  .
  “முத்தைத்தரு பத்தித் திருநகை
  அத்திக்கிறை சத்திச் சரவண
  முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..”
  .
  திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். ; அதன் பொருள் விளங்கவில்லை ...! அருகில் இருந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கிறார் ; அவர்களுக்கும் தெரியவில்லை ..!

  பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்து விட்டார் டி.எம்.எஸ்.
  “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் நான் பாட மாட்டேன்..”

  டி.எம்.எஸ்.ஸின் பிடிவாதம் அறிந்த படக்குழுவினர், செய்வது அறியாமல் திகைத்தார்கள்... அருகில் இருந்த யாரோ ஒருவர் சொன்னார் : “வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்..”

  “அப்படியா..?” என்று கேட்ட டி.எம்.எஸ். அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்தார்...

  புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார் :

  “முத்தைத்தரு பத்தித் திருநகை ...
  வெண்முத்தை நிகர்த்த, அழகான
  பல்வரிசையும் இளநகையும் அமைந்த....

  அத்திக்கு இறை ..... தெய்வயானை அம்மைக்குத் தலைவரே....

  சத்திச் சரவண..... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே ....

  முத்திக்கொரு வித்துக் குருபர ..... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
  விதையாக விளங்கும் ஞான குருவே.......”

  இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல, அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே “அருணகிரிநாதர்” படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்... “அருணகிரிநாதர்” பாடலின் அர்த்தம் மட்டும் அல்ல ..!
  தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தின் அர்த்தத்தையும் நன்கு உணர்ந்திருந்தார் கிருபானந்த வாரியார்.

  அதனால்தான் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்கு பல காலம் முன்பே இப்படி சொல்லி இருந்தார் : “என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை , என் அப்பன் முருகப் பெருமான் , என்றோ எனக்கு சொல்லி விட்டான்.தன் வாகனமான மயிலை அனுப்பி, எனக்கு ஒரு கஷ்டமும் இல்லாமல் அந்த வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான் என் அப்பன் முருகன்..”

  வாரியார் சொன்ன வார்த்தைகளின்படியேதான் நடந்தது...!

  லண்டன் சென்றிருந்த வாரியார் , சென்னைக்கு விமானத்தில் திரும்பி வந்துகொண்டு இருந்தபோது,
  7.11.1993 அன்று அதிகாலை, வானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோதே வாரியார் உயிர் பிரிந்தது...
  இறைவனோடு இரண்டற கலந்தது...

  ஆம்.. வாரியார் வாக்கு பலித்தது !
  .
  # விழிப்புணர்வுடன் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம்தான்.
  விழிப்புணர்வுடன் இல்லாத நிலையில் ,
  மந்திரமும் வெறும் வார்த்தைதான்.

  நவம்பர் 7 - கிருபானந்த வாரியார் நினைவு தினம் .

  நண்பர் John Durai Asir Chelliah அவர்களின் fb பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகிய விடயம் அறிந்தேன் ஜி தேவகோட்டை கந்தசஷ்டி விழாக்காலங்களில் பல ஆண்டுகள் வாரியார் அவர்களின் சொற்பொழிவு கேட்டு இருக்கிறேன்

   நீக்கு
  2. டிடி இந்தக் சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தாலும் மீண்டும் இதை இங்கு உங்கள் வழி வாசிக்கும் போது புல்லரித்தது. அருமையான விஷயம் பகிர்ந்து நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
  3. உங்கள் பின்னூட்டம் படித்துவிட்டு தஞ்சையம்பதி சென்றால் அங்கு இதே சம்பந்தப்பட்ட பதிவு. ஆச்சர்யம் D D

   நீக்கு
  4. வாரியார் அவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் கில்லர்ஜி. அப்போது நாங்கள் தஞ்சை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் இருந்தோம்.

   நீக்கு
  5. ஆமாம், இம்மாதிரித் தற்செயல்கள் நானும் கவனித்திருக்கிறேன்

   நீக்கு
 18. பிறரை அவச்சொற்கள் சொல்வது தவறுதான் இதனால் மனம் வருந்துவார்கள் என்பதும் உண்மையே...

  அவைகள் பலித்து விடுவது என்பது குருவி உட்கார இளநீர் விழுந்த கதைதான்

  இப்போ அனுஷ்காவின் தாயாரே ஏதோ கோபத்தில் உன்னுடைய சொல்தெல்லாம் இழந்து விட்டு கடைசியில் தினம் உன்னை நினைத்து பதிவு போடும் ஸ்ரீராம்ஜியைத்தான் கட்டிக் கொள்ளப்போறே என்றால் இது பலித்து விடுமா ?

  அல்லது...

  அம்பானியின் மனைவியே ஏதோ கோபத்தில் உங்க சொத்தெல்லாம் வலைப்பதிவர் கில்லர்ஜிக்கு போய்விடும் என்றால்தான் நடந்து விடுமா என்ன ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி...

   பரவாயில்லையே!... நல்லாத்தான் கோர்த்து விடுறீங்க!..

   அதுல ஒரு விஷயம் இருக்கு!...

   அனுக்காவோட அம்மாவோ
   அம்பானியின் ஊட்டுக்காரங்களோ..

   இப்போ சொன்னா - பலிக்கிற மாதிரி விதி இருந்தாத்தான் அது நடக்கும்!..

   இல்லேன்னா
   அடுத்த செம்மத்துல தான்!..

   ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்..
   இளங்கோவடிகள் சும்மா ஒன்னும் சொல்லலை!....

   நீக்கு
  2. கில்லர்ஜி நான் சொல்ல நினைத்த்து காக்க உட்கார பனம்பழம் விழுந்த கதை போலவே இந்த சொல்முகூர்த்தம் இருந்தாலும் நாம் அதைப் பின்பற்றுவது என்பது மிக மிக நல்லது கில்லர்ஜி.

   நடக்கிறது நடக்கவில்லை என்பதல்ல இங்கு சொல்லப்பட்டது. நல் வார்த்தைகள் பேசுவது நல்லது என்பதைக் குறிக்கவே. அது நடக்கிறது என்பதை விட நேர்மறை சக்தி நம்மைச் சுற்றிச் சூழும் என்பது உண்மை. கண்டிப்பாக உண்மை. இவை எல்லாம் நல்லதற்கே சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாமே. ஒன்றுமே இல்லை...நாமே தினமும் நல்ல எண்ணங்களையும், நல்ல வார்த்தைகளைப் பேசிப் பார்ப்போம்....அன்று மனம் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் அமைதியாக நல்லதாகவே இருக்கும்..

   காக்காய் உட்கார என்று நீங்கள் சொல்லிக் கொடுத்திருக்கும் உதாரணங்களை விட சொல்லப்பட்டிருப்பது நல்லதற்கே நல்ல விஷயம் ஒன்று சொல்லப்பட்டிருக்கு என்று எடுத்துக் கொள்வோம் ஜி...

   கீதா

   நீக்கு
  3. குருவி உட்கார இளநீர் விழுவதால் நல்லது உனடக்குமாயின் அதுவும் நல்லதுதானே கில்லர்ஜி? அனுஸ்கா அம்மாவுக்கு அப்படி எல்லாம் சொல்ல வருமா என்ன?!! இருங்க எதற்கும் என் பாஸ் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்!

   நீக்கு
  4. // இப்போ சொன்னா - பலிக்கிற மாதிரி விதி இருந்தாத்தான் அது நடக்கும்!.. //

   அதே.... அதே... அதே நானும் சொல்ல நினைத்தேன் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  5. கில்லர்ஜி... உங்க அனுமானம் தவறு என்றுதான் நினைக்கறேன். திக்கற்றவனை, ஏதிலியை வருத்தினால், அதனால் அவன் துன்பமுற்றால் அவன் வாய்வார்த்தைகள் உடனே பலிக்கும் சக்தி வாய்ந்தவை.

   எண்ணிய எண்ணமெல்லாம் பலிக்காது. அதற்கான முயற்சி இருந்தால், வேளை வந்தால் எதுதான் பலிக்காது?

   எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
   திண்ணிய ராகப் பெறின்.

   நம் னத்தில் இறைவன் எப்போதும் இருந்தால், நாம் பிருக்குத் துன்பம் நினைக்காதவர்களாயிருந்தால், "நாளென் செய்யும் கோளென் செய்யும் தீச் சொல்தான் என் செய்யும்?"

   நீக்கு
 19. எதிர்மறைச் சொற்கள் அதற்கான பலனைத் தருகின்றன என்பதை என் நண்பர்களின் வாழ்க்கையில் கண்டு உணர்ந்துள்ளேன். உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முனைவர் ஐயா... எனக்கும் சிறு அனுபவங்கள் உண்டு.

   நீக்கு
 20. இருந்தாலும் ஸ்ரீராம் ஏதாவது சொல்லிட்டு போய்டுறார்....

  கருத்துரை எல்லாம்
  கல..கல..ந்னு கொட்டுது!..

  ஏ... சாமீய்!..

  நல்லவேளை.. கலா.. கலா..ந்னு கொட்டலையே!.. அதுவரைக்கும்
  சந்தோசப்படுங்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா துரை அண்ணா கலா கலா நு கொட்ட ஒரு ஆள் வருவாங்க!!! கலா கூடவே அண்ணினு ஒன்னும் சேர்ந்துக்குமாக்கும்....ஹா ஹா ஹா ஹா ஹா...இது உங்க காதுக்கு மட்டும் அவங்க பார்த்துடக் கூடாது...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. //இருந்தாலும் ஸ்ரீராம் ஏதாவது சொல்லிட்டு போய்டுறார்....//

   இப்ப நான் எண்ணத்தை ச்சே.... என்னத்தைச் சொல்லிட்டேன்னு....!

   நீக்கு
  3. //கலா கூடவே அண்ணினு ஒன்னும் சேர்ந்துக்குமாக்கும்....//

   ஸ்கொட் பிளைட் இன்னும் வரவில்லை கீதா...

   நீக்கு
 21. //"சொல்முகூர்த்தம் பலிக்கும் என்பார்கள். அதனால்தான் சில சமயம் அபசகுன வார்த்தைகளைப் பேசக்கூடாது என்பார்கள். பலித்துவிடும் என்பார்கள்.//

  எப்போதும் நல்லதே பேச வேண்டும் என்பார்கள், கீதா, வல்லி அக்கா, கீதாசாம்பசிவம் சொல்லி விட்டார்கள்.

  எண்ணம், சொல் எல்லாமே நன்றாக இருக்க வேண்டும் என்றும், நாம் சொல்வதை வானத்தில் பறந்து கொண்டே இருக்கும் பறவை நாம் பேசும் வார்த்தைகளை அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும் என்று அம்மா சொல்வார்கள்.

  அதனால் எப்போதும் நல்லதே பேச வேண்டும் என்பார்கள்.

  மீண்டும் வருகிறேன் இதை பற்றி பேச.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ் கோமதிக்கா...இந்தப் பறவை கதை வாட்சப்பிலும் கூட வந்தது...

   கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கிறோம்...

   எனவே மீண்டும் அப்புறமா வருகிறேன் இதைப் பற்றி பேசநானும்

   கீதாக்கா வல்லிம்மா கோமதிக்க எல்லோருடனும் ஹைஃபைவ்!!!

   கீதா

   நீக்கு
  2. ​பறவை பற்றித் தெரியாது குமதி அக்கா. ததாஸ்து பற்றித் தெரியும். ஆனாலும் எண்ண அலைகள் பலமாகி பலித்து விடும் என்பார்கள்!

   நீக்கு
  3. //குமதி அக்கா.//

   மன்னிச்சுக்குங்க கோமதி அக்கா... அவசரம்!

   நீக்கு
 22. சோ சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமை ஸ்ரீராம்.

  //எனக்கும் இது மாதிரி சில அனுபவங்கள் உண்டு. அவை எல்லாம் சிறிய அனுபவங்கள். எனினும் நான் பேசும்போது முடிந்தவரை மிகவும் ஜாக்கிரதையாகவே பேசுவது வழக்கம்.//

  யெஸ்ஸு யெஸ்ஸூ....எனக்கும் இதில் நம்பிக்கை மிக மிக மிக உண்டு ஸ்ரீராம். நிகழ்வுகள் எதிர்மறையாகவே நிகழ்ந்தாலும் கூட நான் நல்லது நடக்கும் என்ற தீவிரமாக நம்புவேன். எனக்கு அந்த அனுபவமும் உண்டு. வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் எதிர்மறையாகவே சொல்லிக் கொண்டிருந்தனர். நான் என் மகனிடம் சொன்னேன் தயவு செய்து நீ பாஸிட்டிவா நினை...நானும் அப்படியே...இருவரும் நம்பிக்கையுடன் நினைக்கும் போது நல்லது கண்டிப்பாக நடக்கும். நடந்தது. மற்றொன்று இதற்குத்தான் பிரார்த்தனை எனும் நேர்மறை சக்தி....வேண்டுதலே வேண்டாம்..இறைவனை துதித்தாலே போதும்...சக்தி கிடைத்துவிடும் என்ற அதீதமான நம்பிக்கை உண்டு.

  அவனும் மிக மிக பாஸிட்டிவ். நான் தப்பித்ட் தவறி ஏதேனும் சொன்னாலும் சரி அவன் தப்பித் தவறி ஏதேனும் சொன்னாலும் சரி ஒருவரை ஒருவர் சரி செய்து கொள்வோம்...

  இந்த விஷயத்தைப் பற்றித்தான் விஜயலக்ஷ்மி பந்தையன் என்பவர் நிறைய பேசுகிறார்...அவர் சைக்காலஜி பற்றியும் ஆல்ஃபா மைன்ட் பற்றியும் வகுப்புகள் கூட எடுக்கிறார். அதையே நான் ஆழ்ந்த பிரார்த்தனை என்பேன். அதற்கும் ப்ரேயருக்கும் வித்தியாசம் இல்லை என்றே தோன்றும்...

  அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அவர் சொன்னதையே சொல்லுகிறேன்...இங்கு எங்கேனும் எப்போதேனும் சொல்லிருக்கேனா என்று நினைவில்லை...

  இருந்தாலும் சொல்லுகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோ சொன்ன தகவல்கள் எல்லாமே புதிதுதான் ஸ்ரீராம் உங்க மூலமாத்தான் இது போன்றவை தெரிய வருது....ஸ்வாரஸ்யமான பதிவு...நல்ல கருத்துள்ள பதிவு ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  2. என்னுடைய பாஸிட்டிவ் எண்ணங்கள் சமீப காலத்தில் ஏனோ சற்றே தடைப்படுகின்றன கீதா..

   நீக்கு
  3. //உங்க மூலமாத்தான் இது போன்றவை தெரிய வருது....//

   நன்றி கீதா.. நாம் ரசித்ததை எல்லோரும் ரசிக்கட்டுமே என்றுதான்... உங்களை போல சிலராவது அதைப் படிக்காதவர்கள் இருக்கக் கூடுமே...

   நீக்கு
 23. மேல்குறிப்பிட்ட ஜிஎம்பி-சாரின் பதிவையும் போய்ப் பார்த்தேன். அவருடைய நண்பருக்கு நல்லது நடந்திருக்கிறது.

  கோபத்தில் எதையாவது உளறிவிட்டு, பின்னர் சாவகாசமாக நான் வருத்தப்படுவதுண்டு. கோபம் என்னைவிட்டுப் போக மறுக்கும் ஒரு குணம். எரிச்சலில் நாம் சொன்ன அபத்த வார்த்தைகள், பலிக்காதிருக்கவேண்டும் என எப்படி எண்ணுகிறோமோ, அப்படியே நாம் யாரை நோக்கியும் சொல்ல நேர்ந்த நல்லவார்த்தைகள் பலித்தால் நன்றாக இருக்குமே எனவும் தோன்றுகிறது. ஆனால், அந்த நேரத்தில் ‘ததாஸ்து’ சொல்ல மேலே ’அது’ இருக்கவேண்டுமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லும் உங்கள் குணம் எனக்கும் உண்டு ஏகாந்தன் ஸார். நேற்று கூட அப்படி ஒரு சம்பவம் நடந்தது. வெட்கி உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

   என் பின்னூட்டத்துக்கு ஜி எம் பி ஸாரின் பதிலும், அதற்கான என் பதிலும் கூட வாசித்திருப்பீர்கள்!

   நீக்கு
  2. பார்த்தேன்..பார்த்தேன். அவர் தன்னுடைய பழைய பதிவு (2011) ஒன்றுக்கான சுட்டி ஒன்றையும் கொடுத்து இருக்கிறார் கீழே. அதையும் படித்துவிட்டால், நீங்கள் அடுத்த வியாழனுக்குத் தயாராக ஏதுவாக இருக்கும்!

   நீக்கு
 24. நான் எங்கோ எப்போதோ வாசித்ததை வைத்து பல வருடங்களாகவே பிரார்த்தனையை நாம் முழுவதுமாகச் செய்ய வேண்டும் என்று சொல்லுவதுண்டு. நாம் மனதில் நினைப்பதை இடையில் அந்த நூல் அறுந்துவிடாமல் மனதை ஆழ்நிலைக்குக் கொண்டு போய் நாம் நம் குழந்தைகளைப் பற்றியோ அல்லது நாம் அடைய நினைப்பதையோ முழுவதும் விஷுவலைஸ் செய்து இறைவனை நினைத்துப் பிரார்த்தனை செய்தால் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு...நமக்காக இல்லை என்றாலும் பிறருக்காகவும் இதைச் செய்யலாம்...அஃப்கோர்ஸ் பொறுமை வேண்டும்...நாம் பிரார்த்தித்தாலும் அது நடக்கும் நேரத்தில்தான் நடக்கும் என்றாலும் பிரார்த்தனையில் இடையில் கட் வரக் கூடாது...

  விஜயலஷ்மி பந்தையன் அவர்கள் சொன்ன ஒரு சம்பவம். அவரது ஆல்ஃபா மைன்ட் வொர்க்ஷாப்பிற்கு ஒரு பெண்மணி வந்தாராம். கற்றுக் கொண்டு அவர் அதைப் பயிற்சி செய்யத் தொடங்கினாராம்.

  அப்போது அப்பெண்மணி ஃப்ளாட் புக் செய்து அது கட்டுமானம் நடந்து கொண்டிருக்க இவர் அது நல்லபடியாக முடிய ஆழ்நிலை சென்று அதை விஷுவலைஸ் செய்யத் தொடங்கினாராம்.

  இந்த ஆழ்நிலை அதாவது ஆல்ஃபா மைன்ட் பவர் பயிற்சி என்பது நமது உள் மனதில் சென்று நாம் என்ன அடைய நினைக்கிறோமோ அதைத் தொடர்ச்சியாக நாம் அதை அடைவது போன்று விஷுவலைஸ் செய்து பயிற்சி...

  இப்பெண்மணியும் செய்துவிட்டு ஆனால் அவரால் அந்த வீட்டிற்குக் குடி போக முடியவில்லை. கிரகப்பிரஏஸம் செய்த பின்னும்....கரண்டு வரவில்லை, தண்ணீரில் இல்லை...லிஃப்ட் இல்லை...இன்னும் முடியவில்லை என்று பல... இரண்டாவது மாடியோ...மூன்றாவது மாடியோ நினைவில் இல்லை...இப்பெண்மணி விஜயலக்ஷ்மியிடம் சென்று கேட்டிருக்கிறார். நான் பயிற்சி செய்தும் நடக்கவில்லையெ என்று.

  விஜயலக்ஷ்மி கேட்டாராம்...நீங்கள் என்ன நினைத்து பயிற்சி செய்தீர்கள் என்று. அப்பெண்மணி சொன்னாராம்....நான் புது வீட்டு கிரகப்பரவேஸம் செய்வதாக என்று.

  விஜயலஷ்மி சொன்னாராம்....னீங்கள் முழுமையாகச் செய்யவில்லை. கிரகப்பிரவேசம் வரைதான் விஷுவலைஸ் செய்திருக்கீங்க. அந்த வீட்டில் சென்று எல்லா வசதிகளுடனும் மகிழ்வாக வாழ்வது போல நீங்கள் விஷுவலைஸ் செய்து பயிற்சி செய்யவில்லை - இங்கு நாம் கவனிக்க வேண்டியது "மகிழ்வாக" என்பதுதான் - அப்படி விஷுவலைஸ் செய்து பயிற்சி செய்திருக்கணும் என்று. அப்புறம் அந்தப் பெண்மணி அப்படிச்செய்து சென்றதாகச் சொன்ன நினைவு...

  எனவே எதுவும் முழுமையாகப் பிரார்த்தனை வேண்டும்...

  இதேதான் சொல்முகூர்த்தம், நல்ல எண்ணெங்கள், நல்ல செயல்கள் எல்லாவற்ற்றிற்கும் பொருந்தும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனை பற்றிய தகவல் வியப்பளிக்கிறது கீதா... சரி, அவர் பிரார்த்தனையை செய்யாமலிருந்திருந்தால்? யோசிக்கிறேன்.

   நீக்கு
  2. ஸ்ரீராம் இங்கு பிரார்த்தனை பொதுவான ஒன்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஆழ்னிலை த்யானமோ அல்லது ப்ரேயர் என்றோ கூடக் கொள்ள வேண்டியதில்லை. பிரார்த்தனை என்பது பாஸிட்டிவாக நினைப்பது...அந்த பாஸிட்டிவ் எண்ணத்தில் அதாவது நம்பிக்கையில் ஒரு சிறு ப்ரேக் வந்தாலும் த்டங்கல்கள் ஏற்படும் என்பதுதான். அதாவது நமது பாஸிட்டிவ் எண்ணத்திலும் ஒரு சின்சியரிட்டி...முயற்சியில் ஒரு சிறு ப்ரேக் வந்தாலும் தடங்கல் ஏற்படுமே அப்படித்தான்.

   என்றாலும் எல்லாமே நமக்கு நடக்கணும் என்று இருந்தால்தான் நடக்கும்...ஆனால் அதுவரை நம் மனது தள்ளாடாமல் சோர்ந்து போகாமல் இருக்கவே இந்தப் பிரார்த்தனை, ஆல்ஃபா மைன்ட் பவர், பாசிட்டிவ் எண்ணங்களை மனதில் தொடர்ச்சியாக நினைத்தல் என்பது.....

   இப்ப நீங்க கூடச் சொல்லியிருக்கீங்களே இப்போதெல்லாம் உங்கள் பாசிட்டிவ் எண்ணங்கள் ஏனோ சற்றே தடைபடுகின்றன என்று சொல்லியிருக்கீங்கலியா....அதுதான்...தடைபடக் கூடாது..அந்த நூலிழையில் சின்ன கட் வந்தாலும் நாம் நினைப்பது தடைபடும் என்று சொல்லப்படுகிறது...எனவே பிரார்த்தனை செய்யாட்டாலும் எண்ணங்கள் நேர்மறையாக வலுவாக இருந்தாலே போதும்...

   ..இதுக்கு என் சிறு வயதில் நடந்த ஒன்று சொல்லலாம்...அடுத்த கருத்தில் சொல்லறேன்....துளசியின் கருத்தைப் போட வந்தவள் இங்கு பார்த்ததும் அதில் ஒன்றிவிட்டேன்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. சில நிகழ்வுகள் நம் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்து விடுகின்றன...

   நீக்கு
  4. //துளசியின் கருத்தைப் போட வந்தவள் இங்கு பார்த்ததும் அதில் ஒன்றிவிட்டேன்..//

   இன்னமும் கூட போடவில்லை!!!

   நீக்கு
 25. இதே சொல் முகூர்த்தம் அதாவது குழந்தைகளுக்கு நாம் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன்...இரண்டு மூன்று பதிவுகள் இங்கு ஷிஃப்ட் ஆன பிறகு நடந்தவை நடப்பவை இவற்றை எழுதி வைத்திருக்கேன் அதில் சொல்லுகிறேன்....இங்கு ரொம்பவே நீண்டு விட்டது...

  கீதா

  பதிலளிநீக்கு
 26. முட்டாள், மடையன் என்பதைக் கூட நாம் அடிக்கடி பயன்படுத்துவோம் தான் பொதுவாகவே அது சும்மா தான் பல சமயங்களில் என்றாலும் அதையும் பல சமயங்களில் குறிப்பிட மனம் தோன்றாது. பயப்படும்...ஏன்னா இந்த உலகில் யாருமே முட்டாள் மடையன் கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் அறியாமையால் தவறுகள் நடக்கலாம்...அதற்காக நாம் ரொம்ப புத்திசாலி போல மற்றவரை முட்டாள் மடச்சாம்பிராணி என்றெல்லாம் சொல்ல வேண்டாமே என்றும் தோன்றும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.

   சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா...

   வரிகள் நினைவுக்கு வருகின்றன.

   நீக்கு
 27. சகோதரி கீதா + அன்பர் கில்லர்ஜி + அனைத்து அன்பு வாசகர்களுக்கும் :

  ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
  காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

  விளக்கம் :
  எனது வலைத்தளத்தை மாற்றிய முதல் குறளின் குரல் பதிவு... இணைப்பு :-

  http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Power-of-Word.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி குறித்துக் கொண்டுவிட்டேன் வாசிக்கிறேன் டிடி...மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
  2. டிடி வாசித்துவிட்டேன் ரொம்பவே அருமையா சொல்லிருக்கீங்க...அதிகாரி அதிகாரம் (இரு பொருள்பட) அதையும் ரசித்தேன்...அப்புறம்

   சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
   சொல்லிற் பயனிலாச் சொல்

   இது ஸ்ரீராமின் சொல்முகூர்த்தம் பதிவிற்கு ரொம்பவே பொருத்தம்!!!!

   கீதா

   நீக்கு
 28. ஸ்ரீராம் வைகோ சொல்லியிருந்தது அருமை....ரசித்தேன்....

  குறிப்பாக கூலிங்க் க்ளாஸ் போட்டுக் கொண்டு ஒருவரிடம் பேசுவது நாகரீகம் அல்ல என்று சொன்னது. அவர் அதை எடுத்துவிட்டுப் பேசியது...நல்லதொரு பண்பு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைகோ சொல்லி இருப்பதற்கு முதலில் நான் "என்ன வீரம்? கு வி மீ ம ஒ என்று தலைப்பிட்டிருந்தேன். அப்புறம் எடுத்து விட்டேன். அரசியல் இல்லாத வைகோவின் தமிழ் ரசிக்கத்தக்கது.​

   நீக்கு
  2. //கு வி மீ ம ஒ//

   :) எனக்கு புரிஞ்சு

   நீக்கு
  3. ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல் நானும் மண்டைய பிச்சுக்கிட்டேன்....அது என்ன கு வி மீ ம ஒ?!!!

   கீதா

   நீக்கு
  4. haa haaa :) geethaa ..kuppura vizhunthaalum ............................neengale continue pannalam intha fruit mozhiyai

   நீக்கு
  5. அர்த்தம் புரிந்து விட்டது என்று நம்புகிறேன்!

   நீக்கு
  6. கு.வி.மீ.ம.ஒ. க்கு காப்பிரைட் இங்கே. எல்லோரும் ராயல்டியை அமெரிக்கன் டாலரில் அனுப்பி வைக்கவும். :P:P:P

   நீக்கு
 29. அனைவருக்கும் வியாழக்கிழமை வண்ணக்கம்ஸ் :)
  30 வயசுக்கு கீழிருக்கவங்களுக்கு ஒரு நாள் பெர்த்டே ஆனா 60 க்கு மேலே போனா ஒரு வாரம் ஒரு மாசம்னு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடரும்னு எங்கியோ படிச்சேன் :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​வாங்க ஏஞ்சல்... எப்பவும் உங்களுக்கு உங்க பாஸ் பற்றிய நினைவுதான் போங்கள்...!

   நீக்கு
  2. https://media1.tenor.com/images/9aad30dd62c75fcb93721ed598b97114/tenor.gif?itemid=12374477

   நீக்கு
  3. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹாஆஅ ஹையோ ரொம்பவே சிரிக்கிறேனே...அடக்க முடியலையே!! ஸ்காட் ஃப்ளைட் லேன்ட் ஆனா இருக்கு தீபாவளி!!

   கீதா

   நீக்கு
  4. ஹாஹா நான் ரியல் பாஸ்னு நினைச்சி ஆணியா அனுப்பிட்டேன் :) இதனால் என்ன தெரியுது பெண்கள் எங்கிருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது அவங்க ஆத்துக்காரர் தான் :)

   எங்க ரீல் பாஸ் சேலரி கட் பண்ண போறாங்களாம் :) இதை பார்த்தா அவ்ளோதான்

   நீக்கு
  5. //ஹாஹா நான் ரியல் பாஸ்னு நினைச்சி ஆணியா அனுப்பிட்டேன் :) இதனால் என்ன தெரியுது பெண்கள் எங்கிருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது அவங்க ஆத்துக்காரர் தான் :)//

   காரணம் நான் பாஸ்னுசொல்ற ஆள். அதோட ரிலேட் பண்ணி அர்த்தம் எடுத்துகிட்டீங்க போல!!!

   நீக்கு
 30. வெல்லும் வார்த்தைகளும் கொல்லும் வார்த்தைகளும் கூடவே மனதை கொள்ளும் வார்த்தைகளும் பற்றி நிறையவே பேசலாம் .இங்கே சகோ டிடி ,கீதா கோமதிக்கா கீதாக்கா வல்லிம்மா துரை அண்ணா எல்லாரும் மிக அருமையா சொல்லிவிட்டதால் நமக்கு தெரிந்த ஒரு இரண்டு அனுபவங்களை சொல்கிறேன் .

  பொதுவாவே நம் மனம் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எதிர்பார்க்கும் .நான் ஸ்கூலில் படிக்கும்போது நடந்த சம்பவம் .என் வகுப்பில் மயில் தொகை போல் நீண்ட அடர்ந்த கூந்தல் ஒரு பெண்ணுக்குண்டு எல்லாரும் அவள் கூந்தல் அழகுக்கு fans பாம்பு போல் நெளியும் பார்க்க கொள்ளை அழகு .அவள் நண்பி ஒருத்திக்கு குறைவா தோள் க்கும்ஜ் கீழே மெல்லிய சடை இருக்கும்
  பிஸிக்கல் எஜுகேஷன் வகுப்புக்கு உடைமாற்றுவோம் அன்னிக்கு மெல்லிய கூந்தல் உலா பெண் தனது சடையை ரிப்பனால் மடிக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததை நீண்ட கூந்தல் பெண் களுக்குனு சிரிச்சா ..அப்போ அந்த பெண் ஒரு வார்த்தை சொன்னா எனக்கு நினைவிருக்கு ..//இப்போ சிரிக்கிறியா பாரு ஒரு நாள் நீ ஏதாவது ஆற்றில் குளிக்க போவே அப்போ ஆற்றோடு உன் கூந்தல் அப்படியே அடிச்சிட்டு கொட்டி போகப்போது //அப்போ எங்களுக்கு விளையாட்டா இருந்தாலும் 5 வருடம் கழித்து நீண்ட கூந்தல் பெண்ணை பார்த்து அதிர்ந்தேன் ..டைபாய்டு வந்து தலையில் வெகு சிறிதே :( ..
  அவளே சொன்னா அன்னிக்கு ---- விளையாட்டை சொன்னது பளிச்சிருச்சி பார்த்தியா :(
  கூடுமானவரை யாரையும் புண்படுத்தாம இருப்பதே நல்லது ..

  இன்னோர் சம்பவம் ஒருவர இனிமே (இந்தியாவில் )இந்நாட்டில் காலை வைக்கவே மாட்டேன் என்று வெறுத்துப்போன கட்டத்தில் சொன்ன வார்த்தை இன்னமும் பலிக்குதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஏஞ்சல்... சில சமயம் நாம் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது என்று நினைக்க வைக்கும் சம்பவங்கள் நிறையவே இருக்கும். குருவியோ, பனம்பழமோ... நமக்கு அந்தக் குற்ற உணர்த்தி வந்து விடக் கூடாது.

   நீக்கு
  2. இன்னொரு விஷயமும் சொல்லணும் :) முந்தி லாம் இந்த மாதிரி பாட்டு பாடறவங்களும் சரி வசனம் பேசறவங்களும் சரி பொறுப்புடன் நடந்தனர் சுயநலமோ இல்லை பொதுநலமோ நல்லதை மட்டும் பேசினாங்க எழுதினனாக .
   அப்போதைய கால கட்டத்துக்கு இப்பத்திய காலகட்டத்துக்கும் நீங்களே வித்யாசத்தை உணர்வோம் ..
   அந்த நெகட்டிவிட்டி வரும் பாடல் வரிகள் எழுத கூட பிடிக்கலை எனக்கு அந்த வன்முறையான words ,dialogues அதனால்தான் எதற்கெடுத்தாலும் எங்குபார்த்தாலும் ஹீமோகுளோபின் தெறிச்சு இருக்கோன்னு தோணுது

   நீக்கு
  3. ஏஞ்சல் உண்மை உண்மை உண்மை...என் அனுபவத்தில் எனக்கு நிறைய உண்டு....

   ஸ்ரீராம் சொல்முகீர்த்தம் நு போட்டதும் எனக்கு இரண்டு கதைகள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது...ஓ மை காட் எழுதணுமே...அதுதான் கஷ்டம் ஹா ஹா ஹா ரொம்பவே ஸ்லோ கோச் நான்...

   ஏஞ்சல் சிலர் மனதில் ரொம்ப வேதனைப்பட்டு சாபம் போன்ற வார்த்தைகளைச் சொல்லும் போதோ அல்லது ஒரு காழ்ப்புணர்ச்சியிலோ அது கண்டிப்பாக நடக்கிறது...ஆனால் காழ்ப்புணர்ச்சியில் சொல்லும் போது அது பிறருக்கு நடந்தாலும் சொன்னவருக்கு பௌன்ஸ் பேக் ஆகிறது என்பதும் உண்டு.....என்பதில் எனக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. அதனாலேயே எனக்குக் கோபம் வருவது அபூர்வம் என்றாலும் கூட...வந்தாலும் உடனே ப்ரே பண்ணத் தொடங்கிடுவேன்...நாவில் நல்ல வார்த்தைகள் மட்டுமே வரணும் என்பதற்காக...

   கீதா

   நீக்கு
  4. //அந்த நெகட்டிவிட்டி வரும் பாடல் வரிகள் எழுத கூட பிடிக்கலை//

   ​​அப்படி எரிச்சல் வரும் வரிகள் கொண்ட பாடல் ஒன்று 'அடிடா அவளை...'

   நீக்கு
  5. //ரீராம் சொல்முகீர்த்தம் நு போட்டதும் எனக்கு இரண்டு கதைகள் மனதில் தோன்றத் தொடங்கிவிட்டது...ஓ மை காட் எழுதணுமே...அதுதான் கஷ்டம் ஹா ஹா ஹா ரொம்பவே ஸ்லோ கோச் நான்...//

   அடடே... எழுதுங்க கீதா... மெதுவா எழுதி அனுப்புங்க.

   நீக்கு
 31. இந்தப் பதிவில் என்பதிவைக் குறிப்பிட்டதால் நான் 2011 ல் எழுதிய ஒரு பதிவி சுட்டி இதோhttps://gmbat1649.blogspot.com/2011/09/blog-post_30.html/வெறுமே சொல்லும் வார்த்டைகளுக்கு அர்த்தம் தேடக் கூடாது இருந்தாலும் இனிய உளவாக இன்னாதகூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி எம் பி ஸார். சென்று படித்துப் பின்னூட்டம் இட்டுவந்தேன்.

   நீக்கு
 32. நான் ஒரு ராசியில்லா ராஜான்னு TMS பாடின பிறகுதான் அவருக்கு இறங்குமுகம்னு சொல்வாங்க.
  நெகட்டிவ் சிந்தனையோ வார்த்தையோ கூடவே கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரிஷபன் ஜி. ... நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்.

   நீக்கு
  2. ரிஷபன் அண்ணா டி எம் எஸ் பற்றிய செய்தி புதிது. ஆனால் எனக்குத் தோன்றும் ஒன்று...டி எம் எஸ் அந்தப் பாடலைப் பாடினாலும் அவர் மனதில் அப்படியான எண்ணம் இருந்திருக்காதே. சினிமாவிற்காகப் பாடுவதுதானே. அதே போல தங்கவேலு அவர்கள் சினிமா வசனத்தைத்தானே பேச வேண்டியிருந்தது மனதில் கண்டிப்பாக நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாரே...அப்ப்டி என்றால் இந்த இடத்தில் நா சும்மாவேனும் தொழிலுக்காகச் சொல்லும் வார்த்தைகள் மனதை விட ஒரு படி மேலோங்கி நிற்கிறதோ!

   இதில் மட்டும் நிறையக் கேள்விகள் எழுகின்றன. ஏனென்றால் நான் அறிந்தது நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், அதனால் விளையும் நாம் சொல்லும் வார்த்தைகள் அதற்குத்தான் வலிமை என்று. அப்படி என்றால் வில்லனாகவே நடித்த நடிகர்கள்? குறிப்பாக எம் என் நம்பியார். அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லவர். அதீத இறை உணர்வு உள்ளவர். ஐயப்ப பக்தர். அவர் எத்தனை படங்களில் கெட்ட வார்த்தைகள் பேசியிருப்பார்...கற்பழிப்பு என்று...தொழிலுக்காக...

   இது மட்டுமே கேள்விகளை எழுப்புகிறது. அதாவது தொழிலுக்காக அவர்கள் செய்தது அவர்களின் இறங்குமுகத்திற்குக் காரணமாக அமைந்தது என்று நம்பப்படுவது...

   கீதா

   நீக்கு
  3. சொல்லும் வார்த்தை தவறாக இருக்கக் கூடாது என்பதுதானே பதிவு கீதா? மனசாரச் சொன்னாலென்ன, நடிப்புக்காகச் சொன்னாலென்ன? கே ஆர் ராமசாமி விஷயமும், தங்கவேலு விஷயமும் உதானமாகக் காட்டப்பட்டிருப்பதே அதற்குதானே? ஏன், பானு அக்கா சொல்லியிருக்கும் "என் பாடிதான்..." மட்டுமென்ன, அவர் மனசாரவா சொல்லி இருப்பார்...

   நீக்கு
 33. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

  வெல்லும் வார்த்தையும்..... நல்ல சிந்தனை நல்வழிப்படுத்தும்....

  இனிய தகவல் தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 34. வாலி அவர்கள் விகடன் பத்திரிக்கை, அல்லது குமதம் என்று நினைக்கிறேன் இந்த மாதிரி நெகடிவ் கவிதையால் கஷ்டபட்டதை பகிர்ந்து இருந்தார்.
  கால்கள் நின்றது நின்றது தான் பாடலோ என்ன்வொ நினைவுக்கு வரவில்லை நிறைய எழுதி இருந்தார்.

  என் அம்மா அடிக்கடி நாம் சொல்லகூடாது சொல்லும் வார்த்தைகள்:- இனி இங்கு வரமாட்டேன், அங்கு போகவே மாட்டேன் ,இனி அவ்வளவுதான் சபதம் போடுவது போல் பேச கூடாது என்பார்கள். இனி அங்கு போக முடியாது போய் விடும் என்று சொல்வார்கள்.

  திருவெண்காடு கோயில் குருக்கள் ஒரு பெண்ணிடம் விளக்கு போடும் முறையை சொல்லிக் கொண்டு இருந்தார். எனக்கு குழந்தை இல்லை, பிறக்க வேண்டும் என்று விளக்கு போட கூடாது. இறைவன் அருளால் குழந்தை பிறக்கும் என்று நினைத்து விளக்கு போட வேண்டும் என்று.அந்த கோவிலில் முக்குளத்தில் குளித்து விட்டு இவ்வளவு விளக்கு போட வேண்டும், என்று இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா உங்கள் பின்னூட்டம் இஸ்லாமியர் சொல்லும் "இன்ஷா அல்லா" வை நினைவு படுத்துகிறது. தலைக்கனத்துடன் மனிதர்கள் எதுவும் சொல்லக் கூடாது... எனவே நாளை உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னால்கூட இன்ஷா அல்லா என்று சர்த்துக்கொள்வார்கள்.... அல்லாஹ்வின் அருள் இருந்தால் என்ற பொருளில். நான் அதை 'இன்ஷா முருகா' என்று சொல்வேன்! man proposes god disposes என்று சொல்வார்களே... அதுவும் நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
  2. எனக்கு குழந்தை இல்லை, பிறக்க வேண்டும் என்று விளக்கு போட கூடாது. இறைவன் அருளால் குழந்தை பிறக்கும் என்று நினைத்து//

   யெஸ் யெஸ் அக்கா இதே இதே...இதைத்தான் நான் சொல்லுவது. அது பிரார்த்தனையோ, ஆல்ஃபா மைண்ட் பவரோ, நல்ல எண்ணங்கள் விதைத்தலோ எதுவானாலும் இது பொருந்தும்.... நானும் கூடியவரை முயற்சி செய்வதுண்டு....கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பேசினாள் எண்ணினால் கடைபற்ற முடியும்தான்....ஆனால் நாம் தான் மனிதர்கள் ஆயிற்றெ...ஹா ஹா ஹா

   நீங்களும், ஸ்ரீராமும் சொன்னது போல் என் பாட்டி எல்லாம் சொல்லுவது போய் வருகிறேன் என்றுதான் சொல்லணும் என்று...போறேன் என்று சொல்லக் கூடாது என்பார். அப்புறமா வரேன் என்று சொல்லலாம்...அது போல நாளை பொழச்சுக் கிடந்தா வரேன்...ஈஸ்வரோ ரகஷது என்பார். ஆமாம் ஸ்ரீராம்..மான் ப்ரொப்போஸஸ்...காட் டிஸ்போஸஸ். அதையும் கூட காட் டிஸ்போஸஸ் எனாமல் காட் ப்ளெஸ் அல்லது காட்'ஸ் வில். என்றும் சொல்லலாமோ!

   கீதா

   நீக்கு
  3. யெஸ் .God Willing னு சொல்லணும் ..இன்னொருவரை வாழ்த்தும்போது பண்ணும்போது மே god bless யூ னு தான் சொல்வாங்க .இறைவனுக்கு சித்தமானால்னுதான் சொல்லணும்

   நீக்கு
  4. //எனவே நாளை உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னால்கூட இன்ஷா அல்லா என்று சர்த்துக்கொள்வார்கள்.... அல்லாஹ்வின் அருள் இருந்தால் என்ற பொருளில். நான் அதை 'இன்ஷா முருகா' என்று சொல்வேன்! man proposes god disposes என்று சொல்வார்களே... அதுவும் நினைவுக்கு வருகிறது.//

   நம்ம பெரியவங்க "பிச்சைக்காரனுக்கு" என்பார்கள். அல்லது "பிழைத்துக் கிடந்தால்" என்பார்கள்.

   நீக்கு
  5. நாங்கள் "கடவுள் புண்ணியத்துல" என்றுதான் பெரும்பாலும் சொல்வோம்.

   நீக்கு
 35. தீபாவளி முடிந்தது. விருந்தினர்கள் விடை பெற்றுக் கொண்டனர். ஆசுவாசமாக வந்தால்... இங்கே ஒரே கும்பல். என்னுடைய பின்னூட்டத்தை யாராவது படிப்பாரகளா? இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை.
  அனுஷ்கா படங்கள் அட்டகாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுஷ் படங்களை ரசித்ததற்கு அரமசெயலருக்கு நன்றி!

   நீக்கு
  2. பானுக்கா நான் பார்த்துட்டேன் உங்க கமென்டை....ஸ்ரீராம் சொன்னதைப் பார்த்தும் சிரித்தேன்...அரம செயலருக்கு வாழ்த்துகள்..அது சரி ஹெட் யாரு ஸ்ரீராம் துரை அண்ணாவா நீங்களா?!!! வம்பு! மீ இன் த ரன் வே!!

   கீதா

   நீக்கு

 36. //ஆக்கமும், அழிவும் நாம் சொல்லும் சொல்லால் ஏற்படுவதால் எந்த சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாய் இருக்க வேண்டுமே.//

  திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் பேசும் பேச்சில், சொல்லில் செயலில் விழிப்புணர்வுடன் கவனமாய் இருந்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 37. கடவுள் கிட்டே நோய் குண்மாக வேண்டும் நோய் குணமாக வேண்டும் என்று சொல்லக் கூடாதாம், உன் அருளால் நான் நலமாக இருப்பேன் , இருக்கிறேன் என்று சொல்ல வேண்டுமாம்.
  நான் நலமாக் இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டுமாம். நம்மால் அதை கடைபிடிக்க முடியவில்லை கால்வலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வருகிறது. என் கால்கள் பலம் பெற்றுவிட்டது நான் நலமாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு ரொம்பப் பயிற்சி வேண்டும் அக்கா!

   நீக்கு
  2. ஆமாம் கோமதிக்கா...கடவுளுக்கு எப்போதுமே நாம் நன்றி உரைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் படித்த செயின்ட் ஜோஸஃப் பள்ளியில் ஆசிரியை மேரி லீலா டீச்சர் சொன்னது மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது...

   ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் நமக்குப் பயிற்சி வேண்டும்....

   கோமதிக்கா நீங்க அந்தக் கடைசி வரியைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்....என் அனுபவத்தினால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சொல்லுகின்றேன்....

   கீதா

   நீக்கு
  3. கீதா, அப்படியே சொல்லி வருகிறேன்.
   நன்றி.

   நீக்கு
 38. ஸ்ரீராம் ஜி! சொல்முகூர்த்தம் இதில் நான் ரொம்பவே நம்பிக்கை உடையவன். இள வயதில் எனக்குக் கோபம் வரும். ஒரு நொடி தான் அது என்றாலும்...அது நல்லதல்லவே..வீட்டிலும் சரி ஆசிரியராகப் பணியாற்றிய போதும் சரி...அப்போது நெகட்டிவ் வார்த்தைகள் வந்துவிடும். கோபம் தணிந்ததும் மிகவும் வருந்துவேன். பின்னர் இறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தேன். அதன் பின் நெகட்டிவ் வார்த்தைகள் வராமல் கவனமாக இருக்க முயற்சி. இப்போது நிதானம் வந்துவிட்டதுதான்...யோசித்துப் பேசுவதற்கும் தயார்ப்படுத்திக் கொண்டேன். டக்கென்று பதில் சொல்லாமல் வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்துப் பதில் சொல்ல. நெகட்டிவ் வார்த்தைகள் சிந்தனைகள் கூடாது என்பதில் எனக்கு ரொம்பவே நம்பிக்கை உண்டு.

  நீங்கள் சொல்லியிருப்பது, சோ அவர்களின் தகவல் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்.

  நல்ல பதிவு. நல்ல கருத்துள்ள பதிவு. ஸ்ரீராம் ஜி பதிவை ரசித்தேன்.

  அனுஷ்கா (எனக்கு இவரைப் பற்றி எல்லாம் அத்தனை தெரியாது. படம் பார்ப்பேனே தவிர அப்புறம் யார் நடித்திருக்கிறார்கள் என்று கேட்டால் கூட டக்கென்று சொல்லவராது.) பற்றிய உங்கள் கமென்ட்ஸ் எல்லாம் ரசித்தேன்.

  வைகோ அவர்களின் வரிகள் பிரமாதம். அவர் நல்ல பேச்சாளர். அவரது அரசியல் பற்றி அவ்வளவாகத் தெரியாது.

  எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளஸிஜி. கோபத்தை அடக்குவதை விட கோபமில்லாத மனமாய் இருக்கப் பழகிக்கொள்ள என்று என் அம்மா சொல்வார். அது போல பழகினாலும் மனித பலவீனம் அடிக்கடி தலைக்காட்டும்! அனுஷ் நடித்த படம் எல்லாம் நானும் ரொம்பப் பார்த்ததில்லை. ஏதோ ஒன்றிரண்டு இருக்கும்!

   நீங்கள் பூரண நலம் பெற்றுவிட்டீர்களா?

   நீக்கு
 39. நல்ல வார்த்தைகள் பேசுவது மிகவும் முக்கியம். இதை எங்கள் வீட்டில் வற்புறுத்துவார்கள். 'முப்பத்திரெண்டு பல்லில் ஒரு பல்லு நச்சுப் பல்லாக இருந்து பலித்து விடும்" என்பார்கள். "ததாஸ்து" விஷயமும் சொல்வதுண்டு. எனக்கும் இதில் நம்பிக்கை உண்டு. அதனால்தான் அவச் சொற்கள் கொண்ட பாடலை பாடுவதை தவிர்து விடுவேன். இந்த காரணத்தாலேயே சீரியல்கள் பார்ப்பதில்லை.
  மஸ்கட்டில் எங்கள் நண்பர் ஒருவர்,"நான் இந்த ஊரை விட்டு வர மாட்டேன், என் பாடிதான் போகும்" என்று ஒரு முறை கூறினார். அவர் ஒரு விபத்தில் சிக்கி, கோமா நிலைக்குப் போய், கிட்டத்தட்ட ஒரு டெட் பாடி போல இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்.
  க்ரேஸி மோகன் நாடகங்களில் 'இழவு' என்னும் வார்த்தை நிறைய இடம்பெறும். நான் ஒரு முறை அவரை சந்தித்த பொழுது,அதை குறிப்பிட்டு, இதை குறைத்துக்கொள்ள முடியாதா? என்றேன் அதற்கு அவர்,"இது பிராமண குடும்பங்களில் சாதாரணமாக உபயோகப்படுத்தும் வார்த்தைதானே?" என்றார். ஆனால் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லி இருக்கும் மஸ்கட் சம்பவம் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. கிரேசி மோகன் பற்றிச் சொல்லி இருந்தீர்கள். யதேச்சையாக ஒரு தகவல். கிரேசியின் தந்தை கிருஷ்ணமாச்சாரி நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது வயது 93. இந்தக் கஷ்டமுமின்றி அனாயாச மரணம் என்று திருப்பூர் கிருஷ்ணன் முக நூலில் சொல்லியிருந்தார்.

   நீக்கு
  2. பானுக்கா பல விஐபி க்களைச் சந்தித்த பதிவர் என்று ஒரு பட்டம் கொடுத்துடலாம் உங்களுக்கு!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. //..என்று ஒரு பட்டம் கொடுத்துடலாம் ..//

   கொடுத்திடலாம்தான். ஆனால் ஏற்கனவே இங்கே உலா வந்துகொண்டிருக்கும் ஒரு ‘பட்டதாரி’யை அது பாதிக்காமல் இருந்தால் சரி.!

   நீக்கு
 40. கோமதி அரசு அவர்களின் பின்னூட்டமும், டி.டி. அவர்களின் பின்னூட்டமும் சிறப்பு. தி.கீதாவின் பின்னூட்டத்தில் ஆல்ஃபா தியானத்தையும், மேற்கத்திய பாசிடிவ் திங்கிங்கையும் குழப்பிக் கொண்டிருகிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், மேற்கத்திய பாசிடிவ் திங்கிங் ஒரு தோல்வி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு கீதாதான் பதில் சொல்லவேண்டும்!

   நீக்கு
  2. இல்லை அக்கா குழப்பிக் கொள்ளவில்லை. எனக்கு மேற்கத்திய பாசிட்டிவ் திங்கிங்க் பற்றித் தெரியாது. விஜயலஷ்மி பந்தையன் பேசியது மட்டும் தான் தெரியும். அந்த வொர்க்ஷாப்ஸ் அட்டென்ட் செய்தவர்கள் எங்கள் வீட்டில் உண்டு. ஆனால் எனக்கு அது விவேகானந்தர் சொல்லுவதை ஒத்தது போல் தோன்றினாலும், (னீ எதுவாக நினைக்கிறாயோ அதை மனதில் நினைத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்...அப்படிச் சிந்திக்கும் போது உன் மனது அதை நோக்கிப் பயணிக்கும் நேர்மறை சக்தியால் என்று...) அதை ஒத்தது போல் தோன்றினாலும் வி ப சொல்லுவதும் நம் பிரார்த்தனை என்பதே நேர்மறை என்று எனக்குத் தோன்றும்.

   அதைத்தான் பிரார்த்தனை, நேர்மறை என்று சொல்லியிருக்கிறேன்...ஆழ்நிலை தியானம் என்பது நம் யோகாவிலும் உண்டே..

   ஒரு வேளை நான் கருத்து எழுதும் போது மனம் ஸ்பீடாகப் பொகும் வகையில் கை அடிப்பதில்லை...வார்த்தைகள் மிஸ் ஆகிவிட்டதோ...சரியாக நான் சொல்லவில்லை போலும் பானுக்கா...

   கீதா

   நீக்கு
 41. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி....இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே என்று....அதற்கு அவர் சொன்ன பதில்

  ஒன்று நீ அவசரகதியில் நடக்கவேண்டும் என்று நினைக்கிறாய். பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று...சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள் உனக்கு எப்போது அது நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது. நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை என்பது உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும்....பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும்..நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.

  ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம்...ஆனால் அவர் சொல்லுவார்..இறைவனைத் தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.

  அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதெ பெரியவர் சொல்லுவார்...இறைவன் முன்ன எதுக்கு கரையற....உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை....காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா...அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ...அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா...நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதே இல்லை...கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம்...நல்லத பாரும்மா...என்பார்

  இதெல்லாம் என் மனதில் சிறு வயது என்பதால் ஆழமாகப் பதிந்துவிட்டது...அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும்...இருக்க வேண்டும் என்பது...

  கீதா  பதிலளிநீக்கு
 42. நேற்று முழுவதும் பயணம். அதுனால காலைல ஆஜர் போட்டுட்டுப் போயிட்டேன். மடிக்கணிணி இங்க இல்லை. ஐபேட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.

  எனக்கு அறச் சொல்லுல ரொம்ப நம்பிக்கை உண்டு. என் உறவினர் ஒருவர் மனதில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும் முட்டாள், நாசமாப் போ என்று பல அறச் சொற்களை உபயோகிப்பார். அதனால அவர்கிட்ட எனக்கு எப்போதும் வெளில காண்பிக்காத ஆனால் பிடிக்காத உணர்வு. ரொம்ப வருஷத,துக்கு அப்புறம் அவரைக் காணச் சென்றபோது முட்டி வரை அணிந்திருந்த (ரயில் பயணத்தில்) ஷார்ட்ஸோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். மற்றபடி வேஷ்டிதான். இரவு படுக்கும்போது ஷார்ட்ஸைப் பார்த்து குலப் பெருமையே போச்சு, ஸ்காவன்சர் டிரெஸ் என்று கடுப்படித்து நாசமாப் போச்சு, வேஷ்டி கட்டு என்றெல்லாம் சொன்னதால் வாழ்க்கையில் இரண்டாம் முறை வேஷ்டியோடு இரவில் தூங்கினேன் (முதல் முறை எப்போன்னு கேட்கக்கூடாது. ஹாஹா). எனக்கு அவரின் அறச் சொற்கள் பிடிப்பதில்லை, ஆனால் ழொம்ப தெய்வ பக்தியும் ச்ரேஷ்டமும் நிரம்பியவரிடம் இந்தக் குறை இன்னும் போகலையே என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

  அறச் சொற்கள் இருக்கும் பாடலை, வார்த்தைகள் மாற்றித்தான் பாடுவேன். மீரா (எம் எஸ் எஸ்) படத,தின், "உன்னையே எனதுயிர்த் துணை என்று உவந்ததே தவறோ ஐயா" என்று கண்ணனைப் பார்த்து மீரா பாடும் எனக்குப் பிடித்த அருமையான பாடல் உண்டு. அதை நான் அவ்வப்போது பாடும்போது, "உவந்தது தவறில்லையே" என்றுதான் பாடுவேன். எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடலைப் பாட முயலமாட்டேன், கேட்கவும் தயங்குவேன். அது, "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீயில்லாது துன்பம் பெருகுதே" பாடல். அந்தப் பாடல் அறப் பாடல் என்பது என் எண்ணம்.

  இதற்கு முன் எழுதியிருக்கேன்னு நினைக்கறேன். எனக்கு பத்தாம் வகுப்பில் என ஹாஸ்டல் நண்பன் கணிதம் சொல்லிக்கொடுத்தான் (9, 10களில் நான் முனைந்து படிக்கலை). அவன் கணித்த்தில் புலி. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கோபத்தில் "நீ சென்டம் வாங்கமாட்டாய்"னு சொல்லி, அவன் 92ம் நான் 87ம் வாங்கினோம். அவனுக்கு சென்டம் வராதது அதிர்ச்சி. இந்தமாதிரி தவறுகளை நினைத்து நான் வருந்தியுமிருக்கிறேன். இதைப்போன்ற பல அனுபவங்கள்.

  இதில் நான் நினைப்பது, நாம எல்லோரும் பூர்வ ஜென்மாவிலோ இல்லை இந்த ஜென்மாவிலோ நல்லதும் செய்து அதற்கான புண்ணியபலன் நம்மிடம் சேர்கிறது. நாம் சாபம் போல் வார்த்தையை உபயோகப்படுத்தும்போது, அது நம் புண்ணிய பலத்துக்கேற்ப நிகழ்ந்துவிடுகிறது, நம் புண்ணிய பலன் அதற்கேற்றவாறு குறைகிறது. நான் 50 ரூபாய் வைத்திருந,தால் 25ரூ பொருள் வாங்கிடவாம். மீதி என்னிடம் 25 ரூ இருக்கும். ஆனால் 50 ரூ வைத,து, 80 ரூபாய் பொருள் வாங்க இயலாது. அதனால் நம் சக்திக்கு மீறிய சாபம் கொடுக்கமுடியாது. அதுபோல ரெசுப்பியன்ட் தன் கர்மாக்களால் நற்பலன்கள் சேமித்துவைத்திருந்தால், சாபம் அவனை அசெக்குமே தவிர ஒன்றும் செய்யாது. அவனே புண்ணிய ஆத்மாவாக இருந்தால், சாபம் கொடுப்பவரின் பலனும் போய், பாவம் அதிகரிக்கும். இதனை நான் நம்பறேன்.

  என் இன்னொரு அனுபவம், "நான் செய்வேன்" என்று சொல்லிய எதையும் என்னால் சக்சஸ்ஃபுல்லாச் செய்ய முடிந்ததில்லை. எனக்கே அது ஆச்சர்யமாயிருக்கும். அந்த அனுபவங்களின் பயனாய், நான் செய்வேன் என்று எதையும் சொல்லுவதில்லை, எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும்.

  நெகடிவ் எனர்ஜி, எதிர்மறை எண்ணங்களை கவரும். அதனால் நான் நெகடிவ் ஆகப் பேசுபவர்களையும், சிந்திப்பவர்களையும் கூடிய வரையில் பக்கத்திலேயே சேர்ப்பதில்லை.

  ப்ரார்த்தனை என்பது நமக்கானதைவிட பிறருக்கானது உடனடி பலனளிக்கும்.

  அறச் சொல்லுக்கு நிறைய உதாரணங்கள், புத்தகங்களில் படித்திருக்கிறேன். இங்கும் படித்துத் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ Ne.Tha. //ப்ரார்த்தனை என்பது நமக்கானதைவிட பிறருக்கானது உடனடி பலனளிக்கும்.//

   இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். :))))

   நீக்கு
  2. ஐய்ப்ப பூஜையில் பிறர் பிரார்த்தனைகளை நாங்கள் எடுத்து செல்கிறோம் என்று. அவர்களுக்கு அவர்களே வேண்டிக் கொள்வதை விட பிறருக்கு வேண்டி இருமுடி கட்டி செல்லும் போது அது சீக்கீரத்தில் பலிக்கும் என்பார்கள்.
   கீதா சொல்வது போல் எனக்கும் அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. பிறருக்கு வேண்டுவது பலிக்கும்
   எனக்கு என்று கேட்கும் போது கொஞ்சம் சோதனை செய்துதான் தருவார் இறைவன். எவ்வளவு தாங்க்குவாள் பார்ப்போம் என்று பார்ப்பார் போலும்.

   நீக்கு
  3. நெ த பிரார்த்தனை நமக்கு என்பதை விட பிறருக்கு உடனடி பலனளிக்கும்...யெஸ் யெஸ் ஹைஃபைவ்...நானும் இதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்....செய்வதும் அதுவே....கீதாக்கா கோமதிக்கா ஹைஃபைவ்!!

   கீதா

   நீக்கு
 43. சிலர் தமக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது என்பார்கள். அவங்க உறவினர் யாரேனும் உடம்பு சரியில்லாமல் இருந்து, அதை நம்மிடம் சொல்லும்போது, அவங்க என்ன எதிர்பார்ப்பாங்க? "ஒண்ணும் ஆகாது சார், எல்லாம் சரி ஆகிடும். கவலை வேண்டாம்", "சார்.. இது ஒரு பிரச்சனையா.. வயசுதான் காரணம். கொஞ்சம் பத்தியம் இருந்தால் சரியாயிடும்", "வயது ஜாஸ்தி இல்லையா.. அதான்.. கவலைப்படாதீர்கள்" , "நீங்க ரொம்பச் சீக்கிரம் குணமாயிடுவீங்க, ப்ரார்த்தனை பண்ணறேன்" இதுமாதிரி நேர்மறை, வாழ்த்து எண்ணங்களையா இல்லை, "இந்தப் பிரச்சனையா? ஐயோ.. இது சரியே ஆகாது", "கஷ்டம் சார்.. இது குணமாகாது, இப்படித்தான் என் பக்கத்து வீட்டுக் கார்ருக்கு..", "சார் அவர் நல்லவருல்லை.. அதான் கடவுள் கொடுத்திருக்கான்.அம்புட்டுதான்" என்பதுபோன்ற எதிர்மறை வார்த்தைகளையா?

  யோசித்தால் நாம் அறச் சொற்களை விரும்புகிறோமா, நம்புகிறோமா என்பது தெரிந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 44. மற்றவர்களை முன்னிறுத்தி (கேஜிஜி, கோவை ஆவி) ஶ்ரீராம்்ஜொள்றியிருந்த கவிதையான வரிகள் நல்லாத்தான் இருந்தது. கடிவாளம் போட பாஸ் இருந்தாலும் அவிழ்த்துவிட எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவே இருக்கும்போது ஶ்ரீராமுக்கு என்ன கவலை.

  ஆமாம்... உங்களைத் தூண்டிவிட்டு அந்தச் சாக்கில் கேஜிஜி அவர்கள் அனுஷ்காவை இந்தத் தளத்தில் தரிசனம் செய்கிறாரோ? அவருக்குத்தான் வெளிச்சம்.

  பதிலளிநீக்கு
 45. வெளிநாட்டிலிருந்தெல்லாம் பாராட்டினார்களாம் - சீரியஸ் கதம்பத்தில் நகைச்சுவைப் பகுதி இருந்தாகவேண்டும் என்பது கட்டாயமா ஶ்ரீராம்? இருந்தாலும் வைகோ (இது அரசியல்வாதி வைகோ. பதிவர் வை கோபாலகிருஷ்ணன் சார் அல்ல) சொல்லியிருப்பவை குபீர்ச் சிரிப்பை வரவழைத்தனர். ஆமாம்.. இதனைச் சொல்லிவிட்டு வைகோ உணர்ச்சிவசப்பட்டு அழுதிருப்பாரே...

  பதிலளிநீக்கு
 46. அனைத்துக் கருத்துகளும் அருமை. மிக நன்றி கீதா மா, கீதா ஆர், கோமதி மா.
  நாம் நெகடிவ் சொற்களைக் கேட்கும் போதும் அவைகளைப் புறம் தள்ள வேண்டும். மனதுக்குள் உட்கார்ந்து மணி அடிக்க விடக்கூடாது. நடந்து போன சம்பவங்களுக்கு யார் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும். டிடியின் வாரியார் பதிவு மிக அழகு மிக மிக நன்றி டிடி.

  நெல்லைத் தமிழன், அந்தப் பெரியவரை மறந்துவிடுங்கள்.

  என்னையும் மிகப் பெரியவர் ஒருவர் ,நான் இல்லைன்னால் நடுவீதில இருந்திருப்பேன்னு சொல்லி இருக்கிறார்.
  அப்பொழுது நின்று யோசிக்கக் கூட முடியாமல் உழைத்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆறு மாதங்கள் என் கையால் சேவை வாங்கிக் கொண்டார். அவர் மனம் வாழ்த்தி இருக்கும்.

  இங்கே தி.ஜானகிராமனின் //பரதேசி வந்தான்// கதை நினைவுக்கு வருகிறது.
  உள்ளம் உடல் சில்லித்துவிடும்.

  அன்பு ஸ்ரீராம் அழகான தலைப்பைக் கொடுத்து அனைத்து நல்லெண்ணங்களையும் வரவழைத்து விட்டீர்கள்.
  உங்கள் சங்கடங்களும் தற்காலிக மானவையே.
  துள்ளிவரும் வேல் உங்களைக்காக்கும்.

  பதிலளிநீக்கு
 47. ஆமாம் டி.எம்.எஸ் கூட ராஜேந்தர் படத்தில் என் கதை முடியும் நேரமிது பாடினார் அதன் பின் வாய்ப்புகள் குறைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!