ஞாயிறு, 18 நவம்பர், 2018

அறுவடைக்குக் காத்திருந்த நெல்லம்மா... உன்னை யார் பறித்துக் காட்டறாங்க சொல்லம்மா...




 எங்கள் ப்ளாக் அலுவலகத்தில் மூவாயிரமாவது பதிவைக் கொண்டாடும் வகையில் ஸ்வீட் செய்தபோது...   இது உங்களுக்கான பங்காக எடுத்து வைக்கப்பட்டது!  விரைவில் வேறொரு பயணப்படங்கள் இடம்பெறக்கூடும்..  இந்த வாரமே ஆரம்பித்திருக்க வேண்டியது..  இன்னும் கைக்கு வராததால் இந்த வாரமும் நானே ஆக்ரமிக்கிறேன்!


அறுவடைக்குக் காத்திருந்த நெல்லம்மா...  உன்னை யார் பறித்துக் காட்டறாங்க சொல்லம்மா...



அப்போது கல்யாணமாகாதேவியில் எடுக்கப்பட்ட ஒரு வீட்டின் படம்.  நேற்று புயல் தாக்கிய பின் ஒரு படம் வந்தது..  

நேற்று  கஜா புயல் தாக்கிய பின் அதே வீடோ, அந்தத் தெருவில் இன்னொரு வீடோ....


மலிவு விலை?!!  நல்லா பாருங்க...   அரைச்சாப்பாடு!


வேளாங்கன்னிசென்று வந்தபோது...


இந்தப் படம் உள்ளே எடுத்த ஓரிரு படங்களில் ஒன்று.   எல்லோரும் எடுத்துக் கொண்டிருந்தார்களே என்று நானும் எடுக்க, உள்ளே இருந்த ஒருவர் இங்கு உள்ளே படம் எடுக்க வேண்டாம் என்று கோபப்படாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டதும் செல்லை உள்ளே வைத்துவிட்டேன்.


வெளியிலிருந்து வேறு கோணத்தில்...


கொம்பூதும் சிறுவர்கள்...


ப்ரதிஷ்டைக்கு முன்...  இந்த விநாயகர் எங்கள் மாமாக்கள் சிறுவர்களாயிருக்கும் காலத்தில் புகழுடன் அருள் பாலித்துக் கொண்டிருந்தவராம்...


ப்ரதிஷ்டைக்கு முன்.... 2


யாகசாலை 1


ப்ரதிஷ்டைக்குப் பின் 1


ஓம் சிவாய நாம...பிரம்ம முராரி சுரார்ஜித லிங்கம்...


ப்ரதிஷ்டைக்குப்பின் 2


யாகசாலை 2


யாகசாலை 3


போகும் வழியில் நீண்ட நேரம் உணவு விடுதியை இல்லாமல் இருந்து அப்புறம் கிடைத்த உணவகம்.  நேரமும் ஆகி இருந்தது.  சிறப்பாகவும் இல்லை!!


கும்பாபிஷேகத்துக்குத் தயார் ஆகும் கோவில்... இதன் சில படங்கள் முன்னரே பகிர்ந்திருந்தேன்.  


இதெல்லாம் பிப்ரவரியில் கல்யாணமாகாதேவி கோவில் கும்பாபிஷேகப் படங்கள்தான்.


பிரதிஷ்டை செய்யப்பட்டபின்.... 3

120 கருத்துகள்:

  1. ரிலாக்ஸ்ட் ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, ரிலாக்ஸ்டாக அப்பால வரும் எல்லோருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் டான்ஸ் ஆடும் அக்னி போல இருக்கே ஹா ஹா ஹா....முழுமையா பார்க்கலை இன்னும்....ஸ்க்ரோல் பண்ணும் போது தெரிந்ததை வைத்து சும்மா...ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அன்பினோர் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. அட! மூவாயிரத்துக்கு ஒரு ஸ்வீட்டா...

    நெல்லைய கேட்டா ஸ்வீட் சாப்பிடறதுக்கு எல்லாம் காரணம் வேண்டுமா என்ன அப்படினு சொல்ல்வார் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஸ்வீட் ஸ்ரீராம்? சர்க்கரைப் பொங்கல்?

      கீதா

      நீக்கு
    2. சர்க்கரைப்பொங்கலை ஸ்வீட் கணக்கில் சேர்த்துட்டீங்களே. எ பில நாங்கள்லாம் என்ன பஜனை பண்ணறோம்னு நினைச்சீங்களா?

      நான் கட் செய்வதற்கு முந்தைய ஸ்டேஜ் (இனிப்பைத் தட்டில் கொட்டிவைத்த ஸ்டேஜ்) என்று நினைத்தேன்

      நீக்கு
    3. அட... அட... அப்படியே வச்சுக்கலாமே.. அது கூட நல்லாதான் இருக்கு!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை பஜனையேதான்!!!

      அது சரி சர்க்கரைப் பொங்கல் ஸ்வீட் லிஸ்ட்ல இல்லைனா வேற எந்த லிஸ்டாம்.....கேசரி ஸ்வீட் லிஸ்ட்னா சர்க்கரைப் பொங்கலும் ஸ்வீட்டுத்தான்....கேசரி ஸ்வீட் உப்புமானு சொன்னீங்கனா சர்க்கரைப் பொங்கலை இங்கிலிஷ் காரன் சொல்றாப்புல ஸ்வீட் ரைஸ்னு ..அப்ப கூட ஸ்வீட்டுதான்!!!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  5. நெல்லம்மா பழைய நினைவுகள் பலவற்றை மீட்டுவிட்டாள்...மட்டுமல்ல நம்ம அனு ஒரு கதை போட்டுருந்தாங்களே இங்க....காணி நிலம்....அதே தலைப்பிட்டு நானும் ஒரு கதை எழுதி பாதில நிக்குது...அனுவிடமும் அது பற்றி அப்பவே பேசிட்டேன்...

    இங்கு நெல்லம்மா காத்திருப்பது போல் என் நெல்லம்மாவும் காத்திருக்கிறாள் ஹா ஹா ஹா ஹா ஹா...

    நெல்லம்மா.......சொல்லம்மா ....சூப்பர்...ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு நெல்லம்மா காத்திருப்பது போல் என் நெல்லம்மாவும் காத்திருக்கிறாள்//

      உங்க செல்லம்மான்னு சொல்லுங்க! ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகு.. அருமை...

    கும்பாபிஷேக யாகசாலை தரிசனம் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  7. மூவாயிரம் பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

    ஸ்வீட் ரொம்ப நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  8. நெல் கதிரோட - யாருங்க அந்த தானிய லக்ஷ்மி!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை காசு சோபனாவாக இருக்குமோ?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா...

      ஒரு வேளை உங்க குடும்ப பயணத்துல அவங்கதான் கைல வைச்சுருக்காங்களோ!!!

      அது சரி காசு சோபனா யாருனே இன்னும் தெரியலை...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. //அது சரி காசு சோபனா யாருனே இன்னும் தெரியலை...//

      அதானே.. பாருங்க... இதில் கூட முகம் காட்டவில்லை...

      "முகம் காட்ட மறுத்தாய் ;
      முகவரியைத் தொலைத்தாய்..
      நீ முன்வந்து பூச்சிந்து... "

      என்று பாடத்தோன்றுகிறது இல்லை?

      நீக்கு
    4. ஹை பாட்டு செம பாட்டு.... ஸ்ரீராம் பாட்டை முடிச்சு முதல் அடி எடுத்தாச்சு காசு சோபனா! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. அப்படியாவது அவர் முகம் காட்டுகிறாரா என்றுதான்...

      நீக்கு
  9. என்ன இன்னைக்கு
    சாம்பலி, ப்ரொனி, புஜ்ஜுக்குட்டி - ஒன்னையும் காணோம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுசா ஒண்ணும் கிடைக்கலீங்க.... பழசுல போடாத ஒண்ணைத் தேட டைம் இல்லாமப் போச்சுங்க...!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா நான் இப்பத்தான் கேக்க வந்தேன் பார்த்தா உங்க கமென்ட்!!

      அதான் வியாழன் பூனாச்சுவா இருந்துச்சே...

      கீதா

      நீக்கு
    3. பூனைகள் கொஞ்சம் ஓவர்டோஸாத்தான் போச்சோ!!!

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... லிஸ்ட்ல அனுஷ்காவை விட்டுட்டீங்களே

      நீக்கு
    5. நான் சும்மா இருந்தாலும்....

      நீக்கு
    6. அனுஷ்காவா!?....

      யாரது!....

      கார்த்திகை முதல் நாளில் மாலை போட்டுக் கொண்டாயிற்று....

      சாமி சரணம்!....

      நீக்கு
    7. இல்லை ஸ்ரீராம் பூனாச்சு ஓவர் டோசா!!! நோ நோ நோ.....செல்லங்கள் எத்தனை போட்டாலும் ரசிப்போமே நாங்க...இன்னமும் கண்ணுலயே இருக்கு பூனாச்சு...

      கீதா

      நீக்கு
    8. நமக்கு ஓவர்டோஸ் இல்லை.. மற்றவர்களுக்கு?!!

      நீக்கு
    9. ஆஹா துரை அண்ணே சாமி! கார்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து ..... ஹையோ அப்ப அனுஷ் புராணம் கிடையாதா!!

      கீதா

      நீக்கு
  10. அந்த வீட்டைப்பார்த்ததுமே உங்க ஊர் தான் நினைவுக்கு வந்துச்சு ஸ்ரீராம்...

    இப்ப பாவம் இல்ல...கஜா தாக்கி இப்படி ஆகிப் போச்சே...எந்த வீடா இருந்தா என்ன? கஷ்டம் பாவம்...எத்தனை குடிசைகள் பெயர்த்தெடுக்கப்பட்டதோ..பாவம்...

    .ஆனால் கஜாவை நாம குத்தம் சொல்ல முடியாது...இயற்கையின் முன் நாம் தம்மா துண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் கஜாவை நாம குத்தம் சொல்ல முடியாது...இயற்கையின் முன் நாம் தம்மா துண்டு...//

      ஆமாம் கீதா...

      புதுக்கோட்டை, வேதாரண்யம் மக்கள்சோகமாகவும் விரக்தியாகவும் "சென்னைன்னாதான் செய்திகளோ? உதவிகள் செய்வீர்களோ? எங்களைக் கண்டுகொள்ள யாருமில்லையே.." என்று புலம்பி இருக்கிறார்கள். மிக மோசமான பாதிக்கப்பட்டு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

      நீக்கு
    2. ஓ! பாவம் ஸ்ரீராம் அதானே அவங்கள் பத்தி நியூஸே இல்லை....வேதாரண்யமாவது கொஞ்சம் செய்தி வந்துச்சு ஆனா புதுக்கோட்டை பற்றி தெரியலை...

      நம்ம பதிவர்கள் நிறையப்பெர் இருக்காங்க....பாவம் மக்கள்..பிரார்த்திப்போம்...வாட்சப்பில் பார்த்தேன்.

      கீதா

      நீக்கு
    3. இப்போது ஒரு லேட்டஸ்ட் வாட்ஸாப்... இதுவே சென்னைக்கு ஆபத்து என்றால் மீடியாக்களும், சினிமாக் காரர்களும் இந்நேரம் என்னென்ன செய்திருப்பார்கள் என்று...

      நீக்கு
    4. ஓஹோ....கரெக்டுதானே அவங்க கேக்கறது....நியாயமான கேள்விகள்...மீடியா சினிமாக்காரர்கள் இருக்கட்டும் அரசும் அந்த லிஸ்டுல் சேர்க்கனும்...

      கீதா

      கீதா

      நீக்கு
    5. சேர்க்கணும்தான். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நன்றாகவே எடுத்திருந்தது தமிழக அரசு. இப்போதும் அரியலூர் போன்ற சுற்றுப்புற ஊர்களிலிருந்து மிவா ஊழியர்கள் உட்பட நிறைய பேர்களை அந்த ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது அரசு. பாதிக்கப்பட்ட மக்களும், அரசியல்வாதிகளும் இன்னும் வேகம் இன்னும் வேகம் என்று கேட்பார்கள்தான்... புரிந்துகொள்ள முடிகிறது.

      நீக்கு
  11. படங்கள் நல்லா இருக்கு. யார் பயணம், என்ன படங்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நான். பயணம் பழசு. புயல் தாக்கிய வீடு மட்டும் கடன் வாங்கியது!

      நீக்கு
    2. இப்போ சமீபத்திலே வேளாங்கண்ணி போனதில்லை. இருபது வருஷங்கள்? அல்லது முன்னர் போன நினைவு. இப்போதைய "கஜா"வில் ஆலயத்திற்குப் பாதிப்பு எனப் படித்தேன்.

      நீக்கு
    3. முன்னால் இருந்த வேளாங்கண்ணிக் கோவில் செல்ல கடற்கரையில் நீண்ட தூரம் நடக்கவேண்டும் என்றார்கள். இது சமீபத்தைய கோவிலாம். சொன்னார்கள்.

      நீக்கு
    4. முன்னால் இருந்த கோயில் தான் நாங்க பார்த்திருக்கோம்னு நினைக்கிறேன். கடற்கரையில் வெகு தூரம் நடந்து தான் போனோம். ஒரு வேளை சுனாமியில் அது சேதம் ஆனதோ? சரியா நினைவில் இல்லை.

      நீக்கு
    5. சேதம் ஆன மாதிரி தெரியவில்லை. இருக்கு என்றுதான் சொன்னார்கள். எங்களுக்கு பார்க்க நேரம் இல்லை.

      நீக்கு
    6. நெல்லை என்ன இப்படிக் கேட்டுட்டீங்க அந்தக் கும்பாபிஷேகப் படங்கள் பார்த்தாலே அப்புறம் அந்த வீடு படம் பார்த்தாலே தெரிஞ்சுரும் நம்ம ஸ்ரீராம் அப்ப போனப்ப எடுத்த படங்கள்னு....

      கீதா

      நீக்கு
    7. கீதாக்கா சுனாமியில் சேதம் கொஞ்சம் கூட ஆகவில்லை என்றே சொன்னார்கள். போக வேண்டிய இடம்...

      கீதா

      நீக்கு
  12. யாகசாலைப் படங்கள் அருமை. பிரதிஷ்டை ஆனபிறகும் படங்கள் எடுக்க அனுமதி கிடைச்சது அதிசயம் தான். எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. 3000 பதிவுகள் நிறைவடைஞ்சதுக்கு அது என்ன ஜிம்பிளா சர்க்கரைப் பொங்கலோட நிறுத்திட்டீங்க? ஒரு பார்ட்டி வைச்சு ட்ரீட் கொடுக்க வேண்டாமோ? எங்களை எல்லாம் ஃப்ளைட் டிக்கெட் வாங்கிக் கொடுத்து வரவழைச்சிருக்க வேண்டாமோ? :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதி...

      நியாயப்படி பார்த்தால் நான் எடுத்திருக்கக் கூடாது. சிறிய ஊர்... தெரிந்த மக்கள்...அதனால் எடுக்க முடிந்தது. திடீரென ஒருவர் சடாமுடியுடன் வந்தார். சிறப்பான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. எல்லோரும் அவரை வணங்கி வாழ்த்து பெற்றார்கள். நானும். அவர் யார் என்று தெரியவில்லை. அவர் படம் போடலாமா என்று பார்த்து பகிராமல் விட்டுவிட்டேன்.

      நீக்கு
    2. ட்ரீட்னு கேட்டதும் பதிலே இல்லை பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. ஓகே அக்கா... வரும் வார ஞாயிறு படங்களில் ட்ரீட் கொடுத்துடுவோம்!

      நீக்கு
    4. படங்களில் (படங்களில்) இப்படி வந்துருக்கோணும்....ஹா ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  13. நெற்கதிர் ரூபாய் நாணயத்தில் கூட இடம் பெற்றிருக்கிறது. இங்கே நெற்கதிரைப் பிடிச்சிருப்பவங்க முகத்தைக் காட்டாததன் மர்மம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கே நெற்கதிரைப் பிடிச்சிருப்பவங்க முகத்தைக் காட்டாததன் மர்மம் என்ன?//

      அதுதான் அக்கா எனக்கும் புரியவில்லை.

      பின்குறிப்பு : கிர்ர்ர்ர்ர் ரைத் தவிர்க்கவும்.

      நீக்கு
    2. அதான் மேல் கருத்துக்கு "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ரிட்டேன்! :)))) விட முடியுமோ?

      நீக்கு
  14. படங்கள் அருமை ஹோட்டல் போர்டின் பெயரில் G.K. என்பதைக் காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்ஸ் பிரச்னை வருமோன்னு விட்டுட்டாங்களோ!!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. அவர் ஊர் கல்லணை வழியாப் போறச்சே தானே வரும் திருவையாறு தாண்டி! இங்கே எப்படி வரும்?

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    புயலில் நிறைய வீடுகள் சேதம் அடைந்து இருக்கிறது.
    உயிர் சேதம், பொருள் சேதம் எல்லாம் இருக்கிறது.
    புதுக்கோட்டையில் தங்கை பெண் இருக்கிறாள், அவளின் புயலை ப்டம் எடுத்து அனுப்பினாள். . அவள் வீட்டு கண்ணாடி ஜன்னல் எல்லாம் உடைந்து விட்டது. அப்புறம் அவலை தொடர்பு கொள்ள முடியவில்லை.
    மின்சாரம் இல்லை. இன்று பேச வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அக்கா. என் நண்பர்களும் செய்தி அனுப்பினார்கள். பசுமை வயல் நண்பர் ஒருவர் அனுப்பிய தகவலை பொதுத்தகவலாக அனுப்பியிருந்தார். நிஷாந்தி கூட அதை முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

      நீக்கு
  16. கல்யாணமாகாதேவி கோவில் கும்பாபிஷேகப் படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. தங்கை பெண் இப்போது திருச்சியில் உறவினர் வீட்டில் இருக்கிறாள்.
    நாளை மதுரை வருகிறாள் அம்மா வீட்டுக்கு. பள்ளி 5 நாள் விடுமுறை .
    நிலைமை சீர் ஆக நாள் ஆகும் என்றாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த ஊர் என்பதால் அவர் அங்கேயே முகாமிட்டு மேற்பார்வை பார்த்து வருகிறாராம். என் நண்பன் (நாதஸ்வர வித்வான் மதுரை எம் பி பொன்னுசாமியின் மகன்) சொன்னான்.

      நீக்கு
  18. மூவாயிரம் பதிவுகள்! இந்த பெரும் சாதனைக்கும் இனியும் அருமையான பதிவுகள் தொடரவும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  19. படங்கள் அனைத்தும் அருமை...

    சிறப்பான தரிசனம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  20. புயலில் குடிசைகள் தப்பிக்க வாய்ப்பே இருந்திருக்காது கல்லும் கடவுளாகிறாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைகொடுப்பவர் எல்லோருமே கடவுளாகும் தருணம்...

      நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
    2. அருமையான திருப்தி அளிக்கும் பதில். பாராட்டுகள் ஸ்ரீராம்.

      நீக்கு
  21. ப்ராணப் பிரதிஷ்டை செய்தபின்பு படம் எடுக்க எப்படி விட்டார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எங்களை"க் கட்டுப்படுத்த யாருமில்லை என்பதே உண்மை. தப்புதான்.

      நீக்கு
    2. இல்லை ஶ்ரீராம்.. நானும் அப்படித்தான். சிலர் கருவரை மூலவரைப் படம் எடுப்பது தவறுன்னு சொல்றாங்க.

      நீக்கு
    3. ஒரு சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டபின் தினந்தோறும் மந்திரங்கள் சொல்லி அபிஷேகங்கள் செய்யப்படுவதால் பின்னர்தான் அதற்கான சக்தி ஏற்றப்படுகிறது என்று நினைக்கிறேன். எனவே முதல் நாளில் படங்கள் எடுத்தது தவறில்லை என்று மனதைத் தேற்றிக்கொள்கிறேன். நொண்டிச்சாமாதானம்!

      நீக்கு
    4. ஒரு கோயில் புனர் நிர்மாணம் செய்கையில் எல்லாக் கருவறைகளில் உள்ள விக்ரஹங்கள் மற்றும் மூலஸ்தானத்து விக்ரஹம் ஆகியவற்றை அங்கிருந்து எடுத்து வேறே இடத்தில் வைப்பார்கள். இதற்கு பாலாலயம் எனப் பெயர். மூலஸ்தானம் மற்ற இடங்களில் உள்ள விக்ரஹங்களின் சக்தியை ஓர் கும்பத்தில் ஆவிர்ப்பவிப்பார்கள். தினமும் அவற்றுக்கு வழிபாடுகள் நடைபெறும். முக்கியமான அபிஷேஹங்கள் தவிர்த்து மற்ற விழாக்கள் கும்பாபிஷேஹத்தின் பின்னரே நடைபெறும். கும்பாபிஷேஹத்தின் போது யாகசாலைகளில் இந்தக்கும்பத்தை வைத்து யாகங்கள் செய்து மீண்டும் மீண்டும் விக்ரஹ சக்திகளை மந்திரரூபமாய்க் கும்பத்து நீரினுள் கொண்டு வருவார்கள். பின்னர் அந்த அந்த விக்ரஹங்களை அதன் அதன் இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு ஒவ்வொரு கடவுளுக்கும் ஆன கும்பத்து நீரால் அபிஷேஹம் செய்வார்கள். இதன் மூலம் அந்த இறைவனின் சாந்நித்தியம் அங்கே மீண்டும் நிலை நாட்டப்பட்டுவிட்டதாகப் பொருள். பெரிய கோயில்களில் மேலே கோபுரங்களுக்குக் கும்பாபிஷேஹம் ஆவதை மட்டுமே நாம் கும்பாபிஷேஹம் என நினைக்கிறோம். அப்படி இல்லை.

      மேலே கோபுரங்களுக்கும் ஆகும்போதோ அல்லது ஒரு சில கோயில்களில் அதன் பிறகோ கருவறைக்குச் செல்லும் அதிகாரம் பெற்ற சிவாசாரியார்/பட்டாசாரியார் ஆகியோர் இந்தக் கும்பத்து ஜலத்தால் மூலஸ்தானங்களில் உள்ள விக்ரஹங்களுக்கு அபிஷேஹம் செய்வார்கள். இதுவே புதிய கோயிலாக இருந்தால் குறிப்பிட்ட இறைவனின் சாந்நித்தியத்தை வேண்டிக் கும்பத்து நீரில் யாகங்கள் செய்து மந்திர ஜபங்கள் மூலம் அதில் அந்த இறைவனின் சாந்நித்தியத்தைப் பிரதிஷ்டை செய்து பின்னர் அந்தக் கடவுள் விக்ரஹம் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டபின்னர் இதே போல் அபிஷேஹம் செய்வார்கள். இந்த சாந்நித்தியத்தைப் பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் கோயில் எனில் அநேக பக்தர்கள் வருவார்கள். பலதரப்பட்டவர்களும் வருவார்கள். ஆகவே இறைவனின் சாந்நித்தியம் நாளாக ஆக மங்கலாம். அப்போது ஒரு சில அபசகுனங்கள் அல்லது வேண்டாத விஷயங்கள் ஊரில், நாட்டில் நடைபெறலாம். ஆகவே எல்லாக் கோயில்களும் பனிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேஹம் காணப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

      நீக்கு
    5. புதிய கோயில் எனில் விக்ரஹங்களுக்கு சாந்நித்தியத்தைக் கும்பத்தில் முதலில் ஆவிர்ப்பவித்துப் பின்னர் பிரதிஷ்டையும் அபிஷேஹமும் நடைபெறும். பழைய கோயில் எனில் பாலாலயத்தில் விக்ரஹப் பிரதிஷ்டையும் பின்னர் கும்பத்தில் ஆவிர்ப்பவித்தலும் நடைபெறும். இது பொதுவான நடைமுறை.

      நீக்கு
    6. நன்றி அக்கா. தெரிந்துகொண்டேன். முன்னர் ஓரளவு தெரிந்தது. விவரமான தகவல்களுக்கு நன்றி.

      பாலாலயம் இங்கும் நடந்தது. அதற்கே நாங்கள் சென்று விட்டோம். இந்தக்கோவில் சிவன்கோவில். சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கிருந்த பெருமாள் கோவிலை புனருத்தாரணம் செய்தார்கள். அப்புறம் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கும் இணங்க, இல்லாமலேயே போயிருந்த இந்த சிவன் ல் கோவில் விக்கிரகங்களை மீட்டு ஒரு கூரைக்கொட்டகையில் இருத்தி, இப்போது கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சௌந்தர்ராஜ அய்யங்கார் என்கிற மாமனிதர்.

      இது பற்றிய மேலதிகத் தகவல்களை கௌதமன் மாமா வழங்கக் கூடும்.

      நீக்கு
  22. சென்னை பெஸந்த் நகரிலுள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சின்ன வயதில் உறவினர் பையனுடன் போயிருக்கிறேன். இதமான அனுபவம். சில ஸ்தலங்கள் அமைதி தருபவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அங்கே வேளாங்கண்ணி கோயில் போனதில்லை. அஷ்டலக்ஷ்மி கோயில் அப்புறமாக் கொஞ்சம் தள்ளிக் கட்டிக் கொண்டிருந்த அறுபடை வீடு கோயில்கள் 2009 ஆம் வருஷம் அப்பு வந்தப்போப் போனோம்.

      நீக்கு
    2. நானும் பெசன்ட் நகர் மாதா கோயிலுக்கு அப்புறம் சாந்தோம் சர்ச், லஸ் சர்ச் எல்லாம் போயிருக்கேன் ஏகாந்தன் அண்ணா....ஆமாம் அமைதிதரும் நான் போனவை எல்லாமே அமைதி!!! நல்ல அனுபவம்...

      கீதா.

      நீக்கு
    3. நான் இரண்டு மூன்று முறை வேளாங்கன்னி போயிருக்குறேன். பதின்ம, பேச்சலராக இருந்தபோதும்

      நீக்கு
  23. இன்று வீட்டிற்கு உறவினர்கள் வருகை. அதனால் பிஸி. இப்போதுதான் வலைப்பபக்கம் வர முடிந்தது.
    படங்கள் நன்றாக இருக்கின்றன.
    புதுக்கோட்டையில் விரைவில் இயல்பு நிலை திரும்பட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா. நம் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.

      நீக்கு
    2. யெஸ் ஸ்ரீராம் புதுக்கோட்டை இயல்பு நிலைக்கு வர பிரார்த்திப்போம்...

      கீதா

      நீக்கு
  24. மலிவு விலை ந்றத கொட்டை எழுத்துல போட்டுட்டு அரைச் சாப்பாடுடக்குனு கண்ணுல படாத மாதிரி கலர் கலரா…ஹா ஹா இது சிகரெட் பெட்டில எழுதிருக்கற மாதிரி………ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் கஸ்டமர்கள் யாராவது நான் பாதிச் சாப்பாடு சாப்பிடறேன்.. அந்தக் காசு மட்டும் தர்றேன்னு சாதாரணமா ஹோட்டல்களில் சொல்ல முடியாதே... அந்த வகையில் இது ஓகே!

      நீக்கு
  25. மலிவு விலை ந்றத கொட்டை எழுத்துல போட்டுட்டு அரைச் சாப்பாடுடக்குனு கண்ணுல படாத மாதிரி கலர் கலரா…ஹா ஹா இது சிகரெட் பெட்டில எழுதிருக்கற மாதிரி………ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - சென்னை 86ல் வந்த புதிதில் ரங்கனாதன் தெருவில் 4 ரூ, 5 ரூக்கு கத்தரி வெண்டை போன்ற காய் பார்த்து இவ்வளவு சீப்பா மெட்ராஸ்லனு நினைப்பேன். அப்புறம்தான் பிராக்கெட்ல 1/4, 1/2 னு எழுஇயிருப்பதைப் பார்த்தேன்

      நீக்கு
    2. கால் கிலோ வாங்கினால் 200 கிராம் தேறினால் ஆச்சரியம்! நிறைய ஏமாந்து பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். ஒரு சில மோசமான அனுபவங்களுக்குப் பின்னர் தி.நகர், மாம்பலத்தில் வாங்குவதையே நிறுத்தியாச்சு! அது பரம ஔஷதமாக இருந்தாலும்.

      நீக்கு
  26. வேளாங்கண்ணி சர்ச், உள் படங்கள் ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீராம்…நான் ரொம்ப வருஷமா போகணும்னு நினைச்சு இன்னும் நிறைவேறல……என் மச்சினர் பெண் அடுத்த வாட்டி போகும் போது கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிருக்கா…பார்ப்போம்…

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பிரதிஷ்டைக்கு முன்னும் , பின்னும் நம்ம தோழர் அதுவும் ஃபேமஸ் ஆன தோழர்… மஃப்டில இருக்கரே!!!!!!!!

    எல்லா உம்மாச்சியுமே மஃப்டி தானா…அந்த சமயத்துல ட்யூட்டில ஜாயின் பண்ணலை போல….!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் டியூட்டி பார்க்கிறார் என்று சொல்கிறீர்கள்! கீதாக்கா.... இங்கே கொஞ்சம் கவனிங்க...

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஸ்ரீராம் மீ ஓடிங்க்!!! கீதாக்காகிட்ட மாட்டி விட்டுட்டீங்க்ளே!!! ஹா ஹா ஹா ஹா

      ஆமாம் பின்ன ஒவ்வொரு நொடியும் (அதையும் பிரிச்சுக்கோங்க) எத்தனை எத்தனை அப்ளிக்கேஷன் போகுது...எல்லாத்தையும் பார்த்து கேல்குலேஷன் எல்லாம் போட்டு..யார் யாருக்கு என்ன எவ்வளவு கொடுக்கணும் எம்புட்டு கஷ்டமான வேலை.....எல்லாருக்கும் ஏதாச்சும் கொடுத்துத்தானே ஆகனும்...சும்மா அனுப்ப முடியுமா என்ன!!!!! காவல் காக்கும் இறைவன்!!! அந்த ட்யூட்டியை பார்க்கணுமே ஹா ஹா ஹா...

      ட்ரெஸ் எல்லாம் போட்டு சர்வ அலங்காரத்தோடு...இல்லையேனுதேன்!!!

      கீதா

      நீக்கு
  28. வாசன் உணவகத்துல உணவு வாசனையா இல்லாம போயிடுச்சு!!
    ஆமாம் கும்பாபிஷேகப் படங்கள் சிலது முன்னர் பகிர்ந்த நினைவு இருக்கு…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படங்கள் இல்லை, வேறு படங்கள் பகிர்ந்திருப்பேன் கீதா...

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் வேறு சில தான்..கமென்ட்ல 'வேறு' விட்டுப் போச்சு...

      கீதா

      நீக்கு
  29. மின் தடையின் காரணமாக சில பதிவுகளை தவறவிட்டிருப்பேன் என எண்ணுகின்றேன்
    இன்றும் கூட மின்சாரம் அவ்வப்போது வந்துதான் போகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆமாம்.. உங்களுக்கும் பாதிப்பு உண்டு இல்லையா? தற்போது தேவலாமா?

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    வியாழனன்றும், நேற்றும், இன்றும் நம் எ. பி யில் பதிவுகள் படித்தேன். படித்ததும், மனதில் பதிந்த பதிவும், படங்களும், கருத்துரைகளும் மிகவும் அழகாக இருந்தது. தங்கள் அனைவரின் உற்சாக கூட்டு முயற்சிகளை கண்டு மனம் வியக்கிறது.எ.பி தன் 3000 பதிவுகளை கடந்து அமைதியாக பயணிக்கும் பாங்கை நினைத்து மனம் பெருமை கொள்கிறது.

    நறுமணம் வீசும் மலரோடு சேர்ந்த நாரைப் போல, எங்கள் பிளாக்கினால், எ. பி யை, தினமும் பின் தொடர்ந்து, எ. பி யின் பதிவுகளில் கட்டுண்டு நாங்களும் மணம் பெறுகிறோம் என நினைக்கும் போது, பெருமை நிறையவே ஏன் அதற்கும் சற்று கூடுதலாகவே மனம் முழுவதும் மணம் வீசுகிறது.

    பெரும் சாதனையாக மூவாயிரத்தை தொட்டதற்கும், வருட இலக்கை, வருட முடிவிற்குள் சுலபமாக பிடித்தமைக்கும், என் மனம் நிறைந்த மகிழ்வோடு கூடிய வாழ்த்துக்கள். 3000 மேலும் பன்மடங்காக வளர்ந்து இன்னமும் பல 1000 ங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு மணம் வீசி பரப்ப என் பிரார்த்தனைகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... வாங்க கமலா அக்கா. இனிய ஆச்சர்யம்.

      உங்கள் வரவு எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹை கமலா அக்கா வாங்க வாங்க !! உங்களைப் பார்க்க மிகுந்த சந்தொஷம் அக்கா....

      கீதா

      நீக்கு
    3. வாங்க கமலா ஹரிஹரன், நீங்கள் இந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருப்பதை ஸ்ரீராம் தெரிவித்தார். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மெல்ல மெல்ல எல்லோருடைய பதிவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாருங்கள். எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்கு உண்டு.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      நான் வலைப்பக்கம் வந்து அனைவரின் பதிவுகளை படித்து என் மனதுக்கு சற்று ஆறுதல் தேட முயற்சிக்கிறேன். நான் பிற கடமைகளில் நாள் முழுவதும் வழியின்றி ஈடுபட்டாலும், வலைத்தளத்தில் வந்து உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு மிகவும் ஆறுதலை தருகிறது. என் வருகைக்கு ஊக்கமும், ஆறுதலும் தரும் வண்ணம் நீங்களும், சகோதரர் ஸ்ரீராம் அவர்களும், சகோதரி கீதா ரெங்கன் அவர்களும், பதிலளித்திருப்பது என் மன மாற்றத்திற்கு உகந்ததாக உள்ளது. கனிவுடன் மனஆறுதல் கூறி என்னை தேற்றிய ஏனைய அன்பு சகோதர, சகோதரிகளுக்கும், உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பிரார்த்தனைகளுக்கும் மிகுந்த நன்றிகள். உங்கள் அன்பான தேறுதல்களில் நான் மீண்டு வருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  31. அனைவருக்கும் வணக்கம்.
    ஸ்ரீராம் படங்கள் எப்பவும் போல மிக அருமை.
    சிதைந்த வீடு மனதில் பாரமேற்றுகிறது.
    புதுக்கோட்டை,மற்றும் அனைத்து ஊர்களுக்கும் நலம் சேர வேண்டும்.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  32. படங்கள் மனதைக் கவர்ந்தது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  33. படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    3000 பதிவுக்கு ஸ்வீட் அசத்தல்.

    பதிலளிநீக்கு
  34. திருச்சி குடியிருப்பிலிருந்தபோதுஎங்கள் செல்லத்தின் வாயில்ஒரு எலும்புத்துண்டு மாட்டிக்கொண்டு மிஅவும் கஷ்டப்பட்டது சரியானால் வேளாங்கண்ணிக்கு வந்துவேண்டுவதாக மனவி பிரார்த்தனை செய்தாள் நாங்களும் அப்போது வேளாங்கண்ணி கோவிலுக்குப் போனோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!