வியாழன், 22 நவம்பர், 2018

அசடு வழிந்த அனுபவம்


அசடு வழியும் அனுபவம் 






ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறையாவது அசடு வழியும் அனுபவம் எல்லோருக்கும் இருந்திருக்கும்தானே?  ஆமாம் என்று சொல்லி விடுங்கள்.  இல்லாவிட்டால் ஏமாந்து போய் அசடு வழிவேன்!

உறவினர் பெயரில் இன்னொருவர் இருந்ததால் வந்த குழப்பம்.  சொன்னவர் சரியாகச் சொல்லவில்லையா, சொல்லிதான் நாங்கள் சரியாய் கருத்தில் வாங்கவில்லையா...  

அசடு வழியவேண்டும் என்று விதி இருக்கும்போது தடுக்க முடியுமா?!!

மருத்துவமனை ஒன்றுக்கு செல்லவேண்டி இருந்தது.  அங்கு வேலை செய்த உறவினர் எங்களுக்கு அங்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்தார்.  அவர் பெயர் கஸ்தூரி என்று வைத்துக்கொள்வோம்.  அவர் நாத்தனார் பெயர் சுமதி என்று வைத்துக்கொள்வோம்.

[பொது இடங்களில் எழுதும்போது பெயர்களை மாற்ற வேண்டும் தெரியுமோல்லியோ!]

கஸ்தூரி என் மனைவியிடம் அலைபேசியில் சொன்னார்..."அக்கா...   அங்க போனதும் ரிஸப்ஷன்ல ரமேஷ்ன்னு இருப்பார்.  அவர் கிட்ட போய் நாங்க சுமதியோட ரிலேஷன்ஸ்னு சொல்லுங்க... அவங்கதான் உங்களை பார்க்கச் சொன்னாங்கன்னு சொல்லுங்க... சுமதி எட்டரை மணி போல அங்கே வருவார்" என்றார்.  

"அடடே..  நமக்காக சுமதியே அங்கே வராளே.." என்றெல்லாம் நானும் என் மனைவியும் பேசிக்கொண்டு அந்த மருத்துவமனையை அதிகாலை அடைந்தோம்.

ரிசப்ஷன் ரமேஷை இனம் கண்டு விஷயம் சொன்னதும் "சுமதியா... அடையார்லேருந்து வர்றாங்களே..   அவங்களா?" என்றார்.

"இல்லை..  சைதாப்பேட்டையிலிருந்து..." என்றேன். திரும்பியவன், அவர் வேறு யாரையாவது குழப்பிக்கொள்ளப் போகிறாரே என்று "காரணீஸ்வரர் கோவில் தெரு" என்று மேலதிகத் தகவலும் கொடுத்தேன். [இடம் மாற்றப்பட்டிருக்கிறது!!!)

Image result for fooling ourselves clip arts images
நன்றி இணையம் 


கொஞ்சம் யோசித்தவர் "அந்த ஃபார்ம் ஃபில் பண்ணிக்கொடுங்க.." என்று எங்களுக்கு ஆளுக்கு ஒரு ஃபார்ம் கொடுத்தார் - நாங்கள் அங்கு சென்றிருப்பது முதல் முறை என்பதால்.

மனைவியிடம் "அவருக்கு சுமதி யார் என்று சரியாக நினைவில்லை போல... உன் செல்லில் அவள் ஃபோட்டோ இருக்கே...  போய்க் காட்டவா?" என்று கேட்டேன்.

தனது செல்லை எடுத்து சுமதி புகைப்படத்தைப் பார்த்த என் மனைவி, "வேண்டாம்... வேண்டாம்...  இதை எல்லாம் எதற்கு காட்டிக்கொண்டு..?" என்று என்னை ரட்சித்து அருளினார்.

நிரப்பிக்கொண்டு வரும்போது "யார் உங்களுக்கு இந்த இடத்தை சிபாரிசு செய்தது?" என்று ஒரு காலம் இருக்கவே மறுபடி ரமேஷை நெருங்கி அந்த இடத்தில் 'சுமதி பெயரைப் போடவா' என்று கேட்டேன். 

பெரிய சலுகைகள் வேண்டாம், சீக்கிரம் பார்த்து அனுப்பி விட்டால் போதும் எனக்கு!

"வேண்டாம்..  சும்மா விட்டுடுங்க.." என்றார் ரமேஷ்.

நிரப்பிக் கொடுத்து சோதனைகள் செய்யத் தொடங்கினர்.  'சுமதி இங்கு வருவதாகச் சொன்னாளே..' என்று நாங்கள் அவ்வப்போது வாசலைப் பார்த்திருந்தோம்.  சுமதி வரவே இல்லை.

சிறிய டாக்டர் பார்த்து, சோதனைகள் முடிந்து இறுதிக்கட்ட ஆலோசனைக்கு பெரிய டாக்டர் அறை முன் அமர வைக்கப்பட்டோம்.  அங்கிருந்த ஒரு பெண்மணியைப் பார்க்கச் சொல்லிதான் முந்தைய சோதனைகளின் செவிலியச் சகோதரி இங்கு அனுப்பி இருந்தார்.

அந்தப் பெண்மணி எங்களை பார்த்து சிநேகமாய்ப் புன்னகைத்தார்.  "உங்க பேர் ஸ்ரீராம்தானே?"  என்றார்.  

வியப்புடன் "ஆமாம்" என்றேன்.  "பார்றா..  நம்மை இங்கு இவருக்குத் தெரிஞ்சிருக்கு போல...  

"இவர் உங்க மனைவிதானே?" என்றார் அவர் தொடர்ந்து..  

"ஆமாம்" என்றேன். 

'ஓ...  ஆஸ்பத்திரி பேப்பர் பார்த்துச் சொல்கிறார் போல...'

உள்ளே செல்லும்போது கூடவே வந்தவர் 'பெரிய டாக்டரி'டம் "இவங்க எங்க ரிலேட்டிவ் ஸார்.." என்று சிபாரிசு சொல்லிச் சென்றார்.  மருத்துவரைப் பார்த்து விட்டு வெளியில் வந்ததும் கூட சில யோசனைகள், டிப்ஸ் சொன்னார்.  சந்தோஷமாக இருந்தது.

நன்றி கூறிக் கிளம்பும்போது "கஸ்தூரியைக் கேட்டதாகச் சொல்லுங்கள்..." என்றார்.

மனைவி, "ஓகே ஓகே...  உங்கள் பெயர்?"  என்று கேட்டார்!

"சுமதி" என்றார் அந்தப் பெண்!

Image result for fooling ourselves clip arts images
நன்றி: இணையம்.

பொறி தட்டியது.  எல்லாம் அதனதன் இடத்தில் பொருந்த,  அ வ சி....

ரமேஷ் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்.  


"இதுல 'அவருக்கு (ரமேஷுக்கு)  சரியா அடையாளம் தெரியல... போட்டோவைக் காட்டுவோமான்னு கேள்வி வேற..."  இடித்தார் பாஸ்.

இவர் சரியா கேட்டுக்க மாட்டாராம்..  இடி எனக்கு!



========================================================================================================

ஆயிரம் வேலை இருக்கும்போது மழை பெய்கிறதே, வேலை கெடுகிறதே என்று ஓரமாக ஒதுங்கி சாலையில் நின்று கொண்டிருக்கிறீர்கள்...  

அங்கே ஒரு குழந்தை மழையில் குதித்து ஆட்டம் போடுகிறது...   பேப்பர் கப்பல் விடுகிறது.. கைகளில் மழைத்துளிகளை ஏந்தி கும்மாளமிடுகிறது..   

பார்க்கும் நமக்கும் நம் வேலையின் டென்ஷன் மறந்து இந்தக் குதியாட்டத்தில் ஈடுபடத் தோன்றும் அல்லவா?  அது போல...


நேற்று எங்கள் குடும்ப குழுமத்தில் ஒரு பெண் உறுப்பினர் சென்னையில் மழை என்றதும் ஆனந்தமானார்.  சாதாரணமாக அமைதியாய் இருக்கும் அவர் ஆனந்தத் தாண்டவம் ஆட, கொட்டிய கவிதைகளை கௌ அங்கிள் யோசனையின் பேரில் உங்களுக்கும் படிக்கப் பகிர்கிறேன்.  அவர் பெயர் உஷா சத்தியநாராயணன்.


Image result for metro train images


இருட்டான ஜன்னல்கள் வழியே 
சோம்பேறி நகரம் குளிக்கிறது

மெட்ரோ ரயிலின் கண்ணாடி கதவுகள் எல்லாம் நீர்த்திவலைகள்

வெயிலின் அழுக்குகள் எல்லாம் மழையில் சுத்தம் ஆகிறது

[மழை வந்ததால் கவிதை மழை கொட்டுதா என்று இன்னொரு உறவு கேட்டதற்கு வந்த பதில் அடுத்து]

Maza வந்தா அருவி மாதிரி கொட்டுது 

நனைந்த மரங்களின் இலைகள், 
பறவைகளின் இறகுகள் 
கவிதைக்கு பொருளாக 
மாறக் காத்திருக்கின்றன








கருப்பு கொடியும் 
கலர் குடையும் கொண்டு 
மழையை மறுதலிக்கும் 
மனிதர்களை மழை கேட்கிறது ...  
நான் வரமா சாபமா என

வரம் என்றால் வரிந்து கட்டி வருகிறதாம்...   
சாபம் என்றால் சட் என போகிறதாம்

வாசல் வரை வந்த வானம் 
வீட்டுக்குள் 
கடமை கடலாக மாற்றி விட்டது






எண்ணில் அடங்கா 
எண்ணங்களை 
எழுத்தில் வடிப்பது 
சிரமமாக உள்ளது

இரவும் வரும் பகலும் வரும் 
இரண்டும் ஒன்றுதான்.
கவிதை வரும்  பாட்டும் வரும்  
கருத்து ஒன்றுதான்..
கருத்து ஒன்றுதான்

முண்டாசு கவிஞன் போல 
வீதியில் முழங்கி சென்றால் 
முட்டாள் என 
முத்திரை குத்தி விடுவார்கள் 
ன்ற அச்சம்..

தோகை இல்லை 
விரித்து நடனமாட
எனவே 
எழுத்தில் காட்டுகிறேன் 
என் மகிழ்ச்சியை

 வானம் இருண்டு 
மழை கொட்டியது. 
நெஞ்சம் நனைந்து 
வார்த்தைகள் பூக்கிறது.

நோட்டு புத்தகத்தின் அட்டைகள் எல்லாம் வரைந்து பழகினேன்.  பள்ளியில் படிக்கும் போது

நேரமும் கூடியது...  பணி இல்லை இன்று😃

 அம்மாவுக்கு உடல் நலம் குன்றியது.  என் படங்களும் பாடங்களும் பறந்தன

வெண்ணெய் திருடிய கண்ணன், 
ஓடக்காரன் நதி மீது, 
படம் எடுத்த நாகம் 
இவை என் பத்தாம் வகுப்பில் வரைந்து அப்பா  (பாஹே) பாராட்டியவை.

இதைக் கொண்டு மாருதி ஜெயராஜ் மணியன் செல்வம் படங்களை வரைந்து பழகினேன்

மீண்டும் வரையவும் ஆசை😊


===================================================================================================


1929 இல் விகடனின் நகைச்சுவைக்கு கற்பனை ஒன்று...




ஆனந்த விகடனில் மகாகவி பாரதியார் கூட எழுதி இருக்கிறார் தெரியுமோ...    1930 களில் அவர் எழுத்துகளும் விகடனில் பிரசுரமாகி உள்ளன.




ஓவியர் மாலி வரைந்திருப்பது யார் தெரிகிறதோ?  வருடம் 1936




மாற்றி யோசித்த ஜோக்...   அப்போது - 1930 களில்...




=====================================================================================================

88 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. நல்வரவு சொன்ன அனைவருக்கும் நல்வரவு, வணக்கம்.

      நீக்கு
  3. இன்று மதியம் பயணம் சென்னைக்கு. சனிக்கிழமை மீண்டும் பங்களூர்....வரும் போது உறவினர்களும் வருவதால் செவ்வாய் வரை பிஸி...செவ்வாய் அவர்கள் சென்றபிறகுதான் ஃப்ரீ....இடையில் முடிந்தால் வலைப்பக்கம் எட்டிப் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ.... வீ வில் மிஸ் யூ... ஏற்கெனவே இரண்டு அதிரடி சகோதரிகளைக் காணோம்....!

      நீக்கு
    2. அவங்களை காணலைன்னு நானும் நினைச்சுட்டு அப்பப்ப அதிரடியை இழுப்பது போல் கமெண்டில் போட்டாலும்...வராப்ப்ல இல்ல

      கீதா

      நீக்கு
  4. அசடு வழிந்த.....வழியும் அனுபவம் நிறைய நிறைய நிறைய...ஸ்ரீராம்....என் வீட்டிலேயே என்னை அசடு, மக்கு என்று தான் தினமுமே....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. [பொது இடங்களில் எழுதும்போது பெயர்களை மாற்ற வேண்டும் தெரியுமோல்லியோ!]

    அதானே! அப்படித்தானே நம்ம கதைகள் பிறக்குதூஊஊஊ...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      சொந்தக்கதை.. சோகக்கதை...
      நெஞ்சுக்குள்ள நிக்கிறது...!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் அது அங்கிட்டே இருக்கட்டும் வெளிய ஜொள்ளிடப்டாது ரகசியத்த....நெஞ்சுக்குள்ள என்னாருக்கு சொன்னால் புரியுமா?!!!!!

      கீதா

      நீக்கு
  6. சென்னையில் இரண்டு நாட்களாய் சூரியனையே காணோம். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது மழை.

    குவைத்திலும் கனமழையாமே... தினமலர் சொல்கிறதே... (மறுபடி வாங்கி கட்டிக்க கொள்ளப் போகிறேனா!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் இங்கு சென்னையின் எஃபெக்டோ (பட்டர்ஃப்ளை தியரி/கேயோட்டிக் தியரி) நேற்றெல்லாம் சூரியன் எட்டியே பார்க்கலை...கூல் கூல் வெதர்....நாள் முழுவதும்...

      கீதா

      நீக்கு
    2. இன்றும் சூரியன் எட்டிப் பார்க்கத் தயங்குகிறார்....ஒரு வேளை கீதா சண்டைக்கு வந்துருவாளோன்னு இருக்கும்...சென்னைல மட்டும் மழைனு லீவு போட்டுருக்கீரே இங்கயும் மழை இல்லாட்டாலும் லீவு போடும் என்று....அதனால கருத்த மேகத்தை விட்டு பேய்க்காட்டறார்!!!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. உங்கள் இப்போதைய ஊர் எப்போதுமே குளுகுளுதானே கீதா!

      //அதனால கருத்த மேகத்தை விட்டு பேய்க்காட்டறார்!!!!!!!!!!!!!!!!!! //

      நம்ம பேய்க் காட்டறவரைக் காணோம்.

      நீக்கு
  7. மருத்துவ மனை நிகழ்வு சுவாரசியம். கவிதைகள் உண்மையிலேயே உங்கள் குழுவில் உள்ளவர் எழுதினதா? இல்லாட்டி நீங்க எழுதினதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.

      //கவிதைகள் உண்மையிலேயே உங்கள் குழுவில் உள்ளவர் எழுதினதா? இல்லாட்டி நீங்க எழுதினதா?//

      நான் இல்லை!

      நீக்கு
    2. //இவை என் பத்தாம் வகுப்பில் வரைந்து அப்பா (பாஹே) பாராட்டியவை//
      இங்கே தான் க்ளூ கொடுத்திருந்தீங்க! இருந்தாலும் எல்லோருமா? என சந்தேகம்! :) இப்போச் சொல்லிட்டீங்க!

      நீக்கு
  8. நான் நிறைய அசடு வழிஞ்சிருக்கேன் என்றாலும் இப்படி இல்லைனு நினைக்கிறேன். ஏன்னா அந்தப் பெண்மணி விசாரிக்கையிலேயே பொறி தட்டி இருக்கும், இவங்க தான் சுமதியோனு!

    பதிலளிநீக்கு
  9. அசடு வழிவது அனைவரது வாழ்விலும் நிச்சயம் உண்டு.
    விஸ்வாமித்ரர்கூட அசடு வழிந்ததால்தானே இன்றுவரை அவரது பெயர் மக்கள் மனதில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      ஸோ, அசடு வழிந்தால்தான் மனதில் நிற்க முடியும்!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி!!!!

      கீதா

      நீக்கு
  10. இம்முறை இங்கே திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மழை இல்லை. பறவைகள் உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. குடியிருப்பு வளாகத்தின் பின்பக்கத் தெருவில் நம்ம முன்னோர்கள் மரங்களில் ஆனந்தமாகக் குழந்தை குட்டிகளுடன் குடித்தனம் நடத்துகின்றனர். எங்கேயானும் இந்தப்பக்கம் வந்துடப் போறாங்களேனு கிலியா இருக்கு! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னோரைக் கண்டு பயப்படலாகுமா அக்கா?!!!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் ஊட்டியிலேயே தனியா சமாளிச்சிருக்கேனாக்கும். ஹிஹி, ஓட்டமா ஓடி இன்னொரு பக்கத்து அறைக்குப் போய் அது போகும் வரை கதவைச் சார்த்திட்டு இருப்பேன். :)))) என்ன சமையல் கொஞ்சம் லேட் ஆகும். அவங்க மிச்சம் வைச்சுட்டுப் போயிருக்கும் (மனசிருந்தாத் தான் அதுவும். பல சமயங்கள் எல்லாத்தையும் காலி செய்துடுவாங்க) காய்களைக் கொண்டு சமைப்பேன். நான் பார்த்தவரைக்கும் ரொம்பவே ஆசாரம். வெங்காயத்தைத் தொட்டதில்லை. :)))))

      வேணும்னா உங்களுக்கு ஒரு ஐந்தாறு குடும்பங்களை அனுப்பி வைக்கட்டா? :P :P :P

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா...வெங்காயம் பிடிக்காதாமா? இங்கு ஒருமுறை அவர்கள் திருச்சுற்றில் இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் கதவையே திறக்கவில்லை!

      நீக்கு
  11. என்று என்னை ரட்சித்து அருளினார்.//

    ஹா ஹா ஹா ஹாஹா...

    "இதுல 'அவருக்கு (ரமேஷுக்கு) சரியா அடையாளம் தெரியல... போட்டோவைக் காட்டுவோமான்னு கேள்வி வேற..." இடித்தார் பாஸ்.

    இவர் சரியா கேட்டுக்க மாட்டாராம்.. இடி எனக்கு!//

    ஹா ஹா ஹா ஹா ஹா க்ரேஸி மோகன் எழுதும் கதை போல ஆகிடுச்சோ!!!!!ஆள்மாறாட்டம் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மாலி வரைந்திருக்கும் படம் காமராசர்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

      நீக்கு
  13. ஓவியத்தைப் பார்த்ததும் காமராசர் என்று புரிந்துவிட்டது. எழுத வந்தால் இப்போ கரந்தை ஜெயக்குமார் சார் எழுதியிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை.. பார்த்த உடனே கண்டு பிடிக்கக்கூடிய அளவில்தான் வரைந்திருக்கிறார் இல்லையா?

      நீக்கு
  14. கவிதைகளோடு உங்கள் கருத்தும் சேர்ந்திருப்பதால் குழப்பமாக இருக்கும். இடைவெளி கொடுத்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவிதைகளோடு உங்கள் கருத்தும் சேர்ந்திருப்பதால் //

      எங்கே? எனக்குதான் குழப்பமாக இருக்கிறது! கவிதைகளுக்கு நடுவில் என் கருத்தா? அபுரி...

      நீக்கு
    2. //நோட்டு புத்தகத்தின் அட்டைகள் எல்லாம் வரைந்து பழகினேன். பள்ளியில் படிக்கும் போது

      நேரமும் கூடியது... ப// - இது கவிதைக்குச் சம்பந்தமில்லாததுதானே

      நீக்கு
    3. ஓ... இப்போ புரிந்துவிட்டது. உங்களுக்கு தங்கை இருக்கிறார் என்று யோசிக்கவில்லை. 'அப்பா/பாஹே' என்றெல்லாம் படித்தபோது அது நீங்கள் எழுதியது என்று நினைத்துவிட்டேன். எதுக்கு 'குடும்ப உறுப்பினர்' என்றெல்லாம் சொல்லவேண்டும், 'என் தங்கை' என்று சொல்லியிருக்கலாமே..... ஏற்கனவே யாரு இந்த 'காசு ஷோபனா', குரோம்பேட்டை குறும்பனின் உறவினரா இல்லை அவரேவா என்றெல்லாம் குழப்பம் இருக்கு.

      நீக்கு
  15. முண்டாசு கவிஞன் போல
    வீதியில் முழங்கி சென்றால்
    முட்டாள் என
    முத்திரை குத்தி விடுவார்கள்
    என்ற அச்சம்..//

    ஆஹா ஆஹா….என்னைப் போலானவங்க போல!!! நானும் மழையில் ஆடுவதுண்டு…….ஹியரிங்க் எய்டைக் கழற்றி வைத்துவிட்டு…..ஒன்று தண்ணீர் பட்டு வீணாகிவிடக் கூடாது என்றாலும்
    யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே (ஊத்துக்காடின் வரிகள்!!) என்று திட்டல்கள் இருந்தாலும் காதில் விழாதே!!! ஹா ஹா ஹா ஹா….

    நானும் மழை வ்ந்து விட்டால் மகன் இருந்தப்ப ரெண்டு பேரும் நனைஞ்சு மகிழ்வோம்….பால்கனியில் நின்று கொண்டு மேகத்தைப் பார்ப்போம்…மகன் கணித்துக் கொண்டே இருப்பான்….அம்மா இன்னும் மழை இருக்கு…பாரு மேகம் எந்த திக்கு நோக்கி போகுது என்று அப்பை அப்பையா வந்துகிட்டே இருக்கு பாரு…..
    மேகத்தின் அழகு நடை கண்டு சொல்லிக் கொண்டே இருப்பான். மேகம் நின்று அடர்த்தியாய் இருந்துவிட்டால், அம்மா எல்லா மேகமும் வந்தாச்சு இனி நகர இடம் இல்லை போல…கொட்டப் போகுது ஹுஹா என்று இருவரும் குதிப்போம்…….

    கவிதாயினி சொல்லியிருப்பது போல குதித்தால் பைத்தியம் என்ற பெயர் தான் கிடைக்கும்…

    வரிகளை மிக மிக மிக ரசித்தேன்…………….இன்னும் வாசிச்சுட்டு வரேன்….

    உங்க குடும்பமே எழுத்துக் குடும்பம் போல!!!! வியக்கேன்….ரசிக்கேன்….வாழ்த்துகிறேன்!!!

    கீதா


    பதிலளிநீக்கு
  16. தோகை இல்லை
    விரித்து நடனமாட
    எனவே
    எழுத்தில் காட்டுகிறேன்
    என் மகிழ்ச்சியை//

    ஹைஃபைவ் வித் கவிதாயினி...

    ஸ்ரீராம் கவிதாயினி யாரென்று தெரிந்துவிட்டது!!!! அதான் கரீக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டடாஆஆஆஆஆஆஆஆ சொல்லிட்டேன் பாருங்க குடும்பமே எழுத்துக் குடும்பம்......ஜீன் எப்படி விட்டுப் பொகும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஓவியர் + கவிதாயினி....கலைக்குடும்பத்துச் செல்வம் வரைந்த படம் இருந்தால் இங்கு பகிரலாமே ஸ்ரீராம்....

      அவரது "மீண்டும் வரைய ஆசை"

      சின்ன சின்ன ஆசை
      மீண்டும் வரைய ஆசை க்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள் ஸ்ரீராம். நம் நட்புகள் எல்லாருமே வாழ்த்துவாங்க..!!!

      பாராட்டுகளையும் தெரிவித்து விடுங்கள் தெருவில் ஆட்டம் போட்டால் பைத்தியம் என்று சொல்வார்களோ என்ற அச்சம் ...இதோ கவிதையில் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆனந்த ஆட்டம் போட்டு அசத்திவிட்டார்! (தெருவில் இல்லைன்னாஅலும் வீட்டு பாத்ரூமில் ஆடலாம்...அப்புறம் இந்த கீதா அவரை சந்திக்க நேர்ந்து அப்போது மழையும் பெய்தால் (பெய்யும்!! ஹா ஹா ஹா ஹா அரிதல்லவா!!) அவருக்கு ஒரு துணை உண்டு என்று சொல்லுங்கள்! கூட ஆட!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. வான் மேகம் பூப்பூவாய்த் தூறும்......அழகான பாடல் நினைவுக்கு வந்தது...

      கீதா

      நீக்கு
    3. //கவிதாயினி யாரென்று தெரிந்துவிட்டது!!!!//

      ஹா.. ஹா.. ஹா.. நல்லவேளை புரியற மாதிரிதான் எழுதி இருக்கேன் போல... நெல்லைதான் குழம்பிவிட்டார் போல.. அல்லது அவர் கமெண்ட் எனக்குப் புரியவில்லை.​

      நீக்கு
  17. ஆள் மாறாட்டம் அசடு வழிதல் எல்லாம் தொடரும் சமாசாரங்கள்.
    உங்கள் குடும்ப எழுத்தாளரின் மழைக் கவிதை அருமை.
    ஆட்டம் போடுகிறது சொற்கள். காமராஜரின் ஓவியம் பேசுகிறது.

    பதிலளிநீக்கு
  18. அசடு வழிவது உடம்பிற்கு நல்லதாம்...!

    கவிதை வரிகள் நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  19. விடனின் விகடம் செம....ரசித்தேன் சிரித்தேன்....கூடவே நம்ம கில்லர்ஜி நினைவுக்கு வந்துவிட்டார்....அவர் வைக்கும் பெயர்களும் இப்படித்தானே பெரும்பாலும் ஹா ஹா ஹா

    தண்ணீரில்லாமல் தானம் செய்து கொடுக்க/// அப்படினா அப்போவே தண்ணிக் கஷ்டமாஆஆஆஆஆஆஆஆஆஅ !

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பாரதியாரின் காக்கா கதை ஸ்வாரஸ்யமாக இருக்கிறதே...

    பாரதியின் வரிகள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள், பென், ஜாதி பற்றி சொல்லியிருப்பது அருமை...

    ஓவிய மாலி வரைந்திருப்பது இங்கு பலரும் சொல்லிவிட்டாலும் காமராசர் என்று தெரிந்துவிட்டது....குறிப்பாக உட்காரும் விதம்...அந்த ஒரு ஸ்டைல்....தெரிகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகடனில் பாரதியார் எழுதியிருப்பதே ஒரு ஆச்சர்யம்தான் இல்லையா?

      நீக்கு
  21. அப்போவேவா இப்படிமாற்றி யோசித்த ஜோக்.....நல்லாருக்கு...

    இப்பவும் இப்படிக் கிண்டலடிச்சு எழுத்துகளில் வருமே....அப்ப எதுவும் மாறவில்லையோ...ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. //
    வரம் என்றால் வரிந்து கட்டி வருகிறதாம்...
    சாபம் என்றால் சட் என போகிறதாம்.
    //

    அருமை. மழைக்கு பதில் மனைவி என்று சேர்த்துப்படித்தால் அப்படியே மாற்றி போடவேண்டி இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JK ஸார். ரசித்தேன் உங்கள் மாற்று யோசனையை.

      நீக்கு
  23. அசடு வழிந்த அனுபவம் அனைவரும் எதிர்கொள்வதே. நீங்கள் துணிச்சலாகப் பகிர்ந்துகொண்டீர்கள். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  25. அசடு வழிந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்குமா? வாழ்வில்.
    உங்கள் அனுபவம் நல்ல வேடிக்கை.

    //ஒரு குழந்தை மழையில் குதித்து ஆட்டம் போடுகிறது... பேப்பர் கப்பல் விடுகிறது.. கைகளில் மழைத்துளிகளை ஏந்தி கும்மாளமிடுகிறது.. //

    அருமை.

    பதிலளிநீக்கு
  26. உஷா சத்தியநாராயணன் கவிதை நன்றாக இருக்கிறது.

    அடுத்து உள்ள கவிதை உங்களோடது என்பதை அப்பாவின் பெயரை குறிப்பிட்டதால் புரிந்து கொண்டேன்.
    பாடலை மாற்றி பாடிய கவிதை நன்றாக இருக்கிறது.
    மீண்டும் வரையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு பிங்க் நிறத்தில் இருக்கும் எல்லா வரிகளுமே உஷா சத்தியநாராயணன் எழுதியதுதான். உஷா சத்தியநாராயணன் எனது தங்கை!

      நீக்கு
  27. விகட விவாக திருமணப்பத்திரிக்கை சிரிப்பு.
    பாரதியார் எழுத்துக்கள் பகிர்வுக்கு நன்றி.
    மாலி அவர்கள் ஓவியம் கர்மவீரர் காமராஜ் அவர்கள் தெரிகிறது, நன்றாக வரைந்து இருக்கிறார்.
    தூக்குதண்டையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  28. அசடு விழிந்த விதம் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  29. அனுபவம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது(மற்றவர்கள் சொதப்பினால் என்னா சந்தோஷம்!). ஆனால் இது அசடு வழிவதில் சேருமா?
    விகடனின் நகைச்சுவை அலாதி. இப்போது அப்படி இருக்கிறதா என்ரு தெரியவில்லை.
    மழை கொண்டு வந்த கவிதை குளுமை.

    பதிலளிநீக்கு
  30. மேற்படி கருத்தில் பெரியவர்,சிறியவராகி விட்டார். (என்று என்று வரவேண்டியது, என்ரு என்று வந்து விட்டது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்கள் சொதப்புவதை படிக்க ஜாலியாகத்தான் இருக்கும். எனக்கும் அப்படி ஜாலியாகப் படிக்க ஆசையாக இருக்கிறது...!!

      நீக்கு
  31. உங்கள் குழுவில் பலரும் கவிதை புனைவார்கள் போல் இருக்கிறதே ஆனாலிந்தக் கவிடைகள் எங்கோ எப்போதோ ப்டித்த உணர்வை தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் உபயோகிக்கும் கருப்பொருளையே உபயோகித்ததால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ ஜி எம் பி ஸார்...​

      நன்றி.

      நீக்கு
  32. @ ஸ்ரீராம்...

    >>> குவைத்திலும் கனமழையாமே... தினமலர் சொல்கிறதே...
    மறுபடியும் வாங்கி கட்டிக்க கொள்ளப் போகிறேனா!!!).. <<<

    இந்த தினமலருக்கு மட்டும் ஒழுங்காகத் தலைப்பு போடத் தெரியாது...

    அப்படியே போட்டு விட்டாலும்!?......

    குவைத்தில் கனமழை பெய்யலாம் - என்றுதான் கணித்திருக்கின்றார்கள்...

    இவிங்க போட்டிருக்கும் தலைப்பு கனமழை பெய்து கொண்டிருப்பது போல அர்த்தம் வருகிறது...

    கடந்த வாரம் மழை அதிகமாகப் பெய்தது உண்மைதான்....

    மழைத் தண்ணீர் கடலில் ஓடிக் கலக்க வழியே இல்லை இதுவரைக்கும்!>. அது தான் உண்மை..

    வாய்க்கால் ஆறு என்பதெல்லாம் இவர்கள் அறியாதவை...
    சாலைகளுக்குக் கீழாக அமைத்திருக்கும் வடிகால் குழாய்கள் அடைத்துக் கிடந்ததால்
    மழை நீர் உட்கலக்காமல் மேலேயே தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விட்டது...

    இதை இவனுங்க ஆற்றில் வரும் வெள்ளம் என்பதாக குறிக்கின்றார்கள்...

    வெட்டவெளியும் எண்ணைய் துளைகளும் தான் இங்கே...

    தவிர இப்போது உள்ள கணிப்பின்படி -

    இன்று வியாழக்கிழமை இரவிலிருந்து அல்லது வெள்ளிக்கிழமை காலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு கனமழையும் காற்றும் இருக்கக் கூடும் என்பதே...

    சென்ற சனிக்கிழமையிலிருந்து சுள்ளென்று வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில்
    இன்று காலையிலிருந்தே சூரியனைக் காணோம்!...

    கண்டுபிடிப்புகளை மீறியது கடவுளின் செயல்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே ஓகே நன்றி துரை செல்வராஜூ ஸார்.. இனி தினமலர் செய்திகளை ரூபாய்க்கு பத்து பைசாவுக்கு மட்டுமே நம்புகிறேன். சரியா?!!!

      நீக்கு
  33. அசடு வழிவது ஆண்களின் உரிமை! அரசியல் சாசனத்திலும் கிடைக்கக்கூடும் அலசிப் பார்த்தால்!
    அ.வ. அனுபவத்தை எபி தொடராக்கலாம். ஆனால் எல்லோரும் முன்வருவார்களா என்பது மில்லியன் ரூபாய் கேள்வி..

    ’எங்கள் குடும்ப குழுமத்தில் ஒரு பெண் உறுப்பினர்... உஷா சத்தியநாராயணன்..’! என்ன ஒரு அறிமுகம்!

    மழைக்கவிதை சில இடங்களில் நன்றாக இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே டெல்லி மெட்ரோ எங்கிருந்து வந்தது? ஒருவேளை டெல்லியில் வசிக்கிறாரோ கவிஞர்?!

    இவரது ஓவியங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா?கவிஞரான தங்கையை களத்தில் இறக்கவே கணகாலம் பிடித்திருக்கிறதே உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசடு வழியும் அனுபவத்தை யார் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம் என்று முதலிலும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்லிக் கொள்கிறேன். அதென்ன வாசகர்களை. நம் சக பதிவுலக நண்பர்களை இப்படி எடை போட்டு விட்டீர்கள்? வரிசையாக வரும் பாருங்கள்...

      டெல்லி மெட்ரோ இல்லை ஸார்... சென்னை மெட்ரோ... இங்கும் இருக்கிறதே...

      நன்றி ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  34. அசடு வழிதல் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை ... அது இல்லாவிட்டால் சுவாரஸ்யமில்லை

    பதிலளிநீக்கு
  35. அசடு வழிவதிலிருந்து ஆனந்த விகடன் கார்ட்டூன் வரை எல்லாம் நன்று!

    பதிலளிநீக்கு
  36. கடந்த இரண்டு மணி நேரமாக இங்கே மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது..

    இப்போது இரவு 11:30... (குவைத்)

    பதிலளிநீக்கு
  37. மாலை வணக்கம்.

    சுவையான பகிர்வு. அசடு வழிந்த சம்பவம் - ஹாஹா... ஒவ்வொருவருக்குள்ளும் இப்படி சில சம்பவங்கள்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!