புதன், 14 நவம்பர், 2018

புதன் 181114 நீங்க ரூல்ஸ் ராமானுஜமா அல்லது கேர்லெஸ் கேசவனா?


சென்றவாரக் கேள்வியாகிய நண்பர் விவாத மேடை கேள்விக்கு ஆணித்தரமாக, 'அநியாய வாதம் செய்வது நண்பராக இருந்தாலும் அவருக்கு சப்போர்ட் கிடையாது' என்றே எல்லோரும் பதில் அளித்திருக்கிறீர்கள். வெரி குட். தட் ஈஸ் த ஸ்பிரிட். 

கீதா சாம்பசிவம்   (அ)
நிஷா                          (இ)
ரேவதி நரசிம்ஹன் (அ)
நெல்லைத்தமிழன் (இ)
துரை செல்வராஜூ (அ)
திண்டுக்கல் தனபாலன் (அ) 
தம்பட்டம் (பானுமதி வெங்கடேஸ்வரன் ) (இ) 
கீதா ரெங்கன்  (அ 80%) (இ 20%)
ஏஞ்சல் (அ mostly) (இ sometimes) (ஈ to support அ !) 

யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் வேடிக்கை பார்ப்போம் என்ற பதில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, முன்னணியில் வந்து வெற்றி பெற்றுள்ளது. 

பதில் பதிந்த அனைவருக்கும் நன்றி. 

============================================

நெல்லைத்தமிழன் :

கேஜிஜி சார்... உங்கள் டெரிடரிக்கே வந்து உங்களை அனுஷ்கா மதத்துக்கு மாற்ற முயல்பவரைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? 

நெ த! சின்னக் குரலில் கேளுங்க. படமும் வாழ்த்தும் வெளியிட்ட பாவி  நாந்தான். அவர் பாவம், ஒன்றும் தெரியாத அப்பாவி. பதிவு வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புதான் அவற்றைச் சேர்த்தேன். நீலநிற எழுத்துகள் என்னுடைய மாறுவேடம்தான்! 

சிலரைப் பார்த்தால் மனது தானாகவே மலர்ச்சியுற்று நட்பு பூண்டுவிடுகிறோம். சிலரைப் பார்த்த உடனேயே பிடிக்காமல் போய்விடுகிறதே... அதன் காரணம் என்னவாயிருக்கும்?

புற அழகு நமது மனதைக் கவரும் என்பதன் காரணமாகத்தான் நாம் வெளியே போகும் போது முகம் கழுவிக் கொண்டு தலை சீவிக் கொண்டு பவுடர் போட்டுக் கொண்டு போகிறோம்.  முக விலாசத்தைப் பார்த்து ஒருவரைப்  பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சிலசமயம் ஒருவரைப் பற்றி பெருமை கொள்ளக்கூடிய ஏதோ ஒன்றைக் கேள்விப்பட்டதும் அவர்கள் மேலே ஒரு மதிப்பு வந்துவிடுகிறது.  இதன் காரணமாக நமக்கு அவரைப் பிடிக்கும்.  புகழ்பெற்றவர்கள் அதாவது கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்கள்( அழகற்ற நட்சத்திரங்களுக்குப் பட்டியல் தேவையில்லை) அரசியல் தலைவர்கள் இவர்கள் முகவிலாசம் இல்லாவிட்டாலும் அவருடைய புகழ் காரணமாக நம்மையும் அறியாமல் அவர் பெயரில் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.  கூட்டத்துக்கு நடுவில் ஒரு சினிமா நட்சத்திரத்தைப்  பார்த்தால் அவரைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம்.

பூர்வ ஜன்ம நட்பு அல்லது பகையாக இருக்குமோ? 

அரசுப் பணியில் வேலைப் பாதுகாப்பு, வேலைப்பளு இல்லாமை, நிறைய விடுமுறைகள் என்று அள்ளிக் கொடுக்கும்போது பிச்சை எடுக்கும் பெரும்பாலானவர்களைப் பற்றி (கையூட்டு வாங்கும்) உங்கள் அபிப்ராயம் என்ன?

பண ஆசை என்று வந்து விட்டால் எவ்வளவு இருந்தாலும் போதாது  என்று எண்ணுவது இயல்பு.  400 கோடி ஐநூறு கோடி என்று சொத்து சேர்த்த அரசியல் பிரபலங்கள் கூட மேலும் மேலும் ஊழல்கள் செய்து கொண்டே இருக்கிறார்களே தவிர சரி போதும் என்று ரிடயராவது இல்லை.  ஆசை வெட்கம் அறியாது என்பதால் அவர்கள் கூச்சப்படுவதில்லை.

ஊழல் செய்பவர்களையும் லஞ்சம் பெறுபவர்களையும் பற்றி அபிப்பிராயம் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?  இத்தனை பேருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருந்தாலும் இவர்களுக்கு ஏதும் ஆவது இல்லையே என்கிற ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது

அரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காத்தற்கு, ஆசிரியர்களின் தரம் காரணமா இல்லை அதீத லஞ்சப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அறியாத காரணமா?

அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு பணம் செலவாவது இல்லையே. அரசுப் பள்ளிகள் தரம் தாழ்ந்து இருக்கின்றன என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.  அரசு ஊழியர்கள் மட்டும் தான் அரசு பள்ளிகளை நாட வேண்டுமா என்ன ?  . தரமான பள்ளிகள் இல்லாதவரை யாரையும் அரசுப் பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று நிர்பந்தப் படுத்த முடியாது.  அரசு ஊழியராக இருந்தால் அரசு பள்ளிகளில் தான் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் அரசு பஸ்களில்தான்  பயணம் செய்ய வேண்டும் அரசு அம்மா உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது அல்லவா ?

மோர் சாதமோ அல்லது சாதாரண தோசை (எப்போவாவது) உயிர்வாழப் போதுமானதாக இருக்கும்போது மனது ஏன் வெவ்வேறு வகைச் சாப்பாட்டை விரும்புகிறது? ஒவ்வொரு மனிதனே தன்னளவில் மற்ற சக மனிதர்களைப் பற்றிக் கவலையில்லாமல் சுயநலத்தோடு இருக்கிறான் என்று பொருள் கொள்ளலாமா?

புலன் நுகர்ச்சியில் இன்பம் காண்பது உயிர்களின் இயற்கை அதில் தவறேதும் இல்லை ஆனால் அது சட்டதிட்டங்களுக்கும் சமுதாய விதிகளுக்கும் புறம்பாக இல்லாமல் இருக்க வேண்டும் .  இதைப்பற்றி ஒரு குற்ற உணர்ச்சி இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஜப்பான் தேசத்தவர் தங்கள் நாட்டுப் பொருட்களையே பெரும்பாலும் வாங்கும்போது இந்தியர்கள் அயல்நாட்டுப் பொருட்களை வாங்குவது, இந்தியத் தயாரிப்பாளர்களின் தரத்தில் கொண்ட அவநம்பிக்கையா இல்லை தேசபக்தி இல்லாத தன்மையா?

இந்திய பொருட்கள் பலவும் தரம் தாழ்ந்ததாக இருக்கிறது என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.  நல்ல தரமான இந்திய பொருட்கள் இருக்கும்போது வெளிநாட்டு பொருட்களை வாங்குவது தவறு என்று சொல்வதும் ஒரு விதத்தில் நியாயம் தான்.  ஆனால் உலகளாவிய வர்த்தகம் என்று வந்த பிறகு இந்த மாதிரி குறுகிய மனப்பான்மைக்கு  இடமில்லை.  கொள்ளுக்கு வாயைத் திறக்கும் குதிரை கடிவாளத்திற்கும் வாயைத் திறந்து தானே ஆக வேண்டும் ?

இந்த அதீத ரசிகர்கள் (ஶ்ரீ, நெ போன்ற வெளிப்படையானவர்கள் அல்லர்), நிஜமாகவே தாங்கள் ரசிக்கும் நடிகைகள் தெரு முனையில் ஒரு விழாவுக்கு வந்தால் வேலை மெனக்கெட்டு கூட்டத்தோடு கூட்டமா போய்ப் பார்ப்பார்கள் என்று நினைக்கறீங்களா?


பார்க்க மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

வெளியில் சினிமா, நடிக நடிகையர் பிடிக்காது, இந்தக் கெட்ட வழக்கம் இல்லை, அது இல்லை என்பவர்கள் உண்மையானவர்களா அல்லது வெளி பிம்பம் ஏற்படுத்துகிறவர்களா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?  

தம்மைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்பவர்கள் உண்மையிலேயே உயர்வானவர்களா இல்லை தம்பட்டம் அடிப்பவர்களா என்று எதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் ?

தம்பட்டம் : 

கொழுக்கட்டையோ, உ.கி.போண்டாவோ கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுவிட்டு போகாமல், இதிலிருந்து அதுவா? அதிலிருந்து இதுவா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்பவர்களை என்ன செய்யலாம்? 

அவர்களுக்கு உருளைக்கிழங்கு போண்டா, கொழுக்கட்டை எதுவும்  கொடுக்காமல் இருக்கலாம்.

கமல் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? எரிச்சலூட்டிய படம் எது?

பிடித்தது மைக்கேல் மதன காமராஜன்.
பிடிக்காதது சகலகலாவல்லவன்.  

பஞ்சதந்திரம் ^ பி.

பம்மல் K சம்பந்தம். எ ஊ 


வாட்டசாட்டமாக இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் ஆண்பிள்ளைத்தனம் வந்துவிடும், அனுஷ்கா மட்டும் எப்படி தப்பிக்கிறார்?

 அவர் தப்பிக்கவில்லை என்று நான் சொன்னால்... ?

ரசாயனம், பௌதீகம், கணிதம், உயிரியல், அஸ்ட்ரானமி என்ற விஞ்ஞானத்தின் எந்த பிரிவு உங்களுக்கு பிடிக்கும்?  

கணித்துச்  சொல்கிறேன் -  பௌதிகம் பிடிக்கும்.  என் ரசாயனம் அப்படி.  என் உயிர் இயலின் உயர் இயல் இது !?

பௌதிகம். பாடப்பிரிவுகள் பிடிப்பதற்கு, பிடிக்காமல் போவதற்கு, கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும் ஒரு முக்கிய காரணம். 

காரணமே இல்லாமல் சில நாட்கள் மனது சந்தோஷத்தில் துள்ளுகிறது? சில சமயங்களில் இனம் புரியாத சோகத்தில் தோய்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  

காரணமே இல்லாமல் மனது செயல்படுவதற்குக் காரணம் எப்படிச்  சொல்ல முடியும் ?  அப்படியே சொல்வதானாலும் அதை பிறர் எப்படி சொல்ல முடியும் ?

இது எனக்கும் நிகழ்வதுண்டு. இதே கேள்வி எனக்கும் தோன்றுவது உண்டு. ஏதோ என்  ஜாதக கிரஹ நிலை என்று நினைப்பேன். 

கீதா ரெங்கன் : 

 (சமையலில்) மாத்தி யோசிச்சுப் புதுசா செய்யறது மொனொடொனஸா வைக்காம நம்மைப் புத்துணர்வு மிக்கவரா வைக்கும்றது என் எண்ணம். இது சமையலில் மட்டுமல்ல எல்லா விஷயங்களிலும் என்பது என் எண்ணம் உங்களுக்கு?

Variety is the spice of life என்பது சரிதான். 

வாழ்க்கையில்  சுவாரஸ்யம் வருவதற்கு வித்தியாசமான யோசனைகளும், செயல்பாடுகளும் பெரிதும் உதவுகின்றன. சரிதான். 

கில்லர்ஜி: 

தீபாவளிக்கு ஒரேயொருநாள் வெடி வெடிப்பதை தடுக்கும் நீதிமன்றம், அரசியல்வாதிகள் வரும்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் வெடிக்கப்படுவதை தடுக்க முடியவில்லையே... காரணம் என்ன?  

நீதிமன்றம் தன் முன் வைக்கப்பட்ட வழக்கை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுகிறது.  வேறொரு விஷயத்திற்கு நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று நாம் எண்ணினால் அதற்காக ஒருவர் வழக்கு போட வேண்டும்.  அப்புறம் அரசியல்வாதி அவரையே வெடிவைத்து தகர்த்து விடுவார் என்ற ஆபத்து இருக்கிறது அல்லவா ?

 ஏஞ்சல் :

1, பெருமைக்கு எருமை மேய்த்தல் ..அப்படின்னா என்ன ? எந்த சூழலில் இந்த phrase வந்திருக்கும் இதற்க்கு மூலம் யாராக இருக்க கூடும் ?

தம்மை அளவுக்கு மீறி விளம்பரத்திற்காக எளிமையாக காட்டிக் கொள்ளுதல் என்று வைத்துக் கொள்ளலாம்.  இதற்கு முன்னோடி துண்டு அணிந்து கொண்டு சுற்றிவந்த காந்திதான் என்று சொன்னால் என்னை அடிக்க வருவீர்கள்.


2, விலங்குகளுக்கு இசை கேட்கும் ரசிக்குக்கும் ஆர்வம் உண்டா ?
(இன்று மல்ட்டி தேவாரம் பாடலின் ராகத்தில் வரும் சத்தாய் நிஷ்களமாய் பாட்டை ரசித்து கேட்டது என்னை ஆச்சார்யப்படுத்தியது )

விலங்குகளும் பறவைகளும் இசை கேட்டு மயங்கி நின்றதாக நமது புராணங்களில் வருகிறது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.  அதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

3, வெளிநாட்டுக்காரங்க பெயர்களைப்போல் நம் மக்கள்கிட்ட வித்யாசமான பெயர்கள் இருக்கா ?
சில பெயர்களை மொழிபெயர்த்து பார்த்தேன் சிப்பா வந்துச்சி :) 

டேவிட் கார்டினர் (David gardener )
தெரசா மே (theresa may )
ஷெரில் ப்ரவுன் cheryl brown 
katie black , ரோஸ் basket , deena wood 

பொருள் பொதிந்த பெயர்கள் வைப்பதில் இந்தியா முன்னணியில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.   மேலை நாடுகளில் வழங்கும் சில பெயர்கள் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கும் என்று எனக்கும் ஒரு அசாதாரண ஆவல் இருந்தது உண்டு. Irving Stone, Noel Coward, Rockefeller, Warren Buffet etc.


4, நீங்க ரூல்ஸ் ராமானுஜமா அல்லது கேர்லெஸ் கேசவனா?
இந்த இருவரில் யாராயிருப்பது நல்லது ?

ரூல்ஸ் ராமானுஜங்கள் மாற்றி யோசிக்கமாட்டார்கள். வளைந்துகொடுக்கமாட்டார்கள். அவர்கள் படைப்பாற்றல் (Creativity) இல்லாதவர்களாக இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 

கேர்லெஸ் கேசவன்கள் - இலக்கு இல்லாமல் சென்று கொண்டிருப்பவர்கள். 

படைப்பாற்றல் என்பது, ஓர் இலக்கை நோக்கி பயணம் செய்தல். இலக்கை அடைவதற்கு மாத்தி யோசிக்கும் திறனும், விடா முயற்சியும், உழைப்பும், புத்திசாலித்தனமும் வேண்டியது அவசியம். ரூல்ஸ் எல்லாவற்றையும் நன்கு தெரிந்துகொண்டு, அங்கங்கே சில (ரூல்) மீறல்களையும் செய்து, ஒரு வழியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், மாற்று வழிகளைப் பின்பற்றி இலக்கை அடைவதுதான் திரில். இந்தவகையினராக  இருப்பது நல்லது. 


5, ஹேமமாலினி அனுஷ்க்கா ஷெட்டி இருவருக்குமுள்ள ஒற்றுமை என்ன ??
இருவரும் பெண்கள் , நடிகைகள் என்ற பதில் தடை செய்யப்பட்டுள்ளது. 

சரி. அப்போ இருவரும் தெய்வங்கள். 

6, உங்களுடைய நல்ல நட்பு ஒருவர் உங்ககிட்ட பொய் சொல்லிட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும் ? மீண்டும் அவரை சகஜமாக நடத்துவீர்களா ? பழகுவீர்களா ?

மூன்றாமவர் முன்பு நம் நண்பர் சொல்வதில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவது தவறா ? அதனால் நட்பு பாதிக்கப்படும் என்பது சரியாகுமா? அதனால் அதிருப்தி அடைபவர் நெருங்கிய நண்பர் எனும் வட்டத்துக்கு உரியவரா ? 
இடிப்பாரையில்லா ஏமரா . . .

7,இப்போல்லாம் யாரை பார்த்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (டைரக்டர் , ப்ரோக்ராம் ஜட்ஜஸ் ) வயது குறைந்தவர் ஆக இருந்தாலும் தொபுக்கடீர் னு அவங்க காலில் குனிந்து /விழுந்து காலை தொட்டு கும்பிடறாங்களே ??   என்ன காரணம் ? 

எல்லாம் ஒரு ஷோதான். பார்வையாளர்கள் ஐஸ் (eyes) எல்லாம் அந்தப் பிரபலத்தின் மீது இருக்க, அந்தப் பிரபலத்தின் ஐஸ் (eyes) காலில் விழுந்து வணங்கும் தன் மீது விழுந்து, இந்த ஐஸ் (ice) வைப்பவருக்கு ஒரு சந்தர்ப்பம் எப்பவாவது கொடுக்கமாட்டாரா என்ற ஏக்கம்தான் காரணம். 

8, உடல் ஆரோக்கியதைப்போல் மன ஆரோக்கியமும் முக்கியமானது .ஆனால் நம் நாட்டில் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருகின்றார்களா ? அதற்கு நம் நாட்டில் என்னென்ன வழிமுறைகள் facilities இருக்கு ? 

The reason may be that people think 'A sound mind in a sound body' உடல் ஆரோக்கியம் இருந்தால், மன ஆரோக்கியம் தானே வந்துவிடும் என்ற நம்பிக்கை! 
    
9, நீங்கள் யாருக்காவது மென்டரிங் செய்திருக்கிறீர்களா ? அப்படி mentor ஆக இருந்தபோது ஏதேனும் அனுபவங்கள் கிடைத்ததா ?

இதை இந்தவாரக் கேள்வியாக எடுத்துக்கொண்டு, வாசகர்கள் பதில் சொல்லுவதற்கு விட்டுவிடுகிறோம். 

10, உங்க வீட்டில் டிஸிஷன் டேக்கர் அண்ட் டிஸிஷன் மேக்கர் யார் ?  

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க - இதுக்கு பதில் சொல்லலாமா,  வேண்டாமா என்று அவங்களிடம் கேட்டு வந்து சொல்லிடறேன். 

வாட்ஸ் அப்:

நெல்லைத்தமிழன் : 

ஏன் பக்தி ரசம்னு சொல்றாங்க? பக்தி சாம்பார், பக்தி கூட்டுன்னுலாம் சொல்லாம?

குழம்பாத தெளிவான பக்தி என்றால் ரசம் என்று தான் சொல்ல வேண்டும்.

பக்தியில் திளைத்திருப்பவர்களுக்கு 'தான்' என்னும் அகந்தை ஒழிந்துவிடும். 'தான்' இல்லாததால் அது ரசம். 'தான்' இருந்தால் சாம்பார், கூட்டு.  

நம்முடைய ஊர் என்பது என்ன? பிறந்ததா, படித்ததா, வேலை பார்க்கும் ஊரா இல்லை ஓய்வெடுக்கும் ஊரா? என்னைக்கும் ஊர்ஊரா மாறிக்கிட்டே இருக்கறவங்களுக்கு சொந்த ஊர் உண்டா?

காலம் காலமாக ஒரு பிரதேசத்தில் நாம் வாழும் போது அந்த இடத்திற்கான சில தனித்துவமான குணங்கள் நமக்கும் பழக்கமாகி விடும். இது முன் காலத்தில் சர்வசாதாரணம் நீங்கள் தஞ்சாவூரா, நீங்கள் கும்பகோணமா நீங்கள் திருநெல்வேலியா இப்படி யெல்லாம் கேட்பார்கள்.  குறும்பு, அகந்தை, பிடிவாதம், கஞ்சத்தனம் இந்த மாதிரி குணாதிசயங்கள் இந்த இந்த ஊருக்கு உண்டு என்று அந்த காலத்தில் பேசிக் கொள்வது வழக்கம்.

பிழைப்புக்காக கடல் தாண்டி செல்லும் இந்த காலத்தில் இந்த கருத்து அவ்வளவாக எடுபடாது என்றே தோன்றுகிறது.  என்றாலும் சில பிரதேசங்களுக்கு உண்டான குணாதிசயங்கள் என்  நண்பர்கள் சிலரிடம் நான் கண்டிருக்கிறேன்.

நடிகைகளின் (அல்லது நடிகர்களின்) ரசிகராக இருப்பவர்கள் கற்புடன் இருப்பதில்லையே (வருடங்கள் போகும்போது ரசிக்கும் நடிகைகளையும் மாற்றிடறாங்களே). அப்போ ரசிப்பு என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

ஊசிப்போன உப்புமா நைந்துபோன வாழைப்பழம் மாதிரி நடிகர் நடிகைகளும் கொள்ளத்தக்கதாக இருப்பதிலிருந்து, தள்ளத் தக்கவராகி விடுகிறார்களோ ?

ஒருவரின் கூடவே இருக்கும்போது (வயதான நபரின், அதாவது பெற்றோரோ இல்லை இன்லாஸோ) அவரிடம் அன்பு இருப்பதில்லை பெரும்பாலும், என்பதைக் காண்கிறேன். தூர இருக்கும்போதோ இல்லை மறைந்தபிறகோ மிக்க அன்புடன் இருக்கிறோம். இதன் காரணம் என்னவாயிருக்கும்?

அன்பு மரியாதை இவற்றின் வழிபாடு இல்லாமல் இருக்கலாம்,  ஆனால் அன்போ மரியாதையோ இல்லாமல் இராது என்றே நான் நினைக்கிறேன்.

ஒருவேளை தூரத்தில் இருப்பவரின் அல்லது மறைந்து போனவரின்  குறைகளை காட்டிலும் நிறைகள் மட்டுமே நம்மைக் கவர்கிறதோ என்னவோ.

 ஒரு உறவு அல்லது நட்பு நமக்கு கிடைக்காது அல்லது எளிதில் பெற முடியாது என்றாகும் போது நம்  ஏக்கம் அல்லது துடிப்பு சற்று அதிகம் ஆகலாம்.

விருந்துக்குப் போனால் தனியாக அமர்ந்து ரசித்து, வெட்கப் படாமல் கேட்டு வாங்கிச் சாப்பிடணும்னு நினைப்பீங்களா இல்லை கூட்டமா பேசிக்கிட்டே சாப்பிடணும்னு நினைப்பீங்களா?

கேட்டு வாங்கி சாப்பிடுவது என்பது பெரிய விருந்துகளில் சரிப்படாது. நண்பர்கள் உறவினர் வீட்டிற்கு போகும்போது நன்றாக இருப்பதை பாராட்டி, மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவது நமக்கு திருப்தி. அவர்களுக்கு மகிழ்ச்சி


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது என்கிறார்களே, அவை மட்டுமா வெடிக்கின்றன? கடுகு, சீரகம், மிளகு எல்லாமும்தான் வெடிக்கின்றன, பிறகு என்ன? எள்ளும், கொள்ளும் மட்டும் ஸ்பெஷல்?

எள்ளுதல் என்றால்  இகழ்தல் மதியாது இருத்தல்.
கொள்ளுதல் என்றால் நம் எல்லாருக்கும் தெரியும்.

எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம் என்றால்,  ஏதோ ஒருவரை  அவமானப்படுத்த வேண்டும் அல்லது ஏதோ ஒரு லாபத்தை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட கோபமான துடிப்பான நபர் என்று அர்த்தம்.

 மூத்தோர் சொல் வார்த்தை ஆழம். !!

 ===============================================
 இந்த வாரக் கேள்வி : மேலே காண்க! 

===============================================

61 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் அப்பால வர எல்லாருக்கும்...

    பலருக்கும் புகையாம்........கௌ அண்ணா ரஜனி ஸ்டைல்... எப்ப வருவார் எப்ப பதிவு போடுவார்னு....ஒரே குயப்பமாம்.....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அப்ப கருப்பு, நீலம் லைட் ப்ரௌன் எல்லாம் மாறி மாறி மாறுவேஷத்துல வருமா....ஆ ஆ ஆ ஆள் மாறாட்டம்...ஹா ஹா ஹா நீலவண்ணக் கண்ணன் பாவம்!! இப்படி மாட்டிக்கணும்னு...டாஷ் டாஷ் டாஹ்....!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றியோ நன்றி...பரிசிற்கு... ஆனா தேம்ஸ் அதிரடி வந்து பஞ்சாயத்த கூட்டாம இருந்தா சரி...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் Kgg, அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. நன்றி துரை! நான் வந்தாலும் வராவிட்டாலும் தொடர்ந்து வரவேற்பதற்கு நன்றி.

      நீக்கு
  5. ஆந்திராவில் அரசியல்வாதிகளின் குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்று முதல்வர் கட்டாய சட்டம் கொண்டு வருகிறார். இனி தரமான கல்வி இருக்கும் இது நல்லதொரு தொடக்கம்.

    ஆனால் இது தமிழ்நாட்டில் நடக்காது காரணம் நாம் ஓட்டு விற்பனையாளர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் கில்லர்ஜி. வரவேற்போம்.

      நீக்கு
  6. சொப்பா..... இப்பவே கண்ண கட்டுதே.....

    எவ்வளவு கேள்விகள்..... ஒரே பதிவில் பல கேள்விகள் :)

    பதில்கள் ஸ்வாரஸ்யம்.....

    பதிலளிநீக்கு
  7. //இதற்கு முன்னோடி துண்டு அணிந்து கொண்டு சுற்றிவந்த காந்திதான் என்று சொன்னால் என்னை அடிக்க வருவீர்கள்.//

    இரண்டு கைகளையும் பலத்த சப்தத்தோடு தட்டி ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. // நீங்கள் யாருக்காவது மென்டரிங் செய்திருக்கிறீர்களா ? அப்படி mentor ஆக இருந்தபோது ஏதேனும் அனுபவங்கள் கிடைத்ததா ?// வாய்ப்பே இல்லை. யாருக்குமே அது பிடிக்கிறதில்லை என்பதே என்னோட அனுபவம். குழந்தைகளுக்குக் கூடச் சொல்ல முடியலை! ஆனால் அவங்க எங்களுக்குச் சொல்வாங்க! இப்படிச் செய், அப்படிச் செய்னு வழிகாட்டுவாங்க! கேட்டுப்போம்! :)))) நண்பர்கள் சிலருக்கு எப்போவானும் சில சமயங்களில் சொன்னது உண்டு. அதுவும் அவங்க கேட்பாங்கனு தெரிஞ்சால் மட்டும்!

    பதிலளிநீக்கு
  9. அழைப்பு வந்திருக்கு. வெளியே போகணும். வந்து வீட்டு வேலை தான் சரியா இருக்கும். மத்தியானமாப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. Variety is the spice of blog post என்பதும் சரிதான்...!

    mentor = வழிகாட்டி... இந்தக் காலத்தில் சிறிது சிரமம் தான்...

    எந்த வகுப்பானாலும் கணக்கு பாடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... குழந்தைகளுக்கு முதல் கணக்கை முழுதாக (ஒருமுறை) சொல்லிக் கொடுக்கலாம்... அடுத்த கணக்கை ஓரளவு சொல்லிக் கொடுக்கலாம்... அதற்கடுத்த கணக்கை ம்ஹிம்...

    எனது அனுபவத்தை அறிய :

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/1.html

    பதிலளிநீக்கு
  11. நெ த! சின்னக் குரலில் கேளுங்க. படமும் வாழ்த்தும் வெளியிட்ட பாவி நாந்தான். அவர் பாவம், ஒன்றும் தெரியாத அப்பாவி. பதிவு வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புதான் அவற்றைச் சேர்த்தேன். நீலநிற எழுத்துகள் என்னுடைய மாறுவேடம்தான்! //

    ஹா ஹா ஹா ஹா இதை வாசித்து சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அரசுப் பணியில் வேலைப் பாதுகாப்பு, வேலைப்பளு இல்லாமை, நிறைய விடுமுறைகள் என்று அள்ளிக் கொடுக்கும்போது பிச்சை எடுக்கும் பெரும்பாலானவர்களைப் பற்றி (கையூட்டு வாங்கும்) உங்கள் அபிப்ராயம் என்ன?//

    இக்கேள்விக்கான பதிலை ரசித்தேன்...ரொம்பவே சரி....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. >>> நீங்கள் யாருக்காவது மென்டரிங் செய்திருக்கிறீர்களா?..<<<

    அந்த வேலையெல்லாம் வெச்சிக்கிறதில்லீங்க!...

    பதிலளிநீக்கு
  14. வெளியில் சினிமா, நடிக நடிகையர் பிடிக்காது, இந்தக் கெட்ட வழக்கம் இல்லை, அது இல்லை என்பவர்கள் உண்மையானவர்களா அல்லது வெளி பிம்பம் ஏற்படுத்துகிறவர்களா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

    தம்மைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்பவர்கள் உண்மையிலேயே உயர்வானவர்களா இல்லை தம்பட்டம் அடிப்பவர்களா என்று எதற்காக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் ?

    தம்பட்டம் : //

    நெல்லையின் இந்தக் கேள்விக்குப் பின் பானுக்காவின் கேள்விகள் தொடர்வதை அவரது ப்ளாக் பெயர் கொடுத்து போட்டிருப்பது அட! நெல்லையின் கேள்விக்கு பதிலாகவும் கொள்ளலாம்...மிகவும் ரசித்தேன் அது ஏதேச்சையாக அமைந்ததோ இல்லை நெல்லைக்குப் பிறகு சரியாக பானுக்காவின் கேள்விகளை வரிசைப்படுத்தியதாலோ...இருந்தாலும் பானுமதி வெங்கடேஸ்வரன் என்று போடாமல் தம்பட்டம் என்று வேண்டுமென்றே தான் மாற்றி யோசிக்கும், சமயோசித வல்லமை கொண்ட ஆசிரியர்கள் போட்டிருப்பாங்கனு தெரியுது...எப்படியோ அந்த இடத்தை மிகவும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதி வெங்கடேஸ்வரன் என்று போடாமல் தம்பட்டம் என்று வேண்டுமென்றே தான் மாற்றி யோசிக்கும், சிறிது நாட்களாகவே என் பெயர் வருவதற்கு பதிலாக என் பிளாகின் பெயர்தான் வருகிறது. இன்றைக்குக் கூட பாருங்கள், முதல் பின்னூட்டத்தில் பெயர் வரும்படி மாற்றினேன், அடுத்த பின்னூட்டத்தில் தம்பட்டம் என்று வந்து விட்டது. சமயோசித வல்லமை கொண்ட ஆசிரியர்கள் போட்டிருப்பாங்கனு தெரியுது..// சிறிது நாட்களாகவே என் பெயர் வருவதற்கு பதிலாக என் பிளாகின் பெயர்தான் வருகிறது. இன்றைக்குக் கூட பாருங்கள், முதல் பின்னூட்டத்தில் பெயர் வரும்படி மாற்றினேன், அடுத்த பின்னூட்டத்தில் தம்பட்டம் என்று வந்து விட்டது.

      நீக்கு
  15. ரசாயனம், பௌதீகம், கணிதம், உயிரியல், அஸ்ட்ரானமி என்ற விஞ்ஞானத்தின் எந்த பிரிவு உங்களுக்கு பிடிக்கும்?

    கணித்துச் சொல்கிறேன் - பௌதிகம் பிடிக்கும். என் ரசாயனம் அப்படி. என் உயிர் இயலின் உயர் இயல் இது !?//

    செம செம...பதில்...

    //Variety is the spice of life என்பது சரிதான்.//

    யெஸ் யெஸ்....எனக்கு மிகவும் பிடிக்கும் ஒன்று...அதே போல டிடி யின் இந்த வரி // Variety is the spice of blog post என்பதும் சரிதான்...!//

    யெஸ் யெஸ்...டிடி...சூப்பர்..

    கீதா

    பதிலளிநீக்கு
  16. விலங்குகளுக்கு இசை கேட்கும் ரசிக்குக்கும் ஆர்வம் உண்டா ?
    (இன்று மல்ட்டி தேவாரம் பாடலின் ராகத்தில் வரும் சத்தாய் நிஷ்களமாய் பாட்டை ரசித்து கேட்டது என்னை ஆச்சார்யப்படுத்தியது )//

    உண்மை ஏஞ்சல்..அதே போல அவங்க டென்ஷன்ல இருந்தா....ஃப்ளூட் அல்லது வயலின் இசை அவங்களை சாந்தப்படுத்துது.....இதுக்கு படத்தோடு நான் என் அனுபவத்தை பதிவுல சொல்ல இருக்கேன்...வரும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. 10, உங்க வீட்டில் டிஸிஷன் டேக்கர் அண்ட் டிஸிஷன் மேக்கர் யார் ?

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க - இதுக்கு பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று அவங்களிடம் கேட்டு வந்து சொல்லிடறேன். //

    ஹா ஹா ஹா ஹா ஹையோ ரசித்து சிரிச்சு முடிலப்பா.....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. எள்ளும் கொள்ளும் வெடித்தலின் ஆழ்ந்த அர்த்தமான பதில் செம....இப்பத்தான் இதுக்கான அர்த்தம் தெரிந்தது...பானுக்கா கேட்டதுக்கு நன்றி அக்கா, பதில் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நான்மென்டரிங் என்று ஒன்றும் செய்ததில்லை. அப்படிச் செய்வது அலுவலகத்திலும் வீட்டிலும் அவ்வளவு சரியல்ல என்பது என் எண்ணம். சிலவற்றை இப்படிச் செய்யலாம் எனச் சொல்லுவேன். பலவற்றில் நான் சரி செய்வதிலிருந்து அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    பொதுவா நாம நடந்துகொள்வதை, செய்வதை வைத்து மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்வார்கள்.

    பலரிடமிருந்து பலவற்றை கவனித்து அதனைக் கொண்டு நம்மைச் செழுமைப் படுத்திக் கொள்வதுதானே வாழ்க்கை. இதில் ஒரே மெனடர் எப்படி சாத்தியப்படும்?

    பதிலளிநீக்கு
  20. குறும்பு, அகந்தை, கஞ்சத்தனம் - எந்த ஊர்கார்ர்கள் எப்படி என்று தெளிவாச் சொல்லலையே..மனைவி மதுரைக் காரங்கன்னா, அவங்ககிட்ட கேட்டாவது சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. //குறும்பு, அகந்தை, பிடிவாதம், கஞ்சத்தனம் இந்த மாதிரி குணாதிசயங்கள் இந்த இந்த ஊருக்கு உண்டு என்று அந்த காலத்தில் பேசிக் கொள்வது வழக்கம்.// இது அநியாயமா இல்லையோ! மதுரைக்காரங்களை மட்டும் சொல்லுவது! மதுரைக்காரங்க எல்லாம் ஒண்ணாய் அணி திரளுங்கப்பா! நெ.த.வை ஒரு கை, இல்லை ரெண்டு கையாலும் பார்த்துடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை ஹேப்பிமேன் அல்வாவைப் பத்திப் பேச திரளும் கூட்டம்கூட இப்போ இதுக்கு உங்ஙகளோடு திரளமாட்டாங்க கீசா மேடம். சாட்சிக் காரன் கால்ல விழறதைவிட சண்டைக்காரன் மேல்ல்லவா?

      நீக்கு
  22. எனக்குத் தெரிஞ்சு "கும்பகோணம்" ஊர்க்காரங்க கொஞ்சம் "பொடி" வைத்துப் பேசுவதாகச் சொல்லுவாங்க! இதை இங்கே ஸ்ரீரங்கத்திலே ரொம்ப தைரியமா ஒருத்தர் என் கணவரின் பேச்சிலேயே கண்டு பிடிச்சு அதைச் சுட்டியும் காட்டினாங்க! எனக்குக் கல்யாணம் ஆகிப் பல வருடங்கள் வரைக்கும் இது புரியவே புரியாது! நானெல்லாம் நேரடித் தாக்குதல் தான்! அப்புறமா ஒண்ணுமே இல்லைனு இருப்பேன். ஆனால் இதைப் புரிஞ்சுக்கவே இப்போத் தான் ஆரம்பிச்சிருக்கேன். :))))))))

    பதிலளிநீக்கு
  23. ஆனால் அங்கேயும் மற்றும் எல்லா ஊர்களிலும் வெள்ளந்தியானவங்களும் இருக்காங்க! இதே பொடி வைச்சுப் பேசுவது என்பது எல்லா ஊர்களிலும் பார்க்கவும் முடியும்! ஆனாலும் கொஞ்சம் சத்தமாகப் பேசுவது/சாதாரணமா இயல்பாகவே/ மதுரைக்காரங்க மட்டும் தான் என அடிச்சுச் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘நேரடித் தாக்குதல்’, ‘அடிச்சுச் சொல்வேன்’- ஆஹா கண்டிப்பா நீங்க மதுரைக் காரங்களேதான்.

      நீக்கு
    2. வேணாமே, நாங்க ஒத்தையாவே சமாளிப்போம் இல்ல! பாண்டிய நாட்டுப் பெண் வீரம் மிகுந்தவள். முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டாள்! அதுவும் மீனாக்ஷி பட்டணத்திலே பிறந்துட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாய்ப்பே இல்லை. தனியாவே சமாளிப்போம். சவ்வ்வ்வ்வ்வ்வாலே, சம்ம்ம்ம்ம்ம்ம்மாளி!

      நீக்கு
  24. மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. சில நேரங்களில் கோபமாக பேசினாலும்கூட மரியாதையாக "போங்க டுபுக்கு" என்று சொல்கின்றார்களே... இதன் முழுமையான அர்த்தம் இலக்கியப்படி என்ன ?

    பதிலளிநீக்கு
  26. எள்ளும், கொள்ளும் வெடித்தலுக்கு கொடுத்த விளக்கம் அருமை!
    காந்திஜியின் கொள்கைகள் சிலவற்றில் எனக்கும் உடன்பாடு கிடையாது, அதற்காக அவரை பெருமைக்காக எருமை மேய்த்தவர் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள சங்கடமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. என் அக்காவின் குழந்தைகளுக்கும், புகுந்த வீட்டில் மச்சினர், நாத்தனார் குழந்தைகளுக்கும் மென்டோரிங் செய்ததுண்டு. என் அக்காவின் பெண்கள் அதை அவர்களின் கணவன்மார்களிடம் கூறியதால் எனக்கு மாப்பிள்ளைகள் தனி மரியாதை கொடுப்பார்கள். மச்சினர், நாத்தனார் குழந்தைகளும்,"நீங்கள் அப்போது சொல்லும் பொழுது எனக்கு கோபம் வந்தது, ஆனால் இப்போது புரிகிறது" என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ஆனால் இப்போது கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. //பிடித்தது மைக்கேல் மதன காமராஜன்.
    பிடிக்காதது சகலகலாவல்லவன். (இதை அறிவதனால் ஆவது என்ன !)//
    ஒன்றுமில்லை. விஞ்ஞானத்தின் எந்த பிரிவு உங்களுக்கு பிடிக்கும் என்பதையும் அறிவதால் எனக்கு என்ன? ஒன்றுமில்லைதான். அன்று பிறந்த நாளை பகிர்ந்து கொண்ட மூவர் சம்பந்தமாகவும் மூன்று கேள்விகள் கேட்கலாம் என்று கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  29. ரூல்ஸ் ராமானுஜம், கேர்லெஸ் கேசவன் பதில் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  30. // அறிவதனால் ஆவது // கோவிச்சுக்காதீங்க பானுமதி மேடம்! பதில் சொன்னவர் நான் கேட்ட கேள்வி என்று நினைத்து பதில் சொல்லிவிட்டார். நான் அந்தப் பகுதியை நீக்கி வெளியிட்டிருக்கவேண்டும்! தவறு என்னுடையது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  31. மார்க் zuckerberg ..இதில் இரண்டாவது பேர் மீனிங் சர்க்கரை மலை :) இங்கே வாத்து கோழி ஓநாய் இப்டிலாம் கூட ரெண்டாவது sir நேம்ஸ் இருக்கு :)

    பதிலளிநீக்கு
  32. /கொஞ்சம் வெயிட் பண்ணுங்க - இதுக்கு பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று அவங்களிடம் கேட்டு வந்து சொல்லிடறேன். //


    ஹாஆஅஹா :)

    பதிலளிநீக்கு
  33. மென்டரிங் ..நான் செய்ததில்லை ..

    பதிலளிநீக்கு
  34. காரணமே இல்லாமல் மனது செயல்படுவதற்குக் காரணம் எப்படிச் சொல்ல முடியும் ? அப்படியே சொல்வதானாலும் அதை பிறர் எப்படி சொல்ல முடியும் ?//

    உண்மை.

    பதிலளிநீக்கு
  35. கேள்விகளும், பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  36. 1.அ).தீபாவளி அன்று டெலிகாஸ்ட் செய்யப்பட்ட படங்களில் எதைப் பார்த்தீர்கள்?
    ஆ). 96 படம் 76ல் வெளியான 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படத்தை நினைவூட்டவில்லையா?

    2. நீங்கள், ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் படித்து முடித்து விட்டுதான் கீழே வைக்கும் ரகமா? அல்லது இரண்டு மூன்று புத்தகங்களை ஒரே சமயத்தில் படிக்க ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் படித்து முடிக்கும் ரகமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கேள்விகளுக்கு எங்கே யார் பதில் சொல்வார்கள்? எனக்கு இந்த பகுதியே இன்னும் சரிவர புரியவில்லை. நிரம்பகேள்வி நிரம்ப பதில் , யார் கேட்கின்றார்கள் யார் பதில் சொன்னார்கள் என புரியவே இல்லை.

      நீக்கு
    2. நிஷா - வாட்சப்பிலோ அல்லது இங்கோ (பின்னூட்டங்களில்) கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் வார புதனில் எ.பி. ஆசிரியர்கள் விடையளிப்பார்கள். அத்துடன் அவங்களே ஒரு கேள்வி, நாம பதில் சொல்றதுக்காகக் கேட்பார்கள். ஒரு கேள்விக்கு, ஒன்றுக்கு மேல் ஆசிரியர்கள் பதில் சொல்வதால்தான் குழப்பம். அதைத் தீர்க்க அவர்கள் வெவ்வேறு கலரில் வெளியிட்டாலும், படிக்கும் நமக்கும் குழப்பம்தான். யார் சொல்கிறார்கள் என்று தெரிந்தால், இது அவரின் கருத்து என்றாவது புரிந்துகொள்ளலாம்.

      திருத்துகிற வாத்தியாருக்கு, ஒரே கேள்விக்கு இரண்டு பதில்களை மாணவன் எழுதினால் ஏற்படும் குழப்பம்தான். ஹா ஹா.

      நீக்கு
    3. பின்னூட்டங்களில் வருவதும் கேள்விகளா? அதுக்கு எங்கே பதில் சொல்ல வேணும்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களே பதிலும் சொல்லி அதில் நல்லது கெட்டதை நாங்கள் எப்படி புரிந்துக்க வேண்டும்? முடியும்? என்னை குழப்புறிங்களேப்பா?

      நீக்கு
    4. நிஷா...

      நீங்கள் - பதிவர்கள் / வாசகர்கள் - கேள்விகள் கேட்டால் நாங்கள் - எங்கள் ஆசிரியர் குழு - பதில் சொல்வோம். ஒவ்வொரு பதிவரும் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் ஆசிரியர் குழு பதில் சொல்கிறது. வெவ்வேறு ஆசிரியர்கள் என்பதைக் குறிக்க வெவ்வேறு நிறங்கள்.

      இப்போது சமீப காலமாய் ஆசிரியர் குழு ஒரு கேள்வி கேட்கிறது. அதற்கு வாசகர்கள் பதில் சொல்வார்கள்.

      மேலும்,

      பதிவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு சக பதிவர்களே ஒரு உந்துதலில் அவர்கள் கருத்து,/ பதிலையும் பதிவு செய்கிறார்கள்.

      மொத்தத்தில் இது ஒருகலந்துரையாடல் மாதிரி.

      நீக்கு
  37. யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் வேடிக்கை பார்ப்போம் என்ற பதில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, முன்னணியில் வந்து வெற்றி பெற்றுள்ளது. ///////////////அதெப்படிங்க மதில் மேல் பூனையாக நண்பரா இருந்தாலும் செய்யும் தவறை உணர்த்தாமல் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகுவார்கள்? நம்ம மக்களில் பெரும்பாலோனோஎ இப்படித்தான் என வேண்டுமெனில் சொல்லலாம். ஆனால் அது வெற்றியாக எப்படி இருக்க முடியும்? இந்த புரிதல் தான் பொது விடயங்களில் தவறுகளும் அனியாயங்களும் நடக்கும் போது தட்டிக்கேட்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்க சொல்கின்றது.அடிப்படையை மாத்துங்க..
    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்தான் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் வந்துள்ளது. பதில் சொன்னவர்கள் அல்ல! தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர்களைப் போலத்தான்! வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்லிவிடமுடியாது அல்லவா !

      நீக்கு
    2. இந்த ரூல்ஸ் ராமானுஜத்தின் ரூல்ஸ் ரெம்ப நல்லாருக்கே. அதிக வாக்குகள் பெற்றது அதிகமானவர்கள் சொன்னதனால் தானேங்க? அதிகமானவர்கள் சொன்னதனால் தான் அது அதிக வாக்கானது. கோழியும் முட்டையும் ஒனனு தான். தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் வாதிகளை போலவா இங்கனயும் நடக்குது? நடத்துங்க.

      நீக்கு
  38. பெரும்பான்மை பெற்றால் அது வெற்றி எனும் புரிதலே தவறு. இன்றைய சூழலில் பாதகங்களும்,தீமைகளும் தான் பெரும்பான்மை பெற்றிருக்கின்றது.அது வெற்றியாகுமா?

    பதிலளிநீக்கு
  39. 9, நீங்கள் யாருக்காவது மென்டரிங் செய்திருக்கிறீர்களா ? அப்படி mentor ஆக இருந்தபோது ஏதேனும் அனுபவங்கள் கிடைத்ததா ?

    .மென்டரிங் அப்படின்னால்?
    ஆங்கிலத்தில் ரோல் மாடல் என அர்த்தப்படுத்தலாமா?
    முன் மாதிரி, வழி காட்டி, குரு, ஆசான்.

    சிறுகுழந்தைக்கு பேச, நடக்க சாப்பிட கற்றுக்கொடுப்பதிலிருந்து மென்டரிங் தான். தாய் குழந்தைக்கு மென்டரிங்.

    யாராலும் இல்லை என சொல்ல முடியாது. நம்மோட சூழல் நாம் பார்க்கும், கேட்கும் விடயம் எல்லாமே நமக்கு மென்டரிங் தானே? நாமும் கூட.

    நான் நிரமப் பேருக்கு மென்டரிங் தான். சின்ன வயதிலிருக்கு அப்படித்தான். வீட்டில் மூத்த மகள். குடும்பத்தில் மூத்த பேத்தி, பள்ளியில் முதல் மாணவி, வகுப்புத்தலைவி. மாணவத்தலைவி, ஸ்போட்ஸ் தலைவி என

    வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மென்டரிங் தான். என்னோட தங்கைகள் முதல் என் அப்பா,அம்மா நட்புக்கள் வரை ...?

    வேலையாட்களுக்கு முதலாளியாக என்னை பிரித்தெடுத்தது இல்லை. வயது வேறுபாடில்லாமல் அக்கா தான்.

    வியாபார உலகில்.... வெற்றியில் .... வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில்.. குடுகுடுவென வேலைசெய்வதில்.. செல்லுமிடமெல்லாம் நான் மென்டரிங் ஆக அவதானிக்கப்படுவது எனக்காக சுமை. நான் விரும்பாத சுமை.

    எழுதும் போது என்னமோ தற்பெருமை, திமிர்த்தனம் போல் தோன்றும். ஆனால் மென்டரிங் நம் மீது சுமத்தபப்டும் பெரும் சுமை என்பது புரிந்தால் அவரவர் வலிகளும் புரியும்.

    சொல்லும், செயலும் ஒரு இஞ்ச் சறுக்கினாலும் நம்மை நோக்கி ஆயிரம் விரல்கள் குற்றம் சாட்டும். கவனிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றோம் . மென்டரிங் இலகுவானதல்ல தான். ஆனால் நாம் எல்லோருமே ஒவ்வொருவகையில் நல்லது கெட்டது என யாரோ ஒருவருக்கு மென்டரிங் ஆக தான் இருக்கின்றோம்.

    என்னோட 17 வயது மகள் அடிக்கடி சொல்வது. அம்மா நீங்கள் எனக்கு ரோல் மாடல் ம்மா. என்பாள். அப்படியும் ஒரே ஒரு தடவை ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில் என்னுடன் பேச விரும்பி வீட்டுக்கு வர கேட்ட ஒருவருக்கு நாங்கள் வெளியில் செல்வதாக சொல்லி பதிலளித்ததை கேட்ட என் மகள் அப்போது அவள் வயது 7.... சட்டுனு கேட்ட கேள்வி. நாம தான் இப்ப வெளியில போகவில்லையே.. எங்களை பொய் சொல்ல கூடாது என சொல்லி விட்டு நீங்கள் மட்டும் பொய் சொல்லலாமா அம்மா?

    எப்போதும் அடுத்தவர் செய்யக்கூடாது என சொல்லும் எதையும் நான் செய்வதில்லை. என்னால் கடைப்பிடிக்க முடியாததை அடுத்தவருக்கு ஆலோசனை எனும் பெயரில் கூட சொல்வதில்லை. என்னோட எழுத்தை தொடர்ந்து கவனிப்போருக்கு தெளிவாகவே புரியும்.

    மென்டரிங் திங்கிங்கிலேயே வளர்ந்ததனால் யார் தப்பு செய்தாலும் சட்டென சுட்டிக்காட்டுவேன். அதே போல் நான் செய்யும் தப்பை ,வார்த்தை தடுமாற்றம் என்னில் உண்டு. சுட்டிக்காட்டும் போது யாராயிருந்தாலும் மன்னிப்பு கேட்பேன். என் தப்பை ஏற்க தயங்கியதும் இல்லை.

    பெரும்பாலும் 100 க்கு 99 வீதம் நான் யூகித்து சொல்லும் ஆலோசனைகள் நடந்தும் விடும், என்னை கரு நாக்கு என என் தங்கை முந்த நாள் கூட சொன்னாள். அக்கா உன் வாய் திறந்து எதையும் சொல்லி விடாதே என்றாள். ஹாஹா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நீண்ட பதில் சொல்லி விட்டேன் என்பதனால் எல்லாவற்றிலும் Perfekt என்பதாக கொள்ள வேண்டா. என்கிட்ட நிரமப் குறை இருக்கு, என் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறைகாட்டாத முழுச்சோம்பேறி நான். சந்தர்ப்பம் கிடைத்தால் தூங்குவதில் என்னை அடிச்சிக்க ஆளோ கிடையாது.

      நீக்கு
    2. நீண்ட சுவையான பதில். நன்று. நீங்க எல்லாவற்றிலும் 'perfekt' இல்லை என்பதையும் தெரிந்துகொண்டோம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!