புதன், 20 பிப்ரவரி, 2019

புதன் 190220 : லீவு பெற நில் !


ஏற்கெனவே சொன்னது போல, சென்ற வாரக் கேள்விக்கு, இதுதான் சரி / இது சரி இல்லை என்றெல்லாம் எதுவும் சொல்லப்போவதில்லை. 

மாம்பழச் சின்னத்தை அடைய .... சாரி ...உச்சாணிக்கொம்பில் இருக்கின்ற மாம்பழத்தை சேதப்படுத்தாமல், நம் கைக்குக் கொண்டுவர எவ்வளவு வழிகள் உள்ளன என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன்தான் அந்தக் கேள்வி கேட்டிருந்தேன். 





பதிவில் வந்த கேள்விகள் :

ஏஞ்சல் :

1,அந்த நிமிஷத்துக்கு நமக்கு மனசுக்கு நல்லதுன்னு ,தோணுறதை செய்வது சரியா தப்பா ?

$ சரியல்ல.  ஏன், எப்படி என்று கொஞ்சம் ஆலோசனை க்குப்பின் செயல்படுவதே நன்று.

# *எண்ணித் துணிக கருமம்.*

& என்னைப் பொருத்தவரை, இது சரிதான். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தும் அறன். 
2, பொறுப்புணர்வு ,சமூக அக்கறை என்பது இப்போதைய காலகட்டத்தில் யார் யாருக்கு அவசியம் ?


$ தங்கள் செயல்பாடு மற்றவரை பாதிக்கக்கூடும் என்னும் நிலையிலிருக்கும் எல்லோருக்கும் அவசியம்.

*எல்லாருக்கும் அவசியம்தான் எனினும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், ஆசிரியர் , போலீஸ், மருத்துவர்கள் ஆகியோருக்கு மிக விரும்பத் தக்க பண்பு.*

3, அடிக்கடி ஹம் செய்யும் தத்துவப்பாடல் என்ன ??

*நிரம்ப யோசித்ததில் "நமக்கும் மேலே ஒருவனடா" வாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.*

& கூந்தல் கருப்பு ஆஹா ! குங்குமம் சிவப்பு ஓஹோ ! 
(இதிலே என்ன தத்துவம் இருக்கு என்று கேட்கிறீர்களா? கவிதைக்குப் பொய் அழகு என்று இல்லாமல், நமக்குத் தெரியாத  உண்மைகளை சொல்லியிருக்காங்களே, அதுதான்!) 

 
வாட்ஸ் அப் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

பலருக்கு கணிதம், மொழி பாடத்தில் இலக்கணம், கசக்க காரணம் என்ன?

# *தெரியவில்லை. நான் இலக்கணம் விருப்பத்துடனும் கணிதம் முனைப்புடனும் படித்து மறந்த ஆள்.*

& ஏதோ ஒரு பாடம் கசந்துபோவதற்கு அதை முதலில் நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்தான் பெரிய அளவில் காரணம் ஆவார். ஆசிரியர் திறமையாக, எளிய முறையில், மாணவரின் மட்டத்திற்கு இறங்கி வந்து,  விளங்கும்படி சொல்லிக்கொடுக்கக் கூடியவர் என்றால், எல்லா பாடமும், எல்லா சாப்டரும் இனிப்பே. 

விமானத்தில் உங்கள் லக்கேஜை கேபினில் வைத்து விட்டு சீட்டில் அமருகிறீர்கள், உங்கள் பக்கத்து இருக்கையில் ரஜினி, தோனி, அம்பானி, மணி ரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான், நிர்மலா சீதாராமன் இவர்களில் யாரோ ஒருவர் வந்து அமர்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?
1. ஆட்டோக்ராஃப் வாங்குவீர்கள்
2.ஏதாவது பேசுவீர்கள்
3. தெரியாதது போல் நடிப்பீர்கள்.

*அவர்கள் துறை பற்றிப் பேசி தகவல் அறிய முயல்வேன்.*

& "எங்கள் ப்ளாக் புதன் கேள்வி பதில் பகுதியில், நீங்க கேட்க விரும்பும்  கேள்வி எது ?" என்று கேட்பேன்.  

ஆடியோ புத்தகங்கள் பற்றி உங்கள் கருத்து?

# *அனுபவமில்லை. நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.*

ஆடியோ புத்தகங்களில் சற்றே பின்னே போய் சரிபார்த்தலோ நினைவு படுத்திக்கொள்ளலோ முடிவதில்லை ஆகையால் அவ்வளவு ரசிப்பதில்லை.
கேட்டவை: பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன். 

கேட்டவர் யாரோ: 
 
ஒரு டெரரிஸ்டை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் ?

ஒரு நல்ல டெரரிஸ்ட் ஆக இருப்பின் நானும் அவருடன் சேர்ந்து விடுவேனோ !
 
& ஹி ஹி!  ஒரு டெரரிஸ்ட் கூடத்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கேன்! 

1. இந்தக் கடைசிக் கேள்விக்கு (டெரரிஸ்ட் கேள்வி) நீங்களும் பதில் சொல்லலாம். 
 
===================================================

படைப்பாற்றல் பற்றி மேலும் ......

படைப்பாற்றல் என்பது எல்லோருக்குள்ளும் உள்ள குணம்தான். அதற்குத் தீனி போட்டு வளர்க்க முடியும். படைப்பாற்றல் திறன் அதிகம் கொண்டவர்கள், குறைவாகக் கொண்டவர்கள் என்றுதான் பாகுபாடு உண்டு. படைப்பாற்றல் இல்லாதவர் யாரும் கிடையாது. 

2. நீங்க பள்ளிக்கூட மாணவர் / மாணவி என்று நினைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்வதற்கு லீவு வேண்டியிருக்கிறது. வகுப்பாசிரியரிடம், உண்மையான காரணத்தைக் கூறினால், லீவு கொடுக்கமாட்டார். உங்களுக்கு மறுநாள் லீவு மிக மிக அவசியம். அத்தகைய நிலையில், வகுப்பு ஆசிரியரிடம், என்ன காரணம் சொல்லி லீவு கேட்பீர்கள்? அல்லது லீவு எடுத்துவிட்டு வந்து, மறுநாள் என்ன காரணம் வகுப்பாசிரியரிடம் சொல்வீர்கள்? 



இந்த இரண்டாவது கேள்விக்கும் நீங்க பதில் சொல்லுங்க. 

====================================================

மீண்டும் சந்திப்போம்! 

====================================================

72 கருத்துகள்:

  1. ஒரு டெரரிஸ்ட் கூடத்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக....... ஹாஹா.... இது அவங்க படிச்சா என்ன ஆகுமோன்னு கற்பனை ஓடுகிறது..... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க பதிவுலகம் பக்கம் வருவதில்லை என்கிற தைரியம்தான்!

      நீக்கு
  2. இன்றைக்கு எல்லாமே லேட்டாகத் தான் வருவாங்க போல.... கீதாஜி சென்னைப் பயணத்தில்.... கீதாம்ம்மா காஃபி ஆத்திட்டு இருப்பாங்க.... துரை ஜி பணிச்சுமையில்.....

    பார்க்கலாம் இது எத்தனாவது கமாண்ட் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் வழக்கம்போல ஆறு மணிக்குத்தான் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பாங்க!

      நீக்கு
    2. நான் எழுந்துடுவேன் சீக்கிரமா. ஆனால் வெங்கட் சொல்றாப்போல் காஃபி ஆத்த இப்போல்லாம் நேரம் ஆயிடுது! அதான் வரதில்லை. :)

      நீக்கு
  3. ஆடியோ புத்தகங்கள்- நானும் இதுவரை கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  4. //ஏதோ ஒரு பாடம் கசந்துபோவதற்கு அதை முதலில் நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்தான் பெரிய அளவில் காரணம் ஆவார். //

    அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கு வரலாறு பிடிக்காமல் போனதற்கு காரணம் அப்படி ஒரு ஆசிரியர் தான். வரலாரு என்றாலெ எட்டிக் கசப்பு அப்போது... இப்போதும்.

    பதிலளிநீக்கு
  5. யாரும் இங்கே இன்னும் வரலைன்னு இப்படியா தொடர்ந்து எழுதிட்டு இருப்பது...... என யாராவது என் கிட்ட கேள்வி கேட்க போறாங்க.... மீ எஸ்கேப்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.... ஹா... ஹா....

      அப்படி யாரும் கேட்கமாட்டார்கள் வெங்கட்.

      நீக்கு
    2. உங்களிடம் கேள்வி கேட்டாலும் நாங்க அடுத்தவாரம் பதில் சொல்லிடுவோம்!

      நீக்கு
  6. //ஏதோ ஒரு பாடம் கசந்துபோவதற்கு அதை முதலில் நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்தான் பெரிய அளவில் காரணம் ஆவார். // Totally true

    பதிலளிநீக்கு
  7. வந்த வரப்போகும் அனைவருக்கும் இனிய நல்வரவும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் கணக்கு என்றால் கொஞ்சம் இல்லை, நிறையவே கசப்பு. அந்தக் கணக்கு ஆசிரியருடன் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களே காரணம். அதிலும் 3 வருஷத்துக்குத் தொடர்ந்து அதே ஆசிரியர்! :( இவங்களைப் பத்தி நிறையச் சொல்லி/எழுதி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா சாம்பசிவம்: ’கணக்கு வாத்தியார் என்கிற கஷ்டம்’ என ஆரம்பிக்கலாமா என நினைத்திருக்கையில், நீங்களே இலகுவாக முடித்துவைத்துவிட்டீர்கள்!

      நீக்கு
  9. இன்னிக்கு #, $, & மூவருமே பதில் சொல்லி இருக்காங்க. அப்போ $ மதிப்புக் குறைஞ்சிருக்கா? இல்லைனா பயணம் போகலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. $ சில சமயங்களில் பிராம்ப்டாக பதில் எனக்கு அனுப்பிவிடுவார்! சில சமயம் மறந்துவிடுவார்!

      நீக்கு
  10. //& ஹி ஹி! ஒரு டெரரிஸ்ட் கூடத்தான் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடும்பம் நடத்திக்கொண்டிருக்கேன்!//
    எல்லா ஆண்களுமே திருமண வாழ்க்கை ஆரம்பித்ததும் அல்லது மனைவி குறித்துச் சொல்லுபவை இப்படித் தான் இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு மனைவியின் கெடுபிடிக்குப் பயந்து வாழ்க்கை நடத்துவதாகச் சொல்லாதவர்களே இல்லை. இதை வைத்துப் பல நகைச்சுவைத் துணுக்குகளும் வருகின்றன. ஆனாலும் ஆண்களே பெரும்பாலும் பெண்களைத் துரத்துகின்றனர். அந்த அடிமை வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்னர் தேவதையாகக் காட்சி அளிக்கும் அதே காதலி, திருமணத்தின் பின்னர் ஒரு டெரரிஸ்ட் ஆக (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) காட்சி அளிப்பதன் உண்மையான காரணம் என்ன? அல்லது காதலியே மனைவியானால் அவள் திருமணத்திற்குப் பின்னர் இப்படித் தோற்றம் அளிப்பதன் காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெரரிஸ்ட் பற்றிய கேள்விக்கு வாசகர்களும் பதில் சொல்லலாம்னு கேஜிஜி சொல்லி இருக்கார். இப்போ நான் சொல்லி இருப்பதை விடச் சிறந்த பதில் இருக்கா? இஃகி, இஃகி, இஃகி! யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.

      நீக்கு
    2. @கீதா சாம்பசிவம் மேடம் - இது பெரிய தவறு இல்லை. மனைவி மாரல் போலீஸ் என்ற ரோலிலும் இருப்பதால் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாமல் புலம்புபவர்கள் சொல்வது இது. ஹாஹா. எங்க கன்ட்ரோல் இருக்கோ அவங்க கடுமையானவங்க என்று சொல்வது இயல்புதானே

      நீக்கு
    3. கீ சா மேடம் நீங்க சொல்லியிருப்பது என்னுடைய பதிலுக்கு பதில். கேள்வி என்ன என்றால், " ஒரு டெரரிஸ்டை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் ?" என்பது. எனவே, // இப்போ நான் சொல்லி இருப்பதை விடச் சிறந்த பதில் இருக்கா? // என்பது சரியில்லை.

      நீக்கு
    4. கேஜிஜி சார், கேள்வியை இப்போத் தான் புரிந்து கொண்டேன். டெரரிஸ்டை நேரில் சந்திக்கையில் அவர் டெரரிஸ்ட் எனத் தெரிஞ்சிருந்தால் நடுக்கம் தான். என்றாலும் கந்தர் சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டே இருப்பேன். வெளியே என்னோட நடுக்கம் தெரியாமல் பார்த்துப்பேன். அவர் அறிமுகம் செய்து கொண்டால்! ஙே! நினைச்சுப் பார்க்கவே பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே!

      நீக்கு
    5. சரி, சரி, நான் கேட்டிருக்கும் கேள்விக்கு/அதாவது சொல்லி இருக்கும் பதிலுக்கு உள்ளான பதிலை அடுத்த வாரம் சொல்லிடுங்க! :))))

      நீக்கு
    6. அது சரி, கேஜிஜி சார், நீங்க மட்டும் டெரரிஸ்ட் கூடக் குடும்பம் நடத்தறதா பதில் சொல்லிட்டு எங்களை எல்லாம் இப்படி பதில் சொல்லக் கூடாது என்றால் அது என்ன நியாயம்? அநியாயமா இல்லையோ?

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    கேள்வி பதில் எப்போதும்போல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  12. //விமானத்தில் உங்கள் லக்கேஜை கேபினில் வைத்து விட்டு சீட்டில் அமருகிறீர்கள், உங்கள் பக்கத்து இருக்கையில் ரஜினி, தோனி, அம்பானி, மணி ரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான், நிர்மலா சீதாராமன் இவர்களில் யாரோ ஒருவர் வந்து அமர்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள் ?//

    நானாக இருந்தால்...?

    சற்றும் சலனப்படவே மாட்டேன். கேள்விகளால் திணற வைப்பேன் காரணம் எனது கேள்விகள் எதையுமே அவர்கள் விரும்பாத எதிர்பதமானதே...

    நிச்சயமாக தொடமாட்டேன் வணங்கி வணக்கம் சொல்வேன்.

    புகைப்படம் எடுக்கமாட்டேன் ஆடியோவை பதிவு செய்வேன்.

    அவர்கள் சம்மதிக்காவிட்டாலும்... திருட்டுத்தனமாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ கில்லர்ஜியைச் சந்திக்கவந்தால் 'மவுனவிரதம்' இருந்தால்தான் நாங்கள்லாம் வரணும் போலிருக்கு.

      துரை செல்வராஜு சார்.... இந்தச் சந்தேகத்தைத் தெளிய வைங்க.

      நீக்கு
    2. மௌன விரதம் இருந்தாலும் நம்மை வீடியோ எடுத்து, டப்ஸ்மாஷ் செய்து பதிவிட்டுவிடுவாரோ?

      நீக்கு
    3. முதலை முருங்கை மரமேறி முருங்கைப்பழம் தின்பதுவும் கூடும்...

      இங்கே சொல்லப்பட்டிருக்கும் பிரமுகர்கள் எகானமி வகுப்பில் வரக்கூடுமோ!?....

      நாம் முதல் வகுப்பில் செல்வதற்கான வாய்ப்புகள் 90% குறைவு.....

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம்...
    கொஞ்ச நேரம் (!) கழித்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  14. எங்கள் இரண்டாவது கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை! "நீங்க பள்ளிக்கூட மாணவர் / மாணவி என்று நினைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்வதற்கு லீவு வேண்டியிருக்கிறது. வகுப்பாசிரியரிடம், உண்மையான காரணத்தைக் கூறினால், லீவு கொடுக்கமாட்டார். உங்களுக்கு மறுநாள் லீவு மிக மிக அவசியம். அத்தகைய நிலையில், வகுப்பு ஆசிரியரிடம், என்ன காரணம் சொல்லி லீவு கேட்பீர்கள்? அல்லது லீவு எடுத்துவிட்டு வந்து, மறுநாள் என்ன காரணம் வகுப்பாசிரியரிடம் சொல்வீர்கள்? "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டாடிஸ்டிக்ஸ் படி, உடம்பு சரியில்லை (70%, அதிலும் கண்டுபிடிக்க முடியாதபடி, வயத்துவலி), தாத்தா/பாட்டி/உறவினர்களை மண்டையைப் போட வைப்பது 10%, பொய் கலந்த உண்மைக் காரணம் 10%.

      இப்போ கேஜிஜி சாருக்கு, நாம எப்படின்னு தெரிஞ்சுக்கணுமாம். (புத்தரா/அரிச்சந்திரனா இல்லையான்னு). இருக்கவே இருக்கு, 'உ ட ம் பு ச ரி யி ல் லை'

      நீக்கு
    2. ஸ்டேடிஸ்டிக்ஸ்படி, 10% -க்கு கணக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லையோ..!

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்... உதிரிக் கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையைத் தனித் தனியாச் சொல்லணுமா?

      நீக்கு
    4. வீட்டிலே திடீர்னு ஒரு பூஜை/பஜனை வைச்சுட்டாங்க! பள்ளிக்குக் கிளம்பறச்சே தான் தகவல் தெரிஞ்சது, அதனால் வீட்டில் பெரியவங்களுக்கு உதவ வேண்டி இருந்தது. லீவ் போட்டுட்டேன் எனச் சொல்லிடலாம். நல்லவேளையாப் பிடித்த செயல் என்ன செய்யப் போறாங்கனு சொல்லலை! :)

      நீக்கு
    5. மேலே நான் சொல்லி இருப்பது கிட்டத்தட்ட நிஜம். ஒரு வரலக்ஷ்மி விரதப் பூஜையின் போது அம்மாவுக்கு உடம்பு முடியலை என்பதால் கொஞ்சம் உதவி விட்டுப் பள்ளிக்குச் செல்லும்படி ஆயிற்று. அன்று பள்ளிக்குப் போய்ச் சேரும்போது முதல் வகுப்பு ஆரம்பித்துப் பத்து நிமிஷங்கள் ஆகிவிட்டது. வகுப்பாசிரியை நான் போனதும் பாடத்தை நிறுத்திட்டு, "என்ன கொழுக்கட்டை, பலகாரம் எல்லாம் சாப்பிட்டாச்சா?" என்று கேட்க மாணவிகள் சிரித்தனர். உள்ளுக்குள் வெட்கம் பிடுங்கித் தின்றாலும் உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை. பேசாமல் என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். இப்போவும் அது மனதில் நன்றாய்ப் பதிந்திருக்கிறது அன்று நான் போட்டிருந்த பாவாடை, தாவணி நிறம் உட்பட! :)))))))) வீட்டில் வேலை செய்யணும்னு சொல்வதற்கும் அப்போல்லாம் கூச்சமாகவே இருக்கும். மாணவிகள் கேலி செய்வார்கள் இடைவேளை நேரத்தில்! அதனால் எதுவும் சொல்ல மாட்டேன்.

      நீக்கு
  15. துணைவி டெரரிஸ்ட்யானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன...? துணைவி டெரரிஸ்ட்யாக இல்லையென்றால் வாழ்க்கையில் இருப்பது என்ன...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! டெரரிஸ்டே பரவாயில்லை போலிருக்கே! அபிராமி, அபிராமி!

      நீக்கு
  16. அடுத்த நாள் வகுப்பு ஆசிரியரிடம், "ஏதோ ஒரு விசயம் நான் சொன்னதற்காக, நீங்கள் லீவு எடுத்துக் கொண்டு விட்டீர்கள்... நீங்கள் இல்லாமல் எனக்கு வகுப்பறை வர பிடிக்கவில்லை... அதனால் நான் நேற்று வராதத்திற்கான எனது லீவு லெட்டர் இந்தாங்க..."

    படைப்பாற்றல் தொடர ஒரு கேள்வி :- "ஆமா, அது என்ன விசயம்...?"

    குறிப்பு : எனது இரு கருத்துரைகளுக்கும் சம்பந்தம் இல்லை... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! அந்த ஆசிரியரும் என்னைப்போலவே குழம்பிப் போயிடுவார்!

      நீக்கு
  17. ஓரு டெரரிஸ்டை பார்க்க நேர்ந்தால் முதலில் பயப்படுவேன், பின் அவருள்ளும் மனிதர் ஒளிந்திருக்கிறாரா என்று (எட்டி நின்றே) ஆராய்வேன்!! அதன் முடிவின்படி அடுத்த நடவடிக்கை! :))
    லீவு போட வேண்டியிருந்தால் அடுத்த நாள் போய் லீவ் சொல்வது ஸேஃப்!! - லீவ் கொடுக்காத ப்ரச்னை இருக்காதில்லையல்லவா?! அடுத்த நாள் உண்மைக் காரணத்தைத் தான் சொல்வேன் - ஒரு பொய் சொன்னால் கோர்வையாக மேலே மேலே பொய் சொல்லணும், அது கொஞ்சம் ... இல்லையில்லை, ரொம்பவே கஷ்டம்!

    பதிலளிநீக்கு
  18. //மாம்பழச் சின்னத்தை அடைய .... சாரி ...உச்சாணிக்கொம்பில் இருக்கின்ற மாம்பழத்தை சேதப்படுத்தாமல், நம் கைக்குக் கொண்டுவர எவ்வளவு வழிகள் உள்ளன என்பதை நாம் யோசிக்கவேண்டும் என்னும் ஒரே குறிக்கோளுடன்தான் அந்தக் கேள்வி கேட்டிருந்தேன்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    விடுங்கோ என் கையை விடுங்கோ.. தேம்ஸ் கரையில உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்ன்.. இப்பூடி அடிக்கடி பேய்க்காட்டுறார் கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. என் கிட்னியே தேய்ஞ்சு போச்சே.. இந்த மாம்பலம்:) பறிக்கிற கதைக்காக யோசிச்சு:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிச்சா போதும். வேறு ஒன்றும் வேண்டாம். வாய் புளித்ததோ , மாம்பழம் புளித்ததோ என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது!

      நீக்கு
  19. லீவு கேட்டால் கிடைக்கும் எனும் பட்சத்தில், கேட்டுப் பார்ப்பேன், இல்லை கேட்டால் கிடைக்காது எனும் நிலைமையில், பேசாமல் கேட்காமலே லீவு எடுத்துவிட்டு, ஒரு மெசேஜ் அனுப்பிப்போட்டு, வரமுடியவில்லை என... அடுத்த நாள் போய், அடிவிழுந்தாலும், எந்தப் பெரிய பணிஸ்மெண்ட் கிடைச்சாலும் பறவாயில்லை என உண்மையைச் சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! சத்தியம், அஹிம்சை! கருணாமூர்த்தி கவிஅமுதம் !

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் அருமை. சகோதரி ஏஞ்சல் அவர்களின் முதல் கேள்வியும், அதற்கு தந்த பதில்களும். அதேபோல், சகோதரி பானுமதி
    வெங்கடேஷ்வரன் அவர்களின் முதல் கேள்வியும், அதற்கு தகுந்தாற் போல் தங்களனைவரின் பதில்களும் மிக அருமை.
    மிகவும் ரசித்தேன்.

    பள்ளியில் வகுப்பாசிரியரிடம், உண்மையைச் சொல்லி விடுப்பு கேட்பேன். முடியாது என அவர் மறுக்கும் போதும், மீண்டும் மீண்டும் உண்மையான காரணத்தைச் சொல்லி கேட்பேன். கொஞ்ச நேரத்தில் வேறு வழியின்றி அவரே மனமிரங்கி விடுமுறை தந்து விடுவார். ஏனென்றால்,"வாய்மை" என்றும் வெல்லும் திறனுடையது என்பதை எப்போதும் அறிவேன். (ஆகா..!இவ்வளவு நல்லவரா இவர். எப்படியெல்லாம் ரீல் ரீலாக பொய்கள் வருகிறது என்ற கடுப்பில் (கோபத்தில்) குங்குமமே தோற்கும் அளவுக்கு தங்கள் முகம் சிவந்திருக்குமே.! ஹா ஹா.ஹா. சும்மா ஜோக்குகாக... தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. நான் சொல்லாமல் லீவு எடுத்து விட்டு அடுத்த நாள் வந்து உண்மை காரணத்தை சொல்லி திட்டு வாங்கிக் கொள்வேன் ஏனென்றால் எனக்கு பொய் சொல்ல வராது. இது உண்மை ஐயா😉

    பதிலளிநீக்கு
  22. டெரரிஸ்ட் என்று தெரியாவிட்டால் பேசாமல் இருந்தாலும் இருப்பேன். டெரரிஸ்ட் என்று தெரிந்தால் கண்டிப்பாக பேசுவேன். "இன்னிக்கு என்ன இவ்வளவு புழுக்கம்?" என்பது போல பொதுவாக பேசுவேன். என்னைச் சேர்ந்தவர்கள் அவனோட/அவளோட என்ன பேச்சு என்று ஜாடை காட்டுவதையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நாங்கள் இருவரும் நட்பாகி விடுவோம்.

    பதிலளிநீக்கு
  23. //& ஏதோ ஒரு பாடம் கசந்துபோவதற்கு அதை முதலில் நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்தான் பெரிய அளவில் காரணம் ஆவார். ஆசிரியர் திறமையாக, எளிய முறையில், மாணவரின் மட்டத்திற்கு இறங்கி வந்து, விளங்கும்படி சொல்லிக்கொடுக்கக் கூடியவர் என்றால், எல்லா பாடமும், எல்லா சாப்டரும் இனிப்பே.//

    உண்மை உண்மை.
    நல்ல பதில்.

    பதிலளிநீக்கு
  24. கேள்விகளும், பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!