வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

வெள்ளி வீடியோ : கடல் கொண்ட நீலம் கண்விழி வாங்க.. கனிகொண்ட சாறு இதழ்களில் தேங்க


ஜீவ நாடி.   1970 இல் வெளிவந்த படம்.  


ரவிச்சந்திரன் லட்சுமி நடித்த திரைப்படம்.  'விக்கி'யிலேயே இதில் வரும் பாடல்கள் என்று தப்புத்தப்பாகப் போட்டிருக்கிறார்கள்.

படம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.  பாடல் கேட்ட நினைவில் படம் பெயரும் நினைவிருக்கிறது.  அவ்வளவுதான்.  இந்தப் படத்தில் இந்த ஒரு பாடல்தானா என்றும் தெரியவில்லை.



கே எஸ் கோபாலகிருஷ்ணன் வசனம்.  வேறு ஒருவர் இயக்கம். (ஏ கே சுப்பிரமணியன்)

இசை தக்ஷிணாமூர்த்தி.  வாலியின் பாடல்.  சாரங்கா ராகத்தில் அமைந்துள்ள பாடல். 

கே ஜே யேசுதாஸ் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியுள்ள பாடல்.  யேசுதாஸ் ஆரம்பத்திலேயே ஒரு அழகான ஹம்மிங்குடன் தொடங்குவார் பாடலை.  அதிரா 'பூவே செம்பூவே' என்று யேசுதாஸ் பாடல் போட்டதால் இந்த வாரம் நானும் யேசுதாஸ் பாடல் ஒன்றையே தெரிவு செய்து பகிர்கிறேன்!



சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடும் சரணத்தை எழுதுவது பெரிய சவால்.  பாவம் வாலி.  அவர் வரிகளை யாரும் கேட்டுவிடக் கூடாதே என்றே கொஞ்சிக்கொஞ்சி பாடுவதுபோல புரியாமல் பாடி இருக்கிறார்..  நறநற....  நறநற...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

அருவிமகள் அலையோசை 
இந்த அழகுமகள் வளையோசை 
பொதிகைமலை மழைச்சாரல் 
உந்தன் 
பூவிதழின் மதுச்சாரல் 

தேனூறும் குயிலோசை 
என் தலைவா உன் தமிழோசை  
தவழ்ந்து வரும் குளிர்க் காற்று 
அது சுமந்து வரும் புதுக்காற்று 

கடல் கொண்ட நீலம் கண்விழிவாங்க 
கனிகொண்ட சாறு இதழ்களில் தேங்க 
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த 
நேர்வந்து நின்றேன் கைகளிலேந்த 

மடல் கொண்ட தாழை தாவென்று சொல்ல 
குளிர் கொண்ட வாழை ஆசையில் துள்ள    
உடல் வந்து சேர்ந்து உறவொன்று கொள்ள 
உயிர்கொண்டு நின்றால் நான் என்ன சொல்ல 




85 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஜீவ நாடி இப்படி ஒரு படமா?! கேள்விப்பட்டதே இல்லை....

    விக்கியை நான் நம்புவேன் முன்னாடி எல்லாம்...அப்புறம் அதில் சில தவறான பதிவுகள் பார்த்தப்புறம் முழுவதும் நம்புவதில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு படம் உண்டு தெரியும். வேறு எதுவும் நினைவில்லை! இந்தப் பாடல் அருமையான பாடல்.

      நீக்கு
    2. விக்கியில் நானும் எழுதி இருக்கேன். என்ன, எழுதியவர் என நம் பெயர் போட்டுக்க முடியாது. ஆனால் உண்மையான தகவல்களையே கொடுத்து எழுதி இருக்கேன். என்றாலும் ஒரு சில வார்த்தைகளில் வடமொழி எழுத்துக்களான ஜ, ஸ, ஷ, ஹ போட்டு எழுதக் கூடாது என்பது அங்கிருந்த சிலர் விருப்பம். உ.வே.சா. பற்றிய ஒரு கட்டுரையில் அந்த எழுத்து இல்லாமல் எழுத முடியாது. உ.வே.சா. அப்படித் தான் எழுதி இருப்பார், "ஜில்லா" என. அதை மாவட்டம்னு எடிட் செய்து மாத்திப் போட்டாங்க. பேசிப் பார்த்தேன். நடக்கலை. வெளியே வந்துட்டேன். இது பல்லாண்டுகள் முன்னர் நடந்தது. 2006 ஆம் ஆண்டோ என்னமோ! :( அதன் பின்னர் இன்னும் சில பதிவுகளைப் பார்த்ததன் மூலம் அதன் நம்பிக்கைத் தன்மை எனக்கும் குறைந்து விட்டது.

      நீக்கு
    3. சோழனே ராஜ ராஜ... ந்னு செதுக்கி வைத்திருக்கிறப்போ இவிங்க ராச ராச.. ந்னு குறுக்கு சால் ஓட்டுவாய்ங்க... லால்பகதூர் சாஸ்திரி என்பதை சாசுத்திரி அப்பிடியின்னா எரிச்சலாகுதா இல்லையா!?..

      நீக்கு
    4. ஆமாம், துரை, அவங்கல்லாம் தமிழைக் காப்பாத்தறாங்களாம். சோழன் காலத்துக்கு முன்பிருந்தே பல கல்வெட்டுக்களில் இந்த எழுத்துக்களின் பயன்பாடு இருந்திருக்கு. இவங்கல்லாம் பிறக்கும் முன்னரும் இருந்திருக்கு. இப்போ இவங்க வந்து சுத்தம் செய்யறாங்க! :(

      நீக்கு
  3. பாடல் கேட்டுட்டு சொல்லறேன் கேட்டிருக்கேனா என்று...

    சூலமங்கலம்? சினிமாவிலா? அதுவும் இப்படியான ஒரு பாடலுக்கு தாஸேட்டனுடனா?!!! இணைந்து வருதோ ஸ்ரீராம்...சரி கேட்டுப் பார்க்கறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பாடல் கேட்டிருக்கேன் கேட்டிருக்கேன் கேட்டிருக்கேன்....மிகவும் பிடித்த பாடல்!!!!! ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்கிறேன்....

      கீதா

      நீக்கு
    2. முதல் வரி மட்டும்தான் கேட்டேன்...அப்புறம் முழுவதும் கேட்டுட்டு வரேன்..இப்ப பாடல் சத்தமா கேட்க முடியாது!!!!!!!!!!!!..

      கிச்சன் வேலையும் கூடவே இழுக்கிறது...

      கீதா

      நீக்கு
    3. நாணல் திரைப்படத்தில் கூட சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஒரு சோலோ பாடி இருக்கிறார். "பொறுமையுடன் நினது..." பிலஹரி ராகத்தில் அந்தப் பாடல் மிக் அருமையாய் இருக்கும்.

      நீக்கு
    4. இந்தப் படம் வந்தது நினைவில் இருக்கிறது. மிக அருமையான பாடல்.
      இருவருமே இனிமையாகப் பாடி இருக்கிறார்கள்.

      நானும் தேடிப் பார்த்தேன் வேறு பாடல் கண்ணில் படவில்லை.
      இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

      நீக்கு
    5. உங்களைக் கேட்டால் தெரியலாம் வல்லிம்மா... உங்களுக்குத் தெரிந்திருக்கும். படம் என்ன கதை? வேறு என்ன பாடல்கள் உண்டு இதில்? ஆனால் நீங்களே தெரியவில்லை என்று சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
    6. நாணல் திரைப்படத்தில் கூட சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஒரு சோலோ பாடி இருக்கிறார். "பொறுமையுடன் நினது..." பிலஹரி ராகத்தில் அந்தப் பாடல் மிக் அருமையாய் இருக்கும்.//

      கேட்கிறேன் ஸ்ரீராம். துரை அண்ணா சொன்ன பாடல், நீங்க சொன்ன இந்தப் பாடல், பானுக்கா சொல்லிருப்பது எல்லாம் குறித்துக் கொண்டுவிட்டேன். கேட்கிறேன்..

      கீதா

      நீக்கு
    7. ஸ்ரீராம் நாணல் திரைப்படத்தில் குயில் கூவித் துயிலெழுப்ப என்ற பாடல்தான் வருது...அதுவும் பாடலாக இல்லாமல் ஸ்லோகம் போல் இருக்கு...

      கீதா

      நீக்கு
    8. //"பொறுமையுடன் நினது..."//அது "ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்" வள்ளலார் பாடல் இல்லையோ? "பொறுமையுடன்" இல்லைனே நினைக்கிறேன்.

      நீக்கு
  4. இனிய காலை..
    கேள்விப்படாத படம் எல்லாம் எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தை விடுங்கள் ரிஷபன் ஸார்... பாடல் எப்படி இருக்கிறது? நான் பல படங்கள் பார்த்ததே இல்லை. ஆனால் நான் கேட்காத பாடல்கள் குறைவு! பிடித்த பாடல்களாயின் மனதில் தங்கிவிடும்.

      நீக்கு
    2. இனிய காலை ரிஷபன் ஸார். பாடல் கேட்டிருக்கிறீர்களா? கேட்டீர்களா இப்போது?!!

      நீக்கு
  5. நாணலில் வருவது குயில் கூவித் துயிலெழுப்ப இல்லையோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் உண்டு... இருங்கள் செக் செய்து விடுகிறேன்.

      ஆமாம் வல்லிம்மா... நான் சொல்லி இருக்கும் பாடல் கொஞ்சும் சலங்கை...

      ஒருமையுடன் நினது

      https://www.youtube.com/watch?v=a1e7MhlhwYs

      நீக்கு
  6. ஒருமையுடன் நினது திருவடி, திருவருட்பா, கொஞ்சும் சலங்கையில்
    பாடி இருப்பார்.

    பதிலளிநீக்கு
  7. லக்ஷ்மியோட முதல் படம் ஜீவனாம்சம் தான் தெரியும். அவர் ரவிச்சந்திரனோடு நடிச்சது தெரியாது. சில நாட்கள் முன்னர் தான் நம்ம ரங்க்ஸ் லக்ஷ்மியின் இப்போதைய நிலையைக் காட்டினார். பாவம்! :( இப்படி ஒரு படம் வந்திருப்பதும் தெரியாது. பாடல் பற்றியும் எதுவும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லக்ஷ்மியும் ரவிச்சந்திரனும் ஜோடியாக நடித்த படங்களில் புகுந்த வீடு(அப்போது இந்த படத்திற்கு விவிதபாரதியில் வந்த விளம்பரம் கூட நினைவில் இருக்கிறது) மற்றும் அக்கறை பச்சை இரண்டும் நான் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. கீதாக்கா... அதென்ன லக்ஷ்மியின் இப்போதைய நிலை? ஏன் திரைப்படத்தில் கூட லட்சுமி, ரவிச்சந்திரன் என்று நினைவு.

      நீக்கு
    3. பானுக்கா... அக்கரை பச்சையின் அந்த அழகான டைட்டில் சாங்கை மறக்க முடியுமா?

      நீக்கு
    4. ஶ்ரீராம், லக்ஷ்மி மிக மோசமான உடல்நிலையில் அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். :(

      நீக்கு
    5. ஆமாம் கீதாக்கா நானும் பார்த்தேன்... சமீபத்தில் கூகுள் செய்தி எனக்கு மொபைலில் வந்தது...அதிர்ச்சியாக இருந்தது...மிடுக்கான நடையுடன் நிமிர்ந்து நிற்கும் லஷ்மியா அது என்று....

      கீதா

      நீக்கு
  8. முத்துராமன், லக்ஷ்மி, சிவகுமார் லக்ஷ்மி ஜோடியாக நடித்த படங்கள் ஓரளவுக்குப் பார்க்கும்படி இருக்கும். அந்தக் காலங்களில் அறிவுஜீவி நடிகை எனப் பேசப்பட்டவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தக் காலங்களில் அறிவுஜீவி நடிகை எனப் பேசப்பட்டவர்.//

      ஆமாம், இவர், பானுமதி போன்றவர்களுக்கெல்லாம் தனி அந்தஸ்து.

      நீக்கு
  9. படமும், பாடலும் புதுசா இருக்கு சகோ..

    லட்சுமியின் நடிப்பில் ஒரு கெத்திருக்கும்... கலெக்டர், போலீஸ், புதுமைப்பெண் பாத்திரத்துக்கு பாந்தமா பொருந்தி போவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி... ஆமாம்... இவர் ஜெயகாந்தனின் ஆஸ்தான நடிகையும் கூட!

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம். ஜீவநாடி என்றொரு படமா? பாடல் பிடிக்கும். நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்க நலம்..

    மிக மிக அழகான பாடல்.. இது அப்போதே மனப்பாடம்...சில நாட்களுக்கு முன் கூட நினைவில் ஆடிய பாடல்...

    பலரும் இந்தப் பாடலுக்கு ரசிகர்களாக இருந்தனர் அப்போது..

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட பாடல் இது....

    சூலமங்கலம் அம்மா அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலும் நினக்வுக்கு வரும்....

    தேனினும் இனிய பாடலை வழங்கியதற்கு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நினைவுக்கு.. /// என்று எழுதினால் இது வேறு ஒன்றைக் கொடுத்திருக்கிறது....

      நீக்கு
    2. துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் எனக்கு சூலமங்கலம் என்றாலே சஷ்டிக்கவசம், ஸ்கந்தகுரு கவசம் இதெல்லாம் தான் நினைவில் வரும்...அதில் வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்கும்...

      கீதா

      நீக்கு
    3. சூலமங்கலம் என்றாலே கந்த சஷ்டி கவசம் தான்... கூடவே இத்தகைய பாடல்களும் நெஞ்சில் தவழ்கின்றன.. கர்ணன் படத்தில் போய் வா மகளே போய் வா என்ற பாடலைக் கேட்டிருக்கின்றீர்களா...

      சுசீலா அம்மா அவர்களுடன் குலமா குணமா படத்தில் பாடிய தாலாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறதா!...

      நீக்கு
    4. கர்ணன் படத்தில் போய் வா மகளே போய் வா என்ற பாடலைக் கேட்டிருக்கின்றீர்களா...//

      கர்ணன் படம் தேரடில எத்தனை முறை பார்த்திருக்கேன்...கேட்டிருக்கேன் அண்ணா இந்தப் பாடல்...அருமையான பாடல்..ஆனந்த பைரவி ராகத்தில்..சூலமங்கலம் என்று தெரிந்திருக்கவில்லை ....

      இன்று ஸ்ரீராம் சொல்லியதிலிருந்துதான் தெரிந்து கொண்டேன் சூலமங்கலம் படத்திலும் பாடியிருக்காங்கனு...

      சுசீலா அம்மா அவர்களுடன் குலமா குணமா படத்தில் பாடிய தாலாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறதா!...//

      கேட்டதில்லை அண்ணா...கேட்கிறேன்...

      கீதா

      நீக்கு
    5. சூலமங்கலம் பாடல்கள் பற்றிய ஆராய்ச்சிகள் சுவாரஸ்யம். வாங்க துரை செல்வராஜூ ஸார்...

      நீக்கு
  12. பாடல் அருமை. இரவும் நிலவும் வளரட்டுமே! என்ற பாடலை ஒத்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே முரளி சகோ இரண்டும் ஒரே ராகம்தானே!!!!

      கீதா

      நீக்கு
    2. வாங்க . முரளி. ஆமாம், ராகம்.. கீதா சொல்லி விட்டார்கள்.

      நீக்கு
  13. பிடித்த பாடல். கேள்விப்படாத படம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மி கி மா... சில பாடல்களை இப்படி மீள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்!!!

      நீக்கு
  14. பாடல் மட்டும் பலமுறை கேட்டிருக்கேன். அருமையான பாடல். ஐயோ பாவம் சூலமங்கலம். எஸ்.ஜானகி அல்லது பி.சுசீலா அவர்கள் இந்தப் பாடலைப் பிச்சு உதறியிருப்பார் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்.. அவர் பாடிய மற்ற பாடல்கள் நன்றாய்ப் புரியும் வண்ணம்தான் இருக்கும். ஏனோ இதில் இப்படி... நீங்கள் கேட்கும்போது புரிந்ததா? நான் தப்பாய் டைப் செய்திருக்கிறேனா?

      நீக்கு
  15. ஸ்ரீராம் இந்தப் பாடல் நிறைய கேட்டிருக்கேன் ஸ்ரீராம்...செம பாடல் சூப்பர் பல வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் இங்கு கேட்டாச்சு..

    ஸ்ரீராம் சாரங்கா வில் அமைந்த மற்றொரு பாடல் நினைவுக்கு வந்துச்சு...இரவும் மலரும் மலரட்டுமே....பாடல் அதுவும் மிக மிக அருமையான பாடல் அதில் சுசீலா ஹம்மிங்க் செமையா இருக்கும்...டி எம் எஸ் சுசீலா அழகான பாடல் அது....கர்ணன் படம் பல முறை கோயில் தேரடியில் பார்த்த படமாச்சே!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு பாட்டு அருமையான பாட்டு...கொஞ்சம் நேரம் என்னை மறந்து....பாடலும் கூட இந்த ராகம்...அப்புறம் இலக்கணம் மாறுதோ....

      சாரங்காவும், ஹமீர் கல்யாணியும் ரெண்டும் ரெட்டைப் பிள்ளைகள் போல குழப்பித் தள்ளூம்....

      கீதா

      நீக்கு
    2. ஆஆஅ இந்த இலக்கணம் மாறுதோ.. பாட்டும் எனக்கு மிகமிகப் பிடிக்கும் கீதா...

      நீக்கு
    3. எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அதிரா இலக்கணம் மாறுதோ பாடல் ம்யூஸிக் செம..மெல்லிசை மன்னராச்சே....கவிஞரின் வரிகள்!!!! எஸ்பிபி வாய்ஸ்...செம...வாணியின் வாய்ஸ் எந்று அந்தப் பாடல் ரொம்ப அழகான பாடல்...

      கீதா

      நீக்கு
    4. சாரங்கா பாடல் லிஸ்ட்டுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  16. ஆஸ் யூஷுவல் நிறைய மெனக்கெட்டு பாடல் போட்டிருக்கிறீர்கள் பாராட்டத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  17. ஜேசுதாஸ் அங்கிளின் படம் பார்த்ததும்... ஆவ்வ்வ்வ்வ் என்ன பாட்டாக இருக்குமோ எனக் கேட்டேன்ன்ன் புதுப்பாடல் எனக்கு, கேட்டிருக்கவே இல்லை இதை எங்கும்... அப்படியே மனதை வருடி விடுவதுபோல இருக்கு இதில் அவர் பாடுவது.

    கொஞ்சம் பக்திப்பாடல் ஸ்டைலில் பாடுகிறார்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் க்ளாஸிக்கல் ட்யூன் தெரியும்படி அப்படியே போட்டுருக்காங்க...சினிமாவுக்கு மாற்றி என்றில்லாமல்...இன்ஸ்ட்ருமென்ட்ஸும் .அதான் அப்படித் தோனுது அதிரா...மற்றபடி சீன் எல்லாம் எப்படி என்று தெரியாதே...அதுவும் ம்யூஸிக் டைரெக்டர் தட்சினாமூர்த்தி...அவர் பெரும்பாலும் க்ளாஸிக்கல் ட்யூன்ஸ்தான் ..

      கீதா

      நீக்கு
    2. இதற்குத்தான் இப்படியொரு சகோதரி வேண்டும் என்பது... இதைத்தான் சொல்லத் தெரியாமல் காலையில் இருந்து தத்தளித்துக் கொண்டு இருந்தேன்.... திரு தக்ஷிணாமூர்த்தி அவர்களின் இசையில் கனிவான பாடல் இது.. மேலும் சூல மங்கலம் சகோதரிகள் ஒரு திரைப்படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்கள் .. கற்பூரம் அல்லது தரிசனம் என்று நினைக்கிறேன்...

      நீக்கு
    3. சூலமங்கலம் குரல் கேட்டதுமே பகுதி பாடல் போல இருக்குதோ அதிரா? எனக்கொரு சந்தோஷம், பழைய பாடல் ஆயினும் நல்ல தெளிவாக இருக்கிறது. பகிர்ந்தவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

      நீக்கு
    4. சூல மங்கலம் சகோதரிகள் ஒரு திரைப்படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்கள் //

      ஓ துரை அண்ணா புது தகவல். இது. நெட்டில் பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
    5. ஆமாம் ஸ்ரீராம் பாட்டு செம க்ளியரா இருக்கு....

      கீதா

      நீக்கு
    6. இதற்குத்தான் இப்படியொரு சகோதரி வேண்டும் என்பது... //

      ஹையோ துரை அண்ணா ஷை ஷையா இருக்கு...நான் எனக்கு ஏதோ கொஞ்சம் தெரிந்ததைத்தான் சொன்னேன் அண்ணா...மிக்க நன்றி....

      கீதா

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஶ்ரீராமுக்கு நன்றிகள் பல.....

      நீக்கு
  18. சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரோ இதில் பாடும் ராஜலஷ்மி அவர்கள்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா...அவரேதான்

      கீதா

      நீக்கு
    2. அதிரா கூடவே துரை அண்ணாவின் கமென்ட் பாருங்கோ...அதில இன்னும் ரெண்டு பாடல்கள் கொடுத்திருக்கார்..சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவங்க பாடிய பாடல்கள்

      கீதா

      நீக்கு
    3. ஓ கீதா அதையும் பார்க்கிறேன் எனக்கு சூ ம சகோதரிகளின் பக்திப் பாட்டுக்கள் அனைத்துமே ரொம்பப் பிடிக்கும்....

      ஏற்கனவே சொல்லியும் இருக்கிறேன்...
      வேல் வந்து வினை தீர்க்க
      மயில் வந்து வழி காட்ட
      கோயிலுக்குச் சென்றேனடி... மிக மிகப் பிடிக்கும்

      நீக்கு
    4. எனக்கும் சூலமங்கலம் சகோதரிகளின் பல முருகன் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம் ரேடியோவில் இவர்கள் பாடல் இல்லாமல் காலை விடியாது!

      நீக்கு
    5. எனக்கும் அவர்களின் பக்திப்பாடல்கள் குறிப்பாக முருகன் பாடல்கள் மிகவும் பிடிக்கும்...

      கீதா

      நீக்கு
  19. குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் என்ற பாடலிலும் ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் என்னும் பாடலும் உலகத்திலே ஒருவன் என உயர்ந்த நிற்கும் திலகமே எனும் பாடலிலும் சூல மங்கலம் ராஜலட்சுமி அம்மாவின் இனிய குரலைக் கேட்கலாம்...


    இவர்கள் பாடிய இரண்டு தனிப்பாடல்கள் ஒன்று கந்தன் கருணையிலும் மற்ரது ராஜராஜ சோழன் படத்திலும் இணைக்கப்பட்டது..
    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் எனும் பாடலை மறக்கத்தான் முடியுமா?..

    இன்னும் இருக்கின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான்' பாடல்... ஆஹா... என்ன ஒரு கம்பீரமான பாடல் அது துரை ஸார்... நினைவூட்டியதற்கு நன்றி.

      நீக்கு
    2. துரை அண்ணா செம பாடல்கள்!!எல்லாமே....

      அதானே திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ஆஹா என்ன அருமையான பாடல் அது...அதே போல ஸ்ரீராம் சொல்லிருப்பது போல ஆறுமுகமான.....ஓங்கி ஒலிக்கும் பாடல்...

      கீதா

      நீக்கு
  20. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி சினிமாப் பாடல்கள் சில பாடியிருக்கிறார் எனத் தெரியும். துரை சார் எடுத்துக்கொடுத்தவுடன் எல்லாம் வரிசையாக வந்து நிற்கின்றன!
    திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. அடடா, என்ன பாட்டு அது. இளம் வயதில் நான் அதைப் பாடித் திரிந்திருக்கிறேன். ஒருவேளை, காங்கோவின் இந்து கோவிலில் பக்திப்பாடலோடு நானும் இதைப் பாடியிருக்கிறேனா.. நினைவிலில்லை.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். நல்ல இனிமையான குரல்கள்.இந்த படந்தான் என்பது தெரியாது. இன்று மறுபடியும் பாடலை கேட்டு ரசித்ததோடு படமும் அறிந்து கொண்டேன். சூலமங்கலம் ராஜலெட்சுமி அவர்களின் இனியான குரல் வளம் மிகவும் ரசிக்கத்தக்கது. அவருடன் இணைந்து கச்சேரிகளிலும், பக்திப் பாடல்களிலும், பாடிய அவரது சிஸ்டர் ஜெயலெட்சுமி அவர்கள் சினிமாக்களில் பாடியிருக்கிறாறோ?

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் குறிப்பிட்ட சூலமங்கலம் ராஜ லெட்சுமி அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக பிரபலமடைந்தவை. கேட்பதற்கும் இனிமையானவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாடல் ஸ்ரீராம்ஜி. படம் பற்றி தெரியவில்லை என்றாலும் பாட்டு நிறைய கேட்டிருக்கிறேன் இலங்கை வானொலி உபயத்தில்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூலமங்கலம் சகோதரிகளின் கவசப் பாடல்கள் மற்றும் முருகன் பாடல்கள் பல நான் மிகவும் ரசித்துக் கேட்டவை. தமிழ்நாட்டில் இருந்தவரை. அதன் பின் வலைத்தளம் வந்த பிறகு இணையம் மூலம் சில பாடல்களைத் தரவிறக்கம் செய்து பதிந்து வைத்துள்ளேன்.

      துளசிதரன்

      நீக்கு
  23. சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்புடன் 1970 ல் தரிசனம் திரைப்படம் வெளிவந்துள்ளது..

    பதிலளிநீக்கு
  24. பாடலை கேட்டு ரசித்தேன்.
    இனிமை.
    சூலமங்கலம் பாடும் வரிகள் புரியமாதிரிதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!