செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

​கேட்டு வாங்கிப் போடும் கதை : சிறையிலிருந்து ஒரு கடிதம் - வெங்கட் நாகராஜ்


சிறையிலிருந்து ஒரு கடிதம்
வெங்கட் நாகராஜ் 



அன்பின் பத்திரிகை ஆசிரியருக்கு,

தூங்கா நகரம் தில்லி இரவின் மடியில் சாயலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். சாலைப் போக்குவரத்து அந்த நேரத்திலும் இருந்தது. பல வீடுகளில் முன்னறையில் தொலைக்காட்சியிலிருந்து வரும் ஒளி மட்டும். அப்படி ஒரு இரவில் தான், கதவு தட்டும் ஓசை. இந்த நேரத்தில் யார் கதவு தட்டுவது?

அடுக்களையில் வேலையிலிருந்த நான், வீட்டில் அவரோ, இரண்டு மகன்களில் ஒருவரோ கதவு திறப்பார்கள் என நினைத்தேன். மகன்கள் அவர்கள் அறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். வங்கியில் பணிபுரிந்து வீடு திரும்பிய கணவர் டி.வி.யில் மூழ்கி விட்டார் போலும். அதான் கால்பந்து உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கிறதே. உங்களுக்குத் தெரியும்தானே, பெங்காலிகளுக்கு கால்பந்து விளையாட்டில் ரொம்பவே ஈடுபாடு. விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் தங்களையே மறந்து விடுகிறார்கள். என்னவரும் தன்னை மறந்து கால்பந்து விளையாட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தார் போலும். வேறு வழியில்லை. நான் தான் சென்று கதவைத் திறக்க வேண்டும் போல இருக்கிறது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தபடி நடக்கையில் மீண்டும் பலமாக கதவு தட்டும் ஓசை. மரக்கதவு திறந்தால் வெளியே தள்ளாடியபடி ஒரு உருவம். அந்த உருவம்….

கணவர் வங்கியில் பணிபுரிகிறார் – யூனியனில் இருப்பதால் நல்ல செல்வாக்கு. சம்பளம் வாங்குவதிலேயே நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் காசு காசு என்று எல்லோரும் அலைவதைப் போல, இவருக்கும் காசு மேல் ஆசை அதிகம். வங்கியில் பணி புரிவது தவிர யூனியன் மூலமாகவும் சில வருமானங்கள். அதுவும் போதாது என வீடிருக்கும் பகுதியில் சில ரியல் எஸ்டேட் விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் வழியாகவும் காசு சம்பாதித்தார். இந்த ரியல் எஸ்டேட் மட்டும் தனியாகச் செய்யாமல் உள்ளூர் முன்னாள் எம்.எல்.ஏ.-வின் தம்பியான அனில் உடன் சேர்ந்து தான் செய்தார். அவருடைய கட்டிடம் ஒன்றில் தான் மகன் ஜிம் நடத்தினார். அதிலிருந்தும் வருமானம் வந்தது.

அந்த அனில் தான் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எதற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தபடி “ஏ ஜி… சுன்தே ஹோ?” என்று குரல் கொடுத்து, அனில் வந்திருப்பதை கணவரிடம் சொல்ல, அவரும் வெளியே வந்தார். கதவைத் திறந்து அனிலை உள்ளே அழைக்க, அனில் தள்ளாடியபடியே உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார். நான் தேநீர் போட சமையலறைக்குச் செல்ல, அனிலும், கணவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடு விற்பனை செய்ததில் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை போலும். பேசிக் கொண்டிருந்தபோதே குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. தேநீர் இருந்த அடுப்பை நிறுத்தி வெளியே வந்தால் பார்த்த காட்சி என்னை அதிரச் செய்தது. அனில் கையில் இருந்த துப்பாக்கி என்னவரைக் குறி வைத்திருந்தது. குடித்திருந்ததால் கைகள் ஒரு நிலையாக இல்லை.

பேசிக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி எடுத்து மிரட்ட ஆரம்பித்த சுனில் தன்னிலையில் வேறு இல்லை. என்னவர் சுனில் கையில் இருந்த துப்பாக்கியை பாய்ந்து இழுக்க, சுனிலோ அதை இயக்க முயற்சிக்க, க்ளிக் சப்தம் மட்டும் கேட்கிறதே தவிர, துப்பாக்கியிலிருந்து குண்டு வெளி வரவில்லை – நல்ல வேளையாக. 'என்ன ஆச்சு என்ன ஆச்சு' என நான் அலறிக் கொண்டிருப்பதைப் பார்த்த இரண்டு மகன்களும் அவர்களது அறையிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். அங்கே சுனில் மட்டும். நாங்களோ நான்கு பேர். கூச்சலும் குழப்பமும் நிலவியது. வெளிக்கதவு சாத்தியிருந்ததால் வெளியாட்கள் யாரும் வரவில்லை. மீண்டும் சுனில் சோஃபாவில் அமர்ந்து கொள்ள கணவர் அவரிடம் சமரசம் பேசிக் கொண்டிருந்தார்.

சற்றே நகர்ந்து உள்ளே செல்லலாம் என யோசித்தபோது சுனிலின் கையில் இன்னுமொரு துப்பாக்கி முளைத்திருந்தது! அட! என்ன இது ஏதாவது விபரீதம் நடந்து விடப் போகிறதே என நான் ஓட, மகன்களும் பாய, நான்கு பேருமாகச் சேர்ந்து சுனிலிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சிக்க – குண்டு பாயும் சப்தம். ஒரு நிமிடம் நான் அலறிவிட்டேன் – யாருக்கு அடிபட்டதோ என பார்த்துக் கொண்டிருக்கையில் சரிந்து விழுந்தது சுனில். எங்கள் மேல் எல்லாம் ரத்தத்தின் துளிகள். என்ன நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது. சில நிமிடங்கள் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை. அதற்குள் மீண்டும் கதவு தட்டும் ஓசை. துப்பாக்கி குண்டு பாய்ந்த ஓசை வெளியிலும் கேட்டிருக்க வேண்டும்.

வெளியே கும்பலாக மனிதர்கள். வீட்டில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே ஒரு கொலை. அதன் பின் நடந்தது எதுவும் எங்கள் கைகளில் இல்லை. போலீஸ் வந்தது. கூடவே கொலையுண்ட அனிலின் அண்ணனான முன்னாள் எம்.எல்.ஏ – அடியாட்களுடன். ஆம்புலன்ஸில் அனிலின் உடல் போக, எங்கள் நால்வரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். அடியாட்கள் எங்கள் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். போலீஸ் இருந்ததால் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்கள் காரும், என்ஃபீல்ட் புல்லட்டும் எரிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் எங்கள் நான்கு பேர் மீதும் குற்றப் பத்திரிக்கை தயார் ஆனது. நிறைய பேரங்கள்.

துப்பாக்கியை யார் இயக்கினார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை எங்களிடம் – தெரிந்தால் தானே சொல்ல. வேறு வழியில்லை. எங்கள் இருவரை மட்டுமல்லாது வளர வேண்டிய இரண்டு பிள்ளைகளையும் பிடித்து வைத்திருந்தார்கள் – யாராவது ஒருத்தர் ஒத்துக்கிட்டா, மத்தவங்களை விட்டுடலாம் என்று யோசனை சொன்னார்கள். நானே கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள, நான்கு நாட்களுக்குப் பிறகு மகன்களை மட்டும் விட்டு விட்டார்கள். கொலையுண்டவரின் அண்ணனோ எங்கள் குடும்பத்தினை பூண்டோடு அழிப்பதாகச் சபதம் விட்டிருக்கிறாராம். கணவரின் சகோதரி வந்து மகன்களை கொல்கத்தா அழைத்துச் சென்றுவிட, நானும் என்னவரும் திஹார் சிறையில் தனித் தனி சிறைகளில்.

நல்ல வருமானம், அளவான குடும்பம், இருக்க வீடு, வசதி என எல்லாம் இருக்கையில் காசுக்கு ஆசைப்பட்டு செய்த தொழில் இன்றைக்கு எங்களை கொலையாளி ஆக்கியிருக்கிறது. நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லிவிட்டால் அவரை விடுவார்கள் என நினைத்து பழியை நான் ஏற்றுக்கொண்ட பிறகும் அவரையும் விடவில்லை. நானும் சிறையில் தான். இந்தச் சம்பவம் நடந்தே ஒரு வருடம் ஆகப் போகிறது. இன்னும் எங்களுக்கு விடிவுகாலம் வரவில்லை. கோர்ட் கேஸ் எப்போது முடியும் என்பதும் சொல்ல முடியாத விஷயம் – இது என்ன அரசியல்வாதி சம்பந்தப்பட்ட விஷயமா – இரவோடு இரவாக தீர்ப்பு சொல்ல! அதுவும் எங்களுக்கு எதிரே இருப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பதால் காவல்துறை நிச்சயம் அவர்கள் பக்கம் தான் இருப்பார்கள்.

பேராசை பெருநஷ்டம் என்பார்கள் – அது எங்கள் விஷயத்தில் நடந்து விட்டது. எங்கள் வாழ்க்கை உங்கள் வாசகர்கள் பலருக்கும் பாடமாக இருக்கட்டும் என்பதால் தான் இந்தக் கடிதத்தினை உங்கள் பத்திரிகைக்கு எழுதி அனுப்புகிறேன். முடிந்தால் பிரசுரிக்க வேண்டுகிறேன்.

கொலை செய்யாவிட்டாலும் கொலைப் பழி ஏற்றுக்கொண்ட ஒரு பெண் – பெயர் எதற்கு வேண்டாமே….

45 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இன்று வெங்கட்ஜியின் கதையா...இதோ வரேன்...இப்பத்தான் அங்க சைக்கிள்ல இருக்கேன்...ஹா ஹா ஹா

      இன்று லேட்டு..

      கீதா

      நீக்கு
    2. இனிய மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. நாளை சென்னைக்குப் பயணம்....ஸோ புதன், வியாழன் வலைக்கு வருவது சிரமம். வெள்ளி காலை பங்களூர் வந்துவிடுவேன்...

      கீதா

      நீக்கு
  2. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வெங்கட்.

      "உங்களின் கதை.... இது எங்களின் கதை!!!!" (பாட்டு!)

      நீக்கு
  3. ஓ இன்றைக்கு தானா இங்கே வெளியீடு..... மறந்து போனேன்.....

    கருத்துக்களை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புகைப்படம் இணைக்க நினைத்து மறந்த்து போனது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது வெங்கட்!!

      நீக்கு
  4. வெங்கட்ஜி அருமை!! பாராட்டுகள்! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க

    இதை அப்படியே த்ரில்லர் நாவல் எழுதலாம்...அப்படியானது...சூப்பர் வெங்கட்ஜி! இன்னும் நிறைய எழுதுங்க

    வரேன் மீண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம், கீதா, வெங்கட் ,ஸ்ரீராம்.
    இன்னும் வரப் போகிறவர்களுக்கும்.

    எல்லா ஊரிலும் இது போல நடக்கிறதா. என்ன ஒரு பயங்கரம்.

    வெங்கட் ,அழகாகச் சம்பவங்களை எளிதாகக் கோர்த்திருக்கிறீர்கள்.
    அதுவும் இது போலக் கொடுமையான நிகழ்ச்சிகளைக் கையாளுவது சுலபம் இல்லை.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. பணத்தாசை பிடித்தால் அதுவும் இப்படி சம்பாத்தியம் எல்லாம் வினைகளில் தான் கொண்டுவிடும். பெரும்பாலும்...

    பணத்தாசை என்றில்லாமல் யார் கீழும் பணிபுரிவதில் விருப்பமில்லாமல் சொந்தமாசச் செய்ய வேண்டும் என்று தொடங்கும் சிலர் கூட இப்படி அரசியலில் இருக்கும் உறவு நட்பு என்று சேர்ந்து பிஸினஸ் செய்தாலும் பல தொந்தரவுகள் வரும்...நிம்மதியான சிம்பிளான வாழ்க்கையை வாழ்வதை விட்டு ஏன் தான் இப்படிச் சிலர் சென்று தான் மட்டுமில்லாமல் குடும்பத்தையும் வேதனையில் தள்ளுகின்றார்களோ......ம்ம்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எழுத்து வெங்கட்டினுடையது மாதிரி எனக்குத் தோன்றவில்லை. ஆதி வெங்கட் அவர்களோட எழுத்து மாதிரியே தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராட டலில் ஏ யில சந்தேகப்பட்டார் இப்போ வெங்கட்டின் கதையிலயோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...
      இனித்தான் ஈவினிங் எல்லா இடமும் விசிட் பண்ணபோறேன்...

      நீக்கு
    2. //டலில் ஏ யில//

      இது என்னவாயிருக்கும் ? புரிஞ்சவங்க எக்ஸ்ப்ளயின் ப்ளீஎச் :)

      நீக்கு
    3. அதிரா தமிழ்லேயே - என்றுதான் சொல்ல வந்திருக்கிறார். இதுகூட உங்களுக்குப் புரியாமல் வெறும் சம்பளத்துக்காக செக் வேலை பார்க்கிறீங்களோ ஏஞ்சலின்.....

      நீக்கு
    4. ஹாஹா :) எனக்கு அப்போவே தெரியும் ஆனாலும் எனக்கு சம்பளம் அவங்க 6 மாசமா தராததன் காரணமா சொல்லலை சொல்லைஇ

      நீக்கு
    5. ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊ.. நெல்லைத்தமிழன் எப்போ ஆருடைய பக்கம் நிற்பார்:), எப்போ யாருடைய காலை வாருவார் என்றே இப்போ தெரிவதில்லை:)) ச்ச்சோ நாங்க கொஞ்சம் “சூதானமா” ஹா ஹா ஹா நடந்து கொள்ளோணுமாக்கும்:))..

      அது வந்து நெல்லைத்தமிழனின் கொமெண்ட் பார்த்து, பொறுக்க முடியாமல் ஸ்கூலில் இருந்து பொயிங்கியதால வந்த மிசுரேக்கு ஹா ஹா ஹா:).. ஆனா இப்போதெல்லாம் நெல்லைத்தமிழனுக்கு டக்குப் பக்கெனப் புரியுது என் பாசை:) ஹா ஹா ஹா:).

      நீக்கு
  8. நல்லதொரு கைவண்ணத்தில் இன்றைய பதிவு...

    பனத்தாசை எனும் பாழ் முதலை பலரையும் தீர்த்திருக்கிறது....

    எளிமையே என்றும் இனியது....

    பதிலளிநீக்கு
  9. எல்லோருக்கும் நல்வரவும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
  10. பேராசை பெருநட்டம்
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். அது போலத் தான் பணமும் போதும், போதும் என இருக்கணும். பேராசை பெரு நஷ்டம். இங்கே குடும்பமே சிதறிவிட்டது. அந்த அனில் தானே சுட்டுக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன். முடிவை வெங்கட் எழுதாட்டியும் இப்படித் தான் இருந்திருக்கணும். நல்லா எழுதி இருக்கார். எனக்கும் சில இடங்களில் ஆதி எழுதி இருப்பாரோ என்னும் எண்ணம் வந்தது தான். :))))

    பதிலளிநீக்கு
  12. மேலிருந்து ஐந்து, ஆறு பத்திகளில் அனில் பெயர்"சுனில்" என மாறி இருக்கு. அதை மட்டும் கவனித்துச் சரி செய்யவும். மற்றபடிக் குறை ஏதும் இல்லாத ஒரு விறுவிறுப்பான சம்பவத்தைக் கொண்ட உண்மைக்கதைனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். இப்போதுதான் வெங்கட் ஆதியின் பதிவை எட்டிப்பார்த்து விட்டு வருகிறேன். இங்கேயும் வெங்கட்டின் பெயரை பார்த்ததும் மீண்டும் வெங்கட்டின் பதிவிற்கே போய் விட்டேனோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  14. வேறு சில அரசியல் சம்பவங்களை நினைவு படுத்தியது.
    சூழ்நிலை கைதியின் கதை ரசிக்க வைத்தது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அனில், சுனில் இருவரும் ஒன்றே... கணவர் பெயர் குறிப்பிட்டமாதிரி தெரியலை. கொஞ்சம் குழப்பமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. அனில், சுனில் பேர் மட்டும் மாற்ற வேண்டும்.
    சுனில் தான் நிறைய இடங்களில் வருகிறது, அதனால் சுனில் என்றே வைத்துக் கொள்ளலாம். அனில் என்றும் வரும் இடத்தில் சுனில் என்று வாசித்து கொண்டேன்.
    பேராசை படக்கூடாது என்பதை சொல்லும் நீதி கதை அருமை.
    வெங்கட் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாகில் கேட்டு வாங்கிப்[போடும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தும் எழுத்தும் நடையும் refreshingly new வெங்கட்ஜிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. மனிதரில் பல வகைகள் ...வித்தியாசம்

    பதிலளிநீக்கு
  19. எதிரே உட்கார்ந்து நடந்தை விவரிப்பது போன்ற நடை. இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எனறு மாரல் ஆஃப் த ஸ்டோரரியை தெரிவிக்காமல் இருந்திருக்கலாமோ? எனிவே குட் அட்டெம்ப்ட்! தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. நிறைய ஸம்பவங்கள் பேப்பரில் வருகிறதே. நடந்தது நடந்தபடி ஒரு டெல்லி வீட்டின், பெங்காலிக் குடும்பம் கண்முன் வந்து ஸம்பவங்களை நேரில் பார்த்தமாதிரி உணர்வை உண்டு பண்ணுகிறது.காராக்ருஹ வாஸம் இருந்திருக்கும். முடிவில் எதிர்பாராத திருப்பமாக இவர்கள் நிரபராதி என்று விடுவிக்கப் படுவார்கள் என்று என்மனம் சொல்லுகிறது. பன்முக எழுத்தாளர் வெங்கட். ரொம்பநன்னா எழுதி இருக்கிங்கோ. பாராட்டுகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  21. வெங்கட்ஜி நீங்கள் இப்படி விறு விறுப்பான கதையும் அழகாகச் சொல்லியிருக்கின்றீர்களே. கணவரின் பணத்தாசையாலும் சேர்க்கையாலும் அக்குடும்பம் எப்படித் தவிக்கிறது! மனைவி அப்போதும் கூடக் கணவரைக் காப்பாற்ற முயல்வதும் மனைவிக்கான பண்பைக் காட்டுகிறது.

    இதை வைத்து ஒரு நாவலே எழுதலாமோ என்றும் தோன்றியது.

    வெங்கட்ஜி அருமையாக எழுதியிருக்கின்றீர்கள். கதை எழுதும் முயற்சி தொடரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. சூப்பரா எழுதியிருக்கிங்க வெங்கட் சகோ .நிறையபேருக்கு கொஞ்சம் பணம் வந்ததும் மனம் தடுமாறும் இன்னும் இன்னும்னு மனசு அலைபாயும் பணத்தை யாருக்காக எதற்க்காக சேர்க்கிறோம் என்பதையும் மறக்கிறாரகள் சந்தோஷத்தையும் தொலைக்கிறார்கள் .
    இப்படி சாட்சிகள் இல்லாமல் எத்தனையோ பேர் ஜெயிலில் இருக்காங்க பாவம் அவர்களின் மொத்த குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோஓஓ மீதான் 1ஸ்ட்டா சொல்லுவேன்... சூப்பர் கடிதம்... மிக அழகாக இருக்கு ... ஆனா முடிவு?... வண்டில்முருகனை வச்சு வாதாடினால் வெல்லலாம் ஹா ஹா ஹா...

      அதுசரி தூங்காநகரத்தை எப்போ டெல்லிக்கு மாத்தினாங்க?:)... டெல்லி தூங்கும் நகரமாச்சே:)

      நீக்கு
    2. எதுக்கு வண்டு முருகன் :) நீங்களே ஒரு கடிதம் போடுங்க ஜட்ஜ் உங்க கடிதத்தை பார்த்து ஆடிபோய்டுவார் :) எங்கே ழ எங்கே ல /ள இருக்குன்னு மிஸ்டேக்ச்செல்லாம் கண்டுபிடிக்கறதுக்குள்ள கடுப்பாகி அந்த பெண்ணையும் கணவரயும் விடுவிச்சிடுவார்

      நீக்கு
  23. ஹப்பா.. என்ன விறுவிறுப்பு.. ஸ்தலத்தில் நானும் இருந்த உணர்வில் டென்ஷன்..
    சூப்பர்

    பதிலளிநீக்கு
  24. சிறையிலிருந்து ஒரு விறுவிறு கடிதம்.. என்ன செய்வது, வார்டன் வருவதற்குள் எழுதி அனுப்பிவிட வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  25. இங்கே பெங்காலிகள்பற்றி கொஞ்சம் சொல்லத் தோன்றுகிறது. பெங்காலி என்றால், உடனே நேதாஜி, தாகூர், சத்யஜித் ரே என்பதுபோலே என்று நினைத்துவிடவேண்டாம். சராசரி பெங்காலிகளை அவதானித்திருக்கிறேன், டெல்லியிலும், நாட்டுக்கு வெளியேயும், பெங்காலி நண்பர்களும் உண்டு. சில குடும்பங்களுடன் பரிச்சயமும் ஏற்பட்டிருக்கிறது. சராசரி பெங்காலிகள் பொதுவாக கழுப்பணிகள். சீட்டைத் தேய்ப்பார்கள். பேப்பரைப் புரட்டுவார்கள். பேனாவும் கையுமாக பார்க்க இம்ப்ரெஸிவ்வாக இருக்கும்! ஆனால் உருப்படியாக எதுவும் அவர்களிடமிருந்து பெயராது. எக்ஸ்ட்ரா வேலையா, சம்பாத்யமா, அதற்கான முயற்சியா.. சான்ஸே இல்லை.

    அரசியல், அதிலும் வேலைபார்க்கும் இடத்தில் குழு அரசியல், கால்பந்து போட்டிகள், சினிமா பாடல்கள்பற்றிய விவாதங்கள்.. இத்தியாதிகள். ப்ளேட் நிறைய ஸ்வீட், பான், சிகரெட், தாரு.. -என்றெல்லாம் பரபரக்கும் மனம் - அல்லது அதைப்பற்றிய வம்புதும்புகளே வாழ்க்கை. ரொம்பப் புத்திசாலி என்றுவேறு தங்களைப்பற்றிய நினைப்பும் அவர்களில் பெரும்பாலானோர்க்கு உண்டு. Very opionated fellows.. இன்னும் சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
  26. பெங்காலிகளைப்பற்றி மாறுபட்ட பிம்பத்தை காட்டியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  27. எழுத்து வெங்கட் மாதிரி தோன்றவில்லை என்று யாரோ குறிப்பிட்டிருந்தார்கள். சரியே.

    வெங்கட்டாய் இருந்தால் அனில், சுனில் பெயர் குழப்பங்களும் இருந்திராது. கதை இவ்வளவு தளர்வாயும்
    கட்டுரை மாதிரியும் இருந்திருக்காது.

    எம்ஜிஆர் சுடப்பட்ட போதும் இப்படித்தான் ஒரு குழப்பம். எம்.ஆற்.ராதா பின்னாட்களில் "சுட்டாள்; சுட்டான்; சுட்டேன்." என்ற தலைப்பில் நாடகம் போடவும், சினிமா எடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
  28. இந்தப் பகிர்வு பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

    தனித்தனியாக பதில் சொல்ல பிறகு வருகிறேன்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!