திங்கள், 20 மே, 2019

​"திங்க"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


என்ன எல்லோருக்கும் ஆச்சர்யமா இருக்கா? பானுமதி ஒரு ஸ்வீட் ரெசிப்பி போடறாங்களேன்னு..?! 

இது ரொம்ப ஈஸியா பண்ணக்கூடிய கேக்(ஹிஹி மேடம் நீங்க இது வரைக்கும் கஷ்டமா ஏதாவது பண்ணியிருக்கீங்களா?)

ஓகே, ஓகே. நோ மிடில் மிடில் டாக்கிங். ஜஸ்ட் லிசன். 

கேக் என்றதும் மைதா அல்லது செல்ஃப் ரைசிங் ஃப்ளார், பேக்கிங் பவுடர், மிக்ஸிங், அவன், இத்தனை டிகிரி, பேக்கிங் என்றெல்லாம் கவலைப் படாதீர்கள். இது அடி கனமான வாணலியில் கிளறி கொட்டக்கூடிய கேக்.
இதுக்கு என்னவெல்லாம் தேவை என்று பார்க்கலாமா?

கடலை மாவு   - 1 கப்
தேங்காய் துருவல்  -  1கப்
பால்                   - 1 கப்
உருக்கிய நெய் - 1 கப்
சர்க்கரை.   - ஒன்றரை அல்லது 2 கப்

இதில் முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, எல்லாவற்றையும் அளக்க ஒரே கப்பை தான் பயன்படுத்த வேண்டும். ஓகேங்களா?




எல்லாம் ரெடியா? முதலில் அடி கனமான  வாணலியை அடுப்பில்  வைத்து, கடலை மாவை வறுத்துக் கொள்ளுங்கள். அடுப்பு சிம்மில் எரியட்டும். சிவக்க வறுக்க வேண்டும் என்பதில்லை. பச்சை வாசனை போனால் போதும். 



பிறகு பால், நெய், தேங்காய் துருவல் இவைகளை சேர்த்து நன்கு கலந்து விட்டு பின் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமாக எரியவிட்டு கை விடாமல் கிளறவும். 






வேண்டுமானால் செல்ஃபோனில் பாட்டு கேட்கலாம், நோ டாக்கிங் ஓவர் ஃபோன் ஓகே?

தளதளவென்றிருந்த கலவை கொதித்து கொதித்து கெட்டியாகி உருண்டு வரும். 




இப்போது வேண்டுமானால் இன்னும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தும் நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, அதிகம் தாமதிக்காமல் நெய் தடவிய கத்தியால் துண்டுகள் போடவும். 

இதற்கு ஏலக்காய், முந்திரி போன்றவை தேவை இல்லை. போட்டாலும் தவறில்லை.



நன்றாக ஆறியதும் எடுத்து பத்தாம் வகுப்பு, +2 தேர்வுகள், நீட் தேர்வுகளில் தேறியவர்களுக்கும், அடுத்த வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்.

64 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். இன்னிக்கு யார் சமையல்? என்ன சமையல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா.

      நல்வரவு.

      பானு அக்கா ரெஸிப்பி.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், வணக்கம்.

      நீக்கு
    2. உங்களுக்கும் இனி வரப்போகும் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா தொடரும் எல்லோருக்கும்

    அட! பானுக்காவின் ஸ்டார் கேக்கா!

    சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கடலைமாவு போட்டுத் தேங்காய் பர்ஃபி. எங்க வீட்டில் நினைச்சால் பண்ணும் உணவுப்பொருள். ஏலக்காய், முந்திரிப்பருப்பெல்லாம் தாராளமாய்ப் போடுவேன்/வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தேங்காய் பர்ஃபி என்கிறீர்கள், என் கணவர் தேங்காய் போட்ட மைசூர் பாக் என்பார்.

      நீக்கு
  5. எங்க வீட்டில் ஃபைவ் ஸ்டார் கேக் எனில் ரவை, கடலைமாவு, மைதாமாவு, பால், சர்க்கரையோடு தேங்காய்த் துருவலும் போட்டுக் கிளறுவோம். வெறும் கடலை மாவு+தேங்காய் போட்டால் தேங்காய் மைசூர்ப்பாகு என்னும் பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரவையை வறுத்துக் கொள்ள வேண்டுமா?

      நீக்கு
    2. ஆமாம். கடலை மாவு,மைதா மாவு, ரவை எல்லாவற்றையும் நெய்யில் வறுக்கணும்.அந்தச் சூட்டிலேயே தேங்காய்த் துருவலையும் போட்டுப் பிரட்டிப்போம். ரவையைப் பச்சையாகப் போட்டால் வெந்துடுமோனு ஓர் எண்ணம். ஆகையால் அந்த ரிஸ்க் எடுத்ததே இல்லை.

      நீக்கு
    3. கீதாக்க அண்ட் பானுக்கா இதேதான் 5 ஸ்டார்னு நானும் செய்து பார்த்தது. அப்புறம் அவ்வப்போது செய்து கொண்டிருந்தது...

      இதே போலத்தான் வறுத்துச் செய்வது...

      கீதா

      நீக்கு
  6. http://geetha-sambasivam.blogspot.com/இங்கே பிட்லை பற்றிப் போட்டு 3 நாள் ஆகுதுங்க/ போணியே ஆகலை. நம்ம வழக்கமான வாடிக்கையாளர் ஊரில் இல்லை. மத்தவங்க யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கடையைத் தொறந்தே வைச்சிருந்தாக் கஷ்டம் இல்லையோ? :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஆஹா விட்டுப் போட்டேனே உங்க ரெசிப்பி கடையை...

      இன்று பார்த்துவிடுகிறேன்...

      நான் இப்ப ப்ளாகர், எங்க தளம் எதுவும் ஓப்பன் பண்ணாம நேரடியா வரதுனால பல பதிவுகள் விட்டுப் போகுது...அக்கா...

      இன்று பார்த்துவிடுகிறேன்

      கீதா

      நீக்கு
    2. கீசா மேடம்....வணக்கம்... போகும் இடம் என்னன்னு உங்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியும்.. நிறைய உணவு இடுகைகள் தொடர்ந்து போடுங்க... நான் தக்காளி சாம்பார் இந்த வாரமே செய்து எபிக்க (என் பெயர்ல... ஹாஹாஹா) அனுப்பணும்னு நினைத்திருக்கேன்..இன்னும் நேரம் வரலை... பிட்லையும் நல்லாப் படிக்கலை... ஆனா உங்க செய்முறை நல்லாஇருக்கு...

      நீக்கு
  7. ஓஹோ...

    கேக்காத பேரிலும் கேக்கா!?...

    ஆனாலும் நடைமுறைச் சிக்கல் ஏதும் இல்லை....

    அப்படியே சிலநாட்கள் வைத்திருந்து
    அல்லது மே 23 (மே..மே) அன்று மறுபடியும் களரி.. -

    களரி இல்லீங்கோ..

    கிளறி, வெற்றி பெற்ற கட்சிக்கு வாக்களித்த இளைய தலைமுறை வாக்காளப் பெருமக்கள் ( நம்ம வீட்டுக்குள் இருந்தால்) தம்முள் பகிர்ந்து கொள்ளலாம்...

    வாழ்க 5 Star cake..

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கணினி படுத்தல் அதான் லேட்டு...அங்கிட்டும் இங்கிட்டும்...

    இந்தக் 5 ஸ்டார் கேக் தான் நான் முதலில் ஸ்வீட் என்று செய்து பார்த்த எக்ஸ்பெரிமென்ட்..நீங்க சொல்லிருக்காப்ல இது ஈசி என்பதால்...ஹா ஹா ஹா

    அக்கா இந்த ரெசிப்பிய முதல்ல நானும் அட கேக்!! என்று பேக்கிங்க் கேக் என்று நினைத்து அப்புறம் வாசித்து செய்து பார்த்தது...எப்போதோ கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் யார் வீட்டிலோ பார்த்த மங்கையர் மலரில் வந்த குறிப்பை எழுதிக் கூட வைத்திருந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. செய்முறை படங்கள் எல்லாம் அழகு.
    சொல்லிய விதம் அருமை.
    நாங்கள் இதை தங்கதாமரை என்று சொல்வோம்.


    //நன்றாக ஆறியதும் எடுத்து பத்தாம் வகுப்பு, +2 தேர்வுகள், நீட் தேர்வுகளில் தேறியவர்களுக்கும், அடுத்த வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்.//

    நன்றாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கடலை மாவுக்கு டாட்டா காட்டி விட்டு
    தினையை வறுத்து அரைத்து மாவாக்கி இதே மாதிரி செய்து,

    வடிவேல் முருகனுக்கு நிவேதனம் செய்தால்

    வள்ளிக் கணவனிடம் வரம் பெற்ற மாதிரியும் இருக்கும்....

    உடலுக்கு நலம் சேர்த்த மாதிரியும் இருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல ஐடியா.. எங்கள் அலுவலக ஆரோக்ய சமையல் ஹேமா இப்படிதான் செய்வார்.

      நீக்கு
    2. ஶ்ரீராம்... ஹேமா அவர்கள்ட சொல்லிடுங்க... நாங்க எல்லாரும் அவரை மறந்ததாச்சுன்னு... பின்ன எவ்வளவு மாசங்கள் (வருடங்கள்) ஆச்சு.. அவர் செய்முறை எபில வந்து...

      நீக்கு
    3. நல்ல ஆலோசனை. முயன்று பார்க்கிறேன். நன்றி.

      நீக்கு
  12. ஆஹா பானுக்கா தலைப்பைப் பார்த்து நான் செய்த முதல் கேக் என்று சொல்லிட்டேன்...ம ம வில் வந்தது இது அல்ல ஹிஹி இது லேட்டரா மைசூர்பாகு செஞ்சு பார்த்துட்டு அப்புறம் தேங்காய் சேர்த்து செஞ்ச தேங்காய் மைசுர் பாகு என்று சொல்லியது!!

    கடலை மாவு மைதா எல்லாம் போட்டு செய்தது...

    அப்புறம் 7 ஸ்டார் கேக் நு ஒரு ரெசிப்பி அப்ப பார்த்துச் செய்ததுண்டு...

    சூப்பரா வந்திருக்கே பானுக்கா உங்க ஸ்வீட்டு!!

    கீதா


    பதிலளிநீக்கு
  13. வந்திருக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    கீதா மா நான் பிட்லை பார்த்து கமெண்டினேனே. வரவில்லையா.
    பானுமா படங்கள் அத்தனையும் அழகு.

    ஐந்து பொருட்களுக்குப் பதில் ஏழு சேர்ப்போம்.
    ரவை,கோதுமை மாவு.,கடலைமாவு, பால்,,தேங்காய்த் தூள்,நெய் எல்லாம் சேரும். தீவுளிக்கு தீவுளி பாட்டி வீட்டில் உண்டு.
    மிக அழகா வந்திருக்கு.
    வாசனையும் அருமையா இருக்கும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசனை நன்றாகத்தான் இருந்தது. அதனால்தான் ஏலக்காய் தேவையயில்லை என்றேன். நன்றி.

      நீக்கு
    2. வந்தது ரேவதி, பதிலும் கொடுத்துட்டேன்.

      நீக்கு
    3. கோதுமை மாவையும் வறுத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?

      நீக்கு
    4. நான் கோதுமை மாவு சேர்த்துச் செய்ததில்லை. :) தனி மைதாமாவில் நெய் விட்டுத் தயிர் பதத்துக்கு வறுத்துக் கொண்டு சர்க்கரை, பால் சேர்த்துக் கிளறுவேன். நிறமிகள் எதையும் சேர்க்காமல். வெள்ளை வெளேர் எனக் கேக் வரும். இப்போல்லாம் போணி ஆவதில்லை. அதிகம்பண்ணுவதில்லை.:)))

      நீக்கு
  14. காலை வணக்கம். இனி ஒன்ல பாராட்டுதான் எபிலனு ஒரு வாரமா தொடர்கிறேன் (அம்மா....முடீல)

    முதலில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இதனை நான் செஞ்சு படம்லாம் ரெடியா வச்சிருக்கேன் (சந்தேகம்னா வாட்சப்ல பகிர்றேன்). ஆனால் நான் செய்தது தேங்காய் பர்பி வித் கடலைமா. நல்லாவே வந்தது.

    இந்த கௌதமன் சார் வேலைதானே வேண்டாம்கறது.. தலைப்பு ஒரு இடத்திலும் இடுகை இன்னொரு சப்ஜெக்டிலும் மிஸ்லீடிங் ஆக இருக்கும். கேக்கை எதிர்பார்த்தால் பர்பி ரெசிப்பி...

    செய்முறைக்கு பாராட்டுகள்... பயணம்... நிறைய எழுதலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த கௌதமன் சார் வேலைதானே வேண்டாம்கறது.. தலைப்பு ஒரு இடத்திலும் இடுகை இன்னொரு சப்ஜெக்டிலும் மிஸ்லீடிங் ஆக இருக்கும்// இதன் பெயரே 5 ஸ்டார் கேக்தான் நண்பரே. சிலர் 7 கப் கேக் என்றும் சொல்கிறார்கள்.
      மிஸ்லீட் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் டிஸ்க்ளெய்மர் போட்டு விட்டேன்😊
      பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. // +2 தேர்வுகள், நீட் தேர்வுகளில் தேறியவர்களுக்கும், அடுத்த வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்.//- கண்டிப்பா செய்யறேன்... செய்து, டேஸ்ட் பண்ணிப் பார்த்துவிட்டு.... நீங்களே ரெண்டு பீஸ் எனக்கு அனுப்பியிருக்கலாம்.... +2 பாஸ் பண்ணினதுக்குன்னு சொல்லலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூக்கும் நெல்லை நான் இன்னும் ப்ளே ஸ்கூலே போகலையாக்கும்!!! இப்பத்தான் தவழ் பருவம்!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  17. //பத்தாம் வகுப்பு, +2 தேர்வுகள், நீட் தேர்வுகளில் தேறியவர்களுக்கும், அடுத்த வீடு, எதிர் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுத்து விட்டு நீங்களும் சாப்பிடுங்கள்//

    இந்த காரணங்களுக்காக மட்டும்தான் செய்யணுமா ?

    கொழுந்தியாளுக்கு பெயரன் பிறந்தாலும் கொடுக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தலில் நாம் ஓட்டு போட்ட வேட்பாளர் ஜெயித்தாலும் செய்யலாம்.

      நீக்கு
  18. ஆமாம் பானுக்கா 7 கப் கேக்னும் சொல்லுவாங்க ஆனா அது ரவை எல்லாம் சேர்த்து அது அளவைச் சொல்லுவது அதுவும் ம ம வில் வந்து குறித்து வைத்திருக்கிறேன்...
    பானுக்கா இதையே சிறு தானிய மாவிலும் செய்யலாம் நல்லா வருது. எல்லாம் சேர்த்தோ அல்லது ஏதேனும் ஒரு மாவையோ எடுத்துக் கொண்டு...ஆனால் மாவு வறுத்த மாவு அல்லது தானியத்தை வறுத்து பௌடர் செஞ்ச மாவா இருந்தால் நல்ல அந்த வாசனை வரும்..

    பானுக்கா நானும் இந்தக் கேக்கிற்கு ஏலம் பருப்புகள் சேர்த்துச் செய்வது வீட்டிலிருந்த நபர்களைப் பொருத்து. மகனுக்கு என்றால் சேர்க்க மாட்டேன் வேறு நபர்கள் என்றால் சேர்த்ததுண்டு...

    ரொம்ப அழகா வந்திருக்கு அக்கா...கலக்கறீங்க போங்க பொண்ணு வந்ததால செஞ்சு அசத்தல்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. நன்றாக ஆறியதும் எடுத்துக்கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  20. பானு மேடம் நீங்கள் சொல்லும் அளவிற்கு படத்தில் உள்ள அளவும் வேறுபாடாக இருக்கிறதே... எல்லாம் ஒரு கப் என்று சொல்லி இருக்கீங்க ஆனால் கடலை மாவுமட்டும் ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப்பிற்கும் அதிகமாக் வடிவேளு கொண்டை மாதிரி வெளியே வந்து இருக்கிறது நெய்யும் சுகரும் கம்மியாக இருக்கிறதே ஹீஹீ...ஆமாம் பெரிய நக்கீரன் மாதிரி குற்றம் கண்டுபிடிக்க வந்துட்டான்யா இந்த ம்துர என்று மைண்ட் வாய்ஸ்ல் தீட்டாதீங்கம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் துருவல் படம் எடுக்கும் பொழுதே தோன்றியது. சரியாக தெரிய வேண்டாமா? நெய் உருக்க வேண்டுமே.

      நீக்கு
  21. மைசூர் பாக் போல தாமதிக்காமல் அனைத்தையும் செய்ய வேண்டும் போல...!

    பதிலளிநீக்கு
  22. இதுக்கு கோல்டன் ஜூபிலி என்று பெயர் வைத்து ரொம்ப வருஷங்களு க்கு முன் படித்தது ஞாபகம் வந்தது. நன்றாக இருக்கிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. மன்னிக்கவும் நெல்லை தமிழன் சகோதரா கூடிய விரைவில் போடுகிறேன். உங்களைபோல் படங்கள் போடதெரியவில்லை, செய்யும் அவசரத்தில் படங்கள் எடுக்க மறந்து விடுகிறேன் அதான் காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற... என் மனைவி அருமையா மாங்காய் குழம்பு பண்ணியிருந்தா, புளி, மோர் இல்லாம. காலிஃப்ளவர்ல சப்பாத்தி சைட் டிஷ் etc லாம். நான் சொல்வேன் நீயாவது போட்டோக்கள் எடுத்திருக்கலாம் இல்லை எங்கிட்டயாவது சொல்லியிருக்கலாம் எபிக்கு அனுப்பியிருப்பேன், long overdue என்பேன். தளிகை பண்ணற அவசரத்துல படங்கள் எடுக்க எங்க நேரம் என்பா.

      உங்க குறிப்பை வத்து ஶ்ரீராம்கூட எழுதாத்துனால சொன்னேன். வாழ்த்துகள்

      நீக்கு
  24. (ஹிஹி மேடம் நீங்க இது வரைக்கும் கஷ்டமா ஏதாவது பண்ணியிருக்கீங்களா?)//

    ஹா ஹா ஹா பானுக்கா இது அதிரா அடிக்கடி சொல்வது!! ஈசியாத்தான் பானுக்கா செய்வா என்று...

    //நோ மிடில் மிடில் டாக்கிங். ஜஸ்ட் லிசன். //

    ஹா ஹா ஹா ஹ நாங்கல்லாம் உங்க வகுப்புல பேசிக்கிட்டே இருப்போமே...இடைல இடைல கேள்வி கேட்டு கிண்டல் அடித்து...நீங்க பாட்டுக்குக் கிளறிக்கொண்டே இருக்கணுமாக்கும்...பதம் வந்து கொட்டினதும் சொல்லுங்க சாப்பிட வந்துருவோம் ஹா ஹா ஹா

    ஆனா நான் கூட சில ஸ்வீட்ஸ் செய்யும் போது இடைல பேச மாட்டேன். அல்வா கிளறும் போதுமட்டும் பேசுவேன் கிளறிக் கொன்டே அது நிறைய நேரம் எடுக்குமே அதனால...அப்ப மட்டும் பேசறதுக்கு யாராவது கிடைக்கமாட்டாங்களானு இருக்கும் ஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  25. வேண்டுமானால் செல்ஃபோனில் பாட்டு கேட்கலாம், நோ டாக்கிங் ஓவர் ஃபோன் ஓகே?//

    ஹா ஹா ஹா அது சரி பேச வேண்டாம்னு சொல்லிட்டீங்க ரைட்டோ பேசாம இருந்துடலாம் ஆனா பாருங்க பானுக்கா எனக்கு இந்தப் பாட்டு போட்டுட்டா அதுலதான் மனசு போயிடும்...அதுவும் ஆராய்ச்சில வேற இறங்கி போய்ட்டா ஹிஹிஹிஹி...

    தினப்படி சமையல்னா கூட ஓகே ஆனால் இப்படி ஸ்வீட்டு, பேக்கிங்க் செய்யும் போது நான் கொஞ்சம் கவனமாகவே இருப்பேன். அதுவும் எபிக்கு அனுப்பறதுனா இன்னும் கவனமா..பின்ன இங்க வரவங்களுக்குப் பதில் சொல்லணுமே.....ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  26. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ அல்வாவைப்போய்க் கேக் என்கிறா பானுமதி அக்கா.. அதை நெம்ம்ம்ம்பி ஸ்ரீராமும் போட்டிட்டார்ர்.. நான் கேஸ் போடப்போறேன்ன்ன்ன்ன்ன்:)).. வெதுப்பி எடுத்தால்தான் அது கேக் ஆக்கும்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ///நோ மிடில் மிடில் டாக்கிங்///

    ஆவ்வ்வ்வ் ரோக்கிங் ஐ டோக் உடன் வோக்கிங் என்பதுபோல படிச்சிட்டேனே வைரவா.. இண்டைக்குப் பார்த்து நெல்லைத்தமிழன் எங்கின போயிட்டார்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்வாவை விழுங்க வேண்டும். இதை கடித்து தின்னலாம். பிடித்ததா இல்லையா? அதுதான் கேள்வி.

      நீக்கு
  27. ஃபினிஸிங் ரொம்ப அழகா வந்திருக்கு... ஆனா அஞ்சு ஸ்ரார்ஸ் ஐக் காணமே:)).. வழமைபோல் ஈசிபீஸி அல்வா:)) செய்து எங்களுக்கும் அல்வாக் காட்டிட்டீங்க... ஹா ஹா ஹா..

    ஹையோ ரைமாச்சூஊஊஊ :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஃபினிஸிங் ரொம்ப அழகா வந்திருக்கு...// நன்றி ஹை!

      நீக்கு
  28. மத்தவங்களுக்கும் கொடுத்து சாப்பிடணும் என்பதே கருத்து,
    டேஸ்ட்டான ரெஸிப்பி , அருமையான பதிவு...!

    பதிலளிநீக்கு
  29. யெஸ், பாயிண்டை பிடித்து விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  30. உண்மை ஒன்றுதான், பல பெயர்களால் அழைக்கப்படுகிறது என்று பரம்பொருளை பற்றி கூறுவார்கள். 5ஸ்டார் கேக்கிற்கும் இது பொருந்தும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரி

    தங்களது பைவ் ஸ்டார் கேக் படங்களும், செய்முறை விளக்கங்களும் மிக அழகாக இருக்கிறது. எல்லோரும் தர வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணத்தினால், நான் தாமதமாக வந்ததாலும், எனக்கும் ஒரு பங்கு கிடைத்தது. மிக அருமையாக டேஸ்டியாக இருந்தது. இதையே செவன் கப் கேக் என்றும் சொல்வார்கள். நானும் செய்திருக்கிறேன். வெறும் கடலை மாவு போட்டு செய்யும் மைசூர் பாகை விட கூட சில பொருட்கள் சேர்வதினால் இது சுவையாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. கேக் என்றால் பேக்க வேண்டாமா எதுவானால் என்ன இனிப்பு எனக்கு பிடிக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!