அப்பர் பெர்த் என்பதால் நிமிர்ந்து உட்கார முடியாது. எனவே புத்தகம் படிக்கும் கதை நடக்காது. இல்லைன்னாலும்....!!
ஆனால் மேலே நமக்கு மட்டும் என்று ஒரு சிறு பல்ப் பொருத்தி இருந்தது. தேவைப்படும்போது அதை ஆன் செய்து கொள்ளலாம்- பல்புக்கு அருகிலேயே சுவிட்ச். அதே போல ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே செல் சார்ஜ் செய்ய ஒரு மூன்று பின் இணைப்பு.
நான் கஷ்டப்பட்டு எடுத்துப் போயிருந்த பவர் பேங்குக்கு ரயிலில் வேலை இல்லை. பவர் பேங்க் சம்பந்தமாக ஒன்று சொல்லவேண்டும்! திரும்பிவரும்போது விமானத்தில் வரும் பட்சத்தில் பவர் பேங்க் அனுமதிக்க மாட்டார்கள் என்று க்ரூப்பில் சொன்னார்கள்.
க்ரூப்?
பயணத்திட்டம் தயாரானதும் இந்த எட்டு பேர்களை வைத்து ஒரு வாட்ஸாப் குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது!
ஆஹா... 20,000 mah பவர் பேங்க் வாங்கி அது உபயோகமில்லாமல் போகப்போகிறதா என்று ஆதங்கம் வந்தது. பயணச் சித்தர் வெங்கட்டைத் தொடர்பு கொண்டேன். அவரிடம் கேட்டபோது 'ஹேண்ட் லக்கேஜில் அதைக் கொண்டுபோவதில் சிரமமில்லை.. இப்போது கூட திருச்சியிலிருந்து அப்படிக் கொண்டு வந்தேன்' என்றார். நெல்லைத்தமிழனோ ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து விடுங்கள் என்றார். அந்த ஏர்லைன்ஸ் காரனையே கேட்டு விடுங்களேன் என்றார்.
குழுவில் இருவர் "பவர் பேங்க் வேண்டவே வேண்டாம், நீ என்ன செல் வைத்திருக்கிறாய்? அது எவ்வளவு நேரம் பேட்டரி தாங்கும்? தேவை இல்லை" என்றார்கள். வேண்டாம் என்று வெளியில் எடுத்து வைத்து விட்டு ஆனால் கிளம்பும் நேரம் கடைசி நிமிடம் அதையும் எடுத்துக் கொண்டுவிட்டேன்!
சென்றவாரம் வெளியிட்டிருந்த ரயில் படத்தில் புரியாத படம் ஒன்று இருந்திருக்கும். அது ஏஸி கேபினுக்குள் இருக்கும் ஒரு போர்டுக்கான பவர் சப்ளை பற்றிய படம். உள்ளே இருக்கையிலிருந்து வரும்போதே பாத் ரூம் வேகண்ட்டா, ஆள் இருக்கிறார்களா, என்று இதைப்பார்த்து அறியும் வண்ணம் உள்ள போர்ட். இது நிறைய ரயில்களில் கிடையாது என்றார் ஒரு மாமா!
இரவு எங்கள் ஆறு பேர்களில் ஐந்து பேர்களுக்குள் உறவுமுறைகள் பற்றிய ஒரு காரசார விவாதம் நடந்ததில் (என் பங்கு மிகவும் கம்மி) இரண்டுமணி நேரம் சென்றது.
மறுநாள் காலை காபி சாயாவுக்கு வழி இல்லை. ரயிலில் விற்றுக்கொண்டு வந்த டீ குடித்தோம். காஃபியும் முயற்சித்தோம். சகிக்கவில்லை! நமக்கு நாக்கு நாலு முழம்.. வீட்டிலேயே குறை காணும் என் நாக்கு ரயிலில் வரும் காபியை எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா? ஆனால் வேறு வழி?
காலை ஏழேகால் மணி சுமாருக்கு இட்லி டிஃபன் கொண்டு வந்து கொடுத்தார்கள். இட்லியும் மிளகாய்ப்பொடியும்! மிளகாய்ப்பொடியை சாம்பார் வாளியில் நிறைத்துக் கொண்டு வந்திருந்தது காட்சியாய் இருந்தது. என் இளையவன் சப்பாத்தி, பூரிக்கெல்லாம் மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்வான். மிளகாய்ப்பொடிப்பிரியன். அவன் நினைவு வந்தது! எண்ணெயில் மிளகாய்ப்பொடியை முங்க வைத்து அந்தப் பெரிய வாளியில் கொண்டு வந்திருந்ததை படம் பிடிக்க மறந்து விட்டேன்.
காஃபி டீ சமோசா என்று பொழுது போய்க்கொண்டிருந்தது. உறவுகள் பிரிந்து கிடந்ததில் பேச்சும் கம்மி. அந்தக் கல்லூரிப்பெண் சளைக்காமல் உறங்கி கொண்டிருந்தாள். அவ்வப்போது எழுந்து டீ, டிஃபன், முடித்து தொடர்ந்துறங்கினாள்! நடுவில் அவள் கண்மலர்ந்திருந்த சில நிமிடங்களில்தான் அவள் கல்லூரிப்பெண், தோழியின் சகோதரி திருமணத்துக்குச் செல்வது என்றெல்லாம் தெரிய வந்தது. "ஆண்ட்டி.. ஜபல்பூர் வரும்போது என்னை எழுப்பி விடுகிறீர்களா? சுமார் ஐந்தரை மணிக்கு வரும்" என்று வேண்டுகோள் விடுத்து மீண்டும் கண் அயர்ந்தாள் அந்த குண்டு தேவதை. அத்தை அவள் மேல் ஏனோ இனம் தெரியாத பிரியம் கொண்டுவிட்டார். "சரிம்மா... நீ தூங்கு" என்று உறுதி அளித்தார்.
"பாவம்... நல்ல பெண்"என்றார் எங்களிடம்.
ரயில் நெல்லூர். ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், ராமகுண்டம், சிர்பூர் என்று ஆந்திர எல்லையையே தாண்ட வெகு நேரம் பிடித்தது. பாலார்ஷா வரும்போதுதான் மஹாராஷ்ட்ரா எல்லைக்குள் செல்கிறோம்.
எவ்வளவு நேரம் பாதி படுத்த நிலையில், அல்லது படுத்தேயிருப்பது? எழுந்து உலாவத்தொடங்கினேன். டீ சமோசா விற்பனையாளர்கள் அவ்வப்போது அங்கு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து சிற்றோய்வு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
பிரசாந்த் குழு வாளிகளுடன் வர, மதிய உணவுக்குத் தயாரானோம். நாங்கள் பேசியபடியே புளியோதரையும் (சோறு... வெகு பொருத்தமாய் சாம்பாரு...பூரிக்கிழங்கு பாரு...என்று பாடவில்லை!) தயிர் சாதமும்! புளியோதரைக்குத் தொட்டுக்கொள்ள சிறிய காராபூந்தி பாக்கெட் ஒன்று. தயிர் சாதத்துக்கு ஊறுகாய்.
சாப்பிட்டபின் அந்தப் பேப்பர் தட்டை மடக்கி கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டோம். குப்பைத்தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருந்தனர். எப்படி சுத்தம் செய்கிறார்கள்?
இப்படித்தான்!
சரசரவென வந்த ஒரு பையன் சிறு குப்பைகளை எடுத்து கையில் கொண்டுவந்திருந்த ஒரு பேக்கில் போட்டுக்கொண்டான். பின்னர் இந்த குப்படித்தொட்டியைப் பிரித்தெடுத்தான். கதவைத் திறக்க சந்தோஷ் உதவ.... அப்புறம் பேக்கில் சேகரித்து வைத்திருந்த குப்பபைகளையும் இதே போல டிஸ்போஸ் செய்தான்! இவை அனைத்தும் ஓடும் ரயிலில்... ஸ்டேஷனில் அல்ல!
கழிவறையை ஒட்டி இருந்த கேபின் போன்ற இடம் ஸ்க்ரூ கழன்று ஆடிக்கொண்டிருக்க, அது என்ன என்று சந்தோஷிடம் கேட்டேன். இரண்டு பக்கமும் இருந்த அது கழிவறைக்கான தண்ணீர் சேகரிப்புக் கலனிருக்கும் இடம் என்று சொன்னார் சந்தோஷ்.
ஆமாம் யார் சந்தோஷ்?
இதோ இவர்தான்! கேபின் கேர்டேக்கர்.
ரொம்ப முக்கியம்!
இவர் பீஹாரியாம். ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். அவர் அப்பா பஹுத் பீமாரீஸே படுக்கையில் விழ நடுச்சகோதரரான இவர் குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கத் தொடங்கினாராம். அங்கு வேலை சரியில்லாமல் வெளிவேலைகளுக்குச் சென்று வந்தாராம். பாட்டில் தொழிச்சாலையோ ஏதோ ஒன்றில் முதலில் வேலை பார்த்தாராம். பின்னர் இந்த வேலை. பெங்களூருவிலிருந்து பாட்னா வரை சென்று அப்படியே திரும்பி பெங்களூரு வரை இதே ரயிலில் இப்படி வரவேண்டும். ஒரு ட்ரிப்புக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பளமாம். இந்த ரயில் ஓடும் நாட்களில் இதில் வேலை. இது ஓடாத நாட்களில் இன்னொரு ரயில் மார்க்கம் சொன்னார். அதில் வேலை. வார ஒய்வு , விடுப்பு என்பது கிடையாது. பயணத்திலேயே அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையில் இரண்டு கேபினுக்கு இடையே இருக்கும் மூடும் பெட்டி போல இருக்கும் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துக் கொள்கிறார்.
திருமணமானவராம். மூன்று வயதுக்குழந்தை உண்டு. ஆறு மாதங்களுக்கொருமுறை ஊர் சென்று குடும்பம் பார்த்து வருவாராம். முப்பத்திரண்டு வயது. இவர் சகோதரர்கள் உடல்நலம் குன்றி இருக்கும் தந்தையைப் பார்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இவரிடமிருந்து அவ்வப்போது பயன்பெற்றுக் கொள்கிறார்கள்.
பீகாரில் படிப்பறிவு கம்மியாம். ஏழ்மை மிக ஜாஸ்தியாம். தொழிற்சாலை எல்லாம் ஒன்றும் கிடையாதாம். அப்படித் தொழிற்சாலை வைத்தால் அதற்கு மின்வசதி செய்து கொடுக்க அரசாங்கத்தால் முடியாதாம்.
முந்தைய ஆட்சிகளில் கொலை, கொள்ளை வழிப்பறி சர்வ சாதாரணமாம். கையில் வைத்திருக்கும் நூறு ரூயாயைப் பிடுங்க கத்தியால் குத்தி விட்டுச் சென்றுகொண்டே இருப்பார்களாம். நிதிஷ் வந்த பிறகு இதெல்லாம் ரொம்பவே குறைந்திருக்கிறதாம். ஆனாலும் பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பு, பிழைப்பு தேடி தென் மாநிலங்களுக்குதான் அதிகம் வருகின்றனராம். விளை நிலங்களுக்கு மேலும் சில வார்த்தைகளுக்கெல்லாம் பீஹாரியில் சில வார்த்தைகள் சொன்னார். மறந்து விட்டது.
வல்லிம்மா படம் நிறைய கேட்டாங்கதான்... அதுக்காக இப்படியா!!!!
இடார்சியிலோ பிபார்யாவிலோ வண்டி சற்றே நின்றபோது சந்தோஷ் எங்கள் கோச் கதவைத் திறந்து பார்த்த பாவம்.. ஒரு ரயில்வே ஊழியர் - அல்லது அதிகாரி - ஓடிவந்து பெட்டியில் ஏறிக்கொண்டார்.
"கேபின் மே ஜெகா ஹை க்யா?" என்றார் என்னிடம். நிறைய இடம் இருந்தது. ஏன் சொல்லவேண்டும்? நான் மண்டையை தெரியாது என்கிற பாணியில் ஆட்டினேன். அதற்கு அவருக்கு இல்லை என்கிற அர்த்தம் தெரிந்திருக்கும் போலும்! கண்ணாடி போட்டுக் கொண்டு எங்கேயோ பார்த்த முகமாய் இருந்தார். என்னைத் தற்சமயம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் சஜ்ஜத் நினைவு வந்தது எனக்கு! ஒரு ஹிந்தி செய்திப் பத்திரிகையைத் திறந்து வைத்துக்கொண்டு அதன் செய்திகளில் ஆழ்ந்தார். நடுவில் ஏதோ பேச்சு வந்தபோது அவர் யார் என்று கேட்டேன். ஸ்டேஷன் மேனேஜர் என்றார். அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?! ஸ்டேஷன் மாஸ்டரைதான் அப்படிச் சொல்கிறாரோ என்னவோ... நானும் மாமாவும் எடுத்த செல்பியில் இருந்தவரை ஜூம் செய்து....!
காசிப் பயணக்கட்டுரைக்கும் இவருக்கும் என்ன தம்பி சம்பந்தம்? என்று கீதாக்கா கேட்பது போலிருக்கிறது.
வண்டி மெதுவாக நிற்பது போல ஸ்லோ ஆகவும் 'என்ன ஸ்டேஷன் வருகிறது' என்று அவரிடம் கேட்டேன். மதன்மஹால் என்றார்.
மதன்மஹால் என்றதும் எனக்கு மைக்கேல் மதன காமராஜன் நினைவுக்கு வந்தது.
நன்றி இணையம்.
ஆமாம், ஏன் அதற்கு அப்படி ஒரு பெயர்?
"மதனமாளிகையில்... மந்திர மாலைகளாம்... உதய காலம்வரை....உன்னத லீலைகளாம்...."
======================================================================================================
மனதில் ஈரமாகவே இருப்பதால் மறுபடியும் பகிர்ந்தாலும் தப்பில்லை... 2013 இல் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தது!
"நினைவோ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை... "
====================================================================================================
செய்தித்தாளில் பாஸிட்டிவ் செய்திகளுக்காக மேய்ந்தபோது படித்த ஒரு செய்தி. ஹிந்தி ஒழிக ஹிந்தி ஒழிக என்று கோஷம் போட்டது ஒரு காலம். இப்போது கட்டிடம் கட்டும் துறையில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வடமாநிலத்தவர் வேலை பார்க்கும் சூழலில் மேஸ்திரிகளும், பொறியாளர்களும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே ஹிந்தி கற்கிறார்களாம். அவர்களை வேலை வாங்கவேண்டுமே!
"காலம் செய்த கோலமடி.. கடவுள் செய்த குற்றமடி... கடவுள் செய்த குற்றமடி..."
=======================================================================================================
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்தின் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு சென்று சேரும் சேரும் என்பது குறித்து பெரியவர்கள் சொல்லி கேட்ட வரையில் :
பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் …….. 5 தலைமுறைக்கு.
புனிதநதிகளில் நீராடுதல்=====> 3 தலைமுறைக்கு
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் =====> 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் =====> 3 தலைமுறைக்கு.
ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் =====> 5 தலைமுறைக்கு.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது =====> 6 தலைமுறைக்கு.
திருக்கோயில் புனர்நிர்மாணம் =====> 7 தலைமுறைக்கு.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல்=====> 9 தலைமுறைக்கு.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது =====> 14 தலைமுறைக்கு.
முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் =====> 21 தலைமுறைக்கு.
நாமும் முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.
நல்ல காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்படி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம் செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.
படூர் ரங்கன் - ஃபேஸ்புக்கில்
"ஆசை கோபம், களவு கொள்பவன், பேசத் தெரிந்த மிருகம்.., அன்பு நன்றி, கருணை கொண்டபவன், மனித வடிவில் தெய்வம்.., இதில் மிருகம் என்பது, கள்ள மனம், உயர் தெய்வம் என்பது, பிள்ளை மனம்.."
================================================================================================================================
லாச ரா சிறுகதைகள் இரண்டு தொகுதிகள் வாங்கினேன். ஒன்று ஜீவி ஸாரிடம் இருக்கிறது. சமீபத்தில் அவர் தளத்தில் அவர் கூடச் சொல்லி இருந்தார்.
இன்னொரு தொகுதி என் அக்காவிடம் இருக்கிறது. அக்கா ஒரு புத்தகப்புழு! கையில் கிடைக்கும் புத்தகம் எல்லாம் வாசிப்பார். வீட்டுக்கு வந்தால் புத்தக அலமாரியைச் சுற்றியே அவர் நடமாட்டம் இருக்கும்.
லா ச ரா சிறுகதைகள் படித்துக் கொண்டிருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசினார்.
"ஸ்ரீ... இந்தப் புத்தகத்தைப் படித்தது போதும்டா... கொண்டு வந்து கொடுத்துடறேன். படிக்கப் படிக்க தொண்டைக்குப் பக்கத்தில் ஏதோ சங்கடம் செய்கிறது. வயிற்றில் ஏதோ சங்கடம் செய்வது போல.. அழுகை வருகிறது போலவும் இருக்கிறது.. ஏதோ புரிவது போல இருக்கிறது.. அது இல்லை வேறு என்று நினைவு எங்கோ ஓடுகிறது... கதையை நிறுத்தி விடுகிறேன்... யோசனைகள் ஓடுகின்றன... அப்புறம் விட முடியவில்லை... மறுபடியும் படிக்கவும் ஆர்வம் வருகிறது... கஷ்டமாய் இருக்குடா... ஒருவேளை உசந்த எழுத்து என்றால் இதுதானா? தெரியவில்லை.. ஆனால் படிக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது... என்னிடம் அந்தப் புத்தகம் இருக்கும் வரை படிக்காமலும் இருக்க முடியாது என்று தோன்றுகிறது... கஷ்டமாய் இருக்குடா..."
நான் இன்னும் சென்று புத்தகத்தை வாங்கவில்லை!
இந்த உணர்வு வெளிப்பாடு என் அக்காவிடமிருந்து நான் எதிர்பாராதது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை....
=========================================================================================











///இப்படி ஒரு வேளைக்கு மூணு மினி இட்லிதான் சாப்பிட்டால், ஏன் ஒட்டடைக் குச்சி மாதிரி உடம்பு இருக்காது ஸ்ரீராமுக்கு :-) ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஇதைத்தானே எழுத நினைத்தீங்க?///
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்:) நீங்கதானே சொன்னீங்க அவர் மெல்லிசு யங் எண்டெல்லாம்:) இப்போ கொயப்புறீங்க கர்ர்ர்ர்ர்:)).
///செருப்பு சீட்டிற்கு அடியில் மாட்ட அதை இவர்களை எடுத்துத் தர சொல்ல..//
ஓ இதுக்கு நான் வந்திருக்கிறேன் கீதா.. ஸ்ரீராம் கதையை ஒழுங்காகச் சொல்லாமல்.. மாத்தி மாத்திச் சொல்றார்போலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆரம்பம் முதலே கு தேவதை எனப் பெயர் சூட்டியிருந்தால் இக்கொயப்பம் வந்திருக்காதெனக்கு கர்ர்ர்ர்:))
சே ரொம்ப அநியாயம் .வீடு வாசல் விட்டு வேலை செய்யும் ஒரு மனிதருக்கு உணவை கூட இலவசமா தர கூடாதா ரெயில்வே
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் மீ 200 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ பரிசு எனக்கே:)).. இனி எல்லோரும் மேலும் ஏற்றுக வில் கை வைச்சுப் படிக்கோணும்:))
பதிலளிநீக்குஓ உண்மைதான் சமரைத்தான் விரும்புகிறோம் ஆனா சமரில ரைம் கிடைப்பதில்லை.. உடம்பைக் கவனியுங்கோ கோமதி அக்கா.
பதிலளிநீக்கு////ஸ்ரீராம்.16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:55
பதிலளிநீக்கு168...!!//
மாமாவுக்கு ஏற்ற மருமகன் என்பதை நிரூபிக்கிறார் ஸ்ரீராம்.. அவர் நேற்று 16 லட்சத்தை அறிவிச்சார்ர்:) இவர் இன்று 168 ஐ அறிவிக்கிறார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா
@Banu ma,
பதிலளிநீக்குI cannot read La sa ra. I have bought many of his books. Like Abeetha. sorry to say so. his writings are of highest language. To develop a taste you have to read many. your Rasanai is superb. congratulations.
ஹா ஹா ஹா விடுங்கோ அழுது முடிப்பாவுக்கும்.. அழுவதும் நல்லதே....
பதிலளிநீக்குஎங்கப்பா என்னிக்குமே ஏழை விவசாயிகள் கிட்ட ட்ரீட்மெண்ட் பணம் வாங்கியதில்லை பசுக்களுக்கு டெலிவரி மறுபிறப்பாம் நாடு இரவில்கூட போவார் பல நாட்கள் .அடுத்த நாள் சீம்பால் வந்தா எங்கப்பா டெலிவரி செஞ்ச வீடுன்னு கண்டுபிடிப்போம்
பதிலளிநீக்குGARRRRR .
பதிலளிநீக்குTake care gomathy akkaa
பதிலளிநீக்கு//என்னாதூஊஊஊஊஊஊஊஉ காச்சுச்சாராயமோ//
பதிலளிநீக்குgrrrrrrrrrrrrrrrrrr awwww
but i van make coconut kallu . store coconut water in a bottle leave it inside fridge after few days you will get coconut toddy .but i hate the smell once i tried to make hoppers that was the last time ever i made .
yes vallimaa you got it :)))))))))))))))))
பதிலளிநீக்குவல்லிம்மா சரியா வைத்யநாதன்னு கண்டுபிடிச்சிட்டாங்க :)
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன்//
பதிலளிநீக்குபெண்களுக்கு பொதுவா எனர்ஜி லெவல் அதிகம்தானே.. அதனாலதான் சொல்லுவினம், பெண்களை எப்பவும் அக்டிவ்வா வைச்சிருக்கோணுமாம், இல்லை எனில் அந்த எனர்ஜியை சில பெண்கள் தப்பான விவகாரத்தில் செலவழித்திடுவார்களாம்.. இதனாலதான் ஓவரா அடக்கி அடிமையாக்கப்படும் பெண்களில் சிலர் எல்லை மீறுவதுமாகக்கூட இருக்கலாம்.
ஆனா இங்கத்தைய ஜிம் இல் பெரிசாகப் பாட்டுப் போகும்.. அதனால பேசுவது இருக்காது, ஃபோன்கூட பேச மாட்டினம் எமேஜென்சி தவிர. நான் இயர்ஃபோனில் நம் ரேஎடியோக் கேட்க ட்ரை பண்ணுவேன்ன் ஆனா சத்தம் கேட்காது, அவர்களின் பாடலே பெரிசா கேட்கும்.
//அங்க வருகிற பெண்கள் (ஆண்டீஸ்...ஆன்ரீஸ்)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
///ஆண்கள்... ரொம்ப சிந்தனை செய்கிறவர்கள். ///
ஹையோ ஆண்டவா இதை எல்லாம் படிப்பதற்காகவோ இந்த உசிறு:)) 16 வருசமா என்னில ஒட்டியிருக்குது:)) ஹா ஹா ஹா
எல்லாம் இருக்கு ஆனா மனித உசிரைக் காப்பாற்றுவது பற்றி இல்லையே:))
பதிலளிநீக்குநானும் உங்களைப்போலதான் ஸ்ரீராம், பிடித்த பாடல் வரிகளைக் கொப்பிகளில் டயரிகளில் எழுதி விடுவேன்ன்... ஸ்கூலில் என் கொப்பியை எடுத்து எல்லோரும் ஆசையாக பின்பக்கம், அட்டைப் பகுதிகளில் இருக்கும் வரிகளைப் படிப்பினம்.. அதில் எங்கள் டபிள் மட்ஸ் ரீச்சரும் அடக்கம்:)).. நைஸா என் கொப்பியை எடுத்து பிரித்துப் பார்த்திட்டு வைப்பா.. நன் வேர்க்கில் பிஸியாக இருக்கும்போது:))
பதிலளிநீக்குகீசாக்காவைப் பற்றி உங்களுக்கும் தெரியாதோ? வட்ஸப்பில் இருக்கிறாவெல்லோ?
பதிலளிநீக்கு//ஹையோ வைரவா முடியல்ல:))// - திருமணத்துக்கு முன்பு எங்க அம்மாதானே என்னை வளர்த்தாங்க..ஹாஹா.. (சில சமயம் சில குணங்களை பசங்கட்ட பார்க்கும்போது எரிச்சலா இருக்கும். மனைவிட்ட தனியா, என்ன இப்படி இருக்கான் என்று சொன்னா, அவ சிம்பிளா 'உங்களை மாதிரித்தான்' என்று சொல்லிடுவா.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆமாம்.! நானும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களை இதுவரை காணவில்லையே எனத்தேடினேன். உங்களுக்கு தெரிந்திருக்கும் நினைத்தேன். எங்கே போனர்கள்? எங்கு போனாலும், என்னைப் போல் அல்லாமல், இங்கு சொல்லி விட்டுப் போகும் நல்ல பண்பை கொண்டவராயிற்றே!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவர் கதைகள் மனதில் பதியவே நேரமாகும் ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குவாட்ஸாப்பில் கேட்கலாம். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநான் தான் கம்ப்ளீட் சரண்டர் ஆயிட்டேனே!
பதிலளிநீக்கு//அழுவதும் நல்லதே....//
பதிலளிநீக்குஆமாம்... உண்மைதான். மனம் லேஸாகும்.
இந்த வியாழன் அமர்க்களத்தை ஆக்டன் நாஷுக்கு நடுவே காலையில் படித்தேன். பின்னூட்டத்துக்குள் கொஞ்சம் போனேன். வெளியே போய்விட்டு இரவு வந்து பார்த்தால் 200-ஐ த் தாண்டியிருக்கிறது.
பதிலளிநீக்கு'ஜகா' ஜெகாவானால் என்ன, விஷய மழையோடு சினிமாப் பாடல்வரிகளும் பின்னூட்டப் புலிகளைக் கவர்கின்றன.
புண்ணியபலன்களை வரிசையாகச் சொன்னது நல்லது. இதுவரை கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பவர்கள் தங்கள் ஸ்கோர் என்ன என மனசுக்குள் போட்டுப்பார்த்துக்கொண்டிருப்பார்கள்! சாப்பாட்டுப் படங்கள் பயமுறுத்துகின்றன. புளியோதரை கொஞ்சம் பரவாயில்லை.
பிஹார் நண்பரின் கதை..ஓய்வில்லா உழைப்பு, இத்துனூண்டு வருமானம். இப்படி எத்தனையோ பேர் நாட்டில். வேலையில்லாத அரசியல்வாதிகூட வருஷாவருஷம், உடம்பு செக்-அப்பிற்கு லண்டனுக்கும், சுற்றுலாவுக்கென ஹாங்காங்குக்கும் போகும் நாடிது! எதுவும் சொல்வதற்கில்லை.
ஜகாவா... மேலும் மேலும் திருத்தாமல் நான் ஜகா வாங்கி விடுகிறேன்.!
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நட்னரி ஏகாந்தன் ஸார். இத்தனையையும் மீறி லாலூவை நிறைய ஏழை மக்களுக்குப் பிடித்திருந்தது, அவரைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது ஆச்சர்யம்.
நன்றி நட்னரி ஆகிவிட்டதுக்கு வருந்துகிறேன். அதை நன்றி என்று படிக்கவும்!
நீக்குவைத்யநாதன்//
பதிலளிநீக்குஆஹா!! கரீக்டுதான்..நானும் என்னெல்லாமோ நாதன் யோசித்தேன்...ஹிஹிஹி
கீதா
பயணங்கள் தொடரட்டும்.....
பதிலளிநீக்குஉங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த சந்தோஷ் போன்ற இளைஞர்கள் பாவம் தான். வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டு சமாளித்து வருகிறார்கள்!
பதிலளிநீக்குரயிலில் கதவு பக்கத்தில் நிற்பவர் முதலில் நீங்களோ என்று நினைத்தேன் அப்புறம் தெரிந்தது அது ஸ்டேஷன் மேனேஜர் என்று. இந்தப் படத்தில் அவர் என்னைப் போல் கொஞ்சம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.
மூன்று இட்லி போதுமாக இருந்ததா?
உங்கள் கவிதையை மிக மிக ரசித்தேன். கதை சொல்லும் கவிதை.
எழுத்தாளர் லா ச ரா பற்றி உங்கள் சகோதரி சொன்னதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
அனைத்தும் அருமை.
மகனின் என்ட்ரன்ஸ் தேர்வுகள், நான் சமீபத்தில் நான் தற்போது வேலை செய்யும் கல்லூரி (அவர்கள் பல கல்வி ஸ்தாபனங்கள் நிறுவிகின்றார்கள்) ஸ்தாபகரைப் பற்றி எடுத்த குறும்படத்தின் டப்பிங்க் எடிட்டிங்க் வேலைகள் என்று செல்வதால் வெகு தாமதமாகவே வாசிக்க இயல்கிறது.
துளசிதரன்