20.9.19

வெள்ளி வீடியோ : மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து


நிலவே நீ சாட்சி.  இன்றும் இரண்டு பாடல்கள்.



1970இல் வெளிவந்த படம். வழக்கம்போல நான் படம் பார்க்கவில்லை.  ஆனால் கதை ஓரளவு யூகிக்கக் கூடியது.

ஜெய்சங்கர், முத்துராமன், கே ஆர் விஜயா நடித்தது.  பி மாதவன் இயக்கம்.  கண்ணதாசனின் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.



நான் கல்லூரி படிக்கும் காலங்களில் ரசித்துக் கேட்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்களில் இந்தப் படத்தின் டைட்டில் சாங் மிகவும் பிடித்த பாடல்.  வழக்கம் போல எனக்குமிகவும் பிடித்த பாடலை இரண்டாவதாகவும், சுமாரான பாடலை முதலாவதாகவும் பகிர்கிறேன்.  



பொன் என்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ 
பொன் என்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ   
பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும் 
இன்னும் நூறாயிரம்..
இன்னும் நூறாயிரம்.. 

மூன்று கனிச்சாறு  ஒன்றாகப் பிழிந்து  
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து 
மூன்று கனிச்சாறு  ஒன்றாகப் பிழிந்து  
மோகரசம் கொஞ்சம் அளவோடு கலந்து 
கோதை மதுவாகப் பொன்மேனி மலர்ந்து 
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து 
பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து  

கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று 
ஓடும் பருவங்கள் கணநேரம் நின்று
கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று 
ஓடும் பருவங்கள் கணநேரம் நின்று 
காதல் கவிபாடும் அவள்மேனி கண்டு 
காண கண் வேண்டும் ஒருகோடி இன்று 
காண கண் வேண்டும் ஒருகோடி இன்று 

கன்னி இளம்கூந்தல் கல்யாணப்பள்ளி 
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி 
கன்னி இளம்கூந்தல் கல்யாணப்பள்ளி 
கண்கள் ஒளிவீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி 
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி 
இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி   





முதலில் கே ஆர் விஜயாவோடு டூயட் பாடியிருக்கும் ஜெய்சங்கர் இப்போது தன்னிலை மறந்தவராயிருக்கிறார்.  கே ஆர் விஜயாவின் கணவர் ஜெய்சங்கருக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்.  முன்னர் ஜெய்யும் விஜயாவும் பாடிய பாடலை இப்போது பாடச்செய்து ஜெய்யை குணமாக்குகிறார்!  



 ஜெய்யின் நெற்றியில் நட்சத்திரங்கள் வெடித்து அதில் கே ஆர் விஜயா முகம் தெரிந்ததும், பார்த்துக்கொண்டிருக்கும் முத்துராமன் முகத்தில் புன்னகை பிறக்கிறது!



இந்தப் பாடலில் எஸ் பி பி யின் குரல்தான் வழக்கம்போல ஸ்பெஷல்.  கண்ணதாசன் வரிகளும்!  இதை அப்போது கேசட்டில் பதிவு செய்ய மிக அலைந்தேன்!  நிறைய கடைகளில் கிடைக்கவில்லை.  நண்பர் ஒருவர் அவர் கேசட்டில் வைத்திருந்தார்.  அதை கேசட் டு கேசட் காபி செய்தேன்!




நிலவே நீ சாட்சி 
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் 
நிலவே நீ சாட்சி 

பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில் 
பயணம் செய்பவர் சிந்திப்பதும் 
பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில் 
பயணம் செய்பவர் சிந்திப்பதும் 
காதலில் கூட நடப்பதுண்டு அங்கே 
காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு 
காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு  

ஒரு சில உள்ளத்தில் சுவை பேச்சு 
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு  
ஒரு சில உள்ளத்தில் சுவை பேச்சு 
சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு  
இருவரை இணைத்து திரை போட்டு - இது 
இறைவன் நடத்தும் விளையாட்டு 
 இறைவன் நடத்தும் விளையாட்டு   


  

72 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நான் பிறப்பதற்கு முன் வந்த படம்... :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் பாடல் இது வரை கேட்ட மாதிரி தெரியவில்லை.

கேசட் த் கேசட் - நானும் இப்படி நிறைய கேசட்டுகல் செய்து வைத்து இருந்தேன். ஃபாஸ்ட் டப்பிங்!

வல்லிசிம்ஹன் சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இரு பாடல்களும் இனிமையான பாடல்களே.

மிக உணர்ச்சி பொங்கும் படி பாலசுப்ரமணியம்
பாடி இருக்கிறார். மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி. என்னைப் பொறுத்தவரை, அனேக மனங்களைப் பொறுத்தவரையில் நிலவுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
இந்தப் படத்தை நானும் பார்த்ததில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

இனிய காலை வணக்கம் வெங்கட்... வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...ஹா...   ஹா...  பாடல்கள் இனிமை இல்லையா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டாவது பாடலும் கேட்ட நினைவில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

முதல் பாடல் நானும் கொஞ்சம் லேட்டாகத்தான் கேள்விப்பட்டு லிஸ்ட்டில் (அப்போது) சேர்த்துக் கொண்டேன்! 

//ஃபாஸ்ட் டப்பிங்!//

ஆம்.  நானும்!  அதற்கு இரண்டு கேசெட் போடுவது போல டேப்ரெக்கார்டர் இருக்க வேண்டும்! 

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான பாடல்கள் தான் ஸ்ரீராம்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா...

இனிய காலை வணக்கம்.

முதல் பாடலில் பரவசக்காதல்.

இரண்டாவது பாடலில் ...   என்ன சொல்ல?  சோகம்? விரக்தி?

ஸ்ரீராம். சொன்னது…

ஆச்சர்யம் வெங்கட்!

Geetha Sambasivam சொன்னது…

வந்திருக்கும் நண்பர்களுக்கும், வரவிருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பானுமதியின் பதிவைப் பார்த்துவிட்டு வருகிறேன். அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து எழுத ஆரம்பிக்கவேண்டும் எனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதே உங்களால் தான் தெரிய வருகிறது.

ஏகாந்தன் ! சொன்னது…

இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது நினைவில். இசையில் முதல் பாடல்தான் கவர்கிறது. அதில் சில வரிகளும். இரண்டாவதில் அழுகை வரவேண்டும் என்பது சினிமாக்காரர்கள் ரசிகர்களுக்காக எழுதிய விதி! பரவாயில்லை. அனுபவிப்போம்.

இரண்டாவதில் சூப்பர் ஃபிட்டாகத் தெரிகிறார் முத்துராமன். இந்த ஃபிட்னெஸ்ஸைத் தேடி ஓடியே அவர் காணாமற்போனார் என்பது நினைவுக்கு வருகிறது.

சில சமயங்களில் இந்த உடம்பை அதன் இஷ்டப்படியும் விட்டுவிடுவதே நல்லது எனவும் தோன்றுகிறது.

மனம்? அங்கே நம் இஷ்டம் என்பது எதுவும் இல்லை! சமீபத்தில் படித்தது நினைவில். எங்கே, எதில் படித்தேன் என்பதை அந்த மனம் மறக்கடித்துவிட்டது! : மகாவிஷ்ணுவின் மனதிலிருந்து உருவானது நிலா. ஜீவராசிகளின்மீது அதன் தாக்கம் இப்போது புரிகிறதா? ஜீவராசிகள் என்பதால் obviously, மனிதர்களைத் தாண்டியும் பார்க்கவேண்டும்.

பௌர்ணமி நிலவில் தன் வேலையைக்காட்டும் Werewolf பற்றிய ஆங்கிலப்படங்கள் பார்த்ததுண்டா?

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கீதா அக்கா...

நல்வரவும், வணக்கமும்.   பானு அக்கா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப எங்கள் பிரார்த்தனைகளும்.

இந்தப் படம் அல்லது பாடல் தெரியவில்லை என்று சொல்வது ஆச்சர்யமே!

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க ஏகாந்தன் ஸார்.

இரண்டுபாடல்களையும் ரசித்திருப்பதற்கு நன்றி.   இரண்டாவது பாடலில் ரசிகர்கள் ரிலீவ்டாக உணர்வார்கள்.  ஜெய்க்கு நினைவு திரும்பி விட்டதே!  வரிகள் சுவை.
பிட்னெஸ் தேடி ஓடிய இன்னொரு ஸூப்பர் கதாநாயகன் முதல்வரானார்!

மனம் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.  நீங்கள் சொல்லி இருக்கும் ஆங்கிலப் படம் பார்த்ததில்லை.

கோமதி அரசு சொன்னது…

இந்த பாடலும் கேட்டு இருக்கிறேன், படமும் பார்த்து இருக்கிறேன்.

மீண்டும் இப்போது கேட்டு மகிழ்ந்தேன் இரு பாடலையும்.
பாலசுப்பிரமணியன் பழைய பாடல்களில் ஒரு இனிமை இருக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா...   காலை வணக்கம்.  கால் வீக்கம் / வலி குறைந்து விட்டதா?  போயே போச்சா?

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் கோமதி அக்கா.    அந்த பாலசுப்ரமணியத்தின் ரசிகன் நான்.  நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜெய்சங்கர் நெற்றியில் ஒளிவட்டம் போல... ஓ எங்கூர் வேடப்பட்டியில் பார்த்த படம்....!

நெல்லைத்தமிழன் சொன்னது…

//பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில்
பயணம் செய்பவர் சிந்திப்பதும் // - பாடும்போது எஸ்.பி.பி 'பயணம் செல்பவன் சிந்திப்பதும்' என்று பாடுகிறார்.

இந்தப் பாடல் நினைவில் இருக்கு எப்பயோ கேட்ட மாதிரி

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

அனைத்து வீடியோக்களும் பழைய நினைவுகளை புதுப்பித்தன. பகிர்வுக்கு நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

துரை செல்வராஜூ சொன்னது…

நிலவே நீ சாட்சி..

மிகவும் பிடித்தபாடல்...
முன்பு ஒருமுறை இதனைப் பதிவு செய்திருப்பதாக நினைவு...

மாதேவி சொன்னது…

இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். படம் பார்கவில்லை.

ஏகாந்தன் ! சொன்னது…

Some famous hollywood movies on Werewolf theme: The company of Wolves, The Curse of the Werewolf, The Wolf Man, The Howling, Ginger Snaps..

Horror படங்கள்! முடிந்தால், கிடைத்தால் பாருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பல முறை ரசித்துள்ள பாடல் நிலவே நீ சாட்சி..இன்றும் ரசித்தேன்.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

//
மூன்று கனிச்சாறு ஒன்றாகப் பிழிந்து //

முக்கனிச்சாறு எனச் சொன்னால் வசனம் குட்டியாகிவிடும் என நினைச்சுப் பாவிச்ச தக்கினிக்கா இது?:)).. கண்ணதாசன் அங்கிள் எங்கேயோ போயிட்டார்ர்:))

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

நிலவே நீ சாட்சி//
பார்த்தமாதிரியும் இருக்கு பார்க்காதததுபோலவும் இருக்கு.. சிலசமயம் ரிவியில் போகும்போது.. பாதி பார்ப்பதுண்டு.. அதனாலேயெ இக்குழப்பம்.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

இம்முறை மீயும் ஸ்ரீராமை படுபயங்கரமாக:)) வழிமொழிகிறேன்ன்:)). அதாவது 2 வதுக்கு முதலிடம், முதலாவதுக்கு 2ம் இடம்:)).. நீங்க எவ்ளோ நல்லவர் ஸ்ரீராம்:), 2ம் பாட்டுக்கு முதலிடம் குடுக்கிறீங்க:)), ஆனா நான் 1500 மீட்டரில் 2 வதாக வந்தேன், ஆனா எனக்கு 2ம் இடம்தானே கிடைச்சது ச்ச்ச்சோ பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:))

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

நீங்க 3ம் வகுப்பில இருந்து கேட்டிருப்பீங்க நெ.தமிழன் இப்பாட்டை:)) ஹா ஹா ஹா

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

நேற்று உடனே கேட்க வேண்டாம் என நினைச்சு விட்டிட்டேன்ன், கோமதி அக்கா இப்போ நலம்தானே, இனிமேல் கீழ பார்த்துக்கொண்டு நடவுங்கோ ஹா ஹா ஹா:))

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

//Horror படங்கள்! முடிந்தால், கிடைத்தால் பாருங்கள்.//

“It chapter 2” - இப்பொழுது திரையில் காண்பிக்கப்படுகிறது இதுவும் ஏ அண்ணன் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க:)) ஹா ஹா ஹா..

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

இம்முறை இரு பாடல்களும் ரசிக்கும் பாட்டுக்களே.. ஆனா முதல் பாட்டு அடிக்கடி பூஸ் ரேடியோவில்:) போகும்.. முதலாவது போவது குறைவு.. ஏனோ தெரியவில்லை.

நெல்லைத்தமிழன் சொன்னது…

மிக்க நன்றி அதிரா.... 'தோடுடைய செவியன்' பாடலைக் கேட்டிருக்கிறேன் என்று சொன்னால் உடனே என் வயது 850 என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கு. நல்லவேளை பைபிளை மனப்பாடம் செய்திருக்கும் ஏஞ்சலின் வயது 1980 என்று சொல்லாமல் போனீர்களே.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

ஆஆஆஆஆ என்னா ஸ்பீட்டான பதில்:).. வேறேதும் கிளவி எனில் பிஸிபோல இருந்திருப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)....ஹா ஹா ஹா இப்போ எதுக்கு அஞ்சுவைக் கூப்பிடுறீங்க:).. அவ இனி மண்டேயிலிருந்துதான் வருவா என நினைக்கிறேன்:)..

G.M Balasubramaniam சொன்னது…

பழைய படப் பாடல் என்றாலும் கேட்டதில்லைI HAD NOT MISSED MUCH I think

ஸ்ரீராம். சொன்னது…

முயற்சிசெய்கிறேன் ஏகாந்தன் ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

“It chapter 2” - ??

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி டிடி.  நான் படமே பார்க்கவில்லை!  பாட்டு மட்டும் ரசிப்பேன்!

ஸ்ரீராம். சொன்னது…

மிகவும் நுண்ணிய அவதானிப்பு நெல்லை!

ஸ்ரீராம். சொன்னது…

ஆஹா...    எப்போ கேட்டேன் என்று சொன்னால் உடனே கால்குலேட்டரோடு வயசு கணக்கு பண்ண உட்கார்ந்து விடுகிறார்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

ன்றி ஜோசப் ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...  வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியா...   நினைவில்லை.

ஆனால் பொன்னென்றும் பூ என்றும் பாடல் நிச்சயம் பகிர்ந்திருக்க மாட்டேன்!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி சகோதரி மாதேவி.

நானும் படம் பார்த்து எல்லாம் மாட்டிக்கொள்வதில்லை.  பாடல் ரசிப்பதோடு சரி!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்..    பாடல் சந்த வரிகளுக்கு தக்கவாறு வரவேண்டுமே!

ஸ்ரீராம். சொன்னது…

பாட்டு...    பாட்டு...   பாட்டு...

நோ படம்!

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...   ஹா...  ஹா...

இலையில் பரிமாறப் படுபவற்றில் பிடித்தமானதைக் கடைசியாகச் சாப்பிடும் லாஜிக்தான் இது அதிரா!  இரண்டாவதாக அதைக் கேட்டால் மனதில்நின்று விடுமே!

ஸ்ரீராம். சொன்னது…

முதல் பாடல் என்றே இருமுறையும் சொல்லி இருக்கிறீர்கள்.  அடிக்கடி ரேடியோவில் போகும் பாடல் டைட்டில் சங்கென்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி எம் பி ஸார்.

ஜீவி சொன்னது…

சொற் குற்றம், பொருள் குற்றம் பார்க்கும் நக்கீரர் இங்கு யாரும் இல்லையோ?..

மோக ரசம் கலந்து விட்டால் காமம் ஆகுமோ, கலக்காவிட்டால் தான் காதல் ஆகுமோ?..

காதல் வசப்பட்டவர்கள் உண்மையான காதலுக்கு பொருளுரை அருளலாம்..

ஸ்ரீராம். சொன்னது…

நேக்கு பாட்டு தெரியும், டியூன் தெரியும், எஸ் பி பி குரல் தெரியும்..  நேக்கு வேற என்ன தெரியும் ஜீவி ஸார்..   

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஸ்ரீராம்! படம் கூட இன்றைக்குப் பார்த்தாலும் அலுக்காது. நிலவே நீ சாட்சி பாட்டு இரண்டு வெர்ஷன்! ஒன்று சுசீலா மட்டும் பாடுகிற காதலியாக முதற் பகுதி! நீங்கள் பகிர்ந்திருப்பது சுசீலா முதலடி எடுத்துக் கொடுக்க (SPB பாடுகிற) இன்னொருவன் மனைவியாக 2வது வெர்ஷன். இரண்டுமே அருமையான பாட்டுக்கள்தான்! ஆக்ஷன் ஹீரோவோக ஜொலித்த ஜெய்சங்கர் நடிப்பில் அவ்வளவாகத் தேறாத நிலையிலும் கூட ஜனங்கள் இந்தப்படத்தை ஜெய்சங்கருக்காகவே பார்த்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்! படத்தின் க்ளைமேக்ஸ் ஜனங்கள் ஏற்றுக்கொள்கிற மாதிரி இருந்ததால் கூட இருக்கலாம்!

ஜீவி சொன்னது…

குமுத வசீகரம் மாதிரி பதிவுக்களுக்கு தலைப்பும் இடத் தெரியும்.
அதை விட்டு விட்டீர்களே!

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கிருஷ் ஸார்...

பெண்குரலில் இதே பாட்டு இருப்பது தெரியும்.  இந்தப் பாடலில் தொடங்குவது பி சுசீலா இல்லை என்று நினைக்கிறேன்.   படம் பார்க்கவில்லை என்பதால் மற்ற விவரங்கள் தெரியவில்லை.   பாட்டுகளை ரசித்தேன்.  அவ்வளவே!

ஏகாந்தன் ! சொன்னது…

It - இது 2017-ல் வந்த படம். (Based on a novel by the same name by Stephen King on Supernatural Horror )
It - Chapter 2 அதன் தொடர்ச்சி 2019-ல் வந்திருக்கிறது வெள்ளை மாளிகையை பயமுறுத்த..!

ஆட்டம்போடும் பேய்க்கு வேட்டுவைக்க வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட ’உருப்படாத’ சிறுவர்கள் செய்யும் முயற்சி. 30 வருடத்திற்குப் பின்னும் அது ஓயவில்லை. அதனைத் துரத்துகிறார்கள் சிறுவர்களாய் இருந்த பெரிய ஆட்கள் -பாகம் 2. இது Werewolf சம்பந்தப்பட்ட horror அல்ல.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே முதலடி எடுத்துக் கொடுப்பது ஜானகி குரல் மாதிரித்தான் தோன்றுகிறது. ஆனால் முதல் வெர்ஷன் பாடியது சுசீலா தான் ஸ்ரீராம்!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஸ்ரீராம். சொன்னது…

ஹிஹிஹி.....

ஸ்ரீராம். சொன்னது…

ஜானகி இல்லை என்று தெரியும் கிருஷ் ஸார்...   வசந்தா என்றொரு பாடகி அவ்வப்போது எஸ் பி பியுடன் குரல் கொடுப்பார். அது போல இருக்குமோ என்று பார்த்தேன்!  முதல் வெர்ஷன் சுசீலா பாடியது என்று தெரியும்.

ஸ்ரீராம். சொன்னது…

அமேசான் பிரைம்ல இருந்தால் பார்க்கலாம்.  யூ டியூபில் தேடிப் பார்க்கிறேன் ஏகாந்தன் ஸார்.

ஜீவி சொன்னது…

குமுதம் என்ற பேச்சை எடுத்தாலே 'ஜிவ்'வென்று இருப்பது வாஸ்தவம் தான். :)

எப்படி வாசிப்பவர்களைக் கவர்வது என்ற கலையை ஸ்டெப் பை ஸ்டெப்பாக கற்றவர்கள் அவர்கள். ஆறு லட்சம் ஏழு லட்சம் என்று அந்த நாட்களிலேயே பத்திரிகை போணியாவது என்றால் சும்மாவா, ஸ்ரீராம்?..

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

இன்றைய பாடல்கள் இரண்டுமே எப்போதோ கேட்டது. ஆனால், கேட்டதும், கேட்டது நினைவுக்கு வந்து இப்போது ரசித்து கேட்டேன். எஸ். பி. பியின் குரல் இனிமை யில் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கின்றன. படம் திரையரங்கிற்கு சென்று பார்த்ததில்லை. ஆனால், முன்பு ஞாயறு மதியம் திரைப்படங்கள் சிலோன் ரேடியோவில் ஒளிபரப்புவார்கள். அதில் அம்மா வீட்டிலிருக்கும் போது இந்த படம் அக்கம் பக்கமிருக்கும் உறவுகளுடன் அமர்ந்து, கேட்டதாக நினைவு. அப்போதெல்லாம் இந்த மாதிரி படங்கள் சிலோனில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாவதை அனைவரும் ஆவலுடன் கேட்பார்கள். வேறு பொழுது போக்குகள் இல்லாத நேரங்கள். இப்போது மலரும் நினைவுகளுடன் இந்த பாடல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai சொன்னது…

பலமுறை கேட்டு ரசித்த பாடல் ஜி

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கமலா அக்கா...

நீங்களும் முன்பே கேட்ட பாடல்கள் என்பது மகிழ்ச்சி.   சிலோன் ரேடியோவில் கேட்டிருக்கிறீர்கள் நீங்களும்...   நான் பெரும்பாலும் கெஸெட்டில்தான் கேட்டேன்!

நன்றி அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

ந.....
ஶ்ரீராம் போட மறந்திட்டார் அதனாலதான்:)...

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) சொன்னது…

ஓ ரண்டாவது போவது குறைவு

ஸ்ரீராம். சொன்னது…

:))))

கோமதி அரசு சொன்னது…

இப்போது தேவலை.
ஸ்ரீராம், அதிரா.
கை காயம் ஆறி வருகிறது. கால் முட்டி வலி குறைந்து வருகிறது. இன்னும் இரண்டு நாள் மருந்து இருக்கிறது.
விசாரிப்புக்கு நன்றி.