திங்கள், 9 செப்டம்பர், 2019

திங்கக்கிழமை : கீரை வறுத்தரைத்த சாம்பார் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி


கீரை வறுத்தரைத்த சாம்பார்.. 


மனிதர்களில் பல ரகங்கள் மாதிரி கீரையிலும்  பல ரகம்.  நான் திருமணமாகி சென்னை வந்த புதிதில், "அரைக்கிரை, முறைக்கிரை, சிரிக்கிரை" இந்த மாதிரி தெருவில்  ஒரு மாதிரி ராகத்தில் அழுத்தி கூவி கீரை விற்பார்கள். முதலில்  எதுவும் புரியவில்லை. பின் இந்த கீரை விற்கும் சொற்கள் குறித்த ஐயங்கள்  என் புகுந்த வீட்டு உறவுகள் மூலமாகத்தான் கொஞ்ச நாட்கள் கழித்து அது கீரை சம்பந்தப்பட்டது என புரிந்து கொண்டேன். 

காய் வாங்க வெளியில். செல்லும் போது, "என்னம்மா முளைக்கீரை எப்படிம்மா?" என்று கேட்கும் போது, தப்பி தவறி நாமும் "என்னம்மா முறைக்கீரை" என்று அவரை கிண்டலாக அழைப்பது போல், அவருக்கு தோன்றி விட்டால், அவர் "முறைப்பதை" முதலில் நாம்  சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

அந்த முறைப்பிலேயே அவர் சென்னை பாஷையில் ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற கலக்கத்தில், ஏதோ ஒரு கீரையை சிரிக்காமல் வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். 

அதன் பின் நாடோடி தென்றலாக அங்கே இங்கே என்று வாழ்க்கை நகர்ந்ததில். கீரைகளும் ஆங்காங்கே தலைகாட்டியபடி பின் தொடர்ந்தேதான் வந்தபடி இருந்தது. இதில் என் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சாப்பிட பிடிக்காத விஷயங்களில் இந்த கீரையும் ஒன்று. 

கீரை பண்ணும் அன்றைய தினம் அவர்களுக்காக நிறைய காய்களை போட்டு சாம்பார், இல்லை, அவியல் மாதிரி  பண்ணி காய்களை உண்ணும்படி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஏதும் சாப்பிடாமல் இருப்பார்களே என அன்று வருத்தம் வரும். 

அதன் பின் அவர்கள் சற்று வளர்ந்த பிற்பாடு, அரைக் கீரையை உப்பிட்டு  வேக வைத்து மசித்து, கடுகு உ. ப, மி. வத்தல் தாளித்து, பெருங்காயத்துடன், பச்சை தேங்காய் எண்ணை ஒரு ஸ்பூன் விட்டு, அந்த கீரையுடன் கலந்த சாதம், 

 கீரை வெந்ததும் மசித்தவுடன் தேங்காய், சீரகம், மி. வத்தலுடன் அரைத்துச் சேர்த்து, செய்த கரைச்ச கூட்டு,

 கீரை வெந்து மசித்ததும்  புளி, கடுகு, வெந்தயம், பெ. காயம் தாளிப்பு சேர்த்த புளிக்கீரை,( புளிக்கீரையென்று ஒன்று  உண்டு. அதற்கு புளியே விட வேண்டாம். அது அவ்வளவாக எங்களுக்கே பிடித்ததில்லை. குழந்தைகளுக்கு எப்படி?)  

அரைக்கீரையோ முளைக்கீரையோ வேக வைத்துக் கொண்டு, மிளகு, தேங்காய், மி. வத்தல் சேர்த்து மிளகூட்டல், 

இல்லை கீரை வடை, கீரை அடை, 

கீரையைவெந்து மசித்ததும், வேக வைத்த பா. பருப்புடன் சேர்த்து, தேங்காய், சீரகம், நாலைந்து மிளகு, மி. வத்தலுடன் (இதை வறுத்து ஒரு முறை, வறுக்காமல் ஒரு முறையில் செய்யலாம். ) அரைத்து சேர்த்த பொரிச்ச கீரைக்குழம்பு, (இது பொதுவாக பொன்னாங்கண்ணிகீரை, இல்லை பீட்ரூட் கீரை, இல்லை, மணத்தக்காளி கீரையில் செய்தால் அமிர்தமாக ருசிக்கும்.)

 கீரையை து. பருப்புடன் கலந்து சாம்பார் பொடி போட்டு ஒரு குழம்பு, இல்லை வறுத்த சாமான்களுடன் சேர்த்து செய்த கீரை சாம்பார், 

இது போக "பருப்புகீரை" என்று ஒன்று உண்டு. அதை அலம்பி பொடிதாக அரிந்து வேக வைத்த பின், வெறும் வேக வைத்த  து. பருப்படன் கலந்து  கடுகு, மி. வ உ. ப தாளித்து இறக்கிய கீரை, 

இதைத்தவிர பசலைக் கீரை என்ற ஒன்றுமுண்டு. அதையும் வேக வைத்த பருப்புகளோடு கலந்து தேங்காய் சீரகம், மி. வத்தலிட்டு காரத்துடனோ ,  இல்லை.. சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தோ,  கூட்டாக செய்தும், 

கீரை தண்டுடன் வாங்கும் போது, கீரைகளை ஆய்ந்து,( பொதுவாக இந்த கீரைகளை ஆய்ந்து சுத்தப்படுத்த நிறைய நேரமும், நீண்ட பொறுமையும் தேவைபடும்.) மேற்கூறிய முறைகளில் செய்து விட்டு, மறுநாள் தண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து,  அத்துடன் ஊற வைத்த பாசிப்பயிறு, அல்லது பா. பருப்பு வேக வைத்து சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவலுடன் கலந்து சுண்டலாக, 

இது போக வெந்தய கீரையில், இல்லை முள்ளங்கி கீரையில், செய்த சாம்பார், புளிக்குழம்பு, என பலவகைகளில் செய்து எங்கள் வீட்டில் அனைவரும் (குழந்தைகள், முதல் பெரியவர்கள்) கீரையை ரசித்து உண்ணும்படி செய்து விட்டேன்.( அப்பாடா.! சொல்வதற்குள் நான் வாடிய கீரையாக ஆகி விட்டேன். ஹா. ஹா. ஹா. பொறுமையாக கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும்? கேட்டதற்கு நன்றி.. நன்றி.. ) 

இன்னமும் எத்தனையோ கீரைகள் (சரியாக நினைவில்லை.) இப்படியாக செய்ததில் தற்சமயம் செய்த "வறுத்தரைத்த கீரை சாம்பாரை"  இங்கு அறிமுகப்படுத்து கிறேன்.  இதையும் அனைவரும் செய்து சுவைத்திருப்பீர்கள். இருந்தாலும் என் பாணியாக இருக்கட்டுமென (இல்லையென்றால், பண்ணும் போதே எடுத்த முளைக்கீரை புகைப்படங்கள் இன்னமும் என்னை "ரீலீஸ்" பண்ணவில்லையா என என்னை "முறைத்து"க்கொண்டே இருக்கின்றன.) இங்கு பகிர்கிறேன். 

கீரையை ஐந்து கட்டு அலம்பி அரிந்து வைத்த புகைப்படம். 



வறுக்க தேவையான பொருட்கள். வெந்தயம், மி. வத்தல்கள், உ. பருப்பு, க. பருப்பு, து. பருப்பு, கொத்தமல்லி விரைகள், (தனியா) இது ஆறுபேருக்கு இரு வேளைக்கு, நான் எடுத்துக் கொண்டது. கொஞ்சமாக பண்ணும் போது எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாம்பார் நன்கு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால் மறுநாள் காலைக்கும் பயன்படும். அதுவும் இரவு வைத்த மீந்து போன சாதத்தில், கொஞ்சம் தயிரும். பாலும் கலந்து கெட்டியாக தயிர்சாதம் செய்து கொண்டு இந்த சாம்பாரை துணையாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இன்னமும் நிறைய மீந்த சாதம் இருக்க கூடாதா என்ற எண்ணத்தை உருவாக்கும். (அன்றைய தினம் காலை டிபனை கூட மனம் எதிர் பார்க்காது.)




ஒரு ஸ்பூன் சீரகம், கொஞ்சம் மிளகும் எடுத்துக்கொண்டேன்.(சீர்+அகம் "சீரகம்" நம்முள்ளிருக்கும் அகத்தை சீராக்க, "மிளகு" (வயிற்று உப்பசம்) வயிற்று உபாதையை சரியாக்க )  "மருந்தே உணவு, உணவே மருந்து" என ஆயுர்வேதத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. விருப்பமில்லாதவர்கள் இவ்விரண்டையும் வறுக்கும் சாமான்களுடன் கலக்க வேண்டாம்.


ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொண்டேன்.


அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நிறைய கடுகு வெடிக்கச்செய்து அதில் பாதியை வறுத்தரைக்கும் சாமான்களுடன் சேர்க்கவும்.


இல்லையென்றால், இப்படி மிக்ஸியில் நேரடியாக போட்டுக்கொண்டேன். நான் அந்த மசாலா சாமான்களில் போட்டு படமெடுக்கவில்ஙை. (அதனால் இப்படி)



உப்பிட்ட கீரை  வெந்ததும், கீரை மத்தால் நன்கு கடைந்து கொள்ளவும். கீரையை இந்த மாதிரி கீரைமத்தால் கடையும் போது சுவை மாறாமல் இருக்கும். எனக்கு தெரிந்த சிலர் ஆட்டு ரலில் போட்டு அரைப்பார்கள்.  தற்சமயத்தில் மிக்ஸியில் அரைக்கிறார்கள். அது மிகவும நைசாக உரு தெரியாமல் ஆகி விடுவதால்  அதன் ருசியின் அளவும் குறைவதாக எனக்கு தோன்றுகிறது. (இரண்டாவதாக உப்பிட்ட பின் அந்த பொருளை எங்கள் வீட்டில் "பத்து" எனச் சொல்வது சிறு வயதிலிருந்தே அம்மாவிடம் கற்ற பாடம்.) (எச்சில், பத்து என சொல்வது மாதிரி) அதை மிக்ஸியில் போடக் கூடாது. "ஒயர் மூலம் வீடே  எச்சில், பத்து என்று கனெக்ஷன் ஆகி விடுமா?" என என்னை கேலி செய்தவர்கள் நிறைய பேர்.  என்ன செய்வது? பழக்கங்களை சுலபத்தில் மாற்ற முடியுமா? 




ஒரு எலுமிச்சை அளவு புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்தெடுத்த புளிக்கரைசலை, கடாயில் மீதமிருக்கும் கடுகுடன் விட்டு கொதிக்க விடவும்.




ஆரம்பத்திலேயே சாதம் வைக்கும் போது வேக வைத்திருக்கும் து. பருப்பையும் நன்கு கடைந்து வைக்கவும்.




புளிஜலம் நன்றாக கொதித்ததும், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மசித்த கீரையை உடன் சேர்த்து கொதிக்க விடவும். 






வறுத்த மசாலா கலவையை நைசாக மிக்ஸியில் அரைத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் கீரையுடன் சேர்க்கவும்.



அரைத்த பொடிகள் கரைத்து வைத்த கலவை.



கரைத்து வைத்ததை விட்டு நன்கு கொதி வந்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். 



கீரை சேர்ந்து கொதித்ததும் பெருங்காயத்தூள் கொஞ்சம் போடவும்.. நான் எப்போதுமே கடைசியில்தான் பெருங்காய பொடி சேர்த்து விடுவேன். வாசனை நிலைத்து இருக்கும்.



எல்லாம் கலந்த  நிலையில் கீரை சாம்பார் அசத்தலாக நான் ரெடி என்கிறது.




"சாதம் பரிமாறிய பின்தான் என்னை பரிமாறுவார்களாம். அதுவரை நான் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வேண்டுமாம்" என்று முறைப்பிலிருந்த  முளைக்கீரை சாம்பார்.



என்ன நட்புகளே.! கீரை சாம்பார் ருசியாக இருந்ததா? "ஆமாம்.. நாங்க எப்போதும் செய்வதுதானே.! இதில் என்ன மாறுபட்ட ருசி...! "என்ற ஒரு கேள்வி வரும் முன் நீங்கள் இதை எப்படியெல்லாம் வித்தியாசமாக செய்திருக்கிறீர்கள் என்ற அனுபவ கருத்துக்களை எதிர்பார்த்தபடி விடை பெறுகிறேன். நன்றி. 🙏

66 கருத்துகள்:

  1. ஆஹா.... இன்றைக்கு கமலா ஹரிஹரன் அவர்களின் சமையல் குறிப்புகளா? இதோ வருகிறேன்.,..

    பதிலளிநீக்கு
  2. சுவையான குறிப்புகள்... படங்கள் நன்று.... தலைநகர் வாழ்க்கையில் இழந்தது தமிழகத்தின் பல கீரை வகைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வெங்கட் அண்ட் கமலா மா. மணக்க மணக்கக் கீரை சாம்பார் ரெடி. எத்தனை அழகான முறையில் சொல்லி இருக்கிறீர்கள்.
      படிப்படியாகப் படங்கள். உங்களைப் போலத்தான் நானும் மத்தால் கடைந்து கொள்வேன்.
      பச்சை நிறம் மாறாது நன்றாக இருக்கும். செய்த நாளைவிட அடுத்த நாளே
      இன்னும் நன்றாக இருக்கும்.

      இத்தனை அருமையாகச் செய்து கொடுத்தால்
      எந்தக் குழந்தைதான் வேண்டாம் என்று சொல்லும்.

      உங்கள் குடும்பத்தவர் கொடுத்து வைத்தவர்கள்.
      நான் முள்ளங்கிக் கீரையைச் சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்துவிடுவேன்.

      முளைக்கீரையைவிட அரைக்கீரெயே எங்கள் வீட்டில்
      எல்லோருக்கும் பிடிக்கும்.

      பாலக்கும் தான்.
      மிக மிக நன்றியும் வாழ்த்துகளும் கமலாமா.

      நீக்கு
    2. காலை வணக்கம் சகோதரரே

      முன்னதாக (முதலாவதாக) வந்தமைக்கு மகிழ்வுடன் கூடிய வாழ்த்துக்கள்.
      பதிவை படித்து கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. காலை வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும், பதிவை குறித்த கருத்தும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஆம் சகோதரி மத்தால் கடைந்தால் கீரையின் ருசி மாறாது இருக்கும். தாங்கள் அதற்கு பதிலளித்தமைக்கு மகிழ்ச்சி.

      ஓ. நீங்கள் முள்ளங்கி கீரையை சப்பாத்தி மாவில் கலந்து செய்வீர்களா?இங்கு சமயத்தில் முள்ளங்கியை பொடிதாக துருவி சேர்ப்பேன். அதுவும் ருசியாகவே இருக்கும். தாங்கள் அளித்த தகவலுக்கும் நன்றி சகோதரி.

      அரைக்கீரையிலும் இது போல் செய்திருக்கிறேன். அதுவும் நன்றாக வரும். கீரைகளில் எப்படி வேண்டுமானலும் ரெசிபிகள் செய்யலாம். கீரைகளின் சுவை அப்படி..

      தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. முள்ளங்கிக்கீரையைப் பருப்பு உசிலி செய்யலாம். வெந்தயக்கீரை, பாலக், புதினா, கொத்துமல்லியோடு சேர்த்து வடமாநிலத்தில் செய்யும் பஜியா(தூள் பகோடா மாதிரி) பண்ணலாம். பொரிச்ச குழம்பு, கூட்டுப் பண்ணலாம், சாம்பாரிலும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அடையில் கூடப் போடலாம். (பிடித்தால்)

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்று என் "திங்க"ப்பதிவா? தங்கள் பதிவில் வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க மகிழ்ச்சி. இதை வந்து படிக்கும் அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு பின் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு கீரை வகைகள் எப்போதும் பிடிக்கும் அதிலும் முருங்கை கீரை அதிகம் பிடிக்கும்.

    சாம்பார் படங்களுடன் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் பதிவை குறித்த கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கீரை வகைகள் எப்போதுமே ருசியானவை. தினமும் சாப்பாட்டில், காயுடன் ஒரு கீரையை சேர்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர். ஆனால் இரு தினங்களுக்கு ஒரு முறையாவது கீரையை சேர்த்துக் கொண்டால் நல்லது. நம்மால் அதுவும் இயலவில்லை வாரம் ஒருமுறை என்பது கூட இப்போது அரிதாகி விட்டது.

      தாங்கள் கூறுவது போல் முருங்கை கீரையும் நன்றாக சுவையாக இருக்கும். நான் அதை அதிகம் செய்ததில்லை.

      படங்களுடன் செய்முறை நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. கீரைகள் ஆரோக்கியம் அளிப்பவை...

    இயற்கையின் பொக்கிஷம்...

    கீரைகளுள் எல்லாவகையும் பிடிக்கும் ...
    கீரையைக் கொண்டு பயனுள்ள சமையல் குறிப்பு...

    மகிழ்ச்சி... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மனம் மகிழ்ந்தேன்.

      ஆம்..உண்மைதான்..! கீரை ஒரு ஆரோக்கியமான இயற்கை சத்து மிகுந்த காய்கறி..

      கீரையைக் கொண்டு செய்த பயனுள்ள சமையல் குறிப்பை படித்து கருத்துகள் தெரிவித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்த நன்றிகளும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. கீரை வகைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பதைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் கிடையாது..

    இயற்கையாகவே சிலருக்கு மேனியில் அரிப்பு இருக்கலாம்... அவர்களுக்குக் கீரை வகைகள் ஒத்துக்கொள்ளாது என்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      ஆமாம்.. உண்மை.. இரவில் கீரையை அதிகம் பகல் மாதிரி சேர்த்துக்கொள்ள கூடாது என்பது உண்மை. ஜீரண சக்தியை பாதிக்கும் என்பார்கள். இரவு சாப்பாட்டில், தயிர், கீரை, ஊறுகாய் வகைகள் சேர்க்க கூடாது என பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். இப்போதுள்ள தலைமுறைகள் அதை பொருட்படுத்துவதில்லை.

      இயற்கையாகவே மேனியில் அரிப்பு இருப்பவர்கள் கத்திரிக்காய்தான் சேர்க்கக் கூடாது என கேள்வி பட்டுள்ளேன். கீரையும் என்பது எனக்கு புதிய தகவல்.

      நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

  7. நான் கீரை சாம்பார் செய்யும் போது கீரையை பொடியாக நறுக்கி வைத்து கொள்வேன் அதன் பின் துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து எடுத்து வைத்து கொள்வேன் . முதலில் கடுகு உளுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் போட்டு வதக்குவேன் அதன் பின் தக்காளியை பொடியாக நறுக்கி மேலும் சிறிது நேரம் வதக்கி அதில் கீரையை போட்டு மேலும் சில நிமைடங்கள் வதக்குவேன் அது நன்றாக வெந்தவுடன் அதில் சாம்ப்பார் பொடி மஞ்சள் தூள் மிளகாய் தூள் போட்டு சிரிது நேரம் கழித்து அதில் புளியை கரைத்து ஊற்றி நன்றாக கொத்திதவுடன் அதில் பருப்பை போட்டு உப்பை தேவையான அலவு சேர்த்து நன்றாக கொத்திதவுடன் வறுத்து அரைத்த வெந்தயப் பொடியை சிறிது சேர்த்துவிட்டு கொத்த்மல்லி இலையை அதன் மேல் தூவி கொஞ்சம் கெட்டியான் பதத்தில் இறக்கி அப்பளத்தை சுட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும் இதுதான் எந்து செய்முறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மகிழ்ச்சி நிரம்பிய நன்றிகள்.

      தங்களின் செய்முறையான கீரை சாம்பார் மிகவும் நன்றாக உள்ளது. வெங்காயம், தக்காளி இல்லாமல் நான் இந்த மாதிரி செய்துள்ளேன். தங்கள் முறைப்படி இவை இரண்டும் சேர்த்து செய்தாலும் அமர்க்களமாக இருக்கும். ஒரு தடவை இவை இரண்டையும் சேர்த்து செய்து பார்க்கிறேன். சற்று சுண்ட வைத்த கெட்டியான கீரை சாம்பாருடன் சுட்ட அப்பளம் அருமையான பொருத்தம்... நன்றாக இருக்கும். சுவையான கீரை சாம்பாரில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. தக்காளி, வெங்காயம் சேர்த்துக் கீரையுடன் சப்பாத்திக்குப் பண்ணுவோம்.

      நீக்கு
  8. படங்களுடன் நீங்கள் சொல்லிய சென்ற விதமும் சமையல் குறிப்பும் அருமை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் இந்த பதிவின் வருகைக்கும் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மகிழ்வுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள்.
      உங்களின் உற்சாகமான கருத்துரைகள் என்னை மேலும் எழுத வைக்கும் என நம்புகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. இங்கே எனக்கு மிகவும் பிடித்த கீரை ஸ்பீனஸ் .. இதை அமெரிக்கன் ஸ்டோரில் வாங்கினால் மிகவும் சுத்தப்படுத்தி அரிந்து வைத்திருப்பார்கள் அதனால் சமைக்க மிக எளிது என் பெண் இந்த கீரையை சால்ட்டில் அப்படியே பச்சையாக போட்டு சாப்பிடுவாள் இல்லையென்றால் அதை மிக்ஸியில் போட்டு அவளுக்கு பிடித்த பழம் மற்றும் நட்ஸுடன் அரைத்து ஸ்மூத்தி போல குடிப்பாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /இங்கே எனக்கு மிகவும் பிடித்த கீரை ஸ்பீனஸ் ../

      இது நான் கேள்விபடாதது. இதன் செய்முறையை தாங்கள் விவரித்த விதம் அழகு. பச்சை காய்கறிகள் எல்லாம் உடம்புக்கு நல்லதென இப்போது அனைவரும் சேர்த்துக் கொள்கின்றனர். நீங்கள் சொல்வது போல் பழத்துடன் கீரையை அரைத்து சாப்பிட்டால், பச்சை வாசம் சற்று வித்தியாசமாக இருக்கும். புது மாதிரி உணவு செய்முறைகளை அறிமுகப்படுத்திய தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள். புது விதமான தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. அது ஸ்பெல்லிங் மிசுரேக்கு கமலாக்கா... அது ஸ்பினாஜ் எனப்படும் உங்கள் நாட்டு பாலக் கீரை... அதனை இங்கு சலாட்டாகவும் சாப்பொடுவோம் பச்சையாக.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      ஓ.. அப்படியா? தகவலுக்கு நன்றி.

      பாலக் கீரை பச்சையாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமா? இது வரை அம் மாதிரி சாப்பிட்டதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் அதை பா. பருப்பு சேர்த்து பொரிச்ச கூட்டாக சாப்பிட்டோம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. கீரை சாம்பார் செய்முறை படங்களுடன் , அழகாக உரையாடிக் கொண்டே செய்முறை சொல்லி விட்டீர்கள்.

    வறுத்து அரைத்த சாம்பார் மிக அருமை.

    அரைக்கீரையை நிறைய செய்து அதை கல்சட்டியில் போட்டு கீரை மத்தால் கடைந்து அதில் வத்தக்குழம்பு, அல்லது புளிக்குழம்பு மீதி இருந்தால் சேர்த்து சுண்ட வைத்த சுண்டக்குழம்பு தயிசாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும், தயிர் சாதம் இன்னும் இன்னும் வேண்டும் என்று சொல்வோம் அம்மா கையில் உருட்டி போடும் போது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கீரை சாம்பார் செய்முறை விளக்கங்களை பாராட்டியமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      ஆம் சகோதரி. சுண்ட வைத்த கீரையும், தயிர் சாதமும் அம்மாவோ, பாட்டியோ கையில் உருட்டிக் போடும் போது அவ்வளவு மணக்கும்.கையில் போட்ட சாதத்தின் நடுவில் விரலால் குழித்துக் கொண்டு அதில் கீரை சாம்பாரை ஊற்றி சாப்பிட்ட நினைவுகள் பசுமையாய் மனதில் தங்கி உள்ளது. இன்னமும், வேண்டுமென கேட்டு சாப்பிடுவோம். அந்த நாளை இன்னமும் மறக்க இயலவில்லை. அந்த கல்சட்டியில் செய்யும் சாம்பாரின் சுவையே தனி. அதற்கு ஈடு இணை எதுவுமில்லை.

      தாங்கள் அழகாக கருத்துச் சொல்லியிருப்பது மகிழ்வாக உள்ளது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. // இரவு வைத்த மீந்து போன சாதத்தில், கொஞ்சம் தயிரும். பாலும் கலந்து கெட்டியாக தயிர்சாதம் செய்து கொண்டு இந்த சாம்பாரை துணையாக வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இன்னமும் நிறைய மீந்த சாதம் இருக்க கூடாதா என்ற எண்ணத்தை உருவாக்கும். (அன்றைய தினம் காலை டிபனை கூட மனம் எதிர் பார்க்காது.)//

    வெயில் காலத்தில் சில வீடுகளில் காலை டிபன் வேண்டாம் பழையது வேண்டும் என்று சொல்வார்கள்.

    கீரை சாம்பாரை சுண்ட வைத்தால் கேட்க வேண்டுமா ! அதுவும் வறுத்து அரைத்த சாம்பார் என்றால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      வெயில் காலத்தில் இந்த பழைய சாதத்தில் தயிர் விட்டு சாப்பிட்டால் உடம்புக்கும் நல்லது. எண்ணெய் சேர்த்த உணவு வகைகளை விட இது எளிதில் செரிமானமும் ஆகும். வறுத்தரைத்த சாம்பார் என்பதால் கண்டிப்பாக இரு தினங்களுக்கு கெடாமல் இருக்கும். (செய்யும் அளவை பொறுத்து.) என் கை சற்று பெரிது. அன்றைய தினத்திற்கு தேவையானதை செய்வதில்லையே என குற்றச்சாட்டுகள் என் மீது பாய்ந்து கொண்டேயிருக்கும்.. அன்றைய தினம் கீரையும் என்னுடன் சேர்ந்து குற்றத்தை சமந்தது. ஹா ஹா ஹா.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. முளைக்கீரையின் தண்டை நாரெடுத்து சாம்பாரிலிட்டால்
    வெகு சுவையாக இருக்கும்
    இதற்க்காகவே முளைக்கீரைக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. இரண்டு நாள் உபயோகத்திற்கு ஆச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகையும், கருத்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      ஆம்,.. கீரை மட்டுமின்றி அதன் தண்டுகளையும் சாம்பார் செய்தால்,ருசி மிகவும் சுவையுடையதாய் இருக்கும். அப்படித்தான் மீதமிருப்பதை கொஞ்சம் சுண்ட வைத்துக் கொண்டால் மறுநாளுக்கும் மிக அமிர்தமாய் இருக்கும்.

      தங்களது கீரையின் அனுபவ கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கீரைத்தண்டில் பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு, மோர்க்கூட்டு, மொளகூட்டல் போன்றவையும் பண்ணலாம். சாம்பாரிலும் போடலாம்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மனம் மகிழ்ந்தேன். கீரை சாம்பாரை ருசித்ததற்கு மிகவு‌ம் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகளும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. நிறைய குறிப்புக்களை கற்றுக்கொண்டேன் இங்கே ..நான்லாம் கீரை கிடைச்சா அதை மட்டுமே சாப்பிடுற ஆள் :)புளி கீரை =கோங்குரா 
    கீரையை அரைக்கிறதால் உண்மையில் சுவை மாறிடுது நான் பொட்டேட்டோ masher வைத்து மசிப்பேன் சுமாரா வரும் .

    கீரை தண்டை சுண்டலுடன் சமைப்பது எனக்கு புதிது .இனிமே செய்யப்பார்க்கிறேன் .தண்டுகளை சாம்பாரில் வெட்டி போடுவேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆ இந்த சம்பவம் எப்பூடி இன்று எனக்கு முன்னம் நடந்துது:)).. புளொக்கூட ஆடல்லியே:)) ஓ அதுதான் என் நித்திரை குழம்பியதுபோலும்:) சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு:)).

      //கீரையை அரைக்கிறதால் உண்மையில் சுவை மாறிடுது நான் பொட்டேட்டோ masher வைத்து மசிப்பேன் சுமாரா வரும் .//

      இதே இதே தான் நானும் இப்படித்தான் மசித்து எடுப்பேன்... ஒருதடவை அரைச்சுப் பார்த்தேன்ன்.. யாரும் சாப்பிடவில்லை, உண்மையில் அன்று கொட்டினேன் சாப்பிடாமல்..

      நீக்கு
    2. வணக்கம் ஏஞ்சலின் சகோதரி.

      தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சி.

      கீரையை நிறைய போட்டுக்கொண்டு சாதத்தை கம்மியாக்கி சாப்பிட்டால் வயிறு ரொம்பும். உணவின் சத்துக்களும் உடலுக்கு நல்லது. தங்களுக்கு தெரியாததா? ஆனால், பகலில் சேர்ப்பது மாதிரி இரவில் அதிகம் கீரை உண்டால் சிலருக்கு செரிமான பிரச்சனை வரும். (எனக்கு கண்டிப்பாக)
      கீரையை உப்பிட்டு நன்கு வெந்த பின் மத்தால் கடைந்தால் நன்கு மசித்து ருசியாக இருக்கும்.

      கீரையை மூடாமல் வேக வைக்க வேண்டும். அதில் இருக்கும் உடலுக்கு தேவையற்ற சத்துக்கள் ஆவியில் வெளியேறி விடும். இதை என் பதிவில் எழுத மறந்து விட்டேன். அதனால்தான் குக்கரில் கீரையை வேக வைப்பதை தவிர்க்க வேண்டும்.

      பெரிதாக கிடைக்கும் தண்டுகளை பொடிதாக நார் நீக்கி அரிந்து தனியாக வேக வைத்தபின் நாம் சுண்டலுக்கு பயன்படுத்தும் கடலை வகைகளை குக்கரில் வழக்கப்படி ஊற வைத்த பின் வேக வைத்து சேர்த்து தாளித்து கீரை சுண்டலாக சாதத்துடனோ இல்லை தனியாகவோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.

      தாங்கள் கூறியபடி சாம்பாரில் இரண்டு கத்திரிக்காயுடன் கீரை தண்டுகளையும் சேர்த்து போட்டு சமைத்தாலும் ருசியாக இருக்கும்.

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

      நான் கீரை தேர்வு செய்ய வியாபாரியிடம் பேசிய சத்தத்தில் பிளாக் ஆடலை போலும். ஆனாலும் தாங்கள் எழுந்து வந்து (கீரை வாசத்தில்) கருதிட்டமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.

      கீரையை அரைத்தால் சரிவர வருவதில்லை சகோதரி. உப்பிட்ட பின் நன்றாக வெந்ததும் தாங்கள் கூறியபடி மசித்தால் நன்றாக வரும்.

      நித்திரை குழப்பத்திலும் எழுந்து வந்து தந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. என்னாது? சரித்திரக்கதைப் புகழரசியா? பொன்னியின் செல்வனை முதல்லே முழுசாப் படிச்சு முடிங்க அதிரடி. அப்புறமாப் பெயர் சூட்டிக்கலாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P

      நீக்கு
  16. இன்று கமலாக்கா ரெசிப்பியோ.. அதுதான் ஒரே கீரை விக்கிற சத்தமாவே இருக்கே ஆரது என எழும்பி வந்தேன்..

    அது என்ன தெரியுமோ இன்று எங்களுக்கு ஸ்கூல் இல்லை, ஹொலிடே:)).. ஆனாப் பாருங்கோ ஹொலிடேயை எஞ்சோய் பண்ணலாம் எனப் பார்த்தால் காரணமில்லாமல் தலை இடிக்குது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Angel9 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 2:16
      grrrrr//
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஉ மீ குல்ட்டுக்குள் இருக்கிறேனாக்கும்:)) உங்களுக்கு ரைம் ஆச்சு கெதியா வெளிக்கிடுங்கோ:)).. அதிராவுக்கு லீவு இண்டைக்கு கும்மி போடப்போறா என அஞ்சுவுக்கு வேர்க் போக மனமில்லை:)) சிக் போட்டாலும் போட்டிடுவா.. மீ விட மாட்டேனக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      https://www.cartoonmemes.in/tom_and_jerry/sleeping/Tom-jerry%20Sleeping%20Night%20Reactions%20(107).jpg

      நீக்கு
    2. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஆகா.. நான் இங்கு கீரை விற்ற/வாங்கிய சத்தத்திற்கு தங்களுக்கு தலையிடி வந்து விட்டதா? என் வாய்ஸ் அவ்வளவு உரத்ததில்லையென எங்கள் உறவுகள் மத்தியில் புகார்கள் வந்து கொண்டேயிருக்குமே ! அதைப் பொய்யாக்கி விட்டீர்களே! ஹா ஹா ஹா.

      நாளை தானே இங்கெல்லாம் பள்ளி விடுமுறை. உங்களுக்கு இன்றேவா? என்ஜாய் பண்ணியாச்சா? வாழ்த்துக்கள்.

      கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. கீரையில்தான் எத்தனை வகை.. அத்தனையும் ஒவ்வொரு சுவை. ஊரில் இருந்தபோது அனைத்தும் கிடைத்தது.. இப்போ எதுவும் கிடைப்பதில்லை. எப்போதாவது தண்டுக்கீரை கிடைக்கும்.

    ஆனா இம்முறை ஹொலிடேயில் அங்கு நம்மவர் எல்லோர் வீட்டிலும் முளைக்கீரையும், மணத்தக்காளியும் படர்ந்து வளர்ந்திருந்தது.. ஆசைக்கு சாப்பிட்டாச்சு.. ஆனா இப்போ நினைக்க ஆசையாக இருக்கே.

    முளைக்கீரைக்கு மாங்காய் சேர்த்துச் சமைக்கும்போது சுவை அதிகம்.

    //அரைக்கீரையோ முளைக்கீரையோ//

    இது கமலாக்கா அறக்கீரை எனத்தான் வரும் என நினைக்கிறேன்.. ஹையோ நெல்லைத்தமிழன் ஏன் ஒளிச்சிருக்கிறார்ர்.. சே..சே ஜண்டைப்பிடிக்கவும் ஆள் இல்லாமல் இருக்கே இப்போ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறக்கீரை//

      noooo it is அரைக்கீரைஅரைக்கீரை அரைக்கீரை

      நீக்கு
    2. https://i.ytimg.com/vi/XVO9CS8D4hQ/hqdefault.jpg

      நெல்லைத்தமிழன் புரொபிஸரே..:)) இப்போ வேலையோ முக்கியம்:)) உடனடியாக எங்கள் புளொக்கில் லாண்ட் ஆகவும்:)).. கவனம் பார்த்து கமலாக்காவின் கீரை டிஸ் மேல் லாண்ட் ஆகிடாதீங்கோ அவசரத்தில.. ஹா ஹா ஹா பிறகு அதுக்கும் சேர்த்து மீதான் திட்டு வாங்க வேண்டி வரும்:))

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும் கருத்துக்களும் என்னை மிகவு‌ம் உற்சாகப் படுத்துகிறது.

      விடுமுறையில் வீட்டில் வளர்ந்த கீரைகளை ஆசை தீர சமைத்து சாப்பிட்டீர்களா? சந்தோசம். ஆனாலும் கீரை வகைகள் மறுபடியும் சாப்பிடும் ஆசையை உண்டாக்கும் அல்லவோ!

      நீங்கள் முளைக்கீரைக்கு மாங்காய் சேர்த்து பண்ணுவீர்களா? ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறீர்களா? இல்லையெனில் அந்த ரெசிபியை எங்களுக்கு பகிரலாமே!

      பதிவில் சொற்பிழை, பொருட்பிழைகளை கண்டு கொள்ள வேண்டாம். நெல்லைத் தமிழர் வடநாட்டு பயணத்தில் இருப்பதாக கேள்வி. பாவம் அவர். இதை கேள்விபட்டால், பொங்கியெழுந்து நக்கீரராக வரப் போகிறார்.ஹா.ஹா.ஹா.

      வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. இனி எந்த யுகத்தில் முளைக்கீரை என் கண்ணில் படுமோ தெரியாதே கமலாக்கா .. அநேகமாக அடுத்த யூலையில் தான் கிடைக்கும் வாய்ப்பு இருக்கு. கிடைத்தால் செய்து போடுகிறேன்.. அதன் சுவையோ தனி.

      இன்னொன்று நாங்கள் கீரை வகைகளுக்கு எப்பவுமே பழப்புளி சேர்ப்பதில்லை.. எப்பவும் தேசிக்காய்தான் சேர்ப்போம்ம்.. சில சட்னியாக அரைக்கும் கீரைகளுக்கு தேசிக்காய் இல்லை எனில் பழப்புளி சேர்ப்பதுண்டு, ஆனா வீட்டில் தேசிக்காய் இல்லை எனில், அன்று கீரை சமைக்க மாட்டோம்.

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      முளைக்கீரைக்கு ஏன் யுகமாய் காத்திருக்க வேண்டும்? அங்கு தாங்கள் இருக்குமிடத்தில் கீரை வகைகளுடன் கிடைக்காதோ?

      தேசிக்காய் என்றால் மாங்காயா? சட்னி யாய் அரைக்கும் கீரையென்றால், கொத்தமல்லி தழைகள், புதினா கறிவேப்பிலை போன்றவையா? எப்படியோ அவரவர் ருசிகளின்படி கீரை சேர்த்தால் உடலுக்கு நல்லது இல்லையா? தங்கள் கருத்துக்கள் மூலம் உடனுக்குடன் பேசிக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தங்கள் வேலைகளின் நடுவிலும், வந்து படித்து உடன் கருத்திடுவதற்கு ரொம்ப நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. கீரை சமைக்கும் விதங்கள் நிறையச் சொல்லிட்டீங்க. பசளிக்கீரைக்கு பருப்பு சேர்ப்போம். இந்த பாலக்/ஸ்பினாச் க்கு நான் எப்பவும் புரோக்கோலி அல்லது வாழைக்காய் சேர்ப்பேன்ன்... ஏனெனில் அது தண்ணித்தன்மை என்பதால், இதில் ஒன்றை சேர்க்கும்போது கட்டியாக வரும்... எங்களுக்கு கீரை எனில் தளதளப்பாக அல்லது கட்டியாக இருக்கோணும்.. தண்ணியாக இருப்பது பிடிப்பதிலை.

    சரி இனி கமலாக்காவின் குறிப்புக்கு வாறேன்.

    பதிலளிநீக்கு
  19. கீரையில் சாம்பார்.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது.. பொறுமையாக அழகாக செய்து காட்டிவிட்டீங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கள் கண்டும் மகிழ்வு எய்தினேன்.

      கீரை சாம்பார் கண்டு வித்தியாசமாக இருக்கிறது என பாராட்டுகள் அளித்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம்.  காலை அந்த நேரத்துக்கு வரமுடியவில்லை! 
    கமலா அக்கா ஆரம்பித்திருக்கும் ஜோரே மேலே படிக்க வைக்கும்.  ஆரம்ப வரிகளைதான் பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      தங்களின் வலைப்பக்கம் என் பதிவை பகிர்ந்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதற்கு முதலில் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்களின் பாராட்டிற்கும், முகநூலில் ஆரம்ப வரிகளை பகிர்ந்த செய்திக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. கீரையில்  நாங்கள் சாம்பார் அதிகம் செய்வதில்லை. எப்போதாவது வெந்தயக்கீரை போட்டு சாம்பார் செய்திருக்கிறோம்.  இந்த முறையில் செய்து பார்க்கச் சொல்லி பாஸிடம் மனு கொடுத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதோ ஸ்ரீராம்?:)

      நீக்கு
    2. கேட்டேன்.

      பரிசீலிக்கப்படுமாம்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      கீரையில் சாம்பார் செய்வதற்கு தங்கள் பாஸிடம் மனு கொடுத்தமைக்கு தங்களுக்கும், தங்கள் பாஸிற்கும் என் மனம் மகிழ்வான நன்றிகள். மனு பரிசீலிக்கப்படும் என்ற தகவலுக்கும் சந்தோஷத்துடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  22. நல்லதொரு குறிப்பு... இதன் இணைப்பை எனது துனணவியாருக்கு அனுப்புகிறேன்...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களும் கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன்.

      நல்லதொரு குறிப்பு என்று நீங்கள் இன்றைய கீரை சாம்பாரை ரசித்ததற்கும்,தங்கள் துணைவியாருக்கும் இந்த இணைப்பை அன்புடன் அனுப்புவதற்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      தங்கள் அனைவரின் ஊக்கமும், உற்சாகமும் தரும் பதில்களில் என மனம் சந்தோஷமடைகிறது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  23. வித்தியாசமான குறிப்பு. கீரைகளைப்பற்றிய அலசல் மிகுந்த சுவாரசியமாக இருந்தது. முருங்கைக்கீரையை மட்டும் விட்டு விட்டீர்கள்.

    நான் கீரை சாம்பார் அடிக்கடி செய்வேன். சாதரணமாக சாம்பார் செய்வது போலத்தான். கடுகு, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி புளி கரைத்த நீர் விட்டு கொதித்ததும் வெந்த பருப்பு சேர்க்கும்போது தான் கீரையை சேர்ப்பேன். உப்பையும் சேர்த்து விட்டால் ஒரு கொதியில் கீரை வெந்து விடும். பச்சை நிறமும் மாறாமல் இருக்கும். பிறகு சாம்பார் பொடி தூவி, ஒரு கரண்டி நெய் விட்டு, சிறு தீயில் ஐந்து நிமிடம் அவ்வளவு தான். ஊரில் முருங்கைக்கீரை கிடைத்தால் செய்வேன். இங்கே எப்போதும் பாலக் சாம்பார் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      தங்களின் கீரை சாம்பார் செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. நான் எப்போதும் கீரை வகைகளுக்கு வெங்காயம் சேர்த்ததில்லை. பதிவில் அனைவரும் பகிர்ந்ததிலிருந்து வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்குமென்று தெரிகிறது. அடுத்த முறை இதே பாணியில் செய்து பார்க்கிறேன். அதுபோல் முருங்கை கீரையும் அதிகமாக சேர்த்ததில்லை. அதனால் அது மறந்து விட்டது. அது வாயு சம்பந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்குமோ என்ற சிறு சந்தேகம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      இந்தப் பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கீரை சாம்பார் சுவைக்கின்றது.

      கீரைதண்டு மோர்குழம்பு,கீரைபுட்டு,எங்கள் வீட்டில் பிடிக்கும்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      ஓ. ஆமாம்.. கீரையில் மோர் கலந்து மோர்குழம்பாக (மோர் கீரை என நாங்கள் சொல்லுவோம்) செய்யலாம். அதையும் என் பதிவில் குறிப்பிட மறந்து போனேன். இப்போது ஞாபகபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள். கீரைப்புட்டு என்பது தெரியாது. அதை கொஞ்சம் விரிவாக கூறுங்களேன்.

      பதிவுக்கு வந்து கருத்து இட்டமைக்கும், சுவையாக உள்ளதென பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. கீரைபுட்டு எனது பழைய பகிர்வில் தந்திருக்கிறேன்.முடிந்தால் பாருங்கள்.

    புட்டுமாவுடன்பச்சைமிளகாய்,வெங்காயம்,கீரை,தேங்காய்துருவல் கலந்து அவித்து எடுத்துக் கொள்வது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!