புதன், 2 அக்டோபர், 2019

புதன் 191002 : அன்றைய நடிகைகளும் இன்றைய நடிகைகளும்



ஏஞ்சல் :

1)  இந்த உணவைத்தான் உண்ண வேண்டும் என்று நம்மை செய்ய முடிவெடுக்க தெரிவு செய்ய வைப்பது எது ?





மணம் ருசி இவை பற்றிய அனுபவத்துடன் பர்ஸிலிருக்கும் பணம்

ருசி பசி . வேறென்ன? 

2)   நாம் உண்ணும் உணவு நமது மனதின் இயல்பை மெண்டல் ஹெல்த்தை கட்டுப்படுத்துமா ?


$  பண்ணும்

#  மனதின் இயல்பு உடலின் நலத்தின்பாற்பட்டது. உடல்நலம் உணவு சார்ந்தது.

*  மனதின் இயல்பு உணவை முடிவு செய்யலாம்!


3) ஒரு அறையில் அமர்ந்திருக்கும்போது எங்கிருந்தோ நமக்கு பிடித்த உணவின் சுவை நாசியை துளைக்கும் :) அதை உணர்ந்திருக்கிறீர்களா ?


$  நிறைய சமய(ல்)ங்களில்.

#  பிடித்ததன் மணம் கவர்வதையும்,  வெறுப்பதன் வாடை சுளிக்கச் செய்வதையும் உணர்ந்திருக்கிறேன்.   " அடுத்த வீட்டில் கருவாடு பொசுக்கல்"

*  பிடித்த உணவின் பெயரை யாராவது சொல்லும்போதே அதன் மணம் மனதிலும், சுவை நாக்கிலும் வந்து போகிறதே,  கவனித்திருக்கிறீர்களா?

4) இப்போதும் எனக்கு நான் சமைக்காத கருணைக்கிழங்கு /சேனைக்கிழங்கு பொரியல் வாசம் வருகிறது :) இதன் காரணம் என்ன ?முக்கியக்குறிப்பு எங்க வீட்டருகில் இந்தியர்களே இல்லை ஆனாலும் பொரியல் வாசனை சுத்தி சுத்தி வருது ?


$  பக்கத்தில் மீன் சமைக்கிறார்களோ

#  பிரமை.
5) ஊடங்கங்கள் பேயை கூட தேவதையாகவும் தேவதையைக்கூட பிசாசாகவும் காட்டக்கூடியவை என்பது உண்மையா ?

#   உண்மை. உத்யோக தர்மமும் கூட.

*  இல்லை என்கிறீர்களா?

6)  தற்காலிகமா தப்பிப்பதற்கு பொய் சொல்லி வசமா மாட்டியுள்ளீர்களா? 





$  பல சமயங்களில்.

#  நான் சாமர்த்தியக் குறைவான பொய்களை சொல்வதில்லை. (இதுவும் ஒரு உதாரணம்.)


7) அரிஸ்டாட்டில், பிளேட்டோ, சாக்ரடிஸ் எல்லாருமே தத்துவ ஞானிகள்தான்.  ஆனா மகிழ்ச்சி சந்தோஷம் இது குறித்து வெவ்வேறு பார்வைகள் இருக்கே இவர்களை போன்ற தத்துவ ஞானிகளுக்கு?  அது ஏன் ?



$  அவரவருக்கு வெவ்வேறு சந்தோஷங்கள்..

#  தத்துவம் என்றாலே இருக்கும்- உணரும் உண்மை அல்ல என்பதுதானே. வேறு வேறு நபர் - வெவ்வேறு கருத்து.   அவ்வளவு தான்.

8) இந்த கேள்வி என்னை குடைஞ்சிட்டே இருக்கு கொஞ்சம் நாளா :) பட்டுப்புடவை ப்ளஸ் டாட்டூ இந்த காம்பினேஷன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? காது மூக்கு குத்துவது போலத்தான் இதுவும்னு சிலர் சொல்றாங்க ஆனாலும் பெர்மனன்ட் டாட்டூவை ஏற்க மனம் தயங்குகிறது .இதன் காரணமென்ன ? 





$  நான் கூட உங்களை மாதிரிதான்.  டாட்டூ பிடிக்காது..கிரிக்கெட் வீரர்கள் மேனியில் கூட..

#  எனக்கும் டாட்டூ அசட்டுத்தனம் என்றுதான் தோன்றுகிறது. என்ன பயன்? 

9)  அழகின் இலக்கணம் அழகு பற்றிய எண்ணம் கருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதன் காரணமென்ன ?சிலருக்கு தமன்னாவும் சிலருக்கு பாவனாவும் சிலருக்கு அனுஷ்காவும் மட்டும் அழகோ அழகா தெரிவதன் காரணம் என்ன ?





#  அழகு என்பதும் ஒரு அபிப்பிராயம் தான். எனவே..




*  அனுஷ்கா அழகாய்த் தெரிவதற்கு ஆவியும் காரணம்!


10)  பெண் குழந்தைகள் அப்பாவிடம் அதிக பாசமுடன் இருப்பதன் காரணமென்ன ? (இது கொஞ்சம் பொற்ற்றாமையுடன் வந்த கேள்வி :)


#  வல்லுநர்கள் இதை இயல்பான பாலினக் கவர்ச்சியின் வெளிப்பாடாகச் சொல்வர்.               

           
 வாட்ஸ் அப் கேள்விகள் : 

நெல்லைத்தமிழன் : 

 1. அதிகமா கணிணி, மொபைல் உபயோகிப்பதால் கண் பார்வை மங்குகிறதா இந்த ஜெனெரேஷனில்?   

$ நீல ஒளி அதிகம் இருக்கும் எந்த வெளிச்சத்திலிருந்தும் சிவப்பு மஞ்சளுக்கு மாறினாலோ சாலையில் ஒளிரும் சோடியம் விளக்கு வெளிச்சத்திலிருந்து நீல வெளிச்சத்துக்கு மாறினாலோ சற்று நேரத்துக்கு பார்வைக்குறைவு வந்தமாதிரி தோன்றுவது சகஜம்.

கணினி உபயோகிப்போர் அவ்வப்பொழுது துறையிலிருந்து பார்வையை அகற்றி இயற்கை வெளிச்சத்தில் காட்சிகளை பார்த்தால் கண்கள் சோர்வடைவதைத் தடுக்கலாம் என்கிறார்கள். மொபைலை இரவில் உபயோகிக்கும் night mode இல் போட்டால் கண்கள் கூசாமலிருக்கும். நீல நிற வெளிச்சம் குறைக்கப் படுகிறது.

#  அதிக நேரம் கணினி அல்லது கைபேசி திரையை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது  வேறு என்ன விளைவுகள் வருகிறதோ இல்லையோ நிச்சயமாக கண் களைப்பு சலிப்பு வரத்தான் வருகிறது.  இது இந்த ஜெனரேஷன் அல்ல எந்த ஜெனரேஷன் ஆனாலும் எல்லாருக்கும் பொதுவானது தான் -

*  தூக்கத்தையும் பாதிக்கிறதாம்.


2. நீங்க சாப்பிட்டீங்களா, எப்படி இருக்கீங்க என்பதுபோன்ற நம்மைப் பற்றி விசாரிக்கும் கேள்விகளையே யாரும் கேட்கவில்லைனா,  நம் இருப்பே யாருக்கும் இம்பேக்ட் இல்லைனா, வாழ்வதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?   

$ நம்மை யாராவது விசாரிக்க வேண்டும் என்ற எண்ணமே சுய பச்சாதாபத்தின் எதிரொலி என்கிறார்கள்

#  வாழ்வின் பொருள் என்பது குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பது, சமூகத்திற்கு சேவை செய்வது, கடவுளுக்கு வணக்கம் தெரிவிப்பது என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 

அல்லது ஓவியம் இசை போன்ற கலைகளை உருவாக்குவது, இல்லாவிட்டால் ரசிப்பது , இதுதான் வாழ்க்கைக்குப் பொருள் கூட்டுகிறது என்று பலர் நினைக்கிறோம்.  இவை எந்த அளவு உண்மையானவை என்று எளிதாக சொல்ல முடியாது.  தனிமையை விரும்பி வேண்டி தவம் செய்து வாழ்க்கையின் சவால்களுக்கு விடை காண முயன்றோரும் வெற்றி பெற்றனரா என்பது தெரியவில்லை. வாழ்வின் பொருள் அல்லது வெற்றி என்பது  தனி நபர் கருத்தாகத்தான் இருக்கிறது.

*  இப்படி எதிர்பார்க்கும் நபர்கள் எத்தனைபேர் மற்றவர்களிடம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டிருப்பார்கள்?  

3.  இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எதை வைத்து நாம் முடிவு செய்யறோம்? 




$ சில இடங்களில் அவரால் நமக்கு ஏற்பட்ட நன்மை தீமைகளை வைத்தும் சில நேரங்களில் நம்மைக் கண்டிக்கவில்லை என்பதாலும்.

#  நல்லவர் கெட்டவர் என்பது நம்  விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துதான் இருக்கிறது .

*  நம்மை பாதிக்காத வரை எல்லோரும் நல்லவரே...!


 4.  இப்போதுள்ள நடிகைகள், இதற்கு முந்தையவர்களைப்போல் மனதில் நிற்கிறார்களா? (இது என் சந்தேகம் இல்லை. உங்களுக்கும் அ, த, பா  படங்கள் போட வாய்ப்பாகவும் எடுத்துக்கலாம்)

#  ஆம் -  அவர்களை ஆராதிப்பவர்களுக்கு.

*  முந்தையவர்கள் எல்லோரும் மனதில் நிற்கிறார்களா?
  
5.  மற்ற விலங்குகளின்மீது (பூனை, நாய்....) ரொம்ப அன்பு செலுத்தறவங்க, அவங்க அந்த அன்பு மனிதர்களிடத்தில் இல்லை என்பதால் செலுத்தறாங்களா? 




#  இதற்கு விலங்குகளை அன்பாக நேசித்து வளர்ப்பவர்கள் மட்டுமே பதில்   சொல்ல முடியும்  .  எனக்கு அந்த அனுபவம் இல்லை .




$  பிராணிகளிடத்தில் அன்பு என்பதற்கு பின் பல எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களை உண்டு.

*  இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் என்று நினைக்கிறீர்களா?  

6. கடல்ல போட்ல போயிருக்கீங்களா - நல்ல தூரத்துக்கு... 1 கிலோமீட்டர் கரையிலிருந்து.




#  பஹ்ரைன் சென்றபோது இந்த இனிய அனுபவம் கிடைத்தது.

$ கடலுக்குள் கட்டுமரத்திலேறி சுமார் ஒரு மைல் தூரம் மீனவ நண்பர்களுடன் போயிருக்கிறேன்.

*  விவேகானந்தர் பாறைதான் அதிக பட்ச படகு அனுபவம்!


7)  இந்தக் கடவுள் (அதாவது ஒரு கோவிலில் உள்ள) ரொம்ப சக்தி வாய்ந்தவர் என்று சொல்வதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? அது ஒருவேளை பிரதிஷ்டை செய்யும்போது எல்லாவற்றையும் சரியாகச் செய்ததினாலும் அங்குள்ள யந்திரங்களினாலும் இருக்குமா?



#  (கடவுள் - கோயில் மகத்துவம்)  மிகவும் கனமான விஷயங்களில் கருத்து சொல்ல நாம் தகுதியுள்ளவரா  என்று ஆராயாமல் பதில் சொல்ல முயல்கிறேன் .

இந்த சக்தி பலன் யாவும் அந்தக் கோயில் அமைப்பின் கம்பீரம் பிரமாண்டம், அழகு, வழக்கத்தினின்று வேறுபடும் தனித்துவம், அங்கு குவியும் மக்கள் தொகை காணிக்கை அவர்களின் நம்பிக்கை இவற்றின் அளவு இவைகளால் ஏற்படுபவை. மற்றபடி மந்திரம் எந்திரம் இதெல்லாம் ஒரு தந்திரம்.

*  சிலருக்கு நிறைவேறும் ப்ரார்தனைகளால் பலருக்கு உண்டாகும் ஆசைகள்!


156 கருத்துகள்:

  1. வாழ்க நலம்...
    அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்.   வணக்கம்.  எழுத்தெல்லாம் பளிச்சென்று தெரிகிறதே... புது போன் மகிமையோ?

      நீக்கு
  2. பதில்கள்
    1. வரவு நல்ல உறவு...!   நல்வரவு அனைவருக்கும்.

      நீக்கு
    2. >>> வரவு நல்ல உறவு... <<<

      வரவு என்று வரவைத் தானே சொல்கிறீர்கள்!...

      ஆமாம்!... அதுவாகத் தான் இருக்க வேண்டும்!...

      நீக்கு
  3. ரசனையான பதில்கள்

    //நம்மை பாதிக்காத வரை எல்லோரும் நல்லவரே...//

    இதுதான் யதார்த்தமான உண்மை. எல்லோரும் எல்லோருக்கும் நல்லவர் அல்லர்!

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம். இன்று கொஞ்சம் முன்னரே
    எங்கள்ப்ளாக் உதித்து விட்டது.
    வாசனை பற்றிய கேள்விகள் எனக்கும் உண்டு.
    சிலசமயங்களில் மட்டும் மல்லிகை மணம்
    எனக்கு வரும். உணவு மணம் வந்ததே இல்லை.

    அந்த மணம் வந்தால் மனம் சந்தோஷமாக இருக்கும்.
    கேள்வி கேட்டவருக்கும் பதில்கள் சொன்னவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா..    வாங்க..   வாங்க...  மல்லிகை மணம்...  நாம் மனதில் நினைப்பவற்றை மனம் எடுத்துக்காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் அனைஅருக்கும்..

    நான் அப்பவே குதிச்சாச்சு இங்கதான் இருந்தேனாக்கும்...அதனால நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ...கவரிமான் வந்து பார்த்துக்கட்டும் நாளையிலிருந்து துரை அண்ணாவோடு நானும் முட்டி மோதி வந்துருவேனே ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  இனிய காலை வணக்கம்.

      நீங்க மாஞ்சு மாஞ்சு கேவாபோ வில் பதில் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டே நான் மற்ற தளங்களில் சுண்டல் வாங்கிக்கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அப்ப சுண்டல் பதிவு இருக்கா ஆஹா போகணுமே...

      ஆமாம் கே வா போக்கு நேற்று அப்புறம் கருத்து பார்க்கலையே...கையைக் கட்டிக் கொண்டுவிட்டேனே.!!!!!!!!!!!!!!!!!!!! பதில் கொடுக்கவில்லையே அதான்...

      இன்னிக்கும் இங்கு பார்த்தால் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியலையேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் எங்கு சுண்டள்? கீதாக்கா சுண்டல் தரலையே....இன்னும் மோதியே வரவில்லையே!! அந்த கேப்ல சுண்டல் செஞ்சுட்டாங்கனு பார்த்தா....

      வல்லிம்மாவா? பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
    4. நவராத்திரிக் காலம் என்பதால் சுண்டல் என்று சொன்னேன்.  பின்னூட்டம்தான்!   ஆனால் வல்லிம்மா வடை செஞ்சு வச்சிருக்காங்க...

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கீதா:)) நேற்று என்னால ஜம்ப் பண்ண முடியாமல் போச்சு.. இப்போ குளிர் தொடங்கிட்டமையால கொஞ்சம் நித்திரை ஓவரா வருதே:))

      நீக்கு
  6. நல்லவரா கெட்டவரா கேள்வி தேவையானதுதான்.
    எல்லோருக்கும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது.

    தியாகம் படம் சிவாஜி பாட்டே சொல்லும். நல்லவர்க்கெல்லாம் சாட்ச்கிகள் உண்டு
    ஒன்று மனசாட்சி.
    மனம் அறிந்து ஒருவரை வருத்தினால்
    அவரை மதிக்க முடியாது.

    பாம்புக்குக் கூட அவ்வப்போது சீறிக் கொண்டிருன்னு
    ஒரு ரிஷி அறிவுரை சொல்வார்.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா... சிவாஜி படம் ஏன் என்று கேட்பார்கள் என்று பார்த்தேன்.   பொசுக்கென்று கண்டுபிடித்து விட்டீர்கள்!  இயல்பு மாறினால் அது அதுவாக இருக்காதுபோலும் - எதுவும்!

      நீக்கு
    2. பாம்புக்குக் கூட அவ்வப்போது சீறிக் கொண்டிருன்னு
      ஒரு ரிஷி அறிவுரை சொல்வார்.:)//

      ஆமாம் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லிய கதைகளிலும் ஒன்று உண்டு....

      கீதா

      நீக்கு
  7. அனைத்துக் கேள்விகளும் அதற்கான ஒவ்வொரு பதிலும் அருமை...ஒவ்வொரு கோணத்தில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. 2) நாம் உண்ணும் உணவு நமது மனதின் இயல்பை மெண்டல் ஹெல்த்தை கட்டுப்படுத்துமா ?//

    ஆஹா! கேள்வியின் நாயகியே இது நீங்க யாருக்கு செக்கா இருக்கீங்களோ அவங்க அதான் நம்ம அறிவானந்தி, ஞானி பூஸானந்தாகிட்ட கேட்டிருக்கோணும். அவரைப் பாருங்க அவங்க இந்தக் கேள்விய அவங்க குருகிட்ட கேட்டு அவரையே கன்ஃப்யூஸ் பண்ணிட்டாங்க..பாருங்க

    https://www.sciencealert.com/images/articles/processed/chimp_eating_close_up_600.jpg

    கன்ஃப்யூஸ் ஆகி ஏதோ லெக்சர் கொடுத்து அப்புறம் ரகசிய லெசன் பாருங்க...!!!!!!!!!!!

    https://janegoodall.ca/wp-content/uploads/2017/08/chimp_throwing_rock_corbis.jpg

    https://thumbs-prod.si-cdn.com/8XtHcYnFTEqeDkH2o5d-woVE3dY=/800x600/filters:no_upscale()/https://public-media.si-cdn.com/filer/a9/67/a9677bab-825f-4a72-a8e9-e59e74d9595f/42-64791021.jpg

    https://janegoodall.ca/wp-content/uploads/2017/01/Ngambaisland2006-40.jpg இதுல நம்ம ஞானியும் இருக்காங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. செல்லங்கள் செம அழகு..!!!!

    //இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் என்று நினைக்கிறீர்களா?//

    பதிலை மிகவும் ரசித்தேன்... எல்லா உயிர்களையும் எனும் போது மனிதர்களும் அதில் அடக்கமாகிடுமே...நேசிக்கலாமே...

    கீதா

    இந்த பதிலை

    பதிலளிநீக்கு
  10. நல்லவர் கெட்டவர் என்பது நம்  விருப்பு வெறுப்புகளைப் பொறுத்துதான் இருக்கிறது .//

    மிகவும் சரியான பதில்.பலருக்கு கெட்டவர்களாக தெரிகிற அரசியல் தலைவர்கள் அவருடைய கட்சி தொண்டர்களுக்கு தெய்வமாக தெரிவதில்லையா அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  11. //நம்மை பாதிக்காத வரை எல்லோரும் நல்லவரே...// உண்மை. என்னடா இவர்கள் என்ற சலிப்பு வருவதை தவிர்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயம் நினைப்பது எல்லாவற்றையும் சொல்லிவிட முடிவதில்லைதான். நன்றி சகோதரி மாதேவி.

      நீக்கு
  12. பதில்கள் அட்டகாசம். சுவாரஸ்யம் மட்டுமல்ல, நியாயமாகவும் இருந்தன. 

    பதிலளிநீக்கு
  13. //இப்போதும் எனக்கு நான் சமைக்காத கருணைக்கிழங்கு /சேனைக்கிழங்கு பொரியல் வாசம் வருகிறது :) இதன் காரணம் என்ன ?// 
    இதைப்பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் உருளைக்கிழங்கு வேகா வைக்கும் வாசனை வந்தால் அருகில் பாம்பு இருக்கிறது என்று கூறுவார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா ஆமாம் உ கி வேக வைக்கும் வாசனை அல்லது உளுத்தம் பருப்பு ட்ரையாக வறுக்கும் வாசனை வந்தால் அங்கு அருகில் நல்லபாம்பு இருக்கிறது என்று சொல்வாங்க எங்க ஊர்ல. நாங்க எங்க ஊருக்கு அப்பல்லாம் பல சமயத்துல பஸ் வராது. அப்ப முக்காமைல்ரோடுனு மெயின் ரோட்டிலிருந்து ஊருக்குப் பிரியின் ரோடு நடந்து வரும் போது வாசனை பல இடங்கள்ல செமையா அடிக்கும்...அதுவும் ஒரு பக்கம் மரங்கள் செடிகள் புதர்... ரோடு உயரமாக இருக்கும் அச்சரிவில் வயல்கள்...மறுபுறம் பெரிய வாய்க்கால்...ரோட்டோடு வரும் ஊருக்குள் வந்து அதையும் கடந்து பக்கத்து கிராமங்களுக்குச் செல்லும்....அந்தப் பாதையில் பாம்புகள் அதிகம் அதுவும் நல்ல பாம்பு முதல் பச்சை, வீரியன்கல், சாரை என்று இருக்கும்...வீட்டருகிலும் கூட பின்பக்கம் எல்லாம் வயல்கள் என்பதால் எல்லா வகையும் உண்டு அப்போ...

      கீதா

      நீக்கு
    2. உளுத்தம் வாசனை, அல்லது சுட்ட அப்பளம் வாசனை வந்தால் கட்டு விரியன் இருக்கிறது அங்கே என்று சொல்வார்கள்.

      நீக்கு
  14. //கடல்ல போட்ல போயிருக்கீங்களா - நல்ல தூரத்துக்கு... 1 கிலோமீட்டர் கரையிலிருந்து.//
    ஆஹா! மஸ்கட்டில் இருந்த பொழுது, கண்டாப் பீச் செல்லும் பொழுதெல்லாம் போட்டிங் செல்வோம்.  அங்கு இன்னொரு பீச் இருக்கிறது.(பெயர் நினைவுக்கு வரவில்லை) அங்கு பீச்சிலிருந்து மூன்று கிலோ மீட்டர் படகில் சென்றால் கடலுக்கு நடுவில் ஒரு சிறு குன்று இருக்கும். அங்கு சென்று, கையில் கொண்டு சென்றிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, தம்போலா விளையாடிவிட்டு வருவோம். ஒரு முறை இஸ்கான் குழுவினரோடு சென்ற பொழுது அங்கு பஜனை, பாகவதம் படித்தால் போன்றவை படித்து விட்டு வந்தோம். 
    சிதாப் என்னும் இடத்திலிருந்து நடுக்கடலில் டால்ஃபின்களை காட்டுகிறோம் என்று அழைத்துச் செல்வார்கள். முதல் முறை சென்ற பொழுது கடும் கோடை. அந்த வெயிலில் டால்ஃபின்கள் வராது என்று தெரிந்தும் கூட நண்பர்களுக்காக சென்றோம். அந்த டூர் ஆபரேட்டர் நடுக்கடலில் போட்டை நிறுத்தி, "உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் டால்ஃபின்கள் வரும்" என்று கூறி எங்களிடம் லைஃப் ஜாக்கெட்டை கொடுத்து "இங்கே முக்கால் மணி நேரம் நிறுத்துவோம் இஷ்டமுள்ளவர்கள் கடலில் நீந்தலாம்"  என்று நழுவிக் கொண்டார். எங்களுக்கு அதிர்ஷ்டமும் இல்லை, இஷ்டமும் இல்லை எனவே போட்டில் உட்கார்ந்து, தங்களின் மூன்று குழந்தைகளோடு கடலில் நீந்திய மேலை நாட்டு தம்பதிகளை வேடிக்கை பார்த்தோம். இன்னொரு முறை டிசம்பரில் சென்றபொழுது டால்ஃபின்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
    பி.கு.: மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் சிதாப் பீச்சின் போட் ஹவுஸில் போட் ஏறுவதற்காக செல்லும் வழியில்தான் கந்தசாமி படத்தில் வரும் 'எக்ஸ்கியூஸ் மிஸ்டர் கந்தசாமி' பாடலில் ஒரு சிறு பகுதி படமாக்கப்பட்டிருக்கும்.  

    பதிலளிநீக்கு
  15. //மற்ற விலங்குகளின்மீது (பூனை, நாய்....) ரொம்ப அன்பு செலுத்தறவங்க, அவங்க அந்த அன்பு மனிதர்களிடத்தில் இல்லை என்பதால் செலுத்தறாங்களா?//இருக்கலாம். நாய் வளர்க்கும் என் தோழி ஒருத்தி,"The more I move with people, the more I started loving my dog" என்று யாரோ கூறியதை தன் வீட்டில் ஒட்டி வைத்திருப்பாள்.   

    பதிலளிநீக்கு
  16. //
    1) இந்த உணவைத்தான் உண்ண வேண்டும் என்று நம்மை செய்ய முடிவெடுக்க தெரிவு செய்ய வைப்பது எது ?//

    இதுக்கு என் பதில், அந்நேரம் நமக்கிருக்கும் உடல் நிலையும் மூட் உம் தான்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னைக்கு எனக்கு இரவு வரை நேரமே இல்லை.... 'கவரிமான் ப்ரம்பரை' டைட்டில் பார்த்தாலே கை துறு துறுங்கிறதே...

      நீக்கு
    2. உங்கள் பதிலில் எனக்கும் உடன்பாடு கவரிமான் பரம்பரை அதிரா.

      நீக்கு
    3. நெ.தமிழன்.. ரெயின் இன்னும் ரெண்டு நாட்களில்தான் புறப்படும்:) அதனால நீங்க நேரம் கிடைக்கையில் வாங்கோ:)..

      நீக்கு
    4. @அதிரா... உங்க இடுகை படிக்கணும்னா நான் மொபைல் அல்லது லேப்டாப்பில்தான் படிக்கணும். மொபைலில் 90% எந்த பிளாக்குகளுக்கும் செல்லமாட்டேன். கண் பிரச்சனை வந்துடும். ஐபேட்ல உங்க தளம் வருவதில்லை (கீசா மேடம் தளமும்தான்). ஏதோ கேட்ஜட் பிரச்சனைனால (உங்க தளத்துல) விளம்பரம்தான் வரும்.

      உங்க இடுகை இனித்தான் பார்க்கணும்.

      நீக்கு
    5. அது கவரிமா"ன்" இல்லை, "கவரிமா" என்று படிச்சுப் படிச்சுப் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டேன். யாரும் கேட்கிறதே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. கீசாக்கா அது புரியுது:) ஆனா “ன்” சேர்த்து எழுதும்போதுதான் நல்லா இருக்கு:) ஹா ஹா ஹா.

      நீக்கு
  17. //3) ஒரு அறையில் அமர்ந்திருக்கும்போது எங்கிருந்தோ நமக்கு பிடித்த உணவின் சுவை நாசியை துளைக்கும் :) அதை உணர்ந்திருக்கிறீர்களா ?//

    ஹா ஹா ஹா இதில் எனக்கும் நிறையவே அனுபவம் உண்டு.. அதாவது அருகில் இல்லை, இருந்தால் அது நிஜம்தானே, எனக்கு ரெலிபோனில் பேசும்போது அம்மாவோ இல்லை ஆராவது சொல்வார்கள் அடுப்பில் இன்ன கறி இருக்கு அல்லது வடை சுடுகிறோம், கட்லட் செய்கிறோம்... இப்படி.. என[சமைக்கும் நேரம்]. உடனே எனக்கு அந்த வாசனை சத்தியமாக மூகில் வரும், என்னால நம்பவே முடியாமல் இருக்கும்.. இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.. ஒருவேளை இது பெண்களின் குணாதிசயமாக இருக்குமோ என்னமோ:)).. இதை அனுபவிக்க:) எதிர்ப்பாலார் இனி பெண்ணாகப் பிறவி எடுத்தால் மட்டுமே முடியும்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நம் மூளையின் ஸ்பெஷாலிட்டி கவரிமான் பரம்பரை அதிரா. குறிப்பிட்ட நியூரான் தட்டி எழுப்பப் படுகிறது.

      நீக்கு
  18. //6) தற்காலிகமா தப்பிப்பதற்கு பொய் சொல்லி வசமா மாட்டியுள்ளீர்களா? //

    இதுவரை இப்படி சம்பவம் நடந்ததில்லை, இனியும் நடந்திடக்குடாது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கவில்லை என்பதை நம்பமுடியவில்லை கவரிமான் பரம்பரை அதிரா.

      நீக்கு
  19. காட்ராக்ட் ஆபரேஷன் நலமாக முடிந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்திருக்கவேண்டும் ஜீவி ஸார். அவர் வாட்ஸாப் பக்கமும் வரவில்லை.

      நீக்கு
    2. ஓ கெள அண்ணனுக்கோ? அப்போ கொஞ்ச நாட்கள் ஸ்கிறீன் பார்க்கக்கூடாதுதானே..

      நீக்கு
    3. அஃதே க ப அதிரா...   போன சனிக்கிழமைக்கு அப்புறம் அவர் கணினிப் பக்கம் வரவில்லை என்று பட்சி சொல்கிறது!

      நீக்கு
    4. நோஓஓஓஓஓஓ இப்போ மீ கவலையுடன் கிளம்பப்போகிறேன்ன் என் பெயரை எதுக்குச் சுருக்கிட்டீங்க:)) ஹா ஹா ஹா..

      ஓ அப்படியோ? அவர் வழமையாக இங்கு வராமையால் கவனிக்கவில்லை.. கெள அண்ணன் கெட் வெல் சூஊஊஊஊஊஊஉன்ன்ன்ன்ன்ன்ன்...

      நீக்கு
    5. இந்த விஷ்ஷையே கௌ அங்கிள் படிக்கிறாரோ இல்லையோ!!

      நீக்கு
    6. அவர் எப்படிப் படிப்பார்.. நீங்கள் எப்படியும் சொல்லுவீங்கள் ஃபோனில் எனும் நம்பிக்கையில்........

      நீக்கு
    7. ஓ கௌ அண்ணாவுக்குத்தான் காட்டராக்ட்? சீக்கிரம் குணமடைந்து இங்கு வந்து அ த பா எல்லாம் போட வேண்டாமா !!

      ஸ்‌ரீராம் கௌ அண்னாவுக்கு சொல்லிடுங்க...விரைவில் நலம் பெற்றிட எங்கள் பிரார்த்தனைகளிய

      கீதா

      நீக்கு
  20. ///காது மூக்கு குத்துவது போலத்தான் இதுவும்னு சிலர் சொல்றாங்க ஆனாலும் பெர்மனன்ட் டாட்டூவை ஏற்க மனம் தயங்குகிறது .இதன் காரணமென்ன ? ///

    ஹா ஹா ஹா ஆர் என்ன சொன்னாலும் மீ உண்மையைத்தான் விளம்புவேன்:)) இப்போ சமீப காலமாக எனக்கு பயங்கர ஆசை, பேம்னட் ரட்டூ குத்த வேணும் என:)).. ஆனா பெர்மிஷன் இலகுவில் கிடைக்கும்போல தெரியவில்லை:)) ஆனா எப்படியும் ஒரு குட்டியாவது போடுவேன் எனும் நம்பிக்கை உண்டு:)) எப்போ போடுவேனோ அப்ப்போ படம் போட்டுக் காட்டாமல் விட்டிடுவேனோ:)).. ஆனா போடுவதாயின் ஒரு பூனைக்குட்டி போடவே விருப்பம், பூனைக்குட்டி வரைவதெனில் கை வலிக்குமோ எனும் பயமும் கூடவே இருக்கு:).

    இப்படித்தான் முன்பு எனக்கு 2 வது தோடு குத்தும் ஆசை எழுந்தது, குத்தோணும் என சொன்னேன், அதுக்கு உடனேயே ஓகே குத்தலாமே அதனாலென்ன என ஹஸ் சொல்லிட்டார்.. ஒரு நாள் மோலுக்குப் போயிருந்தேன், அங்கு ஃபான்சி ஷொப்பில் ஒரு போர்ட் “ஃபிறீ இயர் பியரிங்” எனப் போட்டிருந்துதா:)).. அங்கு நிண்டே கணவருக்கு கோல் பண்ணினேன்.. வேர்க்கில இருந்தார்ர்.. குத்தட்டோ என்றேன் குத்துங்கோ என்றார்ர்.. உடனேயே குத்திட்டேன் ஹா ஹா ஹா.. தோட்டுக்கு காசு குடுத்தால் குத்துவது ஃபிறீயாம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குத்தட்டோ என்றேன் குத்துங்கோ என்றார்ர்.. உடனேயே குத்திட்டேன் ஹா ஹா ஹா.. தோட்டுக்கு காசு குடுத்தால் குத்துவது ஃபிறீயாம்:))..//

      ஹா ஹா முதல்ல நினைச்சேன் ஹையோ இப்பூடி வீட்டுக்காரரை குத்தட்டானு கேக்கறீங்களே இன்னா தகிரியம்னு அவரும் குத்துங்கோனு சொல்லுகிறாரே பாக்ஸிங்கோ நு

      ஹிஹி காது குத்தல் அந்த தோட்டுக்கு காசு கொடுத்தால் அதையும் சொன்னீங்கதானே!!! இல்லை காது குத்தலை மட்டும் சொல்லி போட்டு அவருக்கு காது குத்திவிட்டீங்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      ச்சே நெல்லை எங்கு போனார் அதுவும் இரவு வரை ஃப்ரீ இல்லைன்னு வேற...ஏஞ்சலையும் காணோம்...ஹூம்...மீக்கு கை கொடுக்க ஆரும் இல்லை..

      கீதா

      நீக்கு
    2. கணவன் சொல்லைத் தட்டாத கவரிமான் பரம்பரை அதிரா...

      நீக்கு
  21. ஊரோடு ஒத்தோடு என்பினமெல்லோ:)) இந்த ரட்டூ ஆசை வந்திருப்பதற்கு இன்னொரு காரணம், இங்கு ரட்டுப் போடாத ஸ்கொட்டிஸ் ஏ கிடையாது எனச் சொல்லலாம்.. தோடுகூட குத்தியிருக்கமாட்டினம் ஆனா ரட்டூ இருக்கும்.. சிலர் விரலில் மட்டும் குட்டிப்பூ அப்படிக்கூட போட்டிருக்கிறார்கள், பார்க்க அழகாக இருக்கும்.

    அப்போ ஊரோடு ஒத்தோடோணும் என நான் நினைப்பது டப்பா?:) ஜொள்ளுங்கோ கெள அண்ணன்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேணாம் வேற ஒன்னு தோணுது அப்புறம் பிபரீதமாகிடும் ஜொள்ளிட்டேன் :) 

      நீக்கு
    2. 'ரட்டூ' எனக்குப் பிடிப்பதே இல்லை கவரிமான் பரம்மரை அதிரா, ஏஞ்சல்....

      :))))

      நீக்கு
    3. hi 5 sriram

      எனக்கு சுத்தமா பிடிக்காது டாட்டூ :) கவரிமியாவ் பூனை டாட்டூ போடப்போறாங்களாம் :) வீடியோ எடுத்து போட சொல்லணும் 

      நீக்கு
    4. ஹா ஹா ஹா இப்போ படம் போட்டு முடிஞ்சு.. வீடியோவில் குரல் போட்டு முடிஞ்சு.. இப்போ நேரடி வீடியோ வேற வேணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடி உசுப்பேத்தினாலும் மசிய மாட்டேன் இந்தக் கவரிமான் பரம்பரையில் வந்த அதிரா:).

      நீக்கு
    5. ஹைஃபைவ் ஏஞ்சல் அண்ட் ஸ்ரீராம் நேற்று சொல்ல விட்டுப் போன ஒன்று....மீக்கும் டாட்டு அதான் ரட்டூ சுத்தமாகப் பிடிப்பதில்லை....

      கீதா

      நீக்கு
  22. //சிலருக்கு தமன்னாவும் சிலருக்கு பாவனாவும் சிலருக்கு அனுஷ்காவும் மட்டும் அழகோ அழகா தெரிவதன் காரணம் என்ன ?//

    ஹா ஹா ஹா புற அழகில் மயங்குவதனாலதான் இப்போ அவர்களுக்கு வயசாகிட்டுது:) குண்டாகிட்டினம்:) என எண்ணிக் கழட்டிவிட நினைச்சாலும் முடியல்லியே:)) மனசில வச்சிருந்தால் தப்பியிருக்கலாம்:)) நம்மிடம் மேடை போட்டுச் சொல்லிவிட்டமையால நாங்கள் தப்பி ஓட விட மாட்டமெல்லோ:))..

    சரி மற்றருக்கு வாறேன்:).. உண்மையில் மனதால+ குணத்தால அழகாக இருக்கும் ஒருவரை எல்லோருக்குமே பிடிக்கும்...[பழகிப்பார்த்தால் பிடித்துவிடும்], புற அழகை மட்டும் கொண்டோரைத்தான் அனைவருக்கும் பிடிப்பதில்லை, ஒவ்வொருவரின் மன எண்ணத்தைப் பொறுத்து ஒவ்வொருவரின் புற அழகு ஒவ்வொருவருக்கு பிடிக்கும், என மாறுபடும், என நான் நினைக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகைகளில் மனதால், குணத்தால் நல்லா பழகறாங்க என்று நமக்கு எப்படித் தெரியும் கவரிமான் பரம்பரை அதிரா..

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஒவ்வொரு கொமெண்ட்டிலும் என் முழுப்பெயரை கஸ்டப்பட்டு ரைப்ப்ண்ணியிருக்கும் ஶ்ரீராமைப் பார்த்து மீ உருண்டு பிரண்டு சிரிக்கிறேன் ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. ரொம்பக் கோபமா ஆயிட்டேன். வருத்தமா கிளம்பறேன்.

      நீக்கு
    4. ஹையோ ஹா ஹா ஹா இப்போ சிரிக்கவில்லை உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என இருக்கிறேன்ன் கிளம்பிடாதீங்கோ:))

      நீக்கு
    5. ஓகே  ஓகே...     அஜிஸ்ட் பண்ணி கீறேன்...

      நீக்கு
    6. https://i.pinimg.com/236x/71/41/99/71419912a8bc003663dbc583fbf8a775--your-mouth-pet-cats.jpg

      நீக்கு
    7. //மனதால+ குணத்தால அழகாக இருக்கும் ஒருவரை// - இது உண்மை. இந்த இரண்டும் அழகாக இருப்பவர், புற அழகு அசிங்கமாக இருந்தாலும், முதலில் நமக்குப் பிடிக்காதவர், பிறகு நமக்கு மிகவும் பிடித்தவராகிடுவார். அப்போ அவரது புற அழகு (அதாவது நம் மனசில் அசிங்கமாக இருப்பதாகத் தோற்றமளிப்பது) நம் மனதில் ரெஜிஸ்டர் ஆகாது.

      நீக்கு
  23. //அனுஷ்கா அழகாய்த் தெரிவதற்கு ஆவியும் காரணம்!
    //

    ஆருடைய ஆவி?:) டெலிவா ஜொள்ளுங்கோ:))

    பதிலளிநீக்கு
  24. // 1. அதிகமா கணிணி, மொபைல் உபயோகிப்பதால் கண் பார்வை மங்குகிறதா இந்த ஜெனெரேஷனில்?//
    பார்வை மங்காவிடினும், கண் கோளாறுகள் அதிகம் வருது என்பது உண்மையே... படிக்கும்போது ஒரு ரீச்சர் சொன்னா.. இடைக்கிடை 5 நிமிடமாவது கண்ணை மூடி இருங்கோ.. அதுபோல இடைக்கிடை கண்ணை வெளியே மிகத் தொலைவைப் பாருங்கோ என.. இப்படியும் செய்வது நல்லது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் அங்குமிங்கும் பார்த்தாலும் கெடுதல் கெடுதல்தான் இல்லையா கவரிமான் பரம்பரை அதிரா?

      நீக்கு
  25. //இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எதை வைத்து நாம் முடிவு செய்யறோம்? //

    பதில்கள் அழகு..

    பதிலளிநீக்கு
  26. //அ, த, பா படங்கள் போட வாய்ப்பாகவும் எடுத்துக்கலாம்)//

    ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் மறைமுகமாகச் சொல்லியும், தமனாக்கா படம் போடாமல் விட்ட கெள அண்ணனை என்ன பண்ணலாம்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைச்சேன் பூஸார் வந்தால் கேட்காமல் போகமாட்டாரே ன்னு நினைச்சே இந்தக் கமெண்டை காலைல அடித்து ஹா ஹா ஹா ஹா....அது போகாமல் இருந்தது...இப்ப பார்த்துட்டு பப்ளீஸ் செய்தேன் முன்னாடியே உங்க கமென்ட் வந்தாச்சு!!!!

      கீதா

      நீக்கு
    2. பாருங்கோ அதிராவுக்கு இருக்கும் பொதுநல:)) அக்கறை உங்கள் ஆருக்குமே இல்லை கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. கையும் மனசிம் பரபரன்னாலும் ஒன்றும் சொல்லாமல் போறேன் கவரிமான் பரம்பரை அதிரா, கீதா ரெங்கன்...

      நீக்கு
    4. //கையும் மனசிம் பரபரன்னாலும்//
      ஹா ஹா ஹா இன்று என்னால சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. நான் என்ன பண்ணுவேன் தெய்வமேஏஏஏ:))

      நீக்கு
    5. அபுரி உங்களுக்கா, எனக்கான்னு எனக்கு இப்போ அபுரி!

      நீக்கு
    6. எனக்கு எதுவும் புரியுதில்லை ஆண்டவரே ...தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்....

      நீக்கு
  27. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கௌ அண்ணா! இருவர் இங்க அ த பா என்று கேட்டும் ஒரு அ படம் ஒரு த படம்???? ஹூம்...பாவம் நெல்லை...(ஸ்ரீராமாச்சும் அதை வியாழன்ல தீர்த்துக்குவார்!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  28. //மற்ற விலங்குகளின்மீது (பூனை, நாய்....) ரொம்ப அன்பு செலுத்தறவங்க, அவங்க அந்த அன்பு மனிதர்களிடத்தில் இல்லை என்பதால் செலுத்தறாங்களா? //

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என்ன கேள்வி?:)..

    எனக்கு கேள்வி புரியவில்லை, அதாவது மனிதர்களிடம் அன்பு கிடைக்காது ஆனா இவைகளிடம் கிடைக்கும் என்பதனால அன்பு அதிகம் காட்டுகிறார்களோ எனக் கேட்கிறீங்களோ நெ.த?

    அப்படி இல்லை, இங்கு மனிதர்களோடு இவற்றை எப்படி ஒப்பிட முடியும்?... மனிதர்களோடு வரும் அன்பு வேறு, இவற்றோடு வரும் அன்பு வேறு.. இரண்டும் நமக்கு புத்துணர்வைக் குடுக்கும்.. மனித அன்பு எப்பவும் வேண்டும்.. அத்தோடு இந்த அன்பும் கிடைக்கும்போது இன்னும் மனம் மகிழ்ச்சியடைகிறது.. உற்சாகம் பிறக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இதோடு சேர்த்து மற்றொனும் சொல்ல நினைத்திருந்தேன். மனிதர்களுக்கு நாம் பல வகைகளில் அன்பு செலுத்துவோம். அவர்களுக்கு வாய் திறந்து சொல்லவும் முடியும் ஆனால் இவை அப்படி இல்லையே இவற்றிற்கு கிடைக்கும் அன்பு அவற்றிற்குக் கேட்டுப் பெறவும் தெரியாது எல்லாமே அவர்களின் உடல் மொழி தானே அவற்றிற்கு நாம் கொடுக்கும் அன்புதானே...அவற்றிற்கு அந்த அன்பு தெரியாது என்றும் அல்லது அவை உணராது என்றோ நினைக்கலாம் ஆனால் அப்படி இல்லை. செல்லங்கள் வளர்ப்பவர் பலரும் அதை அறிந்திருப்பார்கள். உணர்ந்திருப்பார்கள். அவை நன்றாகப் புரிந்து கொள்ளும். அதை அவை விரும்பவும் செய்யும். வீட்டு விலங்குகள் மட்டுமல்ல காட்டு விலங்குகளும் தான்... யானை உட்பட. பறவைகள் உட்ப்ட.....

      கீதா

      நீக்கு
    2. மிக நல்ல பதில் கவரிமான் பரம்பரை அதிரா. எனக்கும் மோதி, ப்ரௌனி ஞாபகம் வருகிறது கீதா...

      நீக்கு
    3. அதிரா... ஏற்றுக்கொள்ளவைக்கும் பதில். பாராட்டுகள்

      நீக்கு
    4. அப்போ என் பரிசைத் தாங்கோ நெ.தமிழன்:)..

      நீக்கு
  29. //இதற்கு விலங்குகளை அன்பாக நேசித்து வளர்ப்பவர்கள் மட்டுமே பதில் சொல்ல முடியும் . எனக்கு அந்த அனுபவம் இல்லை .//
    எனக்கு எங்கட டெய்சிப்பிள்ளை ஒரு பூனைபோல தெரிவதே இல்லை, பேசத்தெரியாத ஒரு குழந்தை அப்படித்தான் நான் சொல்லிக் கொள்வேன்ன்.. அதுவும் என்னை அம்மாபோலவே பார்க்கிறது.. வெளியே போய் வீட்டுக்குள் வந்தால், ஆர் இருந்தாலும் என்னைத்தேடி ஓடி வந்து ஒரு தடவல் வாங்கியபின்பே அவவுக்கு மனம் அமைதியடையும்.. அந்நேரம் நான் பார்த்றூமில் இருந்தால், டோரிலேயே வெயிட் பண்ணிக்கொண்டிருப்பா.. மகன் சில சமயம் டோரைத் தட்டிச் சொல்லுவார்.. அம்ம்மா சம்வன் இஸ் வெயிட்டிங் ஃபோ யூ அட் த டோர் எனஹா ஹா ஹாஹா:))..

    நான் எங்கு ஸ்லீப் பண்ணுகிறேனோ அங்குதான் அவவும் வந்து ஸ்லீப் பண்ணுவா.. நான் றூம் மாறிப் படுத்தால், அவவும் அங்கு வந்து செட்டில் ஆகிடுவா:)) இப்படி பெரிய போஸ்ட்டெ எழுதலாம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அதே நம் வீட்டிலும் கண்ணழகி எங்களில் ஒருவர் போலத்தான். ராணியம்மா அல்லது பொண்ணு என்றுதான் சொல்லிக் கொள்வோம். மகன் கேட்கும் போதே பொண்ணு என்ன செய்யுறா என்றுதான் கேட்பான். அதுவும் கால்கள் எல்லாம் கழுவி விடுவதால் எங்களோடுதான் படுப்பாள்...அதுவும் என்னிடம் அதிகம் பாசம் காட்டுவாள் வெளியே போய் உள்ளே வந்தால் அவ்வளவுதான் அத்தனை நேரம் பிரிந்திருந்தாளாம் உடனே என்னை ஒரு சின்ன தடவல் வாங்கிக் கொண்டு ஓடுவாள் பாருங்கள் அங்கும் இங்கும் துள்ளி துள்ளி ஓடுவாள்...அதே தான் நாம் எங்கு படுக்கிறோமே அங்குதான் இருப்பாள். ஹாலில் இங்கு கண்ணியில் டைப் செய்தால் இங்கு என் காலடியில் படுத்துக் கிடப்பாள். யாரேனும் செல்லங்களை அத்தனை விரும்பாதவர் அல்லது பயப்படுபவர் வீட்டிற்கு வருவதாக இருந்தால் அவளிடம் முன்னரே சொல்லிவிடுவேன் சொல்லிவிட்டு ரூமில் இருக்கச் சொல்லிக் கதவை மூடி விடுவேன். அவள் அங்கு ஃப்ரீயாக இருக்கட்டும் என்று. கட்டிப் போடும் பழக்கம் இல்லை. தங்குபவர்கள் வந்தால் அதுவும் அவர்களுக்குப் பயம் என்றால் மட்டுமே கட்டிப் போடுவது.

      ஜானு என்று ஒரு பூஸார் ஒருவர் இருந்தார் முன்பு அவளும் அப்படித்தான். டெய்சிப் பிள்ளை ஜெஸ்ஸி போலவே எங்கள் வீட்டில். அப்புறம் அவள் இல்லை. மகனின் அத்தை பையன் வீட்டில் பூசார் ஆண்பிள்ளை செம செல்லம்.

      கீதா

      நீக்கு
    2. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது கவரிமான் பரம்பரை அதிரா, கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. இந்த நினைவுகள் எப்பவும் இனிமை கீதா..
      இப்படிக்கு
      கவரிமான் பரம்பரை அதிரா:)).. ஹா ஹா ஹா என் பெயரை எழுதிப்பார்த்து நானே ரசிக்கிறேனாக்கும்:))

      நீக்கு
  30. ஆஆஆஆஆஆ கொஞ்சக் கிளாவிகள்:) இருக்கிறார்கள் தூக்கிக் கொண்டு வருகிறேன் பின்பு:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ... வாங்கோ... மொள்ள வாங்கோ கவரிமான் பரம்பரை அதிரா... அடுத்த வாரம் பொழுது போகணும்லோ...!!

      நீக்கு
    2. ஆஆஆஆஆ கெள அண்ணன் இந்தக் கொடுமையைக் கேளுங்கோ.. அடுத்த கிழமை உங்களுக்குக் கிழவிகளோடு பொழுதுபோகுமாம்ம்ம்ம் என்கிறார் கவலையுடன் கிளம்பிக்கொண்டிருக்கும் ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. ஆனால் இதுவரை எந்தக் கிளவிகளும் வரவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    4. வருவாங்க வருவாங்க.. கடமை முக்கியம் எல்லோ இப்போ:)) அதை முடிச்சிட்டுத் தூக்கி வருவேன்:))

      நீக்கு
  31. //அனுபவத்துடன் பர்ஸிலிருக்கும் பணம்// - இந்தக் கேள்வி, நாம சைவம்தான் சாப்பிடணும், வேகனாத்தான் இருக்கணும்.. இந்த மாதிரி நம்மை முடிவெடுக்க வைப்பது எது என்றுதான் நான் புரிந்துகொண்டேன்.

    இந்த உணவைத்தான் உண்ண வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் நினைக்க முடியாது. குடும்பம் என்பது பலதரப்பட்டவர்களின் கூட்டு. எனக்கு பருப்புக் குழம்பு வேணும், அதுதான் நான் சாப்பிடுவேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த வாரத்துல ஒரு நாள் அதைப் பண்ணுன்னு வேணும்னா சொல்லலாம். சும்மா வீட்டுல இருந்துக்கிட்டு, இன்னைக்கு உப்புமா இருந்தால்தான் சாப்பிடுவேன், இரவு எனக்கு சப்பாத்திதான் வேணும்னுலாம் சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நெல்லைத்தமிழன் ..அதேதான் நான் கேட்க வந்த கேள்வி , மிகச்சரியா புரிஞ்சிட்டீங்க . 

      நீக்கு
    2. என் வீட்டு நிலைமை அதுதான் நெல்லை... சரியாச் சொல்லி இருக்கீங்க... சரிதானே ஏஞ்சல்?

      நீக்கு
  32. //இப்போதுள்ள நடிகைகள், இதற்கு முந்தையவர்களைப்போல்// -இதுக்கு பதில் கேஜிஜி சார்தான் கொடுத்திருப்பார். இதுல எனக்கு சந்தேகமே இல்லை. பாருங்க.. அனுஷ்கா, தமன்னா என்று நினைத்துக்கொண்டு காலாவதியான 1640ல் நடித்த நடிகைகள் படத்தைப் போட்டிருக்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அனுஷ்காவின், தமன்னாவின் பாட்டியாய் இருக்குமோ...

      நீக்கு
    2. அது டி பி ராஜலக்‌ஷ்மி, எஸ்டி சுப்பலக்‌ஷ்மி.

      நீக்கு
  33. எனக்கு நான் 4-5வது படிக்கும்போது, தெருவில் நுழையும்போதே அம்மா இன்றைக்கு இது பண்ணியிருக்கிறாள் என்று தோன்றும்படியாக வாசனை வந்துவிடும் 90 சதவிகிதம் சரியாக இருந்திருக்கிறது. உணவின் வாசனையே பெரும்பாலும் நமக்கு பசியை வரவழைத்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க மகளும் இப்படி சொல்வா :) ஸ்கூலிலிருந்து வரும்போது தெரு முனையில் வாசனை வரும்னு :) அது உள்ளுணர்வு என்று நினைக்கிறன் 

      நீக்கு
    2. அந்த அதீத மோப்பசக்தி போய் 1 வருஷம் 6 மாதங்கள் ஆகிறது ஸ்ரீராம். என் 'வாசனை அறியும் சக்தி' சில சமயங்கள்ல எனக்கு ரொம்பவும் உபயோகமா இருந்திருக்கு (ஆபீஸில், மின்சாரக் கசிவினால் எரியும் வாசனை வருதுன்னு நான் சொன்னப்பறமும் நம்பாம செக் பண்ணி அந்தப் பிரச்சனையை சரி பண்ணினாங்க, பெரிய ப்ராப்ளத்தைத் தவிர்த்தாங்க). கெடுதலாவும் இருந்திருக்கு. நான் கார் பார்க் பண்ணும் காராஜில், ஒரு ஃப்ளாட்டில் ஃபிலிப்பினோ குடும்பம் தங்கியிருந்தது. அவங்க புதன், வெள்ளில மீனை, வினிகர் உபயோகித்து உணவு செய்வாங்க. அது குடலைப் பிடுங்கும் வாசனை.. நான் மூக்கைப் பொத்திக்கிட்டு வேகவேகமா கார் பார்க் பண்ணிட்டு வருவேன்)

      நீக்கு
  34. //இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் என்று நினைக்கிறீர்களா? // - அப்படி யாருமே நினைக்க மாட்டாங்க. ஆனா பாருங்க.. முதல் முன்னுரிமை மனிதர்களுக்குத்தான் இருக்கணும் என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னுரிமை மனிதர்களுக்கு என்பது சுயநலம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்... அது எப்படி? பசிக்கும் புலி பாய்ந்து ஒருவனைத் தாக்கும்போது, நீங்க தாக்கப்படுபவனைக் காப்பீங்களா இல்லை புலியின் பசியை மதிப்பீங்களா? பதில் சொல்லணும்னு சொல்லக்கூடாது.

      நீக்கு
  35. போட்டில் அதுவும் கட்டமர்னில் சென்ற அனுபவம் உண்டு. இதை அடித்துக் கொண்டிருந்த போது கரன்ட் போய் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    திருவனந்தபுரத்தில் கோவளம் பீச்சில் மகன் நான் அவன் அத்தை பையன் மூவரும் கட்டமரன் மீனவர் போட்டில்...ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாகச் சென்றோம். த்ரில்லர் தான் அலைகள் மேலெழும்பும் போது போட்டும் மேலெழும்பி ஹையோ அப்போது அடிவயிற்றில் ஒரு அமிலம் சுரக்குமே..ஆஆஆஆ செமை அனுபவம். லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டுதான்....தண்ணீர் போட்டிற்குள் வரும் அதை படகோட்டி எடுத்துக் கொட்டுவார் வெளியில். நாமும் கொஞ்சம் நனைவோம்...செம அனுபவம்...அப்படிச் சென்று விட்டு மீண்டும் திரும்பும் போது அங்கு நீண்டிருக்கும் பாரை அருகில்வித விதமான பாறைகள் சிவப்பு (பவளம்) பாறைகள் சிப்பிகள் நிறம் நிறமாக மீன்கள் பல செடி வகைகள் பாறைச் செடிகள் ஹையோ அங்கு தண்ணிர் அமைதியாக இருக்கும் க்ளியராகவும் இருக்கும் அதையும் காட்டிவிட்டுக் கரைக்கு கொண்டுவந்து விடுவார். ஹையோ என்ன அழகு கடலுக்கு அடி...அருமையான அனுபவம் அதன் பின் வாய்க்கவில்லை.

    சிறு வயதில் இலங்கை தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை கப்பல் வந்து கரைக்குக் கொஞ்சம் தூரத்தில் கப்பல் நிறுத்திய பிறகு தோணியில் இறக்கி (அது இறங்கி தோணியில் இறங்குவது ஒரு த்ரில்) கரைக்குக் கொண்டு விடுவார்கள். பல முறை இப்படி வந்திருக்கிறேன் அதுவும் செம அனுபவம்.. கப்பல் தோணி என்று....தலைமன்னாரில் போட் தளம் இருக்கும் அதை ஒட்டி நிற்கும் கப்பலில் படிகளில் ஏறிவிடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி கீதா... செம அனுபவங்கள்...

      நீக்கு
    2. எனக்கும் இத்தகைய அனுபவங்கள் உண்டு. என்ன வித்தியாசம் என்றால், அவைகளை நான் புகைப்படம் எடுத்து/எடுக்கச் சொல்லி நினைவுக்காக வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  36. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
    கேள்விகளும், பதில்களும் மிக அருமை.
    உணவின் வாசனை வருமே நினைக்கும் போது. திருவனந்தபுரத்தில் திரளி இலையில் கொழுக்கட்டை செய்வார்கள் வாசனையாக இருக்கும். நினைக்கும் போதே அதன் வாசம் வருகிறது.
    மீண்டும் வருகிறேன், கொஞ்சம் வேலை


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.... வணக்கம். திரளி இலையில் கொழுக்கட்டை? கேள்விப்பட்டதேயில்லை.

      நீக்கு
    2. எங்கூர்ல எல்லாம் திரளி இலைலதான் கொழுக்கட்டை செய்வாங்க ஸ்ரீராம்...

      நேற்று மதியம் மேல் பவர் பிரச்சனை இன்னும் சில பிரச்சனைகள் என்று வர முடியாமல் போய் இங்கு இப்ப பார்த்தா ஆஹா எத்தனை கும்மி சே மிஸ் பண்ணிட்டேன்...

      கீதா

      நீக்கு
  37. ////அனுஷ்கா அழகாய்த் தெரிவதற்கு ஆவியும் காரணம்!//


    இது ஸ்ரீராம் பதிலோ :))) ஆமா அது புதுசா ஒரு ஸ்டார் பதில் சொல்றாரே யாரந்த ஷ்டார் ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி... ஹி...ஹி... வெளில சொல்லாதீங்க... கேஜிஜி கிட் சொல்லி எல்லோர் ஸிம்பலையும் மாற்றச் சொல்லணும்!

      நீக்கு
  38. $  பக்கத்தில் மீன் சமைக்கிறார்களோ//

    கர்ர்ர்ர் :) சேனைக்கிழங்கு வாசனை தேவாமிர்தம் 
    மீன் இங்கே செய்ய பக்கத்தில் யாரும் இல்லையே குறிப்பா தென்னிந்தியார் அல்லது இலங்கையர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய துணியை நனைச்சு வைத்து மறந்துட்டாக் கூட அப்படி 'வாசனை' வரும் ஏஞ்சல்.

      நீக்கு
  39. மற்ற விலங்குகளின்மீது (பூனை, நாய்....) ரொம்ப அன்பு செலுத்தறவங்க, அவங்க அந்த அன்பு மனிதர்களிடத்தில் இல்லை என்பதால் செலுத்தறாங்களா?  
    /இதற்க்கு எனக்கு தெரிந்த பதில் அது அவற்றின் கண்களில் விழியில் தெரியும் ஒரு அன்பு அதுங்க நம்மேல் அன் கண்டிஷனல் அன்பு செலுத்துகின்றன .நான் ஆடு மேய்க்க போனா எல்லா ஆடுகளும் கிட்ட வந்து என் சட்டை காதணி எல்லாத்தையும் ஆர்ராய்ச்சி செய்வாங்க :) இத்ஜ் நீங்க நிக்கிறீங்க  யாரோ புதியவர்  ஹாய் சொன்னா என்ன நினைப்பீங்க ?அதெல்லாம் வாயில்லா ஜீவன்சுக்கு தோணாது அதுங்களுக்கு தெரிஞ்சது எதிர்பார்ப்பில்லா அன்பு அதனால்தான்  மிருகங்களில் நமக்கு இயல்பா ஒரு ஈர்ப்பு அன்பு ஏற்படுத்து 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ.... என் கேள்வி.... நீங்க உங்க பையனிடம்/பெண்ணிடம் அன்பு செலுத்தறீங்க. கணவர், சகோதரர், உறவினர்கள், அண்டை அயலார் போன்றவர்களிடமும் அன்பு செலுத்தறீங்க...அதாவது உங்களைப்போல் மனித ஜென்மங்களிடம். அங்கு கிடைக்காத அன்பு, நாய்/பூனைகள்ட கிடைக்குதா? இல்லை அங்கு கிடைக்காததனால்தான் நாய்/பூனைகள்ட அன்பு செலுத்தி அன் கண்டிஷனல் அன்பை வாங்கிக்கிறீங்களா? அதே அன்பு, ஏன் பாம்பு, தேள் போன்றவற்றிடம் உங்களுக்கு உருவாவதில்லை? இதுதான் என் கேள்வியின் விளக்கம்.

      நீக்கு
    2. இது ரொம்ப ஓவர் நெல்லை. இந்தக் கேள்வி மனிதர்களுக்கும் பொருந்தும். நம் வீட்டில் திருட வருபவர்கள், தம்மைத் தீர்த்துகட்ட வருபவர்கள்...

      நீக்கு
  40. வாசனையான அன்பு அது. இல்லையா ஏஞ்சல்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில 10 வயசு ஆடு ஒன்று இருக்கு அங்கே அது ஸ்பெஷலா நீர்க்க porridge  குடிக்கும் குடிச்சிட்டு அது வாயை என் சட்டை மேலே துடைச்சிட்டு போகும் :)))

      நீக்கு
    2. //அதில 10 வயசு ஆடு ஒன்று///
      பாருங்கோ ஆட்டில கூட, குட்டி தடவவில்லை:)).. என்னைத்தேடி மஞ்ஞாக் குட்டிகளே வருமாக்கும்:)).. இதிலிருந்து என்ன தெரியுதூஊஊ?:) இனம் இனத்தை நாடும்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ஊரில் இல்லை:))

      நீக்கு
  41. ஹையொ இன்று ஶ்ரீராமுக்கு என்ன ஆச்சு?:) மருந்தடிச்ச பூச்சிமாதிரியே பதில்கள் தாறார்:)... நேக்குப் பயம்மாக் கிடக்கூஊஊ திர்க்கை அம்மன் ஏறிட்டாவோ எண்டு:)... ஹையோ ஆண்டவா அதிராவைக் காப்பாத்துங்கோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்தடிச்ச பூச்சியோ? அதென்னது?  ஏதோ கோமதி அக்கா சொல்லிக் கொடுத்தாங்களேன்னுட்டு முழுப்பெயரை எழுதினாலிவ்வளவு கெட்டபெயரா?  வைரவா...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பொஸிடிவா ஜிந்திக்கோணும் ஸ்ரீராம்.. அவ்ளோ ரசிச்சுச் சிரிக்கிறேன் எனத்தான் ஜொள்ள வந்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      என்ன இன்னும் அஞ்சுவின் கூடையைக் காணம்:))

      நீக்கு
    3. ஸ்ஸ்ஸ்  அதிரா வரும் வர்ந்துட்டே இருக்கு 

      நீக்கு
    4. வரட்டும்... காத்துக்கொண்டே....

      நீக்கு
  42. என் கிளவி நம்பர்
    1. பேய் பார்த்த அனுபவம் உண்டோ? பழைய கதைகளை நம்புறீங்களோ? நாங்க பார்த்தமே..:)).

    2. நாங்கள் எல்லோரும் விழுந்து புரண்டும் சிரிக்கும்படியா ஒரு ஜோக் சொல்லுங்கோவன்.

    3. தன்குஞ்சு மட்டும்தான் பொன்குஞ்சு என நினைப்போரைப் பற்றி உங்கள் கருத்து?

    4. எந்தச் செயலைப் பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு பைத்தியக்காரத்தனம் எனத் தோன்றும்?

    பதிலளிநீக்கு
  43. 1, ஒரு எழுத்தாளரின் கதைகள் எழுத்துக்கள் அவர் இளவயது மற்றும் வாழ்க்கையின் அனுபவங்களை பிரதிபலிக்கிறதா ?
    2, பொதுவாக வீடுகளில் அன்றைய சமையல் யாரால் தீர்மானிக்கப்படுகிறது ?சமைப்பவராலா அல்லது சாப்பிடுபவராலா ?
    3, பேசியே கொல்வது பேசாமலே கொல்வது  எது சிறப்பு ? எதை பொறுத்துக்கொள்ளலாம் ?
    4, உயர் கல்வி எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது ? எதிர்காலத்தில் வாழ்க்கைக்கான ஸ்ட்ரோங் அஸ்திவாரம் ,நிரந்தர வருமானம் பட்டம் பதவி அந்தஸ்து  இவற்றில் எது ?
    5, சுவை என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது பசியுணர்வு சம்பந்தப்பட்டதா ?
    6,  நீங்க நம்பவே முடியாத உண்மை என்ன ?
    7, வெளியிடங்களில் தெரியாம வழுக்கி விழுந்து ,விறுவிறுன்னு எழும்பி யாரவது பார்த்திருப்பாங்களோன்னு சுற்றுமுற்றும் பார்த்து     திருப்தி பட்டிருக்கீங்களா :) ??? 
    8, குண்டு குண்டா இருக்கிற கொழுக் மொழுக் பாப்பாவை ஹெல்த்தினும் ஆரோக்கியமா இருக்குன்னும் ஏற்கும் மனம் அதே குண்டா ஆன பெண்களை மட்டும் ஆரோக்கியமில்லைன்னும் வெயிட்டை குறைக்கணும்னும்  சொல்வதேன் ?
    9, பாராட்டும்போது இரு கரங்களை சேர்த்து தட்டுவோர் எதிர்ப்பு தெரிவிக்கும்போது ஒரு கரத்தை ஒங்கி மேஜையில் தட்டுவதேன் ?
    10, எல்லாத்துக்கும் நிறம் இருக்கா ? நீரின் நிறம் ஏன்னா ? கண்ணாடியின் நிறம் என்ன ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொதுவாக வீடுகளில் அன்றைய சமையல் யாரால் தீர்மானிக்கப்படுகிறது ?சமைப்பவராலா அல்லது சாப்பிடுபவராலா ?//

      நெ.த கேள்வி : - மனைவி point of viewல, தானே திட்டம் போட்டு சமையலைச் செய்வது பாதுகாப்பானதா (நெகடிவ் கமெண்ட் சாப்பிடுபவர்களிடமிருந்து வராமல்) இல்லை சாப்பிடுபவர்களிடம் ஆலோசித்து, அவங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுச் செய்வது பாதுகாப்பானதா?

      //நீங்க நம்பவே முடியாத உண்மை என்ன ?//
      நெ.த கேள்வி - உண்மை என்று ஒன்று உண்மையாவே இருக்கா?

      //ஒரு கரத்தை ஒங்கி மேஜையில் தட்டுவதேன் ?// - நீங்க தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் நேரலையைப் பார்த்ததில்லை என்று தோன்றுது. அங்கு, பாராட்டுவதற்கு, கையால் மேசையில் தட்டுவார்கள்.

      நீக்கு


    2. /நீங்க தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற நிகழ்ச்சிகளின் நேரலையைப் பார்த்ததில்லை என்று தோன்றுது. அங்கு, பாராட்டுவதற்கு, கையால் மேசையில் தட்டுவார்கள்.//
      இல்லையே நான் பார்த்ததில்லை ..21 வருஷமாச்சு தூர்தர்ஷன் பார்த்து .அதான் தெரிலஇங்கே பிரித்தானிய பார்லியமென்டில் mp ஸ் wooo  கத்துவங்க எதிர்க்கட்சி பேசும்போது 

      நீக்கு
    3. மேசைக் கைதட்டலை நானும் பார்த்திருக்கிறேனே.. அதுக்காகவே பார்ப்பதுண்டு.. நல்ல கொமெடியாக இருக்கும்.

      நீக்கு
    4. ஓகே... ரெண்டாவது செட்! கொஞ்சம் கேள்விகள் தேறிடுச்சு... மூட்டையா கட்டிக்கிறேன்!

      நீக்கு
  44. கவரிமான் பரம்பரை அதிரா:) 150 yrs

    பதிலளிநீக்கு
  45. கேள்விகள் ஸ்வாரஸியம் என்றால் பதில்கள் எல்லாமே ஒவ்வொரு விதமாக சுவையாக, ஸ்வாரஸியமாக டாப்பாக இருந்தன. எல்லா பதில்களுமே இன்ட்ரெஸ்டிங்க்!

    ஸ்ரீராம் ஜி, கௌதம் ஜி, பழைய பதிவுகளும் வாசித்தேன் சிலவற்றிற்குக் கருத்துகளும் எழுதியிருந்தேன் ஆனால் இங்கு போட முடியாமல் போனது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் ஆண்களுக்கு விடுமுறை தினங்கள் வரமா? சாபமா?

    பள்ளிக் கூடம் இல்லாமல் ஆன்லைனில் கல்வி கற்கலாம் எதிர்காலத்தில் வந்துவிடும் என்று பேசப்படுவது சிறந்ததா? இதனால் பாதிப்புகள் என்ன நன்மைகள் என்ன?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. எத்தனை எத்தனை கேள்விகள்... சளைக்காமல் சொல்லப்படும் பதில்கள்....

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!