புதன், 4 டிசம்பர், 2019

புதன் 191204 :: கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறீர்களா?



வல்லிசிம்ஹன் : 

1 இத்தனை ஆனந்தாக்களும்,சாமியார்களும் தேவையா? 



    
$ ஆனந்தாக்களும் சாமியார்களும் அவர்கள் பாட்டுக்கு உண்டாகிறார்கள் அவர்களின் தரமறிந்து பயன் பெறுவது மக்கள் அவரவர் செயல்.

& தேவை இல்லைதான் - நமக்கு! ஆனால் அவர்களுக்கு ஏதோ தேவை இருப்பதால்தான் ஆ, சா எல்லோரும் உருவாகிறார்கள். 
    
2 அவர்கள் இல்லாமல் நாம் வழி தவறி விடுவோமா? 

# முதலில் சாமிகள் ஆனந்தாக்கள் வழி தவறாமல் இருக்கட்டும். அதுவே பெரிய அதிர்ஷ்டம். அவர்கள் இருந்தாலும் மக்கள் வழி தவறி நடப்பது இருந்து கொண்டு தான் இருக்கும். 

& அதெல்லாம் ஒன்றும் இல்லை. நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருப்பதுபோல, சாமியார்களுக்கு followers. 
            

கீதா சாம்பசிவம் : 

1.இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் குறித்து உங்கள் கருத்து என்ன?

$ இறந்த பின் வலி உணரப்படுவதில்லை. நம் உறுப்புகள் வாழ்கின்றன என்பதை விட வாழ வைக்கின்றன எனும்போது தானம் அவசியமே.

# உயிர் போன பின் உடல்பற்றி பற்பல மத நம்பிக்கைகள் உண்டு. அவற்றை மீறும் தைரியம் உள்ளவர்கள் தாராளமாக உறுப்பு தானத்துக்கு ஓ கே சொல்லலாம். வரவேற்கத் தக்கது. எனினும் நடைமுறை சிக்கல்கள் அதிகம். 

2.சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத பெற்றோருக்கு நேர்மாறாகக்குழந்தைகள் இருப்பதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும் பெற்றோரின் குழந்தைகளுக்கு நம்பிக்கை இல்லாததற்கும் என்ன காரணம்?

# Antithesis ஒரு இயற்கை நியதி. பார்த்து வெறுத்துப் போவது இதன் பின்புலம்.


3.திருமணம் முதல் எல்லாவற்றிலும் சடங்குகள், குறிப்பாக வைதிகக் காரியங்கள் என்பது தற்காலங்களில் பொருள் இல்லாமல் செய்யும் ஒன்றாக ஆகி விட்டது. காசி யாத்திரை என்பதன் பொருளே யாருக்கும் தெரியவில்லை என்னும்போது அதற்கு முன் வரும் சமாவர்த்தனம் என்றால் என்ன தெரியப் போகிறது. எல்லாம் ஓர் இயந்திரகதியில் நடக்கிறது. இது எதிர்காலத்துக்கு நல்லதா?

# ஏதோ முன்பெல்லாம் எல்லாம் தெரிந்து சடங்கு செய்தார்கள் என்று எண்ண வேண்டாம். முன்பை விட இப்போது வைதிகர்களே மெகானிகல் புரொஃபஷனல் ஆகிவிட்டார்கள். ஈவன்ட் மேனேஜர்கள்.

இது எதிர்காலத்தில் பெரிய கெடுதல் ஏதும் செய்யாது. சடங்குகள் இன்னும் கொஞ்சம் சுலபமாகும்.
                    
4.கலப்புத் திருமணங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம்? இது நல்லதா? கெட்டதா?

$ கலப்பு மணம் நல்லதே,  மனமும் உணவுப் பழக்கங்களும் ஒத்துப் போகும்போது.

# மன ஒற்றுமை, புரிதல், சந்தோஷம் இருப்பின் கலப்புத் திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

5. காசிக்குச் சென்று திரும்புபவர்கள் இனிமேல் தாய், தகப்பன் ஸ்ராத்தமோ அமாவாசைத் தர்ப்பணங்களோ செய்ய வேண்டாம் என அவர்களாக முடிவெடுப்பது சரியா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா?

# சிரார்த்தங்கள் இருவரின் மனத் திருப்திக்காக செய்யப் படுபவை. ஒன்று செய்வோர் அடுத்து செய்து வைப்போர். காசி கயா சடங்குகள் பின்னாட்களில் விடுதலை தருவதாக நம்பப்படுகிறது. 
இவை பற்றி தீர்மானமாக இது இப்படி என யாரும் எதுவும் சொல்வதற்கில்லை.   
     
6.எச்சல், பத்து போன்றவை பார்த்தால் அவர்கள் கடுமையான ஆசாரக்காரர்கள் என்று அனைவரும் அவர்களை விலக்கி வைப்பது ஏன்? சுகாதார ரீதியாகவே அது நல்லது இல்லை என்பது தெரியாதா?

$ சரியான சுகாதாரப் பழக்கங்களானால் சரி. 5 மில்லி தண்ணீர் தெளித்து சுத்தி செய்வது வெறும் கண் துடைப்புதானே?

# எச்சில் பற்று இவற்றிற்குப் பரிகாரமாக செய்யப் படும் சிலவற்றைப் பார்த்தால் அவை சுகாதாரத்தின் அடிப்படையில் இல்லை எனத் தோன்றும். எனினும் எச்சிலை விலக்கி இருப்பது மன நிறைவு தரும் விஷயம். "பத்து" அப்படி இல்லை. உணவை மீதம் வைக்காமல் நிர்வகிக்க இது ஒரு யுக்தியாக இருக்கலாம். 


7. ஆடு, மாடு, நாய் போன்றவை தாகம் அதிகம் ஆனால் தண்ணீர்க்குழாய்களில் வாய் வைத்து நீரை உறிஞ்சும், பார்த்திருப்பீர்கள். அதன் பின்னர் அந்தக் குழாயைச் சுத்தம் செய்வது நல்லதா, இல்லையா? அதே போல் மனிதர் வாய் வைத்துக் குடித்தாலும் அப்படித் தான் அலம்புவோம். அதையும் குற்றமாகவோ குடித்தவர்மனதைப் புண்படுத்தியதாகவோ எடுத்துக்கொள்ளலாமா?

$ எச்சில் பாத்திரத்தை ஒன்று நாம் கழுவ வேண்டும் இல்லாவிடில் உபயோகித்தவர் கழுவ வேண்டும். கோபித்துக் கொள்வது சுகாதாரக் கேடு.

# 7 & 8 மேலே # உள்ளபடி.

8.உணவைப் பகிர்ந்து உண்ணவேண்டும் என்பது சரி. ஆனால் ஒரே பாத்திரத்தில் இருந்து எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவது சரியா? தனியாகக் கிண்ணங்களில் போட்டுக்கொண்டால்/அல்லது போட்டுக்கொண்டு சாப்பிடச் சொன்னால் அது தப்பா?

$ பகிர்ந்துண்ணல் என்றால் தனித்தனி தட்டு கிண்ணம் எல்லாம் உபயோகிக்கலாமே! 
                      
9.குழந்தைகள் மிச்சம் வைப்பதைப் பெற்றோர் சாப்பிடுவது சரியா?

$ மிச்சமிருப்பது தரக்குறைவாக இல்லாத பக்ஷத்தில் நான் சாப்பிட்டு விடுவேன்.

# உணவை விரயம் செய்யாமை சாலவும் நன்று.


10. குழந்தைக்குத் தனியாக உணவைக் கொடுப்பது நல்லதா? அல்லது நம் தட்டிலிருந்து எடுத்து உண்ணப் பழக்கம் செய்வது நல்லதா?

$ பருப்பு நெய் கலந்த சாதத்தை சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு நாமும் அருகில் வேறு தட்டில் போட்டு சாப்பிட்டால் குழந்தைகள் ஓரிரு நாட்களில் தானே எடுத்து சாப்பிடக் கற்றுக் கொள்வார்கள்.

# தனியாகக் கொடுத்து உண்ணக் கற்பிப்பது நல்லது. அது படிப்படியாக சாதிக்க வேண்டிய ஒன்று. 

குறிப்பு:
# கேள்வி பதில் ஒரு பொழுது போக்கு. நம்முடன் இவர் ஒத்துப் போகிறாரா எனும் தேடல். மாற்றுக்கருத்தை அறியும் ஆவல். மற்றபடி பதிலளிப்பவர் அதி மேதாவி அவர் சொல்வது மிகச் சரியான கருத்து என்று எண்ணிவிடக்கூடாது.



பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சிலரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம்,அவர் நம் கண் முன் வந்து நிற்பார்கள் அதை அவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட அனுபவங்கள் உங்களுக்கு உண்டா?

# எல்லாருக்கும் சில சமயம் நடந்திருக்கும். நம்பாததன் காரணம் ஞாபகமறதியாக இருக்கும். 

& எனக்கு இது அடிக்கடி நிகழ்ந்துள்ளது. அது போல, நண்பர்கள் நினைக்கும்போது நான் அங்கு சென்று நின்ற அனுபவமும் நிறைய உண்டு. இவற்றை coincidence என்று ஒதுக்கிவிட முடியாது. Thought waves travel. நாம் மற்றவர்களைப் பற்றி நினைப்பதும் மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதும் சில எண்ண அலைகளை உண்டாக்கும். சில சமயங்களில் அவை ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ESP (Extra sensory perception) மூலம் உணரப்படலாம். நாம் relaxed மன நிலையில் இருக்கின்ற சமயங்களில் இந்த உணர்வு நிலை மேம்பட்டு இருக்கும். 

கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறீர்களா?

# என் அல்லது என் அடுத்த வாரிசுகளின்பிறந்த நாளுக்கு என்றால் இல்லை.  கேக் வெட்டுவது என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் பேரன்களின் பிறந்த நாள் கேக் கிஃப்ட் ரிட்டர்ன் கிஃப்ட் பழகிவிட்டது.

& நான் பிறந்த பாவத்துக்கு - பாவம் ஏனுங்க கேக்கை வெட்டனும்! 



நெல்லைக் தமிழன் : 

1. நம் இந்தியத் திருமண முறையில், பெண், புகுந்த வீட்டுக்குப் போன பிறகு, தன் அப்பா அம்மாவை தன் கூடவே வைத்துக்கொள்ளணும் என்று சொல்வதே (ஒரே குழந்தையாக, சகோதரர்கள் இல்லாதவர்கள் தவிர) தவறல்லவா?  

# இதே ரீதியில் சொல்வதானால் சகோதர சகோதரியர் உள்ள நபரிடம் பெற்றோர் தொடர்ந்து வசிக்கக் கூடாது என்றாகிறதே அது சரியான செயலாக இருக்குமா ?

இந்த மாதிரி பிரச்சினைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையதாக இருக்கும். எனவே தீர்வு பொது விதிகளுக்குப் பொருந்தாததாக இருக்கும்.

$ தனிமனித சூழ்நிலைகள் மாறுபடலாம். பொது சமூக விதிகள் பொருந்தா.
                                      
2. பிறர் துன்பத்தில் இன்பம் காணும் போக்கு ஏன் பல மனிதர்களிடத்தில் இருக்கிறது?

# இது மனித மனதின் அடிப்படையான அமைப்பின் செயற்பாடு.

$ வேணுங்கட்டைக்கு வேணும்! 
வெண்கலக் கட்டைக்கு வேணும்...! 

& பல அல்ல. சில sadistகளிடம் மட்டுமே. 

 ===============================================

அவல், பொரி, கடலை. 


யாருடைய திருமணப் பத்திரிகை. பின் குறிப்பு சொல்வது என்ன? 




என்ன படம்? 

இன்றோடு அவர் மறைந்து மூன்று வருடங்களாகிவிட்டன. 


===============================

147 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. மீதான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊ துரை அண்ணன் 2ண்ட்டூஊஊஉ:) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.... ஹா...   தப்புக்கணக்கு! வாங்க அதிரா....

      நீக்கு
    2. அவர் கொமெண்ட் பார்த்த பின்புதான் நான் கொமெண்ட் போட்டேன்:) ஶ்ரீராம்:)... கீழிருந்து மேலே மீதான் 1ஸ்ட்டூ இப்போதைக்கு:)

      நீக்கு
    3. ஹா...  ஹா.. ஹா...  இப்படியும் ஒரு கணக்கு.   விடையைப் பார்த்து விட்டு கேள்விக்கு வரும் கணக்கு!

      நீக்கு
  3. ///1 இத்தனை ஆனந்தாக்களும்,சாமியார்களும் தேவையா///
    பூஸானந்தாவைக் கேக்கல்லத்தானே வல்லிம்ம?:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...ஹா...     அதைப் பார்த்ததும்தான் அவருக்குக் கேள்வியே தோன்றியிருக்குமாய் இருக்கும்!

      நீக்கு
  4. கீசாக்கா இம்முறை மின்னி முழக்கிட்டா ... கேள்வியும் பதில்களும் அருமை.

    ////வேணுங்கட்டைக்கு வேணும்!
    வெண்கலக் கட்டைக்கு வேணும்...! ///
    கட்டியா கட்டையா? கீசாக்கா மேடைக்கு வரவும்..தமிழில் இலக்கணப் பிழை விட்டிட்டார் கெள அண்ணன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த புதனுக்கான முதல் கேள்வியைக் கேட்ட அதிராவுக்கு நன்றி!

      நீக்கு
    2. ஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஸ்ஸன் மார்க் போட்டிட்டனோ அட கடவுளே:).. ஹா ஹா ஹா

      நீக்கு
    3. அது கௌ அண்ணன் இல்லை. கேஜி அண்ணன்! :)))) அவர் தான் $ இல் பதில் கொடுப்பார். :))))))

      நீக்கு
    4. அவர்கள் இருவரிலும் பெயர்க்குழப்பம் வருது எனக்கு கீசாக்கா:) கெள அண்ணனின் பெயரைக் கெள எண்டே வைக்கச் சொல்லுங்கோ கே ஜி எல்லாம் கஸ்டமா இருக்கு:)...

      நீக்கு
    5. KGG. K.G.Gouthaman, KG= K.G.Subramanian. He is KG only and Gouthaman is KGG. :)))))))))))

      நீக்கு
  5. ஆகா...

    கார்த்திகைப் பிறை போல காபி அதிரா...
    காபி குடித்தாயிற்றா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேய்க்கிறீ க்க துரை அண்ணன்:) பெயர் மாத்த மறந்திட்டேன்ன் ஹா ஹா ஹா..
      இப்போ காப்பி எப்பூடி.. இப்போ எங்களுக்கு இரவு 12.38

      நீக்கு
    2. எனக்கு காஃபி அடிமையாக்கும்...

      காஃபி குடிக்க என்று ஒரு நேரமா?...

      நீக்கு
    3. //..காஃபி குடிக்க என்று ஒரு நேரமா....?

      மிகச் சரியாகச் சொன்னீர்கள். Coffee is the round-the-clock drink !

      நீக்கு
  6. பூஸானந்தா தானாக வந்து மாட்டிக் கொண்டாரா!....

    பதிலளிநீக்கு
  7. தூண்டில் போட்டு சுறாவைப் பிடிப்பது போல கேள்விகளும் பதில்களும்....

    சிந்திக்க வைக்கின்றன...

    பதிலளிநீக்கு

  8. நெல்லைக் தமிழன் :

    1. நம் இந்தியத் திருமண முறையில், பெண், புகுந்த வீட்டுக்குப் போன பிறகு, தன் அப்பா அம்மாவை தன் கூடவே வைத்துக்கொள்ளணும் என்று சொல்வதே (ஒரே குழந்தையாக, சகோதரர்கள் இல்லாதவர்கள் தவிர) தவறல்லவா? /////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்:... இதிலென்ன தவறிருக்குதாம்?... பெற்றோரை வச்சுப் பார்க்க, ஆண்பிள்ளை மட்டும்தான் ஆசைப்படலாமோ கர்ர்ர்ர்ர்ர்:)... பெற்றோரைக் கவனிக்காட்டிலும் திட்டுவீங்க:), கவனிக்கப்போறேன் என்றாலும் திட்டுறீங்களே:)... முதல்ல இப்பூடிக் கேள்வி கேட்போரைத் தேம்ஸ்ல தள்ளோணும்:)... ஹா ஹா ஹா ஹையோ ஒரு புளோல வந்திட்டுது விட்டிடுங்கோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன... இப்பூடிச் சொல்லிட்டீங்களே அதிரா...

      நீக்கு
    2. ஆஆ நெல்லைத் தமிழன் பிசியாக இருக்கிறார், கவனிக்க மாட்டார் எனும் தைரியத்தில் சொல்லிட்டனே... பார்த்திட்டாரே ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. கார்திகைப்பிறை அன்னக்கிளி ஆயாச்சா?  ஆ....!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா மாறிக்கீறி அன்னக்கிளியை தேம்ஸ்ல தள்ளிட்டாலும் நீந்தி வந்திடலாம் எனும் தைரியத்தில:))

      நீக்கு
    5. அடக்கடவுளே.... அன்னம் வேற... கிளி வேற. 'அன்னக்கிளி' என்பது ஒரு பெண்ணின் பெயர். அதற்கு அர்த்தம், அன்னம் மாதிரி வெண்மையாகவும், கிளி மாதிரி மூக்கு கூர்மையாகவும் (ஹா ஹா... Actually உதடு சிவந்தும் என்று அர்த்தம் கொள்ளணும்) இருக்கும் பெண் என்று அர்த்தம்....

      இந்த 'டமிள் டி' என்று சொன்ன நேரம் சரியில்லை. எதை எழுதினாலும், யாராவது மிஸ்டேக் கண்டுபிடிக்கும்படி இருக்கு. ஹா ஹா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா நான் ஒரு மண்ணுண்ணிப் பாம்பாக்கும்:)...

      நீக்கு
  9. திருமணப் பத்திரிகையும் புரியவில்லை, படமும் தெரியவில்லை....
    ஓகே நாளை சந்திக்கிறேன்ன்ன்... நல்லிரவு..
    உங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பாடகர் டி எம் எஸ் கல்யாணப்பத்திரிகை அதிரா.

      நீக்கு
    2. பத்திரிகையையும் பெயரையும் பார்த்த உடன், இது டி.எம்.எஸ். திருமணப் பத்திரிகையோ என்று தோன்றியது.

      அப்போ பஞ்ச காலம் என்பதால் ரேஷன் அரிசி விருந்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கும்.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இன்றைய நாள் பொன்னாளாக பிரகாசிக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. காகித்தப் பூக்கள், தேவதைக்கு கிச்சன் தளங்களின் சொந்தக்காரரும், நம் இனிய தோழியான அஞ்சு என்று அன்போடு அதிராவால் அழைக்கப்படும் ஏஞ்சலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...
      தகவல் அறியத் தந்தமைக்கு மகிழ்ச்சி...

      எல்லா நலமும் பெற்று
      இனிதே வாழ அன்பின் நல்வாழ்த்துகள்...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      விபரம் தந்ததற்கு நன்றி. இனிய பிறந்தநாள் காணும் சகோதரி ஏஞ்சல் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று, சீரோடும் சிறப்போடும் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்.அவ்விதமே இறைவனிடமும் பிரார்த்திக்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சகோதரி ஏஞ்சல் எல்லா நலனும் பெற்று வளமாக பல்லாண்டுகள் வாழ, வாழ்த்துகள்!

      நீக்கு
    4. அனைவருக்கும் இனியகாலை வணக்கம்.
      என் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் திருப்தியாக இருக்கிறது.

      மிக மிக நன்றி மா.
      கீதாமா கேட்ட ஆசாரக்கேள்விகளுக்கும்
      சரியான எடுத்துக் கொள்ளும்படி பதில்கள் கொடுத்திருக்கிறீர்கள்.

      பெற்றோர்கள் யாரோடு இருந்தால் எல்லாரும்
      சந்தோஷமாக இருக்கும்படி குடும்பம் நடந்து கொள்ள வேண்டும்.
      கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

      சௌந்திரராஜ பாகவதரின் மணப் பத்ரிகை
      சூப்பர்.
      ரேஷன் அரிசியைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்களே.:)
      .

      நீக்கு
    5. ஏஞ்சலினுக்கு பிறந்தநீள் வாழ்த்துகள்.

      நீக்கு
    6. தேவதை ஏஞ்சலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

      நீக்கு
    7. இதென்ன இது நடுவிலயும் கொஞ்சம் வாழ்த்துப் போகுதே:)) ஹா ஹா ஹா.. வாழ்த்துவது எங்கு வேணுமெண்டாலும் வாழ்த்துங்கோ:) நான் ஒண்ணும் வாணாம் சொல்லல்லியே:)) ஆனா கிஃப்ட்டுகள் என்வலப்புக்களை மட்டும் ஆச்சிரம உண்டியலில் போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))..

      நீக்கு
    8. இங்கேயும் நன்றி சொல்லிக்கறேன் @ நெல்லைத்தமிழன் 

      நீக்கு
    9. மிக்க நன்றி கோமதி அக்கா :)

      நீக்கு
    10. மிக்க நன்றி கௌதமன் சார்  :)

      நீக்கு
    11. மிக்க நன்றி @ கமலாக்கா :)

      நீக்கு
    12. மிக்க நன்றி துரை அண்ணா :)

      நீக்கு
  12. 1946 கல்யாணப் பத்திரிக்கை விசித்திரம். (தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.) பத்திரிக்கையை பழைய பேப்பர்க்காரனிடம் போடாமல் வைத்திருந்தவருக்கும் வாழ்த்துகள்! கல்யாணப் பத்திரிக்கையில் ஒரு கிருஷ்ணன், ராமன், சிவன், அம்பாள், கணேசன், முருகன் என்று எதையும் போடாமல், நடுவில் கைகுலுக்கல் என்ன வேண்டிக்கிடக்கிறது-அதுவும் 46-ல்?
    ஃப்ளவர் மில்ஸ், சீயக்காய்ப் பவுடர் வியாபாரம் செய்யும் சம்பந்திவாள், ரேஷன் அரிசியை முன்கூட்டியே கேட்பதன் மர்மமென்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேஷன் காலம். கல்யாண விருந்துகளுக்கு தடை இருந்தது அல்லது நிபந்தனைகள் இருந்தன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போ நான் முன் ஜன்மத்தில் இருந்ததால், இந்த ஜன்மத்தில் ஞாபகம் வரவில்லை! TMS தன் அடுத்த பிறவி எடுத்திருந்தால், இதற்கு விடை சொல்லக்கூடும்!

      நீக்கு
  13. அருமை ஏஞ்சல் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. இனிமை நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
  14. எச்சல், பத்து பார்ப்பது -- பல சமயங்களில் இது ஃபோபியா என்ற எண்ணமே வருகிறது, நிறைய வீடுகளின் நடைமுறைகளைப் பார்த்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Nellai, இதுவும் தீட்டுக்கள் பார்ப்பதும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. யூதர்கள், பார்சிகள் ஆகியோரிடமும் இந்தப் பழக்கம் இருக்கிறது. இது பற்றிய குறிப்புக்களை எடுத்து வைத்திருந்தேன். அது இந்த மடிக்கணினியில் இல்லை! :( பார்சிகளின் திருமணத்திலும் நம்மைப் போல் பருப்புத்தேங்காய் (மெலிதாகக் கூம்பு நீள வடிவில் இருக்கும்.) காணலாம். குழந்தைப் பிறப்பு மற்றும் குடும்பத்தினர் இறப்பு சமயம் உள்ள தீட்டு பற்றி யூதர்களுக்கு இருக்கும் வழக்கங்கள் நம்முடையதை ஒத்து இருக்கும்.

      நீக்கு
    2. எச்சில், பத்து, ஆசாரங்கள் பற்றி இன்னொரு முறை விரிவாகப் பேசலாம்.

      நீக்கு
  15. டி.எம்.எஸ். அவர்களின் திருமண பத்திரிகையை பார்த்ததும், என் அப்பா,அம்மாவின் திருமண பத்திரிகை நினைவுக்கு வந்தது.  அப்போது யுத்த காலம்,எனவே உணவுத் தட்டுப்பாடு நிலவியதாம். அதோடு கெஸ்ட் கண்ட்ரோல் விதி வேறு அமலில் இருந்ததால், திருமணத்திற்கு வருபவர்கள் தங்களுக்கான அரிசியை தாங்களே கொண்டு வந்தார்கள் என்று காட்டவே கல்யாண பத்திரிகையில் இப்படி அச்சடிப்பார்களாம். கெஸ்ட் கண்ட்ரோல் என்பதால் எங்கள்  பெற்றோரின் திருமணத்தில் சாப்பாடு போட்ட இலைகளை வீதியில் எரியாமல், குழி தோண்டி புதைத்தார்களாம். திருமணத்தின் பொழுது என் அம்மாவுக்கு பதினோரு வயதுதான், சாரதா சட்டத்தை மீறி நடத்தப்பட்ட திருமணம். அதற்கு வேறு பயந்து கொண்டிருந்தார்களாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவும் சொல்லி இருக்கிறார்கள். உணவு தட்டுப்பாடு பற்றி.

      நீக்கு
    2. ஆம். உணவுப் பஞ்ச காலம் பற்றி என் அம்மாவும் அடிக்கடி குறிப்பிட்டது உண்டு.

      நீக்கு
    3. என்ன பானுமதி அக்கா சொல்றீங்க? 11 வயசாஆஆஆஆஆ?.. அப்போ குழந்தைத்திருமணமாச்சே அது..

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளுக்கு பதில்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  18. //..இன்றோடு அவர் மறைந்து மூன்று வருடங்களாகிவிட்டன.//

    அதாவது, அந்த ‘அக்ரஹார அம்மணி’ பெரிய மனசு பண்ணி அப்பாவித் தமிழர்களுக்காகக் குறிச்சுச் சொன்ன நாளிலிருந்து.. மூன்று வருடங்களாகிவிட்டன இன்றோடு.

    பதிலளிநீக்கு
  19. பின் குறிப்பு சொல்வது என்ன?

    பஞ்ச காலத்தை, விருந்து விழாக்களில் இவ்வளவு பேர்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்த காலத்தை பற்றி சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  20. //காசிக்குச் சென்று திரும்புபவர்கள் இனிமேல் தாய், தகப்பன் ஸ்ராத்தமோ அமாவாசைத் தர்ப்பணங்களோ செய்ய வேண்டாம் என அவர்களாக முடிவெடுப்பது சரியா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா?// பெரும்பாலும் வடஇந்தியர்கள், வட இந்தியாவில் வாழும் தென்னிந்தியர்கள் இந்த தவறான கொள்கையை பரப்பி வருகிறார்கள். தர்ப்பணம், ச்ராத்தம் போன்றவை செய்யாமல் இருக்கவும், அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்கவும் இப்படி சொல்லிக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. 

    பதிலளிநீக்கு
  21. Happy birthday & many more happy returns of the day Anjel. Have a wonderful year ahead!

    பதிலளிநீக்கு
  22. ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5 அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றோடு மூன்று வருடங்கள் முடிகின்றன என்றுதான் எழுதியுள்ளேன்.

      நீக்கு
  23. ஏஞ்சலினுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் சார் :)

      நீக்கு
  24. நேற்றிரவு அதாவது அதிகாலை 04:30 க்கு நான் கண்ட கனவு உறவினர் வீட்டில் உறங்கினேன் குடும்ப உறவினர் ஒருவரோடு மூன்று நபர்களாக இறந்து கிடக்கின்றனர் அதாவது ஆடு பலி கொடுத்தது போன்ற உணர்வு எனக்கு.

    பிறகு சமைத்து சாப்பிட எல்லோரும் தயாராக நான் மட்டும் மனிதர்களை சாப்பிட மாட்டேன் என்று சண்டையிடுகிறேன் சட்டென விழித்து விட்டேன்.

    ஏழு மணிக்கு உறவினரிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன் பயங்கர மோசமான கனவைப்பற்றி...

    சிறிதே நேரத்தில் உறவினருக்கு போன் வந்தது அவரது பெரிய மாமியார் இறந்து விட்டதாக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவுகளைக் கணிப்பது கடினம். இப்படித் திடீரென ப்ரசன்னமாகி, எதையாவது ஹிண்ட் செய்துவிட்டு ஓடிவிடும்..

      நீக்கு
  25. ஜெயலலிதா நினைத்திருந்தால் அவருக்கு இருந்த வசதிக்கு நூறு வயது வரை கூட வாழ்ந்திருக்கலாம்.விதி யாரை விட்டது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோசப் சார்.... 'வசதி'யைப் பொருத்து நிறைய வருடங்கள் வாழலாம்னா, 10% மக்கள், உலகில் சாகாமலேயே இருக்க ஆசைப்படுவார்கள். உணவுக் கட்டுப்பாடு அவர் மேற்கொள்ளவில்லை. வேலையின் அழுத்தங்கள், தவறாகப் போன 'இயற்கை வைத்தியம்-உடல் எடையைக் குறைப்பதற்குப் பதில் கிடு கிடுவெனக் கூட்டிவிட்டது', அவரது வீட்டின் ஜீன் - தோராயமாக 60 வயதுதான் வாழ்க்கையாக இருந்தது.

      நீக்கு
  26. நெல்லைத்தமிழன் தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழன் தம்பதியருக்கு நல்வாழ்த்துகள். Many, many happy returns of the day !

      நீக்கு
    2. வணக்கம் நெ. தமிழன் சகோதரரே.

      விபரம் அறிந்தேன். தங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். தாங்கள் இருவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ இறைவனை பணிவுடன் பிராத்தித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. அன்பு நெல்லைத்தமிழன் தம்பதியருக்கு இனிய
      மண நாள் வாழ்த்துகள். என்றும் வளமுடன்
      வாழ பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      25 டக் என்று கடந்துவிட்டது. நன்றி ஏகாந்தன் சார். அதில் கிட்டத்தட்ட 18 வெளிநாட்டில்.

      நன்றி கமலா ஹரிஹரன் மேடம்...

      நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  27. நெல்லைத் தமிழன் தம்பதியருக்கு நெஞ்சார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார்... ஒரு விநோதம் நடந்தது நேற்று. அதனால் நாங்கள் நினைத்தபடி வெளியில் சென்று உணவு சாப்பிடணும், வேறு இடத்துக்குப் போகணும் என்ற நினைப்பு நடக்கவில்லை.

      நீக்கு
  28. நெல்லையாருக்கும் திருமதி. நெல்லையாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  29. பெரும்பலான கேள்விகள் நாம் நினைக்கும் பதிலோடு ஒத்துப்போகிறதா என்பதை நோக்கவே கேட்கப்படுகின்றனவோ சில கேள்விகள் இதெல்லாம் நமக்குத் தெரியும் என்பதைக்காட்டவொ

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

    எச்சில், பத்து என்றதும், அதை கடைபிடித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. வீட்டில் நடைபெறும் விஷேச நாட்களில் பெரிய ஹால் போன்ற அறைகளில், சாப்பாட்டு பந்தி முடிந்ததும் அரை பர்லாங் தூரம் குனிந்தபடி சாணி தெளித்து சுத்தி வைப்பதும், பின்னாலேயே ஒருவர் துணி வைத்து துடைத்தபடி வந்து பின் இடம் நன்றாக காய்ந்த பின், மற்றொரு பந்திக்கு இலைகள் போடுவதும் நினைவுக்கு வருகின்றன. மேலும் கீழே அமர்ந்து சாப்பிடுகிறவர்களும், குனிந்து நிமிர்ந்து உணவு பரிமாறி உபசரிப்பவர்களுமாக ஒரு உடல் உழைப்பு அதில் இருந்தது. இன்று நீளமான பெஞ்சுகளில் கலர் பேப்பர் விரித்து அதன்மேல் இலைகளிட்டு, சாப்பாட்டு கடை முடிந்ததும் பேப்பரோடு சுருட்டி எடுத்த பின் அடுத்த பந்திக்கு அதே பெஞ்சுகளில் பேப்பர்கள் அவசரமாக விரிக்க தயாராகிறது. எச்சில் பத்தைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. இப்போதெல்லாம் அந்த குனிந்து நிமிரும் கடினமான வேலையெல்லாம், ஜிம்மிற்கும், பூங்காவிற்கும் போய் விட்டது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. நெல்லைத் தமிழன் தம்பதியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்..... முக்கியமான மைல்ஸ்டோன் திருமண நாள் இது. ஆனால் எத்தனையாவது என்று சொல்ல ஆசைதான் ஹா ஹா

      நீக்கு
    2. // 25 டக் என்று கடந்துவிட்டது. நன்றி ஏகாந்தன் சார். அதில் கிட்டத்தட்ட 18 வெளிநாட்டில்.
      // !!!! :))

      நீக்கு
    3. அது என் வயசாக இருக்கக்கூடாதோ 007 கேஜிஜி சார்?

      நீக்கு
    4. ஹி ஹி - அப்படி வயசாக இருந்திருந்தால், சின்ன வயதிலேயே வெளிநாடு சென்ற முதல் நெல்லைத்தமிழர் நீங்கதான்!

      நீக்கு
  32. எல்லாக்கேள்விகளுக்கும் பதில் அளித்த ஆ"சிரி"யப் பெருமக்களுக்கு என் நன்றி, என்றாலும் மறுபடி கொஞ்சம் சாவகாசமாக வரணும்.

    பதிலளிநீக்கு
  33. நெல்லைத்தமிழருக்குத் திருமண நாள் வாழ்த்தையும், பிறந்த நாள் வாழ்த்தையும் அனுப்பி வைச்சுட்டு அதை அவர் பார்க்கிறதுக்காகச் சொல்லிச்சொல்லிச்சொல்லி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் கீசா மேடம்.... கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. வாழ்த்து அட்டை/கடிதம் நமக்கு தபாலில் வந்த உடனேயே மனதில் நன்றியும், சந்தோஷமும் வந்துவிடாதா? அதைத் திறந்து படித்துப் பார்த்தால்தானா அந்த உணர்வு வரும்?

      பயணத்தில் இருந்ததாலும், அதற்கு முன் முடிக்கவேண்டிய வேலைகளில் பிஸியாக இருந்ததாலும் இந்தத் தாமதம்.

      நீக்கு
    2. நீங்க பார்த்தீங்கனோ, சந்தோஷம் அடைந்தீர்கள் என்றோ எனக்கு எப்படித் தெரியும்? :))))))))

      நீக்கு
    3. இந்தப் பதிலைப் படிச்சுட்டேன். ஹா ஹா

      நீக்கு
  34. அந்தத் திரைப்படம் என்னனு யாருமே சொல்லலை! ஜெயலலிதா இறந்தது ஒரு தேதி, அறிவித்தது ஒரு தேதியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீசா மேடம். முந்தைய நாள் இறந்திருப்பார். மறுநாள் இரவுதான் எல்லோருக்கும் அனவுன்ஸ் செய்தார்கள். இது சாதாரண நடைமுறைதான். பெரிய தலைவர்கள் இறந்தால், அதற்கான ஏற்பாடுகள் நிறையச் செய்யணும், சட்டம் ஒழுங்கு விஷயங்கள் இருக்கு. அதனால் பொதுவா மாலை 6-7 மணிக்கு மேல்தான் (ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள்) வீடு போய்ச் சேர்ந்த பிறகுதான், செய்தியை வெளியில் சொல்லுவாங்க. ஜெயலலிதா விஷயத்தில் தந்தி தொலைக்காட்சி உடனேயே சொல்லிவிட்டு வாபஸ் வாங்கினாங்க.

      நீக்கு
    2. என்னுடைய அனுமானம் அவர் அப்பலோவில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே இறந்திருப்பார் என்பது.

      நீக்கு
    3. //..அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே இறந்திருப்பார் என்பது.//
      இதைத்தான் டிவி9 என்கிற கன்னட சேனல் அவர் அட்மிட் ஆன இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே சொன்னது. பணபலத்துடன் ’விஞ்ஞான ரீதி’யாகக் கையாளப்பட்ட இன்னும் சில நடவடிக்கைகளை சில பத்திரிக்கைகளும் பிறகு ’லீக்’ செய்தன.

      நீக்கு
  35. நெல்லை தமிழருக்கும், அவர் மனைவிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... வாட்ஸப்பில் ஏதோ இடுகையில், 'பா.வெ' என்றிருந்தது (கடைசியில்). உடனே நீங்கள்தான் எழுதியிருப்பீர்களோ என்று மனதுக்குத் தோன்றியது.

      நீக்கு
  36. //இத்தனை ஆனந்தாக்களும்,சாமியார்களும் தேவையா? //

    வல்லிம்மா... தேவைதான். ஒரு சங்கீதா, உடுப்பி ரெஸ்டாரண்ட், ஒரு நகரத்துக்குப் போதும்னு சொல்லமுடியுமா? டேஸ்டுக்கு ஏத்தபடி எத்தனையோ ஹோட்டல்கள், ஃபாஸ்ட் ஃபுட், ரெஸ்டாரண்ட், கையேந்தி பவன்...... அதுபோல, கோவிலும், ஏகப்பட்ட கோவில்கள் ஒரு சிறிய ஊரிலேயே இருக்கும்.

    ஆனா எல்லா ஆனந்தாக்களும், சாமியார்களும் நல்லவங்களா இல்லை டுபாக்கூரா என்பது, அவர்களை அணுகி அனுபவம் பெறுபவர்களுக்குத்தான் தெரியும்னு நினைக்கறேன்.

    பதிலளிநீக்கு
  37. //கலப்புத் திருமணங்கள் பெருகி வருவதற்கு என்ன காரணம்?//

    கலப்புத் திருமணம்னு ஏன் சொல்றீங்க? மனிதனுக்கும் மாட்டுக்கும் திருமணம் நடந்தால் அது கலப்புத் திருமணம். இதுல இரண்டு மனிதர்கள்தானே திருமணம் செய்துக்கறாங்க (மனுஷன், மனுஷி - ஆண், பெண்). அப்புறம் ஏன் கலப்புத் திருமணம்னு சொல்லணும்? சாதி ஒழியணும்னு நினைக்கறவங்க, வெவ்வேறு சாதியில் பெண்/ஆண் எடுத்து திருமணம் செய்துக்கறாங்க. அது அவங்களோட இஷ்டம்.

    பொதுவா காலம் காலமாக குடும்பத்தில் வந்துகொண்டிருக்கும் முறைகளைத் தொடரணும்னு நினைக்கறவங்க, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளமாட்டாங்க. அந்த மாதிரி பழக்கங்களே தேவையில்லை, அவையெல்லாம் இல்லாத இடத்தில்தான் நாம் வாழப்போகிறோம் என்று நினைக்கறவங்க சாதியைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்துக்குவாங்க. அவ்ளோதான்.

    நிறையபேர், 'என் வழி எனக்கு', 'அவள் வழியில் தலையிட மாட்டேன்' என்று போலியாப் பேசுவாங்க. ஆனா காலம் செல்லச் செல்ல அவங்களுக்கே தெரியும்... தன் குழந்தைகள் ஒரு வழியில்தான் வளர்க்கப்படுவார்கள், அவங்க வாழ்க்கை அந்த ஒரு வழியில்தான் தீர்மானம் செய்யப்படும் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்ப்பு என்பது எதிர்காலம். மாற்றம் என்பது நிகழ்காலம். அனுபவம் என்பது கடந்தகாலம் ஆகிவிடுகிறது!

      நீக்கு
  38. நெல்லைத் தமிழன் தம்பதியருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  39. //இறந்த பின்னர் செய்யும் உறுப்பு தானம் // - எம் ஜி ஆர் ரசிகர்களிடம், அவருக்கு நீங்கள் உங்கள் கிட்னியை தானமாகத் தருவீர்களா என்று கேட்டபோது, 'அது எப்படி எங்க கிட்னி அவருக்கு பொருந்தும்? எங்க உயிரைக் கேளுங்க..தருவோம். அவர் எவ்வளவு சிவப்பு. எங்க கலர் கருப்பு. எங்க கிட்னி எப்படி அவருக்கு பொருந்தும்'னு பதில் சொன்னாங்க.

    நமக்குன்னு செண்டிமெண்ட், புரிதல் இதெல்லாம் 'உறுப்பு தானம்' என்பதை சுலபமாகச் செய்ய மனம் ஒப்பாது. அதைப்பற்றி நிறைய விளக்கங்கள், விளம்பரங்கள் போன்றவை வந்தால் மனது நிறையபேருக்கு மாறும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.
      காக்காய் உண்டு நரியுண்டு
      வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
      மனிதரில் இத்தனை வகையுண்டு
      அவர் வாக்கினில் தெரியும் யாரென்று!
      =====கண்ணதாசன்

      நீக்கு
    2. இரத்ததானம் செய்யும்படி தொழிற்சாலையில் சிலரிடம் சொல்லியபோது, " சார் ! என்னுடைய உடம்பில் ஓடுவது கெட்ட ரத்தம் - நான் ரத்ததானம் செய்யக்கூடாது" என்று சொல்லி எஸ்கேப் ஆனார்கள்!

      நீக்கு
  40. நெல்லை முரளி தம்பதியினருக்கு அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள். ஆசிகள். எல்லா நலன்களும் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  41. @நெல்லைத்தமிழன் அண்ட் திருமதி நெல்லைத்தமிழன் இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  42. எனது பிறந்தநாளை வாழ்த்துக்களால் சிறப்பாக்கியமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் :)
    நான் தான் கேள்விகள் கேட்கக்கூட நேரமில்லாம இருக்கேன்:) விரைவில் சூழல் மாறும் 

    பதிலளிநீக்கு
  43. இந்தக் கேள்வியைக் கேட்கலாமா வேண்டாமா எனப் பலத்த சிந்தனை/ ஆனாலும் இது பொதுவாகக் கேட்பது தான். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லுவது இல்லை.

    பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் ஆண்களுக்கு அவர்களிடம் ஈர்ப்பு வருவதை ஒத்துக்கலாம். ஆனால் அந்த ஈர்ப்பு பலாத்காரம் செய்வது, கொல்வது வரை போவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது ஏன்?

    தான் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லும் பெண்ணிடம் கூட பலாத்காரம் செய்து அவளை எரித்துக்கொல்லும்வரை போகும் ஆண்கள் உண்மையில் மனிதர்களா?

    பதிலளிநீக்கு
  44. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மேலுள்ள கேள்வியைக் கொஞ்சம் திருத்திக் கேட்டிருக்கேன்! // கோயில் சிலைகளில் ஆண், பெண் இணைந்திருப்பதைக் காட்டுவது ஆன்மிகத்தின் அடிப்படையே என்பதைப் புரிந்து கொள்ளாமல் அனைவருக்கும் ஆபாசமாகத் தோன்றுவது ஏன்? ஏன் இங்கே அனைவரும் வந்து போகும் இடங்களில் இவைகள் வைக்கப்பட்டுள்ளன என்பதன் தாத்பரியத்தை அறிந்து கொள்ளாமல் நம் வசதிக்கு ஏற்பப் பேசுவது சரியா? நம் முன்னோர்கள் இவற்றின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்து கொள்ளாமலா வைத்திருப்பார்கள்?

      கோயில்களின் கட்டுமானத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு எல்லோரும் தரிசிக்க இயலாது. ஆனால் இத்தகைய சிலைகள் ஏன் வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? அதை விடுத்து ஆபாசத்தை மட்டுமே முன்னிறுத்துவது ஏன்?

      நீக்கு
    2. இப்போ குழம்பிட்டேன்! இதுக்கு பதில் சொல்லனுமா அல்லது அதற்கா ?

      நீக்கு
    3. //ஆபாசமாகத் தோன்றுவது ஏன்?// - கீசா மேடம்... எது 'ஆபாசம்' என்பதற்கு ஏதேனும் அளவுகோல் வைத்திருக்கிறீர்களா? இன்றைக்கு பெண்கள் மேலாடை இல்லை என்றால் அல்லது சரியாக இல்லை என்றால் மிக ஆபாசமாக நாம் நினைக்கிறோம். 300 வருடங்களுக்கு முன்பு அப்படியா இருந்தது? பார்க்கும் பார்வையும், காலமுமே எது ஆபாசம் என்பதற்கு அளவுகோலாக இருக்கிறது.

      நீக்கு
    4. "ஆபாசம்" என்பது என் சொந்தக்கருத்து அல்ல நெல்லைத் தமிழரே! பொதுவாக அனைவரும் சொல்வதை/நினைப்பதைக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஸ்ரீகிருஷ்ணனின் "ராசலீலை" கூட உள்ளார்ந்த பொருள் பொதிந்தது. அதைக் குறித்து எழுதியும் இருக்கேன். எனக்கு இதில் எல்லாம் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

      நீக்கு
  45. சங்கத்தமிழ், சிலப்பதிகாரக் காலத் தமிழ், பக்தி காலத்தின் தேவார, திருவாசகங்களின், பிரபந்தங்களின் தமிழ் இவற்றில் நிறைய வேறுபாடு காண முடியும். ஆனாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது எதைக் காட்டுகிறது?
    வடமொழி ஆதிக்கம், ஆரியப் படையெடுப்பு என்றெல்லாம் சொன்ன காலத்தில் தமிழில் ஏற்பட்டிருந்த மறுமலர்ச்சி இப்போது நிலைத்து இருக்கிறதா?
    கம்பரும் சரி, வில்லிபுத்தூராரும் சரி, சம்ஸ்கிருதம் படித்தே முறையே ராமாயணம், மஹாபாரதம் எழுதினார்கள். அப்படி இருக்கையில் சம்ஸ்கிருதம் வந்து தமிழை அழித்துவிடும் என்று சொல்லுவது சரியா?
    சம்ஸ்கிருத வெறுப்பு இடையில் வந்தது தான் அல்லவா? ஏனில் ஸ்தபதிகளும், சிற்பிகளும், மருத்துவர்களும், நடனக்கலை ஆசிரியர்களும் கட்டாயம் சம்ஸ்கிருதம் படித்தே ஆகவேண்டும். அப்படி இருக்கையில் அதனால் தமிழ் அழிந்து விடும் என நம்ப வைப்பது சரியா?
    தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலத்தை ஏன் யாருமே எதிர்ப்பதே இல்லை? அது நம் நாட்டு மொழியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பவும் எங்களை மாட்டிவிட சதியா!

      நீக்கு
    2. எ.பி. ஆசிரியர்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு கோபமா? வரும் கணைகள் எல்லாம் அவர்களை நோக்கித்தான் வரப்போகிறது. 'சங்கிகளின் பதில் அப்படித்தானே இருக்கும்' என்று 'பிரசங்கிகள்' உளறப்போகிறார்கள்.. ஹா ஹா

      நீக்கு
    3. ப்ரபந்தங்கள் எனப்படும் திவ்யப்ப்ரபந்தங்கள் தமிழில் இயற்றப்பெற்றன. அவைகளிலும் வடமொழிச் சொற்கள் 'தமிழில்' எழுதப்பட்டன. (தேஜஸ் - தேசு, வைஷ்ணவன் - வைட்டினவன், எனபன போன்று) அவைகளை எழுதிய ஆழ்வார்கள் பெரும்பாலும், பிராமணர்கள் அல்லர். ஆனால் எழுதிய கருத்துக்கள் அனேகமாக அனைத்தும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களைப் படித்து அதில் கூறப்பட்டுள்ளதைத் தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டவை.

      அதனால்தான் 'வெள்ளாளர்' குலத்தைச் சேர்ந்த நம்மாழ்வார் எனப்படும் 'காரிமாறன்', 'வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்' என்று கூறப்படுகிறார்.

      'சமஸ்கிருத வெறுப்பு' உள்ளவர்கள் நவீனத் தமிழர்கள். அவர்களின் எதிர்ப்பு 'சமஸ்கிருதம்' அல்ல. பிராமண எதிர்ப்பு. அவ்ளோதான். மற்ற மொழிகளை அவர்கள் எதிர்த்தால், அவர்களைத் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விரட்டி விடுவார்கள் என்பதால், 'சமஸ்கிருதத்தை' மட்டும் தைரியமாக எதிர்ப்பார்கள். அவ்ளோதான் விஷயம்.

      இந்தத் தமிழ்க்காவலர்களில் பெரும்பாலானவர்கள், பிறமொழி கலக்காமல் தமிழில் எழுதத் தெரியாதவர்கள்.

      நீக்கு
    4. ஆணித்தரமான கருத்துகள்! நன்று, நன்றி!

      நீக்கு
    5. வைணவர்களில் சாதி பார்ப்பதே தவறு. நாங்கள் பார்க்கவேண்டியது எல்லாம், இவனும் நம்மைப் போன்ற வைணவனா என்பதை மட்டுமே. ('எம் அடியார்களாயின் கொடுமினீர் கொண்மின் என்பது திருமாலை). இருந்தாலும் பிறர்க்கும் புரிய வேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறேன். நம்மாழ்வார் வேளாளர், திருப்பாணாழ்வார் பாணர் குலம், திருமங்கையாழ்வார் அனேகமா முத்தரையர்.... என்று லிஸ்ட் ஓடும். ஸ்ரீரங்கத்துக்குத் தெற்குப்பக்கம், 'ஆழ்வார்' என்று சொன்னாலே அது நம்மாழ்வாரைக் குறிக்கும். சோழ நாட்டில், ஆழ்வார் என்றால் அது திருமங்கையாழ்வாரைக் குறிக்கும்.

      இதே போன்றதுதான் சைவர்களின் நாயன்மார்களும். அவர்களிலும் பிராமணர்கள் என்பது மிகக் குறைவு.

      ஆரியப் படையெடுப்பு என்று ஒன்று கிடையாது என்பதுதான் வரலாற்றறிஞர்களின் கூற்று. திராவிடர்கள் என்பவர்கள் தென் தமிழகத்தின் பூர்வகுடிகள். அதனால்தான் நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்திற்கு திராவிட வேதம் என்று பெயர்.

      தென்னிந்திய மொழிகளில் தமிழ் தொன்மையானது. உலகத்தில் சிறந்த தமிழ் யாழ்ப்பாணத்தில் பேசும் தமிழ். அதற்கு அடுத்தது திருநெல்வேலியில் பேசும் தமிழ். இவைகள் ஓரளவு செம்மையானவை. இதை நான் கூறவில்லை.

      தமிழகத்தில் வரலாற்றுச் சம்பவங்கள் காரணமாக, தெலுங்கு பேசுபவர்கள், உருது பேசுபவர்கள் அதிகம்பேர் உண்டு. வேறு மொழி பேசுபவர்கள் மைக்ரேட் ஆனவர்கள்.

      நீக்கு
    6. ஹாஹாஹா, ஜாலியா இருக்கு. என்ன பதில் வரப்போகிறதுனு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கேன். :))))))

      நீக்கு
    7. //ஆரியப் படையெடுப்பு என்று ஒன்று கிடையாது என்பதுதான் வரலாற்றறிஞர்களின் கூற்று. திராவிடர்கள் என்பவர்கள் தென் தமிழகத்தின் பூர்வகுடிகள். அதனால்தான் நாலாயிர திவ்யப்ப்ரபந்தத்திற்கு திராவிட வேதம் என்று பெயர். // என்னோட "கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!" தொடர்களின் முதல்பாகத்தின் ஆரம்பத்தில் இதைக்குறித்து விரிவாக விளக்கங்கள் கொடுத்திருப்பேன்.

      நீக்கு
    8. நெல்லை வெளுத்துவாங்கியிருக்கிறாரே..! வழக்கம்போல் தாமதாக வந்து பார்க்கிறேன்.
      அடுத்த புதன்கிழமை என்னென்னவெல்லாம் பதில்களாகச் சொல்லி, கேஜிஜி & கோ. விழிக்கப்போகிறதோ.. புதனை மிஸ் செய்துவிடக்கூடாது!

      நீக்கு
    9. நாங்க மாட்டிகிட்டு முழிக்கிறத பாக்க அம்புட்டு சந்தோஷமா சார் உங்களுக்கு!

      நீக்கு
    10. சில சமயங்களில் எப்படியெல்லாம் டபாய்க்கிறீங்கங்கிறத பாக்கறதுலயும்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!