புதன், 25 டிசம்பர், 2019

புதன் 191225 :: அல்லாத்துக்கும் அலைபேசி சரிப்பட்டு வருமா?


எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! வல்லி சிம்ஹன்: 

1. அலைபேசியில் ,அத்தனை தளங்களையும் மேய்வது கஷ்டமாக இல்லையா?  தளங்கள் மட்டும் இல்லை. மெயில்,யு டியூப்,சினிமாவே பார்க்கிறார்களாமே!


# அது ஒரு வகை ரசனை. எனக்குப் பிடிக்கும். I plead guilty, your Honour.               

& அலைபேசியில் அத்தனை தளங்களையும் மேய்வது கொஞ்சம் கஷ்டம்தான். 

அதனால சிலவற்றுக்கு ஐபாட் துணைகொண்டு மேய்வது உண்டு. 

ஆனால் சமீபத்தில், அலைபேசியில் MX PLAYER ஆப் நிறுவி, QUEEN web series சில எபிசோட்கள் பார்த்தேன். 

ப்ளாக் எழுதுவது, புத்தகம் படிப்பது எல்லாம் (LAPTOP) மடிகணினி துணையோடுதான். 

இப்போ வாட்ஸ் அப் / telegram கூட மடிகணினி மூலமாக பார்க்க முடிகிறது. (இது எப்படி என்று யாருக்காவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கேளுங்கள், தரப்படும்.) 

இன்றளவில் நான் அலைபேசியை, பஞ்சாங்கம் பார்க்க, ராசி பலன் பார்க்க, நடைப்பயிற்சியில் எவ்வளவுதூரம் நடந்திருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள, கடைகளில் வாங்கிய பொருளுக்கு cashless payment செய்ய, whatsapp, facebook, Gas booking and payment, weather report & forecast, All India Radio, TataSky, Amazon, Uber, Bank money transfer, Kindle book reading, பால், தயிர், நெய், காய்கறி, பழம் எல்லாம் ஆர்டர் செய்து வாங்க, Hearing aid Volume adjustment செய்ய, சீட்டு விளையாட, தினமலர் படிக்க, போன்ற சில விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்! 

2,வாட்சாப்பில் வரும் செய்திகள் நம்பக் கூடியவையா.
இல்லை தினத்தந்தியா.

& பெருமளவில் வதந்திகள்தான் வாட்சப் மெசஞ்சரில் உலா வருகின்றன. எனவே, தின(வ)தந்திதான். எனக்குத் தெரிந்து, T N சேஷன், வாட்ஸ் அப்பில் மட்டும் மூன்று/நான்கு முறை காலமானார். 

$ வாட்ஸாப்பில் வரும் செய்திகள் நண்பரிடமிருந்து வந்தால், அவரை அறிந்திருப்பின், செய்திகள் எப்படி என்றும் அறிவீர்கள்தானே!

# வாட்ஸப்பில் வந்தாலே . . என வகைப் படுத்துவது சரியாகாது. எப்பொருள் யாரார் வாய் கேட்பினும்....

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ராதா ஜெயலட்சுமி, B.V.ராமன், B.V.லட்சுமணன், ப்ரியா சிஸ்டர்ஸ், காயத்ரி,ரஞ்சனி, ஹைதராபாத் ப்ரதர்ஸ்,  C.சரோஜா,C.லலிதா
யார் உங்கள் ஃபேவரிட்?


1ரஞ்சனி காயத்ரி
2ராமன் லட்சுமணன்
3ஹைதராபாத் சகோதரர்கள்

சங்கீதம் எனக்கு கல்பூரவாசனை


1. Ranjani & Gayathri
2. Priya Sisters
3. Radha & Jayalakshmi.
4. Hyd Brothers
5. BVR brothers
in that order.

இசைக் கச்சேரிகளை எப்படி ரசிக்க பிடிக்கும்?ரேடியோ, டி.வி. நேரில்...

# நேரில். அடுத்தபடி எஃப் எம் ரேடியோ அதற்கு அடுத்து யூ ட்யூப்.

& ditto, ditto 


ஏசுதாஸ், உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், ஜெயச்சந்திரன் இவர்களில் குரலினிமை, உச்சரிப்பு, இசை ஞானம் இவைகளில் மார்க் போட வேண்டும் என்றால் யார் யாருக்கு எவ்வளவு மார்க் போடுவீர்கள்?(out of ten).

# நான் இதற்கு பதில் சொல்லத் தகுதி இல்லாத ஆள்.


PJ - 9/10
KJY - 8/10
UNNI M - 5/10
UNNI K - 4/10 (CINE SONGS)

& எல்லாருமே சேச்சன்களாக கேட்டிருக்கிறீர்களே! இதில் ஏதாவது ம(லையாள த)ர்மம் இருக்கா? குரலினிமை, உச்சரிப்பு, இசைஞானம் என்ற அடிப்படையில் மார்க் போட்டால், என் லிஸ்டில், UK முதலிடம். 
                       
இப்போதெல்லாம் டி.வி. தொகுப்பாளர்கள் தன் இணை தொகுப்பாளர்களை "நீ","வா","போ" என்று ஒருமையில் அழைக்கிறார்கள். சன் டி.வி.யில் ஆங்கரிங் செய்யும் பெண்கள் உடன் பணியாற்றுபவர்களை வாடா போடா என்று பேசுகிறார்கள். பதிலுக்கு ஆண்கள் இவர்களை 'டி' போட்டு பேசினால் ஒப்புக் கொள்வார்களா? ஸ்டேஜ் டெகோரம் என்று ஒன்று இருப்பது இவர்களுக்கு தெரியாதா?
           
# நிகழ்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்று குழுவாக அமர்ந்து முடிவு செய்கிறார்கள். எப்படிப் பேசினால் பார்வையாளர்களை போகாமல் காத்து வைக்க முடியும் என்று திட்டம் போட்டு செயல்படுகிறார்கள். இதில் தனிநபர் முடிவு ஏதுமிராது.

& இன்னும் எதிர்காலத்தில் ......  

" ஏய் வாடா சோமாறி கய்தே ........ஐயே! சீ! ....   போடீ கஸ்மாலம் ......  " என்றெல்லாம் பேசிக்கொள்ளும் காலம் வருமோ என்று பயமா கீது! அப்போ நம்ம பாடு படா பேஜார் ஆயிடும்! 

==========================================

அ பொ க + கொ 

சென்ற வாரத்தில் காணப்பட்ட எழுத்துகள் குரோம்பேட்டை குறும்பன்  எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை. 

இதுதான் அந்தக் கதை !

இந்த வாரக் கேள்வி :

இது யார் எழுதியது?     
கொக்கி புதுசு : 

பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு 191222


88 கருத்துகள்:

 1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, வணக்கம், வாழ்க நலம்.

   நீக்கு
  2. சொல்வது யார்க்கும் எளிய என்ற குறள்தான் நினைவுக்கு வருது.

   உலகில் 99.9999999999999% அன்பிலார்தான் போலிருக்கு

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் உளமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. வழக்கம் போல பதிவு அருமை...

  அநாகரிகத்தை வளர்த்தெடுப்பதில் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன...

  வண்ண வண்ணமாக முடி வளர்த்திருக்கும் வாலிபர்கள் சிலரை முன்வைத்து அதே வயதுடைய பெண்களிடம் - இவர்களிடம் பிடித்த விஷயங்கள் என்ன?.. என்று தொகுப்பாளர் கேட்கும் நிகழ்ச்சி ஒன்று என்னைத் தேடி வந்தது...

  நமக்கெதுக்கு ஊர் வம்பு?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, அப்புறம் ஏன் நாடகம் ஐயா!

   நீக்கு
 4. கேபிள் இணைப்பைப் பிடுங்கிப் போட்டால் முடிந்தது வேலை...

  பதிலளிநீக்கு
 5. இன்று ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி...

  வளமும் நலமும்
  வாயுபுத்ரன் அருளால் பெருகுவதாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று அமாவாசை; நாளை ஹ ஜெ .

   நீக்கு
  2. நான் தரவிறக்கம் செய்துள்ள கணினி நாள் காட்டியில் இன்று ஹனுமத் ஜெயந்தி என்று இருக்கிறது....

   அதைக் கொண்டுதான் எனது தளத்திலும் ஆஞ்சநேய ஜெயந்தி குறித்திருக்கிறேன்..

   வாட்ஸப்பில் ஆஞ்சநேயரை பதிவேற்றம் செய்து விட்டார்கள்..

   நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளுடன் மாலை சாற்றி வழிபட்ட செய்தி இன்றைய தினமலரில்...

   தங்களது தகவலைக் கண்டு மேலும் குடைந்ததில் மாலை 5:33 வரை கேட்டை.. அதன் பிறகுதான் மூலம் என்றிருக்கிறது..

   ஆஞ்சநேயர் அருள் புரிவாராக...

   நீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம். Merry Christmas!

  பதிலளிநீக்கு
 7. கிருஸ்துமஸ்க்கு பொருத்தமான குறளை பகிர்ந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்திரன் கையிலுள்ள வஜ்ராயுதம் ததீசி எனும் முனிவருடைய முதுகெலும்பு...

   ஒரு சமயம் அசுரனை அழிப்பதற்காகத்
   தன் எலும்புகளைத் தானே மனமுவந்து இந்திரனுக்குத் தானமாகக் கொடுத்தார்
   ததீசி முனிவர்...

   நீக்கு
  2. ததீசி முனிவரது கொடையைக் குறிப்பதே அந்தக் குறள்....

   புராணங்கள் காட்டுவதன்படி வாழ்வது அரிது..

   அவற்றை உணர்ந்து கொண்டால்
   நம் வாழ்வைச் செம்மையாக்கிக் கொள்ள இயலும்....

   ஊருக்காக - தன் தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதினாரே விநாயகர் அந்த மாதிரி....

   நீக்கு
  3. உயிர்களிடத்து அன்பு மேலிட்டு விட்டால்
   உண்ணும்போது ஒரு கைப்பிடி என்ற அளவிலாவது மனம் இளகி வரும்...

   அந்த கைப்பிடி சோற்றிலும் அரைப் பிடி என்று உருகி வரும்....

   அன்பும் வாழ்க... அறனும் வாழ்க...

   நீக்கு
 8. //இப்போதெல்லாம் டி.வி. தொகுப்பாளர்கள் தன் இணை தொகுப்பாளர்களை "நீ","வா","போ" என்று ஒருமையில் அழைக்கிறார்கள்//

  "தமிழ் வாழ்க" என்று பொய் வேஷமிடும் சன் டிவிக்காரன்தான் இந்தக் கலாச்சார சீர்கேட்டை புகுத்துகின்றான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஜி!..

   நீக்கு
  2. அனைவருக்கும் முது காலை வணக்கம்.
   வரவிருக்கும் ஹனுமத் ஜயந்திக்கும், கிரஹணப் ப்ரீதிக்கும் அனுமனை வழிபடுவது சிறந்ததே.

   எங்கள் ப்ளாக், குழுவின் பதில்களுக்கு மிக மிக நன்றி.
   உண்மையாகவே என்னால் இத்தனை சிறிய எழுத்துகளிலொ
   இல்லை சிறிய திரையிலோ பார்ப்பது படிப்பது சிரமம் தான்.

   எம் எக்ஸ் ப்ளெயரை கணினியில் தரவிறக்கம் செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்.

   ராணியைப் பார்க்க வேண்டும்.
   இனிய க்ரிஸ்மஸ் தின வாழ்த்துகள்.

   நீக்கு
  3. சொல்பவர் அரிது. உரக்கச் சொல்பவர் அரிதிலும் அரிது.

   நீக்கு
  4. //எம் எக்ஸ் ப்ளெயரை கணினியில் தரவிறக்கம் செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்.// முடியும்.

   நீக்கு
  5. உம்... மடிகணினியிலும் செய்ய இயலும்.

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் அனுமன் ஜெயந்தி மாலை கொண்டாடுகிறார்கள்.
  அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 11. இந்த நல்ல நாளில் நல்ல திருக்குறளும் அதற்கான மேற்கோளும் கொடுத்த அன்பு துரைக்கு நன்றி.

  தவளை இளவரசி பலே ஜோர். கன்னா பின்னான்னு கொலைகளா.
  நேற்று பேரன் தேர்ந்தெடுத்த ஹாரர் படம் இப்படித்தான் இருந்தது.

  பதிலளிநீக்கு
 12. இனிய  நண்பர்களே, 
  உங்கள் யாவருக்கும் என் இனிய க்ரிஸ்த்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
  இப்படிக்கு,
  உங்கள் நண்பி ரமா ஸ்‌ரீனிவாஸன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதுதான் நீங்கள் ‘Known' ஆகிவிட்டீர்களே ’எங்க’ளுக்கு! அப்புறம் இந்த ’Unknown’ எதற்கோ! கிறிஸ்த்மஸ் வாழ்த்துகள். நன்றி

   நீக்கு
  2. ஒருவேளை அவரிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லையோ?

   நீக்கு
 13. Hearing aid உள்ளபோது அலைபேசி உபயோகிப்பது எப்படி என்று விளக்க முடியுமா? தற்போது head set உபயோகித்து அலைபேசியில் பேசுகிறேன். இந்தக் கேள்வியின் பதிலாக உங்களைப்பற்றிய பல விஷயங்களைக்  கூறிவிட்டீர்கள். கூகிள் ஆண்டவர் சேமித்து வைத்து பல விளம்பரங்களை உங்களுக்கு அனுப்புவார்.தற்போது whatsapp மட்டும் கணினியில் உபயோகிக்க தெரியும். டெலெக்ராம்  எப்படி உபயோகிப்பது என்று விளக்க முடியுமா? இந்த கதை துண்டு பாலகுமாரன் எழுதியது என்று நினைக்கிறேன். Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹியரிங் எய்ட் போட்டிருக்கும்போது அலைபேசியை எப்போதும்போல் காதுக்கு அருகே வைத்துப் பேசலாம். ஆனால், ஸ்பீக்கர் ஃபோனில் போட்டுப் பேசினால், ஒரு அடி தூரத்திலாவது வைத்துப் பேசுதல் நலம். கணினியில், வாட்ஸ் அப் பயன்படுத்த web.whatsapp.com பயன்படுத்துவது போலவே, telegram கு web.telegram.org என்று கொடுத்தால் போதும். கதை துண்டு பாலகுமாரன் அல்ல.
   கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. கதையில் ஜெயகாந்தன் சார் தெரிவதாக நினைக்கிறேன்.
   சரியா ஜி ஜி?

   நீக்கு
 14. எனக்கும் ஜெயகாந்தன் என்றுதான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 15. இந்தப் பக்கத்தில் தென்படாத ஏஞ்சலினுக்கு இனிய கிறிஸ்த்மஸ் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தென்படுகிற டி பி ஆர் ஜோசப் சாருக்கும் சொல்லலாமே!

   நீக்கு
  2. சொல்லாமே அல்ல. சொல்லியாச்சு ! நேற்றைய கடைசி பின்னூட்டம் பார்த்தால் தெரியும்!

   நீக்கு
  3. வந்திருக்கும் அதிராவுக்கும் ஜொள்ளலாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   அஞ்சுவுக்கு தகவல் அனுப்பி அடிச்சு இடிச்சுக் கூட்டி வருகிறேன் இன்று வெயிட்:)).. நனும் பாவம் பிள்ளை எனப் பேசாமல் விட்டால் அவவும் ஓவரா பேசாமல் இருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு கெள அண்ணன் வீட்டு முன்புற பஸ் ஸ்ராட்டில போட்டுவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. இல்லை எனில் கிறிஸ்மஸ் நாளில எனை தேம்ஸ்ல தள்ளிப்போடுவா கர்ர்ர்:))

   நீக்கு
  4. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஏகாந்தன் ஸார் :)அலாரம் வச்சிட்டு போனையும் கீழே ஹாலில் வச்சிட்டு தூங்கிட்டேன் டோம் :) மிட்நைட் மாஸ் போனதில் டயர்ட் :)திடீர்னு பூனை காலை சுரண்டி கடிச்சி எழுப்பி இங்கே வரவைச்சிட்டாங்க 

   விரைவில் இங்கே அடிக்கடி தென்படுவேன் :) என்னை மாதிரி ஆளுங்க பெருமைக்கு ஆடு மேய்க்கலாம் இல்லை கோழி வாத்துன்னாவது மேய்க்கலாம் :) அநியாயத்துக்கு பெருமைக்கு யானை மேய்க்க போய்ட்டேன் :) ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா ..ஷிப்ட் பேட்டர்ன் மாத்திட்டேன் :) விரைவில் கேள்விக்கூடைகள் வரும்ம்ம் :)

   நீக்கு
  5. //..ஷிப்ட் பேட்டர்ன் மாத்திட்டேன் :) விரைவில் கேள்விக்கூடைகள் வரும்ம்ம் :)//

   கேஜிஜி சார் கவனித்தாரா? இல்லை, இன்னும் கிறிஸ்த்மஸ் கேக் சாப்பிட்டு முடியலையா!

   நீக்கு
  6. ஆவலோடு காத்திருக்கிறோம்.

   நீக்கு
 16. நான் அலைபேசி மூலமாகத்தான் பதிவுகளைப் படித்து வருகிறேன்

  பதிலளிநீக்கு
 17. வல்லிம்மாவின் முதல் கேள்விக்கு என்னுடைய பதிலும் யேஸ்தான்.. மூவி கூட மொபைலில் பார்ப்பேன்:).. ஆனா இப்போ முடிஞ்சவரை ஐ பாட்டை யூஸ் பண்ணுகிறேன்.

  போஸ்ட்டுகள் படிப்பது கொமெண்ட்ஸ் போடுவது முக்கால்வாசியும் மொபைலாலதான். வீட்டில் நிற்கும்போது மட்டும் கொம்பியூட்டர். அதுவும் நிறையப் பேச, எழுத வேண்டி இருந்தால் மட்டுமே கொம்பியூட்டரை ஓபின் பண்ணுவேன், இல்லை எனில் மொபைல் தான்.

  ஆனால் இதில் பெருமை எதுவுமில்லை, இது கண்ணுக்கு ஆபத்து, இது நல்ல விசயமில்லை.

  பதிலளிநீக்கு
 18. வல்லிம்மா மொபைல் வட்சப் என அதற்குள் இருக்க, பா அக்கா பாடல் சங்கீதம் என அதுக்குள் மூழ்கியிருக்க:)).. பொது அறிவுக்கேள்விக்கு அதிரா இல்லாமல் போயிட்டனே:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்க வாணாம்:)..

  இம்முறை நான் கேள்வி கேட்பேனாக்கும்.. கொஞ்சம் லேட்டா. இன்று ஊரெல்லாம் மயான அமைதி... எதுவுமே திறக்காது இங்கு.. அருகிலுள்ள 24 மணி நேர சூப்பமார்கட்டுக்கள் எல்லாம் வருடத்தில் இன்றும், வரும் முதலாம் திகதியும் மட்டும் மூடப்பட்டிருக்கும்... அதனால வீட்டுக்குள்ளே திருவிளா... ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு அதிரா காண்வில்லையே என்று பார்த்தேன்.
   என் சந்தேகத்தையெல்லாம் இங்கே கேட்க ஆரம்பித்தால்
   சங்கடமாகிடும் பா :). விழாக் கால வாழ்த்துகள்
   உங்களுக்கும் குடும்பத்துக்கும்.

   நீக்கு
  2. நன்றி வல்லிம்மா... நான் இங்குதான் இருக்கிறேன்.. நாய்கு வேலையும் இல்லை நடக்க நேரமுமில்லை மொமெண்ட் எனக்கு நடக்குது ஹா ஹா ஹா.. ஆனா நல்லா என் ஜோய் பண்ணிக்கொண்டிருக்கிறேன் ஹொலிடேயை, மகிழ்வாக இருக்குது. ஹொலிடே எனச் சொல்லிப்போட்டு அலைவது பிடிக்காது எங்களுக்கு. வீட்டில் இருந்து சமைச்சு சாப்பிட்டு கதைத்துப் பேசி படம் பார்த்து நித்திரை கொண்டு நினைச்ச நேரம் எழும்பி ரீ குடிச்சு.... இதுதான் மகிழ்ச்சி ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. //..அலைவது பிடிக்காது எங்களுக்கு. வீட்டில் இருந்து சமைச்சு சாப்பிட்டு கதைத்துப் பேசி படம் பார்த்து நித்திரை கொண்டு நினைச்ச நேரம் எழும்பி ரீ குடிச்சு ..இதுதான் மகிழ்ச்சி.//

   சரியே. பெரும்பாலானோர் விடுமுறை என்றால் எங்கேயாவது ஓடவேண்டும் என நினைப்பவர்கள்!

   நீக்கு
  4. எனக்கும், வேலை பார்த்த நாட்களில், விடுமுறை என்றால், வீட்டில் முழு ஓய்வு.

   நீக்கு
 19. //நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார்.//

  அதுக்குள் குகுவுக்கு எட்டு வயசு கூடிவிட்டதோ அவ்வ்வ்வ்வ்:))..

  எனக்கு ஒண்ணுமே பிரியல்ல கடசியில என்ன கேள்வி கேட்கிறீங்களென...

  கெள அண்ணன் நலம்தானே?.. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ வைரவா, நேற்று நைட் பானுமதி அக்கா வீட்டில கொப்பி பண்ணியதை, இன்று இங்கு பேஸ்ட் பண்ணியிருக்குதே இந்த கூகிள் அங்கிள் கர்:)).. கெள அண்ணனுக்கு ஹெட் சுத்தியிருக்கும் ஆனாலும் சுத்தாதமாதிரி சமாளிச்சுப் பதில் போட்டிட்டார் கர்:)).. நான் பேஸ்ட் பண்ணியது இதுதான்..

   //சென்ற வாரத்தில் காணப்பட்ட எழுத்துகள் குரோம்பேட்டை குறும்பன் எட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை. //

   நீக்கு
  2. இப்போதான் தலை சுத்துது!

   நீக்கு
 20. அருமையான நண்பர் ஜோசஃப் பெயர் சொல்லும்போது முழுக் கிறிஸ்து பிறந்த நாள் வந்து விட்டது.
  இனிய வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 21. அதுசரி, நெல்லைத்தமிழன் இப்போ எந்தத் திசையில நிற்கிறார்???.. ஆராவது பார்த்தால், அதிரா விசாரித்ததாகச் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்:).

  கீதா ரெங்கனுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்தைச் சொல்ல முடிஞ்சால் சொல்லி விடுங்கோ.. கீதா இன்று என்ன கேக் பேக் பண்ணினாவோ தெரியல்லியே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருடைய வரவுக்கு நாங்களும் காத்திருக்கிறோம்.

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர் அப்போ என் வரவை எதிர்பார்க்க காத்திருக்கல்லியா ..ஓகே நான் ஹிமாலயாஸ் போகரன்ன்ன் 

   நீக்கு
  3. ஹிமாலயாஸ்லேருந்து கருத்துரை பதியவும்.

   நீக்கு
 22. படிப்பது எல்லாம் நினைவில்நிற்பதில்லைஅலை பேசியை நான் பெரும்பாலும் பேசத்தான் உபயோகிக் கிறேன் வாட்ஸாப் செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள்லிஸ்டைப்பார்த்தால் கொடுத காசுக்கு வஞ்சனை செய்யாமல் உபயோகிக்கிறீர்கள் என்றுதெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே! Redmi 4 phone with 64 GB internal memory and 128 gb memory card! This comment also from that phone!

   நீக்கு
 23. மிக்க்க நன்றீ கௌதமன் ஸார் மற்றும் அனைவருக்கும் 

  பதிலளிநீக்கு
 24. Welcom back Anjel! Merry christmas! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்ல தாமதித்து விட்டேன். புத்தாண்டு வாழ்த்துக்களை முன்னலேயே கூறி விடுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!(எப்..பூ..டி?). கிறிஸ்துமஸ்க்கு என்ன வாங்கிக் கொண்டீர்கள்?
   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்க்ஸ் அக்கா :)தியா ஆன்லைனில் இருந்து எனக்கு பிடிச்ச காதி சல்வார் அப்புறம் நிறைய பொருட்களை பரிசா பெற்றுக்கொண்டேன் :)

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.படித்து ரசித்தேன். வியாழன் கதம்பத்திற்குள் சொல்லி விடவேண்டுமென அவசரமாக வந்து சொல்லி விட்டேன்.

  கைபேசியில் தான் எனது கைங்கரியம் (பதிவு எழுதுவது, படிப்பது, கமெண்ட்ஸ் போடுவது என) வருட கணக்காக தொடர்ந்தபடி உள்ளது. அடுத்த வருடமாவது கணினியை சரி பண்ணி குழந்தைகள் தர ஆண்டவனை வேண்டுகிறேன். எதற்கெல்லாம் வேண்டுவது என்ற விவஸ்தையே இல்லை என ஆண்டவன் மனதுக்குள் முணுமுணுப்பது கேட்கிறது. எப்படி என்ற ஐயத்திற்கு அவன் என்றுமே அனைவரின் மனதில்தானே இருக்கிறான் எனக் கூறிக் கொள்கிறேன்.)

  தொலைக்காட்சி எதுவும் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் தரக்குறைவாக அழைத்தலும், பேசுதலும் கேட்டதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தொலைக்காட்சி எதுவும் பார்ப்பதில்லை என்பதால் அவர்கள் தரக்குறைவாக அழைத்தலும், பேசுதலும் கேட்டதில்லை.// கொடுத்து வைத்தவர்!

   நீக்கு
 26. 1. நேர காலம் புரியாமல், எப்பவும் தன் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்போரை என்ன பண்ணலாம்?

  2.தமக்கு ஃபிரீ ரைம் எனில், போன் பண்ணி, கட் பண்ண விடாமல் அலட்டுவார்கள், ஆனா நாம் கொஞ்சம் ஃபிரீயாக இருக்கு, பேசலாமே என அழைத்தால், ஒன்று எடுக்க மாட்டார்கள், அல்லது எடுத்தாலும் பேச விரும்பாதவர்போல பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

  3. பந்தா காட்டுவது.. என்பதன் சரியான விளக்கம் என்ன?

  4. கண்ணை மூடியபின், சொர்க்கத்துக்குத்தான் போகவேண்டும் என எல்லோரும் நினைப்பது ஏன்? இறந்துவிட்டால் நமக்கென்ன தெரியப்போகிறது?

  5.நடந்து வந்த பாதையை மறப்பது சரியோ?, தவறெனில், கடந்த காலத்தை நினைக்கக்கூடாது என்கிறார்களே அது தப்புத்தானே?

  6. இக்காலத்தில், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், மனிதர்களிடையே இரக்க குணம் குறைந்துவிட்டதோ? அதிகரித்திருக்கிறதோ?

  7. என் நண்பியின் புத்திக் கூர்மையைச் சோதிக்க ஆசையாக இருக்கிறது:). எப்படிச் சோதிக்கலாம் என ஒரு ஐடியாத் தாங்கோவன்?

  8.இக்காலத்தில், நட்புக்காக உயிரையும் கொடுப்பேன், நட்புத்தான் உயர்ந்தது எனச் சொல்லிக்கொண்டு, அந்த நட்பின் தீய செயலுக்கெல்லாம் துணை நிற்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்?.

  9. வயதானவர் எனச் சொன்னால், பலருக்கும் கோபம் வருகிறதே? அது இயற்கையாக எல்லோருக்கும் வருமோ?

  10.இஞ்சி இடுப்பு அழகி/அழகன் என்றால் சரியான அர்த்தம் என்ன? படம் போட்டு சே..சே.. விம் போட்டு விளக்கவும் பிளீஸ்ஸ்?:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடேங்கப்பா! பத்து கேள்விகள் வந்தாச்சா! ஓ கே - நன்றி. பதில் சொல்வோம்!

   நீக்கு
 27. கேள்வி பதில்கள் - இந்த வாரம் சங்கீதக் கேள்விகள் அதிகம் போல! :) பதில்களை (கேள்விகளையும் தான்) ரசித்தேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!