செவ்வாய், 17 டிசம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : கூடா நட்பு... கேடாய் முடியும்..’ 2 - TBR ஜோஸப்



கூடா நட்பு... கேடாய் முடியும் 
டிபி ஆர் ஜோஸப் 
(2)

பத்மாவின் ஆட்டோ அவள் குடியிருந்த சாலையில் திரும்பும்போது அவளுடைய மகன் கார்த்தி வீட்டு கேட்டை பூட்டுவது தெரியவே, ‘கொஞ்சம் சீக்கிரமா போங்க.....அங்க கேட்ட ஒரு பையன் மூடிக்கிட்டிருக்கானே அதான் வீடு.... அவன் கெளம்புறதுக்குள்ள புடிக்கணும்...’ என்று படபடத்தாள்.

 ‘சரிங்க.’ என்றவாறு ஆட்டோ வேகமெடுத்து கார்த்தி கேட்டை மூடிவிட்டு பைக்கில் எறுவதற்குள் அதன் முன்னே சென்று நின்றது ஆட்டோ.

கார்த்தி வாகனத்தில் அமர்ந்தவாறே குணிந்து ஆட்டோவில் யார் என்று பார்த்தான்.

ஆட்டோவில் இருந்து இறங்கிய பத்மா, ‘டேய் ஒரு நிமிஷம் நில்லு...’ என்று கூறிவிட்டு ஆட்டோவை அனுப்பி வைத்தாள்.

‘இல்லம்மா அவசரமா போணும்.... ராத்திரி பேசிக்கலாமே...’

 ‘இல்ல... முடியாது.... இப்பவே பேசணும்... முதல்ல நீ கேட்ட திற...’ என்று அவனை கையை பிடித்து நிறுத்தினாள்.

அவன் எரிச்சலுடன் அவளுடைய கையை உதறிவிட்டு கேட்டை திறந்து நுழைந்து வாசற்கதவை திறந்து விட்டான்.

‘அப்படி என்னம்மா அவசரம்? அந்த பேங்க் மேட்டர்தான? அதான் நா பாத்துக்கறேன்னு சொன்னேனே... இப்ப அது விஷயமாத்தான்......’

‘எடுத்த பணத்த என்ன பண்ணே? அதச் சொல்லு...’ என்று இரைந்த தன் தாயை கோபத்துடன் பார்த்தான் கார்த்தி.... இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது....? சிதம்பரம் மாட்டிக்கிட்டானோ?

‘என்னம்மா ஒளர்ற?’ என்று சமாளித்த கார்த்தியை கோபம் சற்றும் குறையாமல் பார்த்தாள் பத்மா.

‘இங்க பார்... நீயும் அந்த ஒதவாக்கர பய சிதம்பரமும் சேந்து ஏதோ செஞ்சிருக்கீங்கன்னு தெரியுது/ சொல்லு....என்ன செஞ்சீங்க பணத்த?’

‘என்னம்மா சொல்ற?   நீ சொல்றது ஒன்னும் புரியல....இதுல சிதம்பரம் எங்கருந்து வந்தான்?’

 பத்மா தன் கைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

‘இத பாத்து சொல்லு... இது அவன் கையெழுத்துதான? இதுல அவன் கையெழுத்து எப்படிறா வந்துது?’

கையும் களவுமாக பிடிபட்ட கள்வனைப் போல் விழித்தான் கார்த்தி.

‘இரு அப்பாவ கூப்டறேன்... அவர் வந்தாத்தான்.. சரியாவும்’ என்று தன் கணவர் செல்பேசிக்கு டயல் செய்ய அது மிக அருகிலேயே ஒலிப்பது தெரிந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தாள்.... கார்த்தியிடமிருந்துதான் அதன் ஒலி வரவே, ‘டேய் அப்பா ஃபோன் ஒங்கிட்டதான் இருககா?’ என்றாள் கோபத்துடன்...

‘அ[ப்போ காலையில எங்கிட்ட பேசினது நீதானா? அதான் என்னடா அவர் குரல் மாதிரியே இல்லையேன்னு நினைச்சேன்....’

’இல்லம்மா... அப்பாதான் மறந்து வச்சிட்டு போய்ட்டார்னு......’

‘பொய் சொல்லாத. நீ வேணும்னே காலையிலயே அவர் ஃபோன எடுத்து ஆஃப் பண்ணி வச்சிருக்கே. அதான் அவர் தேடியும் கிடைக்காம போயிருக்கார். இதுலருந்து என்ன தெரியுது? எங்க அக்கவுண்ட்லருந்து பணம் எடுக்கறத அப்பவே ப்ளான் பண்ணியிருக்கீங்க. பணம் எடுத்தா அப்பா ஃபோனுக்குத்தான் sms வரும்னு தெரிஞ்சி அவர் ஃபோன மறைச்சி வச்சிருக்கே... Bankலருந்து sms வந்தா ஒடனே அத டெலிட் பண்ணிட்டா அப்பாவுக்கு பணம் எடுத்த விஷயம் தெரியாதுன்னு நினைச்சிருப்பே. ஆனால் அக்கவுண்ட்ல என் ஃபோன ரிஜிஸ்தர் பண்ணியிருந்தது நல்லதா போச்சி. இல்லன்னா எனக்கு கூட அது தெரியறதுக்கு சான்ஸே இல்ல. எங்கிட்ட ஃபோன வந்ததும் சமாளிக்கறதுக்கு அவர் பேசறா மாதிரியே பேசி என்னையே ஏமாத்திட்ட இல்ல? சொல்லு.. இன்னும் என்னல்லாம் செஞ்சி வச்சிருக்கே... சொல்லு.... ஒனக்கு அதிகமா செல்லம் குடுத்து நானே கெடுத்துட்டேனே..... ‘ பொங்கி வந்த அழுகையை அடக்கமாட்டாமல் பத்மா அப்படியே சோபாவில் அமர்ந்து அழத் துவங்கினாள். 

கார்த்தி செய்வதறியாது ஒரு நொடி திகைத்தான்..... பிறகு இதுதான் சமயம் என்று அறையிலிருந்து வெளியேற முயல பத்மா உடனே எழுந்து அவனை பிடித்து இழுத்து சோபாவில் அமர்த்தினாள்.

‘எங்கடா போற? பணத்த என்ன செஞ்சே...? அது அக்காவுக்காக அப்பா கொஞ்ச கொஞ்சமா சேத்து வச்ச பணம்னு தெரியுமில்ல? அவருக்கு இது தெரிஞ்சா ஒடஞ்சே போயிருவார்டா.... சொல்லு.... எங்க அந்த பணம்,?’


‘அது எங்கிட்ட இல்லம்ம... சிதம்பரம்தான்....’

 ‘நீங்க ரெண்டு பேரும்தான் அப்பாவுக்கு வந்த தபால வாங்கியிருக்கீங்க.... இல்ல? நாங்க இல்லாத நேரத்துல சிதம்பரம் இங்க அடிக்கடி வருவான் போலருக்கு...அப்படித்தான? அவன்தான் அப்பா கார்ட யூஸ் பண்ணி பணத்த எடுக்கலாம்னு ஐடியா குடுத்தானா?’

கார்த்தி தொடர்ந்து அழும் தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தான்.

'அம்மா அழாதம்மா... பத்தாயிரம்தாம்மா எடுத்து பாக்கலாம்னு அவன் கிட்ட சொன்னேன்... அவன் எனக்கு தெரியாம அம்பதாயிரம் எடுத்துருக்கான்... நீ கூப்ட்டப்பத்தான் அவன் அவ்வளவு பெரிய அமவுண்ட எடுத்துருக்கறது தெரிஞ்சது... ஒடனே அப்பவோட அக்கவுண்ட்ல ஏறி கார்ட பளாக் பன்ணிட்டேன்... இனிமே அந்த கார்ட வச்சி அவனால ஒன்னும் செய்யமுடியாதும்மா.... பணத்த கொண்டுக்கிட்டு நேரா இங்க வரேன்னுதான் சொன்னான்... ஆனா இன்னும் காணம்... அதான் தேடிபிடிக்கலாம்னு......’

கார்த்தியின் பதிலில் திருப்தியடைந்த பத்மா எழுந்து சென்று வாஷ்பேஷனில் முகத்தை கழுவி துடைத்தாள்.

‘சரி... நீ சொல்றத நா நம்பறேன்... நீ இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணம்.... ஒங்கப்பா சொன்னா மாதிரி ஒன்னெ ஹாஸ்டல் எதிலாச்சிம் சேத்துருந்தா இந்த மாதிரி பயலுங்க சகவாசமாவது இல்லாம இருந்துருக்கும்....’ என்றவாறு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தாள்.

‘நல்ல வேளையா அப்பா ஃபோன எடுக்காம போனதும் நல்லதா போச்சி.... Blessing in disguise...இல்லன்னா ஏற்கனவே ஹார்ட்ல ப்ராப்ளம்.... இதுல இவ்வளவு பெரிய அமவுண்ட் லாஸ் ஆச்சின்னு தெரிஞ்சா... என்ன ஆயிருக்குமோ....?’

‘அப்படியெல்லாம் ஒன்னும் ஆவாதும்மா.... நா ஒடனே போயி அவங்கிட்டருந்து அத வாங்கி அக்கவுண்ட்ல போட்டுட்டு வந்துடறேன்...இது அப்பாவுக்கு மட்டும் தெரிய வேணாம்மா ப்ளீஸ்...’

‘இது அவ்வளவு ஈசியா முடியாது போலருக்கேடா.... இந்த விஷயத்துல காலையில நா ஃபோன் பண்ண்ப்பவே சொல்லியிருந்தா....நா பேங்க்ல போயி பிரச்சினை பண்ணியிருக்க மாட்டேன்ல? அவங்க போலீஸ் கீலீஸ்னு போனா என்னாவறது?’

 அவள் கூறியதை கேட்டதும் கார்த்தி உண்மையிலேயே அரண்டு போனான்..

‘நீ எதுக்கும்மா பேங்குக்கு போன?  நாந்தான் பாத்துக்கறேன்னு சொன்னேனில்ல?’

 பத்மாவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘டேய்... ஒன்னெத்தான பேங்குல போயி கேளுறான்னு சொன்னேன். அதுக்கு நீ என்ன சொன்னே..? நம்ம அக்கவுண்ட இன்னொருத்தர் கார்டு கூட தப்பா லிங்க் பண்ணியிருக்காங்க... அதனால அவர் கிட்டருந்து இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள ரிக்கவர் பண்ணிருவாங்கன்னுதான?  நீ சொன்னதுல எனக்கு நம்பிக்கையில்லாமத்தான் நானே அங்க போயி என்க்வயர் பண்ணேன்.. அப்ப்புறந்தான ஒன் தில்லுமுல்லுல்லாம் தெரிய வந்துது...? எங்கருந்துடா இவ்வளவு பொய் சொல்ல கத்துக்கிட்ட..? எல்லாம் அந்த ஒதவாக்கர பய சிதம்பரம் குடுத்த ஐடியாவா?’

 ‘சாரிம்மா... எல்லாம் இந்த நீயூச படிச்சதால வந்த வினை... சிதம்பரம்தான் இத காட்டி இப்படி செஞ்சா நமக்கு பணம் கிடைச்சா மாதிரி இருக்கும்... ஒங்கப்பாவுக்கும் நஷ்டம் வராதுன்னு சொன்னாம்மா....அவனெ நம்பி....’ என்று தன் செல்பேசியில் சேமித்து வைத்திருந்த செய்தி ஒன்றை அவளிடம் காட்டினான்.




 பத்மா அதை வாங்கி படித்துவிட்டு எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள். ‘டேய் முட்டாள்...இதுல கடைசியில என்ன போட்ருக்கு...? அவ்வளவு பயலுங்களும் போலீஸ்ல மாட்டிக்கிட்டாங்கன்னுதான? இப்பவும் அதான் நடக்கப் போவுது.. நா போட்ட சத்தத்துல அந்த பேங்க் மேனேஜர் கடுப்பாயி போலீஸ் கிட்ட கம்ப்ளெய்ண்ட் குடுக்கப் போறாங்க... நீங்க ரெண்டு பேரும் மாட்டிக்க்ப் போறீங்க... அப்படி மட்டும் ஒன்னும் நடந்துச்சி... அப்புறம் என்னெ நீ உயிரோடயே பாக்க முடியாது....’

 பத்மா மீண்டும் அழத் துவங்கினாள். அவளை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் கார்த்தி திகைத்து நின்றான். பின்னர் சுதாரித்துக்கொண்டு சிதம்பரம் செல்பேசி எண்ணை டயல் செய்தான்...

அவன் அவனுடைய அழைப்பை துண்டித்தது தெரிய வரவே உடனே தன் இன்னொரு நண்பன் சேகரை அழைத்தான். அவனுடைய தந்தைதான் அவன் குடியிருந்த பகுதியின் காவல் ஆய்வாளர். 

எதிர்முனயில் எடுக்கப்பட்டதும் அன்று நடந்த அனைத்தையும் பதட்டப்படாமல் கூறினான்.... ‘டேய்... அறிவு கெட்டவனே... அவனே ஒரு ட்ரக் (drug) பார்ட்டி... அவன் சொன்னான்னா ஒனக்கு எங்கடா போச்சி புத்தி? இத போயி எங்கப்பா கிட்ட சொல்ல சொல்றியா? வேற வெனையே வேணாம்... அவன் ஃப்ரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிருன்னு சொல்லிருவார்...’

‘டேய்... ப்ளீஸ்டா அப்படி சொல்லாதடா... இந்த விஷயம் எங்கப்பாவுக்கு தெரிய வரதுக்கு முன்னால அவன்கிட்டருந்து பணத்த எப்படியாவது ரிக்கவர் பண்ணிறனும்... நீ கொஞ்சம் ஒங்கப்பா கிட்ட பேசி பாருடா... ப்ளீஸ்டா...’

அவனுடைய தொடர் கெஞ்சலை புறக்கணிக்க முடியாமல் சேகர் சம்மதித்தான். ‘சரி... சொல்லி பாக்கறேன்... நீ எதுக்கும் சிதம்பரம் செல்ஃபோன விடாம ட்ரை பண்ணிக்கிட்டே இரு.... நா பேசிட்டு கூப்டறேன்.’

கார்த்தி இணைப்பை துண்டித்துவிட்டு தன் தாயின் அருகில் அமர்ந்தான்.

‘அம்மா.... சேகர் கிட்ட சொல்லி அவங்கப்பா கிட்ட பேச சொல்லியிருக்கேன். அவர்தான் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர்... அவர விட்டு சிதம்பரத்துக்கிட்ட பேச சொல்லலாம்மா....’ பத்மா அவன் கூறுவதை நம்பாமல் பார்த்தாள்.

‘என்னவோ செய்யி அப்பா வர்றதுக்குள்ள இது நடக்கணும்.... நீயும் அவன் கூடவே போயி அவர்கிட்ட நடந்தத எல்லாத்தையும் சொல்லு... எங்கிட்ட சொன்னா மாதிரி ஏதாவது பொய்ய சொல்லி மாட்டிக்காத சொல்லிட்டன்... என்ன நடக்குதுன்னு அப்பப்போ எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு.... என்ன புரியுதா?

‘சரிம்மா....நா வரேன்.’

விட்டால் போதும் என்பதுபோல் அடுத்த நொடியே அவன் எழுந்து வீட்டை விட்டு வெளியேற ‘அப்பா முருகா எல்லாம் நல்லபடியா நடக்கணுமே’ என்றவாறு சமையலறையை நோக்கி நடந்தாள் பத்மா.


 *********

 இத இப்படியே முடிச்சிறாம இன்னும் தொடர்ந்து எழுதலாம்.... ஆனா சிறு கதையா இல்லாம குறு நாவலா மாறிரும்.

51 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி... இவர் நடுநிலைமை உடையவர், இல்லாதவர் என்பதை அவர் இறந்த பிறகு அவருக்குள்ள புகழ்/பழியினால் கண்டு கொள்வதா இல்லை அவருடைய வாரிசுகளின் தன்மையினால் கண்டுகொள்வதா?

      நீக்கு
  3. தற்கால வங்கிகளின் நடைமுறை அயர்ச்சியை ஏற்படுத்துகின்றது....

    காலத்திற்கேற்ற கதை...
    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்கால வங்கிகளின் நடைமுறை அயர்ச்சியை ஏற்படுத்துகின்றது....//

      உண்மை தான். சுமார் முப்பது ஆண்டுகள் வங்கியில் பணிபுரிந்த எனக்கும் இந்த டிஜிட்டல் மயமாக்கல் அயர்ச்சியை தருகின்றது.

      நீக்கு
    2. தனியார் வங்கிகள் சுத்த மோசம். கஸ்டமர் ரிலேஷன்ஷிப் என்பது அங்கு ஸீரோ. டிஜிட்டல் மயமானதில் எவ்வளவு சௌகரியம் இருக்கிறதோ அத்தனை ஆபத்துகளும் இருக்கின்றன. 

      நீக்கு
    3. உண்மை தான் .டிஜிட்டல் மயமாக்கல் வாடிக்கையாளர்களை வங்கிகளிடமிருந்து பிரித்துவிட்டன.

      நீக்கு
  4. என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கே! குறுநாவலாக ஆனாலும் பரவாயில்லை. அந்தப் பணம் கிடைத்ததா இல்லையா? பொதுவாகவே பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் வீடுகளில் பிள்ளைகளை அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி கவனமாகப் பார்த்துக்கொள்ள ஆள்வேண்டும். இல்லை எனில் இப்படித்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறுகதை தாருங்கள்
      என்றுதான் நண்பர் ஸ்ரீராம் கேட்டிருந்தார் ஆகவே தான் இப்படி முடித்து விடலாமா என்று அவரிடமே கேட்டேன் வேண்டுமானால் தொடர்ந்து எழுதுங்கள் என்றார் ஆகவே இன்னுமொரு பதிவை எழுதி உள்ளேன் அனேகமாக அடுத்த செவ்வாய்க்கிழமை அதை பதிவு செய்வார் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...     காலை வணக்கம்.   இனிய பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  6. // அதிகமா செல்லம் கொடுத்து கொடுத்து..//

    நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...

    பிள்ளைகள் தொல்லைகளாகிப் போவது இப்படித்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகள் தொல்லைகளாகிப் போவது இப்படித்தான்....//

      எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சினையில்லை.

      நீக்கு
  7. கேடாய் முடிந்து விட்டது drug பார்ட்டி நட்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேடாய் முடிந்து விட்டது drug பார்ட்டி நட்பு...//

      ஆகவேதான் உண் நண்பன் யாரென்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன் என்ற ஆங்கில பழமொழி வந்தது.

      நீக்கு
  8. இன்றைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது பிள்ளைகளால் பெற்றோர்கள் வேதனைப்படுவது.

    இருப்பினும் இதன் முடிவை வெளிப்படுத்த பணம் என்னவானது ? என்பதை எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் முடிவை வெளிப்படுத்த பணம் என்னவானது ? என்பதை எழுதுங்கள் ஐயா.//

      இன்னும் ஒரு பதிவு எழுதி நண்பர் ஸ்ரீராமிடம் கொடுத்துள்ளேன். அடுத்த வாரம் வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

      உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஜி.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கூடா நட்பால் கேடாக முடிந்தது.

    கார்த்தி திருந்த சிதம்பரம் ஏமாற்றியது உதவும். புத்தி கொள்முதல் என்று சொல்லுவார்கள்.
    இனி நல்லோர் நட்பை பெற்று வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கார்த்தி திருந்த சிதம்பரம் ஏமாற்றியது உதவும்.//

      உண்மைதான். பட்டு தெரிந்தால் பத்தி தெரியும் என்பார்கள். அதுபோலத்தான் இதுவும்.

      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. //விட்டால் போதும் என்பதுபோல் அடுத்த நொடியே அவன் எழுந்து வீட்டை விட்டு வெளியேற //

    இவ்வளவு நடந்தும் கூட அந்தப் பையன் கார்த்திக்கு 'விட்டால் போதும்' என்ற தப்பித்தல் உணர்வு தானா?.. என்ன நடந்தது என்பதையே உணராத மரமண்டையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தை படைத்ததில் உங்களுக்கு வெற்றி தான்.

    பெற்ற கடமைக்காக பெற்றோர் எந்த அளவுக்கு தங்களுக்காக துன்பங்களைச் சுமக்கிறார்கள் என்ற அறிவு கூட இல்லாத ஜென்மங்களுக்கு உய்வே இல்லை. அந்த சிதம்பரதைச் சாட்டி கதைக்கான தலைப்பு இருப்பதிலும் நியாயமில்லை.
    பேசாமல் 'எந்நன்றி கொன்றார்க்கும்..' என்று கதைத் தலைப்பை மாற்றி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கான தலைப்பு இருப்பதிலும் நியாயமில்லை.
      பேசாமல் 'எந்நன்றி கொன்றார்க்கும்..' என்று கதைத் தலைப்பை மாற்றி விடலாம்.//

      பெற்றோர் பெற்றோர் செய்வது அவருடைய கடமை அதற்கெல்லாம் நன்றி தேவை இல்லை என்பது இக்கால தலைமுறையின் எண்ணம். ஆகவே அவர்களிடம் இருந்து நன்றி எதிர்பார்ப்பதில் பயனில்லை. பெற்றவர்களை பழிவாங்குவது என்ற கண்ணோட்டத்திலும் சில பிள்ளைகள் இப்படி தவறான நட்புகளையும் தேடிச் செல்வதுண்டு.

      நீக்கு
  12. கதையின் நடுவே அந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை க்ளிக்கிப் பார்த்துக் கொள்கிற மாதிரி அமைத்தது ஒரு புதுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நண்பர் ஸ்ரீராமின் யோசனை. அவரையே இந்த பாராட்டு சென்று சேரும்.

      நீக்கு
  13. இந்த நண்பர்கள் கூட்டமே இப்படித் தான் இருக்கும் போலிருக்கே!.. சேகருக்கு --காவல் ஆய்வாளரின் மகன் -- டிரக் பார்ட்டி சிதம்பரத்தோடு நட்பு.. 'அவன் ஃப்ரெண்ட்ஷிப்பையே கட் பண்ணிருன்னு சொல்லிருவார்...’ தன் தந்தை என்பது தான் இந்த சேகரின் மிகப்பெரும் கவலை!..

    பதிலளிநீக்கு
  14. பணம் மீண்டும் எப்படி கிடைத்தது. கிடைக்குமா? இல்லை சினிமா படங்கள் போல் பணம் எங்காவது மறைக்கப்பட்டு விடுமா? பெற்ற மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு என்பது சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் மீண்டும் எப்படி கிடைத்தது. கிடைக்குமா? இல்லை சினிமா படங்கள் போல் பணம் எங்காவது //

      அடுத்த வாரம் தெரிந்து விடும்.

      நீக்கு
  15. கதை தானே என்று அசட்டையாகப் படித்துப் போய் விடாமல் உணர்வு பூர்வமான கதையைப் படைத்ததற்கு வாழ்த்துக்கள், ஜோசப் சார்!

    பணமா முக்கியம்?.. என்ன பணம் சேர்த்தும் யாருக்குப் போய்ச் சேரப் போகிறது?.. பெற்ற பிள்ளைகளுக்குத் தானே?.. அவர்கள் ஒழுங்காக இல்லாத பொழுது, பணம் முக்கியமான விஷயமே இல்லை.

    பெற்றோர்களுக்கு படிப்பினை கொடுக்கக் கூடிய ஒரு சிறுகதையை
    படைத்து புத்திமதி சொன்ன எழுத்தாற்றலுக்கு மீண்டும் பாராட்டுகள், ஜோசப் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

      நீக்கு
    2. பணமா முக்கியம்?.. என்ன பணம் சேர்த்தும் யாருக்குப் போய்ச் சேரப் போகிறது?.. பெற்ற பிள்ளைகளுக்குத் தானே?.. அவர்கள் ஒழுங்காக இல்லாத பொழுது, பணம் முக்கியமான விஷயமே இல்லை.  //

      மிக சரியாக சொன்னீர்கள். நன்றி.

      நீக்கு
  16. சிதம்பரம் எப்படி மாட்டிக் கொண்டான் நான் கதையில் சொல்கிறேன்;) என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  17. யார் அந்த பணத்தை எடுத்திருப்பார்கள் என்பதை யூகிக்கமுடியாத அளவுக்கு கதையை கொண்டு என்றிருக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துகள்! நாம் எடுக்காவிடினும் இது போன்றும் நம்முடைய பணத்தை இழக்கமுடியும் என்பதை சொல்லி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரையும் எச்சரித்திருக்கிறீர்கள். செல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தையும், கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுகள்.
    கதையின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
    வங்கிகள் கணினிமயமாக ஆகி இருப்பது ஒரு நற்பயன் (Boon) என்றாலும் சமீபத்தில் பலர் தங்களது ஆயுட்கால சேமிப்புகளை இழந்திருப்பதை பார்க்கும்போது அது ஒரு அழிவு (Bane) என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. இருப்பது ஒரு நற்பயன் (Boon) என்றாலும் சமீபத்தில் பலர் தங்களது ஆயுட்கால சேமிப்புகளை இழந்திருப்பதை பார்க்கும்போது அது ஒரு அழிவு (Bane) என்றே தோன்றுகிறது.//

    இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை என்றாலும் இதில் தொல்லை தான் சற்று அதிகம் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தையும், கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு பாராட்டுகள். //

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

      நீக்கு
  19. கார்த்தி, சிதம்பரம் என்றெல்லாம் காரெக்டர் பெயர் படிக்கும்போது திக்கென்று திடுக்கிட்டேன்!

    பதிலளிநீக்கு
  20. வேண்டும் என்று வைக்கவில்லை. ஆனால் கார்த்தி என்று வைத்ததும் அவனுடைய நண்பர் பெயரை சிதம்பரம் என்று வைத்தால் ரைமிங்காக இருக்கும் என்று தோன்றியது. இதை படித்தவர்களில் யாரும் இதை கண்டுபிடிக்கவில்லை. உங்களைத் தவிர.😊

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நானும் கண்டு கொண்டேன். ஆனால் சிதம்பரம் நண்பர் என்பதால் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

      நீக்கு
  21. சிறந்த கருப்பொருள்
    அருமையான கதை

    பதிலளிநீக்கு
  22. அழகிய கதை, இரு பாகமும் படித்தேன்.
    முதல் பாகம் ஒரே குழப்பமாக இருந்தது... யாராக இருக்குமென.... இப்பூடி ருவிஸ்ட்டாகுமென எதிர்பார்க்கவில்லை.
    இப்போதெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியால் இப்படிக் கண்டு பிடிக்க முடியுது.

    பதிலளிநீக்கு
  23. முன்பு ஒருவர் லொக்கரில் நிறையப் பணம் சேமித்து வைத்திருக்கிறார்.
    அப்போ அந்த பாங்கில் ஏதோ பூச்சி வந்திருக்கிறது., அதனால உங்கள் லொக்கரை எல்லாம் வந்து பாருங்கள் என வீட்டுக்கு லெட்டர் போயிருக்கு, பாங்கிலும் சுவரெல்லாம் நோட்டீஸ் போட்டிருக்கினம்., ஆனா இவர் அதை எதுவும் கவனிக்கவில்லையாம்,
    பின்பு சில காலத்தால் போய்ப் பார்த்தால் எல்லாப் பணமும் தூள் பேப்பர்போல இருந்துதாம்... என்ன பண்ண முடியும்...
    இது இங்கு நடந்த சம்பவம்.

    பதிலளிநீக்கு
  24. பார்த்தால் எல்லாப் பணமும் தூள் பேப்பர்போல இருந்துதாம்... என்ன பண்ண முடியும்...//

    White Ants ஆக இருக்கும். அதற்கு locker moisture தான் காரணமாக இருக்கும். ஆனால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று பேங்கில் கூறிவிடுவார்களே.

    பதிலளிநீக்கு
  25. ஒரு செய்தியைச் சொல்ல இப்படி நீட்டி முழக்காமல் முடியாதா சிறுகதைகள் என்றால் சின்னதாக இருக்க வேண்டாமா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!