சனி, 14 டிசம்பர், 2019

குரோம்பேட்டை, லட்சுமி நகர், இரண்டாவது குறுக்கு தெரு....


1)  நம்மை சுற்றி சொந்தம் பந்தம் இருந்தும், உயிரோடு இருக்கும் போதே, பிறருக்கு உதவி செய்ய தயங்கும் இக்காலத்தில், 36 ஆண்டுகளாக, அனாதை உடல்களை எடுத்து, முறைப்படி தகனம் செய்யும், சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார், முதியவர் ஒருவர்.  மனிதம் சாகவில்லை என்பதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.

குரோம்பேட்டை, லட்சுமி நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜி.ராகவன், 82; தொலைதொடர்பு துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.......  
2)  குப்பைக்கு குட்பை...  மிகப்பெரிய பிரச்னைக்கு சுலப, அழகிய, உபயோகமானத்தீர்வு...  பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
3)  ......ஆனால், திருப்பூர் அருகே கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி அப்படியல்ல, என்பதை நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஒரு காலத்தில், அரசு பள்ளிக்கே உரிய அடையாளத்தோடு விளங்கிய இப்பள்ளி இப்ேபாது, தனியார் பள்ளிகளையும் மிஞ்சும் அளவு, 'பளிச்' என்றாகி விட்டது. அடடே... அரசு பள்ளி இப்படி மாறிவிட்டதா? மாற்றியது யார்? என்பது போன்ற 'மில்லியன்' டாலர் கேள்விகளுக்கு விடையாக விளங்குகிறார், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சுப்ரமணியம்.......
======================================================================================


“வேண்டாம் இந்த உயிர்கொல்லி ப்லாஸ்டிக்”  
ரமா ஸ்ரீனிவாசன்.

நமது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி ஜுன்
5 ஆம் தேதி 2019 ப்லாஸ்டிக் தடை சட்டத்தை அமுல் படுத்தினார்.

ப்லாஸ்டிக் தடை சட்டம் மிகவும் வரவேற்கத்தக்கதும் இன்ப அதிர்ச்சி
தருவதுமான ஒன்றாக இருந்தாலும்,  இந்த சிறிய இடைக் காலத்திற்குள்
நமது சென்னைவாசிகள் எப்படி ப்லாஸ்டிக் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு
தங்களைப் பழக்கிக் கொள்வார்கள் என்பது ஒரு பெரிய புதிர்தான்.
இங்கு,  நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.  நமது முன்னாள்
முதல்வர், ஜெயலலிதா அவர்கள் இதே சட்டத்தை மே 2002ல் அமுல்
படுத்த முயன்ற போது, அது சாத்தியமாகவில்லை.  தமிழகத்தின்
ப்லாஸ்டிக் உற்பத்தி செய்வோர் குழுமம் அப்போது மலிவான மாற்று
பொருட்கள் இல்லை எனக்கூறி தட்டிக் கழித்து விட்டது.

இன்றைய நமது அரசின் ஆணையின் மூலம், ஒரு முறை உபயோக
படுத்தியபின் தூக்கிப்போடும் ப்லாஸ்டிக் மற்றும் ப்லாஸ்டிக் தாள்கள் தடை செய்யப்பட்டுள்ள்ன.  ஆனால், மகிழ்ச்சியான செய்தி என்னவெண்றால்,

 உரமாக்கபடும் ப்லாஸ்டிக்

 பால் கவர்கள்

 மருத்துவ பயனாகும் ப்லாஸ்டிக்

 காடுகளிளும் நர்சரிகளிலும் உபயோகிக்கப்படும் ப்லாஸ்டிக்

 மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை பேக்கிங் செய்ய உதவும் ப்லாஸ்டிக் ஆகியவை தடையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

இந்த தடை நம்மை எப்படி பாதிக்கிறது என்பதை பார்ப்போம். இந்த
தடையால் மிகவும் அடி வாங்குகிரவர்கள் சிறு தொழில் வியாபாரிகள்தான்.

வீதி வியாபாரிகளும் சிறு தொழில் வியாபாரிகளும் மாற்றுப் பொருட்கள்
பற்றி அதிகம் தெரியாமல் அடி மடியில் அடி வாங்கியவர்கள் ஆகிறார்கள்.
இதைத் தவிர ஒரு சட்டப்போர் நமது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறது.  எவ்வாறு மாநில அரசு ஒரு மத்திய அரசின்
ப்ராந்தியத்திற்குள் மூக்கை நுழைக்கலாம் என்பதேயாகும் அது.

என்னை ஒரு சிறு கணக்கெடுப்பு அசர வைத்தது. தமிழ் நாடு
சராசரி ஒரே நாளில் 429 டன்கள் ப்லாஸ்டிக்கை உபயோகிக்கின்றது. இந்த
429 டன்களிள் மொத்த ப்லாஸ்டிக் மக்கு குப்பையின் பங்கு சுமார் 9.54%
ஆகும். இந்த ப்லாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்தால், நம் சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் வளமாகும் என்பது ஒரு நிதர்சமான உண்மை.  நம் வாழ்க்கை வளமும் பெருகும்.

நாள்பட இந்த ப்லாஸ்டிக் தடையானது, சணல் மற்றும் ஜவுளி
வியாபாரம், பேக்கேஜிங் தொழிலில் புகுந்து ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க
மிகவும் லகுவாக இருக்கும். இதுவே பொருளாதார ஏற்றத்தையும் அதிக
வேலை வாய்ப்பு சூழலையும் உருவாக்கும்.

தரமான குடிநீர் : ஆம் ! இந்த மக்காத ப்லாஸ்டிக் தடையினால்
நமது குடிநீர் பூமிக்கு அடியில் வளமாக பெருகி வற்றாத நீராக தமிழ்
நாடெங்கும் பெருகும்.

தரமான கழிவு நீர் வடிகால்கள் : இந்த ப்லாஸ்டிக்க் தடை கழிவு நீர்
வடிகால்கள் ப்லாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு அடையாமல் இருக்க வழி செய்யும்.

தரமான வாழ்கை முறை : இந்த தடை, தமிழ் நாட்டில் ஒரு ரெட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல் படும்.  ஒரு பக்கம் தண்ணீர் வழி
வியாதிகள் நீங்கும்.  இன்னொரு பக்கம் வெக்டர் வழியாக பரவும்
நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆகவே, ப்லாஸ்டிக் தடை
நமது மேம்பட்ட எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பெரிய வாழ்வாதாரமாக
திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சிறப்பான சூழல் : பசுக்கள், ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற மிருகங்கள் இந்த தடையால் ப்லாஸ்டிக்கை உண்ணாமல் காப்பாற்றப்படும்.

சுற்று சூழல் தன் மூச்சு திணறலை துறந்து மனம் நிறைந்த நன்றியை
அவசியம் நமக்கு அர்ப்பணிக்கும் என்பதில் சிறிதளவும் நமக்கு ஐயம்
வேண்டாம்.

இந்த புதிய ப்லாஸ்டிக் தடையை எவ்வாறு திறம்பட செயல்
படுத்தலாம் என்பதற்க்கு நீலகிரி மாவட்டம் ஒரு எடுத்துக்காட்டாக
இருக்கும்.

ஊட்டியில் நடைமுறைக்கு வந்த சில மாற்று வழிபாடுகள் இதோ :

 பருக மற்றும் சாப்பிட கண்ணாடி மற்றும் எவெர்சில்வெர் பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

 சணல் பைகளும் துணிப்பைகளும் மார்க்கெட்டில் அதிகமாக  காணப்படுகின்றன.

 பேக்கிங் செய்வதற்கு காகிதத் தாள்களும் அலுமினியம் தாள்களும் உபயோகமாகின்றன.

 மரத்தாலான டிபன் பெட்டிகள் தலைகாட்டியுள்ளன.

 ப்லாஸ்டிக் கவர்களுக்கு பதில் காகித்தாள் கவர்கள் வந்துவிட்டன.

 ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்படும் ப்லாஸ்டிக் பொருட்கள்
பழகிவிட்டன. 

இந்த ப்லாஸ்டிக் தடையை நீலகிரி மாவட்டம வெற்றிகரமாக நிலை நாட்டும் பட்சத்தில், ஒட்டுமொத்தத் தமிழ் நாடும் நாள்பட அதைச்
செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

மக்களின் ஆரம்ப நிலை கஷ்டத்தை பற்றியும் கோளாறுகளை
பற்றியும் இருவேறு மாறுபட்ட கருத்து கிடையவே கிடையாது.  ஆனால்,
சிறு தடங்கல்களுக்குப் பிறகு,  நாம் பிடிவாதமாக இத்தடையை
கடைப்பிடித்தோமேயானால்,  நாம் நம் பின் வரும் சந்ததியினருக்கு ஒரு
அழகான மாசற்ற மக்கு ப்லாஸ்டிக் அற்ற உலக சூழலைத் தருவோம்
என்பதை நினைவில் வைத்துக்கொண்டோமேயானால்,  நாம் வென்று
விட்டோம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

வாழ்க ப்லாஸ்டிக் தடை ! வளர்க மாசு மருவற்ற தமிழகம் !

50 கருத்துகள்:

 1. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டை ஸ்ரீ ராகவன் அவர்களைப் பற்றிய தகவல் வரும் என்றே நினைத்திருந்தேன்....

  வாழ்க அவரது தொண்டு...
  இறையருள் பெருகட்டும்...

  பதிலளிநீக்கு
 3. முதலாவது யாரோ க்ரோம்பேட்டை வாசிகள் சொல்லிக்கேள்விப் பட்டிருக்கேன். இரண்டு, மூன்று புதிது. ஆனால் அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரையிலும் இப்போதெல்லாம் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் புதிய மாற்றங்களைப் பெற்று வருகின்றன. குப்பையை எப்படி ஒழித்தார்கள் என்பதைப் பிரபலமாக்கினால் பலரும் பயன் பெறுவார்கள். ப்ளாஸ்டிக் பற்றிய சிறு கட்டுரை அருமை. அறவே ஒழிக்க முடியாத ப்ளாஸ்டிக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஒழிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில செய்திகள் ஆரம்ப நிலையிலேயே நின்று விடுவது சோகம்தான்.

   ரமா ஸ்ரீநி கமெண்ட்டுகளைப் படிப்பாரென்று நம்புகிறேன்.

   நீக்கு
 4. எல்லாருக்கும் இனிய சாட்டர்டே காலை வணக்கம் :)தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து போடும்போது எட்டிப்பார்த்தேன் அப்போ 12 தான் ஆகியிருந்தது :)திடீர்னு பார்க்க 10 கமெண்ட்ஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்...    உங்கள் பிளாக்கில் என் கமெண்ட்டையும் விடுவித்து விட்டு தூங்கப் போகக் கூடாதோ!

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் மகிழ்ச்சி நிலவும் சிறந்த நாளாக அமைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 6. 82 வயது பெரியவரின் தன்னலமற்ற  செயல் அவரை இந்த சேவைக்கு வழி நடத்தியவர் ...உண்மையில் மனிதம் மரிக்கவில்லை .இறக்கும் தருவாயிலும் மனிதம் மீண்டும் உயிர்த்தெழுகிறது இவர்போன்றோரால் ..நல்லா இருக்கணும் பெரியவர் ராகவன் போன்றோர் .
  பயோ மைனிங் முறையில் குப்பை அகற்றல் நம் நாட்டில் சிறப்பான விஷயம் .சென்னைமுழுக்க குப்பைக்கு குட்பை சொல்லட்டும் இம்முறையால் .
  புதுப்பொலிவுபெற கொடுவாய் பள்ளிக்கூடத்துக்கு உதவிய முன்னாள் மாணவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .பிளாஸ்டிக் தடை ..எங்க லண்டனிலும் சூப்பர்மார்கெட்ஸ் பைகளை தடை செஞ்சுட்டாங்க தாவது 5 பென்ஸ் விலை போட்டதால் எல்லாரும் வீட்டில் இருந்து கொண்டுபோறோம் துணி பைகளை .
  நம்மூரில் அப்பாவி வாயில்லா ஜீவன்களை காக்க இது பிளாஸ்டிக் தடை மிக முக்கியம் 

  பதிலளிநீக்கு
 7. மக்கும் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் மதி கெட்டுப் போனது எதனாலே!...

  எண்ணெய் வாங்க் வேண்டும் என்றால் செம்புகள்... சேமித்து வைக்க சிறு குடங்கள்..

  பட்டுகோட்டை தாமரங்கோட்டை வட்டாரங்களில் விளைந்த எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்பட்ட எண்ணெயைக் குடத்தில் வைத்து
  வணங்கும் வழக்கம் இருக்கிறது...

  மூடி திறக்கின் முகங்காட்டும்.. என்று
  காளமேகப் புலவர் பாடியது குடத்திலுள்ள எண்ணெயைப் பற்றியதே...

  காய்கறிகள் வாங்குவதற்கு மூங்கில் கூடைகள்..

  அர்ர்சனைப் பொருட்களுக்கு மூங்கில் தட்டுக்கள்...

  பிரசாதங்களுக்குத் தொன்னைகள்...

  நெய்க்குத் தொன்னை ஆதாரமா!..
  என்ற பழமொழி நினைவுக்கு வந்திருக்குமே..

  அந்த அளவுக்குத் தரமான தொன்னைகளைச் செய்திருக்கிறார்கள் மதி நுட்பத்துடன்...

  உணவகங்களில் வாழையிலைகள், தாமரை இலைகள், புரச இலைகள்...

  இறைச்சி வாங்கப் போனால் சேமை இலைகள்.. மற்றும் கற்றாழை நார்ப் பைகள்..

  சுண்ணாம்பு அடிக்க கற்றாழை வேர்கள்...
  வர்ண வேலைகளுக்கு ஈச்சையின் குச்சங்கள்..

  களத்தில் காயும் நெல் முதலான தானியங்களை மூடி வைக்க ஈச்சை ஓலை கொண்டு பின்னப்பட்ட பாய்கள்..

  படுத்துறங்க கோரைப் பாய்கள்..
  கயிற்றுக் கட்டில்கள்.. ஓலை விசிறிகள்...
  பிரம்பு நாற்காலிகள்...

  தேங்காய், பனை, கற்றாழை இவற்றிலிருந்து நார்கள் கயிறுகள்... வைக்கோல் புரிகள் சுருணைகள்...

  தென்னங்குடைகள், தாழங்குடைகள்..

  சுரைக் குடுவைகள், அகப்பைகள்...

  இன்னும் பற்பல...

  மண்ணோடு மண்ணாக உரமாகிப் போகும் இவற்றை எல்லாம் தொலைத்து விட்டு
  மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. துரை சாரின் விஸ்தாரமான பின்னூட்டம் கோரைப்பாய்கள், பனை விசிறி, தாழங்குடைகளின் தண்மைமிகு காலத்தைக் கொஞ்சம் மீட்டுத் தரப் பார்க்கிறது.

   ..’மூடி திறக்கின் முகங்காட்டும்’ என்று
   காளமேகப் புலவர் பாடியது குடத்திலுள்ள எண்ணெயைப் பற்றியதே...//
   சுவாரஸ்யம். இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
   -இப்போதுதான் இதைக் கேள்விப்படுகிறேன்.


   ..

   நீக்கு
  2. * ’கேள்விப்பட்டதாக’ இருமுறை அச்சாகியிருக்கிறது!

   நீக்கு
  3. ஆடிக் குடத்தடையும், ஆடும் போதே இரையும்
   மூடித் திறக்கின் முகம் காட்டும்
   பின்னாக்கும் உண்டாம்...
   என்று நல்லெண்ணெய், பாம்பு இரண்டிற்கும் பொருந்தும் வண்ணம் காளமேக புலவர் எழுதிய கவிதை இது.

   நீக்கு
  4. //பின்னாக்கும் உண்டாம் //

   பிண்ணாக்கும் உண்டாம்.

   நீக்கு
  5. உண்மைதான் துரை சார். அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் கடைக்கு எடுத்துச் செல்வதற்காகவே மஞ்சள் பை இருக்கும். எண்ணெய் தூக்குகள்"உண்டு. நகைச்சுவை உணர்ச்சி கொண்ட என் மாமா கறிகாய் வாங்க"தூக்கும், எண்ணெய் வாங்க பையும் கொண்டு வி என்பார்.

   நீக்கு
  6. கைபேசியில் தட்டச்சியதால் பிழைகள், மன்னிக்கவும்.

   நீக்கு
  7. என்ன செய்ய!..

   எல்லாருக்கும் இப்படித்தான் ஆகிற்து...

   நீக்கு
 8. சட்டங்களை நடைமுறைபடுத்துவது அரசு கையில் மட்டுமல்ல...
  மக்களின் செயல்பாட்டில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அம்மி குழவி, உரல் உலக்கை , திருகு கல் இவை தான் அந்தக் காலத்தில்..

  இந்றைக்கு வீட்டுக்குள்ளே குட்டித் தொழிற்சாலை..

  இந்த மிக்ஸி கிரைண்டர் வகையறாக்கள் உண்டாக்கும் குப்பை மேடு மிகப் பெரியது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மிக்ஸி கிரைண்டர் வகையறாக்கள் உண்டாக்கும் குப்பை மேடு //

   என்ன இப்படிச் சொல்லிட்டீங்க....  அதனால் என்ன குப்பை?

   நீக்கு
  2. ஆமாம்....

   மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் என இன்னபிற சாதனங்கள்...

   கேடாகிப் போன இவைகள் குவிந்து கிடப்பதைத் தான் சொன்னேன்.

   பல ஊர்களிலும் இவற்றைக் குவித்துப் போட்டு வைத்திருக்கிறார்களே....

   இங்கே கூட இப்படி உண்டு...

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. குரோம்பேட்டையை சேர்ந்த பெரியவர் ஜி. ராகவன் அவர்களது மனித நேயம் மிக்க செயல் பாராட்டத்தக்கது. இத்தனை வயதிலும் அவர் இப்பணியை தளராது செய்து வருவதற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்களும்.

  பூந்தமல்லி நகராட்சியில் குப்பைகளுக்கு குட்பை சொன்ன விதம் அருமை. இவ்விதமாக அனைத்து இடங்களிலும் குப்பைகளை பிரித்து மக்களுக்கு சுகாதாரம் பெறச்செய்ய வேண்டும். சுத்தம் அடைந்த நகராட்சிக்கு வாழ்த்துக்கள்.

  தான் படித்த அரசு பள்ளியை சீராக்கி வளம் பெறச் செய்த அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் சேவை மிகச் சிறந்தது.

  பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய கட்டுரை சிறப்பாக உள்ளது. இதில் அனைவருமே ஒத்துழைத்தால் மிக விரைவில் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இதை எழுதிய ரமா ஸ்ரீநிதி அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதுதான் பார்த்தேன். ரமா ஸ்ரீநினிவாசன் என வந்திருக்க வேண்டும். கைபேசியில் தட்டச்சுப்பிழை வந்து விட்டது. தவறுக்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 11. வழக்கம்போல அனைத்தும் அருமை. மனிதம் சாகவில்லை...மனதை நெகிழவைத்தது.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம். அனாதை பிரேத சம்ஸ்காரம் செய்யும் ராகவன் அவர்களையும், அரசுப் பள்ளியில் படித்து முன்னுக்கு வந்த பிறகு அங்கு படித்தேன் என்று சொல்லிக் கொள்வதை அவமானமாக கருதுபவர்கள் இருக்கும் உலகில் தான் படித்த அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தியிருக்கும் சுப்பிரமணியனையும் வணங்குகிறேன்.
  பூந்தமல்லி நகராட்சியை மற்ற நகராட்சிகளும் பின் பற்றினால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 13. எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் என்று வளர்த்து விட்டு ஒரே நாளில் அனைத்தையும் விட்டு விடு என்றாள் அது எப்படி சாத்தியமாகும்? மெள்ள மெள்ளத்தான் அதை ஒழித்துக் கட்ட முடியும்.

  பதிலளிநீக்கு
 14. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற கான்செப்டை கொண்டுள்ளன.

  பதிலளிநீக்கு
 15. இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த திருமதி.ரமா ஶ்ரீனிவாசன் அவர்கள் தமிழையும் ஒரு கை பார்க்க வந்து விட்டார். தமிழ் கூறும் நல்லுலகம் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போனதடவை அவர் கட்டுரை வந்தபோதே நினைத்தேன் - ’தமிழர்தானே இவர்? ஏன் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்குமாறு செய்தார்’ என !

   நீக்கு
  2. "en iniya nanbargale, mudhalil anaivarukkum ungal karuththukkalukkum undhudhalukkum mikka nandri. ennai indha valaiyathirkkul eerththa Sriramirkkum Banu Venkateswaranukkum en mudhal nandriyei theriviththu kolgiren. neengal yaavarum mikka puridhalum aridhalum kondavargalaaga uleergal. ungal yaavaraiyum therindhu kolla udhavi seidha en iniya nanbarum uravinarumaana Valli Narasimhan avargalukku en manamaarndha nandrigal. en payanam ungal undhudhalinaalum natppinaalum nambikkaiyinaalum innum thodarum. Nandri"

   The entire reply above is literally Tamil typed in English. Forgive me for this becoz I'm typing from my husband's laptop which does not have the tamil script downloaded. But, I did not want to delay thanking all of you.

   நீக்கு
  3. வருக.. வருக...

   ஸ்ரீமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நல்வரவு....

   நீக்கு
  4. /// நீங்கள் யாவரும் மிக்க புரிதலும் அறிதலும் கொண்டவர்களாக...///

   ஆகா..

   நாங்க எல்லாம் அப்பவே அப்படி!...

   நீக்கு
  5. ஸ்ரீமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களே.. அடிக்கடி வருக உங்கள் எழுத்துக்களோடு! உங்களை எங்கள் ப்ளாகிற்குள் நுழைத்துவிட்ட ஸ்ரீராம், பானுமதி அவர்கள் மற்றும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் நன்றிகள்.

   நீக்கு
  6. முதல் நன்றியை வல்லி அக்காவுக்குதான் கூற வேண்டும்.

   நீக்கு
 16. மூன்று செய்திகளும் அருமை...

  நெகிழியில் பல பொருட்கள் பெட்டிக்கடையில் சரம் சரமாக தொங்குவதை மாற்ற முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  செய்திகள் அருமை.

  //'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்,' என்ற முண்டாசு கவிஞனின் வரிகள் மின்னியது.//

  பாரதியார் பிறந்த தின சமயத்தில் முன்னாள் மாணவர் அதை நட்டத்தி காட்டிய செய்திக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 18. ராகவன் அவர்களுக்கு வணக்கங்க்கள், வாழ்த்துக்கள்.

  //) குப்பைக்கு குட்பை... மிகப்பெரிய பிரச்னைக்கு சுலப, அழகிய, உபயோகமானத்தீர்வு... பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.//

  இது போல் எல்லா நகராட்சியும் செய்தால் நலம். இவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. //வேண்டாம் இந்த உயிர்கொல்லி ப்லாஸ்டிக்”
  ரமா ஸ்ரீனிவாசன்.//

  ரமா அவர்களின் கட்டுரை நன்றாக இருக்கிறது.
  நடைமுறைபடுத்தினால் நலம் தான்.

  மாடுகள் நெகிழி பைகளுடன் உணவை உட் கொள்வதை பார்த்து பார்த்து வருத்த பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
  நாங்கள் எங்கு சென்றாலும் துணிபை எடுத்து செல்கிறோம்.
  பலசரக்கு கடைகளில் பொருட்கள் பாலூதீன் பைகளில் தான்.
  ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அனைவருக்கும் நன்றி...   நன்றி...   நன்றி!  தனித்தனியாக பதில் பேசமுடியாததற்கு மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!