ஞாயிறு, 8 டிசம்பர், 2019

சாலை...  சாலை...   சாலைக்காட்சிகள்....இஸ்மாயிலுக்கு காத்திருந்த போது .......


அவர் பாட்டுக்கு வண்டியை நிறுத்திவிட்டு puncture கடைக்குப் போய்விட்டார்


கல்லெடுத்தவன் கையும் கேமரா பிடித்தவன் கையும் சும்மா இருக்குமா ?

zoom in .....zoom out ........


சாலை காட்சிகள் மட்டுமே சற்று நேரத்துக்கு

puncture கடைக்கு எதிரில்...

நாம் அங்கே காத்திருந்த நேரத்தில் இந்தப்பெண் 10 வாளி  தண்ணீர் பிடித்து வந்திருப்பாள்சாலைகள் அலுத்த நேரத்தில் சற்றே மரங்களை நோக்கி...

 


ஷில்லாங் ..குவாஹாத்தி  சாலையில் ...


கண் கவரும் வீடுகள்


ஓடை


மரங்கள் ...ஒருமையில் மரம் என்று சொல்லவேண்டுமா ?எதிர்காலக் கடைக்கு ஏற்பாடுகள்இதோ அடுத்த இடது திருப்பம்


வந்துவிட்டது ஜீவன் ரெஸ்டாரெண்ட்


காத்திருந்த நேரம் சற்று அதிகம் என்றாலும் உணவு ரசிக்கும் விதமாக இருந்தது

41 கருத்துகள்:

 1. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. படக்காட்சிகள் எப்போதும்போல் நன்று. தினத்தந்தியின் தொடரை நினைவுபடுத்துகிறது.

  அனைவருக்கும் காலை வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காலத்தில் அது
   கன்னித் தீவு!...

   இன்றைக்கு
   ஆளில்லாத் தீவில் அரேபிய அழகி!...

   ஓய்!... ஆளு இல்லாத் தீவுக்குள்ளேயும் ஆனந்தா போய்ட்டான்!..

   அப்போ.. ஆளில்லாத் தீவு ஆனந்தம் .. அதுவும் போயாச்சா!?...

   நீக்கு
  2. தீவாவது டாவாவது! அவரு டுபாக்கூர் வுட்டுகிட்டு இருக்காரு. இங்கேதான் எங்கேயோ கூடுவாஞ்சேரி பக்கமா பதுங்கி இருப்பாரு.

   நீக்கு
  3. அதானே பார்த்தேன்....

   ஊடகங்கள் குழப்புவது போதாதென்று
   இந்த ஆள் வேறு கைலாசம் வைகுண்டம் யமலோகம்..ந்னு சொல்லிக்கிட்டு....

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது.

  வளைந்தோடும் சாலைகளும். பச்சைப் பசேலென்ற மரங்களும் அருமையாக உள்ளது. எனக்கு மரங்கள் படங்கள் எப்போதுமே அலுப்பதில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம். இரு பக்கமும் தூண்களாக சாலையில் வருவோர், போவோரை வரவேற்கும் மரங்கள் படங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

  பத்து தடவை யாரும் காணாமல் பதவிசாக பத்து வாளி தண்ணீர் பிடித்து வந்த அந்த பெண்மணி பதினொன்றில் தங்கள் கேமராவில் பிடிபட்டு வாளியோடு செயலிழந்து நின்று விட்டார் போலும். ஹா. ஹா. ஹா.

  ஜீவன் ரெஸ்டாரெண்ட் பெயர் அம்சமாக இருக்கறது. உணவு ஜீவனுக்கு பிரதானமல்லவா! பெயரை பொருத்தமாக வைத்து உணவகம் அமைத்திருக்கிறார்கள்.

  படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஜீவன் ரெஸ்டாரெண்ட் பெயர் அம்சமாக இருக்கறது. உணவு ஜீவனுக்கு பிரதானமல்லவா! பெயரை பொருத்தமாக வைத்து உணவகம் அமைத்திருக்கிறார்கள்.// ஆஹா சூப்பர்!

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். போன வாரமோ/அதுக்கு முன்னாலேயோ "குட்பை" சொன்னாப்போல் இருந்தது. நான் உங்களைக் கேட்டிருந்தேன், அடுத்த பயணம் எங்கேன்னு! ஸ்ரீராம் தன்னைத்தான் என நினைச்சிருந்தார். இன்னும் இந்தப் பயணமே முடியலையா? படங்கள் இன்னமும் இருக்குப் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்; நானும் குழம்பிவிட்டேன்.

   நீக்கு
  2. குழம்பியதைக்கூட யாராவது எடுத்துக் கொடுத்தால்தான் சொல்ல முடிகிறது! அவ்வளவு குழப்பமோ? :-)))

   நீக்கு
 6. வண்டிச்சக்கரத்தில் ஓட்டை விழுந்து விட்டதா? இஸ்மாயில் அதுக்குத் தான் போயிருந்தார் போல! காத்திருக்கும் நேரத்தில் எடுத்திருந்தாலும் படங்கள் ரசனையுடன் வந்திருக்கின்றன. தலைப்புகளும் அப்படியே! ஒற்றை மரம் படம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒத்தை மரம் ஒன்று,
   தத்தை மனம் இன்று,
   பாட்டுச் சொல்லி ஏங்க
   வைக்குது அடடா ஓ !

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
  படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

  அதற்கு கொடுக்கபட்ட வாசகங்களூம் அருமை.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம். சில படங்கள் ரிபீட் ஆகியிருப்பது போல் தெரிகிறதே? அங்கு கூட வாழை இருக்கிறதா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழும் வகை தெரிந்த மனிதர்கள் உள்ள எல்லா இடங்களிலும் வாழை இருந்து வாழ்த்துரைத்துக்கொண்டிருக்கும்!

   நீக்கு
 9. புகைப்படங்களும் தலைப்புகளும் அருமை. பசுமை.
  மிக நன்றி மா

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் அழகு. காத்திருக்கும் நேரத்தில் சும்மா இருக்காமல் இப்படிப் படம் பிடிப்பதும் நல்லது தானே! பொழுதும் போகும் சில ஸ்வாரஸ்யமான காட்சிகளும் கேமிராவில் சிக்கும்!

  தொடரட்டும் படங்களும், பதிவுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிற்றுண்டிக்கு காத்தி௫க்கும் பொழுதில் ௮ழகான ஒ௫ புகைப்பட ஓவியம் நம் கற்பனையை மி௩்௬கிறது. ௮ழகான ஒ௫ புகைப்பட கவிதை. நன்றி.

   நீக்கு
  2. எங்கள் சார்பில் உங்களுக்கு நன்றி!

   நீக்கு
 11. யார் சொல்வது இங்குபசுமை இல்லை என்று எங்கும் எதிலும் பசுமை மலையை ,மறைக்கும்மரங்களா

  பதிலளிநீக்கு
 12. பத்து வாளித் தண்ணீர் கொண்டு வந்த பெண்ணுக்குக் கடுமையான தண்ணீர்ப்பஞ்சமா? இங்கே கூட??????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இல்லைனா நம்மைப் போன்ற தமிழ்நாட்டு வாசிகளைப் பார்த்ததால் ஏற்பட்டதோ? :) :) :)

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம், ரொம்பவே வேலை மும்முரம் போல! இப்போல்லாம் அதிகம் பார்க்க முடியறதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு காலத்துல மதன் கிட்ட (விகடன்) கதைகள் அல்லது சம்பவங்கள் போகும். அவர் தேர்ந்தெடுப்பது பத்திரிகையில் வெளியாகும். அப்புறம் அவருக்கு ப்ரொமோஷன் வந்ததும், அந்த வேலையை மற்றவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். மதனுக்கு கூடுதல் பொறுப்புகளில் அல்லது வி.வி.ஐ.பி உரையாடல் இந்த மாதிரி வேலைகள் வந்துடும். அதுபோல ஸ்ரீராம் வேறு ஏதேனும் முக்கிய வேலையில் ஈடுபட்டிருக்கிறாரா (நாவல், கவிதைப் புத்தகம் இந்த மாதிரி)?

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!