ஞாயிறு, 22 டிசம்பர், 2019

ஒத்தையா? ரெட்டையா?




மஞ்சாவா மாஞ்சாவா?

அறைகளா?  கடைகளா?

புகையா?  பனியா?


வருகிறதா?  போகிறதா?  (வெள்ளைக் கார்கள்)


12 வோல்ட்டா?  24 வோல்ட்டா?


செடிகள் விற்பனைக்கா?  அலங்காரத்துக்கா?


வளைந்திருக்கிறதா?  நேராகத்தான் இருக்கிறதா?


பாதை இறங்குகிறதா?  ஏறுகிறதா?


மலைகளா? மரங்களா?


வெயிலா? நிழலா?


நம்பர் இருக்கிறதா?  இல்லையா?


Focus கண்ணாடியா?  ஏ ஸியா ?


புகைப்படமா?  டிவியா?



லாரி திரும்புகிறதா?  நிற்கிறதா?


முன்னால்போவது ஆட்டோவா?  காரா?


வேகமா?  தூரமா?


ஒன் வேயா? திருப்பமா?


மஞ்சளா?  சந்தன நிறமா?


கோவிலா?  இல்லையா?


முடிந்ததா?  இல்லையா?  

61 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. இன்னும் இங்கேருந்து கிளம்பவே இல்லையா? படங்கள் வேறே நிறைய வந்திருக்கே!

    பதிலளிநீக்கு
  4. ஒத்தையா, ரெட்டையா, பம்பையா, பரட்டையா? விளையாட்டுத் தெரியுமா உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பம்பையா பரட்டையா என்றுதான் தலைப்பு வைக்க எண்ணினேன்!!!  அப்புறம் இப்படி வைத்து விட்டேன்.

      நீக்கு
    2. பரட்டை - தெரியும்..

      பம்பை அது யாரு?...

      பரட்டைக்குத் தலை சீவுனா பம்பை...
      சித்திரச் சேலைச் சுருள் தொம்பை..

      இனிமேல் வாங்க மாட்டேன் வம்பை..
      எனை அடிக்க எடுக்காதே கம்பை!...

      நீக்கு
  5. ஒரே கேள்வி மயம்! கேட்டது யார் ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வியின் நாயகன் யார்!...

      இதையே பதிவுலக பத்மராகம் (இந்தப் பெயர் ஒன்று தான் பாக்கி) கேட்டிருந்தால் எப்படியிருக்கும்!...

      நீக்கு
    2. துரை சார்!

      ஹஹா.. ஹஹா..

      ரசித்தேன்! சிரித்தேன்.. சிரித்துக் கொண்டே ரசித்தேன்!

      நீக்கு
  6. கடைசிப்படத்துக்கு பதில் முடியலை! தான் சரினு நினைக்கிறேன்.
    அதுக்கு மேலே கோவிலாட்டமாத் தெரியலை!
    அதுக்கும் மேலே மஞ்சள் நிறம் தான். சந்தன நிறம் இல்லை.
    திருப்பம் தான், ஒன்வேயாட்டமாத் தெரியலை!
    வேஏஏஏஏஏஏகம்.
    முன்னால் போவது ஆட்டோ தான்.
    லாரி நிற்கிறது.
    டிவி மாதிரித் தான் தெரியுது.
    ஃபோகஸ் கண்ணாடி இல்லை, ஏசி.
    முன்னால் போகும் கார் நம்பர் நல்லாவே தெரியுதே!
    வெயிலும் இல்லாமல், நிழலும் இல்லாமல் மேகங்கள் மூடி இருக்கோ?
    மரங்கள் தான், மலையே தெரியலையே!
    பாதை இறங்குகிறது.
    நேராத்தான் இருக்கு, வளையவில்லை.
    வீட்டு மாடியில் அலங்காரத்துக்குத் தான் செடிகள்.
    எத்தனை வோல்ட்னு தெரியலை.
    கார்கள் எல்லாம் பாதை ஓரத்தில் இப்படியும் அப்படியுமாக நிற்கின்றன.
    பனிமூட்டம் தான்புகையாட்டமாத் தெரியலை.
    ஏதோ லாட்ஜின் அறைகள்னு நினைக்கிறேன். ஒன்றிரண்டு கடைகளும் பெயர்ப்பலகை தெரியுது. மேலே அறைகள். துணி உலர்த்தி இருக்கு.
    மஞ்சா தான், மாஞ்சா இல்லை.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கேள்விகள் நன்றாக இருக்கிறது.
    காரின் நம்பர் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் அருமை. அதற்கு ஒத்தையா, இரட்டையா என்ற தலைப்பில் வாசகங்களை அமைத்து எழுதியிருப்பது அருமையிலும் அருமை. ரசித்தேன்.

    நானும் இன்று காலை என்னுடன் உறக்கம் ஞாயறா, திங்களா? என்ற விளையாட்டு காட்டியதில் எழவே சற்று தாமதமாகி விட்டது. பார்த்தால் இங்கும் அதே ஒத்தையா, இரட்டையா?

    எல்லா படங்களும் அழகாக உள்ளது. எதையும் சாய்ஸில் விட இயலவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...  இன்றைக்கு என்ன சமைத்தீர்கள்?  ரசமா? சாம்பாரா?  கூட்டா? பொரியலா?

      நீக்கு
    2. இன்று ரசமும், கூட்டும் செய்ய நினைத்தேன். ஆனால் சந்தர்ப்பங்கள் ஒத்தைக்குதான் வழி விட்டன. அந்த இரட்டையில் ஒத்தை வென்றது. எப்போதுமே எந்த செயலிலும், இரண்டிலொன்று பார்த்து விடுவது என்றுதான் நாம் இறங்குவோம். ஆனால் இரண்டும் அமைவது, இரண்டிலொன்று அமைவது,இல்லை இரண்டுமே அமைவது என்பது அந்த "சங்கர நாராயணனின்" விருப்பமல்லவா..! இன்றைய சிந்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. எப்படியெல்லாம் கேள்வி கேட்லாம்னு ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கற ஹால்லயே யோசிச்சுட்டோம்!  நன்றி ஜோஸப் ஸார்.

      நீக்கு
  12. இந்த கேள்விகள் பதிலளிக்கவா? ரசிக்கவா?

    பதிலளிநீக்கு
  13. கேப்ஷன் கொடுக்கிற வேலை யாரோ சின்னப்பையன்கிட்ட போயிருச்சா !

    பதிலளிநீக்கு
  14. /மஞ்சாவா மாஞ்சாவா?//

    நங்கநல்லூரா, நாங்கநல்லூரா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிக் கேட்கலாம் அதை!

      நங்கநல்லூரா?  நங்கைநல்லூரா?

      நீக்கு
  15. //அறைகளா? கடைகளா?//

    OYO-வா? கெஸ்ட் ஹவுஸா?

    பதிலளிநீக்கு
  16. //புகையா? பனியா?//

    நெருப்பா? நீரா?

    பதிலளிநீக்கு
  17. //வருகிறதா? போகிறதா?//

    நிற்கிறதா?.. நகர்கிறதா?

    பதிலளிநீக்கு
  18. //12 வோல்ட்டா? 24 வோல்ட்டா?//

    10+2 வோல்ட்டா? 20+4 வோல்ட்டா?

    பதிலளிநீக்கு
  19. //செடிகள் விற்பனைக்கா? அலங்காரத்துக்கா?//

    செடிகள் சேல்ஸூக்கா?.. ஷோவுக்கா?

    பதிலளிநீக்கு
  20. ஹம்.. போதும்டா சாமி! பின்னூட்ட பெட்டியே நிரம்பிடும் போல இருக்கு!

    புதுமையே, உன் பெயர் தான் 'எங்கள் பிளாக்'கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yes Jeevi sir. Totally agree with you. they are the best.

      அனைவருக்கும் இனிய மத்யமான காலை வணக்கம்.
      திருப்பாவை சேவித்ததில்
      நேரமாகி விட்டது.
      ஆஹா இது இரவா இல்லை பகலான்னு கேட்கத் தோன்றுகிறது.

      அன்பு துரை சொல்லும் பதிவுலக பத்மராகம் யார்.
      இந்தக் கேள்விக்குப் பதில் வருமா வராதா.
      கேள்வி கேட்டவர் கௌதமன் ஜி யா ஸ்ரீராமா.

      இது போல இணைய தளத்தைச் சுவை கூட்ட எடுத்த
      முயற்சி யாருடையது?
      பதில்கள் சொன்ன கீதாமாவுக்குப் பிரமாதமான பாராட்டுகள்.
      படங்கள் பிரமாதம்.

      பை பை சொல்லிட்டாங்களா.:)

      நீக்கு
  21. கேள்வியின் நாயகனே பதிலையும் சொல்லாததும் ஏனோ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!