சனி, 28 டிசம்பர், 2019

ஆட்டோ.... ஆட்டோ1)  இப்பல்லாம் எங்கே வண்டி ஒடுது என்று அலுத்துக் கொள்ளும் ஆட்டோ ஒட்டுனர்கள் மத்தியில் ஹூசேன் என்றுமே அலுத்துக் கொள்ளாதவர் காலையில் இருந்து இரவு வரை இவரது ஆட்டோ ஒடிக்கொண்டேதான் இருக்கிறது, இவருக்கு என நிரந்தரமாக நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  அது மட்டுமா?....
2)  அடடே...   இதுவும் ஆட்டோ சம்பந்தப்பட்ட செய்தி!  ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சரக்கு ஆட்டோவில் நடமாடும் வீடு வடிவமைத்து நாமக்கல் மாவட்டம் ப.வேலுாரைச் சேர்ந்த 23 வயது அருண்பிரபு  குறைந்த செலவில் நடமாடும் வீடு அமைத்து சாதனை படைத்துள்ளார்.=========================================================================================ஆ..   அமெரிக்கா..    ஆஹா அமெரிக்கா...
ரமாஸ்ரீனிவாசன் 
---------------------------------------------------------------------------------------------


ஆம் ! நான் இதைச் செய்து விட்டேன்! என் வாழ் நாளில் புனேயைத்
தாண்டி பயணம் செய்திராத நான், என்னுடைய எல்லா தயக்கங்களையும், பயங்களையும் புறம் தள்ளி விட்டு அமெரிக்காவிற்கு ஒரு மாத பயணமாக சென்று வந்து விட்டேன். இன்றைக்கு விமானத்தில் பறந்து உலகில் குறுக்கும்,நெடுக்குமாக பயணிப்பவர்களுக்கு இது கேலியாகக் கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய அமெரிக்க பயணக் கதையை நான் எழுத நினைத்ததற்கு காரணம், சிறியதாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவு நான் கற்றதும்,பெற்றதும் அதில் இருந்ததுதான்.


என் பயணதிற்கு சில நாட்கள் முன்பு, மோட்டார் சைக்கிள்
மோதியதால் விபத்திற்குள்ளானதை ஒரு வரம் என்றுதான் கூற
வேண்டும். அதனால்  விமான நிலையங்களில் சக்கர நாற்காலி உதவி
தேவை என்று விண்ணப்பித்திருந்ததை புத்திசாலித்தனம் எனலாமா?
சென்னை விமான நிலையத்தில் நுழைந்ததிலிருந்து விமானம் ஏறும் வரை என்னுடைய சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த அந்த இளைஞர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.
செக் இன் செய்வதில் முன்னுரிமை பெற்றுத் தந்ததோடு, நான்
சௌகரியமாக என் சீட்டில் அமரும் வரை புன்னகை தவழும் முகத்தோடு
அவர் பணி புரிந்த பாங்கு சிறப்பானது. அதே போல துபாய் விமான நிலையத்திலும் வீல்சேர் பயணம் மிகவும் சௌகரியமாக இருந்தது.

துபாயிலிருந்து சிகாகோவிற்கு பயணித்த அந்த பன்னிரெண்டு மணி
நேரங்களும் அலுப்பு தெரியாமல் இருந்ததற்கு பயணத்தின் இடை இடையே வழங்கப்பட்ட சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் காணக் கிடைத்த திரைப்படங்கள் முக்கிய காரணமாக இருந்தன.
சிகாகோவின் ஓஹேர் விமான நிலையத்தில் நான் இறங்கியதும்
பாதுகாப்பு சோதனையிலேயே என்னை அடையாளம் கண்டு கொண்ட
சக்கர நாற்காலி பணியாளர், என் பெட்டிகள் வந்ததும், அதை எடுத்துக்
கொண்டு என்னை என் உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னரே விடை
பெற்றார். சென்னை, துபாய்,சிகாகோ இந்த மூன்று இடங்களிலுமே சக்கர
நாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றவர்கள் கருணையோடும்,
பொறுமையொடும், இனிமையாகவும் நடந்து கொண்டதை முக்கியமாக
குறிப்பிட விரும்புகிறேன்.

நல்ல குளிர்காலத்தில் நான் சிகாகோவில் அடி எடுத்து
வைத்திருந்தேன். எங்கும் பனி, கடுமையான குளிர். என்னதான் குளிருக்கு
அடக்கமாக கோட்,ஷீ, கையுறை போன்றவை அணிந்திருந்தாலும் அந்த
குளிர் எனக்கு அதீதம்தான்.  நல்ல வேளையாக என் உறவினரின் கார்
உஷ்ணமூட்டப்பட்டிருந்தது. விமான நிலையத்திலிருந்து அவர்கள் வீடு ஒரு மணி நேரப் பயணம். வழி நெடுகிலும் இரு புறங்களிலும் தேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம் போல் கண்ணைக் கவர்ந்த, பனி போர்த்திய பசுமையான செடிகள், தாவரங்கள் ஆஹா! என்ன அழகு! அந்த பனியில் கார் ஓட்டுவது கடினமாக இருந்திருக்கலாம், எனக்கோ சென்னையின் வெப்பத்திற்கு நல்ல மாற்று.
பசுமைக் காட்சிகள் ஒரு புறம் இருந்தாலும், அதையும் மீறி நம்
கண்ணையும், கருத்தையும் கவர்வது அந்த சுத்தம்! சாலைகள்,
நடைபாதைகள் எல்லாமே சுத்தமோ சுத்தம். பிலாஸ்டிக் வேஸ்டுகளால்,
நிரம்பி வழியாத நடைபாதைகள், பேப்பர் பறக்காத சாலை. நம்மை சுற்றி
எங்கு பார்த்தாலும் பளிச்சிடும் இடங்கள்! நாமும் வாழும் இடத்தை இப்படி தூய்மையாக வைத்துக் கொள்ளும் எளிய, நமக்கு கடினமான கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
இங்கிருக்கும் வீடுகள் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றன.
இதற்கு இங்கு நிலவும் சீதோஷ்ணமா? அல்லது இங்கு கிடைக்கும்
கட்டுமான பொருள்களா எதனால் என்பது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வீடும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரைகள் கம்பளம் விரிக்கப்பட்டு,தரமான வீட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வாழ்க்கையை சுலபமாகவும், தரமாகவும் அமைத்துக்கொள்கிறார்கள். எல்லா வீடுகளிலும் பூக்களைச் சொரியும் மரங்களோடு கூடிய புல் தரைகள்.இருக்கின்றன.

பின்பக்கத்தில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள், விளையாட்டு
உபகரணங்கள் கோடை காலத்திற்காகக் காத்திருக்கின்றன.
அமெரிக்காவில் நான் நியூயார்க், நியூஜெர்சி, ஜார்ஜியா, அரிசோனா,
சிகாகோ இந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று
திட்டமிட்டிருந்தேன். 

நான் முதல் முதல் காண சென்ற இடம் அரிசோனா. நடுக்கும்
குளிருக்குப் பின் அங்கு அடித்த வெயில் மிகவும் இதமாக இருந்தது. ஒரு
நிம்மதியான வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வாழும் ஒரு மாநிலம் இது.  இங்கு வாழ்க்கை முறையே மிகவும் நிதானமாகவும்,
பரபரப்பில்லாமலும் சுலபமாகவும் இருந்தது.  ஆயினும் அந்த ஊருக்கே ஒரு சொர்க்கபுரியின் அழகும் சிங்காரமும் எங்கும் பரவியிருந்தது. இத்தனைக்கும் மரம், செடி, கொடி யாவுமே கற்றாழயும் பேரிச்சை மரமும்தான்.

இங்கிருந்து நான் பயணப்பட்டது நியுஜெர்சிக்கும், அங்கிருந்து ஒரு மணி
நேர பயண தூரத்தில் இருந்த நியூயார்க்கிர்க்கும். நியூயார்க்கில் இருக்கும் மெட்ரொபொலிடன் மியுசியம் ஆஃப் ஆர்ட் என்னும் கலைகூடத்தை பார்வையிட முடிந்த நான் ஒரு பாக்கியசாலி என்றுதான் கூற வேண்டும்.
ஏறத்தாழ ஒரு முழு நாளை அதை பார்வையிட செலவழித்தேன் என்றால்
மிகையாகாது. அங்கிருக்கும் எகிப்திய பிரிவுக்குச் சென்ற நான் அங்கிருந்த பாடம் செய்யப்பட்ட உடல்கள், அவர்களின் அணிகலங்கள், பயன்படுத்திய ஆயுதங்கள், உபயோகப்படுத்திய அறைகலங்கள் இவற்றை பார்த்து பிரமித்து பேச்சிழந்தேன். என்ன ஒரு தீர்க்க தரிசனம்!. ஒரு எகிப்திய கோவில் பெயர்தெடுக்கப்பட்டு மீண்டும் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு ஐரோப்பியப் பிரிவுக்குச் சென்றோம். அங்கிருக்கும்
சிற்பகூடத்தில் அமைந்திருக்கும் தத்ரூபமான சிற்பங்களும், ஓவியங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. 
அதன் பிறகு அமெரிக்கப் பிரிவிற்குச் சென்றோம். அவர்களின் பழமையான வசிப்பிடங்களும், அதிலிருந்த லிவிங் ரூம், நடனக் கூடங்கள், தேநீர் அறைகள், அந்தக் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய உடைகள் எல்லாவறையும் பார்த்த பொழுது, வாழ்க்கையை மிகவும், நவீனமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அங்கு என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், அவர்கள் புகழ் வாய்ந்த அமெரிக்க அரண்மனையையே கேன்வாசில் வடித்திருந்ததுதான்.நேராக அரண்மனைக்குள்ளேயே நுழைவது போல் இருந்தது.
ப்ரூக்லின் பாலத்தில் பயணித்ததையும், சுதந்திர தேவி சிலையைக்
காண ஹட்சன் நதியில் பயணித்ததும் நல்ல அனுபவங்கள்.
உண்மையாகச் சொன்னால், சுதந்திர தேவி சிலையை பார்த்ததை விட,
அதை பார்ப்பதற்காக படகில் சென்றது இன்னும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

என் அடுத்த விசிட்,  அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியாவுக்குத்தான்.
அழையா விருந்தாளியாக வந்த மழை எங்கள் திட்டதை பாதிக்கப் பார்த்தாலும், நாங்கள் அதற்கெல்லாம் அசந்து விடுவோமா என்ன? 

ஸ்டோன் மவுண்டன் என்னும் மலைதான் அங்கு சிறப்பு.  ஒற்றை
க்ரானைட் கல்லால் உருவாகியிருக்கும் மலை அது. அதன் பக்கவாட்டில் அமெரிக்க சிவில் வாரின் காட்சிகளை இங்கு வசித்த மூன்று பேர்கள் செதுக்கியிருக்கிறார்கள். அங்கிருக்கும் மியூசியத்தில் அமெரிக்க சிவில் வார் பற்றிய ஒலி, ஒளிக் காட்சி இருக்கிறது.  அதன் மூலம் அமெரிக்க சிவில் வார் பற்றிய முழுத் தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன.

கடைசியாக சிகாகோவுக்கு மீண்டும் சென்றோம். அங்கே நம் ஊரில்
இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுப்பதற்காக பரிசுகள் வாங்க நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்தது. அதை வெற்றிகரமாக முடித்து, ஊர் சுற்றவும் நேரம் வைத்துக் கொண்டோம். இங்கு சிலர் தங்கள் வீடுகளில் விமானம், ஹெலிகாப்டர் இவைகளோடு ஆடம்பரமாக வாழ்கிறார்கள், ஆனால் அது அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஊரின் அழகான இயற்கைக் காட்சிகள் மறக்க முடியாத நினைவுகளாக மனதில் தேங்கி விட்டன.
என்னுடைய இந்த அமெரிக்க குறுஞ் சுற்றுலாவில் என்னைக் கவர்ந்த
ஒரு விஷயம், அமெரிக்கர்களின் நேர்த்தியான, திட்டமிட்ட வாழ்க்கை
முறை. எதிலும் குழப்பமோ, மற்றவர்களுக்கு அசௌகரியமோ இல்லை.
அரசாங்க நடைமுறைகள் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல்
மிகவும் வெளிப்படையாக இருக்கின்றன. நம் நாட்டிலும் விரைவில்
இப்படிப்பட்ட ஒரு முறையான, திட்டமிட்ட வாழ்க்கை முறை 
அமையும் என்னும் விருப்பத்தோடும், நம்பிக்கையோடும் நாடு
திரும்பினேன். அதே நம்பிக்கையோடு இந்த கட்டுரையையும் முடிக்கிறேன். 
=========
திருமதி ரமா ஸ்ரீனிவாசன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை, நமக்காக தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்திருப்பவர் : திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன். இருவருக்கும் எங்கள் நன்றி. 

33 கருத்துகள்:

 1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. ரமா அவர்களது அமெரிக்கப் பயணக் கட்டுரை அருமை....

  விபத்தையும் வரம் என்ற பெருந்தன்மை...

  ஆகா!...

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இரு பாஸிடிவ் செய்திகளும் அருமை.

  ஆட்டோ ஓட்டுனர் திரு. ஹூசேன் அவர்களின் நேர்மையும், அவர் அதில் பயணிக்கும் மக்களுக்காக செய்து வைத்திருக்கும் பயனுள்ள உதவிகளும் சாலச்சிறந்தது. அவரின் உதவி செய்யும் மனப்பான்மையை வாழ்த்துவோம்.

  இரண்டாவது ஆட்டோ ஓட்டுனர் தன் ஆட்டோவிலேயே தன் முயற்சியால் நடமாடும் வீடு அமைத்து வெற்றி கண்டதை பாராட்டுவோம். இரு ஆட்டோ பற்றிய செய்திகளை தந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

  கட்டுரையில் சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் எழுத்துக்கள் மூலமாக நாமும் அமேரிக்கா சென்று வந்த திருப்தி கிடைத்தது. மிக அழகான கட்டுரை. தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு பாராட்டுகளும், நன்றிகளும். பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம். என்ன இன்று யாரையும் காணோம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம். வாங்க...யாரையும் காணோம். சனி ஞாயிறுன்னா காணாம்ப் போயிடறாங்க! வீக் எண்ட் தமாகா!

   நீக்கு
  2. எனக்கெல்லாம் எல்லா நாளும் திருநாள் தான்...

   வாழ்க எபி!...

   நீக்கு
 6. ஏதோ நானும் அமெரிக்காவை வலம் வந்தது போனாற உணர்வு அருமையான நடை. விபத்தை பெருமையாக ஏற்றுக் கொள்ளவும் பெருமனம் வேண்டும்.


  ஆட்டோ வீடு வடிவமைத்தவர் பாராட்டுக்குறியவர்.

  பதிலளிநீக்கு
 7. ஹூசேன் அவர்களின் பணி சிறப்பானது. ஆட்டோவில் வீடு அமைத்ததும் சிறப்பான செயல். தேவையில்லை என்று விட்ட பல பொருட்கள் ஏதேனும் ஒரு விதத்தில் பயன் தரக்கூடும் என்பதை உணர்த்திய செய்தி.

  அமெரிக்கப் ப்யணம் பற்றிய கட்டுரை வெகு சிறப்பு. அவர் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டு செய்திகளும் அருமை...

  அமெரிக்கப் ப்யணம் பரவசம்...!

  பதிலளிநீக்கு
 9. ஹுசைன் பாராட்டுக்கு மட்டுமல்ல, வணக்கத்திற்கும் உரியவர். சரக்கு வண்டியில் நடமாடும் வீடு நல்ல முயற்சிதான் ஆனால், அதன் பயன்பாடு, பாதுகாப்பு போன்றவை கேள்விக்குறிகளாக இருக்கிறதே. மேலும் மூன்று சக்கரம் இத்தனையையும் தாங்குமா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்குவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணி இருப்பார். என்ஜீனியர் ஆச்சே...! ஆனால் பாதுகாப்பு யோசிக்க வேண்டிய விஷயம். இரவுகளில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதி, போலீஸ் ஸ்டேஷன் அருகே என்று நிறுத்தி வைக்க வேண்டியதுதான்!

   நீக்கு
  2. மிக மிக நல்ல செய்திகள் தந்த சனிக்கிழமை . அனைவருக்கும் இனிய காலை வணக்கங்களும் வாழ்த்துகளும்.

   ஆட்டோ ஹுசைன் அவர்களின் நற்குணம் மன மகிழ்ச்சி தருகிறது.
   இன்னும் நிறைய ஆண்டுகள் அவர் இந்தப் பணியை நன்கு
   தொடர வாழ்த்துகள்.

   அந்த வீட்டு ஆட்டொவைப் பார்க்க ஆசை.
   குடும்பத்தோடு இருந்தால் பாதுகாப்பு இன்னும் தேவை.

   இல்லை தங்கு வசதியோடு நடமாடும் ஹோட்டலாகக் கூட ஆகலாம்.
   உள் அமைப்பும் படம் எடுத்துப் போட்டிருக்கலாம்.
   நம் ஊரில் இந்த ஏற்பாடு செய்த அந்த இஞ்சினீயருக்கு
   மேலும் வளர வாழ்த்துகள்.
   பயணம் சிறக்கட்டும்.

   நீக்கு
 10. திருமதி ரமா ஸ்ரீனிவாசனின் எழுத்து வல்லமை ஆச்சர்யம் கொடுக்கிறது.
  மிக அழகாகத் தன் பயணக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

  அவரது வரப் போகும்பயணங்களும் இனிமையாக அமைய வாழ்த்துகள்.

  நான் சென்ற இடங்கள் இவர் கண் வழியே பார்க்கும் போது இன்னும் வளமாக
  . இருக்கின்றன,.எழுத்து வன்மை சிறப்பு.  பதிலளிநீக்கு
 11. திருமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருந்த அமெரிக்க பயண கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. மொழி பெயர்ப்பை பற்றி நான் கூறுவது நன்றாக இருக்காது. பாராட்டியவர்களுக்கு நன்றி. ஸ்ரீராமை தொடர்பு கொண்ட பொழுது அவருக்கு இணைய பிரச்சனை இருப்பதால் மொழி பெயர்ப்பை பற்றி குறிப்பிட முடியவில்லை என்றார். It's OK! 

  பதிலளிநீக்கு
 12. ரமா ஸ்ரீனிவாசன் தொடர்பு கொண்டு பாராட்டித் தள்ளினார். அவருக்கும் என் நன்றி. இந்த சமயத்தில் படையப்பா படத்தில் வரும் "மாப்பிள்ளை அவர்தான், அவர் போட்டுக் கொண்டிருக்கும் சட்டை என்னுது" என்னும் நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகிறது. ரஜினி ரசிகராகிய அவருக்கும் வரும் என்று நினைக்கிறேன். ஹா ஹா ஹா !

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 14. ஹூசேன் அவர்கள் ஆட்டோவில் பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் வைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  ஆட்டோவில் நடமாடும் வீடு அமைத்த்வர் சொந்த பயன்பாட்டுக்கா? வாட்கைக்கு வீட்டை விட போகிறாரா தெரியவில்லை.
  பாராட்டுக்கள். மனை வாங்கி வீடு கட்டுவது இப்போது நிறைய சிரமம் இருக்கிறது. நல்ல யோசனைதான்.

  பதிலளிநீக்கு
 15. ரமாஸ்ரீனிவாசன் பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது.

  அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையையை பானு தமிழாக்கம் செய்தார்களா?நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. கேரளாவை விட்டு எங்கும் பயணித்திராத எந்தம்பியின் ம்னைவி தனியாகஸ்வீடன் சென்று மகளுக்கு பிரசவம்பார்த்தார் அது வே எனக்கு ஆச்சரிய மூட்டிய சம்பவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரமா ஸ்‌ரீனிவாஸன் முதலில் உங்கள் யாவருக்கும் என் நன்ற்களை தெரிவித்துக் கொள்கிறேன். பானு என் ஆங்கிள கட்டுரையை எழுத்து பிசகாமல் மொழி பெயர்த்து வெளுத்து வாங்கியிருக்கிரார். என் முதல் நன்றி அவருக்கு. ஒருவர் மனதில் நினைப்பதை தத்ரூபமாக அறிந்து மொழி பெயர்த்தல் ஒரு சுலபமான காரியம் இல்லை. அதை மிகவும் எளிதாக செய்திருக்கிரார் அவர். மற்றபடி, என்னை தமிழில் எழுதத் தூண்டிய ஸ்‌ரீராம், வள்ளி நரசிம்மன், பானு அவர்களுக்கு என் நன்றியை மீண்டும் அவையில் அரங்கேற்றுகிரேன். நீங்கள் யாவரும் புகழும்போது என்னுள் எழும் மகிழ்ச்கிக்கும் மெதப்பிற்க்கும் மிகவும் நன்றி. மேலும் எழுத்தில் தொடர எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கின்றேன்.

   நீக்கு
 17. நல்ல மனிதர்கள். ஆட்டோ ஓட்டினாலும் மனிதர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். குடும்ப ஆட்டோவைப் பார்த்து மனம் மகிழ்ந்தாலும் அதில் சமையல் போன்றவை செய்யும்போது கவனம் தேவை என்பதையும் சொல்ல வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. ஹுசேன் போன்ற நல்ல உள்ளங்களுக்கு நல்ல நண்பர்கள் இயற்கையாகவே அமைவார்கள்.

  பதிலளிநீக்கு
 19. அன்பு பானுவுக்கு மிக மிக நன்றி. ரமாவின் எழுத்து மிக அழகாக உங்கள் உதவியில் வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!