திங்கள், 23 டிசம்பர், 2019

திங்கக்கிழமை  : ப்ரெட் உப்புமா - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 



ப்ரெட் உப்புமா
கீதா சாம்பசிவம் 
-----------------------------------------

ரொம்ப நாட்கள் கழிச்சு ஒரு சமையல் குறிப்பு எழுதலாம்னு ஆரம்பிச்சிருக்கேன். நிறைய எழுதி வைச்சதும் இருக்கு. ஆனால் இது வெகு எளிதாகப் பண்ணக் கூடிய ஒன்று. ரொம்பவெல்லாம் சாமான்கள் தேவை இல்லை. ப்ரெட் பாக்கெட் வாங்கி இருந்தால் அதில் செலவு ஆகாமல் இருக்கும் நான்கு அல்லது ஐந்து துண்டங்களே போதும். இப்போ நாம் ப்ரெட் உப்புமா பண்ணத் தயார் ஆவோமா?

ப்ரெட் துண்டங்கள் 4 அல்லது 6 இதற்கு ப்ரவுன் ப்ரெடே நன்றாக இருக்கும். வெள்ளை ப்ரெட் எனில் உப்புப் போட்டது வாங்கவும். இனிப்பு ப்ரெட் வேண்டாம். மாடர்ன் ப்ரெடில் சான்ட்விச் ப்ரெட் எனக் கிடைக்கும். அது வாங்கினாலும் சரி. பிடிச்சுச் சாப்பிடறவங்க இருந்தால் 8 துண்டங்கள் கூட எடுத்துக்கலாம்.

மற்றப் பொருட்கள்: வெங்காயம் பெரிது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2 நடுத்தர அளவுக்கான தக்காளிப் பழங்கள், சிவப்பாக இருத்தல் நல்லது. அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ப்ரெடிலேயே உப்பு இருப்பதால் வெங்காயம், தக்காளி வதக்கும்போது தேவையான உப்பு அரை டீஸ்பூன் போதுமானது.

தாளிக்க: சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு,உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ஜீரகம், சோம்பு(தேவை எனில்), பெருங்காயப் பொடி, இஞ்சி துருவியது ஒரு டேஸ்பூன், கருகப்பிலை, மிளகாய்ப் பொடி அரை டேஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் 2 அல்லது 4 பச்சைமிலகாயின் காரத்துக்கு ஏற்ப. முந்திரிப்பருப்பு தேவை எனில் பத்து அல்லது பனிரண்டு. நான் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டேன். தண்ணீர் அரைக்கிண்ணம். கடைசியில் தூவக் கொத்துமல்லி  பொடியாக நறுக்கியது.

ப்ரெட் உப்புமாவுக்கு ப்ரெடை நன்கு மொறுமொறுவென ரோஸ்ட் செய்து கொள்ளவும். ப்ரெடை அப்படியே பச்சையாகப் போட்டால் அது உப்புமாக்கிளறும்போது ஈஷிக்கொண்டு வாயிலும் சாப்பிடும்போது சேர்ந்தாற்போல் இருக்கும். நான் எங்க இருவருக்கு மட்டும் என்பதால் 4 துண்டங்கள் தான் எடுத்துக்கொண்டேன். அவற்றை நன்கு ரோஸ்ட் செய்து துண்டங்களாக நறுக்கிக் கொண்டேன்.


நறுக்கிய துண்டங்கள் கீழே






தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கியது!




அடுப்பில் சமையல் எண்ணெய் விட்டுத் தாளிதம் செய்திருக்கேன்.




தக்காளி, வெங்காயம் வதக்குகையில் சர்க்கரை ஒரு டீஸ்பூன், அரை டீஸ்பூன் உப்புச் சேர்த்து வதக்கிக் கொண்டு பின்னர் மிளகாய்ப் பொடியும், மஞ்சள் பொடியும் சேர்த்திருகேன்.




வதக்கியது சேர்ந்து வருவதற்காக அரைக்கிண்ணம் வெந்நீர் விட்டுக் கொதிக்க வைத்திருக்கும் படம். தக்காளி நன்கு குழையும் வரை கொதிக்கவிடலாம். இது கொஞ்சம் கெட்டியாக இருந்தால் நல்லது.





ப்ரெட் துண்டங்களையும், கொத்துமல்லியையும் போட்டிருக்கேன். துண்டங்கள் உடையாமல் கிளறவேண்டும்.




கலந்த உப்புமா. சூடாகப் பரிமாறவும். ஆறிப்போனால் அவ்வளவு ருசி இருக்காது


47 கருத்துகள்:

  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. சாதாரணமாக பிய்த்துப் போடாமல் கொஞ்சம் சிரமப்படாலும் அழகிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கி Fry செய்து கொள்ளலாம்...

    ஓய்... வாத்யாரே... அழகா நறுக்கி கண்காட்சியிலா வைக்கப் போறங்க?...

    அப்போ.. சரி....
    சுவையான பதிவு!..

    பதிலளிநீக்கு
  3. கஷ்டபாடமல் சமைக்க பெண்கள் அறிமுகப்படித்தி ஒரு டிபன் தான் இந்த உப்புமா.... இது பல்வேறு வகைகளில் வருகிறது அதில் ஒன்றுதான் கீதா சேச்சி பண்ணிய உப்புமா......முன்பு உப்புமாவிற்கு ஒழிக என்று கோஷம் போடுவேன் இப்பொதெல்லாம் அதற்கு வாழ்க என்று கோஷம் போடுகிறேன் ஏனென்றால் கிச்சனில் சமைப்பவர்களுக்குதெரியும் சமைப்பதின் கஷ்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்புமா எனப்படுவது யாதெனின் யாதொன்றும் மீதம் இலாத செயல்..

      வள்ளுவர் ஸ்வாமி மன்னிக்கவும்...

      நீக்கு
    2. காலைப் பொழுது கலகலப்பாக இருக்கட்டும்!..

      அதற்குத் தான் இது...
      நகையாய்க் கொள்க!..

      அடடா... பத்மராகம் வந்து கேட்டால் என்ன சொல்லுவேன்!?...

      நகைச் சுவையாய்க் கொள்க!...

      நீக்கு
    3. வள்ளுவர் ஸ்வாமி மொத்த தமிழ்நாட்டையுமே மன்னிச்சுட்டாரு.. அவரால முடில!

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த ப்ரெட் உப்புமா பிரமசாரிகளின் சமையல் என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. எல்லோரும் ப்ரெட் உப்புமா ஆறுவதற்கு முன்னால் சாப்பிடுங்க! நான் காலம்பர வந்து பார்க்கிறேன். அதுவும் தாமதமாத் தான் வருவேன்.

    பதிலளிநீக்கு
  8. பிரட் உப்புமா நானும் செய்வேன்.
    பிரட்டை மிக்ஸியில் பொடி செய்து கொள்வேன்.
    செய்முறையும்,, படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. பாரம்பரிய சமையல் போணீ  ஆகலைன்னு திங்க கிழமையில் பிரட் உப்புமா செய்ய வந்துட்டாப்ல. இந்தியாவில் அரிசி உப்புமா அம்பேரிக்காவில் பிரட் உப்புமாவோ? அது சரி அம்பேரிக்காவில் வெங்காய விலை எப்படி? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கெல்லாம் வெங்காயம் எப்பவும் மலிவுதான் ஜே கே ஐயா.

      இங்கு எங்களுக்கு ஒரு கிலோ வெங்காயம்.. 59 சென்ச்சிலிருந்து - ஒரு பவுண்டுகளுக்குள்தான் எப்பவும் கிடைக்கிறது..

      நீக்கு
    2. @jk22384! வெங்காயத்தட்டுப்பாடு இந்தியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய மாட்டீர்களோ?

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    குழந்தைகளின் பள்ளி நாட்களுக்குக் கொண்டு போய்
    விட்டது இந்தப் பதிவும்.
    மாடர்ன் ப்ரெட் ஒரு முழு பாக்கெட்டுமே செலவாகும். மாமியாருக்கு உ.பருப்பு இல்லாமல்
    எடுத்து வைப்பேன்.

    உங்கள் செய்முறை நன்றாக இருக்கிறது.

    நான் தக்காளி சேர்ப்பதில்லைமா.
    நறுக்கின துண்டங்களை உப்பு மஞ்சள் பொடி
    மட்டும் போட்டுப் பிரட்டி வைத்து,
    கடுகு இத்யாதிகளைத் தாளித்து வறுபட்டதும்,
    துண்டுகளைப் போட்டு சற்றே மொறு மொறப்பாக எடுத்து விடுவேன்.

    குழந்தைகளுக்கு இரண்டாம் பட்சம் தான்.
    மாமியாரும் அவர் தங்கையும் விரும்பி சாப்பிடுவார்கள்:)
    நன்றி கீதா மா.

    பதிலளிநீக்கு
  11. உப்புமா என்றால் முகம் சுளிப்பவர்கள் கூட விரும்பும் உப்புமா இது. நான் பாவ் பாஜி செய்ய உதவும் பாவிலும் ப்ரெட் உப்புமா செய்வேன். தாளித்த பிறகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதில் ப்ரெட் துண்டங்களை சேர்த்து, உப்பையும் தூவி, தண்ணீர் தெளித்து, தெளித்துதான் உப்புமாவை கிண்டுவேன். தக்காளி, வெங்காயம் வதங்குவதற்காக தண்ணீர் சேர்ப்பதில்லை, soggy ஆகிவிடுமோ என்று பயம். ரவை உப்புமா செய்யும் பொழுதும் பிரட் துண்டுகளை சேர்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என்னமோ அவ்வளவாப் பிடிக்காது. வீட்டில் உள்ளவர்களுக்காகப் பண்ணுவேன். தண்ணீர் சேர்த்தால் தக்காளி குழைந்து கொள்ளும். மற்றபடி நன்கு சேர்ந்து கொதிக்கவிட்டுவிட்டால் ப்ரெட் துண்டங்களைப் போட்டாலும் சேர்ந்து கொள்ளாது. உதிராகவே வரும். தண்ணீர் தெளித்துத் தெளித்துப் பண்ணினால் ரொம்ப நேரம் கிளறுகிறாப்போல் ஆகும் என்பது என் எண்ணம். கூடியவரை தக்காளியை நன்கு வதக்கிடுவேன்.

      நீக்கு
  12. ஆஆஆஆ இன்று கீசாக்கா ரெசிப்பியோ... பாருங்கோ அம்பேரிக்கா போனாலும் சமைப்பதை மறக்கேல்லை கீசாக்கா:).

    சோட் அண்ட் சுவீட்டான ரெசிப்பியாச்சே கீசாக்காவால இப்படியும் முடியுமோ என வியந்து கொண்டே வந்தேன், அதெல்லாம் அப்பூடி விடமாட்டேன் என போஸ்ட்ல மின்னி முழக்கிட்டா.. ஹா ஹா ஹா அதாவது ஆருக்குமே டவுட்டே வந்திடக்கூடாது எனும் வகையில் விளக்கம் குடுத்திருக்கிறா... அருமை, படங்களும் நன்றாக வந்திருக்குது[கடசி மூன்றைத்தவிர்த்து].

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. grrrrrrrrrrrrrrrrrrrrrrrr கடைசி 3க்கும் என்னவாம்?

      நீக்கு
    2. //சோட் அண்ட் சுவீட்டான ரெசிப்பியாச்சே கீசாக்காவால இப்படியும் முடியுமோ என வியந்து கொண்டே வந்தேன்,// அநியாயம், அக்கிரமம், அராஜகமா இல்லையோ? காஷ்மீர், பஞ்சாபின் பிரபலமான ராஜ்மா சாவல், பைங்கன் பர்த்தா, ஆலூ தம் என விதவிதமாப் பண்ணின/இன்னமும் பண்ணிக்கொண்டிருக்கும் எனக்கு இந்த அவமானத்தைப் பொறுக்க முடியலை. அதனால் உடனே ஓடோடி வந்து தியாகத் திலகத்தை நிஜம்மாவே தேம்ஸில் தள்ளிவிடப் போகிறேன். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  13. இந்த உப்புமா நானும் ஒருதடவை செய்தேன் கீசாக்கா, ஆனா ஆருக்கும் பிடிக்கவில்லை..இன்குளூடிங் மீ:))..

    அது என்னமோ தெரியவில்லை, மிச்சமான உணவில் உப்புமா எனச் சொல்லி, மிஞ்சிய வடை, தோசை, இட்லி இப்படி அனைத்திலும் செய்கிறார்கள்.. அது உடனுக்குடன் நேரடி உணவாக உண்ணும்போது.. அதாவது வடை, தோசை, இட்டலி .. வரும் சுவை, இப்படி போட்டுப் பிரட்டுவதில் வருவதில்லை.. பிரெட் இல் குழம்பும் கீதா செய்ததாக நினைவு.

    முன்பு கொஞ்சக்காலம் நானும், பணத்தை வீணடிக்கக்கூடாது , மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என, எதையும் கொட்டுவதில்லை:), 2,3 நாளானாலும் ஃபிரிஜ்ஜில் வச்சு நானே சாப்பிட்டு முடிச்சு.. ஹா ஹா ஹா பின்புதான் என் கிட்னி சொல்லிச்சுது.. கனக்க வாணாம், மிஞ்சிவிட்டது என .. அந்த மிஞ்சிய உணவைக் கணக்குப் பார்த்தால், உப்புத் தூள் பிளி என அனைத்தையும் போட்டுக் கூட்டினாலும் ஒரு 2,3 பவுண்டுகளைத் தாண்டாது, அப்போ இதுக்காகவா பிரிஜ்ஜில் வச்சு உடம்பைக் கெடுக்கோணும் என[சாப்பிடுவது நான் மட்டும்தானே.. அதுவும் கொட்டுங்கோ எனச் சொல்லச் சொல்லக் கொட்டாமல் வச்சுச் சாப்பிடுவேனாக்கும்[அவ்ளோ சூப்பர் குடும்பத் தலைவியாக்கும் மீ:)) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா], இப்போ உடனுக்குடன் எங்கள் கார்டினுக்கு வரும் தோழர்களுக்குக் குடுத்து விடுகிறேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை யாரு பழைய ப்ரெட்ல பண்ணச் சொன்னா? புதுசா வாங்கி சாண்ட்விச் அப்புறம் உப்புமா இரண்டையும் பண்ண வேண்டியதுதானே

      மற்றபடி ஸப்ரிட்ஜில் எதையும் வைத்துச் சாப்பிடக்கூடாது, அதிலும் மிஞ்சி விட்டது என்று

      நீக்கு
  14. ஹொலிடே விட்டுவிட்டதே புளொக்கில் கும்மி போடலாம் என நினைச்சிருந்தேன், ஆனா இப்போதான் ஓவர் பிஸியாக இருக்கு:).. இல்லை எனில் ஹாயாக சாப்பிட்டு ரீ குடிச்சு ரெஸ்ட் பண்ணவே மனம் விரும்புது.. நான் என்ன பண்ணுவேன்.... ஏதாவது பண்ணோனும்.. சரி கீசாக்கா நித்திரையால எழும்ப முன் மீ ஓடிடுறேஎன்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்ன... சின்னப் பசங்கன்னா எதையோ பண்ணி ஏதோ பெயர் வச்சு அவங்களுக்குப் போட்டு ஒப்பேத்தலாம்.

      பசங்க வளந்துட்டாங்கன்னா சின்சியரா கத்துக்கிட்டு ஒழுங்கா சமையல் பண்ணிப் போடணுமே. இப்போ இருவருக்கும் லீவு. பிசியாத்தான் இருப்பீங்க நீங்க.

      சமையல் புத்தகங்கள்லாம் முழுசா படிக்க வேண்டியிருக்குமே.

      நீக்கு
  15. ஹை எளிதாய் செய்யலாம் போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரி

    தங்கள் பிரெட் உப்புமா செய்முறை. படங்கள் அனைத்தும் அருமை. கடைசியில் வந்தாலும் (பொதுவாக ஆறி விட்டது ஒரு ருசியாக இருக்கும் என்பதாலும்,அதிலும் தக்காளி வெங்காய விழுதில் நன்றாக ஊறி இருப்பதாலும், நானும் விருப்பத்துடன் எடுத்துக் கொண்டேன்.) எனக்கும் ஒரு பங்கு கிடைத்தது.

    நானும் இப்படித்தான் செய்வேன். இன்னொன்று.. இதே மாடலில் நானும் பிரெட் உப்புமா செய்து படங்கள் எடுத்து வைத்துள்ளேன். ஒரே உப்புமா, உ. கொ, சாம்பார் என எ. பிக்கு அனுப்ப மனமில்லாமல் ஒரு சாம்பாரை என் தளத்தில் கொட்டினேன். உப்புமாவை என்ன செய்வதென்று யோசிக்கும் தருணத்தில் உங்கள் செய்முறை வந்துள்ளது. இனிதான் அதை யோசிக்கனும்....! அருமையான உப்புமா பகிர்வுக்கு தங்களுக்கும், பகிர்ந்தமைக்கு ஸ்ரீராம் சகோதரருக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க... உப்புமா ஆறனா நல்லாத்தான் இருக்கும். ப்ரெட் உப்புமா ஆறுனா சாப்பிடச் சகிக்குமா?

      நீக்கு
    2. எந்த உப்புமாவையும் ஆறினாலும் விடமாட்டோமே. உருளைக்கிழங்கை வேக வைச்சுச் சேர்த்துக் கொஞ்சம் உப்புக்காரம், கரம் மசாலா சேர்த்துக் கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்துக் கட்லெட்டாக ஆக்கிட மாட்டோமா! சவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாலே சம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாளி!

      நீக்கு
  17. போணியே ஆகலை போல! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
  18. கொஞ்ச நாள் இணையத்துல வரலைனா இஷ்டப்படி சமையலுக்கு பெயர் வச்சுடறாங்களே

    ரவையோட தக்காளிலாம் போட்டுப் பண்ணினா யாராவது அதை ரவா உப்புமான்னு சொல்வாங்களா? ரவா கிச்சடின்னுதானே சொல்வாங்க?

    இதை மட்டும் ப்ரெட் கிச்சடின்னு சொல்லாம ப்ரெண் உப்புமான்றீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. try it. எல்லோருக்கும் பிடிக்கிறதில்லை. எனக்கு சான்ட்விச் அதிலும் சீஸ் சான்ட்விச் மட்டுமே ப்ரெடில் ரொம்பப் பிடித்தமானது.

      நீக்கு
  19. ப்ரெட் உப்புமா புதுவித ரெசிப்பி போல் இருக்கிறது. செய்து பார்த்துட்டுச் சொல்றேன் கீசா மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரதப் பழசு. புதுசெல்லாம் இல்லை. குழந்தைங்க சின்னவங்களா இருக்கும்போதில் இருந்தே பண்ணி இருக்கேன். நடுவில் கொஞ்ச நாட்கள் ப்ரெட் பக்கமே போகலை. இங்கே ப்ரெட் தினசரி உணவுகளில் ஒன்று. ஆகவே மாறுதலுக்குப் பண்ணுவேன்.

      நீக்கு
  20. கீதா சாம்பசிவம் கையால் சாப்பிட வந்துவிட்டேன் :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!