திங்கள், 9 டிசம்பர், 2019

"திங்க"க்கிழமை - தால் பாலக் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி



தால் பாலக் 

தேவையான பொருள்கள்:

பயத்தம் பருப்பு      -    50 கிராம்(குழி கரண்டியால் ஒரு கரண்டி)
பாலக் கீரை             -    1 கட்டு 
தனியாய் பொடி,மிளகாய்த் தூள், தலா 1 ஸ்பூன், சிறிதளவு ஆம்சூர் பொடி, மஞ்சள் தூள் 1/4 டீ ஸ்பூன் தேவையான அளவு உப்பு.
தாளிக்க: சிறிதளவு எண்ணெய், சீரகம்.

செய்முறை: 

நன்கு சுத்தம் செய்யப்பட்டு, பொடியாக அறியப்பட்ட பாலக் இலைகளை கழுவி, 



ஊற வைக்கப்பட்டிருக்கும் பயத்தம் பருப்போடு குக்கரில் சேர்க்கவும். 




அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி, உப்பு இவைகளை சேர்த்து அடுப்பில் வைக்கவும். 



குக்கரில் நான்கு விசில் வந்ததும், அடுப்பை அணைத்து குக்கரை இறக்கி பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து பாலக்,பருப்பு கலவையை கரண்டியால் நன்கு மசித்து பின்னர் சீரகத்தை தாளித்தால் தால் பாலக் தயார். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம், சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.  


55 கருத்துகள்:

  1. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்! துரை செல்வராஜூ சார் திருக்குறள் சொன்னால் நீங்கள் பதிலாகப் பொழிப்புரை சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! கொஞ்சம் முயற்சித்துப் பாருங்களேன்!

      நீக்கு
    2. கிருஷ்ணமூர்த்தி சார்... நீங்க சொல்வது (குரளுக்கு அர்த்தமும் வேண்டும் என்பது) மிகச் சரி. ஆனால் என் எண்ணம், துரை செல்வராஜு சாரே, ஒரு வரி பொழிப்புரையைச் சொல்லிட வேண்டும் (தேவைனா இரொண்டொரு வரி சேர்த்துக்கட்டும்).

      நீக்கு
    3. என்ன நடக்குது இங்கின?:), இனிமேல் நான் எலாம் வச்செழும்பி.. மீ த 1ஸ்ட்டாக வந்தால்தான் எல்லாம் சரியாகும்போல இருக்கே:)).. இருப்பினும் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப்ப்ப்ப்ப நல்ல பொண்ணு:)).

      நீக்கு
  2. பதில்கள்
    1. என்னாதூஊஉ குக்கரில் எல்லாம் அவித்துச் செய்வது எளிமையனதோ கர்ர்ர்ர் பட் யேஸ் அருமையானது:)

      நீக்கு
    2. இன்னாதிது? தியாகத்திலகமா? அப்படி என்னத்தத் தியாகம் பண்ணாங்களாம்? தெரிஞ்சவுக சொல்லுங்களேன்!

      நீக்கு
    3. //இன்னாதிது? தியாகத்திலகமா? அப்படி என்னத்தத் தியாகம் பண்ணாங்களாம்? தெரிஞ்சவுக சொல்லுங்களேன்!///


      https://s-media-cache-ak0.pinimg.com/736x/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg

      நீக்கு
  3. சில மாதங்களுக்கு முன்பு வரை
    இங்கு சமையற்கட்டு கைவசம் இருந்தபோது
    அடிக்கடி செய்வேன்...

    மாங்காய் சூரணத்துக்கு - ஆம்சூர் பொடி - பதிலாக மாங்காயையே சேர்த்துக் கொள்வேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் சொல்கிறார்கள் என, ஓடிப்போய் மூஞ்சூர் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே ஆம்சூர் வாங்கி வந்தேன் எனக்கது பிடிக்கவில்லை, அதில் பெரிதாக புளிப்பு இல்லை... பிறகெதுக்கு அதை யூஸ் பண்ணோனும்:)

      நீக்கு
    2. அம்சூர் பொடி நல்லாவே புளிப்பாகவே இருக்கும். ஆனால் கொஞ்சமாகப் பயன்படுத்திக்கணும். அம்சூர் பயன்படுத்தினால் புளியோ தேசிக்காயோ கூடாது!

      நீக்கு
    3. ஓ கீசாக்கா நான் ஆம்சூர் சேர்த்துப் புளிப்பின்மையால் த்ரெசிப்புளியும் சேர்த்தேன்... நான் வாங்கியது பிரியா பிராண்ட் டோ என்னமோ... பெரிசா சுவை பிடிக்கவில்லை.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.  பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் நாளாக இன்றைய "திங்க"ப் பதிவில் அவருடைய கைவண்ணமாக தால் பாலக் செய்முறையும். படங்களும் மிக நன்றாக உள்ளது.

    நான் கூட்டுகளுக்கு பெரும்பாலும் தனியா, சீரகம், வத்தல் கொஞ்சம் தேங்காய்ப்பூ என கடைசியில் அரைத்து சேர்த்து விடுவேன்.

    கீரை வகைகளை குக்கரில் வைக்க கூடாது என்பதினால் குக்கரை கீரைகளுக்கு பயன்படுத்தியதில்லை. ஆம்சூர் பொடியையும் உபயோகப்படுத்தியதில்லை. இந்த முறையும் நன்றாக உள்ளது.இனிமேல் இக்கீரையை இதன்படி செய்து பார்க்கிறேன். சகோதரியின் பகிர்வுக்கு மிக்க நன்றி

    தங்களுக்கும் இச்செய்முறையை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. கீரைகளை மூடி வேக வைக்க கூடாது என்பார்கள். அதனால் குக்கரில் வைக்காமல் நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்.
    செய்முறை படங்களுடன் அருமை.
    கீரை நல்ல பசுமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. தால் பாலக் ரெசிபி அனுப்பியது மறந்து விட்டேன்,).
    கீரை வகைகளை நானும் குக்கரில் வைக்க மாட்டேன். இது மருமகளின் செய்முறை. அவளிடமும் கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கியமாக இந்த ஸ்பினாஜ் கீரையை அவிக்ககூடாது, நான் வினிகர் சிறிது விட்டுக் கழுவியபின் சலாட் கிரீம் சேர்ப்பேன் எல்லோரும் சாப்பிடுவார்கள் அல்லது இக் கீரையைப் போட்டு 3-4 நிமிடத்தில் இறக்கிடோனும் அதிகம் அவித்தால் இதிலுள்ள அயன் அங்கிளெல்லாம் பரலோகம் போயிடுவார்:)

      நீக்கு
  9. சுவையான குறிப்பு. வடக்கே பெரும்பாலும் குக்கரில் தான் இது போன்ற சப்ஜிகளைத் தயார் செய்கிறார்கள். நான் வாணலியிலும் செய்வது உண்டு!

    கீரை வகைகளில் சமைக்க கொஞ்சமல்ல நிறையவே பொறுமை வேண்டும் - வேலை நாட்களில் சமைப்பதில்லை. விடுமுறை தினங்களில் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரை நறுக்குவதுதான் கஷ்டம், செய்வது சுலபம்தான். நன்றி.

      நீக்கு
    2. அரைக்கீரை தான் நறுக்கக் கஷ்டமா இருக்கும். அதிலும் சில சமயம் நம்மவர் அரைக்கீரை, முருங்கைக்கீரை, வெந்தயக்கீரைனு வாங்கித் தள்ளிடுவார். கேட்டால் அரைக்கீரை சமையலுக்கு, முருங்கைக்கீரை சூப் வைக்க, வெந்தயக்கீரை தேப்லா அல்லது மேதி பராந்தாவுக்கு என்பார்! அன்னிக்கு நாள் முழுவதும் கீரை ஆய்வது தான் முக்கிய வேலையாக இருக்கும்.

      நீக்கு
  10. கீரை வகைகள் எனக்கும் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  11. நான் இதை பயத்தம் பருப்பு போட்டு நான் செய்வதும் உண்டு அதுமட்டுமல்ல இன்னொரு முறையில் செய்வதுமுண்டு

    அதில் துவரம் பருப்பு போட்டு செய்வேன்... எனது செய்முறை கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சிறியதாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி அதில் பொடிப்பொடியாக நறுக்கிய கீரையை சிறிது நேரம் கழித்து அதோடு சேர்ந்து வதக்குவேன் அதில் சிறிது மிளகாய் தூள் சாம்ப்பர் பொடி போட்டு அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து சிறிது புளி பேஸ்டையோ அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து செய்து அதை சாதத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து அப்பளம் பொரித்து அதன் மேலை போட்டு சாப்பிடுவோம் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறது. முயற்சி செய்கிறேன். நன்றி. 

      நீக்கு
    2. காலையில் கீரையை வெறும் மசியல் செய்து மிகுந்திருந்தால் அதை மாலை சப்பாத்திக்கு இந்த முறையில் பண்ணுவேன். ஆனால் துவரம்பருப்புப் போட மாட்டேன். வெங்காயம், தக்காளி, கொஞ்சம் சாம்பார்ப்பொடி அல்லது மி.பொடி, தனியாப்பொடி போட்டு வதக்கிக்கீரையைச் சேர்த்து அரை டீஸ்பூன் கரம் மசாலா போட்டு இறக்கிடுவேன். பட்டாணி ஊற வைச்சது இருந்தாலோ அல்லது பச்சைப்பட்டாணி இருந்தாலோ அதையும் வெங்காயம், தக்காளியுடன் வதக்கிடுவேன்.

      நீக்கு
  12. இதோடு கூட பனீர் துண்டுகளை வதக்கிப் போட்டால் பனீர் பாலக் ஆகிவிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர் துரை அண்ணன் ஓல்ரெடி பாலக் பன்னீர் செய்து இங்கின போட்டிட்டா பா அக்கா, அதைப் பார்த்து நானும் செய்திட்டனே....

      நீக்கு
    2. என்னத்தைத்தியாகம் பண்ணினீங்க திலகமே?

      நீக்கு
    3. நான் என்னத்தைத் தியாகம் பண்ணல்ல?:)... அதை முதல்ல ஜொள்ளுங்கோ கீசாக்கா?:)... ஹா ஹா ஹா

      நீக்கு
  13. நல்ல தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கும்போது ஏன் இந்த வடநாட்டுப்பெயர்கள்இப்போதெல்லாம் அதுவே ஃபேஷனாகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய முறைப்படி செய்திருப்பதால் அந்த பெயர். நன்றி. 

      நீக்கு
  14. நாங்கள் மைசூர்ப் பருப்பு சேர்த்து, இறக்கும்போது பால்விட்டு, இறக்கியபின் தேசிக்காய் சேர்ப்போமாக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மசூர்ப்பருப்பும் சேர்க்கலாம். நான் அதிகம் மசூர்ப்பருப்புச் சேர்ப்பதில்லை. மருமகள் சேர்ப்பாள்.

      நீக்கு
    2. பாலும் விட்டு, தேசிக்காயும் சேர்த்தால் பால் திருந்து பொய் விடாதா? தேசிக்காய் என்பது எலுமிச்சம்பழம்தானே?நன்றி.

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கீரையைக் குக்கரில் வைக்கக் கூடாதே, சொல்லலாமா, வேண்டாமானு யோசிச்சுட்டு வந்தேன். இங்கே ஏற்கெனவே இரண்டு பேர் சொல்லி இருக்காங்க!. நான் பாலக் மற்றக் கீரைகள்னு எதுவானாலும் கல்சட்டி அல்லது உருளி அல்லது அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெந்து மசித்த பின்னரே உப்பும், பருப்புச் சேர்ப்பதாக இருந்தால் பருப்பும் சேர்ப்பேன். பருப்புச் சேர்த்தால் அநேகமாகத் தேங்காய், சீரகம் அரைத்து விட்டு விடுவேன். விரத நாட்கள் இல்லைனால் வெங்காயம் வதக்கிச் சேர்ப்பது உண்டு. அல்லது மி.வத்த, தேங்காய், ஜீரகத்தோடு வெங்காயத்தையும் வதக்கி அரைத்துச் சேப்பேன். இது முளைக்கட்டிய பாசிப்பயறிலும் பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீரையைக் குக்கரில் வைக்கக் கூடாதே, சொல்லலாமா, வேண்டாமானு யோசிச்சுட்டு வந்தேன்.// ஏன் யோசிக்க வேண்டும்? தாராளமாக சொல்லலாம்.

      நீக்கு
  16. நல்ல சைட் டிஷ். ஆனால் எனக்கு பனீரும் வேண்டும். இல்லைனா பிடிக்காது.

    நிறைய வேலைகள். அதுனால பின்னூட்டம் தாமதமாகிட்டது. ஆனால் நான் காலையிலேயே படித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. //தால் பாலக்
    //
    அது டால் ஆக்கும் கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டால் (dal) இல்லை அது (dhal) தால் தான் திலகமே!

      நீக்கு
    2. நோஓஓஓஒ இது சரிவராதூஊ கூப்பிடுங்கோ நெ தமிழனை:)...
      thaal= தால்

      சே சே டமில்ல டி எடுத்தது டப்பாப் போச்ச்ச்ச்:)

      நீக்கு
    3. பா.வெ.மேடத்துக்கு தமிழ் தெரியாதுங்கோ. நமக்குத்தான் டமிள்ள டி ஆச்சுதுங்களா? அதுனால நீங்க படிக்கும்போதே மனசுல அது 'பருப்புக் கீரை' அல்லது 'பருப்புப் பசலைக் கீரை'னு மனசுல வரணும். அந்நிய மொழியைப் படித்து இது என்னவாயிருக்கும்னு முழிக்கக்கூடாது. புரிஞ்சுதுங்களா?

      மொழியின் சிறப்பு என்பது, ஒரு எழுத்தே பல சப்தங்களில் வந்து வேறு பொருளைத் தருவது, அல்லது ஒரே சப்தத்தில் பல பொருள்களைத் தருவது. குழம்புத் தான், தான் பெரியவன் என்று சொன்னான், தானம் கொடுத்தான் (இதில் dhanam sound), தாடி வைத்திருக்கிறான் thaadi என்று எழுத்தைப் படிக்கும்போதே சப்தத்தை வித்தியாசப்படுத்துவோம். இது தமிழின் சிறப்பு.

      நீக்கு
    4. பா.வெ.மேடத்துக்கு தமிழ் தெரியாதுங்கோ////
      ச்ஸ்ஸ்ஸ் நெல்லத் தமிழன் பாவெ அக்காவைப்பார்த்து உப்பூடில்லாம் ஜொள்ளக்குடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      ////நமக்குத்தான் டமிள்ள டி ஆச்சுதுங்களா?////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சந்தடி சாக்கில நமக்கெ என்கிறாராக்கும்:)... அதிராவுக்கு மட்டும்தேன் இங்கின டி ஆக்கும்:) அதுவும் டமில்ல டி என்றால் சும்மாவோ?:)

      /////பருப்புக் கீரை' அல்லது 'பருப்புப் பசலைக் கீரை'னு மனசுல வரணும். அந்நிய மொழியைப் படித்து இது என்னவாயிருக்கும்னு முழிக்கக்கூடாது. புரிஞ்சுதுங்களா?////

      இதை நான் சொன்னா மட்டும் எல்லோரும் அடிக்க வாறீங்க , ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதே தப்பு, அதையும் இப்பூடித்தான் எழுதோணும் என ஏதோ டிக்‌ஷனறி வச்சிருப்போர்போல எல்லோரும் சண்டைக்கு வாறீங்ங்ங்க அதிராவோடு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நாட்டிலே நீதி செத்துவிட்டதூஊஊஊ எனக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:) எங்கே அந்த மணி இப்போ நான் அதை இழுத்தடிக்கப் போறேன்ன்ன்ன்ன் பசுவுக்குத்தான் நீதி கிடைக்குமோஓ ஏன் இந்தப் பச்சைப்புள்ளைக்குக் கிடைக்காதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!