பானுமதி வெங்கடேஸ்வரன்.
ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப் என்பார்களே, அதன்படி நாடகம் மீண்டும் உன்னதம் அடையுமா?
$ அதுக்கு முன்னே சோழராஜா வரணுமில்லே!
# அடையும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன்.
& Y R O T S I H
இரவு உங்கள் வீட்டில் படுத்துக்கொண்ட நீங்கள் காலையில் கண் விழிக்கும் பொழுது நித்தியின் கைலாசத்தில் இருக்கிறீர்கள். அவர் வேறு நீங்கள்தான் அவருடைய வாரிசு என்று அறிவித்து விடுகிறார். அப்போ என்ன பண்ணுவீங்க?அப்போ என்ன பண்ணுவீங்க?(மாட்னீங்களா?)
# உடனேயே அங்கே படுத்துறங்கி நம்ம ஊர் வந்து விட வேண்டியதுதான்.
& அவ்வளவு சாமியாரிணிகளுக்கு நடுவே நான் கண் விழிக்க நேர்ந்தால், அந்த அதிர்ச்சியிலேயே நிரந்தரமாக கண்ணை மூடிவிடுவேன்! தப்பிப் பிழைத்தாலும் நித்தி செய்கிற பைத்தியக்காரத்தனங்களைக் கண்டு நானும் பைத்தியம் பிடித்துத் திரிய வேண்டியதுதான்!
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையில் வரும் அப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று கமல்ஹாசன் ரொம்ப நாட்கள் முன்பு சொல்லியிருந்தார். இப்போது அதை படமாக்கினால் யாரை அப்புவாக போடலாம்?
# அம்மா வந்தாள் திரைக்கேற்றதல்ல என்று நினைக்கிறேன். யாரைப் போட்டாலும் எடுபடாது.
& கமல் தான் ஏற்கெனவே அப்பு வேடத்தில் நடித்துவிட்டாரே! ஓ அது வேற அப்புவா!
==============================================
அவல் பொரி கடலை & கொக்கி
சென்ற வாரக் கதைப் பகுதி
கல்கி தீபாவளி மலர் 1943 வருடத்தியது. எழுதியவர் சக்கரவர்த்தி இராஜகோபலாச்சாரியார். நான் அந்தப் பகுதியை அந்தப் பதிவின் டிராஃப்ட் ஆக சேமித்த டிசம்பர் ஒன்பதாம் தேதி அவருடைய பிறந்தநாள். பதிவு வெளியான தேதி பாரதி பிறந்தநாள் ஆகிவிட்டதால், பலர் க்ளூவைப் படித்துக் குழம்பிவிட்டீர்கள்.
சென்ற வாரத்தில் நீங்க பார்த்த கார்கள் விலை 1950 ஆம் வருடத்தியவை. (கல்கி தீ ம 1950.)
அப்போது அதே மலரில், வேறொரு பக்கத்தில் வந்திருந்த ரேடியோ விளம்பரம் :
அந்தக் காலத்தில் பிலிப்ஸ் ரேடியோவின் விலை ரூ 240 முதல் ரூபாய் 1500 வரை !
அதிக பட்ச விலை கொடுத்து வாங்கப்பட்ட ரேடியோ பணத்தில், ஏழு பங்கு விலை கொடுத்தால் ஒரு கார் வாங்கியிருக்கலாம்!
அதே காலகட்டத்தில், ஒரு பவுன் (எட்டு கிராம்) தங்கம் விலை : ரூ 80.
அதாவது, ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து ரேடியோ வாங்கியவர், அந்தப் பணத்துக்கு பதினெட்டே முக்கால் பவுனில் தங்கச்சங்கிலி வாங்கியிருந்தார் என்றால், அந்தச் சங்கிலியின் இன்றைய மதிப்பு சற்றேறக் குறைய : ரூ ஆறு லட்சம் !
பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அப்போது கார் வாங்கியவர் இப்போ அதை விற்க நினைத்தால், யார், என்ன விலை கொடுத்து வாங்குவார்? பழைய இரும்பு வியாபாரிகள்தான் பதில் சொல்லவேண்டும்!
இதை எழுதியவர் யார்?
கொக்கி :
சென்ற வாரக் கொக்கியை யார் எல்லாம் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை.
கொக்கியும், அதன் தொடர்ச்சிகளையும் மீண்டும் இங்கே உங்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளேன்.
படித்து இன்புறுங்கள்!
கொக்கி 191210
catch 1
catch 2
இன்னும் நிறைய கொக்கிகள் வரவிருக்கின்றன!
நிறைய catchகளும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
=========================================================
மீண்டும் சந்திப்போம்!
=========================================================
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். போன வாரம் கேட்க நினைச்சிருந்த கேள்விகளைக் கேட்க முடியலை! இந்த வாரமானும் கேட்கணும். இன்னிக்கு யாரோட கேள்விகள்? அநேகமா வாட்சப்பில் வந்தவையா இருக்கும். பதிவிலே யாரும் கேட்கலையே!
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நல்வரவு, நன்றி!
நீக்குஆமாம் வாட்ஸ் அப் கேள்விகள். திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் கேட்ட கேள்விகள்.
நீக்குநீங்க வைச்ச போட்டியில் எழுதி இருந்த தவளை இளவரசிக்கதை போட்டிருக்கீங்க! யார் எழுதினதுனு கண்டுபிடிக்கணும். நானும் எழுதினேன். முடிவு "அவரை"னு முடியணும் இல்லையோ?
பதிலளிநீக்குநல்ல ஞாபக சக்தி! வாழ்க !
நீக்குகொக்கியை எல்லாம் ஒவ்வொன்றாகக் கொக்கி போட்டுப் பார்க்கணும்.
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதானா? நான் படிச்சுட்டேனே!
நீக்குஅது மத்தவங்களுக்குப் போட்டது !
நீக்குஎல்லாரும் இன்னமும் எழுந்துக்கவே இல்லை போல! நான் மட்டும் தனியா இருக்கேன்.
பதிலளிநீக்குவேறு தளங்களில் இருந்தேன். ஹிஹிஹி....
நீக்குபெங்களூரில் அதிகாலையில் எழுந்துவிட்டாலும் கணினி பக்கம் வருவதற்கு குறைந்தது ஏழு மணி ஆகிவிடும்.
நீக்குசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாழ்க நலம்.
நீக்குசரி, சொல்லிடறேன் துரை சார். வணக்கம்!
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க.
நீக்குவருக, வருக!
நீக்குஎல்லாத்துக்கும் டூப்ளிகேட் வந்த மாதிரி கயிலாயத்திற்கும் ஒரு டூப்ளிகேட் வந்திருக்கு..
பதிலளிநீக்குவேறு எங்கும் கிளைகள் இல்லை...
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!...
ஹா... ஹா... ஹா... !
நீக்குஒரிஜினல் கைலாசம்தானா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் பொன்னாளாக பிரகாசிக்கவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஒரு வாரமாக கொஞ்சம் வேலைகள் அதிகம் அதனால் எல்லோர் பதிவுக்கும் வந்து உடனுக்குடன் கருத்துக்கள் தர முடியவில்லை. அதையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் விரைவில் எல்லாவற்றையும் படித்து பதிலளிக்க வருகிறேன். அனைவரும் என்னை மன்னித்துக் கொள்ளவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க, வாங்க! பிரார்த்தனைகளுக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது வருவதில் தவறு ஒன்றும் இல்லை !
நீக்குஃபிலிப்ஸ் அந்தக் காலத்து டாப் பிராண்ட். அதனால்தான் தீபாவளி மலரில் விளம்பரம். UMS போன்ற தமிழ்நாட்டு ரேடியோக்கள் விலை மலிவாக இருந்திருக்கும். இன்னும் விளம்பரப்படுத்தா மலிவு மாடல்கள் சில ..
பதிலளிநீக்கு10 கிராம் ரூ.18.05 இருக்கும்போதே 50 பவுன் வாங்கிப்போட்டுவிட்டீர்கள் என ஏன் சொல்லவில்லை? இவ்வளவு காலம் போனபின்னா த்ருஷ்டி பட்டுவிடும் ?
ஹா ! எப்படிக் கண்டுபிடித்தீர்கள்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இன்று என்னுடைய சோலோ கச்சேரியா?
பதிலளிநீக்குஆமாம்!
நீக்குதமிழில் நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வாரம் ஒரு நாடகம் பார்த்து விடுவேன். இப்போது அதற்கு யாருக்கும் நேரமில்லை அன்று கொடிகட்டிப் பறந்தவர்கள் எல்லாம் ஓய்வு எடுத்து விட்டார்கள் அல்லது மறைந்து போனார்கள்.
பதிலளிநீக்குஉண்மைதான். 1972 - 1980 காலாட்டங்களில் நானும் நிறைய நாடகங்கள் பார்த்துள்ளேன். பூர்ணம் விஸ்வநாதன், ஆர் எஸ் மனோகர், ஜெய்சங்கர், ஏ வி எம் ராஜன், சோ எல்லோரையும் நாடகமேடையில் பார்த்திருக்கிறேன். பிறகு வந்த நாட்களில், வாணி மகாலில் நடை பெற்ற ஒய் ஜி மகேந்திரா, எஸ் வி சேகர், கிரேசி மோகன் நாடகங்கள் பார்த்ததுண்டு. ஆர் எஸ் மனோகர் மேடை நாடகங்கள் மறக்க முடியாதவை.
நீக்குநாடகங்கள் பார்த்ததில்லை...
நீக்குநாடகங்களில் நடித்திருக்கிறேன்....
பள்ளி நாட்களில்!...
என்ன வேடம்? (காதலிக்க நேரமில்லை படத்தின் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது ...... சொன்னால் கோபிச்சுக்குவீங்க! :))
நீக்குநானோ நவாப் ராஜமாணிக்கம் காலத்து ஆசாமி.
நீக்குநான் எம்ஜீஆரைக் கூட நாடக அரங்கில் கதாநாயகனாகப் பார்த்திருக்கிறேன். நாடகம் பெயர். இன்பக் கனவு
நாயகி?.. ஜி. சகுந்தலா
அடேடே ! பரவாயில்லையே!
நீக்குதிரைப்படங்கள் பார்ப்பதை விட நாடகங்கள் பார்ப்பது நன்றாகவே இருக்கும். எண்பதுகளில் சென்னைத் தொலைக்காட்சியில் (பொதிகை ஆவதற்குப் பல்லாண்டுகள் முன்னர்) செவ்வாய்க்கிழமைகளில் நாடகங்கள் ஒளிபரப்புவார்கள். பல நல்ல நாடகங்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
நீக்குஅம்பத்தூரில் இருந்தப்போ "சோ"வின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸின் நாடக விழா, எஸ்.வி.எஸ். (சஹஸ்ரநாமம்) நாடக விழா, மனோஹர் நாடக விழா என நடக்கும். இரண்டு அனுமதிச்சீட்டு உறுப்பினர்களுக்கு நிச்சயம். மற்றபடி அதிகம் வேண்டும் எனில் சொல்லி வாங்கிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாதம் ஒரு திரைப்படமும் பேருந்து ஏற்பாடு பண்ணிக் கூட்டிச் செல்லுவாங்க.
நீக்குநாடகம் பார்க்கேவேண்டும் என்ற ஆசை மனதில் உண்டு
பதிலளிநீக்குசென்னையில் பல சபாக்களில் ஜனவரி முதல் வாரத்தில் நாடகம் இருக்கும். பார்த்து ரசிக்கலாம்.
நீக்குநாடகம், இசை, நாட்டியம் என்றெல்லாம் நினைக்கும்போது, சென்னையில் வசிக்க வழி செய்யாமல் போய்விட்டோமே என வருந்துவதுண்டு. எல்லாமும் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை.
நீக்குஎங்கே கஞ்சின்னு போட்டிருக்கோ அங்கேதான் கஞ்சியைக் குடிக்கமுடியும்..
ஓ !
நீக்குசுவாரஸ்யமான பதில்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்விகளுக்கு பதில் அருமை.
பதிலளிநீக்குரேடியோ விளம்பரம், தங்கம் விலை புள்ளிவிவரம் எல்லாம் அருமை.
நன்றி .
நீக்குராணி பத்திரிக்கையில், அம்புலி மாமாவில் தவளை இளவரசி கதை படித்த நினைவுகள் வருது.
பதிலளிநீக்குஇந்த தவளை இளவரசி கதை நவீன கால கதை .
ஹா ஹா ! யார் எழுதியது?
நீக்கு//https://engalcreations.blogspot.com/2011/11/2k11.html// நேத்தே போட நினைச்சு மறந்துட்டேன். இது நம்ம கு.கு. அவர்கள் எழுதியது தான். உறுதியும் செய்து கொண்டு விட்டேன்.
நீக்குவல்லி அக்கா, அல்லது பானுமதி எழுதிய கதை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா ! பெரிய பாராட்டு, எழுதியவருக்கு!
நீக்குஇது போன்ற ஃபாண்டஸி கதைகள் என் ஏரியா இல்லை. நம்ம ஏரியா ஆசாமியோ?
நீக்குஅப்படித்தான் நினைக்கிறேன்!
நீக்குபானுமதி அப்போ இணைய உலகில் இருந்தாங்களோ என்னமோ தெரியாது. ஆனால் எங்கள் ப்ளாக் வட்டத்துக்குள் இல்லை. அதோட இந்த மாதிரி அச்சுப்பிச்சுக் கதைகள் எல்லாம் நம்மளை மாதிரி ஆளுங்க தான் எழுதுவோம். நானும் எழுதிப் பரிசும் (ஹிஹி) வாங்கினேன். இணையம் மூலம் கிடைச்ச முதல் பரிசுத்தொகை!
நீக்குஎனக்கும் கிடைச்சதோ கீதா. கௌதமன் பரிசு கொடுக்க வந்தார். எந்தக் கதைக்குன்னு தெரியவில்லை.
நீக்குஎங்கள் ப்ளாக் மூலம் கடைசியாக 2012 ஆம் ஆண்டில் ஏதோ புதிர்ப்போட்டிக்கு கௌதமன் 500ரூக்குச் செக் அனுப்பி இருந்தார். அதன் பிறகு ஒரு முறை ஸ்ரீராம் அவங்க அப்பாவின் புத்தகத்தை மதுரையிலிருந்து கூரியர் மூலம் அனுப்பி வைத்தார். இன்னொரு விமரிசனத்துக்கோ என்னமோ ஒரு புத்தகம் ரேவதி மூலம் கௌதமன் கொடுத்து அனுப்பி இருந்தார். அப்போ நாங்க அம்பத்தூரில் இருந்தோம். அம்பத்தூர் ரொம்ப தூரம்னு கௌதமன் வரவில்லை! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
நீக்குபதில்களை ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குநான் முதலில் இட்ட பின்னூட்டங்கள் காணவில்லையே:)இது நான் எழுதினது இல்லம்மா.கோமதி.
பதிலளிநீக்குமி மா,இல்லாட்ட வேற யாருன்னு
தெரியவில்லை.
ஹா ஹா !
நீக்குyaarunnu sollak koodaatho.
நீக்குசொல்லலாமே!
நீக்குகுரோம்பேட்டைக் குசும்பன் எழுதினது! ஹாஹாஹா, அவர் யாருனு சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். அனைவருக்கும் தெரிந்தவர் தானே!
நீக்குதங்கம் விலை ஆசையைத் தூண்டுகிறது.
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்து ஒருவர் 25+25+25 ந்னு மூன்று தடவையாக வாங்கினார்.
நாங்கள் பிலிப்ஸ் ரேடியோ 700 ரூபாய்க்கி 1966 இல் வாங்கினோம்.
அட ! அப்படியா!
நீக்குங்கே கஞ்சின்னு போட்டிருக்கோ அங்கேதான் கஞ்சியைக் குடிக்கமுடியும். this is the situation. Ekanthan sir.
பதிலளிநீக்குபாவம் அவர்!
நீக்கு@ Vallisimhan : //..this is the situation..//
நீக்குஇதையொட்டிய ஒரு ‘கஹாவத்’ அதாவது பழமொழி ஹிந்தியிலும் உண்டு. அது இது:
‘தானே (dhaane), தானே (dhaane) பே லிக்கா ஹை, கானேவாலே கா நாம் !’
- அதாவது, ‘ஒவ்வொரு தானியத்திலும் எழுதப்பட்டிருக்கிறது, அதைச் சாப்பிடப்போகிறவனின் பெயர் !’
வடக்குகளுக்கு விதிமீது ஒரு அதீத நம்பிக்கை..
அட ! அது வடமொழிப் பழமொழியா ! தகவலுக்கு நன்றி.
நீக்குநம்ம ஊரில உப்பும் தண்ணியும் எங்கே போட்டிருக்கிறதோ
நீக்குஎன்பார்கள் ஏகாந்தன் ஜீ.
நாடகங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு60 களில் பிரபலமான நாடகக் குழுக்கள் நன்றாக இயங்கி வந்தன.
சபா மெம்பராக இருப்பதும் சுலபமாக இருந்தது.
ஆம் உண்மைதான். நான் பார்த்த நாடகங்களில் பெரும்பாலானவை என் அண்ணா மன்னி மெம்பராக இருந்த ஒரு கிளப் சார்பில் எங்களுக்கு வந்த டிக்கெட்கள்தான்.
நீக்குஅவ்வளவு சாமியாரிணிகளுக்கு நடுவே நான் கண் விழிக்க நேர்ந்தால், அந்த அதிர்ச்சியிலேயே நிரந்தரமாக கண்ணை மூடிவிடுவேன்! தப்பிப் பிழைத்தாலும் நித்தி செய்கிற பைத்தியக்காரத்தனங்களைக் கண்டு நானும் பைத்தியம் பிடித்துத் திரிய வேண்டியதுதான்! :)))))))))))))))))))))))))))))))))))))))
பதிலளிநீக்குஇரசிப்புக்கு நன்றி!
நீக்குஅம்மா வந்தாள்,
பதிலளிநீக்குநிஜ வாழ்க்கையில் சிலரைப் பிரதிபலித்தாலும் ,யாராவது நடிக்க முன் வருவார்களா,
இல்லை தயாரிப்பார்களா என்று தெரியாது.
very bold novel.
Bold novel - very good and precise review.
நீக்கு//சென்ற வாரக் கதைப் பகுதி
பதிலளிநீக்குகல்கி தீபாவளி மலர் 1943 வருடத்தியது. //
சென்ற வாரப் பகுதியைப் புரட்டிப் பாருங்கள்.
'க்ளூ' பிரமாதம் என்று நான் சரியாகத் தானே சொல்லியிருக்கிறேன்?
MACULAR DEGERNATION விழிப்பார்வையை வைத்துக் கொண்டு உத்து உத்துப் பார்த்து தெரிந்து கொண்டதில்:
பதிலளிநீக்கு1950-ம் வருடத்தில் தங்கம் விலை ரூ.99.18 என்று தானே போட்டிருக்கு?
தங்கச் சங்கிலி என்கிற பட்சத்தில் சேதாரம் + செய்கூலி இதெல்லாம் வேறு.
பதினெட்டே முக்கால் பவுன் தங்கச் சங்கிலிக்கு எப்படி கணக்குப் போட்டீர்கள்? தெரியவில்லை.
ஜீவீ சார். . நன்றாப் போடலாமே. குந்துமணி அளவுக்குக் கூட கடைக்காரர்கள் போட்டுவிடுகிறார்களே.
நீக்கு1950 ஆம் வருடம் கொடுக்கப்பட்டுள்ள விலை விவரம், பத்து கிராம் தங்கத்திற்கு. ரவுண்ட் ஆஃப் செய்து, நூறு என்று கொண்டேன். பத்து கிராம் நூறு ரூபாய். எட்டு கிராம் (ஒரு பவுன்) விலை எண்பது ரூபாய். 1500 / 80 = 18.75. அவ்வளவுதான்.
நீக்குஓ.கே. ஓ.கே. நான் 10 கிராமைக் கவனிக்கவில்லை.
நீக்கு1956-களில் கிச்சடி சம்பா பச்சரிசி விலை பக்கா (பெரிய படி) ரூ.
5/= மளிகைக் கடைக்குப் போவது, அதிகாலை சேலம் சின்னக்கடைத் தெரு மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கி வருவது லெலாம் என் பொறுப்பு தான். நான்காம் பாரம் படித்துக் கொண்டிருந்த காலம்.
அட! அப்போ நான் ஒன்றாம் வகுப்புக் கூட படிக்காத அரை டிராயர் பையன்!
நீக்குஎன்னுடைய இந்த வாரத்துக்கான கேள்வி.
பதிலளிநீக்குஅலைபேசியில் ,அத்தனை தளங்களையும் மேய்வது கஷ்டமாக இல்லையா.
தளங்கள் மட்டும் இல்லை. மெயில்,யு டியூப்,சினிமாவே பார்க்கிறார்களாமே.
2,வாட்சாப்பில் வரும் செய்திகள் நம்பக் கூடியவையா.
இல்லை தினத்தந்தியா.
பதில்கள் அளிப்போம்!
நீக்குஏதோ கஷ்டமான கேள்வி கேட்டு உங்களை மாட்டி விட்டு விட்டேன் என்று நினைத்தேன். அனாயசமாக அடித்து தூக்கி விட்டீர்களே! good! good!
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு//& கமல் தான் ஏற்கெனவே அப்பு வேடத்தில் நடித்துவிட்டாரே! ஓ அது வேற அப்புவா! //
பதிலளிநீக்குகேள்வியை எழுதும் பொழுதே, இந்த பதில்தான் வரும் என்று நினைத்தேன்.
ஹி ஹி! பதில் எழுதும்போதே - நீங்க இப்படி சொல்வீங்கன்னு நெனச்சேன்!
நீக்குநிறைய நாடகங்கள் பார்த்தது மட்டுமல்ல, நடித்தும் இருக்கிறேன். மஸ்கட்டில் இந்தியன் கலச்சுரல் அசோசியேஷன் ஒவ்வொரு வருடமும் போட்டிகள் நடத்துவார்கள். அதில் ஒரு வருடம் நாடக போட்டியில் நானும் கலந்து கொண்டு நடித்தேன். இப்போது சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் வருகிறாரே ராகவ் அவருடைய மாமியார் என்னோடு நடித்தார். நாடகத்தில் நடிக்கும் பொழுது கைகளை என்ன செய்வது என்று தெரியாது. "அழு, அழு" என்றார்கள். ரொம்ப கஷ்டமாக இருந்தது. அழுது கொண்டே டயலாக் பேசும்பொழுது குரல் உள்ளே போய் விடக் கூடாது. ரொம்ப கஷ்டம். சிறை படத்தில் லட்சுமி நடித்திருப்பதை பார்த்து கொஞ்சம் கற்றுக் கொண்டேன். ஒரு நடிகையாக சிறையைப் பார்த்த பொழுதுதான் லட்சுமியின் திறமையின் விஸ்வரூபம் புரிந்தது. வெப் சீரிஸ் குயினைப் போல மனம் ஒன்றாமல்தான் நடித்தேன். முதல் காட்சியில் நான்தான் மேடையில் தோன்ற வேண்டும், பாதியில் உள்ளே ஓடி விடலாமா என்று தோன்றியது. அந்த நாடகத்திற்காக கஷ்டப்பட்ட அத்தனை பேரையும் நினைத்துக் கொண்டு தொடர்ந்தேன்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான அனுபவம். விவரமாக கட்டுரையாக எழுதி அனுப்புங்கள். நம்ம ஏரியா பதிவுல போட்டுடலாம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.
கயிலாயம் பதிலை ரசித்தேன். கயிலாயம் சென்றால் பற்றை விட வேண்டுமே!அங்கு சென்றும் இந்த படுத்துறங்கும் பற்றை யெல்லாம் விட வேண்டுமில்லையா! ஹா. ஹா. ஹா.
அப்போதைய தங்கம் விலை தெரிந்து கொண்டேன். எங்கள் அம்மா காலத்தில் ஒரு பவுன் 50 ரூபாய் என்று சொல்லி நான் விபரம் தெரிந்த பின் ஆச்சரியப் பட்டுள்ளேன். ஆனால் அந்த 50 ஐ புரட்ட அவர்கள் சிரமபட்டிருப்பார்கள் என்பது உண்மை.
கொக்கிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக படித்து பின் வருகிறேன்.தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மன்னிப்பெல்லாம் கேட்கக் கூடாது! Better late than never !! எப்போது வந்தாலும் சரிதான்!
நீக்கு