வியாழன், 5 டிசம்பர், 2019

ஏடிஎம் திருடன்

ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்றான் அவன்.  ஏதோ கோளாறு. இரண்டு மூன்று முறை போட்டும் பணம் வரவில்லை.  அது ஏதோ பேப்பரைதான் உமிழ்ந்து கொண்டிருந்தது.

வெறுப்புடன் வெளியே வந்தவன் அருகே வேறு எங்கே ஏடிஎம் இருக்கிறது என்று பார்த்தபடியே வந்தான்.   கொஞ்சம் தள்ளி வந்து பார்த்தால் அங்கு ஒரு ஏடிஎம் இருந்தது.  உள்ளே ஒருவர் பணம் எடுத்துக்கொண்டிருந்தார்.  வெளியே இருவர் அமர்ந்து பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  

கொஞ்சம் பொறுத்து பணம் எடுத்தவர் வெளியே வந்தவர் பணத்தை ஒருமுறை எண்ணிப் பார்த்து சரிபார்த்துக் கொண்டு பர்சில் வைத்துக் கொண்டு நடந்தார்.  இவன் உள்ளே செல்லும் முன் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை அணைக்கவேண்டி சற்று தாமதித்தான்.  அப்போது அங்கு பேசிக் கொண்டிருந்த இருவரில் ஒருவன் எழுந்து சற்றுமுன் நடந்தவர் சென்ற வழியில் விரைந்தான்.  அவன் வேகம் வித்தியாசமாக இருந்ததை கவனித்தான்.

இவன் உள்ளே சென்றான்.  வாசலில் அமர்ந்திருந்தவன் மேல் ஒரு பார்வை வைத்துக்கொண்டே பணம் எடுத்தான்.  இங்கு வெற்றிகரமாக பணம் வந்தது.  அதை எடுத்து உள்பாக்கெட்டில் வைத்துக்கொண்டவன் உடனே வெளியே வராமல் சற்று யோசித்தான்.  வேறு யாராவது துணைக்கு வருவார்களா என்று பார்த்தான்.   தன் சந்தேகம் சரியா என்றும் தெரியவில்லை.

இன்னும் சற்றுப்பொறுத்து வெளிய வந்தான் அவன்.   வெளியில் அமர்ந்திருந்தவன் எழுந்து அருகில் வந்தவன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு கத்தியை எடுத்து விரித்து இவன் இடுப்பில் வைத்தான்.

"ம்ம்...   கொடு..."  

"எதைக் கொடுக்க?"

"பணம்...    எடுத்த பணத்தைக் கொடுக்கறியா, இல்லை....?"  

"பைக்குள் கைவிட்டு பழைய ஏடிஎம் மெஷின் உமிழ்ந்த பேப்பர்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.  "இதோ...    இதுதான் வந்தது...    ஏடிஎம்மாய்யா இது?   என் கணக்குல இருக்கற நூறு ரூவாயைக்கூட கொடுக்காம என்ன ஏடிஎம்?  அவசரத்துக்கு பணம் எடுக்க முடியலை...    இதுல வாசல்ல ஒரு ஆளு...   அவன் கையில கத்தி...   ச்ச்சே..." என்றபடி அந்த பேப்பர்களை அவன் கையில் வைத்து வெறுப்புடன் அழுத்தினான்.  சட்டை பேண்ட் பாக்கெட்டுகளை தட்டிக் காண்பித்தான்.  படபடப்பாக இருந்தது.  வொர்க் அவுட் ஆகுமா?  மெல்ல ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.

அவன் அந்த பேபாப்ர்களை லேசாக பிரித்துப் பார்த்தவன் கத்தியை மடக்கிக் கொண்டு அவனை நம்பமுடியாமல் பார்த்தான். 

"அரைமணி முன்னால ஒருத்தன் வந்து பணம் எடுத்தான்...  வந்ததே..."  என்றபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு சில நூறு ரூபாய்களை எடுத்துக் காண்பித்தான்.

"அப்படியா?  எனக்கு வரலையே...   செலவுக்கு கூட காசில்லே...    வெறுப்பா இருக்கு..."  என்றபடி அவன் கையில் இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை கொஞ்சம் அதீத ஆர்வத்துடன் ஆர்வமுடன் பார்த்தான் இவன்.  

திருடன் அவசரமாக பணத்தை உள்ளே வைத்துக் கொண்டவன் ஒரு நூறு ரூபாயை மட்டும் இவனிடம் கொடுத்தவன் "போய்யா" என்றபடி திரும்பி நடந்தான்.

[ ஒரு உறவினரின் நண்பருக்கு நடந்த உண்மை சம்பவத்தை, மிக இலேசான மாறுதலுடன்...]


===========================================================================================

மாஸ்டர் பிளான்!



ராஜ தந்திரம்!


==================================================================================================

இந்திரா சோனியா காந்தி கோபித்துக்கொள்ள மாட்டாரோ!  சாதாரணமாக சரோஜா தேவிதான் இப்படி உச்சரித்துப் பேசுவார்.  ஆனால் ஒருபோட்டிக்காக தேவிகாவும் இப்படிப் பேசியிருப்பார் போல!



============================================================================================

கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவு...




==============================================================================================

65 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. ஏடிஎம் கதை சுவாரசியம். எம்.ஆர்.ராதாவிடம் தேவிகா கேட்டதை நினைத்துப் பார்த்துச் சிரித்துக் கொண்டேன். துணுக்குகள் இரண்டும் எங்கேயோ, எப்போவோ படிச்சது. உங்கள் கனவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா...  துணுக்குகள் பழைய பைண்டிங் கலெக்ஷன்தானே?  பார்த்த ஞாபகம் இருக்கும்!

      நீக்கு
  4. ஆகா...
    ஒன்றும் புரியாததே
    புரிந்த மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவு பற்றி சொல்கிறீர்களா  துரை செல்வராஜூ ஸார்?

      நீக்கு
    2. இனிய மாலை வணக்கம் கீதாமாக்கு. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், அன்பு துரை இருவருக்கும். கனவுக்குள் கனவு உண்மையே. இப்படிக்க கனவு வந்தால் இது கனவுதான் என்று நானே சொல்லிக் கொள்வேன்.
      ஏடீஏம் பலே.
      கள்ளனுக்கு கள்ளன் சூப்பர்.
      உண்மையில் நிகழ்ந்தது என்பதால் இன்னும் சுவாரஸ்யம்.

      தேவிகா நல்ல தமிழ் பேஸ்வாரே:)
      இன்னொருத்தவங்கதான் தைவம் தைவம் என்பார்கள்.


      ஜோக் பிரமாதம். நல்ல ட்ரிக் தான்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...    வணக்கம்.   பாராட்டியதற்கும், ரசித்ததற்கும் நன்றி அம்மா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   இன்று நீளமான பதிவாய் இல்லாமல் சுருக்கமாக, அளவாக இருக்கிறதா?

      நீக்கு
    2. மெதுவா வாங்க... திரு கணேஷ் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிய நாளாக அமையவும் மனமாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா....    காலை வணக்கம்.   பிராத்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. ஏ டி எம் கதை நன்றாக இருக்கிறது. பணத்தைப் பாதுகாக்க செய்த திரிலான உத்தி அருமை. முன்னாடி ஏ டி எம்மில் கிடைத்த அந்த பணமில்லாத வெறும் பேப்பர்களை அவர் அவரறியாமலே எடுத்து வைத்துக் கொண்டதும் நல்லதாகப் போயிற்று. "திருடனுக்கு தேள் கொட்டினாற் போல" என்ற பழமொழிப்படி கதை முடிவு நன்றாக உள்ளது.

    ஜோக்குகள் அருமை. ரசித்தேன். மிகுதியையும் படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...  ரசித்ததற்கும் பாராட்டியதற்கும்!

      நீக்கு
  8. கண்ணுக்குள் நூறு கனவு ! இது ஒரு கனவா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ குஜால் படம் கிடைத்தவுடன் அதற்கேற்ப கவிதை எழுதியிருப்பாரோ ஶ்ரீராம்?

      நீக்கு
    2. குஜால் என்று ஒரு நடிகை இருக்கிறாரா?

      நீக்கு
    3. //கண்ணுக்குள் நூறு கனவு ! இது ஒரு கனவா !//

      கனவு வெள்ளம்!  அதுதான்!

      நீக்கு
    4. //ஏதோ குஜால் படம் கிடைத்தவுடன்//

      குஜால் என்பது ஜாங்கிரி, லாடு என்பதுபோல ஏதாவது ஸ்வீட்ட்டோ?

      நீக்கு
    5. இது அஜால் குஜால் கமெண்ட்!

      நீக்கு
  9. அனுஷ்கா படம் இல்லாத கவிதை!
    அப்போ அது ஒரு அதிசயக் கனவுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்காவா?   யார் அது கேஜிஜி?

      நீக்கு
    2. முழுப் 'பூசணிக்காயை' இப்படி மறைக்கப் பார்க்கிறீரே!

      நீக்கு
    3. //முழுப் 'பூசணிக்காயை'  //

      உடைத்து விட்டீர்கள்!

      நீக்கு
  10. பதில்கள்
    1. என் காதில் விழுவது கோவில் மணி ஓசையா இல்லை ஜால்ரா சத்தமா துரை செல்வராஜு சார்.. சமீபத்தில் அ த. இருவரையும் மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் (ஒருவர் குண்டாகிட்டார்.. இன்னொருவர் சமீப படத்தில் நடித்தது போலவே இருக்கிறார்) என்று எழுதியிருக்கிறாரே

      நீக்கு
    2. கவிதை என்று துரை செல்வராஜூ ஸாரே ஒருகேள்விக்குறி போட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறார்!

      நீக்கு
  11. ஏடிஎம் ரசித்தேன் ராஜதந்திரம் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  12. அந்தக் காலத்தில் வெளியான நகைச்சுவை துணுக்குகள் அலாதியானவை தான் இன்று வெளியாகியுள்ள இரண்டு துணுக்குகளும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. ஏடிஎம் திருடன் அம்பூட்டு அப்பாவியா இருப்பாரா?

    நகைச்சுவை ஓகே ரகம்.

    கவிதை.... புரீல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்தான் சாட்சியாய் பேப்பர்களை அவர் கைவசம் கொடுத்தாரே....

      //கவிதை.... புரீல்ல//

      அடடே...    அப்போ நல்ல கவிதைதான் போல!

      நீக்கு
  14. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருக்கும் ATM ஐ பயன்படுத்துவதே நல்லது

    பதிலளிநீக்கு
  15. சுவையான, சுருக்கமான பதிவு. ஏ.டி.எம். டெக்னிக் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் ஏ.டி.எம்.மில் பணம் ஈடுபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதில்லை, அவர்கள் வெளியே வந்ததும் தாக்கி பணத்தை பிடுங்கி கொண்டு செல்கிறார்கள்.கனவுகளே ஆயிரம் கனவுகளே 
     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தாமல் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்களோ...    இவன் கிராமத்துத் திருடனோ என்னவோ!

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது.
    இரக்கமுள்ள திருடன் போலவே!

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...  அவன் பணத்தையோ கொடுக்கிறான், கணக்குப் பார்க்க...  கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார்!

      நீக்கு
    2. கடைதேங்காய் என்றாலும், வழி பிள்ளையாருக்கு கொடுக்க மனம் வேண்டுமே!

      நீக்கு
  19. ராஜதந்திர துணுக்கு சுப்பர்.
    பிரமீளா என்ற தேவிகா பேச்சு சிரிப்பை வரவழைத்து விட்டது.
    பழைய படங்களில் தேவிகாவின் பேர் பிரமீளா.

    கனவு காண்பதே கனவா? கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிரமீளா என்ற தேவிகா //

      ஆமாம். நான் கூட படித்திருந்தேன்.   ஏதோ வெள்ளி வீடியோவில் சொல்லியிருந்த நினைவு."கவிதை" யை ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  20. எப்பவுமே காடுக்கும்போது ஒரு பயம் எழுவதைத் தடுக்க முடியாதுதான். அந்தத் திருடனையே ஏமாத்திட்டாரே உங்கள் உறவினர், என்னை மாதிரி ஆக்கள் எனில் கத்தியைப் பார்த்த கணமே இந்தா பிடி என்னை விடு எனக் குடுத்திருப்பேன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா....காடுக்கும்போது என்பது எழுத்துப்பிழையாக வந்திருக்கிறதா? இல்லை, அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா?

      நீக்கு
    2. அதிரா பாஷையில் ஏதேனும் இருக்கக்கூடும்!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர் காசெடுக்கும்போது:)...

      நீக்கு
    4. ///கத்தியைப் பார்த்த கணமே இந்தா பிடி என்னை விடு எனக் குடுத்திருப்பேன்:)...////


      Garrrrrr public :) annakozhi

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓஒ அது கிளி..கிளியாக்கும் அதாவது பஞ்சவர்ணக்கிளீஈஈஈஈஈஈ:))

      நீக்கு
  21. இன்றைய கதம்பம் சிறப்பு. முதல் தகவல் - ஆஹா நல்ல வேளை பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

    அமேதி - ஹாஹா... இன்றைக்கு அது வேறு ஒருவரிடம்!

    பதிலளிநீக்கு
  22. ராஜ தந்திரம் நல்லாத்தான் இருக்குது.

    கனவுக்குள் கனவு ஸ்ரீராமுக்கும் வந்திருக்குதோ?:).. எனக்கு பல தடவைகள் வந்திருக்குது.

    அதாவது ஒரு கனவு கண்டு, அக்கனவைப் போய் இன்னொருவரிடம் அப்படியே, கனவு கண்டேன் என அழகாக அக்கனவுக் கதையைச் சொல்லியிருக்கிறேன் அதுவும் கனவில ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  23. வியாழன் இ ந்தப் பகுதியில் வரும் வசனக் கவிதைகளை நான் தவறாது படிப்பது வழக்கம். இது வரை எதுவுமே சோடை போனதில்லை என்பது அந்தக் கவிதைகளின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  24. ஏ.டி.எம் கதை, ஓவியத்துணுக்குகள், ' அமேதி ' துணுக்கு, கனவுக்கவிதை எல்லாமே அருமை!

    பதிலளிநீக்கு
  25. ஏடிஎம்.. ஒருவரின் அனுபவக் கதையை அருமையான நடையில் சுவாரஸ்யமாகத் தந்துள்ளீர்கள்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!